நம்ம ஸ்லம்டாக் மில்லியனர் ஃப்ரிடா பிண்டோ, Henry Cavill, Robert Naylor ஆகியோர் நடிப்பில் வெளிவரும் இந்த படத்தை இயக்கி இருப்பவர் Tarsem Singh ஆகும்.இவர் இந்தியாவில் பிறந்து, The Fall (2006), The Cell (2000) போன்ற படங்களின் மூலம் அமெரிக்க இயக்குனராக வலம் வருகிறார் இந்த 50 வயது இயக்குனர்.
=============
2) YOUNG ADULT - 2011 : DECEMBER
Charlize Theron நடிப்பில் விரைவில் வரவிருக்கும் காமெடி படமாகும்.இந்த படத்தை எடுத்திருப்பவர் ஜூனோ (2008) படத்தை இயக்கிய Jason Reitman ஆகும்.இவர் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆன Ivan Reitman அவர்களின் மகன் என்பது குறிப்பிடதக்கது.
==================
3) IN THE LAND OF BLOOD AND HONEY - 2011 : DECEMBER
ஏற்கனவே இந்த படத்தை பற்றி சிறிது குறிப்பை பகிர்ந்திருக்கிறேன்..இதுவரை ஏஞ்சலினாவின் நடிப்பை பார்த்தவர்கள் இவருடைய நல்ல் இயக்கத்தை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
==========================
4) MY WEEK WITH MARILYN - 2011 : NOVEMBER
டைட்டிலை பார்த்தவுடனே படத்தின் மீது ஒரு ஈர்ப்பு தானாக வந்து மனதில் ஒட்டிக்கொண்டது..அதற்கு காரணம் Marilyn என்ற வார்த்தை என்று பலருக்கும் தெரிந்திருக்கும்..தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் பல கொடி ரசிகர்களை கவர்ந்த நடிகை மரிலின் மன்றோ சம்பந்தபட்ட கதை என்று கேள்விபட்டேன்..விரைவில் பார்க்க்க வேண்டும்..
==============================================
ஏதேனும் தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்..மேலும், நீங்கள் எதிர்பார்க்கும் படங்களை பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிடுங்களேன்..மேலும், பல தகவல்களை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை
கடந்த சில நாட்களாகவே, சென்ற வருடம் வந்து வெற்றியடைந்த சில குறிப்பிட்ட மிஸ் பண்ணிய படங்களை ஒரு அல்சு அலசி வருகிறேன்..அதில் மனதோரம் தங்கிய சில படங்களையே எழுத முயற்சித்து வருகிறேன்.அந்த வரிசையில் இன்றைய "பார்வை"
தெ கெராத்தே கிட் - வில்ஸ் ஸ்மித் மகனும் தற்பொழுது அமெரிக்காவில் சக்கை போடு போடும் பையனான ஜேடன் ஸ்மீத்தும் நம்மை குங்பூ மன்னர் ஜேக்கிச்சானும் இணைந்து கலக்கிய படம்.1984 - ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் ரீமேக்கான இதை Harald Zwart இயக்க, கத மற்றும் திரைக்கதையை முறையே Robert Mark Kamen மற்றும் Christopher Murphey எழுதி இருக்கின்றனர்.டைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரே இதற்கும் இசையமைத்துள்ளார்.
கதை ரொம்ப சிம்பிள்..
தன் தாயின் வேலை மாற்றம் காரணமாக சைனாவுக்கு வருகிறார் Dre Parker (அதான் நம்ம ஜேடன் ஸ்மித்) என்ற 12 வயது.வந்தவுடனே Girlfriend காரணமாக பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் தகராறு ஏற்படுகிறது.அதுவும் இவர்கள் எல்லோரும் குங்பூ பழகி வருபவர்கள் (செமததயா..வாங்குவாருல)..இதையே மனதில் வைத்துக்கொண்டு இவர்களுக்குள் பிரச்சனைகள் பிறக்கிறது..டிரேவை ரகளை செய்யவும் (Bully) ஆரம்பிக்கின்றனர்..ஒரு நாள் இந்த பிரச்சனை கடுமையாக உருவாக..அப்பதான் வந்து காப்பத்துறாரு நம்ம குங்பூ மன்னரான Mr. Han (வேற..யாரு..நம்ம ஜேக்கிதான்).இவரு டிரேவின் வசிப்பிடத்தில் வேலை செய்பவர்.பிரகுஎன்ன, இருவரும் நண்பர்கள் ஆகின்றனர்..அந்த பசங்களிடமிருந்து காப்பாத்த நிறைய காரியங்கள் பண்றாரு (ரொம்ப இல்ல..ஒரு ஒன்னு..ரெண்டு.அட மூனுன்னு வச்சிக்கங்க.)..அதுல ஒன்றுதான் அந்த பையனுக்கு குங்பூ கற்று தருகிறார்.மேலும், இவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்த..டிரேவை ஒரு குங்பூ போட்டிக்கும் தயார்ப்படுத்துறாரு.
அப்பிறமென்ன படத்த பாருங்க.நல்ல படம்.குடும்பத்தோட சந்தோஷமா பார்க்கலாம்.(மேல சொல்லாத நிரைய விஷயங்கள் படத்துல செம்ம கலக்கலா).படம் பார்க்கிலனா கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இலவச தரவிறக்கம் போடுங்க..
The Karate Kid - 2010 திரைப்படத்தில் சில சுவாரஸ்யங்கள் :
அருமையான படம் - அதுல ஆணிவேறா இருக்குறது ஜாக்கி மற்றும் டிரெவின் நடிப்பும்தான்..என்னமா நடிக்கிறாரு நம்ம வில்ஸோட சின்ன ஸ்மித்.//இவரும் இவரது தந்தையும் இணைந்து நடித்தThe Pursuit of Happynessபடத்தை பார்த்திருக்கிறேன்..அதுவும் ஒரு நல்ல படம்.ரெண்டு பேருமே பிச்சு உதரிப்பாங்க//
இதுலயும் வயதுக்கு மீறிய அழகான அருமையான நடிப்பு (பின்ன என்ன..கிஸ்ஸேல்லாம் பண்றாரு).ஒவ்வொரு காட்சிகளிலும் நல்ல நடிப்பையும் எக்ஸ்பிரஷன்களையும் ரொம்ப தெளிவாக வழங்கிருக்கின்றார்.
==============
அடுத்து நம்ம ஜாக்கி - //இவர பத்தி தொடர்ப்பதிவே போடலாம்..அந்தளவுக்கு என்னில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியவர்.சின்ன வயதில் யாருன்னே தெரியாமல் என்னை ஈர்த்தவர்கள் மூவர்தான்.ஒன்று ரஜினி ரெண்டாவது அர்னால்ட் கடைசியாக ஜாக்கி..கதையே புரியாமல் தொலைகாட்சியில் டிரங்கன் மங்க்கி படங்கள் பார்த்துட்டு எத்தனையோ முறை சண்டை போட்டிருக்கிறேன் (தனியாதான் ஒரு விளயாட்டாக) கராத்தே கற்றுக்கொள்ல வேண்டும் என்ற ஆசையும் இவரது படங்களின் வழி வந்ததே.//
கல கலவென சிரிக்க வைத்து தன் விறு விறுப்பான சண்டை காட்சிகளால் ரசிகர்களை கவரும் ஜேக்கி, இந்த படமுழுவதும் சாதுவாகவும் அமைதியாகவுமே வந்து தன்னுடைய நடிப்பை ஆழமாக வழங்கி இருக்கிறார்..
=====================
ஜாக்கியும் ஜேடனும் முதலில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் யாவுமே அசத்தலாக இருக்கும்..பாத்ரூம் சரியில்லை என்று இவரை கூப்பிட வரும் காட்சிகள் (ஒரு ஈயையோ, கொசுவையோ அடிக்கிற விதம் பாருங்க) அனைத்தும் கண்டிப்பாக அனைவரையும் கவரக்கூடியவையே.
==========================
விமர்சன ரீதியில் பெரிய அளவில் பெயர் எடுக்காவிட்டாலும், வசூலில் சுமார் 350 கோடிக்கு மேல் வாரி இறைத்துள்ளது.படத்தின் பட்ஜெட் 40 கோடிதான்.
==============================
டிரேவின் பெண் தோழியாக வரும் அந்த சீன பெண்னின் நடிப்பும் நன்றாக இருக்கும்..அழகாகவும் இருக்கிறார்.
====================================
படத்தின் இறுதி காட்சிகள் அனைத்தும் கலக்கள்..ஆனா..கடைசி வரைக்கும் ஜேக்கி சீரியஸா (வழக்கம்போல சிரிச்சிகிட்டே) ஒரு சண்டக்கூட போடல என்கிறது சிறியளவில் ஏமாற்றதை எனக்கு தந்தது.அந்த பசங்களோட கோச்சுக்கு ஒரு குத்துவிட்டுந்தாவது (இந்தாளு..அதான்..இந்த கோச்சு ரொம்ப கடுப்பேத்துராறு மை லோர்ட்..ஹி.ஹி) கொஞ்சம் திருப்த்தியா இருந்துருக்கும்.இருந்தாலும், அது படக்கதைக்கு தேவை இல்லாத ஒன்றே.
==============================================
எப்படி இருந்தாலூம், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் தாரளமாக சந்தோஷத்துடன் பார்த்து ரசிக்க ஏகுவான படம் இந்த கராத்தே கிட்.கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.
My Rating : 7/10
கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிகவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை
(படங்களை பெரிதாக பார்க்க படங்களை கிளிக் செய்யவும்)
நான் பெரும்பாலும் ஹாரர் அல்லது திகில் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவன் கிடையாது.பெரும்பான்மையான ஹாரர் சினிமாக்களில் வழிந்தோடும் வன்முறைக் காட்சிகளும் அதற்கு ஒரு காரணம் எனலாம்.ஆனாலும் பிளாக் எழுத ஆரம்பித்ததுமே ஏதாவது நல்ல ஹாரர் திரைப்படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணிருந்தேன்.இருந்தாலும் எதுவுமே சரியாக அமையவில்லை.இருப்பினும்,நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த உலக ஹாரர் சினிமாக்களைப் பற்றிய விமர்சனங்களை தொடர்ச்சியாக எழுதலாம் என்ற நினைப்போடு,இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன்.
நீங்கள் ஹாரர் திரைப்படங்களை தொடர்ந்துப் பார்த்து வரும் ரசிகரா?அப்படி என்றால் மேற்க்கொண்டு யோசிக்கத் தேவையில்லை உடனே டவுன்லோட்டுக்குப் போடுங்கள்.பதிவிரக்கம் செய்வதற்கு கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தலாம்.
சுமார் எத்தனை ஹாரர் திரைப்படங்களை நீங்கள் பார்த்திறுப்பீர்கள்?அதில் எத்தனை உங்களை இதுவரை மிக அதிகமாக திகைப்பையும் பயத்தையும் சேர்ந்து தந்துள்ளது?இன்னும் ஒருபடி மேல் சென்று எத்தனைத் திரைப்படங்கள் உங்களை நிறைய சிந்திக்கவும் உங்களது உணர்வுகளை தூண்டவும் செய்திருக்கின்றன?
இப்படி எதுவும் இதுவரை நடந்தது இல்லையன்றால் நீங்கள் உடனே இந்தப் படத்தைப் பாருங்கள்.எனக்கு கிடைத்த மேற்ச்சொன்ன அனுபவங்களை நீங்களும் பெற வாய்ப்புகள் உண்டு......!
Film : The Exorcist
Year : 1973
Language : English (USA)
Director : William Friedkin [Oscar won Director Of French Connections (1971)]
Awards : Won 2 Oscars Included Best Screenplay From 10 Oscar Nominations Included Best Picture and Director.
தெ எஃசோர்சிஸ்ட் அல்லது பேயோட்டுபவர் என்கின்ற திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வில்லியம் ஃபிரிட்கின்என்ற இயக்குனரின் கைவண்ணத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஒரு ஹாரர் திரைப்படம் ஆகும்.உலகின் தலைச்சிறந்த ஹாரர் க்ளாசிக்குகளில் ஒன்றாக இன்றுவரை உலக சினிமா விமர்சனகர்த்தாக்களாலும் ரசிகர்களாலும் கருதபடுகின்ற தெ எஃசோர்சிஸ்ட்,அது வெளிவந்த ஆண்டில் மிக சிறந்தத் திரைப்படம் மற்றும் இயக்குனர் உட்பட 10 ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டதோடு அதில் சிறந்தத் திரைக்கதை மற்றும் சொவுண்ட் எஃபெக்ட் - கான விருதுகளைத் தட்டிச்சென்றது குறிப்பிடதக்கது ஆகும்.
தெ எஃசோர்சிஸ்ட் பற்றிய சில தகவல்கள்:
* ஒரே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளறும் நாவல் ஆசிரியரும் - ஆன William Peter Blatty, தான் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் பொழுது நாளிதளில் படித்த ஏறத்தாழ ஒரு உண்மைச் சம்பவத்தின் பாதிப்பிலேயே நாவலினை எழுதியதாக பின்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.பின்பு அதன் தொடர்பில் நடந்த ஒரு ஆய்வில்,அவர் கூறிய ஏறக்குறைய அந்த ஆண்டில் அதே வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று தெரியவந்தது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.
===========
* மேலும்,இந்தத் திரைப்படம் தயாரிப்பில் இருந்தபொழுது,இதில் பணியாற்றிய பணியாட்கள் உட்பட 9 பேர் இறந்தனர் மேலும் அதிர்ச்சியே.
===========
* இந்த திரைப்படத்தின் இயக்குனர் பற்றி சொல்ல தேவையில்லை என்றுநினைக்கிறேன்.French Connections (1971) என்றத் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரில்லர் உலகினைக் கலக்கியதோடு சிறந்த இயக்குனர்க்கான ஆஸ்கர் விருதினையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
================
* சின்ன வயதாக இருந்தாலும் Linda Blair ரேகன் (Regan MacNeil) என்ற பேய்பிடித்த சின்னப் பெண்ணாக வந்து சும்மா நடிப்பில் பின்னியெடுத்திருப்பார்.தற்பொழுது AFI's 100 Years…100 Heroes and Villains லிஸ்டில் சிறந்த வில்லன்/வில்லி வரிசையில் 9 - ஆவது இடத்திலும் இவர்இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
=====================
* அதோடு படத்தில் லிண்டா பிலேரின் தாயாராக வரும் Ellen Burstyn,தன்னுடை மகளை பழைய நிலைக்கு மீட்க போராடும் அம்மாவாக கிரிஸ் என்ற கதாபாத்திரத்தில் அசத்திருப்பார்.
=======================
* இந்தப் படத்தின் sequels - ஆக பார்ட் (Part) 2 மற்றும் 3 - ம் முறையே 1977 மற்றும் 1990 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.படங்கள் சுமார் வகைதான் என்றாலும் ஹாரர் ரசிகர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம் (நான் பார்த்துவிட்டேன்)
======================================
கொஞ்சம் ரிஸ்கி : இத்திரைப்படத்தில் சில இடங்களில் இடம்பெரும் சில (பல?) Jesus தொடர்பாக பேசப்படும் தகாத வசனங்கள் (வார்த்தைகள்)மற்றும் காட்சிகள் பலரை நோகச் செய்யலாம்.மிக முக்கியமாக கிறிஸ்த்துவ மதத்தைச் சார்ந்தவர்களை புண்படுத்தலாம். எனவே எதற்கும் Imdb இணையத்தளங்களில் ஒரு முறை சரி பார்த்துக்கொண்டு படத்தினை(The Exorcist) பார்க்கவும்.தவறாக எதேனும் சொல்லிருந்தால் மன்னிக்கவும்.
மேலும் இந்த திரைப்படத்தினைப் பற்றி அறிவதற்க்கு கீழே உள்ள இணையத்தளங்களைப் பயன்படுத்தலாம் :
கொஞ்சம் பழைய திரைப்படமாக இருந்தாலும் நடிகர்களின் அபாரமான நடிப்பிற்கும் கதை சொன்ன விதத்திற்க்காகவும் மற்றும் அருமையான இயக்கத்திற்காகவும் நிஜமாக ஹாரர் விரும்பிகள் மட்டுமன்றி அனைவரும் பார்க்க வேண்டிய படம் தெ எக்ஸ்சோர்ஸி.ஏனெனில் இது உலக சினிமாவின் ஒரு மிகச் சிறந்த ஹாரர் மட்டுமல்ல படமும் கூட.
My Rating : 8.4/10 : A Masterpiece
(என்ன அழகு..இல்ல??)
பிழைகள் ஏதாவது கண்ணில் தென்பட்டால் மன்னிக்கவும்.திருத்திக்கொள்ள முயச்சி செய்கிறேன்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை உங்கள் ஆதரவிற்கு நன்றி.வணக்கம்.
முதலில் இந்த படத்தை எனக்கு அறிமுகபடுத்திய "கருந்தேள் கண்ணாயிரம்" அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..அவரது விமர்சனமே இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரு ஆர்வத்தை கூறிக்கொள்வதோடு...இன்றைய சிறிய "பார்வை"..
தெ எவில் டெத் சீரீஸ், ஸ்பைடெர் மென் போன்ற படங்களை இயக்கிய சாம் ராய்மி எடுத்த படம்..இந்த டிரக் டு மி ஹெல்.. பேண்டசி, டிராமா போன்ற வகைகளுக்குள் சிக்கிக்கொண்டு பல படங்களை எடுத்த சாம் ராய்மி, தன்னுடைய சொந்த ஸ்டைலானவகையான ஹாரருக்கு திரும்பி வந்து எடுத்த படம்.Alison Lohman, Justin Long மற்றும் Ruth Livier ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, திரைக்கதையை இயக்குனரோடு சேர்ந்து தன்னுடைய அண்ணனான Ivan Raimi எழுதியுள்ளார்.இவர் ஒரு டாக்டரும் ஸ்பைடெர் மென் படங்களில் கதை எழுத உதவி செய்தவரும் ஆவார்..விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் அமோக வரவேறப்பை பெற்ற இந்த படம் 2007 - ஆம் ஆண்டு வெளிவந்த ஹாரர் த்ரிலர் வகையைச் சார்ந்த படமாகும்.
கிறிஸ்டின் பிரவுன் ஒரு வங்கியில் பணிப்புரியும் கடனுதவி அதிகாரி.தனது வீட்டு மாத கட்டணத்தை தள்ளிப்போட ஒரு வயதான பாட்டி வநிக்கு வருகிறார்.எதிர்ப்பாராத விதமாக பிரவுனுக்கும் இவருக்கும் தகராறு ஏற்படுகிறது..SO..பாட்டி சும்மா இருக்குமா எல்லா பெரிசுங்கள போல சாபத்தை விட்டு சென்று விடுகிறது..இங்க ஆரம்பிக்கிற பிரச்சனைதான் நம்ம ஹீரோயினுக்கு,,கடைசி காட்சி வரைக்கும் விறு விறுப்பு குறையாமல் மிரட்டுராறு நம்ம டைரக்டரு..(கதையை எவ்வளாவு (இதுவா கத ?) சுருக்க முடியுமோ அந்தளவுக்கு சுருங்க எழுதி இருக்கிறேன்..ஏனெனில், நீள எழுதினால் ஒருவேளை பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்தை இழக்க வாய்ப்புகள் உண்டு.)..SO, Why do you waiting for so long..just download. for free at below.
திடீரென்று Detroit நகர மக்கள் காணமால் உண்மையில் மறைந்து போக, மீதம் மிஞ்சுபவர்களின் கதையை சுவாயாக சொல்ல நினைத்து கொஞ்சம் சொத்தப்பிய படம் இது..(ஆனா எனக்கு ஓரளவு பிடிச்சது..(நம்ம டேஸ்டு அந்த மாதிரில்ல ஹி..ஹீ.)
Brad Anderson என்பவரின் இயக்கத்தில் Hayden Christensen, Thandie Newton மற்றும் John Leguizamo போன்றவர்களின் நடிப்பில் வெளிவந்த post-apocalyptic ஹாரர் திரில்லர் படமாகும்.திரைகதையை எழுதி இருபவர் Anthony Jaswinski.2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம், விமர்சன ரீதியில் சற்று குறைவாகவே வரவேற்பு பெற்றிருந்தாலும், வசூலில் மொத்தமாக சறுக்கிய மிகப்பெரிய ஏமாற்றமே.அநேகமாக இயக்குனர் எடுத்த படங்களிலேயே இதுதான் இந்த அளவிற்கு ரசிகர்கள் விமர்சனர்கள் மத்தியில் செம்மையாக குத்தி கிழிக்கபட்ட படம் எனலாம்.
யாரு எப்படி சொன்னா..என்ன..நமக்கு படம் புடிச்சா சரி என்று மனதைரியம் உள்ளவர்கள் தாராளமாக இந்த படத்தை கண்டு ரசிக்கலாம்..மொக்கையான படமென்று பலர் கருதினாலும் என்னைப் போல பலருக்கும் பிடிக்க வாய்ப்புள்ளது..எனவே, பார்க்காதவர்கள் படத்தை கீழே இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.
பி.கு : வாசக நண்பர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம்..மேலும், எனது எழுத்துக்கள் உங்களை கவர்ந்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்தவும்.
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்களாம்.அதுவரை நன்றி.. வணக்கம்.