Monday, 31 October 2011

Devil - 2010 : மாட்டிக்கொண்டதால் மரணங்கள்..


பி.கு : இதில் "நீங்கள்" என்னும் வார்த்தை கற்பனையாகும்..லிப்ட்டில் மாட்டிக்கொண்ட கதாபாத்திரங்கள் ஐந்துதான்..ஆனால் ஒருவகையி ஆ.......று..

வாசகர்களே, கொஞ்சம் கற்பனை செய்துப்பாருங்கள்..

    "அது பல மாடிகளை கொண்ட ஒரு உயர்ந்த கட்டிடம்..நீங்கள் அங்கு செல்கிறீர்கள்.நீங்கள் செல்ல விரும்புகிற இடம் உயர் மாடியில் இருப்பதால் லிப்டை நாடுகிறீர்கள்..உங்களுடன் முகம் தெரியாத ஒரு ஐந்து பேர்கள் அந்த லிப்ட்டில் இருக்கிறார்கள்...இவர்கள் ஒவ்வொருவரும் யாரென்றே தெரியவில்லை..ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தோற்றமளிக்கிறார்கள்..அணிந்திருக்கும் உடையை பார்த்து அதில் ஒருவர் கட்டிடத்தில் பணிப்புரியும் பாதுக்காவலர் (Bokeem Woodbine ) என்பதை அறிந்துக்கொள்கிறீர்கள்.//இன்னொருவர் பொருள் விற்பனையாளராவார் (Geoffrey Arend)... மூன்றாவதாக ஒரு வயதான பெண் (Jenny O'Hara)..நான்காவதாக இருப்பவர் யாரென்றே தெரியவில்லை..மீதமுள்ளவர் கனவனிடம் பணத்தை திருடிக்கொண்டு வந்தவர்..என்பவற்றை போக போக அறிந்துக்கொள்கிறீர்கள்..

    திடீரென்று ஒரு சத்தம்..லிப்ட் நகரவில்லை..மாடிகளுக்கு நடுவினிலே நின்றுவிட்டதை நீங்கள் அனைவரும் உறுதிசெய்கிறீகள்..அதில் பாதுகாவலர் Emergency பட்டனை அழுத்தி அனைவரும் லிப்ட்டில் மாட்டிக்கொண்டதாக தெரியபடுத்துறார்..நீங்கள் பதற்றம் அடைகிறீர்கள்..அவசரமான வேலை வேறு..சிறிது வினாடிகளிலேயே சிசிடிவியின் மூலம் உங்களை பாதுகாவலர்கள் உங்களை தொடர்புக்கொள்கிறார்கள்..அவர்கள் பேசுவது உங்களுக்கு கேட்கிறது..ஆனாலும் உங்களது குரல்கள் அனைவரது குரலும் பாதுகாவலர்களுக்கு விளங்கவில்லை..இப்பொழுது...

      
    விளக்குகள் அனைத்தும் அணைந்து அணைந்து ஒளிந்து..மொத்தமாக அணையும் பொழுது யாரோ ஒருவர் உங்களை தாக்கியதுப்போல் உணருகிறீர்கள்..விளக்கு மீண்டும் ஒளிகையில் உங்களுடன் பயணித்த ஒருவர் இறந்து கிடக்கிறார்..மேலும் மேலும் விளக்கு அணையும் பொழுதெல்லாம் இதுப்போன்ற விபரீதங்கள் நிறைய நிகழ்கின்றன (காப்பாற்ற வந்தவருக்கூட.....சாரி படத்த பாருங்க).."

எப்படி இருக்கும் உங்களுக்கு..கற்பனை செய்ய இயல்கிறதா..இதுவேதான் இந்த படத்தின் நிலையும் (ஐ மீன் கதையும்)..கதய சொன்ன விதம்தாங்க இப்படி பார்த்துப்பாருங்க சும்மா கண்ண கட்டிடும்..ஹீ??ஹி..கொஞ்சமாவது நம்பி படத்த டவுன்லோடு போடுங்க..இலவசம்தான்..

+++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++=++++

 Film : Devil          Year : 2010
Country : America         Rating : PG - 13
Director : John Erick Dowdle    Writers : Brian Nelson (screenplay), M. Night Shyamalan (story)   
Stars : Chris Messina, Bojana Novakovic, Bokeem Woodbine, Logan Marshall-Green, Jenny O'Hara, Geoffrey Arend 
Awards : கொடுக்கமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க..என்ன செய்றது..


    டெவில் - என்பவரின் இயக்கத்தில் தெ சிக்ஸ்த் சென்ஸ், சைன்ஸ் போன்ற படங்களின் மூலம் ஹாலிவுட்டில் முத்திரைபதித்த தமிழரான எம்.நைட் ஷாமளன் அவர்களின் கதை மற்றும் தயாரிப்பில் 2010 - ஆம் ஆண்டு வெளிவந்த supernatural ஹாரர் திரில்லர் வகையை சேர்ந்த திரைப்படம் ஆகும்.Chris Messina போலிஸாக Bowden என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் Caroline Dhavernas, Bokeem Woodbine போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்..பெறும்பாலான விமர்சனர்களிடமிருந்து நடுத்தர வரவேற்ப்பு பெற்றிருந்தாலும் பல ஹாலிவுட் ஹாரர் படங்களிலிருந்து விலகி (போர்முலா) சற்று வித்தியாசமாக களத்தில் எடுத்திருக்கின்றனர்.கூடவே .பார்ப்பவர்களுக்கு பயத்தையும் கொஞ்சம் வழங்கி இருக்கின்றனர்.

Devil - 2010 திரைப்படத்தில் சில சுவாரஸ்யங்கள் 

  
  •  படத்தின் கதையை எழுதியது சிறந்த ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவரும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டவருமான எம்.நைட் ஷாமளன் ஆகும்.இவர் தன்னுடைய ஸ்டைலியே கதையை அமைத்திருப்பது சிறப்பு எனலாம்..கொஞ்சம் பயம், கடைசியல டிவிஸ்டினு எதையும் விடாமல் ரசிகர்களை கட்டி போடும் வகையில் ஒவ்வொரு காட்சியையும் அமைத்திருக்கிறார் Brian Nelson.அனைத்துமே விறு விறுப்பு குறையாத காட்சிகள்..எனக்கென்னவோ ஷாமளன் திரைக்கதை எழுதி இருந்தால் நன்றாக இருக்குமோ என்று படம் முடியும் நினைத்தேன்..(அவ்வளவு நம்பிக்கை இந்த தமிழர் மீது..)

========= 
  • 10 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது..

============== 
  • ரோட்டென் தொமொஸில் தற்பொழுது 52 % சதவீதம் பெற்றுள்ளது..

==============
  • நல்ல படம் என்பதை தாண்டி இது ஒரு பிஜி - 13 ரேட்டிங் பெற்றதாகும்..அதிகபட்சமாக பயத்தையும் வன்முறைகளும் பெரியளவில் இல்லை என்பதால் அனைவரும் பார்க்ககூடிய ஏகுவான படமே (10 வயதுக்கு மேல்)..எதற்கும் இங்கு செல்லவும்..

=========== 

  • மேலும், இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் Tak Fujimoto.சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்று சொல்லலாம்.இவருடைய ஒளியோவியம் இந்த படத்துக்கு மிகப் பெரிய பலம்..ஷாமளனின் படம் என்பதால் மட்டுமே சம்மதித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

============ 
  • இப்படத்தின் தொடர்ச்சியாக (Sequel) இன்னும் இரண்டு வருடங்களில் Reincarnate என்ற தலைப்பில் எடுக்க விருப்பதாக அறிவித்திருகின்றனர்.

=========== 
இயக்குனர் John Erick Dowdle


 இன்று ஹாலிவுட்டில் வலம் வரும் இன்னொரு ஹாரர் இயக்குனர்..எடுத்த எல்லா படங்களும் ஹாரர் வகைகளே..1973 - ஆம் ஆண்டு பிறந்த இவர் இயக்கிய Quarantine (2008) திரைப்படம் அமெரிக்காவில் இவருக்கு ஓரளவு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது எனலாம்.இவரது மற்ற படங்கள் : The Poughkeepsie Tapes (2007), The Dry Spell (2005).இதில் The Dry Spell என்ற படத்துக்காக Slamdance திரைப்பட விழாவுக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்..

MY RATING : 6.5/10 : FOR SHYAMALAN

கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிகவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை
நன்றி..வணக்கம்  

Sunday, 30 October 2011

மை மேஜிக் - 2007 - கேன்ஸில் தமிழ் பேசிய சிங்கப்பூர் சினிமா...


இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்க்கான PALME D'Or பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்..

 CANNES : PALME D'Or : 2007


 ஒரு சில மாதங்களுக்கு முன்பு, சமீபத்தில் அதாவடு கடந்த 10 ஆண்டுகளில் திரைப்படவுலகின் மிகப் பெரிய திரைவிழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் பல பிரிவுகளில் போட்டியிட்ட படங்களை பற்றி தேட வேண்டும் என்றும் ஆர்வம் ஏற்பட்டது...இதன் பேரில் பலதரபட்ட நாடுகளிலிருந்து பல படங்களை காண வாய்ப்பு கிடைத்தது..முதலில் நான் தேடியது சிறந்த படங்களை தேர்வு செய்யும் பிரிவான Palme D'or.. வருட கணக்கில் தேடிய நிலையில் என்னை பெரிய அளவில் அதிர்ச்சிகுள்ளாக்கிய ஆண்டு 2007.



மிகுந்த அளவில் ஆச்சரியத்தை வழங்கியது... அந்த வருடத்துக்காக பரிந்துரைக்கபட்ட சிறந்த படங்களின் பட்டியலில் இருந்த மை மேஜிக் என்ற சிங்கபூர் படம்தான்..அதிர்ச்சிக்கான முதல் காரணம் சிங்கப்பூர் என்ற வார்த்தையே..அண்டை நாடான மலேசியாவில் வசித்துக்கொண்டு இந்த பெருமையை உணராமல் அதுவும் தெரியாமல் இருந்ததை எண்ணி வெட்கபட்டேன்..வருத்தத்தில் ஆழ்ந்தேன்..

 அது ஒரு பக்கம் இருக்க ....ஒரு தமிழ் பேசும் சினிமா, ஒரு சீன இயக்குனரால் உலக திரையரங்கில் நிமிர்ந்து நின்றதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தேன்..இதுவே, இந்த படத்தை இங்கு பகிர்வதற்கு முதற் காரணம்//  
        
=================================================
++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++

   மை மேஜிக் - 2008 - ஆம் ஆண்டு சிறந்த சிங்கப்பூர் இயக்குனரான எரிக் கூவின் இயக்கத்தில் Bosco Francis, Jathisweran மற்றும் Grace Kalaiselvi
ஆகியோர்கள் தங்களதுனடிப்பை தததம் கதாபாத்திரங்களில் நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்.ஒரு குடிகார தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை கொஞ்சம் கூட திகட்டாமல் ஒரு ஒன்றரை மணி நேரம் நம்மை சினிமா திரைக்குள் கொண்டுச்செல்கிறது..இதுவரை சிங்கபூர் திரைப்படங்களை பார்க்காதவர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை..


   படத்தின் திரைக்கதையை இயக்குனருடன் இணைந்து Wong Kim Hoh என்பவர் எழுத, Kevin Mathews மற்றும் Christopher Khoo திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கின்றனர்..மேலும், ஒளிப்பதிவை Adrian Tan கவனிக்க, படத்துக்கு Siva Chandran மற்றும் Lionel Chok ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளார்.
   
==========================================================================================================================
MY MAGIC - 2007  திரைப்ப்டைப்பில் சில சுவாரஸ்யங்கள் :

சிங்கப்பூரிலிருந்து முதன் முறையாக கேன்ஸ் திரைப்படவிழாவில் அதுவும் பால்மா டியோர் விருதுக்கு பரிந்துரைக்கபடும் முதல் படமாகும்..
================

மேலும், 2009 ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்க்கான ஆஸ்கருக்கு இந்த படம் சிங்கப்பூரிலிருந்து அனுப்பிவைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும் (Short List) ..ஆனால், இறுதிகட்ட தேர்வில் இந்த படம் பரிந்துரை பெறவில்லை..(Nomination)
=====================


 படத்தில் ஹீரோவாக வரும் Bosco Francis அவர்களின் நடிப்பு அருமை..Francis என்ற கதாபாத்திரத்தில் கதைக்கு உயிரை கொடுத்திருக்கிறார்..
===========================

Francis மகனாக வரும் Jathisweran கதைக்கு தேவையான இயல்பான நடிப்பை நன்றாக வெளிபடுத்தியுள்ளார்..
================================


பிரான்ஸ் நாட்டின் Le Monde வார பத்திரிகையால், 2008 ஆண்டினில் வெளிவந்த சிறந்த ஐந்து படங்களில் ஒன்றாக வாக்களிக்கபட்டது மேலும் ஒரு சிறப்பாகும்..
==================================== 



  இவரை பற்றி ஏதாவது ஒரு பதிவில் இதுவரை எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன்..காரணம் இவர் சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி சிங்கப்பூர் சினிமாவை உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமான ஒருவராவார்..இவர் எடுத்த பீ வித் மி என்ற படமே இவரை முதன் முறையாக பல சினிமா அரங்கினில் தலைகாட்டச் செய்தது எனலாம்..2005 ஆம் வருடம் வந்த இந்த படம், European Film Awards, Stockholm Film Festival, Mar del Plata Film Festival, Tokyo International Film Festival போன்ற பல புகழ்பெற்ற திரைப்பட விழாவுக்கு பரிந்துரைக்கபட்டதோடு மட்டும் அல்லாது அதில் சில விருதுகளையும் வென்றது..இதனைத் தொடர்ந்து இவர் எடுத்த படம்தான் மை மேஜிக்காகும்.Asiaweek சஞ்சிகை, 1999 - ஆண்டு 25 exceptional Asians களில் ஒருவராக அறிவித்தது.. தற்போது இவரது இயக்கத்தில் வெளிவந்த படமான Tatsumi (2011), ஆஸ்கர் விருதுக்கு சிங்கப்பூரிலிருந்து submission செய்யபட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்..     
================================================ 


  இறுதியாக, சமீப காலத்தில் தமிழ் பேசும்  சினிமாவை உலக அரங்கில் நிமிர்த்திய படங்களில் இதுவும் ஒன்று என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்..இந்திய சினிமாவோடு இதனை ஒப்பிடும்போழுது மேக்கிங்கிலும் திரைவடிவத்திலும் வேறுபட்டாலும், தன்னுடைய தனி வழியில் இந்த படம் வலம் வருகிறது.. எனவே, அனைத்து தமிழர்களும் கண்டிப்பாக இந்த படத்தை பார்த்து, மேலும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாட்டு திரைவுலகம் மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தங்களால் முடிந்த ஆதரவை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்... 

MY RATING : 7.5/10
=================================================

படித்து ரசித்த பிறப்பதிவுகள் சில :


இதுவோடு, திரைப்பாடகரான கார்த்திக் அவர்களை எனக்கு மிக அதிகமாக பிடிக்கும்..இவரும் இங்கு புகழ்பெற்ற மலேசியா பாடகரான திலிப் வர்மனும் இணைந்து பாடிய மலேசிய பாடலை இங்கு இணைத்திருக்கிறேன்..சில மாதங்களாகவே இதனை முனு முனுத்து வருகிறேன்..நான் ரசித்த பாடலை வாசகர்களும் விரும்புவிர்கள் என்ற நம்பிக்கையில்..       

==================================================        
வாசகர்கள் தயவு செய்து தங்களது கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளலாம்...எதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை..
நன்றி..வணக்கம்

Saturday, 29 October 2011

TRUE GRIT - 2010 : பழிவாங்கும் இரட்டை குழல் துப்பாக்கி......

தொடர்ந்து ஆதரவு வழங்கும் வாசக நண்பர்கர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், உங்களது கருத்துக்களை தயவு செய்து பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்அவைகள் என் எழுத்துகளை பெரிய அளவில் ஊக்கபடுத்தும் என்ற நம்பிக்கையில்...


தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
========================================================================================  

   பொதுவாக ரீமேக்காக எடுக்கபடும் எந்த ஒரு படத்தையும் ஆர்வமாக விரும்பி பார்ப்பது குறைவு.Psycho. The Thing என்று பல படங்கள் ரீமேக்காகி வந்தபோதிலும் ஒரிஜினல் படங்களின் மீது உள்ள பிரியமும் ஆர்வமும் ஒரு போதும் குறைந்ததில்லை..உதாரணத்திற்கு சைக்கோ..கடந்த வாரத்தோடு சேர்த்து இதுவரை ஆறு முறை பார்த்திருக்கிறேன்..ஒரு முறைக்கூட சலிப்பு தட்டவில்லைஆனால்...1998 - ஆம் ஆண்டு ரீமேக் செய்யபட்ட இதே படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை..பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இதுவரை தோன்றியதும் இல்லை..


  இன்றைய சினிமா உலகில் மிக சிறந்த இரட்டை இயக்குனர்களாக கருதப்படும் கோயன் பிரதர்ஸ் இயக்கத்தில் பத்து ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டு 2010 - ஆம் ஆண்டு வெளிவந்த படம் ட்ரு க்ரிட்.தமிழில் இதை "உண்மையான மன உறுதி" என்றுக் கூட மொழிபெயர்க்கலாம்பெயருக்குக்கு சற்றும் குறைவில்லாத வகையில் தைரியமும் பழிவாங்குதலும் திரையில் நிரம்பி வழிகின்றன..

1969 - ஆம் வருடம் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஜோன் வேய்ன் - க்கு சிறந்த நடிப்புக்க்காக ஆஸ்கர் பெற்று கொடுத்த துரு கிரித் திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த படம்..ஒற்றை கண்னை வைத்துக்கொண்டு துப்பாக்கி பேசும் Retire Marshal - லாக வரும், வேய்னின் அசாதாரமாண நடிப்பை போலவே இந்த படத்தில் ஆஸ்கர் விருது வென்ற JEFF BRIDGES..Rooster Cogburn என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்

..ஒரிஜினலுக்கு கிடைக்காத பேரும் புகழும் இந்த படத்துக்கு கிடைத்தது சற்று ஆச்சரியமே..என்றாலும் அதுக்கு முழுக்க முழுக்க காரணமாக ஓங்கி நிற்பது கோயன் பிரதர்ஸின் திரைக்கதையும் இயக்கமும்தான்..

  இயக்குனர் என்ற துறையை தாண்டி, கோயன் பிரதர்ஸை நான் உலகின் தலைச்சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகவே..பல வேலைகளில் இருவராகவே கருதுகிறேன்.இவர்களுடைய ஃபார்கோ படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது "மனுஷன் பெரிசா ஏதோ சொல்ல வராண்டா" என்று தோன்றியது..பணம் பத்தும் செய்யும் என்பதற்க்கு ஏற்றாற் போல மனித வாழ்வில் சாதரணமான பணம் செய்யும் லீலைகளை மிக அழகாக தெளிவாக சொல்லிருப்பார்கள்...விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு ஒரு ரைட் சகோதரர்கள் போல சினிமா கண்டுபிடிப்புக்கு ஒரு கோயன் சகோதர்கள் என்பது என்னுடைய தனிபட்ட கருத்து..


 துரூ கிரீட் - Jeff Bridges U.S. மர்ஷலாக Reuben J. "Rooster" Cogburn என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் அப்பாவின் மரணத்துக்கு பழிவாங்க துடிக்கும் பெண்ணாக Hailee Steinfeld - Mattie Ross என்ற ரோலிலும் தந்தையை கொன்ற வில்லனாக Matt Damon - Texas Ranger LaBoeuf என்ற கதாபாத்திரத்திலும் மற்றும் Josh Brolin - Tom Chaney என்ற பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பினை வெளிபடுத்தியுள்ளனர்..ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.
    
கதைச்சுருக்கம் :

  "The Wicked Flee When None Pursueth"
                - True Grit

  "திரைப்படம் பெண் குரல் NARRATION - இல் காட்சி தொடங்குகிறது.."தன் தந்தை கொலை செய்யபட்டதையும் அதற்கான காரணத்தையும்' அந்த குரல் ஒரு சிறிய விளக்கம் கொடுக்கிறது..அடுத்த காட்சியிலேயே MATTIE ROSS (HAILEE STEINFIELD), அதாவது குரலுக்கு சொந்தக்காரியும் வந்து இறக்குகிறாள்..தொடர்ந்து வரும் காட்சிகள் தந்தையின் மரணத்துக்கு காரணமான துரோகிகளை ரோஸ் பழிவாங்க எடுக்க நடவடிக்கைகளை காட்டுகிறது..இதனை திறம்பட செய்து முடிக்க ஒரு பெரியவரின் உதவியையும் நாடுகிறாள்..அவன் ஒரு குடிகாரன் : பணத்துக்காக எதுவும் செய்யக்கூடியவன்..முதலில் அவளுடைய கோரிக்கையை ஏற்க மறுக்கும் ரூஸ்டரை 'எப்படியோ' பணம் கொடுத்து சம்மதிக்கவைக்கிறாள்..கூடவே அவனுடன் இணைந்தும் கொள்கிறாள்..."

 இங்கு தொடங்கும் காட்சிகள் துப்பாக்கி கூடிய கொஞ்சம் ரத்தமும் கௌபாய் ஆக்சன் காட்சிகளும் பழிவாங்குதளுக்கான பயணத்தை சொல்கின்றன..சுவாரஸ்யமான விசுவல்களுடன்..

TRUE GRIT திரைப்படத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :

2010 - ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு, திரைக்கதை, திரைப்ப்டம், ஒளிப்பதிவு என்று 10 ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்ட்டது குறிப்பிடதக்கதாகும்.ஆனால் இந்த அனைத்து விருதுகளையும் தெ சோஸியல் நெட்வேர்க் மற்றும் தெ கிங்க்ஸ் ஸ்பீச் ஆகிய திரைப்படங்களிடம் பறிக்கொடுத்தது கொஞ்சம் கவலையான விஷயம்..என்றாலும் உலகமெங்கும் பல விமர்சன்ர்களிடமிருந்து அமோக வரவேற்ப்பு பெற்றது குறிப்பிடதக்க சிறப்பாகும்.   
   
Jeff Bridges - திரைப்படத்தில் முதலில் குறிப்பிட வேண்டியவர்களில் ஒருவர்..கிரைஸி ஹார்ட் படத்துக்காக ஆஸ்கர் வென்றவர்..இவருடைய நடிப்பில் முதன் முதலாக பார்த்தது ஜோன் கார்பெண்டரின் இயக்கத்தில் 1988 - ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டார்மென் படம்..மனிதனின் உருவத்தில் எலியனாக வந்து நடிப்பை சும்மா அசத்திருப்பார்..இப்படத்தில் இடம்பெறும் இவரது நடிப்பை இன்றுவரை மனதினிலே நிற்கிறது..அந்த படத்துக்கே இவர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டது மேலும் ஒரு சிறப்பாகும்// வழக்கம் போல துரூ கிரீட்டை பொருத்தவரை   இதிலும் அருமையான நடிப்பை மிக அழகாக ஆழமாகவும் வெளிபடுத்தியுள்ளார்..அறிமுகமாகும் காட்சியிலேயே வசனத்திலும் முகபானைகளிலும் சும்மா அசத்திருப்பார்..தான் சிறந்த நடிகன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்..கூடவே ஆஸ்கர் பர்ந்துரையும் பெற்றுவிட்டார்.... 


திரைப்படத்தில் நான் எதிப்பாராமல் பார்த்து அசந்துப்போன விஷயங்களில் ஒன்று Hailee Steinfeld நடிப்புதான்..இவ்வளவு சின்ன வயதில் (14) இத்தனை பெரிய நடிப்பு நான் எதிர்ப்பார்க்காத ஒன்று..முதல் காட்சியிலேயே நம்முடன் இணைந்துக்கொள்கிறார்...வ்வொரு காட்சியிலும் நம்மை நடிப்பின் மூலம் கவர்கிறார்//இந்த ஒரே ஒரு படத்துக்கு மட்டும் இதுவரை 20 க்கும் மேற்ப்பட்ட விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறார்..மேலும் இந்த வயதிலேயே சிறந்த துணை நடிகைக்காக ஆஸ்கருக்கு இந்த வயதில் பரிந்துரைக்கபட்டது ஒரு குறிப்பிட வேண்டிய சிறப்பாகும்..

 ஒளிப்பதிவு - கோயின் சகோதரர்களின் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளரான Roger Deakins/ரோஜர் டீகின்ஸ் அவர்களே இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்..உலகளவில் சிறந்த ஒளி ஓவியர்களில் ஒருவராக கருதப்படும் டீகின்ஸ், 9 ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கபட்டவர்..உலகமெங்கும் 50 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர்..இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவெனில் "கோயன்களின் " கூட்டணியில் மட்டும் இதுவரை நான்கு ஆஸ்கர்களுக்கு பரிந்துரை செய்யபட்டதுதான்..இந்த படத்தை பொருத்தவரை ஒளிப்பதிவின் மேஜிக் முதல் காட்சியிலேயே ஆரம்பிக்கிறது..      

இயக்கம் - "கோயின்களின்" இயக்கமும் திரைக்கதை அமைப்பும் திரைப்படத்தின் கூடுதல் பிளஸ் போயிண்ட்..வழக்கம்போல நம்மை வெகுவாக ஒவ்வொரு காட்சியிலும் கவரச்செய்கிறார்கள்..இவர்களை பற்றி ஒரு நீண்ட பதிவோ அல்லது தொடர் பதிவுகளோ போட வேண்டு என்று தோன்றுகிறது..அண்ணன் சார்லஸ் அவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..  

ஒளிப்பதிவு, இயக்கம் என்பதை கடந்து நம்மை பிரமிக்கவைப்பது ஆர்ட் டைரக்க்ஷதான்..கௌபாய் காலத்தில் நடக்கும் கதையை கண் முன் வந்து நிறுத்திருக்கிறார்கள் Jess Gonchor மற்றும் Nancy Haigh..இதில் நான்சி ஏற்க்கனவே ஆஸ்கர் வென்றவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.சுமார் 38 கோடி பட்ஜெட்டில்..இந்த படம் உலகம் முழுக்க 250 கொடிக்கு மேல் வசூல் செய்துள்ளது..

தற்சமயம் திரைப்பட ரேட்டிங்க் தளமான ரோட்டென் தொமொதொஸில் 96 சதவீதம் ரேட்டிங்க் பெற்றதோடு மட்டுமல்லாமல் ஐம்டி தளத்திலும் 7.8 பெற்றுள்ளது மேலும் ஒரு சிறப்பாகும்..திரைப்படத்தின் புளூ ரேய் வெர்ஷன் இந்த வருடம் ஜுன் மாதம் 7 திகதி வெளியானது..நான் பார்த்தது டிவிடிதான்..

 திரைப்படத்தின் இசையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்..Carter Burwell - இவரும் கோயின் சகோதரர்களின் ஆஸ்த்தான இசையமைப்பாளரே..  பின்னனி இசை மனதை தொடுகிறது..அதுவும் எண்டிங் டைட்டலில் வரும் பாடல் மிக அருமை..நடிகர் Matt Damon - in நடிப்பும் படத்தின் ஒரு  சிறப்பாகும்..கொஞ்ச நேரம் வந்தாலும் கச்சிதமாக ஆர்பாட்டமில்லாமல் நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்..கோக்புர்ன் - க்கும் ரோஸ் - க்கும் உள்ள உறவை மிக அழகாக சொல்லிருக்கும் இயக்குனரை பாரட்ட வேண்டும்,,,அதேப்போல் இறுதி காட்சிகள் அனைத்துமே சுவாரஸ்யத்தின் உச்சம்..துப்பாக்கி சண்டை எல்லாமே துள் பறக்கும்.

  இறுதியாக, வார இறுதியில் ஒரு அழகான மாலை நேர மழை பொழுதில் கண்டு ரசிக்க ஒரு அருமையான படம் இந்த திரூ கிரிட் ஆகும்..குடும்பத்துடன் ஒன்றாக மகிழ்ச்சியாக அமர்ந்து கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரையோவியம்.

MY RATING : 8.2/10 : A NEW WESTERN CLASSIC

பின்குறிப்பு :
கடந்த ஒரு வாரமாக எழுதிக்கொண்டிருக்கும் பதிவிது..இதுவரை இந்த படத்த போல வேற எந்த படத்துக்கும் எங்க ஆரம்பிக்கிறது..எங்க முடிக்கிறதுன்னு தெரியாம முழிச்சதே இல்ல..இது எதனால என்கிற காரணம் கூட தெரில..ஆனா படம் மட்டும் மூனே நாளுல மூனு தடவ பார்த்துட்டேன்..இதவிட நல்ல படத்த பற்றி எப்படி எழுதுருதுன்னு தெரில..ஏதேவது தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்..திருத்திக்க பார்க்கறேன்... 


ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..மேலும் உங்கள் கருத்துக்களை Comments பெட்டியில் தெரிவிக்கவும் ..மிண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி.. வணக்கம்..  

உலக சினிமா ரசிகர்களுக்கு : 2011/2012 - ஆம் ஆண்டு ஆவலுடன் எதிபார்க்கும் திரைப்படங்கள் இரண்டு பகுதி

1) The Hobbit: An Unexpected Journey (2012)




லோர்ட் ஒஃப் தெ ரிங்க்ஸ் சீரிஸுக்கு பிறகு அதிகளவில் எதிர்பார்க்கும் பீட்டர் ஜெக்ஸனின் இயக்கத்தில் வரும் படமிது.. The Lord of the Rings Trilogy இன் Prequel ஆக வெளிவர இருப்பதே இந்த பெரிய எதிர்பார்ப்புக்கான முதற் காரணம்..மேலும் அந்த சீரிஸில் வரும் பெரும்பாலான நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு திரும்பி வருவது இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.இதுவும் ஒரு அட்வென்ச்சர் பேண்டஸி திரைப்படமாகும்..

2) Prometheus (2012)


ரட்லி ஸ்கோட் இயக்கி வரும் சைன்ஸ் பிக்சன் கலந்த ஆக்சன் திரில்லர் படமாகும்..Charlize Theron மற்றும் Michael Fassbender ஆகியோர் முக்கியமான கதாபாத்தியத்தில் நடிக்கின்றனர்..

3) The End (2012)

உலகின் சிறந்த ஈரானிய இயக்குனரான Abbas Kiarostami இயக்கி வரும் படம்...இதற்க்கு மேல் சொல்ல வேறென்ன இருக்கிறது என்பது தெரியவில்லை..

4) The Angels' Share (2012)



உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான Ken Loach இயக்கிவரும் காமெடி திரைப்படம்..இவர் எடுத்த The Wind That Shakes the Barley (2006) என்ற படத்தை பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று எண்ணி வருகிறேன்..

5) Django Unchained (2012)


டி காப்ரியோ நடிப்பில் Quentin Tarantino எடுத்துவரும் வெஸ்டெர்ன் படமிது..இதற்க்கு மேல் வேறேதாவது சொல்ல வேண்டுமா என்ன..


Monday, 24 October 2011

ஹாலிவுட் சினிமா : SALT - 2010 : கவர்ச்சி புயல் ஏஞ்சலினா ஜூலியின் அதிரடி ஆட்டமும்...அடுத்த படமும்

@@ஏறக்குறைய பல வலைப்பூ அண்ணன்களிடமிருந்து அசத்தலான விமர்சனங்கள் வந்து ரசிகர்கள் எல்லாரும் பார்த்து முடித்து..ஏப்பம் விட்ட படமிது @@
======================




Film : Salt  Year : 2010
Country : America  Rating : PG - 13 (parental advised)
Director : Phillip Noyce  Writers : Kurt Wimmer
Stars : Angelina Jolie, Liev Schreiber, Chiwetel Ejiofor, Daniel Olbrychski  
Awards : Nominated For Oscar <<< View >>>

==================================

 பல கோடி ரசிகர்களை கவர்ந்த ஏஞ்சலினா ஜுலி நடித்த படம்..ஸாரோன் ஸ்டோன் நடித்த Sliver(1993), The Saint (1997), Rabbit-Proof Fence (2002), The Bone Collector (1999) போன்ற பல அதிரடி திரில்லர் படங்களை எடுத்த Phillip Noyce இயக்கத்தில் 2010 - ஆம் ஆண்டு Liev Schreiber, Chiwetel Ejiofor, Daniel Olbrychski, August Diehl போன்றவர்களின் துணை நடிப்பில்வந்த படம்.இத்திரைப்படம் சிறந்த சவுண்ட் கலவைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்.


+++++++++++++++++++++
SALT - 2010 DVD RIP
+++++++++++++++++++++++++

கதைச்சுருக்கம் :

"ஒரு சில காரணங்களால் எவ்லின் சால்ட் என்ற சிஐஏ ஏஜெண்ட் ரஷ்ய நாட்டு உளவாளி என்று  தவறுதலாக குற்றம் சாட்டிட, அமெரிக்க அரசாங்கத்தின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பிபதுதான் கதை.."

SALT - 2010 திரைப்ப்டத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :



  எவ்லின் சால்ட் என்ற கதாபாத்திரத்தில் ஏஞ்சலினா ஜூலி, திரைப்படத்தில் தன்னுடைய கவர்ச்சியான தோற்றத்தையும் அதிரடியான ஆட்டத்தையும் (ஆக்சனையும்) கலந்து ரசிகர்களை கலக்கி இருக்கிறார்..முதல் காட்சியில் சாதுவாக தோன்றுபவர் காட்சிகள் நகர நகர தன்னை கதையோடு உள்வாங்கிக்கொண்டு தேவையான அளவில் நடிப்பை வழங்கி இருக்கிறார்..இதில் சிறப்பு என்னவென்றால்..படத்தில் பல ஸ்டண்ட் காட்சிகளை இவரே செய்ததுதான்...(அப்பிறமென்ன திரையுலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாச்சே எவ்வளவு... 30 கோடி)
===========

ஒன்றரை மணி நேர படம் போவதே தெரியாத அளவிற்க்கு, ஆரம்பம் முதல் இறுதி காட்சிகள்வரை ஒரே விறு விறுப்புதான்..திரைக்கதை எழுத்தாளரான Kurt Wimmer கண்டிப்பாக பாரட்ட வேண்டாம்..இதுப் போன்ற கதையையும் ஜூலியை போன்ற டோப் ஆக்ட்ரஸை வத்துக்கொண்டு ரசிகர்களை (குறிப்பாக இளைஞர்களை) கவரும் வகையில் ஒவ்வொரு காட்சிகளையும் அழகாகவும் கொஞ்சம் கூட சலிப்புத்தட்டாமல் விறு விறுப்பாக நகர்த்தியுள்ளார்..(குறிப்பு : அழகு என்பது ஆக்சன் காட்சிகளில்)
===================


 எவ்வளவு பெரிய திரைக்கதையும் எழுத்தாளரும் நடிகைகளும் கிடைச்சாலும், கேப்டன் ஒஃப் தெ ஷிப் சரியில்லனா கப்ப தர தட்டிரும் என்பதை புரிந்துக்கொண்டு இயக்குனர் கவனமாக செயல்படுத்தி இருக்கிறார்..இண்டரஸ்திங்கான சண்டை காட்சிகளை வழங்கியதற்க்கு இவரை கண்டிப்பாக பாரட்டலாம்..அதோடு இவர் நிறைய நல்ல படங்களை கொடுத்தவர்..
========================

நடிகர் டாம் குரூஸ்க்காக எழுதப்பட்ட கதை இது..ஒரு சில காரணங்களால் நிறைவேறாமல் போக ஏஞ்சலினாவை நடிக்கவைத்துள்ளனர்..மேலும், இவருக்காக திரைக்கதை மீண்டும் எழுதப்பட்டது குறிப்பிடதக்கதாகும்..
=============================

சுமார் 110 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உலகமெங்கும் சுமார் 300 கோடி வசூல் செய்தது மேலும் ஒரு சிறப்பாகும்..
=====================================


இந்த வருடம் ஜூன் மாதத்தில், படத்தின் Sequel கூடிய சீக்கிரம் திரையை எட்டி பார்க்க வாய்ப்புகள் இருக்கிறது என்று கதாசரியரான Kurt Wimmer அறிவித்துள்ளார்..(இன்னொரு ஏஞ்சலினாவா!!!நல்லாதான் இருக்கும்..)
==============================================

    இறுதியாக, ஆக்சன் விரும்பிகள் அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று..சமீபத்திய ஜேம்ஸ் போண்ட் படங்களுடன் ஒப்பிடும் போது இந்த படம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது..விறு விறுப்பு குறையாத போரடிக்காத படம்..

MY RATING : 6.5/10   



சிறப்பு செய்தி :

நடிகை ஏஞ்சலினா ஜூலி இயக்குனராக மீண்டும் வரவிருக்கிறார் (ஒரு டோக்குமெண்டரிக்கு பிறகு)..இவர் இயக்கிக் கொண்டிருக்கும் In the Land of Blood and Honey(2011) படம் டிசம்பர் மாதம் வரவிருக்கிறது..இது போஸ்னியா யுத்ததில் நிகழும் காதல் கதையாம்...ஜூலியின் ரசிகர்களிடமிருந்து சிறப்பான ஆதரவும் கிளம்பியுள்ளது.."அந்தமாதிரி' காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற நம்பிக்கையில்தானோ என்னமோ.. 


படித்த சில பதிவுகள் :



ஏதேனும் தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..உங்கள் கருத்துக்களை தயவு செய்து கமெண்ட் பாக்சில் தெரிவிக்கவும்..மீண்டும் அடுத்த முறை சந்திக்கலாம்.அதுவரை

நன்றி..வணக்கம்


Related Posts Plugin for WordPress, Blogger...