யெப்பா ரொம்ப நாளா ஆச்சு..இந்த மாதிரி ஒரு படத்த பார்த்து..பழைய படம்தானே இதுல என்ன இருக்க போதுன்னு பார்த்து..படம் சுமார் ரெண்டு நாளா மனசிலயே ஒட்டிருச்சி...அப்படி இப்படின்னு ஒரு வழியா எழுத ஆரம்பிச்சிடேன்..நம்பிக்கை இருந்தா கீழ இருக்கிற DVDRIP XVID லிங்கில இலவசமா தறவிறக்கம் பன்னுங்க..இல்லனா ஆகக் கீழ டிரைலர் இருக்கும்..பார்த்துட்டு அப்புறமாவது தறவிறக்கம் போடுங்க..
========================
========================
என்னடா பிளேக் எண்ட் வைத் படத்தபத்தி பெரிசா ரீல் உடுரே..அப்படி சொல்பவங்களுக்கு...ஒரு செய்தி..முதல இது மற்ற பேய் படமாதிரி பயமலாம் பெரியளவில் கொடுக்காது...ஏன் கடைசி வரைக்கும் பேய கூட காட்ட மாட்டாங்க..பயம் என்பது அவர் அவர் மன வலிமையைப் பொருத்தே அமைகின்றது...என்பது எனது சொந்த கருத்து இந்த படம் சிலரை பயப்பட செய்யலாம்..ஆனா..கொஞச நேரம்..எப்படி சொல்றது..ஆ...இந்த படத்தில இருக்கிற காட்சிகள் மாதிரி, இதுவரைக்கும் பல படங்களுல பார்த்திருப்பேன்...அது என்ன ..ஒரு லிஸ்ட்
1) பேய் வீடுன்னே தெரிஞ்சு தைரியசாலி மாதிரி போயு ஒரு கும்பல் தங்கிறது..
2) ராத்திரி நேரத்துல யாரோ நடமாடற சத்தம் கேக்கறது...
3) ரூம் கதவ யாரோ பலமா போட்டு தட்டுறது..
4) கொதிச்ச தண்ணி உடம்புல பட்ட மாதிரி, கதவு கொப்பளிக்கிறது ...ஹீ..ஹீ
5) கடைசில யாராவது மண்டைய போடுரதுன்னு....
6) இன்னும் நிறைய...
இந்த படத்த பார்த்தலே தெரியும்...இதோட பாதிப்புல எத்தன ஹாரர் திரைப்படங்கள் உலகமெங்கும் வந்திருக்கின்றன...ஹாலிவுட்டின் முதல் அசலான பேய் வீடு சம்பந்தம் பட்ட திரைப்படமாக பல விமர்சனர்களாலும் ரசிகர்களாலும் கருதப்படுகிறது...ஆனால் பெரும்பாலான ஹாரர் பிரியர்கள் இதுபோன்ற திரைப்படங்களை பார்க்காமல் விட்டு விடுகின்றனர்...பழைய படம் என்ற காரணத்தினாலும் அது இருக்கலாம்.
Film : The Haunting Year : 1963
Country : America Rating : PG 13
Director : Robert Wise Writers : Nelson Gidding (screenplay), Shirley Jackson (novel)
Stars : Julie Harris, Claire Bloom and Richard Johnson
Awards : Nominated for Golden Globe
=====================================
The Haunting தி ஹண்டிங் திரைப்படம் 1963 - ஆம் ஆண்டு ஜூலி ஹாரிஸ், க்ளேர் புலூம், ரிச்சர்ட் ஜான்சன் போன்றவர்களின் நடிப்பில் வெளிவந்த உளவியலை சார்ந்த திகில் திரைப்படமாகும்.Shirley Jackson என்ற எழுத்தாளரின் நாவலை தழுவி Nelson Gidding எழுதிய திரைக்கதையை பிரிட்டிஷ் இயக்குனரான ராபர்ட் வைஸ், திகிலூட்டும் வண்ணத்தில் ஒரு சிறந்த திகில் திரைப்படமாக இதற்கு வடிவம் தந்துள்ளார்.இவர் சிறந்த இயக்கத்திக்காக கோல்டன் குலோப் விருதுக்கு பரிந்துரை செய்யபட்டது குறிப்பிடதக்கதாகும்.
=====================================
தெ ஹௌண்டிங் திரைப்படத்தின் கதைச்சுருக்கம் :
Dr. John Markway (Richard Johnson) ஒரு அமானுஷ்யம் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்பவர்...நீண்ட வருடங்களாக பலவிதமான மர்மங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் Hill House என்ற அரண்மனையை பற்றி கேள்விபட்டு, அவருடன் சில நாட்கள் தங்கி ஆராய்ச்சிக்கு உதவி செய்யும் வகையில் Eleanor "Nell" Lance (Julie Harris), Theodora "Theo" (Claire Bloom), and Luke Sanderson (Russ Tamblyn) ஆகியோரை துணைக்கு அழைத்தும் கொள்கிறார்.இவர்கள் அனைவரும் தங்குவதற்க்கு ஏற்ற அனைத்தும் அங்கு தயார்படுத்தபடுகிறது...ஆனால் தங்கிய முதல் இரவே பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.கதவினை யாரோ பலத்த அடிப்பது, நடமாடும் சத்தங்கள் என பல வினோதமான சம்பவங்கள் ஒன்றன் பின்னாக நடக்கின்றன...இதற்கெல்லாம் காரணம் என்ன ? உண்மையாக அந்த வீட்டில் என்ன உள்ளது ? அனைவரும் தப்பித்தார்களா ? போன்ற கேள்விகளுக்கு திரைப்படத்தை பார்க்கவும்..
(என்னுடைய எழுத்து வேணுமனா சுவாரஸ்யம் இல்லாம இருக்கலம்...ஆனா படம்...)
================================
THE HAUNTING திரைப்படத்தில் என்னை கவர்ந்த சில சுவாரஸ்யங்கள் :
கதைசொன்ன விதத்தை கண்டிப்பாக பாராட்டீயே தீர வேண்டும்...மொத்த திரைப்படமும் The Haunting of Hill House என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது, இந்த படமே ஒரு வகையில் ஒரு மர்ம நாவலை படித்த உணர்வை கண்டிப்பாக பெரும்பான்மையானவர்களுக்கு தரும் (எனக்கு வந்தது).
படம் தொடங்கும் முன்னே அந்த மர்ம வீட்டை பற்றிய விளக்கமும் (NARRATION) கேமரா அசைவுகளும் சும்மா ஆர்வம் இல்லாதவரை கூட அசத்தல் படுத்திவிடும்..என்னை அதிகமாக கவர்ந்ததே திரைப்படத்தில் இந்த பார்ட்தான்..இக்காட்சிகளில் கேமராவின் அசைவுகளும் சாட்டுகளும் அருமையான வகையில் எடுக்கபட்டிருக்கும்..இதில் மிகுந்த ஆச்சரியம் என்னவெனில் இது போன்ற விஷயங்களை 1963 லியே செய்ததுதான்...இதற்கு இயக்குனரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வேண்டும்..
நடிப்பை பொருத்தவரையில் படம் முழுக்க வலம் வருவது Julie Harris, Claire Bloom, Richard Johnson மற்றும் Russ Tamblyn ஆகிய நான்கு நடிகர்களே.இந்த அத்தனை பேரின் நடிப்பையும் இப்பொழுதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்...கதைக்கு தேவையான நல்ல நடிப்பை இவர்கள் அனைவருமே நன்கு வெளிபடுத்தியுள்ளனர்..கதாநாயகியான ஜூலி ஹேரிஸ் நடிப்பு பிரமாதம்..
============================
இதில் Julie Harris கதாபாத்திரம் வீட்டிலிருந்து சண்டை போட்டுக்கொண்டு காரை திருடிக்கொண்டு ஹில் ஹௌஸுக்கு போகும் வழியில் தனக்குள்ளயே பேசிக்கொள்ளும் காட்சிகள் யாவும் எனக்கு ஹிட்ச்காக்கின் சைக்கோ மெல்ல ஞாபகத்திற்கு வந்ததது...பார்ப்பவர்களையும் கண்டிப்பாக கவரும்..
இத்திரைப்படத்தில் மற்றும் ஒரு ஸ்பெஷ்ல்...வசனங்களே..கதையின் வலிமையை உணர்ந்து காட்சிகளுக்கு மேலும் பலம் கொடுக்கும் வகையில் ஒரு மர்ம படத்துக்கு ஏற்ப கூர்மையாக அமைத்துள்ளனர்..முதல் காட்சிகளில் வசனங்கள் சான்சே இல்லை..
================================
நான்கு ஆஸ்கர்களை வென்றவர்..இதுவே அவருடைய திறமைக்கு ஒரு உதாரணம்..ரொபெர்ட் வைஸ், புகழ்பெற்ற சிறந்த அமெரிக்க இயக்குனர்களில் ஒருவராக விளங்குகிறார்..ஹாரர், மூசிக்கள், ரொமன்ஸ், திரில்லர் என்று பலவிதமான திரைப்படங்களை எடுத்தவர்..சுமார் ஏழு முறை கிடைத்த ஆஸ்கர் பரிந்துரைகளில்..The Sound of Music (1965) மற்றும் West Side Story (1961) ஆகிய இரண்டு திரைப்படங்களுகாக சிறந்த இயக்கம் மற்றும் திரைப்படம் என்று நான்கு விருதுகளை அள்ளிக்கொண்டவர்.இவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் Want to Live! (1958), The Sand Pebbles (1966), Star Trek: The Motion Picture (1979), The Set-Up (1949), Executive Suite (1954) ஆகியவை அடங்கும்.1914 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 திகதி பிறந்த இவர், தனது 91 ஆவது வயதில் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி Los Angels சில் இயற்கை எய்தினார்.
=======================
=======================
இறுதியாக, நல்ல ஹாரர் படங்களை தேடுபவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்...முடிந்தால் தனியாக நள்ளிரவில் (என்னைப்போல்)....
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..மேலும் உங்களுக்கு பிடித்த ஹாரர் படங்கள் ஏதாவது இருந்தால் கருத்துப்பெட்டியில் தெரிவிக்கவும்..மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..
நன்றி..வணக்கம்
நண்பரே,
ReplyDeleteநானும் பழைய horror படங்களை தவிர்த்து விடுவேன்..சுவராசியமாக இருக்காது என நினைத்து.இந்த படத்தை பார்க்கிறேன்.பார்த்து விட்டு மறுபடியும் வருகிறேன்.
அப்புறம் நண்பரே , இமேஜ் verification கமெண்ட் போடும் போது கேட்கிறது. எடுத்து விடுங்கள்
ReplyDeleteLucky Limat லக்கி லிமட் said...
ReplyDelete<<< நண்பரே,
நானும் பழைய horror படங்களை தவிர்த்து விடுவேன்..சுவராசியமாக இருக்காது என நினைத்து.இந்த படத்தை பார்க்கிறேன்.பார்த்து விட்டு மறுபடியும் வருகிறேன்.>>>
தங்களது வருகைக்கும் கருத்து பகிர்தளுக்கும் மிகுந்த நன்றிகள் நண்பரே..
நானும் சில மாதங்கள் வரை பழைய ஹாரர் படங்களை மட்டுமல்ல வேற எந்த வகை படங்களையும் பார்ப்பதை தவிர்த்தே வந்தேன்.ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை வாய்ப்பு கிடைத்து சில படங்களை பார்த்த போதுதான் உணர்ந்தேன்.அந்த வகையில் இந்த படமும் ஒன்று.பழைய பிளேக் எண்ட் வைத் படங்களை பார்ப்பதற்கு ஒரு ஆவலை வழங்கிய படம்.நீங்களும் பாருங்க.சிலருக்கு பிடிக்க வாய்ப்புகள் உண்டு.
மீண்டும் நன்றிகள் பல.
Lucky Limat லக்கி லிமட் said...
ReplyDelete<< அப்புறம் நண்பரே , இமேஜ் verification கமெண்ட் போடும் போது கேட்கிறது. எடுத்து விடுங்கள் >>
எடுத்துவிட்டேன் நண்பரே..இனி தாங்கள் தாராளமாக கமெண்ட் போடலாம்.நன்றி.
கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன் குமரன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதங்களது வருகைக்கு நன்றிங்க நண்பரே..தங்களது ஆதரவு எப்பொழுதும் அவசியம்/படம் பாருங்கள்.
Deletei will watch soon
ReplyDeleteI would like to recommend more classic horror movies. The Innocents, The Changeling and Rebecca.except Rebecca those are ghost movies. but Rebecca is a psychological movie. directed by the master of horror movies Hitchcock. If you watch this movie. you may recall an old superb tamil mystery movie.
ReplyDelete