Showing posts with label உலக ஹாரர்/திகில் சினிமா. Show all posts
Showing posts with label உலக ஹாரர்/திகில் சினிமா. Show all posts

Friday, 23 December 2016

The Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..

 உலக ஹாரர் சினிமா வரிசையில்  ஹாரர் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ரோஜர் கார்மென் அவர்களின் இயக்கத்தில் வின்சென்ட் பிராய்ஸ் அவர்களின் நடிப்பில் 1963-ஆம் ஆண்டு வெளிவந்த The Haunted Palace என்ற  திரைப்படத்தைக் காண நேரம் கிடைத்தது.

நேரம் வீணாக போகவில்லை என்று சொல்லும் அளவிற்க்கு ஓரளவு சற்று பயத்தையும் சற்று வியப்பையும் கூடவே நல்லப்படம் என்ற உணர்வினையும் சேர்த்து வழங்கியது.60 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ரசிகர்களை கவர்ந்த திகில் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் The haunted Palace - 1963 பார்ப்பவர்களின் மனதினைக் கண்டிப்பாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. 
   
கதைச்சுருக்கம் :
Arkham என்ற ஊரில் 1765-ஆண்டு ஓர் அழகான இடி மின்னல் கூடிய இரவில் திரைப்படம் தொடங்குகிறது.தொடர்ந்து வினோதமான சம்பவங்கள் ஊரெங்கும் நிகழ,ஊர் மக்கள் பலரும் அரண்மனையில் வசிக்கும் Joseph Curwen என்ற மந்திரவாதிதான் இதற்கு காரணம் என்று முடிவு கட்டி அவருக்கு ஒரு முடிவுவும் கட்டிவிடுகின்றனர்....சாரி..ஐ மீன்...அவரை உயிரோடு எரித்து கொன்றுவிடுகின்றன்ர்.இறக்கும் பொழுது தன்னுடைய மரணத்துக்கு காரணமான ஐந்து பேரையும் மற்றும் இந்த ஊரையும் கண்டிப்பாக தாம் மீண்டும் வந்து பழிவாங்குவதாக கூறி சாபத்தை இட்டுவிட்டு இறந்திட திரைப்படம் அப்படியே 110 வருடங்களுக்கு பிறகு அதாவது 1875 - ஆண்டுக்கு தாவுகிறது.இப்பொழுது அதே Arkham என்ற ஊருக்கு அச்சு அசலாக இறந்துப்போன மந்திரவாதியின் ஒருமித்த உடலமைப்புடன் Charles Dexter Ward என்பவர் தன் மனைவியான Ann Ward உடன் ஊர் அரண்மனையில் தங்கவிருப்பதாக கூறிக்கொண்டு வந்து இறங்குகிறார்.

இதைக்கண்டு ஊர் மக்கள் பலரும் ஆச்சரியத்திலும் பயத்திலும் நடுங்க வேண்டியது வர, வார்ட்டை இந்த ஊரைவிட்டு போய்விடுமாறு எச்சரிக்கவும் செய்கின்றனர்.இதைக் கவனத்தில் கொள்ளாமல் தன் தாத்தாவான Joseph Curwen - யின் அரண்மனையிலேயே தன் மனைவியுடன் வசிக்க, மறுபடியும் ஊரெங்கும் சில வினோதமான சம்பவங்கள் நிகழ்கின்றன.இதற்கெல்லாம் காரணம் என்ன? உண்மையாக வார்ட் என்பவர் யார் ? எதற்காக வந்துள்ளார் ? மற்றும் ஊர் மக்கள் இவரை சமாளித்தார்களா ?அல்லது சாபத்திற்கு ஆளானார்களால் என்பதனை.....டிவிடி கிடைப்பது கஷ்டம்தான்.. இல்லனா பரவால பதிவிறக்கம் ஆவது செய்து பாருங்கள்.திரைப்படம் உங்களை கவர்ந்திட வாய்ப்புகள் உண்டு. 
( அப்பா...ஏதோ ஒரு வழியா கதைய சொல்லியாச்சு..)        

The Haunted Palace - 1963 படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்:

இத்திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சிவரை நம்மை கவரும் கலைஞர்களின் மிகவும் முக்கியமான ஒருவர் படத்தின் கதாநாயாகராக வலம் வரும் Vincent Price தான். Charles Dexter Ward மற்றும் Joseph Curwen என்ற இரண்டு கதாபாத்திரத்தில், மிகுந்த ஆழமான முகபாவனைகளோடும் சிறந்த நடிப்போடும் திரைப்படம் முழுவதையும் தன்னுடைய தோள்களிலேயே கொண்டு சென்றுள்ளார்.அவரது முகம் பாவனைகளும் மற்றும் குரல், வசன உச்சரிப்புகளும் பார்ப்பவர்களின் மனதை விட்டு நீங்காமல் இருப்பது உறுதி.

சில காட்சிகளில் தமிழ் திரையுலகில் யாரோ ஒரு நடிகரை ஞாபகமும் செய்கிறார்.அமெரிக்க சினிமாவில் பெரியளவில் குறைத்து மதிப்பிட்ட சிறந்த அபாரமான நடிகர்களில் ஒருவராக இன்றும் ஹாலிவுட்டில் மதிக்கப்படுகிறார்.இவரைப் போன்ற சில நடிகர்களை பார்க்கும் பொழுது விருதுகளின் மீதும் அதை வழங்குபவர்கள் மீதும் மேல் ஆத்திரம் வருகிறது...நல்ல திறமைசாளிகளை என்றுதான் சினிமா உலகம் அரவைணைக்க போகிறதோ தெரியவில்லை..
        
மேலும்,திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிகர்கள் எனில் Lon Chaney Jr. மற்றும் Leo Gordon ஆகியோரை சொல்லலாம்.இவ்விருவரும் திரைப்படத்தில் முறையே Simon Orne மற்றும் Ezra Weeden என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருப்பார்கள்.நன்றாகவும் நடித்திருக்கின்றார்கள்.தொடர்ந்து 50 ஆம் மற்றும் 60 ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களைப் பார்த்துவருபவர்கள் இவர்களின் பெயர்களை அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

இத்திரைப்படத்தின் நடித்த நடிகர்களுக்கு அடுத்து நம்மை அதிகமாக கவருவது திரைப்படத்தின் பின்னனி இசையும் ஒளிபதிவுமே.Opening Credits ஆரம்பித்தவுடனே பின்னனி இசை சும்மா பின்னி எடுக்கிறது.மேலும்,ஒளிப்பதிவும் Background Sets களும் நம்மை கண்டிப்பாக கவருவது நிச்சயம்.பிரபல அமெரிக்க எழுத்தாளரான H. P. Lovecraft அவர்களின் கைவண்ணத்தில் 1927 - ஆம் ஆண்டு உருவான The Case of Charles Dexter Ward என்ற குறும் நாவலின் தழுவலான இத்திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் விமர்சகர்கள் என்று பலரிடையே நல்ல வரவேற்பு பெற்று  வருவது குறிப்பிடதக்கதாகும்.

IMDB : 6.6 / 10
MY RATING : 6.2 / 10

===================================================================================================
குறிப்பு : வலைப்பூ தொடங்கிய புதிதில் எழுதிய பதிவின் மறு ஆக்கமாகும் *மீள்பதிவு*
பதிவுக்காக சில தகவல்களை வாசகர்களுக்கு திரட்டி கொடுக்க உதவிய கூகுளுக்கு நன்றிகள்.
====================================================================================================

 ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Tuesday, 25 August 2015

Horror Of Dracula (1958)


சில மாதங்களுக்கு முன்பு பார்த்த திரைப்படமாகும்.தலைப்பிலேயே ஹாரர், டிராக்குலா என பயமுறுத்திய பழைய இங்கிலாந்து சினிமா.படம் அந்த இரண்டிலும் சுமார்தான் எனினும், ஓய்வு நேரத்தை செலவழிக்க கொஞ்சம் ஏகுவான படைப்பு.
பொதுவாக நான் டிராகுலா திரைப்படங்களை விரும்பி பார்ப்பது இல்லை.அதற்கான காரணத்தையும் நான் அறிந்ததில்லை.நான் இதுவரை பார்த்த டிராகுலா திரைப்படங்கள் இரண்டுதான்.ஒன்று 2004-ஆம் ஆண்டு வெளிவந்த VAN HELSING, இன்னும் ஒன்று இந்த ஹாரர் ஒஃப் டிராகுலா.சிறிய வயதில் சில டிராகுலா கதைகளையும் தகவல்களையும் விரும்பி படித்ததாக ஒரு ஞாபகம்.உலகில் அதுவும் இருளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மிகவும் சுவாரஸ்யமான விடயங்களில் டிராகுலாவும் ஒன்றென அறிந்துக்கொண்ட காலம் அது.படித்த கட்டுரைகள், தகவல்கள் இன்றுவரை என் புத்தக அலமாரியில் இருக்கிறது.அதை சில நாட்கள் மறந்த நிலையில், மீண்டும் பைலை திறக்க தூண்டியது இத்திரைப்படம்.

 ஹாரர் ஒஃப் டிராகுலா, 1958 - ஆம் ஆண்டு பேய் திகில்ப்பட இங்கிலாந்து திரைப்பட இயக்குனரான டெரன்ஸ் ஃபிஷர் இயக்கத்தில் வெளிவந்தது.வெளிவந்த நேரம் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்களாலும் விமர்சனர்களாலும் சிறந்த டிராகுலா திரைப்படங்களில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுவது குறிப்பிடதக்கதாகும்.இதில், முக்கிய நடிகர்களாக Peter Cushing, Christopher Lee and Michael Gough ஆகியோர் நடித்துள்ளனர்.இசையை ஜேம்ஸ் பெர்னார்ட் என்பவர் கவனிக்க, படத்துக்கு கூடுதல் சிறப்பான ஒளிப்பதிவில் ஜேக் ஆஷர் என்பவர் பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய நண்பனான ஜோனாதன் ஹார்க்கர் மர்மமான முறையில் இறந்தைத் தொடர்ந்து, இவருடைய மரணத்திற்கு டிராகுலா காரணமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார் டாக்டர் வேன் ஹெல்சிங்.கடைசியாக தன் நண்பன் அனுப்பிய கடித்தத்தின் வாயிலாக கடைசியாக தங்கிய மாளிகைக்கு வருகிறார்.வந்தவுடனே தன் நண்பனின் உடல் ஒரு பிணப் பெட்டியில் காண நேரிட, அதனைத் தொடர்ந்து டிராகுலாவை கொல்ல வேண்டிய வேட்டையில் இறங்குகிறார்.அடுத்தடுத்து சில மரணங்களும் நிகழ, இதற்கான காரணங்கள் என்ன ? டிராகுலாவை கொன்றாரா ? அல்லது அந்த முயற்சியில் தோல்வியடைந்தாரா ? என்பதை டிவிடி கிடைக்குமா என்று தெரியவில்லை...இல்லையென்றால் பதிவிறக்கம் செய்து பாருங்கள்...

மேற்ச்சொன்னது முடிந்தவரையில் சுருக்கமாக எழுத நினைத்த கதை..சில சிறப்பம்சங்களை விட்டுவிட்டுதான் முன்வைத்துள்ளேன்.இந்த படம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.கல்ட் கிளாசிக் என்று பலர் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். 

பொதுவாக டிராகுலா படங்களை பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது.ஏனா பார்த்ததே ரெண்டுதான்.முன்பு சொன்னது போல, VAN HELSING திரைப்படம் பிரமாண்டத்தில் மாட்டிக்கொண்ட நிலையில், ஹாரர் ஒஃப் டிராகுலாவில் பிராமாண்டம் எல்லாம் இல்லீங்க.வெறுமனே கதையை வைத்துக்கொண்டு சிறிய பெட்ஜெத்தில் காட்சிகளை நேர்த்தியாகவே நகர்த்தியுள்ளனர். திரைக்கதையின் பலமும் அதிலேயே உள்ளது.

பழைய திரைப்படங்களில் முக்கியமாக என்ன இருக்கிறதோ இல்லையோ பின்னனி இசைக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.பல திறம்வாய்ந்த இசை ஆளுமைகள் இந்தியா மற்றும் அயல் நாடுகளில் உதித்த பொற்க்காலம் அது.அதிலும் திகில் திரைப்படங்களுக்கு சொல்லவே தேவையில்லை. சைக்கோ, தெ ஒமென் போன்ற திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.அந்த திரைப்படங்களின் பின்னனி இசை இன்னும் என் மனதிலே இருக்கிறது.அதே வரிசையில் ஜேம்ஸ் பெர்னார்ட், இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவருக்கு மகனாக பிறந்த இங்கிலாந்தியர்.Seven Days to Noon (1950) என்ற படத்துக்காக ஆஸ்கர் வென்றவர்.இதிலும், பின்னி எடுக்கிறார்.திரைப்படத்தில் டிராகுலாவாக வரும் Christopher Lee பற்றி சொல்லியே ஆகனும்..அப்படியே டிராகுல மாதிரியே இருக்காரு..நல்ல நடிப்பு.    

இறுதியாக, ஹாரர் ஒஃப் டிராக்குலா - காட்சிகளில் வேகத்தை கம்மிப்படுத்திக்கொண்ட படம். வன்முறை காட்சிகளுக்காகவே அந்த டைமில் X ரேட்டிங்க் பெற்ற படம்.அதுவும் ஜப்பானிய வெர்ஷனில் இன்னும் அதிகமாக கொடூரங்கள் நிறைந்த படைப்பாம்.(யார் கண்டா ??) நீங்கள் பழைய படங்களை விரும்பி பார்ப்பவர் எனின், ஒரு முறை காணலாம்.ரசிக்கலாமா ? என்று கேட்டால் கட்டாயம் இல்லை.உலகளவில் இன்று ரசிகர்கள், விமர்சகர்களை கொள்ளைக்கொண்ட இப்படம், நான் இதுவரை கண்ட மர்மப்படங்களில் கொஞ்சம் கடைசி ரேங்கையே பிடித்துள்ளது.எதுக்கும் நீங்கள் பாருங்கள்...   

இயக்குனர் டெரன்ஸ் ஃபிஷர்

20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஹாரர் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஃபிஷர், 1904-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 திகதி பிறந்தவர் ஆவார்.பிரிட்டிஷ் நடிகர்களான பீட்டர் கஷ்ஷிங் மற்றும் கிறிஸ்டோபர் லீ போன்றவர்களை முன்னணி நட்சத்திரங்களாக கொண்டு இவர் இயக்கிய திரைப்படங்களான டிராகுலா (1958), ஹவுன்ட் ஆப் த பாஸ்கர்வில்லாஸ் (1959) மற்றும் மம்மி (1959) போன்றவை இன்றுவரை  கிளாசிக் திகில் திரைப்படங்களாக விளங்குவது மட்டுமன்றி ஃபிஷரின் சிறந்த படைப்புகளாக கருதப்டுகின்றன.தொடர்ந்து டிராகுலாவை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களால் உலகலவில் சினிமா ரசிகர்களை கவர்ந்த இவர், ஜூன் 18 திகதி 1980 - ஆண்டு  தனது 76 வயதில் காலமானார்.

மீண்டும் அடுத்த பார்வையில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,

Thursday, 26 July 2012

Don't Torture a Duckling (1972) - Italy : இதுலாமா ஹாரரு ?


"ஆங்கில ஹாரர் படமெல்லாம் பார்த்து கிழிச்சிட்ட மாதிரி இத்தாலிக்கு தாவுறியேடா"-னு ஓரளவு உளரிகிட்டேதான் படத்தை பார்க்க தொடங்கினேன். நெடு நாட்களுக்கு முன்பே லூசியோ ஃபுல்ச்சி டைரக்டரை கேள்விப்பட்டு "சரி ஒரு படம் போடுவோம்" என்ற நினைப்பில்தான் டவுன்லோடே போட்டேன்..பலரும் அறிந்திராத படம் வேறு.நல்ல படமுன்னு ஒரு ரெண்டு விமர்சனம் படித்த தைரியத்தில் மதியம் பார்க்க ஆரம்பித்தேன்."ஏண்டா பார்த்தோம்கிற" எண்ணத்தை தவிர மற்ற எல்லாமே வந்தது..1972-ல் எடுக்கப்பட்ட சீரியல் கில்லிங் படமிது.

இத்தாலியில் அதிகமான மக்கள் தொகை இல்லாத ஊரது..எங்கும் சிறுவர்கள் ஊர்வலம்தான்...யாரோ ஒரு பெண் (வழக்கமான கூந்தலை விரித்துவுட்டு) ஏதோ ஒன்றை தோண்டுவதோடு டைட்டல் கார்டு ஓடுகிறது..கடைசியில் அவள் எடுப்பது மண்டை ஓடு..சரி ஏதோ ஆவி சமச்சாரமோ என திரைக்குள் நான் தலையை நீட்ட...சரி விடுங்க.

அங்கு தொடர்ந்து சிறுவர்கள் மர்ம்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.ஒன்று, ரெண்டு என்று லிஸ்ட்டு நீண்டுக்கொண்டு போகவே போலிஸும் விசாரனையில் தீவிரமாக இறங்குகிறது.பலரை விசாரித்து சந்தேகத்தின் பேரில் ஒரு முடிவே கட்டி சிலர் மீது பழி சுமத்தி "அவர்கள்தான் கொலைக்காரர்கள்" என்று போட்டும் தள்ளுகிறார்கள்..இருந்தும் தீருமோ ரத்த வாடை..கொலைகள் மட்டும் தொடர்கிறது..யார் அந்த கொலையாளி ? ஏன் கொள்கிறான் ? போன்ற கேள்விகளுக்கு படம் பார்க்க வேண்டுமென்று நான் ரெகுலரா சொல்லுவேந்தான்..இந்த பிறவில நீங்க இப்படத்தை பார்த்தீங்கனா பெரிய புண்ணியம் பண்ணதா ஆனாலும் ஆகும்..காரணம் முன்பே சொன்னதுதான்..பலரும் காணாத அதிசய படமிது.

 இத்தாலியின் ஹாரர், வில்லங்க சினிமா சரக்குகளை வெளிநாடுகளுக்கு பேக் பண்ணி அனுப்பி வைத்த சிறந்த பெயர்களான டாரியோ அர்ஜென்டோ போன்றோரின் வரிசையில் லூசியோ ஃபுல்ச்சி...ஒரு பக்கா சர்ச்சை பேர்விழின்னு நினைக்கிறேன்..இத்தாலி சினிமாவில் "Giallo" அப்படின்னு ஒரு வகை உண்டு..அதாவது அதில் ஹாரர், மிஸ்டரி, ஏன் எரோட்டிக் கூட அடங்கும்..உலகளவில் பலர் மத்தியில் ஃபேமஸும் கூட.அந்த வகையில் வந்த அக்மார்க் மாஸ்டர்பீஸ்களில் ஒரு பீஸாக இப்படம் குறிப்பிடபடுவது...என்னளவில் ஆச்சரியம்தான்...அது ஏனோ தெரில படம் எனக்கு பிடிக்கல..படத்தின் இடையில் ஒரு ஐந்து நிமிஷம் என்னை அறியாது உறங்கிட்டேன்..ஸ்லோவாக நகரும் காட்சிகள்...இந்த தலைமுறை ஆளான எனக்கு ஒரு வேளை ஏற்கனவே பார்த்த காட்சிகள் இருந்ததாலோ என்னவோ..ஒன்னும் புரில..

இந்த படத்தை எதிர்க்காலத்தில் எனக்கு பிடித்தாலும் பிடிக்கலாம்..ஏனா இன்னிக்கு பிடிக்காதது நாளைக்கு பிடிக்கலாம்..இல்லையா ? "இந்த படத்தையெல்லாம் பார்த்து எழுதி தள்ளி எங்களோட கழுத்த ஏண்டா அறுக்குறனு" அப்படினு நீங்க கேட்டாலும் கேட்கலாம்..நான் முன்னாடியே சொல்லிருந்தாலும் சொல்லிருப்பேன்..இல்லனா மேல பிளாக் டைட்டில் பாருங்க.."நான் பார்த்த படங்களின் அறிமுகமே இது எல்லாம்"..
ஓக்கே அப்புறம் அடுத்த பதிவில் மீட் பண்ணலாம்..சீ யூ.


Monday, 2 April 2012

திகில் சினிமா : 1408 (2007), The Mist (2007) மற்றும் ஹாரர் கிங்க்ஸ்

=======================================================================
சில பிசியான சூழல்கள், மனக்கோளாறுகள், உறவுக்கார அண்ணனின் திடீர் மரணம் (அத பற்றிய ஒரு பதிவு விரைவில்), ஆதலால் இணையப்பக்கமே வர முடியவில்லை.அதனால், பல வலை நண்பர்களின் பதிவுகளை வாசித்து, பின்னூட்டம் தர இயலாமல் போய்விட்டது.எல்லாவற்றுக்கும் சேர்த்து மன்னிப்பை வேண்டி, இன்றைய பார்வையாக...
========================================================================
    
சமீப காலத்தில் ஹாரர் படங்கள் பார்ப்பது மிகவும் குறைந்துவிட்டது.. கிடைத்த பேய் திகில் படங்களை பார்த்தது போக, இப்பொழுது எல்லாம் தேடி தேடி பார்க்க வேண்டியதாகிவிட்டது.அதுவும் பிளாக் தொடங்கியதிலிருந்து கண்ட படங்களை எழுதாமல் ரசித்ததை மட்டுமே அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்/எண்ணமே மனதோரம் பந்தாடுகின்றன.

அந்த ஒரு காரணமே திகில், மர்மம் போலான திரை சரக்குகளை அறிமுகம் செய்வதை குறைத்துவிட்டது.இன்றைய பார்வையில் பார்க்க இருப்பவை, நெடு நாட்களுக்கு முன்னாடி, என் ஹாரர் தாகத்தை தீர்த்து வைத்த நாட்டு மருந்துகள்.வாருங்கள் நானும் தங்களோடு என்னுடைய கடுப்பெடுத்த எழுத்துக்களுக்கு வாசகனாகிறேன். 
@@@=====================@@================================@@@

@ The Mist (2007)
@ A Film By Frank Darabont
@ Starring : Thomas Jane, Marcia Gay Harden 

   ஃப்ராங்க் டாராபோண்ட் தற்கால அமெரிக்க சினிமாவில் நன்கு பரிட்ச்சயமானவர்.தெ சாவ்ஷங்க் ரெடெம்ப்ஷன், தெ கிரீன் மைல் போன்ற சிறந்த படைப்புகளின் மூலம் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரது மத்தியில் நல்ல அங்கிகாரத்தை பெற்றவர்.குறைவாக எடுப்பினும் நிறைவான தரமான படங்களை கொடுக்க நினைப்பவர்.இவரது திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சைன்ஸ் ஃபிக்சன் ஹாரர் படம்தான் தெ மிஸ்ட்..Thomas Jane, Marcia Gay Harden and Laurie Holden ஆகியோரின் நடிப்பில் ஸ்டீபன் கிங்கின் ஒரே தலைப்பிலான நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமிது.

    "மிஸ்த்" என்ற ஆங்கில சொல்லை தமிழில் "பனி மூட்டம்" அல்லது "மூடுபனி" என்று மொழி பெயர்க்கலாம்..தலைப்புக்கு ஏற்றாட் போல் படம் முழுவதும் பனியே சூழ்ந்து, எங்கு எது வந்து யாரை கவ்விக்கொண்டு போக போகிறதோ என்ற பயத்தை திரையில் தந்திருக்கிறார்கள்.அதுவே கதையோட்டத்திற்கும் பெரியளவில் துணைப் புரிகிறது (உடனே கதை என்ன என்பதை? கேட்க்காதீர்கள்..நம்பிக்கையோடு சென்று பாருங்கள்...கண்டிப்பாகப் பிடிக்கும்).


தொடங்கிய முதல் சில காட்சிகளிலேயே நம்மை நிமிர்ந்து உட்க்கார வைக்கிறது திரைக்கதை..டேவிட் ட்ரேயிடன் மற்றும் அவரது மகனான பில்லி, பொருட்கள் சில வாங்க செல்லும் சூப்பர் மார்க்கேட், அதனை சுற்றி திடீரென வரும் பனி மூட்டம் அதனுள் ஆபத்துகள் இதுதான் கதைக்களம்.சுமார் இரண்டு மணி நேரங்கள் ஓடும் திரையில், பெரும்பாலானவை சூப்பர் மார்க்கெட்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும்.. ஹாரர் என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது இருள்தான்..அந்த இருளை எடுத்துவிட்டு வெளிச்சத்தில் ரொம்ப திகிலாக பார்வையாளர்களை மிரட்டும் விதத்தில் காட்சிகளை படமாக்கிருப்பர்.இத்தனைக்கும் இதில் பேய், பிசாசு, சாத்தான், டிராகுலா, சோம்பிஸ் என்று எதுவுமே இல்லை..இது வேற..வேறங்க... பல காலமாக சினிமாவில் பார்த்ததுதான் என்றாலும் இதில் ஒரு சுவாரஸ்யம், சுவை இருக்கும்.

உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் கவனத்தையும் பெரும்பாலான விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருப்பது குறிப்பிடதக்கதாகும். நிச்சயமாக ஸ்டீபன் கிங்கின் கதைகளை தழுவி வந்த மிகச் சிறந்த திரைப்படங்களில் டாராபோண்ட் இயக்கிய திரைப்படங்களுக்கு ஒரு மிகச் சிறந்த இடம் உண்டு..கிரீன் மைல், சாவ்ஷாங்க் ரெடெம்ப்ஷன் ஆகிய படங்களோடு தெ மிஸ்டை சேர்க்க முடியாவிட்டாலும், கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட நல்ல ஹாரர்களில் ஒன்றாக கூறலாம்.

சாமர்த்தியமான திரைக்கதை, சலிப்புத்தட்டாத கதைச்சொல்லல் என எடுக்கப்பட்ட விதத்துக்காகவே இரு முறை தாராளமாக படத்தை காணலாம்..கிளைமக்ஸ் காட்சிகள் சான்ஸே இல்லை..நீண்ட நேரம் மனதில் பதிந்த வெல் மேட் ஸீக்குவன்ஸ்.

IMDB : 7.3 / 10
MY RATING : 7.5 /10
The Mist (2007) : One Of The Best Horror Picture Of Last Decade.
==========================================================================================
ஸ்டீபன் கிங்க் : எழுத்துக்களின் கிங்கு

 அமெரிக்கா மட்டுமல்ல உலகமெங்கும் தன்னுடைய திறம்பட எழுத்துக்களால் நாடு, மொழி என்பதை தாண்டி ரசிகர்களை கொள்ளை கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளர்.கேரி என்ற தனது முதல் புதினத்தை 1974 ஆம் ஆண்டு வெளியிட்டதை தொடர்ந்து ஹாரர், ஃபேந்தஸி, மர்மம், டிராமா போன்ற பலத்தரப்பட்ட வகைகளில் இதுவரை 49 நாவல்களை எழுதிவிட்டார். இன்னும் கோடிக்கணக்கான வாசகர்கள் இவருக்கு மிக பெரிய ரசிகர்களாக உள்ளனர்.இன்று மக்களால் மிகுந்த அளவில் சிறப்பாக வரவேற்ப்படும் Carrie (1976), The Shining (1980), The Dead Zone (1983), Misery (1990), The Shawshank Redemption (1994), The Green Mile (1999) திரைப்படங்கள் யாவுமே இவரது சிறுக்கதை, புதினங்கள் என்று திரைவடிவம் பெற்ற எழுத்து ஜாலங்களே.

ஸ்டீபன் கிங்க் என்ற ஹாரர் உலக எழுத்தாளரின் கைவண்ணத்தில் மலர்ந்த கதைகளை தழுவி வந்த இரண்டு படங்களையே இன்றைய பார்வைகளாக..:பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
============================================================================================

@ 1408 (2007)
@ A Film By Mikael Håfström
@ Stars: John Cusack, Samuel L. Jackson 

நமது ஜோன் குசாக்க்கும், சாமுவேல் ஜேக்சனும் நடித்த படம்..இருவரையுமே எனக்கு பிடிக்கும்..Mikael Håfström இயக்கத்தில் திரைக்கதையை Matt Greenberg, Scott Alexander, Larry Karaszewski ஆகியோர் எழுத, 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாரர் படம் 1408.அமானுஸ்யங்களை ஆராய்ச்சி செய்து எழுதி வருபவர் மைக் என்ஸ்லின்.நீண்ட காலமாக யாரும் தங்காத பல மர்மங்கள் நிறைந்ததாக கூறப்படும் 1408 என்ற ஹோட்டல் அறையை கேள்விப்பட்டு தங்க வருகிறார்.அங்கு நடக்கு சம்பவங்களே திரைக்கதை..இறுதி காட்சிகள் சற்று குழப்பும்படி அமைந்திருந்தாலும் சுவாரஸ்யமான ஹாரர் படமாக 1408 சொல்லலாம்.


வழக்கம் போல ஜொன் குசாக் மற்றும் ஜேக்சன், தத்தம் கதாபாத்திரங்களுக்கு மெருகூட்டி சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் விமர்சக மற்றும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது குறிப்பிடதக்கதாகும்.ஹாரர் ரசிகர்கள் தவற விடாமல் பார்த்து ரசிக்கலாம்.

IMDB : 6.8 / 10
MY RATING : 6.1 / 10
1408 (2007) : Not Best..But Still Watchable

===================================================================================
ஒரு மட்டமானகுறிப்பு : இது ஒரு ஏற்கனவே எழுதினதுங்க (பழச தேடாதிங்கோ).நான் அப்ப எழுதி நானே படித்து பிடிக்காம போன ஒன்னு.அத சில மாற்றங்களுடன் கொடுக்க TRY பண்ணிருக்கேன். இப்பயும் நல்லாவே இல்ல.என் செய்வேன்.
பதிவுக்காக சில தகவல்களை வாசகர்களுக்கு திரட்டி கொடுக்க உதவிய கூகுளுக்கு நன்றிகள்.
=====================================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Wednesday, 15 February 2012

Horror Cinema : Secret Window (2004) - நிழலுக்குள் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்..



Film : Secret Window   Year : 2004
Country : USA        Rating : PG - 13 (Parents Guide >)
Director : David Koepp
Writers : Stephen King (novel), David Koepp (screenplay)
Stars : Johnny Depp, Maria Bello and John Turturro
Awards : 2 nominations See more awards »

சில வேலைகளுக்கு இடையே 2004 - ஆண்டு வெளிவந்த சீக்ரட் விண்டோ என்ற சைக்கலோஜிக்கல் ஹாரர், திரில்லர் வகையில் எடுக்கபட்ட திரைப்படத்தை எச்பிஓ அலைவரிசையில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது..

   ""ஆறு மாதமாக மனைவியை பிரிந்து, யாரும் இல்லாத தனிமையான வாழ்க்கையை ஓட்டி வரும் எழுத்தாளர் மோர்ட் ரையினிக்கும், எதர்ச்சையாக தன் மீது தன்னுடைய கதையை களவாடிவிட்டதாக கூறிக்கொண்டு தன்னை மிரட்டி, தனது உடமைகளையும் உறவுகளையும் சேதப்படுத்தும் ஜோன் சூட்டர் என்பவருக்கும் இருக்கும் உணமைகளையும், பயங்கரத்தையும் தனது தொய்வில்லாத திரைக்கதை மற்றும் நடிப்பால் கூறும் படம் சீக்ரட் விண்டோ"""

படத்தின் மிக முக்கியமான மோர்ட் ரையினி என்னும் திரை கதாபாத்திரத்தில் ஜோன்னி டெப்..

 இவரை அறிந்திராத ஹாலிவுட் ரசிகர்கள் மிகவும் குறைவு..Pirates of the Caribbean திரைப்பட தொடர்களின் மூலம் உலக புகழ்பெற்ற திறம் வாய்ந்த நடிகர் .. ரொம்பவும் பிடித்தமான நடிகர்.பல தரப்பட்ட கேரக்டர்களில் முத்திரை பதித்தவரான ஜோன்னிக்கு, இந்த பட ரோல் எல்லாம் எம்மாத்திரம் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்..தெ சைனிங்கில் ஜேக் நிக்கல்சன் அவர்கள் நடித்த ஏறக்குறைய அதே மாதிரியான வேடத்தில், ஆறு மாதங்களாக யாருடனும் பெரிதாக ஒட்டாத, மனைவியின் கள்ள காதலை அறிந்துக்கொண்ட சாதாரணமான எழுத்தாளராக வந்து அசாதாரணமான நடிப்பை, ஒவ்வொரு முகபாவனைகளிலும் அசைவுகளிலும் வெளிபடுத்தி மனதுக்கு மிக பெரிய ஆறுதலை கொடுக்கிறார்..இறுதி காட்சிகளில் இவரது கண்கள் இருக்கிறதே "பணம் கொட்ட வேண்டும்" இந்த நடிகனுக்கு..ஆனால் 80 ஆம் ஆண்டுகளிருந்து   நடித்து வரும் ஒரு சிறந்த நடிகனுக்கு இன்றுவரை ஆஸ்கர், எட்டாத கனியாக இருப்பது வியப்போடு கலந்து வருத்ததை அளிக்கிறது..

நடிப்பளவில் இத்திரைப்படத்தின் கூடுதல் பலமாக John Turturro, Timothy Hutton மற்றும் Maria Bello ஆகியோரை கூறலாம்.இதில் முதல் இரண்டு நடிகர்கள் இந்த படத்தில் கிடைத்த அறிமுகங்கள்..மரியோ பெல்லோவை பலருக்கும் தெரிந்திருக்கும்..நல்ல நடிகை.

இயக்குனர் David Koepp - Panic Room (2002), Angels & Demons (2009), Mission: Impossible (1996), Spider-Man (2002) போன்ற பல படங்களுக்கு திரைக்கதை அமைத்து இன்று நல்ல இயக்குனராக உருவெடுத்துவருபவர்.. ஜுராஸிக் பார் படத்தின் வழி உலகளவில் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வந்திருக்கும் சீக்ரட் விண்டோ, கடந்த பத்தாண்டுகளில் உருவான நல்ல ஹாரர், திரில்லர் படங்களில் ஒன்றாக சொல்லலாம்.அதே நேரம் ஹாரர் படங்களை கரைத்து குடித்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த படம் மொக்கையாகவும் அமையலாம்..//எப்படியோ பார்த்துட்டு பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா..//      


""The most important part of a story is the ending."
இது படத்தின் டேக்லைன் மட்டும் கிடையாது..படத்தின் உயிர் நாடியே இதுதான்..படம் ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே த்ரில்லர் வெறியர்கள்  கண்டிப்பாக ஓரளவாவது கிளைமக்ஸை ஊகிக்கலாம்.அந்த வகையில் கொஞ்சம் வசதியாகவே தடயங்கள் வைத்து படத்தை நகர்த்தியுள்ளனர்.அதுவும் வலை தொடங்கியதிலிருந்து வழக்கத்துக்கு அதிகமாகவே சஸ்பென்ஸ் திரில்லர் என்று பார்ப்பதால் படம் போன முதல் 40 டூடூ 50 நிமிடங்களுக்குள்ளேயே டிவிஸ்டை உணர முடிந்தது..படம் பார்ப்பவர்களை நோகடிக்காத அதைவிட முக்கியம் ஏமாற்றாத விதத்தில் டிவிஸ்ட் அமைந்திருக்கும் ..மறுபடியும் (முன்னால எப்ப சொன்ன..) சொல்கிறேன் ஜோன்னி டெப்தான் படத்தோடு டபல் டிரீட்..
    
       திரைப்படத்தில் நிறையவே நல்ல காட்சிகள் ரசிகர்களுக்கென்று திரில்லாக மெனக்கட்டு ஏதோ பண்றேனு, நல்லாவே செய்து இருக்கிறார்கள்..முதல் காட்சியிலேயே "போவோமோ??போக வேணாமானு" 

ஏதோ ஒரு மாதிரி ரையினி மனதுக்குள்ளேயே பேசிக்க நம்மல எங்கயும் போகவிடாத மாதிரி ஸீனு ஸீனா பார்த்து தைச்சிருக்காங்க படக்குழுவினர்கள்..அதுவும் எந்த ஊசியும் நூலும் இல்லாம..//// படத்தின் சில சுவாரஸ்யமான காட்சிகளை சொல்ல வேண்டாம் என்று தவிர்க்கிறேன்..அப்பதான் திரில்லா..இருக்கும்...(அட அப்படியா??))

எழுத்தாளர் ஸ்டீபன் கிங், சினிமா மற்றும் புத்தக பிரியர்கள் பலருக்கும் அறிமுகமானவரே..  ஹாரர் படங்களுக்கு என்றே இயக்குனர்கள் ஜோன் கார்ப்பெண்டெர், சாம் ராய்மி போன்றவர்கள் எப்படியோ, அதே மாதிரி எழுத்து துறையில் தலைவர்தான் A TO Z..ஹாரர், சஸ்பென்ஸ் என்று ஒரு என்சைக்கலோபீடியாவாகவே வாழ்ந்து வருபவர்..2004 - ஆம் ஆண்டு இவர் எழுதிய நாவலை படமாக்கி இருக்கின்றார் இயக்குனர்.பல நல்ல கதைகளை படம் பண்றேனு சொல்லிட்டு..புகை ஊதுறேனு அதாங்க ரீலு..ரீலு - வுடற படங்களுக்கு மத்தியில் இந்த படத்த(யாவது) உருப்பிடியா எடுத்த பெரிய மனிதர்களுக்கு சில நமஸ்க்காரங்கள்..

விமர்சனங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இல்லையென்றாலும் 50, 60 சதவீதமாவது விமர்சக மற்றும் ரசிகர் பெருமக்கள் இடையே ஏற்றுக்கொள்ளபட்டது என்றே சொல்லவேண்டும்..உலகளவில் $92,913,171 வசூல் செய்த தொகையை இதற்கு சான்றாக கூறலாம்..
ஒரு முறை பார்த்த பிறகு இன்னொரு முறையும் பார்க்க தூண்டும் வகையான படமிது..சில வேலை காரணமாக ஒரு தடைவையே பார்க்க முடிந்தது...எச்பிஓ - வில் திரும்ப திரும்ப ஒளிப்பரப்பினாலும் பார்க்க நேரம் கிட்டுமா என்பது சந்தேகம்தான்..பட்..நீங்க மிஸ் பண்ணாதிங்க..வாய்ப்பு கிடைப்பின் பார்க்க வேண்டிய படமே..

@ பார்க்க வேண்டிய நேரம். : நள்ளிரவு (குட் நைட்)
@@ பார்க்க கூடாத நேரம் :: பட்டப்பகலில்.. (அட வேலை இல்லாட்டாலும்)
@@@ யார்//யாரோட பார்க்கலாம் ::: 15, 16 வயச கடந்தவங்க..
@@@@ எதுக்காக பார்க்கலாம் :::: மற்றவங்களோட எழுத்த களப்புனா என்னவெல்லாம் நடக்கும் என்பதை அறிய,,

'சோஓ..மொத்தத்தில், சீக்ரட் விண்டோ : பார்த்துட்டு சாத்திட்டு வந்து தூங்குங்க..

IMDB RATING : 6.5 / 10

MY RATING : 6.5 / 10 : Twist & Turns

நியூஸ் டெலிவரி : இந்த படத்தின் கதையை மாதிரியே (நால்லா கேட்டுக்கோங்க மாதிரிதான்)) நிறைய படங்கள் வந்துள்ளதாக படம் பார்த்த என்னோட ஐன்ஸ்ட்டின் மூளை யூகித்தது..என்னோட மூள என்னிக்கு தோற்றது சொல்லுங்க ?? சில நாட்களுக்கு முன்னாடி இணையத்தில் தேடும் போதுதான் பல படங்கள் இதே மாதிரி கதையில வந்ததா தெரிந்துக்கொண்டேன்..ஆனா ஒன்னு..பெரும்பாலான எல்லா படமும் 2004 - ஆம் ஆண்டுகளுக்கு முன்னாடி 60's, 70's, 80's, 90's எடுக்கபட்டவையாம்..அட அப்பயே எவ்வளவு பெரிய ஜீனியஸ் எல்லாம் யோசித்திருக்காங்க..ஹி..ஹீ.. டைம் கிடைப்பின் இனி வரும் வசந்த காலங்களில் எப்பயாச்சும் ஒவ்வொரு பார்வைகளாக பார்க்கலாம்.. 
==================================================================       

 ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Friday, 9 December 2011

தெ மம்மி/The Mummy - 1932 : பழமையான காதலின் புது உருவம்..

------------------------------------------------------------------------------- 
  சிறிது நாட்களுக்கு பிறகு Cinemax அலைவரிசையின் புண்ணியத்தில் பார்த்த ரொம்ப பழைய ஒரு ஹாரர் படம் தெ மம்மி..


   அமெரிக்க சினிமா உலகின் சிறந்த திரை ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான Karl Freund என்பவரின் திரை இயக்கத்தில் 1932 - ஆம் ஆண்டு வெளிவந்த மர்மம் - சஸ்பென்ஸ் ஆகிய வகையில் வெளிவந்த அமெரிக்க திரைப்படமாகும்.Boris Karloff, Zita Johann மற்றும் David Manners ஆகியோர்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க John L. Balderston என்பவர் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.


++++++++++++++++++++++++++++++++++
The Mummy 1932 Dvdrip Part One, Two
++++++++++++++++++++++++++++++++++
==============================================
கதைச்சுருக்கம் :

1921 - ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் நடக்கும் ஒரு வரலாற்று ஆய்வினில் இம் - ஹோ - டேப் என்னும் பழங்காலத்து எகிப்து மதகுருவின் கல்லறையை தோண்டி எடுக்கிறார்கள். கல்லறையின் மேலே எழுதபட்டிருக்கும் மந்திர சொற்களை தற்ச்செயலாக ஒருவர் படிக்கவே கல்லறை பிணம் மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது.

 கதை இப்பொழுது சரியாக 10 வருடங்களுக்கு பிறகு 1931 - ஆண்டு தொடர்கிறது, இப்பொழுது அந்த இம் - ஹோ - டேப் என்ற மம்மி முழுக்க முழுக்க கோரமான முக அமைப்புடன்  Ardath Bey என்ற பெயரில் உயிருள்ள மனித உருவில், தன்னுடைய பழங்காலத்து எகிப்த்திய காதலியின் பிணத்தைக் கொண்ட (Ankh-es-en-amon) கல்லறையை தோண்டி எடுக்க உதவி செய்கிது.
இத்தனை ஆயிரம் வருடங்களுக்கு பிறகு தன் நிறைவேறாத காதலை மீட்கவும் தன் காதலியுடன் இணையவும் இம்ஹோடேப் செய்யும் காரியங்களை திரைப்படத்தின் மீத காட்சிகளாக வருகின்றது..மேலும், தன்னுடைய லட்சியத்தை அடைய எகிப்திய வம்சாவளியில் வந்த ஹீரோயினான Helen Grosvenor (Zita Johann) என்பவரை தன்னுடைய வசம் ஈர்க்கவும் முற்படுகிறார்..இதற்கிடையியே இந்த எல்லா விஷயங்களும் ஹீரோவுக்கு தெரியவர..

  தன்னுடைய காதலி ஹெலெனை காப்பாற்றினாரா ? அல்லது இம்ஹோடேப் தன் மந்திர சக்தியால் இவர்களை அழித்து தன் காதலை அடந்ததா ? என்பதுப் போலான சில கேள்விகளுக்கு வழக்கம்போல ஒரு சில கொலைகள் கலந்த திகிலுடன் கதைய சொல்லிருக்கும் பழைய படம்தான் இந்த தே மம்மி..    
=============================================
தெ மம்மி திரைப்படத்தை பற்றி சில சுவாரஸ்யங்கள் :

முதலில் இந்த படத்தின் இயக்குனரான Karl Freund, ஒரு சிறந்த பிரபல பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளரும் இயக்குனருமாவார்.மெட்ரோபோலிஸ் போன்ற மிகப்பெரிய பட்ஜெட்டிலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.இந்த படத்திலும் அதை  நன்றாகவே செய்திருக்கிறார்..தொலைக்காட்சியில் முதன் முதலாக இந்த படத்தை பார்த்த போது இது என்னவோ 50 - ஆண்டுகளில் வெளிவந்த படம் என்று உண்மையாக நினைத்தேன் - நம்பினேன்.அந்த அளவுக்கு சிறிய பட்ஜெட்டில் ஸ்டூடியோ துணையுடன்  நடிப்பு, வெளி/உள்ப்புற காட்சிகள், எடிட்டிங் என்று அனைத்திலுமே திறம்பட தன் பணியை செய்திருக்கிறார்..படம் பார்த்தால் நீங்களும் இதை உணர வாய்ப்பு உண்டு.
================

படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எனக்கு எந்த நடிகரையும் தெரியவில்லை..உண்மையை சொல்ல வேண்டுமெனில் இவர்களின் முகங்களையே இப்படத்தில்தான் பார்த்தேன்.ரோஜெர் கார்மெனின் மூலம் வின்செண்ட் பிரைஸ், செவென் படத்தின் மூலம் கெவின் ஸ்பேசி என்ற வரிசையில் இந்த படம் மூலம் அறிந்துக்கொண்ட ஒரு பொக்கிஷமாக Boris Karloff (1887-1969) என்ற நடிகரை சொல்லலாம்.இணையத்தில் இவரை பற்றி தேடிய போதுதான் இவரை பற்றி பல விஷயங்கள் கிடத்தது..இவரும் ஹாரர் உலகின் சிறந்த புகழ்பெற்ற நடிகராம்..இந்த படத்திலும் பழங்காலத்து எகிப்திய மம்மியாக இம்ஹோதேப் என்ற பாத்திரத்தின் ஊடே கண்களிலேயே மிரட்டி இருக்கிறார்..1932 ஆண்டிலேயே இந்த மாதிரி நடிப்பு என்ன சொலவது..நான் சின்ன பையன். மன்னிச்சுடுங்க..
========================

அடுத்து படத்தில் பார்த்து ரொம்ப அசந்துப்போன ஒரு விஷயம் என்றால் கண்டிப்பாக மேக்கப்தான்..அந்த காலத்திலேயே இந்த..(ச்சே..எந்த மாதிரி சொல்லுறது..) மேக்கப் முயற்சியெல்லாம் சாத்தியமா என்று மம்மி வரும் காட்சிளில் எனக்கு தெரியாமயே மனதில் சொல்ல சொல்ல வைத்தது.அதுவும் இது 32 - இல் வந்த படம் என்று நினைக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.நம்பலன்னா  பாருங்க..
================================
சுமார் 80 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம், காட்சிகள் அளவில் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் 30 - ஆம் ஆண்டுகளிலேயே இந்தளவுக்கு சஸ்பென்ஸ் மற்றும் திகிலான சமச்சாரங்களை எதிர்ப்பாராத விதத்தில் நல்ல படைப்பாக வழங்கியுள்ள படக்குழுவினர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் சுமார் 80 வருடங்கள் கழித்தும் சிறந்த ஹாரர் கல்ட் கிளாசிக்குகளில் ஒன்றாக ரசிகர்களாலும் விமர்சனகர்களாலும் இந்த படம் கருதப்படுகிறது.உதாரணமாக ரோட்டென் தொமொதொஸ் இப்படத்துக்கு வழங்கிருக்கும் 92 சதவீத மதிப்பை எடுத்துக்கொள்ளலாம்.
==================================================

   இறுதியாக, தெ மம்மி ஹாரர் சினிமா உலகின் தொடக்க காலத்தில் எடுக்கபட்ட (அல்ல எடுக்க முயற்சிசெய்யபட்ட) ஒரு நல்ல ஹாரர் படம் என்பதில் சந்தேகமில்லை.சிலருக்கு இத்திரைப்படம் பிடிக்காமல் போகலாம்..ஆனால், உண்மையான ஹாரர் ரசிகர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஹாரர் கிளாசிக் தெ மம்மி.   

IMDB : 7.3/10
MY RATING : 6.8/10 : One Of The Better Classic Horror Flick.  
  கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,
Related Posts Plugin for WordPress, Blogger...