Follow by Email

Wednesday, 2 November 2011

The Exorcist என்ற பேயோட்டுபவர் (மீள்ப்பதிவு )              (படங்களை பெரிதாக பார்க்க படங்களை கிளிக் செய்யவும்)

நான் பெரும்பாலும் ஹாரர் அல்லது திகில் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவன் கிடையாது.பெரும்பான்மையான ஹாரர் சினிமாக்களில் வழிந்தோடும் வன்முறைக் காட்சிகளும் அதற்கு ஒரு காரணம் எனலாம்.ஆனாலும் பிளாக் எழுத ஆரம்பித்ததுமே ஏதாவது நல்ல ஹாரர் திரைப்படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணிருந்தேன்.இருந்தாலும் எதுவுமே சரியாக அமையவில்லை.இருப்பினும்,நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த உலக ஹாரர் சினிமாக்களைப் பற்றிய விமர்சனங்களை தொடர்ச்சியாக எழுதலாம் என்ற நினைப்போடு,இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.
    
நீங்கள் ஹாரர் திரைப்படங்களை தொடர்ந்துப் பார்த்து வரும் ரசிகரா?அப்படி என்றால் மேற்க்கொண்டு யோசிக்கத் தேவையில்லை உடனே டவுன்லோட்டுக்குப் போடுங்கள்.பதிவிரக்கம் செய்வதற்கு கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தலாம்.

 சுமார் எத்தனை ஹாரர் திரைப்படங்களை நீங்கள் பார்த்திறுப்பீர்கள்?அதில் எத்தனை உங்களை இதுவரை மிக அதிகமாக திகைப்பையும் பயத்தையும் சேர்ந்து தந்துள்ளது?இன்னும் ஒருபடி மேல் சென்று எத்தனைத் திரைப்படங்கள் உங்களை நிறைய சிந்திக்கவும் உங்களது உணர்வுகளை தூண்டவும் செய்திருக்கின்றன?
   
இப்படி எதுவும் இதுவரை நடந்தது இல்லையன்றால் நீங்கள் உடனே இந்தப் படத்தைப் பாருங்கள்.எனக்கு கிடைத்த மேற்ச்சொன்ன அனுபவங்களை நீங்களும் பெற வாய்ப்புகள் உண்டு......!


Film : The Exorcist
Year : 1973
Language : English (USA)    
Director : William Friedkin [Oscar won Director Of French Connections (1971)]
Awards : Won 2 Oscars Included Best Screenplay From 10 Oscar Nominations Included Best Picture and Director.

 தெ எஃசோர்சிஸ்ட் அல்லது பேயோட்டுபவர் என்கின்ற திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வில்லியம் ஃபிரிட்கின்  என்ற இயக்குனரின் கைவண்ணத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஒரு ஹாரர் திரைப்படம் ஆகும்.உலகின் தலைச்சிறந்த ஹாரர் க்ளாசிக்குகளில் ஒன்றாக இன்றுவரை உலக சினிமா விமர்சனகர்த்தாக்களாலும் ரசிகர்களாலும் கருதபடுகின்ற தெ எஃசோர்சிஸ்ட்,அது வெளிவந்த ஆண்டில் மிக சிறந்தத் திரைப்படம் மற்றும் இயக்குனர் உட்பட 10 ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டதோடு அதில் சிறந்தத் திரைக்கதை மற்றும் சொவுண்ட் எஃபெக்ட் - கான விருதுகளைத் தட்டிச்சென்றது குறிப்பிடதக்கது ஆகும்.

தெ எஃசோர்சிஸ்ட் பற்றிய சில தகவல்கள்:


 * ஒரே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளறும் நாவல் ஆசிரியரும் - ஆன William Peter Blatty, தான் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் பொழுது நாளிதளில் படித்த ஏறத்தாழ ஒரு உண்மைச் சம்பவத்தின் பாதிப்பிலேயே நாவலினை எழுதியதாக பின்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.பின்பு அதன் தொடர்பில் நடந்த ஒரு ஆய்வில்,அவர் கூறிய ஏறக்குறைய அந்த ஆண்டில் அதே வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று தெரியவந்தது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.
===========
  

 * மேலும்,இந்தத் திரைப்படம் தயாரிப்பில் இருந்தபொழுது,இதில் பணியாற்றிய பணியாட்கள் உட்பட 9 பேர் இறந்தனர் மேலும் அதிர்ச்சியே.   
===========
 * இந்த திரைப்படத்தின் இயக்குனர் பற்றி சொல்ல தேவையில்லை என்று  நினைக்கிறேன்.French Connections (1971) என்றத் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரில்லர் உலகினைக் கலக்கியதோடு சிறந்த இயக்குனர்க்கான ஆஸ்கர் விருதினையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 ================

 * சின்ன வயதாக இருந்தாலும் Linda Blair ரேகன் (Regan MacNeil) என்ற பேய்பிடித்த சின்னப் பெண்ணாக வந்து சும்மா நடிப்பில் பின்னியெடுத்திருப்பார்.தற்பொழுது AFI's 100 Years…100 Heroes and Villains லிஸ்டில் சிறந்த வில்லன்/வில்லி வரிசையில் 9 - ஆவது இடத்திலும் இவர்  இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
=====================


 * அதோடு படத்தில் லிண்டா பிலேரின் தாயாராக வரும் Ellen Burstyn,தன்னுடை மகளை பழைய நிலைக்கு மீட்க போராடும் அம்மாவாக கிரிஸ் என்ற கதாபாத்திரத்தில் அசத்திருப்பார்.    
=======================

 * இந்தப் படத்தின் sequels - ஆக பார்ட் (Part) 2 மற்றும் 3 - ம் முறையே 1977 மற்றும் 1990 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.படங்கள் சுமார் வகைதான் என்றாலும் ஹாரர் ரசிகர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம் (நான் பார்த்துவிட்டேன்)
======================================
  
கொஞ்சம் ரிஸ்கி : இத்திரைப்படத்தில் சில இடங்களில் இடம்பெரும் சில (பல?) Jesus தொடர்பாக பேசப்படும் தகாத வசனங்கள் (வார்த்தைகள்) மற்றும் காட்சிகள் பலரை நோகச் செய்யலாம்.மிக முக்கியமாக கிறிஸ்த்துவ மதத்தைச் சார்ந்தவர்களை புண்படுத்தலாம். எனவே எதற்கும் Imdb இணையத்தளங்களில் ஒரு முறை சரி பார்த்துக்கொண்டு படத்தினை (The Exorcist) பார்க்கவும்.தவறாக எதேனும் சொல்லிருந்தால் மன்னிக்கவும்.
 மேலும் இந்த திரைப்படத்தினைப் பற்றி அறிவதற்க்கு கீழே உள்ள இணையத்தளங்களைப் பயன்படுத்தலாம் :


   கொஞ்சம் பழைய திரைப்படமாக இருந்தாலும் நடிகர்களின் அபாரமான நடிப்பிற்கும் கதை சொன்ன விதத்திற்க்காகவும் மற்றும் அருமையான இயக்கத்திற்காகவும் நிஜமாக ஹாரர் விரும்பிகள் மட்டுமன்றி அனைவரும் பார்க்க வேண்டிய படம் தெ எக்ஸ்சோர்ஸி.ஏனெனில் இது உலக சினிமாவின் ஒரு மிகச் சிறந்த ஹாரர் மட்டுமல்ல படமும் கூட.

My Rating : 8.4/10 : A Masterpiece

                       (என்ன அழகு..இல்ல??)

பிழைகள் ஏதாவது கண்ணில் தென்பட்டால் மன்னிக்கவும்.திருத்திக்கொள்ள முயச்சி செய்கிறேன்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை உங்கள் ஆதரவிற்கு நன்றி.வணக்கம்.  


2 comments:

 1. ஹாலிவுட்டை போலவே கொரியன் ஹாரர் படங்களும் நன்றாக இருக்கும்,

  ReplyDelete
 2. Raj.K said...
  << ஹாலிவுட்டை போலவே கொரியன் ஹாரர் படங்களும் நன்றாக இருக்கும் >>>

  உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே..
  நீங்கள் சொல்லியதுப்போல் நானும் சில கொரியன் ஹாரர் படங்களை பார்த்திருக்கிறேன்..அத்தனையும் என்னை மிரட்டிய வகைதான்.அதனாலோ என்னவோ அதனை பற்றி பேசவே பெரியளவில் வார்த்தைகள் வருவதில்லை..இருந்தாலும் கூடிய விரைவில் ஒரு படமாவது எழுத முயற்சிக்கிறேன்.

  அதோடு, ஜப்பனிஸ் படமான Ringu (1998), The Grudge (2002) போன்ற படங்களும் என்னை வெகுவாக கவர்ந்தவையே.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge