Showing posts with label சொந்தக்கதை சோக கதை. Show all posts
Showing posts with label சொந்தக்கதை சோக கதை. Show all posts

Monday, 26 November 2012

என் குரல்..நாய் குரல்..லொல் லொல்..

இது ஐம்பதாவது பதிவுங்கோ.பிளாகிங் ஆரம்பிச்சு ஒரு வருடம் தாண்டிருச்சி..மலேசியாவுல இருக்கிற இந்த பையனுக்கு கூட தொடர்ந்து ஆதரவுகள் வழங்கி வரும் நண்பர்கள், அண்ணன்மார்கள் எல்லோருக்கும் என் மனம் கூறும் பல நன்றிகள்..எல்லோரும் சண்டை இடாம பிச்சுப்பிச்சு பகிர்ந்துக்கோங்கோ..
=====  ====== ====== ===== ======= ====== ===== ====== =======
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு சீன குடும்பம்.கணவன் மனைவி அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் என நீண்ட காலமாக அமைதியாக வசித்து வருகின்றனர். பார்த்தால் புன்னகை, பேசினால் ஹெலோ..எங்களுக்குள் இருக்கும் பிஸியான சூழலில் இதுதான் உறவு.


அவர்கள் கடந்த சில மாதங்களாகவே நாய்களை வளர்த்து வருகிறார்கள் என்று சொல்வதை விட அடித்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.எத்துவதும், வார்ப்பட்டையில் அடிப்பதும் என இவர்களது மூடு சரியில்லை என்றால் நாய்தான் பலியாடு என்று நினைக்கிறேன்.சோறு வைக்கிறார்களோ இல்லையோ நாய்க்கு சோகத்தை மட்டும் அளிக்கிறார்கள்.

இவர்கள் அடிக்க அந்த நாய் கொடுக்கும் அலறல் இருக்கிறதே..கேட்கவே பாவமாக இருக்கும்.சில நேரங்களில் நான், என் அக்கா என கோபப்படுவோம்.இரக்கத்தில் ஏதாவது கத்தி விடலாம் என்று பார்த்தால் இருக்கிற உறவும் பகையாகிவிடுமோ என்று தோன்றுகிறது, இதற்கு இடையில் இன்னும் ஒரு குட்டி நாய்..புதிதாக..என்ன கதியாக போகிறதோ...என்ற நிலையில்..இப்பவே ஒரு செருப்பை கழுத்தில் தொங்கவிட்டுவிட்டார்கள்.


அது எப்ப கலண்டு விழுமோ என்ற நினைப்பில் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருக்கிறது..குடும்பத்தலைவர்-தான் நாயை பெண்டு கலட்டுறாருனா அவரோட குடிடீஸும் சில நேரங்களில் இதையேதான் ஃபோல்லோ பண்றாய்ங்க..நல்ல ஃபேமிலி போங்க.

ஒரு நாயை மனிதன் அடிக்கையில், சிறிது தூரத்தில் நாய் குட்டியின் மன நிழலில் :

ஒருவேளை என் குரல் உனக்கு கேளின்.......
மனிதரே,
நாங்கள் உங்களுடன் பழக, உயர்ந்தோர் ஆக முயற்ச்சிக்கிறோம் - நீங்கள்
மனித தோல் உருவில் எங்களாக துணிகிறீர்கள்...

இறைவா,
உன் படைப்பை நிறுத்து,
இவர்கள் பார்வைகளை திருத்து
மனிதர் பாவங்களை போக்கு..

இனி,
உருவங்கள் வேறுப்பட்டாலும் பரவாயில்லை,
உணர்வுகளையாவது ஒருமைப்படுத்து,
எதிர்வரும் சமுதாயம் சமத்துவமாகட்டும்..

பரிதாபக்குரலில், நாய் குட்டி

========================================================================
மேலே இருப்பது ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுன பதிவுங்க..ஆனால் நாய் நிலைமை மட்டும் முழுமையா மாறுல.உங்க கமெண்ட்ஸை வாரி வழங்குங்க..யாரையாவது எட்டி உதைக்குனமுனு தோனுனா கொஞ்சம் எச்சரிக்கை - முன்னால இருப்பது உங்க ஸ்கிரீன் என்பதை மறவாதிங்க.மீண்டும் அடுத்த பதிவோடு சந்திக்கலாம்.அதுவரை..

உங்கள் ஆதரோவோடு,

Tuesday, 10 April 2012

என் மன நினைவில்..ஓரு மரணம்..

எத்தனையோ கல்யாணங்களுக்கு நாம் செல்வோம்.ஆனால், ஒரு சிலதே நம் நினைவில் இடம் பெற்றிருக்கும்.அந்த வரிசையில் அந்த திருமணமும் ஒன்று.காரணம், நான் மாப்பிளை தோழன்.சும்மா இருந்த என்னை அழைத்து சென்று மாப்பிளை தோழனாக மாற்றியதில் பெரிய ஆச்சரியம் எனக்கு.அது ஒன்றும் எனக்கு புதிதல்ல.ஏற்கனவே என் உறவுக்காற அக்காவின் திருமணத்தில் மாப்பிளை தோழனாக இருந்த அனுபவம் உண்டு.நல்லதுதான் இருந்தாலும் உடம்பு பதபதவென்றது.

அப்போது எனக்கு ஒரு 17 வயது இருக்கும், ஜனவரி மாதம்..என் பாட்டியின் தம்பி மகனான கோபி அவர்களது திருமணம்.நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடி கணவன் மனைவியாக உருவான நாள் அது.ரொம்பவும் சிறப்பாக ஏற்ப்பாடு செய்ய சுபமாக நடந்து முடிந்தது.

அது நடந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மார்ச் மாதம் 15 திகதி மாலை 5.00 மணிவாக்கில் மனதை உறையவைத்த அந்த செய்தி காதினை எட்டியது.வேலை மாற்றமாக வேறொரு ஊரில் குடும்பத்தோடு வசித்து வந்த கோபி அவர்கள் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்பதே அச்செய்தி.எங்களுக்கு மனம் கணமானது.பாட்டியின் அழுக்குரல் மனதை மேலும் ரணமாக்கியது, காலம் சென்ற கோபி அவர்களுடன் நான் பழகியது, பேசியதும் குறைவு.அதிக வயது வித்தியாசமே அதற்கு முக்கிய காரணம்.என் தாத்தா, அம்மா, மாமா என அனைவரும் "அதான் கோபி..டா நீக்கூட அவர் கல்யாணத்துல மாப்பிளை தோழனா இருந்தியே..இறந்துட்டாரு" என்று சொன்ன பொழுது நெஞ்சம் உடைந்தது.

வேறெதுவும் பேசாது,,சில மணி நேரங்களில் தெலுக் இந்தானுக்கு அவர் உடல் வைக்கப்பட்டிருக்கும் வீட்டை அடைந்தோம்.சுற்றியும் மரம், பச்சை பச்சையென செடிகள் என இயற்கையை சுற்றி அவர் உடல் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தது.பிரேதம் உள்ள இடத்தை நெருங்கும் போது ஒரே அழுகை அலறல்கள் இன்னும் ஒரு முறை நெஞ்சை பிளந்தது.ஒரு பக்கம் தாத்தா இன்னொரு பக்கம் மாமா என என் கைகள் நாடின.வயதுதான் 19 தொட்டுவிட்டது எனினும் என் கால்கள் மரணங்கள் நிகழ்ந்த வீட்டுகளுக்குள் அதிகம் சென்றதில்லை.

உள்ளே சென்றது, என் தாய், பாட்டி அவரது தங்கையின் ஒப்பாரி காதை கிழித்தது.சின்ன வயதில் கோபி அவர்களை தூக்கி வளர்த்த அவர்களது நினைவுகள் சொல்லாமலேயே மனம் உணர்ந்தது.அவரது உடலை பார்த்தவுடன் அங்கிருந்த எல்லோரது கண்களும் கலங்கியது.பக்கத்தில் அவரது புகைப்படம்..அதில் சிவப்பான அவர் முகம்..அவரது கல்யாண நாளில் நான் இருந்த நினைவுகளை கிளப்பியது.  

அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது, சில உண்மைகள் கிடைத்தது.காலையில் மருத்துவமணைக்கு சென்று வீடு திரும்பு நேரம், எதிரே சென்றுக்கொண்டிருந்த வாகனம் மெதுவாக செல்லவே, இவர் வந்துக்கொண்டிருந்த கார் வேகத்தை கூட்டி வெட்ட முயற்சிக்கும் (Over Take) பொழுது எதிரே வேகத்தில் வந்த பெரிய லாரியில் கார் சிக்கி மேலே ஏறியதாக தெரியவந்தது.சம்பவ இடத்திலேயே தேகம் சேதமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.பரிதாபபட்டேன்.,,அவருக்கு ஆறுமாதமே ஆன பெண் குழந்தை உண்டு என்பதை அறிய.

இறுதி காரியங்களில், தாய், தந்தை, மனைவி, அக்கா, உறவினர்கள் என அனைவரது அழுகையும் உடலை ஈரமாக்கியது.கண்ணீரில் குளித்த அவரது மனைவி மற்றும் தாயின் ஓசைகள் இன்னமும் கேட்கிறது.ஏன் கோபி அவர்கள் வேகமாக செல்ல வேண்டும் ? ஏன் அந்த ஆண்டவனும் அதை விட வேண்டும் ?? வெறும் 29 வயதில் மரணம் என்பது விதியா ??? மதியா ???? என பல கேள்விகள் அப்பொழுது எழுந்தன.மாலை 3.30 வாக்கில் இந்து மயாணத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தையே தான் பெற்ற பையனுக்கு கொள்ளி வைக்கும் போது அச்சிறு இதயம் என்ன தவிதவித்திருக்கும்..ஒரு தாய் தந்தையாக தனது வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடூரமே தன் பிள்ளைகளின் மரணம்தான். "ஆண்டவா அதை யாருக்கும் கொடுக்காது இனி தடுப்பாயா ????."

உடல் எரிய, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொண்டேன்.அதை மட்டும்தான் என்னால் செய்ய முடியும்.எல்லா காரியங்களும் முடிந்து வீடு அடைந்து கால் நனைக்கும் போது சிறிது தூரத்தில் "எரிச்சிட்டீங்களா..அந்த பையனை எரிச்சீட்டீங்களா ??" என்ற பாட்டியின் குரல் ஒன்று கேட்ட போது...


ஏன் இந்த மரணம் இறைவா ??
காலம் உன் கையில் என்ற திமிரில்
கால தேவனை இஷ்டத்துக்கு தூதுவிடுகிறாயா ??
அல்லது...
எங்களை தூசியாக மதிக்கிறாயா ?

இறப்பு...
அது உன்னால் எழுதிவைக்கப்பட்ட
உயிர் சாசனம் என யான் அறிவேன்..
அது வாழ்ந்து முடிந்த பெரியோரை எடுக்காது
வளர துடிக்கும் பயிரையும் அறுக்குமோ யான் அறியேன்..??

வெள்ளை ரத்தம் உன்னதானால் - ஏன்
சிவப்பு அணுக்களை எடுக்க நினைக்கிறாய்..
சிவந்த மண்ணில் ஏன் எங்களை புதைக்க துணிகிறாய்..

ஒத்துக்கொள்கிறேன்...
நாங்கள் எல்லாம் உன்னால்
ஆட்டிவைக்கும் பொம்மையென்று - முடிந்தவரை
அறுப்படாமல் இருக்க நூலுக்கு பலம் கொடு என்றே வேண்டுகிறேன்.
இறுக்க பிடித்துக்கொள் என்றில்லை..

அடுத்தொரு முறையாவது..
சோகங்கள் அற்ற, வேதனைகள் அற்ற,
கண்ணீர் அற்ற உலகை கொடு - இல்லை
சடங்குகள் என்ற பேரில் அழுக்குரல், கண்ணீர் வராத
னிதர்களையாவது படைத்திட முயற்சி செய்.
துயரம் தாங்கவில்லை.. 

குறிப்பு : நான் கவிதை என்ற பெயரில் எதையோ எழுதுகிறேன் என தெரிகிறது.ஆனால், யாரையும், எந்த மதம், சடங்குகளையும் கடவுளையும் மனதார நான் ஏசவில்லை.காரணம், நானும் கடவுளது பக்தன்..மரணத்தையும் அதன் அழுக்குரல்களையும் பார்த்த பின் ஏற்ப்பட்ட ஏதோ விதமான விரக்த்தியில் இவற்றை எழுதினேனே தவிர வேறெதுவும் இல்லை.லேட் ஆகுது குளித்துவிட்டு சாமி கும்பிடனும்.குட் பை

=========================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு
Related Posts Plugin for WordPress, Blogger...