Follow by Email

Wednesday, 15 February 2012

Horror Cinema : Secret Window (2004) - நிழலுக்குள் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்..



Film : Secret Window   Year : 2004
Country : USA        Rating : PG - 13 (Parents Guide >)
Director : David Koepp
Writers : Stephen King (novel), David Koepp (screenplay)
Stars : Johnny Depp, Maria Bello and John Turturro
Awards : 2 nominations See more awards »

சில வேலைகளுக்கு இடையே 2004 - ஆண்டு வெளிவந்த சீக்ரட் விண்டோ என்ற சைக்கலோஜிக்கல் ஹாரர், திரில்லர் வகையில் எடுக்கபட்ட திரைப்படத்தை எச்பிஓ அலைவரிசையில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது..

   ""ஆறு மாதமாக மனைவியை பிரிந்து, யாரும் இல்லாத தனிமையான வாழ்க்கையை ஓட்டி வரும் எழுத்தாளர் மோர்ட் ரையினிக்கும், எதர்ச்சையாக தன் மீது தன்னுடைய கதையை களவாடிவிட்டதாக கூறிக்கொண்டு தன்னை மிரட்டி, தனது உடமைகளையும் உறவுகளையும் சேதப்படுத்தும் ஜோன் சூட்டர் என்பவருக்கும் இருக்கும் உணமைகளையும், பயங்கரத்தையும் தனது தொய்வில்லாத திரைக்கதை மற்றும் நடிப்பால் கூறும் படம் சீக்ரட் விண்டோ"""

படத்தின் மிக முக்கியமான மோர்ட் ரையினி என்னும் திரை கதாபாத்திரத்தில் ஜோன்னி டெப்..

 இவரை அறிந்திராத ஹாலிவுட் ரசிகர்கள் மிகவும் குறைவு..Pirates of the Caribbean திரைப்பட தொடர்களின் மூலம் உலக புகழ்பெற்ற திறம் வாய்ந்த நடிகர் .ரொம்பவும் பிடித்தமான நடிகர்.பல தரப்பட்ட கேரக்டர்களில் முத்திரை பதித்தவரான ஜோன்னிக்கு, இந்த பட ரோல் எல்லாம் எம்மாத்திரம் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்..தெ சைனிங்கில் ஜேக் நிக்கல்சன் அவர்கள் நடித்த ஏறக்குறைய அதே மாதிரியான வேடத்தில், ஆறு மாதங்களாக யாருடனும் பெரிதாக ஒட்டாத, மனைவியின் கள்ள காதலை அறிந்துக்கொண்ட சாதாரணமான எழுத்தாளராக வந்து அசாதாரணமான நடிப்பை, ஒவ்வொரு முகபாவனைகளிலும் அசைவுகளிலும் வெளிபடுத்தி மனதுக்கு மிக பெரிய ஆறுதலை கொடுக்கிறார்..இறுதி காட்சிகளில் இவரது கண்கள் இருக்கிறதே "பணம் கொட்ட வேண்டும்" இந்த நடிகனுக்கு..ஆனால் 80 ஆம் ஆண்டுகளிருந்து   நடித்து வரும் ஒரு சிறந்த நடிகனுக்கு இன்றுவரை ஆஸ்கர், எட்டாத கனியாக இருப்பது வியப்போடு கலந்து வருத்ததை அளிக்கிறது..

நடிப்பளவில் இத்திரைப்படத்தின் கூடுதல் பலமாக John Turturro, Timothy Hutton மற்றும் Maria Bello ஆகியோரை கூறலாம்.இதில் முதல் இரண்டு நடிகர்கள் இந்த படத்தில் கிடைத்த அறிமுகங்கள்..மரியோ பெல்லோவை பலருக்கும் தெரிந்திருக்கும்..நல்ல நடிகை.

இயக்குனர் David Koepp - Panic Room (2002), Angels & Demons (2009), Mission: Impossible (1996), Spider-Man (2002) போன்ற பல படங்களுக்கு திரைக்கதை அமைத்து இன்று நல்ல இயக்குனராக உருவெடுத்துவருபவர்.. ஜுராஸிக் பார் படத்தின் வழி உலகளவில் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வந்திருக்கும் சீக்ரட் விண்டோ, கடந்த பத்தாண்டுகளில் உருவான நல்ல ஹாரர், திரில்லர் படங்களில் ஒன்றாக சொல்லலாம்.அதே நேரம் ஹாரர் படங்களை கரைத்து குடித்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த படம் மொக்கையாகவும் அமையலாம்..//எப்படியோ பார்த்துட்டு பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா..//      


""The most important part of a story is the ending."
இது படத்தின் டேக்லைன் மட்டும் கிடையாது..படத்தின் உயிர் நாடியே இதுதான்..படம் ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே த்ரில்லர் வெறியர்கள்  கண்டிப்பாக ஓரளவாவது கிளைமக்ஸை ஊகிக்கலாம்.அந்த வகையில் கொஞ்சம் வசதியாகவே தடயங்கள் வைத்து படத்தை நகர்த்தியுள்ளனர்.அதுவும் வலை தொடங்கியதிலிருந்து வழக்கத்துக்கு அதிகமாகவே சஸ்பென்ஸ் திரில்லர் என்று பார்ப்பதால் படம் போன முதல் 40 டூடூ 50 நிமிடங்களுக்குள்ளேயே டிவிஸ்டை உணர முடிந்தது..படம் பார்ப்பவர்களை நோகடிக்காத அதைவிட முக்கியம் ஏமாற்றாத விதத்தில் டிவிஸ்ட் அமைந்திருக்கும் ..மறுபடியும் (முன்னால எப்ப சொன்ன..) சொல்கிறேன் ஜோன்னி டெப்தான் படத்தோடு டபல் டிரீட்..
    
       திரைப்படத்தில் நிறையவே நல்ல காட்சிகள் ரசிகர்களுக்கென்று திரில்லாக மெனக்கட்டு ஏதோ பண்றேனு, நல்லாவே செய்து இருக்கிறார்கள்..முதல் காட்சியிலேயே "போவோமோ??போக வேணாமானு" 

ஏதோ ஒரு மாதிரி ரையினி மனதுக்குள்ளேயே பேசிக்க நம்மல எங்கயும் போகவிடாத மாதிரி ஸீனு ஸீனா பார்த்து தைச்சிருக்காங்க படக்குழுவினர்கள்..அதுவும் எந்த ஊசியும் நூலும் இல்லாம..//// படத்தின் சில சுவாரஸ்யமான காட்சிகளை சொல்ல வேண்டாம் என்று தவிர்க்கிறேன்..அப்பதான் திரில்லா..இருக்கும்...(அட அப்படியா??))

எழுத்தாளர் ஸ்டீபன் கிங், சினிமா மற்றும் புத்தக பிரியர்கள் பலருக்கும் அறிமுகமானவரே..  ஹாரர் படங்களுக்கு என்றே இயக்குனர்கள் ஜோன் கார்ப்பெண்டெர், சாம் ராய்மி போன்றவர்கள் எப்படியோ, அதே மாதிரி எழுத்து துறையில் தலைவர்தான் A TO Z..ஹாரர், சஸ்பென்ஸ் என்று ஒரு என்சைக்கலோபீடியாவாகவே வாழ்ந்து வருபவர்..2004 - ஆம் ஆண்டு இவர் எழுதிய நாவலை படமாக்கி இருக்கின்றார் இயக்குனர்.பல நல்ல கதைகளை படம் பண்றேனு சொல்லிட்டு..புகை ஊதுறேனு அதாங்க ரீலு..ரீலு - வுடற படங்களுக்கு மத்தியில் இந்த படத்த(யாவது) உருப்பிடியா எடுத்த பெரிய மனிதர்களுக்கு சில நமஸ்க்காரங்கள்..

விமர்சனங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இல்லையென்றாலும் 50, 60 சதவீதமாவது விமர்சக மற்றும் ரசிகர் பெருமக்கள் இடையே ஏற்றுக்கொள்ளபட்டது என்றே சொல்லவேண்டும்..உலகளவில் $92,913,171 வசூல் செய்த தொகையை இதற்கு சான்றாக கூறலாம்..
ஒரு முறை பார்த்த பிறகு இன்னொரு முறையும் பார்க்க தூண்டும் வகையான படமிது..சில வேலை காரணமாக ஒரு தடைவையே பார்க்க முடிந்தது...எச்பிஓ - வில் திரும்ப திரும்ப ஒளிப்பரப்பினாலும் பார்க்க நேரம் கிட்டுமா என்பது சந்தேகம்தான்..பட்..நீங்க மிஸ் பண்ணாதிங்க..வாய்ப்பு கிடைப்பின் பார்க்க வேண்டிய படமே..

@ பார்க்க வேண்டிய நேரம். : நள்ளிரவு (குட் நைட்)
@@ பார்க்க கூடாத நேரம் :: பட்டப்பகலில்.. (அட வேலை இல்லாட்டாலும்)
@@@ யார்//யாரோட பார்க்கலாம் ::: 15, 16 வயச கடந்தவங்க..
@@@@ எதுக்காக பார்க்கலாம் :::: மற்றவங்களோட எழுத்த களப்புனா என்னவெல்லாம் நடக்கும் என்பதை அறிய,,

'சோஓ..மொத்தத்தில், சீக்ரட் விண்டோ : பார்த்துட்டு சாத்திட்டு வந்து தூங்குங்க..

IMDB RATING : 6.5 / 10

MY RATING : 6.5 / 10 : Twist & Turns

நியூஸ் டெலிவரி : இந்த படத்தின் கதையை மாதிரியே (நால்லா கேட்டுக்கோங்க மாதிரிதான்)) நிறைய படங்கள் வந்துள்ளதாக படம் பார்த்த என்னோட ஐன்ஸ்ட்டின் மூளை யூகித்தது..என்னோட மூள என்னிக்கு தோற்றது சொல்லுங்க ?? சில நாட்களுக்கு முன்னாடி இணையத்தில் தேடும் போதுதான் பல படங்கள் இதே மாதிரி கதையில வந்ததா தெரிந்துக்கொண்டேன்..ஆனா ஒன்னு..பெரும்பாலான எல்லா படமும் 2004 - ஆம் ஆண்டுகளுக்கு முன்னாடி 60's, 70's, 80's, 90's எடுக்கபட்டவையாம்..அட அப்பயே எவ்வளவு பெரிய ஜீனியஸ் எல்லாம் யோசித்திருக்காங்க..ஹி..ஹீ.. டைம் கிடைப்பின் இனி வரும் வசந்த காலங்களில் எப்பயாச்சும் ஒவ்வொரு பார்வைகளாக பார்க்கலாம்.. 
==================================================================       

 ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

59 comments:

 1. Johnny Depp மிகவும் திறமையான நடிகர். அதில் துளி கூட சந்தேகம் கிடையாது. :)
  படம் என்கிட்ட இருக்கு. ஆனா நான் இன்னும் பார்க்கல
  உங்க எழுத்த வச்சு என்னால ஓரளவு கதையா யூகிக்க முடியுது. முக்கியமா /////மறுபடியும் (முன்னால எப்ப சொன்ன..) சொல்கிறேன் ஜோன்னி டெப்தான் படத்தோடு டபல் டிரீட்..//// இது எனக்கு ஒரு ஹின்ட்...
  சரி குமரன், படம் பார்த்து விட்டு என்னோட அனுபவத்தை உங்க கிட்ட பகிர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இனிய இரவு வணக்கம்,
   தங்களது வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் சிறந்த நன்றிகள் நண்பரே..இந்த படத்தை சிறந்த ஹாரர் லிஸ்டில் சேர்க்க இயலாவிடினும் ஒரு நல்ல டைம் பாஸ் படம்..

   @@ முக்கியமா /////மறுபடியும் (முன்னால எப்ப சொன்ன..) சொல்கிறேன் ஜோன்னி டெப்தான் படத்தோடு டபல் டிரீட்..//// @@
   இது ஏதோ ஆர்வ கோளாருல எழுதுனது..நீங்க என்ன நெனைச்சீங்கனு தெரில..ஆனால், என்ன நெனைக்கிறீங்கலோ அதுவாவும் இருக்கலாம்..இல்லாமையும் இருக்கலாம்.

   படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள்..எதிரிப்பார்க்கிறேன்.நன்றி.

   Delete
  2. ✅❗Use This Links To Download If Above Links Are Not Working (G. Drive)


   👉Click Here To Download (1.56GB)


   👉Click Here To Download (878MB)


   👉Click Here To Download (664MB)


   👉Click Here To Download (547MB)


   👉Click Here To download (385)


   Disclaimer: If links are not working email me at moviestv@gmail.com

   Delete
 2. //சீக்ரட் விண்டோ, கடந்த பத்தாண்டுகளில் உருவான நல்ல ஹாரர், திரில்லர் படங்களில் ஒன்றாக சொல்லலாம்.//
  //அந்த வகையில் கொஞ்சம் வசதியாகவே தடயங்கள் வைத்து படத்தை நகர்த்தியுள்ளனர்.//

  நான் இதுல எதை நம்புறது?

  இந்தப் படத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. சீக்கிரமே ஜானி டெப்பின் படங்கள் சில பார்க்கவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.

  ஆனால் நான் பார்த்த இவரின் ஒரு கொஞ்சம் பழைய படம் ... கடைசி வரை செம இன்ட்ரஸ்டிங்கான ஒரு த்ரில்லரா கொண்டு வந்து இறுதியில் என்னமோ சம்பந்தமே இல்லாம ஒரு செக்ஸ் சீனைப் போட்டு சப் என்று முடித்துவிட்டாங்க. சுத்த டைம் வேஸ்ட். அவ்வ்வ்வ் (படத்தின் பெயர் ஞாபகம் வரவில்லை)

  ReplyDelete
  Replies
  1. இனிய இரவு வணக்கம்,
   தங்களது வருகைக்கு மகிழ்கிறேன் நண்பரே..

   @@ நான் இதுல எதை நம்புறது? @@
   இப்படி கேட்டா எப்படி சொல்றது ?/ நீங்க ஏதாவது வச்சிக்குங்க சார்...

   கண்டிப்பாக ஜோனி டெப் படங்கள் பார்க்க வேண்டியவையே..கதை, காட்சி என்று எவ்வளவு மட்டமா இருந்தாலும் இவரது நடிப்பை எப்போதும் ரசிக்கலாம்..ஒரு பெரிய மன ஆறுதல் இவரு..இந்த படத்தையும் பாருங்க..தங்களுக்கு பிடிக்கலாம்.

   அவ்வளவு குதப்பலான படமா ?? தலைப்பு என்ன பாஸ்..?? ஞாபகபடுத்தி முடியுமெனில் பிறகு சொல்லுங்கள்..

   Delete
  2. இப்போ தான் தேடிப் பிடித்தேன். படத்தின் பெயர் The Ninth Gate. ஆரம்பத்திலிருந்து செம இன்ட்ரஸ்டிங்கான படம். ஆனால் எனக்குத் தான் க்ளைமேக்ஸ் பிடிக்கவில்லை/ஒட்டவில்லை. சிலவேளை நான் எங்காவது கவனத்தை சிதறவிட்டிருக்கலாம், அல்லது சாத்தான் கிறிஸ்தியானிட்டி பற்றிய ஞானம் நமக்கு கொஞ்சம் குறைவு என்பதும் காரணமாக இருக்கலாம்.

   ஆனால் கடைசி 10நிமிடம் தவிர்த்து செ த்ரில்லிங். (எனக்கு)

   Delete
  3. முடிஞ்சா பார்த்துவிட்டு விளக்கமா புரியுற மாதிரி ஒரு பதிவு போடுங்க. அப்புறம் இந்த சார், பீர் எல்லாம் வேணாம். சரியா ???

   Delete
  4. அந்த படம் பார்த்துட்டேன்..நல்ல படம்தான்..நம்ம ரோமன் பொலான்ஸ்கி எடுத்த படம்..நல்ல கதையா எழுதி கடைசில எதிர்ப்பார்க்காத கிளைமக்ஸ் வச்சி என்ன படத்துக்கு எதிரி ஆக்கிட்டாங்க...
   இன்னொரு தடவ படம் பார்த்துட்டுதான் மேல பேசனும்..அப்புறம் விமர்சனம் எல்லாம் ரொம்ப ஓவர்..நீங்க போடுங்க..நான் படிச்சு ஒன்னே ஒன்னு கமெண்ட் போடுறேன் (ஹீ..ஹி).

   அநேகமா நீங்க என்ன விட பெரியவருன்னு நெனைக்கிறென்...சாரு சரி அதென்ன பீரு..அது எங்கங்க வந்தது..நான் நல்ல பையன்.நீங்க என்னவிட நல்ல பையன் இல்ல ??

   (குறிப்பு : எல்லாமே சும்மா வார்த்தைகள் - ங்க..கோச்சிக்கிட்டு அடுத்த கமெண்ட் போடாம இருந்துராதிங்க)

   மறுபடியும் வருகை அளியுங்கள்..நல்லா டைம் பாஸ் ஆகுது..நன்றிங்க.

   Delete
 3. விமர்சனம் வழக்கம் போல நன்றாகவே இருக்கிறது. தொடர்ந்து கொஞ்சம் நிறையவே அறிமுகப்படுத்துங்க. நம்மள மாதிரி சோம்பேறியா இருக்காதீங்க. ஹி ஹி ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே..நானும் நிறைய எழுதுனுமுனு நெனைக்கிறென்..ஆனால், ஏதோ டிஸ்டர்ப் பண்ணுது.முடிந்த அளவில் நல்ல படங்களை அறிமுகபடுத்த முயற்சி செய்கிறேன்..நானும் சோம்பேரிதாங்க..ஆனால், குட்டி சோம்பல்.

   Delete
 4. விமர்சனம் நல்லாத்தான் இருக்கு. முன்னாடி நீங்க எழுதினதைப் படிச்சுத்தான் ‘சைக்கோ’ டிவிடிய தேடி வாங்கி, பாத்து ரசிச்சேன். (ஹிட்ச்காக் பேரை நிறையவே கேள்விப்பட்டிருந்தாலும்) இப்ப இதைச் சொல்லியிருக்கீங்க. பாக்க முயற்சிப்பேன். அதென்ன... 80, 90கள்ல வந்த படங்கள்? லிஸ்ட் கொடுத்தா நாங்களும் பாப்பம்ல குமரன் ஸார்?

  ReplyDelete
  Replies
  1. இனிய இரவு வணக்கம் ஐயா,
   தங்களை போன்றவர்களின் வருகையில் மனம் மகிழ்ந்தது...முதலில் "சார்" என்று அழைப்பதை விடுங்கள்..நான் வயதிலும் அனுபவத்திலும் தங்களைவிட எவ்வளவோ சிறியவன்.."குமரன்" போதும் என்றே நினைக்கிறேன்.

   @ விமர்சனம் நல்லாத்தான் இருக்கு @
   மிக்க நன்றிகள்.

   @@ முன்னாடி நீங்க எழுதினதைப் படிச்சுத்தான் ‘சைக்கோ’ டிவிடிய தேடி வாங்கி, பாத்து ரசிச்சேன்.@@
   என்னுடைய எழுத்துகளையும் மதித்து நீங்கள் திரைப்படம் பார்த்ததே எனக்கு பெருமை..நன்றி.

   @@@ இப்ப இதைச் சொல்லியிருக்கீங்க. பாக்க முயற்சிப்பேன். அதென்ன @@@
   பாருங்கள் ஐயா..ஆனால், சைக்கோ படத்தை போல இது சிறந்த படமா என்று தெரியவில்லை..வாய்ப்பு கிடைப்பின் பார்க்க வேண்டிய ஹாரர் படம்.

   எனது நன்றிகள்.

   Delete
  2. @@ 80, 90கள்ல வந்த படங்கள்? லிஸ்ட் கொடுத்தா நாங்களும் பாப்பம்ல குமரன் ஸார்? @@
   சீக்ரட் விண்டோ மாதிரி கதையம்சம், கிளைமக்ஸ் டிவிஸ்ட் என்று சில அம்சங்கள் நிறைந்த படங்கள் சில வந்துள்ளன..அதில் சிலவற்றை பார்த்திருக்கிறேன்.

   1408 (2007), Identity (2003), The Shining (1980), The Tenant (1976) - நல்ல படங்கள் இவை..கதையளவில் வித்தியாசங்கள் மிக அதிகமாக இருப்பினும், டிவிஸ்டு, கதாபாத்திர அமைப்பு என்று ஒரே மாதிரியான உணர்வுகளை கொடுக்கக்கூடியவை.

   The Dark Half (1993), Hide and Seek (2005), My Little Eye (2002), High Tension (2003), - அடுத்து பார்க்க இருக்கிற படங்கள் இவை..இணையத்தில் படித்த வரையில் சீக்ரட் விண்டோவுடன் சில ஒற்றுமைகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்..பார்த்துவிட்டு விரைவில் பதிவுகள் இட முயற்சி செய்கிறேன்.

   High Tension (2003), In Dreams (1999), Misery (1990), The Number 23 (2007) போன்ற படங்களையும் பலர் சீக்ரட் விண்டோவுடன் சில அம்சங்களில் ஒன்றிப்போவதாக கூறுகிறார்கள்..நான் இன்னும் பல படங்கள் பார்க்கவில்லை..பார்த்து பிடிக்குமெனின் சில வார்த்தைகள் பகிர்கிறேன்.

   ஐயா, தங்களுக்கு நேரம் இருப்பின் இந்த படங்களை பார்க்க முயற்சி செய்யுங்கள்..நன்றி.

   Delete
 5. விமர்சனம் நல்லாயிருக்கு. படம் பார்த்துட்டு சொல்றேன். ஜானி எனக்கும் பிடித்த நடிகர். திரில்லர் வகை மட்டுமல்லாமல் காமெடி வகை படங்களை பற்றியும் எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றிகள் நண்பரே..
   பார்த்துவிட்டு சொல்லுங்கள், என்னால் முடிந்த வரை மேலும் சில படங்களை அறிமுகம் செய்ய முயற்சி செய்கிறேன்..

   Delete
 6. குமரன், நீங்கள் கொடுத்த லிஸ்ட்டைப் படித்தேன். இயன்றால் அனைத்தையும் தேடிப் பிடித்து பார்த்துவிட உத்தேசம். (டிவிடி தேடித்தர அஸ்கர் அலி பாய் இருக்க பயமேன்) மிக்க நன்றி நண்பா!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக பாருங்கள்...தங்களுக்கு பிடிக்கவும் வாய்ப்புகள் உண்டு..அப்படியே பார்த்துவிட்டு சில வார்த்தைகள் தங்களது பாணியில் ஒரு விமர்சனம் போடலாமே..ஐயா..?? சிறப்பாக அமையும்.என்னை போன்றவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

   இது எனது வேண்டுக்கோள்.தவறாக நினைக்க வேண்டாம்.நன்றி.

   Delete
  2. இதற்கு முன் ஒருமுறை நான் ரசித்த ஆங்கிலப் படத்தின் விமர்சனம் போட்டிருக்கிறேன். சரியாக செய்தேனா என்ற ஐயத்தில் தொடரவில்லை குமரன். நீங்கள் பார்த்து சரி என்று சொன்னால் அவசியம் அவ்வப்போது நான் ரசிக்கும் ஆங்கிலப் படங்களை எழுதுகிறேன். சரிதானே... அதன் லிங்க்:

   http://www.minnalvarigal.blogspot.in/2011/10/blog-post_17.html

   Delete
  3. ஐயா அந்த விமர்சனத்தை முன்னமே படித்திருக்கிறேன்...நான் சரி சொல்வதில் என்ன இருக்கு..நான் பொடிப்பையன்.
   தங்களது எழுத்தை மதிப்பவர்களும் விரும்புவர்களும் ஏராளம்..பின்னூட்டங்களை பார்த்தாலே அது தெரியும்.
   நான் தங்களது எழுத்தை நேசிக்கிறேன்..தொடர்ந்து எழுதுங்கள்..
   அதுதான் எனது மனம் சொல்லும் ஆசை.
   நன்றி.

   Delete
  4. ஓ.கே. குமரன், நன்றி.

   Delete
  5. தொடருங்கள் ஐயா..நன்றி.

   Delete
 7. அருமையான விமர்சனம்.... உங்கள் முயற்ச்சி தொடரட்டும்
  http://www.tamilogy.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் எனது நன்றிகள் சகோ..
   தங்களது பதிவுகளும் என்னை வெகுவாக கவர்ந்த ஒன்றே.அனைத்தும் சிறப்பாக உள்ளது.தொடருங்கள்.

   Delete
 8. நல்ல இருந்ததுங்க..கொடுத்து வச்சிருக்கணும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகையில் மனம் மகிழ்ந்தேன்..நண்பரே..பல நன்றிகள்.
   ஆமாம், எதுக்கு நண்பரே கொடுத்து வச்சிருக்கனும்..புரியில...

   Delete
  2. HBO சேனலில் மீண்டும் ஒளிபரப்பினால் பார்க்கிறேன். நன்றி குமரன்.

   Delete
  3. கண்டிப்பாக வாய்ப்பு கிடைப்பின் பாருங்கள்.வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 9. என் Big Fish பட டி.வி.டில இந்த படத்தோட ட்ரெயிலர்தான் முதல்ல ஓடும்..அப்பவே இந்த படம் பார்க்கனும்னு ரொம்ப எதிர்பார்த்துகிட்டிருந்தேன. பிறகு என்ன காரணத்தாலோ, அதைப் பற்றியே மறந்துட்டேன். நினைவூட்டிட்டீங்க.. நன்றி!
  சஸ்பென்ஸை மெயின்டெய்ன் பண்ணிகிட்டே அருமையா விமர்சனம் போடுறீங்களே.. வெரிகுட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
   கண்டிப்பாக பாருங்கள்..பிடிக்க கூடும்..

   Delete
 10. விமர்சனம் வழக்கம் போல நன்றாக இருந்ததுங்க...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ..ரொம்ப நன்றி.

   Delete
 11. superaa irukku vimarsanam...
  naanum padam paarkkanum aasaiyaa irukku...
  paarthu poduren next tim

  ReplyDelete
  Replies
  1. இனிய இரவு வணக்கம்,
   தங்களது வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றி கலை..படம் பாருங்கள்..பிடிக்க வாய்ப்புகள் உண்டு.

   Delete
 12. hey kumaran neengalum chinnaippillaiyaa ....jolly ...jolly....ippothan paarthen..eppudi superaa ezuthudingal ....mattra periya annaas maariye ezuthi irukeenga

  ReplyDelete
  Replies
  1. அப்ப நீங்க ?? 19 வயசு எனக்கு ஆக போகுது..நான் என்ன சின்ன பையனுனா நெனைக்கிறீங்க..சரி நீங்க சொன்னா கரக்டுதான் கலை..நான் எங்கங்க நல்லா எழுதுறேன்..,இன்னும் நிறைய கத்துக்கனும்..

   படித்தது இங்குள்ள தமிழ்ப்பள்ளியில், " தமிழனாக எம்மை படைத்தமைக்கு அந்த இறைவனுக்கும், தமிழனாய் வளர்த்துவரும் என் தாய் தந்தையருக்கும், தமிழை கற்றுக்கொடுத்த ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றிகள் இவ்வேளை சொல்லியே ஆக வேண்டும்"..

   தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் கலை..தங்களது எழுத்துக்களும் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டன..இனி நான் தங்களது வாசகர்களில் ஒருவன்..நன்றி.

   Delete
 13. படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டுடிங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் எனது நன்றிகள் சகோ..படம் பாருங்கள்..

   Delete
 14. Replies
  1. பதிவ படிச்சுட்டேனுங்க..என்னமா ஐடியாக்கள்..சூப்பர்.தொடருங்கள்.

   Delete
 15. johnny deep pin die hard fan naan.. avaroda pirates of careibean padangala parthu avaroda theevira fan akiten... hmm kandippa time kidaikum bothu intha padam pakkanum... vimarsanam arumai...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..

   Delete
 16. வணக்கம் நண்பா,
  நலமா?
  பாடசாலை காரணமாக பிசியாகிட்டேன்!

  சீக்கிரட் விண்டோ படம் இன்னமும் பார்க்கவில்லை! ஒரு எழுத்தாளரின் சைக்கோ, வெறித்தனத்தை பார்க்கனும் என்பதற்காக, இப் படத்தினை பார்க்க உத்தேசித்துள்ளேன்.

  தங்களின் விமர்சனம் படம் பார்க்கனும் எனும் ஆவலை தூண்டியுள்ளது. நன்றி நண்பா.

  ReplyDelete
  Replies
  1. இனிய இரவு வணக்கம் நண்பரே,
   மிக்க நலம்.தங்களது நலமும் அறிய ஆவல்,
   இல காரணங்களால் தங்களது வலை பக்கமும் வர இயலவில்லை.மன்னிக்கவும்.
   தங்களது வருகைக்கு மிக்க நன்றிகள்.

   திரைப்படத்தை பாருங்கள்..தங்களுக்கு பிடிக்கலாம்..கண்டிப்பாக அந்த சைக்கோத்தனம் தங்களை கவர்ந்திடக்கூடும்..தொடர்ந்து ஆதரவு வழங்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 17. அருமையான பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பரே..தொடர்ந்து வருகை தாருங்கள்.

   Delete
 18. Very good reveiw kumaran keep it up.

  ReplyDelete
  Replies
  1. Thanks for your visit Riyas, I really need your wishes..its a great boost for my writing.

   Delete
 19. படம் இன்னும் பார்க்க வில்லை. பொழுதுபோக்கான நல்ல பதிவு

  ReplyDelete
 20. தங்களது முதல் வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் என் நன்றிகள்..இது எல்லாம் விமர்சனம் என்று நினைத்து நான் என்றுமே எழுதுவது கிடையாது..என்னுடைய பார்வையில் நான் ரசித்தவற்றின் சிறிய அறிமுகமே இந்த வலை.நன்றி.மேலும் வருகை தாருங்கள்.

  ReplyDelete
 21. அருமையான பதிவு நண்பரே... இந்த படத்தோட விமர்சனத்த சென்ற வாரம் எதோ ஒரு வலைப்பதிவில் பார்த்துட்டு torrent இல் download செய்தேன். ஆனால் கடைசில அது வேற ஒரு language la dubbing செஞ்ச version ah போச்சு.. திரும்ப இன்னிக்கு டவுன்லோட் பண்ணி கண்டிப்பா பாக்கனும். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றி நண்பரே..
   கொஞ்சம் தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னியுங்கள்..
   தாங்கள் ஹாரர் ரசிகர் எனில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமே..டோரண்டுக்கும் எனக்கும் எப்போதுமே ஆவது இல்லை..நம்ம டைரட் லிங்குதான்..எதற்கும் தாங்கள் டோரண்ட் போடுவதாக இருந்தால் இந்த லிங்குகளை பயன்படுத்தி பாருங்கள்.
   http://www.torrenthound.com/hash/eb0ed506d5cbab246077ec00ee80edb3d0405be7/torrent-info/Secret-Window-2004-Eng-Dvdrip-
   http://www.torrentdownloads.net/torrent/1308727/Secret+Window+2004+DVDRip+XviD

   (குறிப்பு : மேலே லிங்க்கு சரியா இல்லனா கோபப்பட்டு அடுத்த முறை வராம போகாதிங்க நண்பரே..எனக்கு கிடைத்த புது நண்பர் நீங்க)

   தங்களது எழுத்துக்களையும் படித்தேன்..அருமை...தொடர்ந்து எழுதுங்கள்..சூப்பர் ஸ்டார் பதிவு சூப்பர்.
   மீண்டும் நன்றிகளோடு என் வணக்கங்கள்.

   Delete
  2. //தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றி நண்பரே.// நண்பரே இது தங்களுக்கு என்னுடைய முதல் பின்னூட்டம்.. ஆனால் முதல் வருகையல்ல... ஏற்கனவே பல முறை தங்கள் தளத்திற்கு வந்திருக்கின்றேன். சில காரணங்களுக்காக நான் அடிக்கடி பின்னூட்டம் இடுவதில்லை.. காரணத்தை பின்னர் ஒரு பதிவில் சொல்கிறேன்.

   கண்டிப்பாக தங்கள் பதிவுகளை தவறாமல் படிக்கிறேன் நண்பரே..

   நன்றிகள் பற்பல.. :)

   Delete
  3. தங்களது வருகைக்கு மீண்டும் நன்றிகள் நண்பரே..காரணத்தை விரைவில் சொல்லுங்கள்..அடுத்த பதிவு சில தினங்களில்..தங்களது பதிவுகளையும் தொடர்ந்து வாசிக்க முயற்சி செய்கிறேன்.நன்றி.

   Delete
 22. படம் இன்னும் பாக்கல.. நல்ல பதிவு.. அண்ணனுக்கு ஹாரர் படங்கள் ரொம்ப புடிக்குமோ.. ப்ளாக்ல நெறைய ஹாரர் பட விமர்சனமா இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றி நண்பரே..
   கொஞ்சம் தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னியுங்கள்..
   ஹாரர் படங்கள் என்றாலே அலருபவன் நான்..ஆனால், சின்ன வயசுல இருந்தே திகில் முக்கியமா பேய் படங்களின் மேல ஒரு அபிப்ராயம்..போக போக தமிழ் படங்கள் சலிக்க சில வெளிநாட்டு படங்களை பார்க்கலானேன்..இப்போது ரசிகனாகவும் இருக்கிறேன்..இப்பல்லாம் ஹாரர் படங்கள் பார்க்குறது குறைந்துவிட்டது நண்பரே..கடைசியா பார்த்ததே இதைதான்.

   நான் எல்லாம் எழுதருது விமர்சனம் என்றே சொல்வதே தப்பு..அதற்கான தகுதியும் அனுபவமும் எனக்கு இருப்பதாக தெரியவில்லை..தங்களது முதலிருந்து நேற்று வந்த விமர்சனங்கள் என்று ஒன்று விடாது படித்துவிட்டேன்.அத்தனையும் சிறப்பானவை.தொடர்ந்து எழுதுங்கள்.

   என்ன அண்ணனா சொன்னீங்க..அநேகமா நான் உங்களோட தம்பின்னு நினைக்கிறேன்..(வயது, எழுத்துக்கள் ரீதியில்)

   படம் பாருங்கள்..பிடிக்கலாம்.நன்றிகளொடு வணக்கம்.

   Delete
 23. மிக அழகான விமர்சனம் நண்பரே ....படத்தை பார்க்கத் தூண்டுகிறது ,நிச்சயம் பார்த்துவிடுவேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய வருகைக்கும் சேர்த்து பின்னூட்டத்துக்கும் நன்றிங்க நண்பரே..படம் பாருங்கள்..பிடிக்க வாய்ப்புகள் உண்டு.

   Delete
 24. இதற்க்கு முன்பே ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்த காலத்திலேயே மிகவும் திகிலாக இருக்கும் இத்திரைப்படம். உங்கள் விமர்சனம் அருமை.

  ReplyDelete
 25. @@ நிலா முகிலன் @
  நண்பரே. வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்..தங்களது விமர்சனமும் படித்தேன்..அருமை.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...