Showing posts with label உலக அறிவியல் புனை திரைப்படங்கள். Show all posts
Showing posts with label உலக அறிவியல் புனை திரைப்படங்கள். Show all posts

Wednesday, 5 August 2015

Logan's Run (1976) : முப்பது வயதில் மரணம்...

பொதுவாகவே அறிவியல் சம்பந்தபட்ட திரைப்படங்களின் மீது எப்பொழுதுமே எனக்கு அதிகளவில் நாட்டமுண்டு.சிறிய வயதில் குடும்பத்தோடு மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த ஜுராசிக் பார்க், பிரடேட்டர் போன்ற திரைப்படங்களே இதற்கு ஆணிவேறாக இருந்திருக்கும். அன்றைய நாட்களில் கதையே புரியாமல் பார்த்த இது போன்ற திரைப்படங்களே இன்று என்னுடைய ஓரளவு சினிமா ஆர்வத்திற்கு ஒரு தொடக்க புள்ளியாக இருந்திருக்க கூடும்.

சினிமா தொடங்கியதிலிருந்தே அறிவியல் புனை திரைப்படங்கள் வந்த வண்ணமே இருக்கிறது..எண்ணிலடங்கா கற்பனைகளாலும் பிரமாண்டமான திகைப்பூட்டும் காட்சியமைப்புகளாலும் மக்களை தங்களது வலைக்குள் சிக்கவைத்து வருகிறது..2001 ஒரு ஸ்பேஸ் ஒடிஸி தொடங்கி அவதார் போன்ற படைப்புகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.இது போன்ற திரைப்படங்களே இன்று உலகமெங்கும் வளர்ந்து வருகிற சினிமா தொழில்நுட்பத்திற்கு ஒரு மைல் கல்லாக விளங்குகிறது.டெர்மினட்டர், அவதார் போன்ற திரைப்படங்கள் இதையே திரும்ப திரும்ப நிருபித்துக்கொண்டும் வருகின்றன.

Logan's Run அல்லது லோகனின் ஓட்டம் 1976-ஆம் ஆண்டு மைக்கேல் ஆண்டர்சன் என்பவரின் இயக்கத்தில் மைக்கேல் யார்க், ஜென்னி மற்றும் ரிச்சர்ட் ஜோர்டான் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஹாலிவுட் அறிவியல் புனை திரைப்படமாகும்.வில்லியம் எஃப் நோலன் மற்றும் ஜார்ஜ் கிளேடன் ஜான்சன் என்ற எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் 1967 (அதே பெயரில்) வெளிவந்த நாவலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டதோடு அதில் சிறந்த Visual Effects- காக வென்றது குறிப்பிடதக்கதாகும்.

சரியாக 2274 - ஆம் வருடம்.முப்பது வயதை நெருங்கும் அனைவருமே இறக்க வேண்டிய கட்டாயம் அல்லது நிலை ஏற்படுகிறது.மக்கள் அனைவரும் வெளியுலகமே என்னவென்று தெரியாத நிலையில் அனைவரும் தாங்கள் வசிக்கும் நகரத்தின் உள்ளே சீல் வைக்கபடுகின்றன்ர்.மேலும் அவர்கள் இன்பமான வாழ்க்கையை வாழ்வதற்கு அரசாங்கம் எல்லா வசதிகளையும் செய்து தருகிறது.

முப்பது வயதை நெருங்கும் அனைவரும் Carousel என்ற இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கட்டளை அல்லது சட்டத்தை விதிக்கிறது (ஏன்..எதற்கு என்ற கேள்விகளுக்கு திரையில் பதிலைக் காணுங்கள்).இதை மறுத்து நகரத்தை விட்டு தப்பித்து செல்வதற்கு முன்படும் அனைவரையும் "Sandmen" என்று அழைக்கபடும் போலிஸ் அதிகாரிகளை கொண்டு தீர்த்தும் கட்டிவிடுகிறது. இதற்கிடையே திரைப்படத்தின் கதாநாயகனான மைக்கேல் யார்க், அதாவது..."லோகன்" சில காரணங்களினால் நகரத்தை விட்டு ஓடக்கூடிய இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது.இவருடன் கதாநாயகியான ஜென்னி Agutter, அதாவது..."ஜெசிக்கா" இணைந்துக்கொள்ள, போலிஸும்  பின்னால் துரத்த.இவர்கள் இருவரும் தப்பித்தார்களா அல்லது பிடிபட்டார்களா அல்லது வெளிநகரில் காத்திருக்கும் தெளிவான உண்மையென்ன என்பதை பதிவிரக்கமோ அல்லது டிவிடியோ ஏதாவது இருந்தால் கட்டாயம் பாருங்கள்.(கதை சொன்ன விதம்..தாங்க இப்படி மோ..மோ...மோ...ச..ச..மா இருக்கு.படத்த பாருங்க பிடிக்க வாய்ப்புண்டு)

 70-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் மிகவும் அண்டெரேடட் செய்யப்பட்ட படைப்பாக லோகன்ஸ்-ரன் படத்தை சொல்லலாம்.வெளிவந்த புதிதில் விமர்சக, ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறாததே அதற்கு மிக பெரிய காரணமாகவும் இருந்திருக்கலாம்.ஆனால், இன்று இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு ரீமேக்கும் செய்யபட இருக்கிறது.லோகன் என்ற கதைநாயகனாக நடித்த Michael York- அவருடைய நடிப்பை நான் இதற்கு முன்பு பார்த்ததுக்கூட இல்லை.கதைக்கு தேவையான நடிப்பை கட்சிதமாக வெளிபடுத்தியுள்ளார்.

இசையமைப்பாளரை பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும்.Chinatown-1974, Planet of the Apes-1968 போன்ற திரைப்படங்களின் இசையமைப்பாளரும் தெ ஒமன் என்ற ஹாரர் திரைப்படத்திற்க்காக ஆஸ்கர் விருது பெற்றவருமான Jerry Goldsmith, உலகளவில் எனக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர்களில் ஒருவர்.வழக்கம்போல் இவர் பின்னனி இசையில் சும்மா கலக்கி இருப்பார்.ஒரு வித்தியாசமான 70 ஆண்டு சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களையை பார்க்க நினைப்பவர்கள் இந்த லோகான்ஸ் ரன்னை பார்க்கலாம்..ஆக்சன், திரில்லர், ரொமான்ஸ் என்று அனைத்து வகையிலும் அமைந்த ஒரு பொழுது போக்கு அம்சம் இப்படம். 

 உங்கள் ஆதரோவோடு,

Saturday, 12 November 2011

Fahrenheit 451 - 1966 : புத்தகங்கள் இல்லா உலகம் - பிரான்சயிஸ் ட்ருபாட்டின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.



   பாரன்ஹீட் 451 - சிறந்த திரைப்படம் என்பதைத் தாண்டி, படம் முடிந்தும் மனதில் நீண்ட நேரம் மனதோரமாய் ரீங்காரமிட்ட ஒரு திரைப்படைப்பு, நிறையவே யோசிக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது எனலாம்..


எதிர்க்காலம் என்பது எத்தனையோ விந்தைகளையும் ரகசியங்களையும் கற்பனைகளுக்கு எட்டாத ஒரு புதிய உலகை தனக்குள் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.அது எப்படி இருக்கும் ? எவ்வகையிலான மனிதர்கள் அந்த கணம் வாழ்வார்கள் ? என்பதுப் போன்ற கேள்விகள் இந்த கணம் என்னை வியப்பில் ஆழ்த்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை..

கற்பனைகள் செய்து பாருங்கள் நண்பர்களே : இது எதிர்க்காலத்தில் நிகழலாம்,
புத்தகங்கள் என்பது நமது அறிவையும் வாழ்க்கை தரத்தையும் மென்மேலும் பெருக்கிக்கொள்ள உதவுகின்றன,அத்தகைய புத்தகங்கள்... சட்டங்கள் ரீதியில் தடை செய்யபட்டால் ? எல்லா நூல்களையும் எரிக்கவேண்டிய கட்டாயம் நிகழ்ந்தால் ? தொலைக்காட்சி, நூல்கள் என அனைத்தையுமே தத்தம் நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மக்களின் நிலைமை என்ன ?
என்ற இதனை மிக ஆழமான தெளிவான திரைக்கதை மற்றும் இயக்கத்தின் மூலம் நம்மை வேறொரு காலத்திற்க்கு அழத்துச்செல்லும் திரைப்படம்தான் 
++++++++++++++++++++++++++++++++++++++++
Free Download : Fahrenheit 451 - Part One, Two
+++++++++++++++++++++++++++++++++++++++

பாரன்ஹீட் 451,
   1966 - ஆம் ஆண்டு பிரான்ஸ் சினிமா உலகின் தலைச்சிறந்த இயக்குனரான François Truffaut என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த சைன்ஸ் பிக்சன் திரில்லர் ஆகும்.Ray Bradbury என்பவர் நாவலை தழுவி இயக்குனரோடு Jean-Louis Ricard என்ற திரைப்படைப்பாளர் திரைக்கதை அமைக்க, Julie Christie மற்றும் Oskar Werner முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
===========================================
Fahrenheit 451 திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :
  • இயக்குனர் François Truffaut, ஆங்கில மொழியில் எடுத்த ஒரே படம் என்பதோடு முதல் கலர் படமாகும்.

  • // நடிகை Julie Christie பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.ஹாலிவுட்டை கலக்கிய சிறந்த நடிகைகளில் ஒருவர்.இவர் நடிப்பில் 1973 - ஆம் ஆண்டு வெளிவந்த Don't Look Now என்ற அருமையான படத்தை சில நாட்களுக்கு முன்புதான் காண வாய்ப்பு கிடைத்தது.//

   இந்த படத்தை பொருத்தவரை இதில் இவருக்கு ரெண்டு கதாபாத்திரங்கள்.Linda Montag மற்றும் Clarisse என்ற கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்..படதிற்க்கு இன்னும் ஒரு பலம் இவரது நடிப்பு.
==========================================
  • படத்தின் கதாநாயகனாக Montag என்ற கதாபத்திரத்தில் நடித்த Oskar Werner நடிப்பும் பிரமாதம்.

=========================================
  • உலகளவில் சிறந்த படங்களில் ஒன்றாக பெரும்பான்மையான விமர்சனர்களால் கருதப்படுவதோடு திரைப்பட ரேட்டிங்க் தளமான ரோட்டென் டொமொதொஸில் தற்சமயம் இத்திரைப்படம் 83 சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

========================================
  • திரைப்பட கதாநாயகியான Julie Christie சிறந்த நடிப்பிற்க்காக பாஃப்தா விருதுக்கு பரிந்துரைக்கபட்டது மேலும் ஒரு சிறப்பாகும்.

=======================================
  • பிரபல இயக்குனர் Martin Scorsese, தனக்கு பிடித்த படங்களில் ஒன்றாகவும் அதிக அளவில் அண்டெரேட்டட் செய்யபட்ட திரைப்படமாக கூறியுள்ளார்.(படம் முடியும்போது எனக்கும் அப்படிதான் தோன்றியது.

=======================================
  • மேலும், படத்தின் இறுதி முடிவுகள் நான் எதிர்பார்க்காத ஒன்று..படத்தில் என்னை அதிகபட்சமாக சிந்தனைகளில் ஆழ்த்திய காட்சிகளில் இதுவும் ஒன்று.படம் பாருங்கள்./

===========================================
   இறுதியாக, நீண்ட நாட்களாக நல்ல சைன்ஸ் பிக்சன் படங்களை தேடி வருபவர்களுக்கு இது ஒரு தனி விருந்து என்று சொல்லலாம்.அதே வேளை இது சில ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.எதற்க்கும் டிரைலரை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.
============================================
இயக்குனர் Francois Truffaut
6 February 1932 ஆண்டு Paris, France பிறந்த இவரை தொடர்ந்து உலக திரைப்படங்களை பார்த்து வருபவர்களுக்கு நன்கு அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.The 400 Blows (1959) என்ற சிறந்த படைப்பின் மூலம் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக கலைஞர்களின் பார்வைகளை தன் பக்கம் திருப்பியவர்.இதே படத்திற்க்காக இரண்டு ஆஸ்கர் பரிந்துரைகளை பெற்றதோடு கேன்ஸ் திரைப்ப்ட விழாவினில் சிறந்த இயக்குனருக்கான பரிசை வெற்றிக்கொண்ட உன்னத படைப்பாளர்.இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் மிகப் பெரிய ரசிகர்களில் இவரும் ஒருவர்.
  இவரது மற்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் : Shoot the Piano Player (1960), Two English Girls (1971), The Wild Child (1970) The Last Metro (1980).இதில் Day for Night (1973) என்ற படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கதாகும்.இன்றளவும் சென்ற நூற்றாண்டின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பிரான்சயிஸ் ட்ருபாட், October 21, 1984 (age 52) மிக குறுகிய வயதில் உலகை விட்டு மறந்தது சினிமா உலகின் மிகப் பெரிய இழப்பு...நாம் இழந்தது சிறந்த இயக்குனரை மட்டும் அல்ல ஒரு சிறந்த சினிமா விமர்சகரும்தான்.. 
============================================
My Rating : 7.9/10
============================================================== 
   கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

Wednesday, 9 November 2011

APOLLO 13 - 1995 : விண்வெளியில் உயிர் போராட்டம்..

ண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்த படம்.சில வேலை பழு காரணமாகவும் மற்ற படங்களில் அதிக கவனம் செலுத்தியதாலும் அது சாத்தியமாகாமல் இருந்தது.இனிமேலும் காலம் கடத்தினால் ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணிவிடுவோம் என்ற எண்ணத்தில் இன்றைய சிறு "பார்வை"
============================================


 அப்போலோ 13 - 1995 - ஆம் ஆண்டு அமெரிக்க இயக்குனர் ரான் ஹோவர்ட் இயக்கத்தில் Tom Hanks, Kevin Bacon, Bill Paxton ஆகியோர் முறையே Jim Lovell, Jack Swigert மற்றும் Fred Haise என்ற கதாபாத்திரங்களில் விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களாக நடிக்க, இவர்களுடன் Gary Sinise,
Ed Harris மற்றும் Kathleen Quinlan மிக முக்கியமான துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.டைடானிக், அவதார் போன்ற படங்களில் பணிப்புரிந்த ஜேம்ஸ் ஹார்னர் இந்த படத்துக்கு இசையமைக்க திரைக்கதையை William Broyles, Jr. மற்றும் Al Reinert இணைந்து எழுதிய இந்த படம், விமர்சனம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றதோடு 9 ஆஸ்கர் பரிந்துரைகளில் அதில் இரண்டை வென்றது கூடுதல் சிறப்பாகும்.  .

=============================================================================

கதைச்சுருக்கம் :

விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்த்ராங்கும் அவரது சக வீரர்களும் நிலவில் காலடி எடுத்து வைத்த வருடமான 1969 - ஆண்டில் அதே நாளில் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடும் வகையில் Jim Lovell (Tom Hanks) வீட்டு பார்ட்டியில் திரைப்படம் தொடங்குகிறது.இதனை தொடர்ந்து ஜிம், Jim Lovell, Fred Haise மற்றும் Ken Mattingly ஆகிய மூவர்கள் அப்போலோ 13 மூலம் நிலவுக்கு செல்ல ஏற்பாடு செய்யபடுகிறது.சில காரணமாக Mattingly குழுவிலிருந்து விலக்கபட Jack Swigert இவர்களுடன் இணைந்துக்கொள்கிறார்.ஒரு வழியாக பயணமும் ஆரம்பிக்கிறது.அதோடு சேர்ந்து பாதி வழியிலேயே கப்பலில் கடுமையான பிரச்சனைகள் உருவாகுகின்றன..



அது எந்த மாதிரியான பிரச்சனைகள்/சிக்கல்கள் ? அதிலிருந்து தப்பித்தார்களா ? எவ்வாறான முயற்சிகளை மேற்க்கொண்டார்கள் ? என்ற பல கேள்விகளுக்கு இந்த படம் பதில் சொல்கிறது..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++   
APOLLO 13 - 1995 DVD RIP : PART 1 AND PART 2  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++  
===============================================================================

APOLLO - 1994 திரைப்படத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :

விண்வெளியை மிக ஆழமாகவும் அழகாகவும் சிறப்பாகவும் 2001 எ ஸ்பேஸ் ஓடிஸி, சொலாரிஸ் போன்ற மாஸ்டர்பீஸ்கள் காட்டிருந்தாலும் விண்வெளி கப்பலில் பயணிக்கும் வீரர்களின் பயணத்தை ரொம்ப Accurate - தாக இந்த அளவுக்கு காட்டிய படங்கள் மிக குறைவே..அந்த வகையில் இத்திரைப்படத்துக்கு மிக முக்கியமான ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
=============

     
மொத்தப்படத்திலும் நம்மை வெகுவாக எளிதாக கவரும் கதாபாத்திரம் டோம் ஹேங்ஸ் கதாபாத்திரம்தான்..Philadelphia 1993), Forrest Gump (1994)
போன்ற படங்களைப் போல பெரியளவில் நடிப்பு வழங்கும் கதை இது இல்லாவிட்டாலும், சிறந்த நடிகர் என்று மறுபடியும் பலருக்கும் நிரூபித்த திரைப்ப்டம் எனலாம்.ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கபட்ட கதாபாத்திரம் இது,அருமையாக  செய்துள்ளார்.   
===================



மேலும் இத்திரைப்படத்தில் Bill Paxton as Fred Haise மற்றும் Kevin Bacon as Jack Swigert ஆகியோரின் நடிப்பும் படத்துக்கு கூடுதல் சிறப்பு எனலாம்.விண்வெளியில் பயணிக்கும் வீரர்களில் இருவராக வரும் இவர்களின் நடிப்பு மிக அருமை.
=========================

தற்சமயம் சினிமா ரேட்டிங்க் தளமான ரோட்டேன் தோமொதொஸில் இந்த படம் 97 சதவீதம் பெற்றதோடு ஐம்டி தளமும் 7.5 ஸ்கோர் வழங்கியுள்ளது.
===============================

சுமார் 52 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உலகம் முழுவதும் 350 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளது.
==================================



70 ஆம் ஆண்டுகளில் அதுவும் இதுப்போன்ற சூழ்நிலைகளில் அன்றைய விஞ்ஞானிகள் அப்பொழுந்திருந்த தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு எந்தந்த வகைகளில் இதுப்போன்ற விண்வெளி வீரர்களை காப்பாற்ற முயன்றிருப்பார்கள் என்பதை கண்ணெதிறே கொண்டுவந்துள்ள திரைக்குழுவினரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.
======================================== 

Lost Moon லோஸ்ட் மூன் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட இந்த ப்டம் சிறந்த எடிட்டிங் மற்றும் சௌண்ட் மிக்ஸிங்காக ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கது.மேலும், 1994 - ஆண்டு வெளிவந்த இப்புத்தகம் உண்மையான விண்வெளி ஹீரோக்கலான Jim Lovell மற்றும் Jeffrey Kluger ஆகியோரின் அனுபவத்திலும் உண்மைச் சம்பவத்திலும் மலர்ந்திருபது இன்னும் ஒரு சிறப்பாகும்.
=====================================================



ஜேம்ஸ் ஹார்னரின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு பலம் எனலாம்.
================================================================

இயக்குனர் Ron Howard 



Ron Howard என்கின்ற Ronald William Howard, மார்ச் மாதம் 1 - ஆம் திகதி 1954 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர் ஆவார்.கலை ஆர்வமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், ஜோர்ஜ் லுகாஸ் இயக்கத்தில் 1973 - ஆம் வருடம் வெளிவந்த American Graffiti நடித்ததின் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமாக தொடங்கினார்..
1977 - ஆம் ஆண்டு Grand Theft Auto என்ற படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமானார்.தொடர்ந்து வந்த Splash (1984), Cocoon (1985), Willow (1988), போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் ஹாலிவுட்டில் நிலை நிறுத்திக் கொண்டார்.2002 - ஆம் ஆண்டு இவர் எடுத்த A Beautiful Mind (2001) 4 ஆஸ்கர்களை வென்றதோடு சிறந்த படம் மற்றும் இயக்கம் என இவருக்கும் இரண்டு விருதினை வாங்கித்தந்தன.மேலும், இவருடைய பெரும்பான்மையான திரைப்படங்கள் பிஜி அல்லது பிஜி 13 ரேட்டிங் பெற்றது ஒரு குறிப்பிட்ட சிறப்பாகும்.ஹோவர்ட் இயக்கத்தில் புகழ்பெற்றவை சில : Frost/Nixon (2008), The Da Vinci Code (2006), Cinderella Man (2005) ஆகியவை அடங்கும்.    
=============================================================================
 
இறுதியாக, கண்டிப்பாக எல்லா சினிமா ரசிகர்களும் பார்க்க வேண்டிய ஹாலிவுட் படம் இந்த அப்போல்லோ 13 ஆகும்.

MY RATING : 8/10  
==============================================================================================================

அப்படியே இதையும் படிங்க : படித்த சில பிறப்பதிவுகள்


===============================================================================================================
கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

Tuesday, 18 October 2011

உலக திரைப்பட தொடர்கள் : ரோபோகாப் ROBOCOP - 1987 : நகர போலிஸ் அதிகாரியாகும் ரோபோட்...


எந்திரன் திரைப்படத்துக்கு நான் பார்த்த ரோபோட் கதையம்சத்தை கொண்ட படம் இது.

மேல படிக்கிறதுக்கு முன்னாடி கீழ உள்ள டிவிடிரிப்பை பயன்படுத்தி டவுன்லோட் போடுங்க.. காரணம் இது செம்மையான படம்..    
=================================
================================ 
Film : Robocop       Year : 1987
Country : America     Rated : R (Parents Guide, Please View >>>)
Director : Paul Verhoeven  Writters : Edward Neumeier, Michael Miner
Stars : Peter Weller, Nancy Allen, Dan O'Herlihy, Ronny Cox
Awards : Nominated for 2 Oscars. Another 11 wins & 10 nominations See more awards
=======================================

  டோடல் ரீகால் (1990), பேசிக் இன்ஸ்டிங்க்ட் (1992) திரைப்படங்களின் வழி அமெரிக்க சினிமாவில் நீங்கா இடம் பிடித்த திறம் வாய்ந்த நெதெர்லாந்து இயக்குனரான பால் வெர்ஹோவென் 1987 - ஆம் வருடம் எடுத்த படம்.எதிர்கால டெட்ராய்ட் நகரினில் ஏற்படும் கட்டுபடுத்த முடியாத கடுமையான வன்முறைகளின் பேரில், இந்த பிரச்சனையை மேற்க்கொள்ள உருவாக்கபடும் போலிஸ் ரோபோட்டை பற்றிய திரைப்படம் இது.உலகாளாவிய நிலையில் பல விமர்சனர்களாலும் ரசிகர்களாலும் சிறந்த அறிவியல் புனை படமாக கருதப்படும்  இத்திரைப்படத்தில், அலெக்ஸ் ஜேம்ஸ் முர்பி என்ற போலிஸ் அதிகாரியாகவும் ரோபோகாப்பாகவும் Peter Weller நடிக்க இவருடன் Nancy Allen, Dan O'Herlihy, Ronny Cox, Kurtwood Smith ஆகியோர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.இப்படம் சிறந்த சவுண்ட் எஃபெக்ட்க்காக ஆஸ்கர் வென்றது 
குரிப்பிடதக்கதாகும். 
  
ரோபோகாப் திரைப்படத்தில் சில சுவாரஸ்யங்கள்:
==================== 
இந்த திரைப்படம் சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் ஆகிய இரண்டு ஆஸ்கர்களுக்கு பர்ந்துரைக்கபட்டது.மேலும், ஸ்பெஷல் விருதாக சிறந்த சவுண்ட் எஃபெக்ட்க்காக ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கதாகும்..

=====================

படத்தில் இடம் பெற்றுள்ள கடுமையான வன்முறைகாட்சிகளுக்காகவே இந்த திரைப்படம் X ரேட்டிங் பெற்று வெளிவந்ததது...சில காட்சிகள் அகற்றப்ட்ட பின்னறே R ரேட்டிங் கிடைத்தது..
=========================
பிரிட்டிஷ் இயக்குனரான கென் ரஸ்சல் அவர்கள் ரோபோகாப் படத்தை சிறந்த அறிவியல் புனைத்திரைப்படமாக குறிப்பிட்டுள்ளார்.(மெட்ரோபோலிஸ் படத்திற்க்கு பிறகு).

=================================

பிறகு படத்தின் கதாநாயகனான Peter Weller, தனக்கு கிடைத்த இரட்டை கதாபாத்திரங்களை அருமையாக பயன்படுத்தியுள்ளார்.படத்தின் முதற்பாதியிலேயே தன்னுடைய ஒரிஜினல் உருவத்தை இழந்துவிட்டு (படத்த பாருங்க), எங்கடா மேல போயுருவாறோன்னு (அது படத்தோட ஹைல்லட்டான சீன்களில் ஒன்று) மனச டக்டக்குன்னு பன்னிவிட்டு, இரண்டாம் பாதியில் ரோபோவாக வந்து நமது (எனது) கண்களை கலக்குவது அசத்தல்..படத்தில் ரோபோட் மேக்கப்புக்காக இவர் பட்ட  கஷ்டங்களை சில இணையத்தளங்களை படித்திருக்கிறேன்.பிரச்சனையை சமாளிக்க முடியாமல் ரோபோ உடைக்குள்ளே air conditioner எல்லாம் பொருத்தி இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்..

=========================================
இத்திரைப்படத்தில் திரைக்கதையின் பங்கு மிகவும் அதிகம்..அந்தவகையில் Edward Neumeier மற்றும் Michael Miner கண்டிப்பாக பாரட்டதக்கவர்களே..ஒரு சைன்ஸ் பிக்க்ஷ்ன் கதையை எந்தளவுக்கு ஆக்க்ஷ்னையும் திரில்லரையும் கலந்து ஒரு சிறந்த திரைவிருந்தாக வழங்க முடியும் என்பதற்க்கு இந்த படம் ஒரு உதாரணம் எனலாம்...டெர்மினேட்டர் படத்தை போல..ஒவ்வொரு காட்சியிலும் விறு விறுப்பையும் வேகத்தையும் அதிகரித்திருப்பது இன்னும் ஒரு சிறப்பாகும்..திரைக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்களே.

=================================================

கடையில் புகுந்து கொள்ளையடிக்கும் ஆளை பிடிக்கும் காட்சி, கேஸ் ஸ்டேஷன் காட்சி மற்றும் இறுதி காட்சிகள் என்று ரோபோகாப்பின் அறிமுகத்திற்க்கு பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் விறு விறுப்பின் உச்சம் எனலாம்.மிக குறிப்பாக ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கும் முயற்சி செய்யும் இரண்டு ஆட்களை "கவனிக்கும்" காட்சிகள் அனைத்தும் ரோபோகாப்பின் புத்திசாலிதனத்தை பிரபலிக்கிறது..அதுவும் இது இயக்குனரின் ஐடியாவாம்..கலக்கலான காட்சி..    

====================================================

உலகளவில் பல விமர்சனக்காரர்களாலும் பத்திரிக்கைகளாலும் சிறந்த 80 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படமாக கருதப்படுகிறது.ரோட்டன் டொமொட்டோவிலும் தற்ப்பொழுது 88% சதவீதம் பெற்றுள்ளது.2007 இல் Entertainment வீக்லி - இன் சிறந்த ஆக்சன் திரைப்படப் பட்டியலில் 14 வது இடத்தை பிடித்தது.மேலும், Empire பத்திரிக்கை சிறந்த 500 படங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.

=======================================================
சுமார் 13 கோடி பட்ஜெட்டில் உலகமெங்கும் 50 கோடிக்கு மேல் வசூல் பெற்றுத்தந்தது குறிப்பிடதக்கதாகும்..

===============================================================

படத்தின் கிளைமக்ஸ் பிரமாண்டமான சண்டை காட்சிகள் அனைத்தும் நீண்ட நாட்களுக்கு மனதில் பதியக்கூடியவை.VISUALLY MOST STUNNING...

=====================================================================


  1938 - ஆண்டு 18 திகதி ஜூலை மாதம் Wim Verhoeven என்ற பள்ளி ஆசியருக்கும் Nel van Schaardenburg என்ற தொப்பி செய்பவருக்கும் நெதெர்லாந்திலுள்ள ஆம்ஸ்டிரடாமில் பிறந்தார்.Business Is Business என்ற திரைப்படத்தை முதன் முதலாக 1971 - ஆம் ஆண்டு இயக்கினார்.தொடர்ந்து வந்த Turkish Delight வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியில் பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி. சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கது.இதன் வழி தன்னுடைய பெயரை அமெரிக்க சினிமாவிலும் அறிமுகபடுத்திக்கொண்டார். இதன் பிறகு இவர் இயக்கிய Katie Tippel (1975), Soldier of Orange (1977), Spetters (1980)
மற்றும் The Fourth Man (1983) ஆகிய நான்கு திரைப்படங்கள் உலகளவில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது இன்னொரு சிறப்பாகும்.

  Rutger Hauer மற்றும் Jennifer Jason Leigh நடித்த Flesh & Blood என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் காலடி எடுத்துவைத்தார். தொடர்ச்சியாக ரோபோகாப் - 1990, பேசிக் இன்ஸ்டிங்க் - 1992 மற்றும் டோடல் ரிக்கோல் திரைப்படங்கள் இவருக்கென தனி ஸ்டலையும் பாதையையும் பெற்றுத்தந்தன.மேலும் ஹாலிவுட்டில் சிறந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தையும் வாங்கித்தந்தது.கூடவே பேசிக் இன்ஸ்டிங்கின் மூலன் கவர்ச்சி புயல் ஷாரோன் ஸ்டோனிடமிருந்து அறை வாங்கி கன்னத்தையும் வீங்கிக்கொண்டார்..ஹி..ஹி.. சுமார் 20 வருடங்கள் கழித்து தன் தாயகமான நெதெர்லாந்துக்கு திரும்பிச் சென்று இயக்கிய திரைப்படம்தான் Black Book - 2007.விமர்சன ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மாட்டுமல்லாது இயக்குனருக்கு பல உலக விருதுகளை பெற்றுத்தந்தது.தற்ப்பொழுது இவர் தனது அடுத்தப் படைப்பாக Hidden Force என்ற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

பால் வெர்ஹோவென் - என்னை கவர்ந்த இயக்குனர்களில் ஒருவர்..இனி வரும் பதிவுகளில் இவரது படங்களை அவ்வப்போது பார்க்கலாம்.
===============================================

   இறுதியாக, எல்லா சினிமா ரசிகர்களும் தங்கள் வாழ்நாளில் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.அதுவும் ஆக்சன் மற்றும் சைன்ஸ் ஃபிக்க்ஷன் திரைப்பட விரும்பிகள் அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு கிளாசிக்காகும்.நேரம் போவதே தெரியாது..  
===================================== 
MY RATING : 7.5/10
=============================== 


ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.அதுவரை..

நன்றி.வணக்கம்




Tuesday, 20 September 2011

KNOWING - 2009 : உலகின் கடைசி சில நிமிடங்கள்/நாட்கள்...

Film : Knowing
Year : 2009
Country :United States
Director : Alex Proyas
Writers : Ryne Douglas Pearson, Juliet Snowden, Stiles White
Stars : Nicolas Cage, Rose Byrne, Chandler Canterbury, Lara Robinson
Awards : 3 nominations See more awards


ஐ ரோபோட் திரைப்படத்தில் ரொபோட்களின் உலகினை மனித சமுதாயத்தோடு கலந்த இயக்குனர் Alex Proyas, உலகின் கடைசி காலத்தை நமது கண்களின் முன்னே கொண்டு வந்து நிறுத்த, நெஞ்சை அதிர்ச்சி அடைய செய்த திரைப்படம்தான் இந்த KNOWING - 2009.பொதுவாகவே, அமெரிக்க சினிமாவின் சிறப்பம்சம் என்னவென்றால், நாம் நினைக்கவே முடியாத விஷயங்களை எல்லாமே (பயத்தையும் சேர்த்து) சும்மா அசால்டா தங்களுக்கே உரிய கற்பனைகளாலும் பிரமாண்டமான காட்சியமைப்புகளாலும் நம் கண்களை குளிரவைப்பதே (சில நேரங்களில் அதிரவைப்பதும் கூட).(சும்மாவா..பின்ன அவ்வள பெ(பி)ரிய ஜுராஸிக் பார்க்கையே இவ்வள சின்ன ஸ்கிரீன்..ல.. கொண்டு வந்தவங்க ஆச்சே.?.)
 நிக்கோலஸ் கேஜ், ரோஸ் பைரன், சாண்ட்லர் சென்டர்பரி, லாரா ராபின்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க Dark City - 1998, I, Robot - 2005 போன்ற திரைப்ப்டங்களின் மூலம் இன்று ஹாலிவுட்டை கலக்கி வரும் இயக்குனர்களில் ஒருவரான  Alex Proyas - யின் இயக்கத்தில் வெளிவந்த KNOWING, சுமார் 50 கோடி பட்ஜெட்டில் உலகமெங்கும் 180 கோடிக்கும் மேல் வசூலையும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.விமர்சனர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு பெறாவிட்டாலும், உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் 2009 - ஆண்டு வெளிவந்த நல்ல சைன்ஸ் ஃபிக்ஸ்ன் திரில்லர் திரைப்படமாக பலராலும் கருதபடுகிறது.  

கதைச்சுருக்கம் :

1959 - ஆண்டு, பள்ளி மாணவியான லுசிண்டா (Lucinda Embry) தூரத்தே வானத்தை உற்று பார்த்துக்கொண்டிப்பதோடு திரைப்படத்தின் முதல் காட்சி ஆரம்பிக்கிறது.அன்றைய வகுப்பில், ஆசிரியை மாணவர்களிடம் இனி அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்ற தலைப்பினை வழங்கி தத்தம் கற்பனைகளின் துணையுடன் வரையச்சொல்லி உத்தரவிடுகிறார்.எல்லாரும் படங்களை வரைய, லுசின்டா மட்டும் தன் தாள் முழுவதும் வெறும் எண்களையே எழுதி தீர்க்கிறாள்.மாணவர்கள் வரைந்த அனைத்து படங்களையும் ஆசிரியை time capsule - லில் போட்டு அடைத்து, பள்ளிக்கூட வட்டாரத்தில் போட்டு புதைத்தும் விடுகின்றனர்.(இவர்களது ஓவியங்களை அடுத்த 50 ஆண்டுகள் கழித்து வரும் மாணவர்களின் பார்வைகளுக்காக இவ்வாறு செய்யப்படுவதாக ஆசிரியை தொடக்க காட்சியிலேயே சொல்லி விடுகிறார்).


இப்பொழுது, திரைப்படம் அப்படியே சரியாக 2009 - ஆம் ஆண்டுக்கு தாவுகிறது.ஜொனாதன் Koestler (கேஜ்), மனைவியை இழந்து தனது ஒரே ஒரு மகனான Caleb - உடன் வசித்துவரும் எம்ஐடியில் பணிபுரியும் இயற்பியல் பேராசிரியர் ஆவார்.லுசின்டா படித்த அதே பள்ளியில் 50 வருடங்களுக்கு புதைக்கபட்ட time capsule திறக்கபடுகிறது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு லுசிண்டா வரைந்த (எழுதிய) அந்த தாள் அதே பள்ளியில் பயிலும் Caleb - kku கிடைக்க. இந்த தாள் எதிர்ப்பாராமல் ஜொனாதனின் பார்வையில் விழுகிறது.(பிறகு என்ன.?..விடுவாரா...நம்ம ஹீரோ).திரைப்ப்டம் இந்த காட்சியிலிருந்து பெரிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.அந்த தாளில் எழுதபட்டிருக்கும் எண்களின் பின்னனி என்ன ? மர்மங்கள் என்ன ? இறுதியில் என்ன நிகழ்ந்தது என்ற அனைத்தையும் திரையில் காண்க.. 

KNOWING - 2009 திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில சுவாரஸ்யங்கள் :


  • 2012 - 2009, Independence Day - 1996 திரைப்படங்களைப் போல வெறும் அழிவை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் அழிவதற்கான சில காரணங்களையும் ஆங்காங்கே தவிக்கின்ற மனித உறவுகளையும் (தந்தை - மகன்) காட்சிகளை கண்களுக்கு காட்டிருப்பது திரைப்படத்தின் கூடுதல் பலம்.

  • ஆரம்ப காட்சிகளில் லுசின்டா எழுதிய எண்களை பார்த்தாலே ஏதோ இதுக்கு பின்னாடி ஒரு பெரிய ஆ..ஆ..ப்..பு வச்சிருக்காங்கனு ? சில பேர்கள் மனசில கேள்விகள் எழ வாய்ப்புகள் உண்டு (முக்கியமா...எனக்கு இருந்தது).கடைசியில் ஹீரோ அந்த எண்களுக்கு பின்னால் இருக்கும் ரகசிய முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சி அதிர்ச்சையை தரக்கூடியது.அதுவும் எண்களுக்கு பின்னாடி இருக்கிற மர்மத்தை அல்லது ரகசியத்தை கடைசிவரை பார்ப்பவர்களுக்கு சலிப்புதட்டாமல் கொண்டு சென்றுள்ளது திரைக்கதைக்கு கூடுதல் பலமாகும்.



  • படத்துல அங்க இங்கென்ன..எங்க சுத்தினாலும் எல்லா இடத்திலும் நம் கண்களை கவர்வது கதைநாயகரும் மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற நடிகரான நிக்கோலஸ் கேஜ் - தான்.தன்ன்னுடைய மகனுக்கு பொறுப்புள்ள பாசமான தந்தையாகவும், உலக அழிவுகளை தடுக்க இயலும் சாதாரன மனிதனாகவும் எண்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியங்களை கண்டுபிடிக்க பாடுபடுபவராகவும் ஜொனாதன் Koestler என்ற கதாபாத்திரத்தில் வந்து நன்றாகவே நடித்துக்கிறார்.இவருடைய இந்த நடிப்பு பலரையும் கவர்ந்திட வாய்ப்புகளுண்டு.அவருடைய ரசிகர்களுக்கு சொல்லவே தேவையில்லை என்று நினைக்கிறேன்.          

  • திரைப்படத்தில் நடித்த மற்ற நடிகர்களை பற்றி சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.ஜொனாதனுக்கு மகனாக வரும் Caleb என்ற கதாபாத்திரத்தில் சாண்ட்லர் சென்டர்பரி நடித்திருக்கிறார்.காது கேளாமல், தனது காதுகளுக்கு மட்டுமே வினோதமாக ஒலிகளை கேட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார்.மேலும், திரைப்படத்தின் கதாநாயகியாக ரோஸ் பைரன் "டயானா" என்ற கதாபாத்திரத்தில் பாதி படத்தில் வந்தாலும் சிறப்பாகவே நடித்ததோடு, அவருடைய மகளாக வரும் லாரா ராபின்சன் "அப்பி மற்றும் லூசிண்டா" என்ற இரண்டும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.



  • இத்திரைப்படத்தை முதன் முதலில் இயக்க முன்வந்தவர், சவுத்லாண்ட் டேல்ஸ் மற்றும் டோனி டார்கோ போன்ற திரைப்படங்களை இயக்கியவரான ரிச்சர்ட் கெல்லி என்பது குறிப்பிடதக்கதாகும்.

  • வேகமாக செல்லும் திரைக்கதையில் இறுதி சில காட்சிகள் மட்டும் பலபேருக்கும் பிடிக்காமலோ அல்லது லோஜிக்காகவோ இல்லாமல் போக வாய்ப்புகள் உண்டு.இடை இடையே வரும் ரயில் விபத்து மற்றும் Chasing காட்சிகள் மேலும் மெறுகூட்டுகிறது. 


  • சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் திரைப்படத்தை எந்த அளவிற்கு சுவாரஸ்யமாகவும் திரிலிங்காவும் கொடுக்க இயலுமோ அந்த முயற்சி செய்திருக்கிறார்.அதுக் கேட்டாற் போல் கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரமாண்டமாகவே கொடுத்து நம் கண்களையும் மிரள வைக்கிறார்.ஆனால் சற்று திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இறுதியாக, முழுக்க முழுக்க ஒரு சிறந்த திரைப்படம் என்று KNOWING - 2009 திரைப்படத்தைக் கூற முடியாவிட்டாலும், திரில்லர் விரும்பிகள் அனைவரும் கட்டாயமாக பார்க்கலாம்.


Book of Dreams: Welcome to Crateland (1994) என்ற குறும்படத்திற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்காக பரிந்துரை செய்யபட்டவர்.23 திகதி செம்டம்பர் மாதம் 1963 - இல் எகிப்து நாடில் பிறந்தவரான இவர், தொடர்ந்து இயக்கிய The Crow - 1994, Dark City - 1998, Garage Days - 2002, மற்றும் I, Robot திரைப்படங்களின் அமெரிக்க சினிமாவில் மூலம் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தவர் ஆவார்.

WATCH TRAILER BEFORE THE FILM :

MY FINAL RATING : 6/10
எதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால்  மன்னிக்கவும்..மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி வணக்கம்.
Related Posts Plugin for WordPress, Blogger...