Monday, 3 August 2015

Yojimbo (1961) பாகம் ஒன்று..


 அகிரா குரோசாவா என்ற திரை இயக்குனரை பற்றி அரியாத சினிமா ரசிகர்கள் குறைவு. ஜப்பானில் பிறந்து ஆசிய சினிமாவை பிற தேசங்களுக்கு அள்ளி சென்ற உலகின் தலைச்சிறந்த படைப்பாளி.இவரை பற்றி எழுதாத சினிமா பதிவர்களை பார்ப்பது அரிது.காரணம், இவரது பெயரை முதன் முதலாக அறிந்துக்கொண்டதே தமிழ்ப்பதிவர்களின் மத்தியில்தான்.அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த உலக கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவராலும் மதிக்கப்படுபவர்.இவரது இயக்கத்தில் நான் முதன் முதலாக தரிசித்த திரைக்காவியம் டிரீம்ஸ்.சில கனவுகளின் தொடர் ஓவியங்களாக திரையையே அலங்காரம் செய்திருப்பார் அகிரா.
அந்த படத்தை தொடர்ந்து பார்த்த படம்தான் யோஜிம்போ...இந்த படத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது செர்ஜியோ லியோனியின் எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃப் டோலர்ஸ் என்ற வெஸ்டர் படம்தான்.அதிகாரப்பூர்வ அனுமதியின்றி யோஜிம்போவின் தழுவலாக 1964ஆண்டு வெளிவந்த இத்தாலிய திரைப்படம். இணையத்தில் இப்படத்தை பற்றி சில தகவல்கள் சேமிக்கையில் கிடைத்த அற்புதமான தகவல்தான் யோஜிம்போ.அதுவும் இயக்குனர் யாரென்று பார்க்கையில் பெயரில் அகிரா குரோசாவா..
யோஜிம்போ "ஒரே இடத்தில் தங்காது சுற்றி திரியும் சாஞ்சுரோ என்ற சாமுராய், ஊர் மக்களை வாடி வதக்கி மனதாலும் உடலாலும் துன்புறுத்தி அவர்களை அடிமைகளாய் வைத்திருக்கும் இரண்டு எதிரி கும்பலுக்கு இடையில் பாடிகார்ட் (பாதுக்காவளராக) வேலைக்கு சேர்ந்து (பாசாங்கு செய்து), தன்னுடைய புத்திக்கூர்மையின் வழி எப்படி இவர்களை அழிக்கிறார் என்பதே மூல கதை..19 ஆம் நூற்றாண்டு ஜப்பான்தான் கதைக்களம். இப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல இழைத்தாலும் ஒரு தொடரே போட கூடிய பல சிறப்புகளும் சுவார்ஸ்யங்களும் படம் முழுக்க கொட்டிக்கிடக்கின்றன.யோஜிம்போ 1961-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்டு அகிரா குரோசாவா இயக்கிய, ஆக்சன், சாகசங்கள் என்று பல சிறந்த அம்சங்களை கொண்டு வெளிவந்த சாமுராய் படமாகும்.Toshiro Mifune என்பவர் சாஞ்சூரோ என்ற சாமுராயாக நடிக்க, இவருடன் Eijiro Tono and Tatsuya Nakadai போன்றவர்கள் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.சிறந்த உடை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்த படத்தின் கதை, திரைக்கதையை அகிராவோடு இணைந்து Ryuzo Kikushima என்பவர் எழுதி இருக்கிறார்.
இன்றுவரை பல திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் ஒரு சிறந்த உதாரணமாக விளங்கும் படமாக இதை குறிப்பிடலாம். அடுக்கடுக்காக பல முக்கியமான காட்சிகளை தன்னில் கொண்டு பார்வையாளர்களை தன்னுடைய வசம் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.காட்சிகள் ஒவ்வொன்றையும் எடுத்துள்ளனர் என்று சொல்வதைவிட செதுக்கி இருக்கின்றனர்.அதற்கு சான்றாக பல சிறப்பான அசங்களை கூறலாம்.நடிகர் Toshiro Mifune, சென்ற நூற்றாண்டின் இணையற்ற ஜப்பானிய நடிகராக கருதப்படும் தாஷீரோ, இந்த படத்தில் ஸ்டைலிஷான முகபார்வைகள், வீரமான நடை, அதன் வீரியம் குறையாத வால் சண்டை என்று பலதரப்பட்ட அம்சங்களை தத்ரூபமாக நடிப்பில் அசத்துகிறார்.அதான் நடிப்பு..அதுதான் அளவு என்பதுப்போல ஒவ்வொரு ஃப்ரேம்களிலும் இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷங்கள் இருக்கே..அத்தனையும் கண்ணால் பார்த்து ரசிக்கக்கூடியை.அநேகமாக 50, 60 ஆம் ஆண்டுகளில் நிறைய ஹாலிவுட் நடிகர்களுக்கு நடிப்பளவில் பெரிய இன்ஸ்பிரஷனாக இருந்திருப்பார் என்று மனதுக்கு தோன்றியது.படம் தொடங்கியதுடன் டைட்டில் கார்டுலேயே இவருக்கு பின்னால் பயணிக்கும் கேமரா படம் முடியும் வரை இவரது அசைவுகளை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது.முதல் சீனில் ஒரு குச்சியை தூக்கிப்போட்டு அது ஒரு பக்கம் விழ அதன் பாதையில் செல்வது, வில்லன் கும்பலிடையே தெனாவட்டாக நடந்து செல்வது, அதே வில்லங்களிடமிருந்து செமத்தையாக அடிவாங்கும் போது கொடுக்குற முக அசைவுகள் என்று பல காட்சிகளில் முத்திரைப் பதிக்கிறார்.
Toshiro Mifune என்ற உலக தர நடிகரை பற்றி, அகிரா என்ற உலக மேதை சொன்னவை : “Mifune had a kind of talent I had never encountered before in the Japanese film world. It was, above all, the speed with which he expressed himself that was astounding. The ordinary Japanese actor might need ten feet of film to get across an impression; Mifune needed only three. The speed of his movements was such that he said in a single action what took ordinary actors three separate movements to express. He put forth everything directly and boldly, and his sense of timing was the keenest I had ever seen in a Japanese actor. And yet with all his quickness, he also had surprisingly fine sensibilities.”

இயக்குனர் அகிரா குரோசாவா: டிரீம்ஸ் படத்தை முதன் முதலாக பார்த்த போது சற்று போரடித்ததே முற்றிலும் உண்மை..இரண்டு மணி நேரங்கள் ஓடும் திரைப்படம் கனவுகளோடு உறவாடுகிறது..அதுவரை டெர்மினேடர், ஜுராசிக் பார்க் என்று விறு விறுப்பின் உச்சத்தில் நகர்ரும் படங்களை பார்த்து வந்த எனக்கு இந்த படத்தில் வித்தியாசமான 8 கனவுகளும், வாழ்க்கையின் போக்கிலேயே ஊர்ந்துச்சென்றதுதான் சோர்வை கொடுத்தற்கு முதல் காரணம் என்று நம்புகிறேன்..எப்படியோ சலித்துக்கொண்டு பார்த்து முடித்த போது ஒரு விதமான உணர்வு அல்லது திருப்தி மனதோரம் துளிர்விட்டதே உண்மை.அதனால், இந்த யோஜிம்போ படத்தை எதற்கும் தயார் நிலையிலேயே பார்க்க தொடங்கினேன்..என்ன ஆச்சரியம்.அவ்வளவு நேர்த்தியான அதைவிட முக்கியம், வேகமான திரைக்காட்சிகள்.. சாகசங்கள், புத்துணர்ச்சியை வழங்கும் வசனங்கள் என்று அத்தனையும் படத்தோடு ஒன்றிவிட வழிசெய்தது.
தூரத்தில் உள்ள மலைத்தொடரை காட்டி யோஜிம்போ என்று டைட்டில் கார்ட் போட, குச்சியை மேலே வீசி விழும் திசையில் சாமுராய் பயணிக்கும் காட்சிகள், அதாவது படத்தின் கதையே ஒரு குச்சியில் தொடங்குவதுப்போல் இருக்கும்.ஊருக்குள் நுழைந்ததும் ஒரு தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உரையாடலை கவனிக்க நேர்கிறது.."வாழ்க்கை பூராவும் சட்டிப்பானையில் கஞ்சி குடித்து வாழமுடியாது" எனும் மகனையும், தந்தையின் தவிப்பையும், என்னதான் நடக்கிறது இந்த ஊரில் என்று இதன் வழி படத்தின் கதைக்கு நம்மை அனைவரையும் தயார்ப்படுத்துகிறார் இயக்குனர்.அடுத்த காட்சியில், ஒரு நாய் மனிதனின் கையை கவ்விக்கொண்டு வருவதாக அமைத்து இந்த ஊரில் நடக்கும் வன்முறையை மிகவும் இயயல்பாக சித்தரிக்கிறார் இயக்குனர். அத்தனையும் சிறப்பு.பார்த்து அனுபவிக்க வேண்டியவை.இப்போதைய நிறைய படங்கள் ஹீரோவையும் அவரது சாகசங்களை மனதில் கொண்டே எடுக்கப்பட்டு வருகின்றன..அதை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்டமான சண்டை காட்சிகள், கொடூரமான வில்லன் அவரை வெற்றிக்கொள்வதற்கு கதாநாயகன் மேற்க்கொள்ளும் செயல்களை இன்றைய தமிழ், ஹிந்தி, ஆங்கில படங்களிலும் வழிந்தோடுகின்றன. இப்பொழுதெல்லாம் வில்லன்கள் அனைவரும் மிகவும் திறமைசாலிகளாக சித்தரிக்கபடுவதே ஒரு விதத்தில் ஹீரோவின் புத்திக்கூர்மையையும் அவரை இன்னும் சாகசங்கள் நிறைந்தவராக காட்டுவதற்காகவே என்றே நினைக்கிறேன்.இந்த அம்சங்கள் அத்தனையும் அகிரா என்ற உலக மேதையால் 50 வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது.

(தொடரும்) 
அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,

Saturday, 1 August 2015

Children Of The Corn (1984) - Soylent Green (1973) 18++ சினிமா டைரி (5)

Children Of The Corn (1984)
80களில் வெளிவந்த ஹாரர் பட ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தை அறிந்திருக்க பெரிய வாய்ப்புகள் உண்டு..ஏன் அப்புடி சொல்ற ? அப்ப இது என்ன அவ்வளவு அப்பாட்டேக்கர் படமானு நீங்க கேட்டிங்கனா நேக்கு பதில் எல்லாம் தெரியாதுங்க..சிறந்த படமானு பார்த்த எனக்கே தெரியாத நிலையில் ஹாரர் சினிமா வரிசையில் ரொம்பவும் ஃபேமஸான படமாக இதை கூறலாம்.காரணம் இந்த படத்தை தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக 6,7 படங்களும் வந்தாகிவிட்டது.கதையை பொருத்தவரை நமக்கு நன்கு பரிச்சயமான ஸ்டீபன் கிங் அவர்களின் சிறுக்கதைதான்..மனுஷன் பல காலமா ஹாரர் பிரிவில் தொடாத சமச்சாரங்களே இல்லை..அவ்வளவு பெரிய வல்லவர்.படத்தின் முதல் காட்சிதான் நாடியே..அந்த சிறுவனின் வாய்சில் தொடங்கும் கதை..சிறுவர்களின் கொடூரத்தை விளக்குகிறது.குழந்தையும் தெய்வமும் ஒன்றென படித்திருப்போம்..இங்கு சின்னப் பிள்ளைகளின் ரூபத்தில்தான் மரணமே..18 வயசுக்கு மேல இருப்பவர்களை கொன்னே தீரவேண்டும் என்ற எண்ணத்தோட பெத்த அம்மா அப்பாவையும் போட்டு தள்ளுர கூட்டமா அவங்க மாறுறாங்க.Malachai என்ற பையன்-தான் அக்கூட்டத்துக்கே தலைவன்.இப்படியே மூன்று வருஷங்கள் கடக்குது.அப்ப வராங்க பாரு நம்ம ஹீரோ, ஹீரோயின்..பர்ட் மற்றும் விக்கி.வேலை மாற்றத்தின் காரணமா கிளம்புகிறார்கள்..எப்படியோ அந்த கொடூரர்கள் இருக்கும் டவுனையும் அடைகிறார்கள்.இங்கு தொடங்கும் காட்சிகளே படத்தின் பலம்.அங்கு அவர்கள் என்ன ஆனார்கள் ? இதுக்கெல்லாம் என்ன காரணம் ஆகியவற்றை அறிய சினிமா பாருங்க எல்லோரும்.Peter Horton மற்றும் நம்ம ஜேம்ஸ் கேமரனின் எக்ஸ் வைஃப் Linda Hamilton ஆகியோர்தான் முக்கிய நடிகர்கள்.வசூல் ரீதியில் சிறந்த இடத்தை பிடித்த படம் பல சறுக்குகளால் விமர்சன அளவில் நல்ல புகழை தரத்தை தக்க வைத்துக்கொள்ள தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.நல்ல படமென்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு முறை கட்டாயம் பார்க்க வேண்டிய ஐட்டம்தான் இந்த ஹாரர் படம். 

Soylent Green (1973)
நீண்ட நாட்களாக வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருந்து பார்த்த சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம். Charlton Heston, Edward G. Robinson போன்றவர்கள் நடிப்பில் Richard Fleischer என்பவர் டைரக்ஷனில்  1973ம் ஆண்டு வெளிவந்தது.2020 ஆம் ஆண்டு 40 கோடி மக்களை கொண்ட நியூ நகரம்தான் கதையின் களம்.இயற்கை வளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலை:வசிப்பதுக்குக்கூட இடமில்லாம்ல் சரிவர உணவுகளும் இல்லாமல் தவிக்கும் மக்கள் தொகை..Soylent Corporation என்ற உணவு தயாரிக்கும் நிறுவனத்தை நம்பிதான் குடி மக்களின் வாழ்க்கை.இங்கு நிகழும் ஒரு பெரிய மனிதனின் மரணம்..அதை விசாரிக்க வரும் போலிஸ் ஹீரோ..அதில் வெளிவரும் ரகசியங்கள்..இதுதான் என்னால் ரொம்பவும் சுருக்க முடிந்த கதை.70ல் வெளிவந்த அதுவும் எதிர்க்காலத்தை பேஸ் பண்ணிய சைன்ஸ் ஃபிக்சன் படம்.கொஞ்சம் கவர்ச்சி, சண்டை, கிரைம், காதல், ரகசியங்கள் என்று ஜேம்ஸ் பாண்ட் மசாலாக்களை கலந்துக் எடுக்கப்பட்டதுதான் சொய்லெண்ட் கிரீன்


==============================================

The Bucket's List (2007) - Die Hard (1988) சினிமா டைரி 4

The Bucket's List (2007) - United States
A Film By Bob Reiner
Staring : Jack Nicholson, Morgan Freeman

2007ஆம் ஆண்டு Bob Reiner என்ற பிரபல அமெரிக்க இயக்குனரின் கைவண்ணத்தில், சினிமா உலகின் இணையற்ற நடிகர்களான ஜேக் நிக்கல்சன் மற்றும் மோர்கன் பிரீமனும் இணைந்து நடித்த காமெடி, டிராமா வகை படமாகும். பொதுவாக, இவ்விரண்டு நடிகர்களில் ஒருவர் நடித்தாலே மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு டபல் விருந்து எனலாம்.எது உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக நடிப்புக்கு பஞ்சமே இல்லாத விதத்தில் இருவரும் போட்டிப்போட்டு அசத்தியுள்ளனர்.படத்தில் மரணத்தை எதிர்நோக்கும் வயதான இரு புற்றுநோயாளிகளாக வந்து வாழ்ந்தே இருப்பார்கள்.

வாழ்க்கை என்பது சிலருக்கு புளித்து போகலாம்..ஏண்டா வாழுகிறோம் என்ற எண்ணமும் இதய கதவை தட்டலாம்..தோல்விகள் நிறைந்ததே முழுமையான வாழ்க்கை..வாழ்பவர்கள் பலருக்கும் வாழ்க்கையின் அருமையும் மகத்துவமும் தெரியுமோ இல்லையோ, ஆனால் மரணத்தின் கண்ணாடியில் உடைந்து விழ தேதி பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும்..இன்னும் சில நொடிகள் உடையும் திகதிகள் தள்ளி போகாதா என்ற ஏக்கம் அவர்களின் நெஞ்சை உளுக்கும்.

மருத்துவமனை உரிமையாளரான எட்வர்ட் கோலும் மெக்கானிக்கான கார்டர் சேம்பர்ஸும் மரணத்தை நோக்கி வரும் புற்று நோயாளிகள். இருவரும் எதர்ச்சையாக ஹாஸ்பிதலில் சந்தித்துக்கொள்ள நண்பர்களாகின்றனர்.வாழ்க்கை முடியும் தருவாயில், தங்களது வாழ்நாள் ஆசைகளை  லிஸ்டாக போட்டு, அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்ற உலகம் முழுவது வலம் வருகிறார்கள்.அந்த சிறப்பான அனுபவங்களே அழகான கேமராவின் கண்களில் திரைப்பார்வைகளாக விரிகிறது.  

படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு நபர் படத்தின் இயக்குனரான போப் ரையினர்.இவர் எடுத்த "Misery" திரைப்படம் பலருக்கு பிரசித்தம். என்னவோ ஏதோ இவரைப் போன்ற சில இயக்குனர்களுக்கு பல நேரங்களில் பேரும் புகளும் ஏன் விருதுகளும் கூடக் கிட்டுவதில்லை.பல நல்ல இயக்குனர்களுக்கு விருதுகள் கிடைக்காதது (ஆஸ்கர்,கோல்டன் குளோப் என்று பல) வழக்கம்தான் என்றாலும் சில நேரங்களில் ஏமாற்றம்தான்.

சிறுவர்கள் வயதானவர்கள் என்று பாராமல் சிறந்த நடிப்புக்காகவும் பல அர்த்தமுள்ளக் கருத்துகளுக்காகவும் பார்க்க வேண்டிய பிஜி-13 படமிது..இறுதி காட்சிகள் மனதை ஈரமாக்க கூடியவை..சில மென்மையான உணர்வுகள் கூடவே சொந்தம் கொண்டாடுபவையாக அமைந்துவிடும்.

Die Hard (1988) - United States A Film By John Mactiernen
இந்த ஹாலிவுட் அதிரடி திரைப்படத்திற்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.புரூஸ் வில்லிஸ் நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளிந்து மிகச் சிறந்த வரவேற்ப்பைப் பெற்றதோடு வசூலையும் வாரி குவித்த தரமான ஆக்க்ஷன் திரில்லராகும்.படத்தின் இயக்குனரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நமக்கு எல்லோருக்கும் அறிமுகமான Predator (1987) படத்தை எடுத்த John Mactiernen ஆகும். சமீபகாலமாக இவரிடமிருந்து படங்கள் வராவிட்டாலும், சற்றாண்டுகளுக்கு முன்பு சென்றால் இவர் இயக்கிய Nomad, The Last Action Hero (1993) போன்ற நல்ல திரில்லர் படங்கள் கிடைக்கும்.டை ஹார்ட்டை பற்றி கூறவேண்டும் என்றால் முதலிலும் மிக முக்கியமானவர் படத்தின் ஹீரோவான புரூஸ் வில்ஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றும் போலிஸ் அதிகாரியாக John McClane என்ற கதாபாத்திரத்தில் இவர் தோன்ற திரையே அதிரடியில் கலங்குகிறது. புகழ்பெற்ற ஹீரோக்களான அர்னால்ட் மற்றும் சிலிவெஸ்டர் ஸ்டால்லேன் போன்றவர்களுக்கு முறையே டெர்மினட்டர், ரேம்போ சீரீஸ் மாதிரி இவருக்கு டை ஹார்ட்.இதுவரை நான்கு படங்கள் வெளிவந்துள்ளன (நான் பார்த்தது முதல் ரெண்டு பாகம்தான்).

பல ஹாலிவுட் படங்களுக்கு ஒரு பாதிப்பாகவும் இன்ஸ்பிரேஷன் ஆகவும் இப்பொழுதும் விளங்கும் இப்படம், ஹாலிவுட் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியதாகும்.


==========================================

உங்க ஆதரவோடு 

Sea Of Love (1989), Peeping Tom (1960) 18++ சினிமா டைரி

எத்தனையோ படங்கள் பார்ப்போம்..அதை பற்றிய சிறு சினிமா டைரிதான் இத்தொடர்
Sea Of Love - 1989
அல் பசினோவின் இன்னொரு அற்புதமான நடிப்பில் ஹரோல்ட் பெக்கர் இயக்கத்தில் 1989- ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கிரைம் திரில்லர்.Sea Of Love என்ற ஒரு பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு தொடர்ந்து ஆண்களை கொலை செய்யும் சீரியல் கொலைகாரன் பற்றிய திரைப்படம். கொலையாளியை கண்டுபிடிக்க வரும் போலிஸ் அதிகாரியாக அல் பசினோ.அவருக்கு ஜோடியாக Ellen Barkin நடித்திருக்கிறார். தொடர்ச்சியாக நடைப்பெறும் கொலைகளை கண்டுபிடிக்க வரும் போலிஸ், அவரோடு காதல் பாடும் ஹீரோயின் மற்றும் கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் திரில்லர் கடைசியில் ஒரு டிவிஸ்ட் என்று வழக்கமான ஹாலிவுட் பாணியில் திரைக்கதை அமைந்திருந்தாலும் பார்ப்பவர்களுக்கு போரடிக்காத வகையில் காட்சிகளை நகர்த்தியுள்ளது இயக்குனரின் திறமை.

அதற்கு மிக பெரிய பலமாக அல் பசினோவின் Det. Frank Keller கதாபாத்திரம்.இவ்வளவு அருமையா மனுஷன் இத்தன காலமா எப்படிதான் நடிக்கிறாரோ என்று படம் முடியும் போது எனக்கு தோன்றியது.Revolution (1985) திரைப்படத்திற்கு பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் கழிந்து நடித்த படம்.கூடவே கோல்டன் குலோப் பரிந்துரையும் பெற்றுவிட்டார் (எத்தன பரிந்துர... 1..4..7..10...12 யெப்பா..இன்னும் இருக்கு).உலக நாயகன் கமல் ஹாசனிடம் இவருடைய ஸ்டைல் கொஞ்சம்..கொஞ்சம் இருப்பதை அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன் (பெரியவங்க மன்னிக்கவும்..இது ஒருவேள என்னோட கற்பனையாக கூட இருக்கலாம்).எல்லா காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார் அல் பசினோ..

வழக்கமான ஹாலிவுட் திரைப்படமாக இருந்தாலும் விமர்சக, வசூல் ரீதியில் நல்ல வரவேற்ப்பையே பெற்றுள்ளது.அனைத்து கிரைம் திரில்லர் விரும்பிகள் (கூடவே ரொமேன்ஸும்) தாராளமா பார்க்கலாம்.

Peeping Tom - 1960
நீள்ப்பதிவாக எழுத வேண்டிய திரைப்படம்.நேரம் கிடைக்காததால் ஒரு சிறிய பார்வை...
இங்கிலாந்தில் 1960-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய திரைப்பட ஜாம்பவனான மைக்கேல் போவெல் திரை இயக்கத்தில் வந்த இன்னொரு கிரைம் சீரியல் கில்லர் திரைப்படம்..உலகளவில் ரசிகர்களாலும் விமர்சனர்களாலும் இன்று பிரிட்டிஷ் சினிமாவில் மைல் கல்லாக விளங்குகிறது. இன்னும் கொஞ்சம் லேலே சென்று பிரிட்டிஷ் சினிமாவின் சைக்கோ என்றுக்கூட பலரால் அழைக்கபடுகிறது.Carl Boehm மற்றும் Moira Shearer திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க Leo Marks அவர்களின் திரைக்கதையில் வெளிவந்ததது.திரைப்படத்தின் முதல் காட்சியே கொலையோடு ஆரம்பிக்கிறது. ஹிட்சாக்கின் திரைப்படங்களை போல கொலைகாரனை முதலில் அறிமுகம் செய்து அடையாளம்  காட்டிவிடுகின்றனர்.இவர் ஒரு சைக்கோ கில்லர்.எங்கே இவருடன் எந்த பெண் பேசினாலும் அவரையும் கொன்று விடுவாரோ என்ற எண்ணத்தை முதல் காட்சியிலிருந்தே கிளப்பிவுட்ட இயக்குனருக்கு நன்றி.பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவில் திரைக்காட்சி ஒவ்வொன்றையும் இவ்வளவு திறமையாக கையாண்ட திரைக்கதை ஆசிரியர் பாராட்டத்தக்கவர்.

ஒட்டு மொத்தமாக இயக்குனரான மைக்கேல் போவெலின் திரை வாழ்க்கையை மாற்றி போட்ட திரைப்படம்.Controversial-லாக ஆரம்பத்தில் விளங்கி இருந்தாலும் இன்று கல்ட் கிலாசிக்காக பரவலாக கருதப்படுகிறது.

=======================================
உங்கள் ஆதரவுடன்  
Related Posts Plugin for WordPress, Blogger...