உலக ஹாரர் சினிமா வரிசையில் ஹாரர் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ரோஜர் கார்மென் அவர்களின் இயக்கத்தில் வின்சென்ட் பிராய்ஸ் அவர்களின் நடிப்பில் 1963-ஆம் ஆண்டு வெளிவந்த The Haunted Palace என்ற திரைப்படத்தைக் காண நேரம் கிடைத்தது.
நேரம் வீணாக போகவில்லை என்று சொல்லும் அளவிற்க்கு ஓரளவு சற்று பயத்தையும் சற்று வியப்பையும் கூடவே நல்லப்படம் என்ற உணர்வினையும் சேர்த்து வழங்கியது.60 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ரசிகர்களை கவர்ந்த திகில் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் The haunted Palace - 1963 பார்ப்பவர்களின் மனதினைக் கண்டிப்பாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
Arkham என்ற ஊரில் 1765-ஆண்டு ஓர் அழகான இடி மின்னல் கூடிய இரவில் திரைப்படம் தொடங்குகிறது.தொடர்ந்து வினோதமான சம்பவங்கள் ஊரெங்கும் நிகழ,ஊர் மக்கள் பலரும் அரண்மனையில் வசிக்கும் Joseph Curwen என்ற மந்திரவாதிதான் இதற்கு காரணம் என்று முடிவு கட்டி அவருக்கு ஒரு முடிவுவும் கட்டிவிடுகின்றனர்....சாரி..ஐ மீன்...அவரை உயிரோடு எரித்து கொன்றுவிடுகின்றன்ர்.இறக்கும் பொழுது தன்னுடைய மரணத்துக்கு காரணமான ஐந்து பேரையும் மற்றும் இந்த ஊரையும் கண்டிப்பாக தாம் மீண்டும் வந்து பழிவாங்குவதாக கூறி சாபத்தை இட்டுவிட்டு இறந்திட திரைப்படம் அப்படியே 110 வருடங்களுக்கு பிறகு அதாவது 1875 - ஆண்டுக்கு தாவுகிறது.இப்பொழுது அதே Arkham என்ற ஊருக்கு அச்சு அசலாக இறந்துப்போன மந்திரவாதியின் ஒருமித்த உடலமைப்புடன் Charles Dexter Ward என்பவர் தன் மனைவியான Ann Ward உடன் ஊர் அரண்மனையில் தங்கவிருப்பதாக கூறிக்கொண்டு வந்து இறங்குகிறார்.
இதைக்கண்டு ஊர் மக்கள் பலரும் ஆச்சரியத்திலும் பயத்திலும் நடுங்க வேண்டியது வர, வார்ட்டை இந்த ஊரைவிட்டு போய்விடுமாறு எச்சரிக்கவும் செய்கின்றனர்.இதைக் கவனத்தில் கொள்ளாமல் தன் தாத்தாவான Joseph Curwen - யின் அரண்மனையிலேயே தன் மனைவியுடன் வசிக்க, மறுபடியும் ஊரெங்கும் சில வினோதமான சம்பவங்கள் நிகழ்கின்றன.இதற்கெல்லாம் காரணம் என்ன? உண்மையாக வார்ட் என்பவர் யார் ? எதற்காக வந்துள்ளார் ? மற்றும் ஊர் மக்கள் இவரை சமாளித்தார்களா ?அல்லது சாபத்திற்கு ஆளானார்களால் என்பதனை.....டிவிடி கிடைப்பது கஷ்டம்தான்.. இல்லனா பரவால பதிவிறக்கம் ஆவது செய்து பாருங்கள்.திரைப்படம் உங்களை கவர்ந்திட வாய்ப்புகள் உண்டு.
( அப்பா...ஏதோ ஒரு வழியா கதைய சொல்லியாச்சு..)
The Haunted Palace - 1963 படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்:
இத்திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சிவரை நம்மை கவரும் கலைஞர்களின் மிகவும் முக்கியமான ஒருவர் படத்தின் கதாநாயாகராக வலம் வரும் Vincent Price தான். Charles Dexter Ward மற்றும் Joseph Curwen என்ற இரண்டு கதாபாத்திரத்தில், மிகுந்த ஆழமான முகபாவனைகளோடும் சிறந்த நடிப்போடும் திரைப்படம் முழுவதையும் தன்னுடைய தோள்களிலேயே கொண்டு சென்றுள்ளார்.அவரது முகம் பாவனைகளும் மற்றும் குரல், வசன உச்சரிப்புகளும் பார்ப்பவர்களின் மனதை விட்டு நீங்காமல் இருப்பது உறுதி.
சில காட்சிகளில் தமிழ் திரையுலகில் யாரோ ஒரு நடிகரை ஞாபகமும் செய்கிறார்.அமெரிக்க சினிமாவில் பெரியளவில் குறைத்து மதிப்பிட்ட சிறந்த அபாரமான நடிகர்களில் ஒருவராக இன்றும் ஹாலிவுட்டில் மதிக்கப்படுகிறார்.இவரைப் போன்ற சில நடிகர்களை பார்க்கும் பொழுது விருதுகளின் மீதும் அதை வழங்குபவர்கள் மீதும் மேல் ஆத்திரம் வருகிறது...நல்ல திறமைசாளிகளை என்றுதான் சினிமா உலகம் அரவைணைக்க போகிறதோ தெரியவில்லை..
மேலும்,திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிகர்கள் எனில் Lon Chaney Jr. மற்றும் Leo Gordon ஆகியோரை சொல்லலாம்.இவ்விருவரும் திரைப்படத்தில் முறையே Simon Orne மற்றும் Ezra Weeden என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருப்பார்கள்.நன்றாகவும் நடித்திருக்கின்றார்கள்.தொடர்ந்து 50 ஆம் மற்றும் 60 ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களைப் பார்த்துவருபவர்கள் இவர்களின் பெயர்களை அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
இத்திரைப்படத்தின் நடித்த நடிகர்களுக்கு அடுத்து நம்மை அதிகமாக கவருவது திரைப்படத்தின் பின்னனி இசையும் ஒளிபதிவுமே.Opening Credits ஆரம்பித்தவுடனே பின்னனி இசை சும்மா பின்னி எடுக்கிறது.மேலும்,ஒளிப்பதிவும் Background Sets களும் நம்மை கண்டிப்பாக கவருவது நிச்சயம்.பிரபல அமெரிக்க எழுத்தாளரான H. P. Lovecraft அவர்களின் கைவண்ணத்தில் 1927 - ஆம் ஆண்டு உருவான The Case of Charles Dexter Ward என்ற குறும் நாவலின் தழுவலான இத்திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் விமர்சகர்கள் என்று பலரிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடதக்கதாகும்.
IMDB : 6.6 / 10
MY RATING : 6.2 / 10
===================================================================================================
குறிப்பு : வலைப்பூ தொடங்கிய புதிதில் எழுதிய பதிவின் மறு ஆக்கமாகும் *மீள்பதிவு*
பதிவுக்காக சில தகவல்களை வாசகர்களுக்கு திரட்டி கொடுக்க உதவிய கூகுளுக்கு நன்றிகள்.
====================================================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,