=========================================================================
சமீபத்தில் 1969 - ஆம் ஆண்டு திரைக்கு வந்த விய் என்ற ரஷ்யா நாட்டு மொழி படத்தை பார்க்க சந்தர்ப்பம் நேர்ந்தது..ஹாரர் பிளஸ் ஃபேந்தஸி வகையில் வெளிவந்த இப்படத்தின் கதை, திரைக்கதையை முறையே Nikolai Gogol மற்றும் Aleksandr Ptushko, ஆகியோருடன் இயக்குனர்களான Konstantin Yershov, Georgi Kropachyov எழுதியிருக்கின்றனர்.
அதோடு, அந்த இளம் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு சிறப்பாக இருக்கும்..படம் முழுவதும் பிணமாக வந்து நம்மையும் சில இடங்களில் பயமுறுத்துகிறார்..அவரது முகத்தில் தெரியும் அந்த வெறி, கோபம், பழிவாங்குதலின் பிரதிபலிப்பு என்று அத்தனையிலும் வந்து பேசாமலேயே வியந்து பார்க்க வைக்கிறார்.
சிறந்த திரைப்படைப்புகளுக்கு என்றுமே நீண்ட ஆயுள் உண்டு.. காலங்கள் கடந்தாலும் மக்களின் மனதை விட்டு மறவாமல் இருக்கும்..உலக தரத்தில் அமைந்த படங்களை மொழி, நாடு, இனம் என்று பாராமல் இன்றளவும் நாம் கொண்டாடும் அதே வேளை, இதுவரை எத்தனை தரமான படைப்புகளை நாம் மறந்திருப்போம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்..அவைகளை மீட்டிக்க வேண்டிய அவசியத்தை இந்த படம் உணர்த்தியது.. இணையத்தளங்களில் பல நேரங்களில் கண்ணில் அம்பிடும் படங்களை ரேட்டிங், கதைச்சுருக்கம் போன்றவைகளை படித்து நம்பி, படம் பார்க்காமலேயே ஒரு முடிவுக்கு வந்திடுவோம்..அது தவறு என்று உணர்த்தியது இந்த படம்..சென்ற நூற்றாண்டில் பலராலும் மறக்கப்பட்ட சிறந்த மாஸ்டர்பீஸாகவே இப்படைப்பை நம்புகிறேன்..கண்டிப்பாக திரை ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ரஷிய படம் Viy (1967).
சில திகில் காட்சிகள், என்று 12 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களுடன் பார்ப்பது உத்தமம்.
=========================================================================
நிக்கொலாய் கோகோல் என்ற உயர்த்தர எழுத்தாளரின் ரஷியன் கதையின் திரைப்பட தழுவலான இத்திரைப்படம், ஒரு பருவ வயது இளைஞனின் மூன்று திடுக்கிடும் நாட்களில் நிகழும் சம்பவங்களையும் உயிர் வாழ்வதற்கு அவன் எடுக்கும் போராட்டங்களையும் பதிவு செய்கிறது.
===================================================================
கோடை விடுமுறை காலம் அது..பள்ளியில் அரையாண்டு முடிந்து ஆதலால், மாணவர்களுக்கு விடுமுறை..அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆனந்த கடலில் விளையாடி பேசிக்கொண்டே தத்தம் இல்லங்களுக்கு பயணம் ஆகிறார்கள்...நேரம் போக போக, தனியே பாதைகளில் பிரிகிறார்கள்..இறுதியில் கோமா, தனது இரண்டு நண்பர்களுடன் இரவு பொழுதை கழிக்க, தொலைவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் உள்ள கிழவியின் அனுமதியுடன் தங்குகிறார்கள்.. அங்குதான் அந்த சூனியக்காரி கிழவியின் லீலைகள் தொடங்குகின்றன.தனியே உள்ள கோமாவை மயக்கி கட்டுப்படுத்தி அவனது முதுகில் ஏறிக்கொண்டு பறக்கலாகிறாள்.பயத்தில் தடுமாறும் கோமா, எப்படியோ ஒரு வழியாக தரையில் அந்த கிழவியுடன் விழுகிறான்..விழுந்த வேகத்திலேயே பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து பலத்த அடிக்க, சற்றென்று கோரமாக கிழவி அழகு ரசம் கொஞ்சும் குமரியாக மாறுகிறாள்.
பயத்தோடு ஆச்சரித்தில் மூழ்கிய கோமா, "துண்ட காணும் துணிய காணும்" என்பதை போல ஓடுகிறான்.ஒரு வழியாக தனது பள்ளிக்கு வந்து சேர்கிறான் கோமா.அங்கு தொலைவில் வசிக்கும் பணக்காரர் ஒருவரின் பதின்ம வயது மகள் சாகும் நிலையில் இருப்பதாகவும் அவள் கோமாவின் பேரை குறிப்பிட்டு அவன்தான் அவளுக்கு இறுதி ஜெபம் செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறி, கோமா சில ஆட்களின் துணையுடன் அந்த ஊருக்கு அழைத்து வரப்படுகிறான்.. கொஞ்ச நஞ்சம் ஊசலாடிய அந்த பெண் கடைசியில் செத்தும் போகிறாள்..இறந்து போனவள் அந்த சூனியக்காரி கிழவிதான் என்பதை கோமா அடையாளம் கண்டுக்கொள்கிறான்..தொடர்ந்து மூன்று இரவுகள் அவளது உடலை வைத்து ஜெபம் செய்ய வேண்டும் என்பது தந்தையின் ஆணை..ஒத்துக்கொண்டாய் எனின் தங்கங்கள், இல்லையெனில் உடல் தேயும் அளவுக்கு சாட்டையடிகள்.. பயந்துக்கொண்டே கோமா, உத்தரவை ஒத்துக்கொள்ள பிறக்கிறது முதல் இரவு ....
முதல் இரவு
இறந்துப் போன அந்த இளம் பெண்ணின் உத்தரவில் "மூன்று இரவுகள் தானே, முடித்துவிட்டால் ரெண்டு கையிலும் தங்க காசுகள் தாளம் போடும்" என்று உடன் இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே உடல் இருக்கும் தேவாலயத்துக்குள் நுழைய கதவும் பூட்டப்படுகிறது.."குற்றம் செய்தவன் நெஞ்சம் குறுகுறுக்கும்" என்ற மொழிக்கேற்ப, பயம் அவனது மனதில் ஊஞ்சலாடுகிறது..புனித பைபில் இருக்கும் துணையில் மனதில் தைரியம் கொண்டுவர ஏதேதோ பேசிக்கொண்டே சுற்றி இருக்கும் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைக்கிறான்..ஒரு வழியாக, ஜெபத்தை படிக்க ஆரம்பிக்கும்பொழுது திடீரென்று விழிக்கிறது அவளது விழிகள்...அப்படியே லாவகமாக எழுந்து வர, பயம் கோமாவை நெருங்குகிறது..அவனை சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொள்கிறான். கூடவே கடவுளின் புனித வார்த்தைகள் அவன் நாவினிலே அவசர கோலமிட, அவளது ஆவி அவனை நெருங்குகிறது.ஆனால், கோமாவின் பக்கம் வர இயலவில்லை.ஏதோ கண்ணுக்கு தெரியாத வளையம் அவர்களை சுற்றி கோமாவை தாக்குவதிலிருந்து தடுக்கிறது.ஆவியின் முகத்தில் கொலை வெறி கிளம்ப, அவனது குரல்கள் கூடவே அதர, கோழிக்கூவலோடு அந்த இரவு முடிகிறது.
இரண்டாம் இரவு
பயந்தாலும் தனது உயிரை புனித பைபில் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில், குடிப்போதையில் உளரிக்கொண்டே தேவாலயத்தின் உள்ளே நுழைகிறான் கோமா.பக்கத்தில் செல்லவே பறவைகளின் சத்தங்களோட ஆங்காங்கே பறக்கின்றன..அப்படியே பைபிலை திறக்க அங்கிருந்தும் ஒரு பறவை அவனை பயமுறுத்தியப்படியே மேலே சென்றுவிடுகிறது.முன் எச்சரிக்கையாக, தன்னை சுற்றிலும் சாக்பீஸால் வட்டம் போடவே தனது ஜெபத்தை ஆரம்பிக்கிறான்..இம்முறை சற்றும் எதிர்ப்பாரா வண்ணம், அந்த பிணப்பெட்டி பறந்து அவனை தாக்க வருகிறது..மோத முடியாதப்படி சுற்றிலும் தற்காப்பு வளையம்.அதனது தைரியத்தில் பயத்தோடு புனித வார்த்தைகளை இறைவனை நோக்கி பேச ஆகிறான்..மோதல் அதிகரிக்கிறது..பிணப்பெட்டியின் கதவு பிய்த்துக்கொண்டு அந்த பெண்..அவனை பார்த்தப்படியே பேரை சொன்னப்படியே தாக்க முனைகிறாள்.போராட்டம் உச்சத்தை தொடவே, மீண்டும் கோழிக்கூவலோடு இரவு காலையை காண்கிறது.
பயம் வழக்கத்துக்கு மாறாக பேய்யுச்சத்தை தொடுகிறது..இனிமேல் "என்னால முடியாது என்றப்படியே" அந்த பணக்காரரை சந்திக்கிறான். பேசுகிறான் : கெஞ்சுகிறான்.. விட்டப்பாடில்லை..வேறு வழி இல்லாது சிந்திக்கலானவன், இடத்தை விட்டு தப்பிக்கிறான்.. ஓடினேன்..ஓடினேன் இறுதிவரை ஓடினேன் என்பதை போல ஓடுகிறான்..இறுதியில், தோல்வியே மிஞ்சுகிறது.நொந்துப்போனவன் நன்கு சாராயம் அடித்துவிட்டு, தோற்றத்தில் வீரனாக தேவாலயத்தின் உள்ளே செல்கிறான். குடிப்போதையில் தள்ளாடியப்படியே சுற்றிலும் வட்டம் போட்டுக்கொள்கிறான்.. இங்கு....இங்கு...இங்கு.......நிகழும் காட்சிகள்......
@@ அவற்றை தெரிந்துக்கொள்ள படத்தை பார்ப்பதே உத்தமம்..சற்றுக்கூட எதிர்ப்பாராத பிரமாண்மான இறுதி கிளைமக்ஸ் காட்சிகள் நெஞ்சை மிரட்டும்.இத்திரை அனுபவத்தை பார்த்து ரசிக்க நினைப்பவர்கள், YOUTUBE - FULL MOVIE : VIY (1967) @@
================================================================================
ஃபோக் டேல் அல்லது கிராமிய கதைகள் உலக நாடுகளில் கால காலமாக இருந்து வருவதே..அதில் பல வகையான கதைகள் கருத்துக்கள் இன்றுவரை மக்களால் வரவேற்கப்படுவதோடு ஒரு சாறார்களால் உண்மைச் சம்பவங்களாகவும் மதிக்கப்படுகின்றன..அதில் பல கதைகள் திரைப்படங்களாகவும் உருவெடுத்துள்ளன..அந்த வரிசையில் உக்ரேயினில் பிறந்த மிக சிறந்த ரஷிய எழுத்தாளரான நிக்கொலாய் கோகோல் அவர்கள், 1835 - ஆம் ஆண்டு எழுதிய சிறுக்கதைக்கு திரைவடிவம் கொடுத்து எடுக்கப்பட்டதுதான் Viy (1967)..காட்சிகள், அமைப்பு என்று எந்த விதத்திலும் ஒரிஜினல் கதைக்கு குறையில்லாது உயிர்க்கொடுத்த இயக்குனர்களுக்கு நன்றிகள் சொல்ல வேண்டும்..
கதாபாத்திர அமைப்புகள் ஒவ்வொன்றும் படத்துக்கு கூடுதலான அம்சங்கள்..அதில் கோமா ப்ருதூஸ் என்ற பிராதான கதாபாத்திரத்தில் வரும் Leonid Kuravlyov..பயம், வியப்பு, காமெடி, என்று அனைத்து விதமான அம்சங்களிலும் அசத்துகிறார்..அங்கங்கு செயற்கை தன்மைகள் முகபாவனையில் தென்ப்பட்டாலும் இது போலான கதைக்கு போதுமான நடிப்பை மிகவும் எளிமையாக பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் தனது நடிப்பை திரையில் பதிக்கிறார்.
படம் முழுவது பல சிறப்பு அம்சங்கள்..மிகவும் அருமையான முறையில் எடுக்கப்பட்டிருக்கும்.கோமாவை ஊரை விட்டு கூட்டிச் செல்ல வரும் அந்த ஐந்து பேரின் நடிப்பு ஒரு பெரிய ஈர்ப்பு..ஒவ்வொரு முறையும் கோமா தப்பிக்க முயற்சி செய்ய இவர்கள் வந்து தடுப்பது, குடித்துவிட்டு போதையில் அரட்டை அடிப்பதும் என்று "இது ஹாரர் படமா என்று" நம்ப முடியாதப்படி நடித்திருக்கின்றனர்.
கதையின் உச்சக்கட்ட ஆவலும் சுவாரஸ்யங்களும் நிரம்பி வழிவது அந்த மூன்று இரவுகளில்தான்..கோமாவுக்கும் செத்துப்போன அந்த பெண்ணுக்கும் இடையிலான போராட்டம்தான் படத்துக்கு உயிர் நாடி..முழுக்க முழுக்க பார்ப்பவரை திகிலில் மிரட்டவைக்க கூடியவை..// இன்றைய படங்களோடு அதனை ஒப்பிடும்போது சிலருக்கு சிரிப்பும் வரலாம்..அது வேற கதை.// கோமா உளரிக்கொண்டே மந்திரக்கார இளம் பெண்ணின் உடலை பார்த்து பேச, அவளது கண்களிலிருந்து வரும் கண்ணீர் சிகப்பாகிறது..அதன் மூலம் அவளுக்குள் இருக்கும் கோபத்தின் பழுவாங்குதலின் வெறியை காட்டிருப்பார்கள்.ஹாரர் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தவற விடக்கூடாத திரைப்பட தருணங்கள் அந்த மூன்று இரவுகள்..
ஐரோப்பாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான Mosfilm திரைப்பட ஸ்டூடியோவின் தயாரிப்பில் வந்த இத்திரைப்படம், கதையளவில் எந்த விதமான வித்தியாசத்தையும் பேசவில்லை..பல உலக நாடுகளில் பிரசித்துப்பெற்ற கதை.அதனை எவ்வாறாக சொல்லினும், கதையை படித்தவர்களுக்கு பிடிக்காது சலிப்பு தட்டலாம்..
ஆனால், அதற்கு எந்த விதமான இடமும் தராது விசித்திரமான காட்சி அமைப்புகள், கதைக்களம், என்று கதைச்சொல்லலில் புது பாணியை திரையில் ஒரிஜினல் கதையை மாற்றாமல் கொடுத்துள்ளனர்.ஒரு மணி நேரம் ஓடும் ஸிரியல் எபிசோட்டை போல சுமார் 71 நிமிடங்களே ஓடும் இப்படம், பல சிறந்த பொழுதுப்போக்கு அம்சங்களை தாங்கி வந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.இன்னும் சிறிது நிமிடங்கள் ஓடக்கூடாதா என்று சொல்ல வைத்தது.கிரடிட் கார்டு போட்டவுடனே தொடங்கும் பின்னனி இசை..போக போக நெஞ்சை அதன் பக்கம் இழுத்துவிடுகிறது..ஒரு புதுமையான இசைக்கோர்வைகள் படம் முழுவதும்..அதுவும் முக்கியமாக அந்த மந்திரக்கார கிழவி கோமாவின் முதுகி ஏறிக்கொண்டு உயரே பறக்கும்போது ஒலிக்கும் "கோரஸ் வாயிஸ்" மனதை ஏதோ செய்கிறது.நம்மையும் அதனூடே அழைத்து செல்கிறது..அதே போல, கேமராவின் பங்கும் படத்துக்கு மேலும் பலம்.மிகவும் அழகாக பயனித்துள்ளது.
படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது மனதோரத்தில் ரீங்காரமிட்ட இன்னும் ஒன்று, விக்ரமாதித்தன் கதைகள்தான்..அதுவும், கோமாவின் முதுகில் கிழவி சவாரி செய்யும் போது விக்கிரமாதித்தன் வேதாளம் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது..நீண்ட நாட்களுக்கு முன்பு தாத்தா கொடுத்த புத்தகம் விக்கிரமாதித்தன்,,பாதியோடு படித்து மீதமிருப்பதை இன்னொரு முறை ஞாபக கதவை தட்டியது இந்த படம்.
தவறு என்பது தவறி செய்வது - தப்பு
என்பது தெரிந்து செய்வது
என்ற பழைய எம்ஜிஆர் அவர்களின் பாடலை பல முறை கேட்டுள்ளேன்..இது அனுபவ ரீதியில் நான் உணராத ஒன்று.ஏனோ, இந்த படம் மேலோட்டமாக மனதுக்கு சொன்னது..தெரியாமல் செய்த ஒரு குற்றத்துக்காக கோமாவின் மனசாட்சியே அவனை தாக்குவதாக நினைக்கிறேன்.தவறு செய்துவிட்டோம்..அதற்கான மன்னிப்பையும் யாரிடமும் கேட்கவில்லை..அவனது குற்ற உணர்ச்சியே அதி பயங்கரமான பயத்துக்கு காரணமாகிறது..பயத்தை கட்டுப்படுத்தி குடிக்காது இறைவனிடம் தீவிர பக்தியை கொண்டிருந்தால் அவனது நிலைமை மாறியிருக்கலாம்...என்ன இருப்பினும் விதியை வெல்வதென்பது அடிப்படையில் இல்லாத சாபம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
IMDB : 7.2 / 10
MY RATING : 7.5 / 10
நியூஸ் டெலிவரி : Viy (1967), சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஹாரர் படமாம்..உலகளவில் பலராலும் அண்டர்றேடட் செய்யப்பட்ட படைப்பாகவும் கருதப்படுகிறது.. இதே சிறுக்தையை அடிப்படையாக கொண்டு Black Sunday (1960), A Holy Place (1990) Viy.Vozrashchenie (2012) போன்ற படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதில் Viy என்ற வார்த்தை ஒரு கொடிய பேய் அரக்கனை குறிப்பதாகும்.
=======================================================================================
பதிவுக்காக சில தகவல்களை வாசகர்களுக்கு திரட்டி கொடுக்க உதவிய கூகுளுக்கு நன்றிகள்.
=========================================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,