Follow by Email

Thursday, 29 November 2012

Color Of Paradise (1999) பார்வையில்லா உலகம்

A Film By Majid Majidi
Stars : Hossein Mahjoub, Mohsen Ramezani and Salameh Feyzi

ஈரானியத் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் பலருக்கும் மஜித் மஜிதி அவர்களைப் பற்றி தெரிந்திருக்கும். கடந்த இருபது ஆண்டுகளில் ஈரானிய சினிமாவை உலகளாவிய நிலையில் தன் பக்கம் திருப்பிய ஈரானிய கலைஞர்களில் முக்கியமான பங்கு இவர்க்கு உண்டு..தொடர்ந்து உலகத்தர திரைப்படங்களை சினிமா பார்வையார்களுக்கு வழங்கிவரும் ஈரானிய சினிமாவில் இவர் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.இவரது Children Of Heaven (1997) மற்றும் Baran (2000) போன்ற திரைப்படங்கள் உலகளாவிய நிலையில் பல விருதுகளை வென்றதோடு, ஆஸ்கர் விருதுக்காக ஈரான் நாட்டிலிருந்து பரிந்துக்கப்பட்ட முதல் படமாக சில்ட்ரன் ஒஃப் ஹேவன் திரைப்படம் விளங்குகிறது.

 1999-ம் ஆண்டு வெளிவந்த கலர் ஒஃப் பாரடைஸ் திரைப்படம் - இவரது முந்தைய படைப்பான சில்ட்ரன் ஒஃப் ஹேவன் என்ற திரைப்படத்திற்கு சற்றும் குறைவில்லாமல் உலகளவில் பல விருதுகளைப் பெற்றதோடு விமர்சக மற்றும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.கண் பார்வையற்ற ஒரு இளம் வயது சிறுவனுக்கும் தன் தந்தைக்கும் இடையிலான உறவை, சிறப்பான முறையில் மஜிதி எனும் உலக தரம் வாய்ந்த படைப்பாளன், தனக்கே உரிய பாணியில் உருவாக்கிய இப்படைப்பினை ஒரு முறையாவது அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியது அவசியமே.

ஏனெனில் மொழி என்பது திரைக்காட்சிகளில் பெரும்பாலும் அவசியம் இல்லாமல் போகிறது. கதையோடு கலந்த காட்சியமைப்புகளும், காட்சிகளோடு கலந்த கதாபாத்திரங்களும் வார்த்தைகளை தாண்டி மாய வலையை பார்வையாளனின் கண்களில் விரிக்கக்கூடியவை.இதனை வார்த்தைகளாக சொல்வதைவிட அனுபவத்தாலே உணர்ந்திட முடியும்..திரைக்கதைக்கு தேவையே இல்லை என்றாலும், நிர்வாணம் அல்லது ஆபாச காட்சிகள் ஒன்றாவது புகுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இவ்வளவு கெடுபிடியான, கடுமையான சென்சாருக்கு நடுவில் வெளிவரும்   ஈரானிய திரைப்படங்கள் உலகத்தரத்தில் அமைவது மிகுந்த ஆச்சரியத்தையே கொடுக்கிறது.

மொஹம்மட் என்ற முதன்மை கதாபாத்திரத்துக்கு உயிரை தந்திருக்கும் Mohsen Ramezani.. யாரென்றுக்கூட தெரியவில்லை இந்த சிறுவனை..கண் பார்வையற்ற உலகின் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.நிஜ வாழ்க்கையில் கண்களை இழந்த நடிப்புலக இளவரசன்..வயதில் சிறியவராக இருப்பினும் முதிர்ச்சியான நடிப்பு இவரது.நேர்த்தியான விதத்தில் அமைந்திருக்கும் ஒளிப்பதிவு, கண்களில் ஒத்திக்கொள்ளலாம்..கொள்ளை அழகு.. சினிமாவின் தரத்தை நிர்ணையிக்கும் கவித்துவமான காட்சிகளை சுற்றி கோலமிடுகிறது.

கண் பார்வைகளை இழந்தவர்களின் வாழ்க்கை, அபூர்வமானது : சோகமானது... குற்றங்கள் செய்யாமலேயே ஆயுள் கைதியாக வாழ்வதை போன்றது..கை, கால்கள் என்று அனைத்துமே நன்றாக இருக்கும் நம்மில் பலரும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பல வேளைகளில் எல்லாம் முடிந்துவிட்டது, வாழ்க்கையே போய்விட்டது என்று சொல்லிக் கொள்கிறோம்.என்னை பொருத்தவரை குறைகளில் பெரியது சிறியது என்று எதுவும் இல்லை.காரணம் அவை எல்லாமே மனிதற்கு துன்பத்தை தரக்கூடியதே..அதுவும் ஏழைக்கு அந்த நிலமை வரும்போது..இறைவன் அவர்களுக்கென்று துணையை கொடுக்கிறார்.. வாழ வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறார். நம்மாளும் முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுக்கிறார்..

2000ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ஈரான் நாட்டிலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட படைப்பிது.இறுதி நேரத்தில் ஆஸ்கரால் புறக்கணிக்கபட்டது கொடுமை.ஈரானிய சினிமாவை இன்னொரு தரத்துக்கு கொண்டு சென்ற இப்படைப்பை, ரசிகர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய அனுபவம் ஆகும்.   
 .
என்றாவது ஒரு நாள் ஈரானிய சினிமாவை பற்றியும் அதனது வளர்ச்சியை பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.அதுவரை உங்களை கவர்ந்த ஈரானிய திரைப்படங்கள் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.சற்று உதவியாக இருக்கும்.பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்.
புதிதாக சினிமா டைரி, page ஒன்று உருவாக்கிருக்கிறேன் நண்பர்களே..பார்க்கும் படங்களின் சிறிய தொகுப்பாக இருக்கும் என நம்புகிறேன்..புதிதாக துப்பாக்கி போன்ற படங்கள் பற்றி எல்லாம் எழுதி இருக்கேன்..படிச்சிட்டு முடிந்தால் உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்..நன்றி.

Monday, 26 November 2012

என் குரல்..நாய் குரல்..லொல் லொல்..

இது ஐம்பதாவது பதிவுங்கோ.பிளாகிங் ஆரம்பிச்சு ஒரு வருடம் தாண்டிருச்சி..மலேசியாவுல இருக்கிற இந்த பையனுக்கு கூட தொடர்ந்து ஆதரவுகள் வழங்கி வரும் நண்பர்கள், அண்ணன்மார்கள் எல்லோருக்கும் என் மனம் கூறும் பல நன்றிகள்..எல்லோரும் சண்டை இடாம பிச்சுப்பிச்சு பகிர்ந்துக்கோங்கோ..
=====  ====== ====== ===== ======= ====== ===== ====== =======
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு சீன குடும்பம்.கணவன் மனைவி அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் என நீண்ட காலமாக அமைதியாக வசித்து வருகின்றனர். பார்த்தால் புன்னகை, பேசினால் ஹெலோ..எங்களுக்குள் இருக்கும் பிஸியான சூழலில் இதுதான் உறவு.


அவர்கள் கடந்த சில மாதங்களாகவே நாய்களை வளர்த்து வருகிறார்கள் என்று சொல்வதை விட அடித்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.எத்துவதும், வார்ப்பட்டையில் அடிப்பதும் என இவர்களது மூடு சரியில்லை என்றால் நாய்தான் பலியாடு என்று நினைக்கிறேன்.சோறு வைக்கிறார்களோ இல்லையோ நாய்க்கு சோகத்தை மட்டும் அளிக்கிறார்கள்.

இவர்கள் அடிக்க அந்த நாய் கொடுக்கும் அலறல் இருக்கிறதே..கேட்கவே பாவமாக இருக்கும்.சில நேரங்களில் நான், என் அக்கா என கோபப்படுவோம்.இரக்கத்தில் ஏதாவது கத்தி விடலாம் என்று பார்த்தால் இருக்கிற உறவும் பகையாகிவிடுமோ என்று தோன்றுகிறது, இதற்கு இடையில் இன்னும் ஒரு குட்டி நாய்..புதிதாக..என்ன கதியாக போகிறதோ...என்ற நிலையில்..இப்பவே ஒரு செருப்பை கழுத்தில் தொங்கவிட்டுவிட்டார்கள்.


அது எப்ப கலண்டு விழுமோ என்ற நினைப்பில் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருக்கிறது..குடும்பத்தலைவர்-தான் நாயை பெண்டு கலட்டுறாருனா அவரோட குடிடீஸும் சில நேரங்களில் இதையேதான் ஃபோல்லோ பண்றாய்ங்க..நல்ல ஃபேமிலி போங்க.

ஒரு நாயை மனிதன் அடிக்கையில், சிறிது தூரத்தில் நாய் குட்டியின் மன நிழலில் :

ஒருவேளை என் குரல் உனக்கு கேளின்.......
மனிதரே,
நாங்கள் உங்களுடன் பழக, உயர்ந்தோர் ஆக முயற்ச்சிக்கிறோம் - நீங்கள்
மனித தோல் உருவில் எங்களாக துணிகிறீர்கள்...

இறைவா,
உன் படைப்பை நிறுத்து,
இவர்கள் பார்வைகளை திருத்து
மனிதர் பாவங்களை போக்கு..

இனி,
உருவங்கள் வேறுப்பட்டாலும் பரவாயில்லை,
உணர்வுகளையாவது ஒருமைப்படுத்து,
எதிர்வரும் சமுதாயம் சமத்துவமாகட்டும்..

பரிதாபக்குரலில், நாய் குட்டி

========================================================================
மேலே இருப்பது ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுன பதிவுங்க..ஆனால் நாய் நிலைமை மட்டும் முழுமையா மாறுல.உங்க கமெண்ட்ஸை வாரி வழங்குங்க..யாரையாவது எட்டி உதைக்குனமுனு தோனுனா கொஞ்சம் எச்சரிக்கை - முன்னால இருப்பது உங்க ஸ்கிரீன் என்பதை மறவாதிங்க.மீண்டும் அடுத்த பதிவோடு சந்திக்கலாம்.அதுவரை..

உங்கள் ஆதரோவோடு,

Monday, 19 November 2012

சினிமா டைரி 1 : உறவும் ஜந்துக்களும்

Far From Home: The Adventures Of Yellow Dog (1995)
@ A Film By Phillip Borsos
@ Stars : Jesse Bradford , Mimi Rogers And Bruce Davison

ஒரு விடுமுறை அன்று, தூக்கம் வராமல் காலையில் தவித்த தருணத்தில் ஸ்டார் மூவிஸ் அலைவரிசை இந்த படத்தை அறிமுகபடுத்தியது.அதற்கு முன் படத்தை நான் அறிந்ததுக்கூட இல்லை..தலைப்பை பார்த்த போதே இது ஒரு அட்வெண்ட்ச்சர் படமாக இருக்கும் என்று எனக்குள்ளேயே யூகித்துக்கொண்டேன்.காலையிலேயே இந்த மாதிரி படங்கள் என்றாலே மனதுக்கு அமைதியை தரக்கூடியதாக இருக்கும் என்பது எனது கணிப்பு (ஆமா..இவரு பெரிய நோஸ்ட்ரடாமஸ்..) வீண்போகவில்லை..ஒரு அருமையான படமிது..

இத்திரைப்படத்தை பலரும் அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை.அவ்வளவு எளிமையாக காலை பொழுதை அழகுப்படுத்திய நல்ல படைப்பு.ஒரு நாய்க்கும் சிறுவனுக்கும் உள்ள நட்புதான் கதை..கதை நாயகனான அங்குஸ், தன் அப்பாவுடன் கடல் வழி பயணம் மேற்க்கொள்கிறான்..அவனோடு புதிதாக கிடைத்த நாய்..திடீரென்று சில கோளாருகளால் கப்பல் தடுமாற அங்குஸும் யெல்லோ என்ற நாயும் தனிப்பகுதியில் விடப்படுகின்றனர்.அது யாருமற்ற இடம்.அங்கு ஒருவருக்கொருவர் எப்படி உதவியாக இருந்தனர் ? அந்த நாய் அங்கூஸுக்கு எப்படி எல்லாம் துணையாக இருந்தது ? இறுதியில் இருவரும் மீட்கப்பட்டனரா என்பதே கதைச்சுருக்கம்.

பல ஹாலிவுட் படங்களில் பார்த்த கதைதான் எனினும் இந்த படம் ஏதோ மனதில் செய்கிறது..வெறும் ஒன்றரை மணி நேரமே ஓடும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் Jesse Bradford, Mimi Rogers and Bruce Davison ஆகியோர் நடித்திருக்கின்றனர்.ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கனடா நாட்டு இயக்குனரான Phillip Borsos (1953-1995) என்பவர் எடுத்த ஃபேமிலி படமிது.விமர்சக, ரசிகர்கள் மத்தியில் நடுத்தரமான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

அழகான ஒளிப்பதிவு, நடிப்பு என்று அனைத்துமே சிறப்பாக இருக்கும்.கண்டிப்பாக குடும்பத்துடன் சேர்ந்து அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படமாகும்.குழந்தைகளை நிச்சயம் கவரும்.
==============================================================================
இப்படி ஒரு தொடரை தொடங்க வேண்டும் என்பது எனது நீண்டக்கால ஆசை.நாம் எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருப்போம். அதில் எண்ணிலடங்கா படங்கள் நமக்கு பிடித்திருக்கும்.அதில் ஒரு சிலதே விமர்சனமாக போடா முடிகிறது.. மீதமுள்ளவை சிறு தொகுப்புகளாக, ஒரு நினைவு மீட்டலே இத்தொடர்.
==============================================================================
Gremlins (1984) - United States
@ A Film By Joe Dante
@ Stars : Zach Galligan, Phoebe Cates and Hoyt Axton

பொதுவாகவே எனக்கு, இந்த காமெடி வகையில் ஹாரர் ரசனைகளை ஆங்காங்கே தெளிக்கவிட்டு வரும் படங்கள் என்றாலே அவ்வளவாக ஆகாது.ஹாரர் என்றாலே சீரியஸ்.. அதுல என்ன காமெடி என்று கேட்கும் பயப்புள்ள நான்.ஸ்டீவன் ஸ்பீர்பெர்க் என்னை கவர்ந்த இயக்குனர்.அவரது தயாரிப்பு என்ற ஒரே காரணமே இந்த கிரேம்லின்ஸ் படத்தை பார்க்க ஏதோ என் மனம் ஒத்துப்போச்சி.அதுவும் படத்தை நான் டவுன்லோடு போடவில்லை.. சினிமெஃக்ஸ் அலைவரிசையில் பார்த்தது,

1984-ஆம் ஆண்டு ஜோய் டாந்தே அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் Zach Galligan, Phoebe Cates, Hoyt Axton போன்றவர்கள் நடித்திருக்கின்றனர்.ராண்டல் என்ற பையனால் கொண்டுவரப்படும் வினோதமான மொக்வாய் என்னும் சின்ன அழகான உயிரினத்தின் வளர்ச்சியால் ஊரெங்கும் ஏற்படும் பிரச்சனைகளே படம்..

வழக்கம் போல ஸ்பீல்பெர்க் படம்.ஆதலால், சின்ன வயசு பிள்ளைகளே படம் முழுவதையும் ஆட்சி செய்கின்றனர்.கூடவே சிரிப்பு போலிஸ் போல இந்த மோக்வாய் ஜந்து செய்யும் லீலைகள் இருக்கிறதே, இதுவெல்லாம் ஹாரர் லிஸ்டுல சேர்த்த புண்ணியவான் யாருடா என இருந்தது.
சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், வழக்கமான ஹாலிவுட் அம்சங்களும் நிறைந்த பொழுது போக்கு படம் என்று சொல்லலாம்.வாய்ப்பு கிட்டினால், கண்டிப்பாக சிறுவர்கள் பெரியவர்கள் என்ற பேதமே இல்லாமல் கண்டு ரசிக்கலாம்.

உங்க ஆதரவோடு 

Tuesday, 13 November 2012

தீபாவளிங்கோ..வாங்கோ..கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் தீபாவளியால் பிஸி ஆகிவிட்டமையால் சரிவர பிளாகிங்கு வர முடியவில்லை நண்பர்களே...அதனால் பலருக்கும் நேரடியாக தீபாவளி வாழ்த்துக்களை சொல்ல பாக்கியம் கிட்டவில்லை..
இந்த பதிவின் மூலம்..

உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு இந்த சின்ன கொசுப்பையனது தீபாவளி வாழ்த்துக்கள்..அனைவரும் எல்லா நலங்களும் பெற்று வாழ்ந்திட இறைவனை வேண்டுவோம்..எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அருள்வாராக..

இன்னும் இரண்டு நாட்களில் புதிய பதிவுடன் வருகிறேன்.அதுவரை வணக்கம் மற்றும் நன்றி நண்பர்களே.
ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் ஹரி ஓம் நமோ நாராயணாய


Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge