Tuesday 20 September 2011

KNOWING - 2009 : உலகின் கடைசி சில நிமிடங்கள்/நாட்கள்...

Film : Knowing
Year : 2009
Country :United States
Director : Alex Proyas
Writers : Ryne Douglas Pearson, Juliet Snowden, Stiles White
Stars : Nicolas Cage, Rose Byrne, Chandler Canterbury, Lara Robinson
Awards : 3 nominations See more awards


ஐ ரோபோட் திரைப்படத்தில் ரொபோட்களின் உலகினை மனித சமுதாயத்தோடு கலந்த இயக்குனர் Alex Proyas, உலகின் கடைசி காலத்தை நமது கண்களின் முன்னே கொண்டு வந்து நிறுத்த, நெஞ்சை அதிர்ச்சி அடைய செய்த திரைப்படம்தான் இந்த KNOWING - 2009.பொதுவாகவே, அமெரிக்க சினிமாவின் சிறப்பம்சம் என்னவென்றால், நாம் நினைக்கவே முடியாத விஷயங்களை எல்லாமே (பயத்தையும் சேர்த்து) சும்மா அசால்டா தங்களுக்கே உரிய கற்பனைகளாலும் பிரமாண்டமான காட்சியமைப்புகளாலும் நம் கண்களை குளிரவைப்பதே (சில நேரங்களில் அதிரவைப்பதும் கூட).(சும்மாவா..பின்ன அவ்வள பெ(பி)ரிய ஜுராஸிக் பார்க்கையே இவ்வள சின்ன ஸ்கிரீன்.... கொண்டு வந்தவங்க ஆச்சே.?.)
 நிக்கோலஸ் கேஜ், ரோஸ் பைரன், சாண்ட்லர் சென்டர்பரி, லாரா ராபின்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க Dark City - 1998, I, Robot - 2005 போன்ற திரைப்ப்டங்களின் மூலம் இன்று ஹாலிவுட்டை கலக்கி வரும் இயக்குனர்களில் ஒருவரான  Alex Proyas - யின் இயக்கத்தில் வெளிவந்த KNOWING, சுமார் 50 கோடி பட்ஜெட்டில் உலகமெங்கும் 180 கோடிக்கும் மேல் வசூலையும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.விமர்சனர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு பெறாவிட்டாலும், உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் 2009 - ஆண்டு வெளிவந்த நல்ல சைன்ஸ் ஃபிக்ஸ்ன் திரில்லர் திரைப்படமாக பலராலும் கருதபடுகிறது.  

கதைச்சுருக்கம் :

1959 - ஆண்டு, பள்ளி மாணவியான லுசிண்டா (Lucinda Embry) தூரத்தே வானத்தை உற்று பார்த்துக்கொண்டிப்பதோடு திரைப்படத்தின் முதல் காட்சி ஆரம்பிக்கிறது.அன்றைய வகுப்பில், ஆசிரியை மாணவர்களிடம் இனி அடுத்த ஐம்பது ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்ற தலைப்பினை வழங்கி தத்தம் கற்பனைகளின் துணையுடன் வரையச்சொல்லி உத்தரவிடுகிறார்.எல்லாரும் படங்களை வரைய, லுசின்டா மட்டும் தன் தாள் முழுவதும் வெறும் எண்களையே எழுதி தீர்க்கிறாள்.மாணவர்கள் வரைந்த அனைத்து படங்களையும் ஆசிரியை time capsule - லில் போட்டு அடைத்து, பள்ளிக்கூட வட்டாரத்தில் போட்டு புதைத்தும் விடுகின்றனர்.(இவர்களது ஓவியங்களை அடுத்த 50 ஆண்டுகள் கழித்து வரும் மாணவர்களின் பார்வைகளுக்காக இவ்வாறு செய்யப்படுவதாக ஆசிரியை தொடக்க காட்சியிலேயே சொல்லி விடுகிறார்).


இப்பொழுது, திரைப்படம் அப்படியே சரியாக 2009 - ஆம் ஆண்டுக்கு தாவுகிறது.ஜொனாதன் Koestler (கேஜ்), மனைவியை இழந்து தனது ஒரே ஒரு மகனான Caleb - உடன் வசித்துவரும் எம்ஐடியில் பணிபுரியும் இயற்பியல் பேராசிரியர் ஆவார்.லுசின்டா படித்த அதே பள்ளியில் 50 வருடங்களுக்கு புதைக்கபட்ட time capsule திறக்கபடுகிறது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு லுசிண்டா வரைந்த (எழுதிய) அந்த தாள் அதே பள்ளியில் பயிலும் Caleb - kku கிடைக்க. இந்த தாள் எதிர்ப்பாராமல் ஜொனாதனின் பார்வையில் விழுகிறது.(பிறகு என்ன.?..விடுவாரா...நம்ம ஹீரோ).திரைப்ப்டம் இந்த காட்சியிலிருந்து பெரிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.அந்த தாளில் எழுதபட்டிருக்கும் எண்களின் பின்னனி என்ன ? மர்மங்கள் என்ன ? இறுதியில் என்ன நிகழ்ந்தது என்ற அனைத்தையும் திரையில் காண்க.. 

KNOWING - 2009 திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில சுவாரஸ்யங்கள் :


  • 2012 - 2009, Independence Day - 1996 திரைப்படங்களைப் போல வெறும் அழிவை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் அழிவதற்கான சில காரணங்களையும் ஆங்காங்கே தவிக்கின்ற மனித உறவுகளையும் (தந்தை - மகன்) காட்சிகளை கண்களுக்கு காட்டிருப்பது திரைப்படத்தின் கூடுதல் பலம்.

  • ஆரம்ப காட்சிகளில் லுசின்டா எழுதிய எண்களை பார்த்தாலே ஏதோ இதுக்கு பின்னாடி ஒரு பெரிய ஆ....ப்..பு வச்சிருக்காங்கனு ? சில பேர்கள் மனசில கேள்விகள் எழ வாய்ப்புகள் உண்டு (முக்கியமா...எனக்கு இருந்தது).கடைசியில் ஹீரோ அந்த எண்களுக்கு பின்னால் இருக்கும் ரகசிய முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சி அதிர்ச்சையை தரக்கூடியது.அதுவும் எண்களுக்கு பின்னாடி இருக்கிற மர்மத்தை அல்லது ரகசியத்தை கடைசிவரை பார்ப்பவர்களுக்கு சலிப்புதட்டாமல் கொண்டு சென்றுள்ளது திரைக்கதைக்கு கூடுதல் பலமாகும்.



  • படத்துல அங்க இங்கென்ன..எங்க சுத்தினாலும் எல்லா இடத்திலும் நம் கண்களை கவர்வது கதைநாயகரும் மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற நடிகரான நிக்கோலஸ் கேஜ் - தான்.தன்ன்னுடைய மகனுக்கு பொறுப்புள்ள பாசமான தந்தையாகவும், உலக அழிவுகளை தடுக்க இயலும் சாதாரன மனிதனாகவும் எண்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியங்களை கண்டுபிடிக்க பாடுபடுபவராகவும் ஜொனாதன் Koestler என்ற கதாபாத்திரத்தில் வந்து நன்றாகவே நடித்துக்கிறார்.இவருடைய இந்த நடிப்பு பலரையும் கவர்ந்திட வாய்ப்புகளுண்டு.அவருடைய ரசிகர்களுக்கு சொல்லவே தேவையில்லை என்று நினைக்கிறேன்.          

  • திரைப்படத்தில் நடித்த மற்ற நடிகர்களை பற்றி சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.ஜொனாதனுக்கு மகனாக வரும் Caleb என்ற கதாபாத்திரத்தில் சாண்ட்லர் சென்டர்பரி நடித்திருக்கிறார்.காது கேளாமல், தனது காதுகளுக்கு மட்டுமே வினோதமாக ஒலிகளை கேட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார்.மேலும், திரைப்படத்தின் கதாநாயகியாக ரோஸ் பைரன் "டயானா" என்ற கதாபாத்திரத்தில் பாதி படத்தில் வந்தாலும் சிறப்பாகவே நடித்ததோடு, அவருடைய மகளாக வரும் லாரா ராபின்சன் "அப்பி மற்றும் லூசிண்டா" என்ற இரண்டும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.



  • இத்திரைப்படத்தை முதன் முதலில் இயக்க முன்வந்தவர், சவுத்லாண்ட் டேல்ஸ் மற்றும் டோனி டார்கோ போன்ற திரைப்படங்களை இயக்கியவரான ரிச்சர்ட் கெல்லி என்பது குறிப்பிடதக்கதாகும்.

  • வேகமாக செல்லும் திரைக்கதையில் இறுதி சில காட்சிகள் மட்டும் பலபேருக்கும் பிடிக்காமலோ அல்லது லோஜிக்காகவோ இல்லாமல் போக வாய்ப்புகள் உண்டு.இடை இடையே வரும் ரயில் விபத்து மற்றும் Chasing காட்சிகள் மேலும் மெறுகூட்டுகிறது


  • சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் திரைப்படத்தை எந்த அளவிற்கு சுவாரஸ்யமாகவும் திரிலிங்காவும் கொடுக்க இயலுமோ அந்த முயற்சி செய்திருக்கிறார்.அதுக் கேட்டாற் போல் கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரமாண்டமாகவே கொடுத்து நம் கண்களையும் மிரள வைக்கிறார்.ஆனால் சற்று திரைக்கதையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இறுதியாக, முழுக்க முழுக்க ஒரு சிறந்த திரைப்படம் என்று KNOWING - 2009 திரைப்படத்தைக் கூற முடியாவிட்டாலும், திரில்லர் விரும்பிகள் அனைவரும் கட்டாயமாக பார்க்கலாம்.


Book of Dreams: Welcome to Crateland (1994) என்ற குறும்படத்திற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்காக பரிந்துரை செய்யபட்டவர்.23 திகதி செம்டம்பர் மாதம் 1963 - இல் எகிப்து நாடில் பிறந்தவரான இவர், தொடர்ந்து இயக்கிய The Crow - 1994, Dark City - 1998, Garage Days - 2002, மற்றும் I, Robot திரைப்படங்களின் அமெரிக்க சினிமாவில் மூலம் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தவர் ஆவார்.

WATCH TRAILER BEFORE THE FILM :

MY FINAL RATING : 6/10
எதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால்  மன்னிக்கவும்..மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி வணக்கம்.
Related Posts Plugin for WordPress, Blogger...