Follow by Email

Wednesday, 25 April 2012

Cast Away (2000) - உயிர் வாழ்வதற்கான போராட்டம்..


பள்ளி நாட்களில் ரோபின்சன் குருசோ என்ற நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. Daniel Defoe என்ற எழுத்தாளரால் 1719 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவல், தலைப்பு கதாபாத்திரமான ரோபின்சன் குரூசோவின் 28 ஆண்டுக்காலம் தனித்தீவில் தனியாளாக வாழ்ந்ததை விளக்குகிறது..இந்த புதினம் பள்ளி ஆங்கில பாடத்திட்டத்தில் ஒரு பகுது.ஆதலால், தேர்வுகளில் கேள்விகள் கட்டாயம் நிச்சயம்.அதன் காரணமாகவே நாவலை சில முறைகள் வாசிக்க மிகவும் கவர்ந்த ஒன்றாகவும் ஆனது..ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும், ரோபின்சன் எப்படி இருப்பான், அந்த காட்சிகள் எப்படி இருக்கும் என்று பல முறை என் மனக்கற்பனையில் கதையோடு ஒட்டிபோன அனுபவம் உண்டு.

சில மாதங்களுக்கு பிறகு ஒரு நண்பருடனான உரையாடலில், இந்த படத்தை பற்றி பேச நேர்ந்தது.ரொம்ப நாட்கள் முன்னம் ஒரு படம் பார்த்திருந்ததாகவும், பெயர் ஞாபகமில்லை என்று கூறி சில காட்சிகளையும் ரோபின்சன் குரூசோ நாவலுடன் ஒப்பிட்டிருந்தார்அப்பொழுதே படம் என்றாவது பார்க்க வேண்டும் போல இருந்தது.. இணையத்தில் தேடி கண்டுப்பிடித்தேன்.டவுன்லோடு போட்டு சமீபத்தில் பார்க்கலானேன்.   
@@=================================================@@@============================================@@


நான்கு பாதை வழிகள் தனியாக பிரிய, தூரத்திலிருந்து ஒரு வண்டி போக கிரடிட் கார்டு போடும் போதே இது வித்தியாசமான படம் என்று மனம் ஊகித்தது.

FedEx நிர்வாகியான சக் நோலன், சில வேலை காரணமாக மலேசியாவுக்கு (எங்க நாடுல) பேக்கேஜஸ்களை அனுப்ப வேண்டி வருகிறது..கிறிஸ்துமஸ் வரவிருக்கும் அந்த சமயத்தில் நீண்ட நாள் காதலியான கெல்லி ஃப்ரியர்ஸ் உடனனான உரையாடலுக்கு பிறகு விமானம் ஏறுகிறார்.சில நேரங்கள் அசந்து தூங்கிப்போகிறார்.எழுந்தவர் பலத்த புயலால் சிக்கலில் இருப்பதை அறிந்துக்கொள்கிறார்.பிறகு என்ன விபத்துதான்.ஒரு வழியாக லைஃப்போட் உதவியுடன் மயக்க நிலையில் கரை வந்து சேர்கிறார்.
எழுந்து பார்க்கவே, சுற்றியும் கடல்...மலைகள், மரங்கள் என எல்லாமே இயற்கை தாயின் அணிவகுப்புகள்.சில தூரங்கள் நடக்கிறார்."ஹேலோ..ஹேலோ" என்றப்படியே கூச்சல் போடுகிறார்.யாரும் வந்தப்பாடில்லை.சுற்றிலும் உயிர்கள் வாழ்வதற்க்கான தடயங்களும் இல்லை..பக்கத்தில் கரை ஒதுங்கியிருக்கும் பேக்கஜ்களை எடுத்து வைத்துக்கொள்கிறார்..ஒரு வழியாக அந்த தீவில் உயிர் என்று சொல்லிக்க தன்னை தவிர யாரும் இல்லை என்ற முடிவுக்கு வர அவரது வாழ்க்கை படகு அங்கேயே பயணிக்கிறது..

இதுவரை பார்த்தது டிரைலர், இதுக்கு மேலதான் மேயின் பிச்சர் என்று தலைவர் சொன்ன மாதிரி இங்கு தொடங்கும் காட்சிகள்தான் படத்தின் உயிர் நாடிகள்..சக் நோலன் தப்பித்தாரா ?? என்ன செய்வார் ? எப்படி வாழ்வார் ? போன்ற நிறைய ஞாயமான கேள்விகளுக்கு காலம் போன போக்கிலேயே பதில் சொல்கிறது திரைப்படம்

கடந்த இருபது ஆண்டுக்கால அமெரிக்க சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக Robert Zemeckis அவர்களை கூறலாம்.மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை ஃபோரெஸ்ட் காம்ப் என்ற திரைப்படைப்பாக வழங்கி ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றவர்.வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரங்கள் என்று ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக காட்டிட நினைப்பவர்.இவரது திரை இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு ஆண்டு இரண்டு முறைகள் ஆஸ்கர் வென்ற கவனிக்கத்தக்க நடிப்புலக கலைஞர்களில் ஒருவரான டோம் ஹேங்க்ஸ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படமே Cast Away

 எனக்கு நடிப்பளவில் எந்த அனுபவமோ, திறமையோ என்றுமே இருப்பதாக உணர்ந்ததில்லை.அதை பற்றி எதுவும் தெரியாது என்பதே சத்தியமான உண்மை.ஆனால், நிறைய படங்களை பார்த்திருக்கிறேன். தமிழ் தொடங்கி பிற மொழிகள் என்று பார்ததவரையில் பிடிக்காத நடிகர்கள் என்று எவரும் இருந்ததும் இல்லை.என்னை பொறுத்தவரை நடிகர் என்பவர், "இனம், மொழி, பணம், ஏழை என்பதை தாண்டி அனைத்து தரப்பினரையும் கவர வேண்டும்.எல்லாருடைய ரசனைக்கும் நடிப்பளவில் ஒத்து வர வேண்டும்""..இது தனிப்பட்ட கருத்து.

 அந்த வரிசையில் டோம் ஹேங்க்ஸ் - இவரது நடிப்பு மிகவும் இயல்பானதுகதாபாத்திரங்களை தன்னுடையதாக்கி விருதுகளை தட்டிச்செல்பவர்களில் கெட்டிக்காரர்.இந்த படத்திலும் அதற்கு பஞ்சமே இல்லாதப்படி, கப்பல் கவுந்து, மனிதர் நடமாட்டமே அற்ற ஒரு தீவில் தன்னுடைய உயிரினை காப்பாற்றிக்கொள்ள துடிப்பவனாக சக் நோலன் என்ற கதாபாத்திரத்துக்கு உயிரை தந்திருப்பார்.உடலையும் தந்திருக்கிறார்.முதல் முப்பது நிமிடங்கள், பிற்ப்பாதி என்று ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.தன்னையே அர்ப்பணித்து நடித்திருப்பார்.நான்கு நாட்களுக்கு யாருமே துணையில்லாது இருந்தாலே பைத்தியம் பிடித்தது போல ஆகிவிடும் நம்மில் பலருக்கு.இது நான்கு வருடங்கள்.பேச்சு துணைக்கு கூட யாருமில்லாது ஒரு வெறிப்பிடித்தவனைப் போல வாழ்ந்திருப்பார்..ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட போதும் கிளேடியேடர் Russell Crowe - விடம் இழந்தது ஒரு பெரிய இழப்புதான்..ஒவ்வொரு திரை ரசிகரும் தவறவிடக்கூடாத நடிப்பு விருந்து..

@@=================================================@@@============================================@@
நியூஸ் ரீல் : இப்படத்தில் டோம் ஹேங்க்ஸை கதாபாத்திரத்தை மத்தியதர வயதினராக திரையில் காட்டிட வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி எதுவும் செய்யாது எடை ஏற வைத்துள்ளார்களாம்..அதோடுபாதி சீன்கள் எடுத்த நிலையில் படப்பிடிப்பை ஒரு வருடம் தள்ளிவைத்துவிட்டார்களாம்..இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில்டோம் ஹேங்க்ஸ் ஏறக்குறைய ஐம்பது பவுண்ட் எடையை குறைத்ததோடு முடியையும் தாரு மாறாக வளர்த்துவிடச் செய்தார்களாம்..படம் பார்க்கும் போது அது தெரியும்..எடை இருந்தாலும் எலும்பும் தோலும் ஆனாலும் நடிப்பில் கலக்குறாரு டோம் ஹேங்க்ஸ்
@@=================================================@@@============================================@@

தொடக்க காட்சிகளில் மெல்லமாகவும், விமான விபத்த்தில் பிரமாண்டத்தையும், யாருமே இல்லாது தீவில் ஒற்றை மனிதன் அவனது செயல்கள் என இயற்கை அழகோடு ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து படமாக்கிய ஒளிப்பதிவாளர் Don Burgess - க்கு நன்றி சொல்ல வேண்டும்.பொதுவாக இயக்குனரான ஸெமெக்கிஸ் எடுக்கும் படங்களில் வித்தியாசமான ஒளிப்பதிவு இடம் பெற்றிருக்கும்.ரொம்ப கவனத்தில் கொண்டு தேவையானவற்றை நேர்த்தியாக பயன்படுத்துவார்.அதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.ரசித்த ஷாட்டுகள்/காட்சிகள் அதிகம்..ஃபிஜி தீவில் ரொம்ப அழகாக படமாக்கப்பட்டிருக்கும்.வேண்டும் என்றே தங்க எவராவது வந்தாலே ஒரே நாளில் பெட்டிக்கட்டிவிடும்படியான தீவது...அங்கு ஒரு மனிதன்..அவனை சுற்றி இயற்கை வளங்கள்..தீவை சுற்றி அதனது வெளித்தோற்றத்தை தனியேகேமரா வட்டமிடாமல்ஹேங்க்ஸை சுற்றியே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.அதுவும் குறிப்பாகசக் நோலன் கதாபாத்திரம் மலையில் ஏறி..அதன் உயரே நிற்க்கும் போது..பிரமிப்பு ஏற்படுகிறது.கேமரா கோணகளுக்காகவே இரண்டு முறை பார்க்கலாம்.

படத்துக்கு மிக பெரிய பலங்களாக Arthur Schmidt - யின் எடிட்டிங்க் மற்றும் Alan Silvestri - யின் இசையை சொல்லலாம்..அவ்வளவு அழகாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்


"படத்தில் இவருக்கு துணையே இல்லப்போலயே" என்று நினைக்கும் போது ஒன்று வருகிறது..மூச்சு இல்லாத பேச்சு அற்ற வில்சன் என்ற உயிர்..அந்த உயிரை நோலன் பார்த்துக்கொள்வது இருக்கிறதே, அந்த உறவை உயிரோட்டமாக காட்டிருப்பர்..அந்த உயிரை பிரிகையில் சக் நோலண்டுடன் சேர்த்து நம் மனமும் கலங்குகிறது..தனியாக அமைதியாக நீங்கள் இப்படத்தை பார்த்தால் அது தனி அனுபவம்..அவன் சிரித்தால் சிரிக்க, அழுதால் அழுக என்று நீங்களும் சக் நோலனாகவே மாறிட வாய்ப்புகள் உண்டு..தனிமையின் தவிப்பை நீங்களும் உணர்வீர்கள்./// அந்த உயிர் என்ன, யாது என்பதை படம் பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்..இப்பவே நன்றி உங்களுக்கு.///

இறுதி காட்சியில்நாலு பக்கமாக சாலைகள் பிரிய அதன் நடுவே சக் நோலனை நிற்கவைத்து, வாழ்க்கை பற்றிய தத்துவத்தை அவரவர் பார்வையில் விடும்போது இயக்குனருக்கு கைதட்டல்கள் கொடுக்க வேண்டும்.இப்படி பல காட்சிகளை அடுக்கடுக்காக சொல்லலாம்..ஆனால், அனைத்துமே சுவாரஸ்யத்தை கெடுப்பவையாக போய்விடும் என்ற நம்பிக்கையில் இங்கு சொல்லாது விடைப்பெறுகிறேன்..

ஒரு சிறந்த படைப்பென்பது என்னை பொருத்தவரை மனதை கவர்வதை தாண்டி, ஒருவரது நெஞ்சை துளைக்க வேண்டும்..அது ஆர்ட்ஹௌஸ் தொடங்கி ஆக்சன் படங்களாகவும் இருக்கலாம்..அவைகள் நாட்கள், மாதங்கள் கடந்து நிலைத்திருக்க வேண்டும்.அதுதான் என்னை பொருத்தவரை உண்மையான சினிமா.அந்த வகையில் காஸ்ட் எவே திரைப்படம், என் இச்சிறிய திரைப்பட பாதையில் ஓர் அனுபவம்.எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது.

IMDB : 7.5 / 10
MY RATING : 7.7 / 10
Cast Away : Definitely Worth Watching..

 ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Tuesday, 10 April 2012

என் மன நினைவில்..ஓரு மரணம்..

எத்தனையோ கல்யாணங்களுக்கு நாம் செல்வோம்.ஆனால், ஒரு சிலதே நம் நினைவில் இடம் பெற்றிருக்கும்.அந்த வரிசையில் அந்த திருமணமும் ஒன்று.காரணம், நான் மாப்பிளை தோழன்.சும்மா இருந்த என்னை அழைத்து சென்று மாப்பிளை தோழனாக மாற்றியதில் பெரிய ஆச்சரியம் எனக்கு.அது ஒன்றும் எனக்கு புதிதல்ல.ஏற்கனவே என் உறவுக்காற அக்காவின் திருமணத்தில் மாப்பிளை தோழனாக இருந்த அனுபவம் உண்டு.நல்லதுதான் இருந்தாலும் உடம்பு பதபதவென்றது.

அப்போது எனக்கு ஒரு 17 வயது இருக்கும், ஜனவரி மாதம்..என் பாட்டியின் தம்பி மகனான கோபி அவர்களது திருமணம்.நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடி கணவன் மனைவியாக உருவான நாள் அது.ரொம்பவும் சிறப்பாக ஏற்ப்பாடு செய்ய சுபமாக நடந்து முடிந்தது.

அது நடந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மார்ச் மாதம் 15 திகதி மாலை 5.00 மணிவாக்கில் மனதை உறையவைத்த அந்த செய்தி காதினை எட்டியது.வேலை மாற்றமாக வேறொரு ஊரில் குடும்பத்தோடு வசித்து வந்த கோபி அவர்கள் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்பதே அச்செய்தி.எங்களுக்கு மனம் கணமானது.பாட்டியின் அழுக்குரல் மனதை மேலும் ரணமாக்கியது, காலம் சென்ற கோபி அவர்களுடன் நான் பழகியது, பேசியதும் குறைவு.அதிக வயது வித்தியாசமே அதற்கு முக்கிய காரணம்.என் தாத்தா, அம்மா, மாமா என அனைவரும் "அதான் கோபி..டா நீக்கூட அவர் கல்யாணத்துல மாப்பிளை தோழனா இருந்தியே..இறந்துட்டாரு" என்று சொன்ன பொழுது நெஞ்சம் உடைந்தது.

வேறெதுவும் பேசாது,,சில மணி நேரங்களில் தெலுக் இந்தானுக்கு அவர் உடல் வைக்கப்பட்டிருக்கும் வீட்டை அடைந்தோம்.சுற்றியும் மரம், பச்சை பச்சையென செடிகள் என இயற்கையை சுற்றி அவர் உடல் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தது.பிரேதம் உள்ள இடத்தை நெருங்கும் போது ஒரே அழுகை அலறல்கள் இன்னும் ஒரு முறை நெஞ்சை பிளந்தது.ஒரு பக்கம் தாத்தா இன்னொரு பக்கம் மாமா என என் கைகள் நாடின.வயதுதான் 19 தொட்டுவிட்டது எனினும் என் கால்கள் மரணங்கள் நிகழ்ந்த வீட்டுகளுக்குள் அதிகம் சென்றதில்லை.

உள்ளே சென்றது, என் தாய், பாட்டி அவரது தங்கையின் ஒப்பாரி காதை கிழித்தது.சின்ன வயதில் கோபி அவர்களை தூக்கி வளர்த்த அவர்களது நினைவுகள் சொல்லாமலேயே மனம் உணர்ந்தது.அவரது உடலை பார்த்தவுடன் அங்கிருந்த எல்லோரது கண்களும் கலங்கியது.பக்கத்தில் அவரது புகைப்படம்..அதில் சிவப்பான அவர் முகம்..அவரது கல்யாண நாளில் நான் இருந்த நினைவுகளை கிளப்பியது.  

அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது, சில உண்மைகள் கிடைத்தது.காலையில் மருத்துவமணைக்கு சென்று வீடு திரும்பு நேரம், எதிரே சென்றுக்கொண்டிருந்த வாகனம் மெதுவாக செல்லவே, இவர் வந்துக்கொண்டிருந்த கார் வேகத்தை கூட்டி வெட்ட முயற்சிக்கும் (Over Take) பொழுது எதிரே வேகத்தில் வந்த பெரிய லாரியில் கார் சிக்கி மேலே ஏறியதாக தெரியவந்தது.சம்பவ இடத்திலேயே தேகம் சேதமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.பரிதாபபட்டேன்.,,அவருக்கு ஆறுமாதமே ஆன பெண் குழந்தை உண்டு என்பதை அறிய.

இறுதி காரியங்களில், தாய், தந்தை, மனைவி, அக்கா, உறவினர்கள் என அனைவரது அழுகையும் உடலை ஈரமாக்கியது.கண்ணீரில் குளித்த அவரது மனைவி மற்றும் தாயின் ஓசைகள் இன்னமும் கேட்கிறது.ஏன் கோபி அவர்கள் வேகமாக செல்ல வேண்டும் ? ஏன் அந்த ஆண்டவனும் அதை விட வேண்டும் ?? வெறும் 29 வயதில் மரணம் என்பது விதியா ??? மதியா ???? என பல கேள்விகள் அப்பொழுது எழுந்தன.மாலை 3.30 வாக்கில் இந்து மயாணத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தையே தான் பெற்ற பையனுக்கு கொள்ளி வைக்கும் போது அச்சிறு இதயம் என்ன தவிதவித்திருக்கும்..ஒரு தாய் தந்தையாக தனது வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடூரமே தன் பிள்ளைகளின் மரணம்தான். "ஆண்டவா அதை யாருக்கும் கொடுக்காது இனி தடுப்பாயா ????."

உடல் எரிய, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொண்டேன்.அதை மட்டும்தான் என்னால் செய்ய முடியும்.எல்லா காரியங்களும் முடிந்து வீடு அடைந்து கால் நனைக்கும் போது சிறிது தூரத்தில் "எரிச்சிட்டீங்களா..அந்த பையனை எரிச்சீட்டீங்களா ??" என்ற பாட்டியின் குரல் ஒன்று கேட்ட போது...


ஏன் இந்த மரணம் இறைவா ??
காலம் உன் கையில் என்ற திமிரில்
கால தேவனை இஷ்டத்துக்கு தூதுவிடுகிறாயா ??
அல்லது...
எங்களை தூசியாக மதிக்கிறாயா ?

இறப்பு...
அது உன்னால் எழுதிவைக்கப்பட்ட
உயிர் சாசனம் என யான் அறிவேன்..
அது வாழ்ந்து முடிந்த பெரியோரை எடுக்காது
வளர துடிக்கும் பயிரையும் அறுக்குமோ யான் அறியேன்..??

வெள்ளை ரத்தம் உன்னதானால் - ஏன்
சிவப்பு அணுக்களை எடுக்க நினைக்கிறாய்..
சிவந்த மண்ணில் ஏன் எங்களை புதைக்க துணிகிறாய்..

ஒத்துக்கொள்கிறேன்...
நாங்கள் எல்லாம் உன்னால்
ஆட்டிவைக்கும் பொம்மையென்று - முடிந்தவரை
அறுப்படாமல் இருக்க நூலுக்கு பலம் கொடு என்றே வேண்டுகிறேன்.
இறுக்க பிடித்துக்கொள் என்றில்லை..

அடுத்தொரு முறையாவது..
சோகங்கள் அற்ற, வேதனைகள் அற்ற,
கண்ணீர் அற்ற உலகை கொடு - இல்லை
சடங்குகள் என்ற பேரில் அழுக்குரல், கண்ணீர் வராத
னிதர்களையாவது படைத்திட முயற்சி செய்.
துயரம் தாங்கவில்லை.. 

குறிப்பு : நான் கவிதை என்ற பெயரில் எதையோ எழுதுகிறேன் என தெரிகிறது.ஆனால், யாரையும், எந்த மதம், சடங்குகளையும் கடவுளையும் மனதார நான் ஏசவில்லை.காரணம், நானும் கடவுளது பக்தன்..மரணத்தையும் அதன் அழுக்குரல்களையும் பார்த்த பின் ஏற்ப்பட்ட ஏதோ விதமான விரக்த்தியில் இவற்றை எழுதினேனே தவிர வேறெதுவும் இல்லை.லேட் ஆகுது குளித்துவிட்டு சாமி கும்பிடனும்.குட் பை

=========================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு

Monday, 2 April 2012

திகில் சினிமா : 1408 (2007), The Mist (2007) மற்றும் ஹாரர் கிங்க்ஸ்

=======================================================================
சில பிசியான சூழல்கள், மனக்கோளாறுகள், உறவுக்கார அண்ணனின் திடீர் மரணம் (அத பற்றிய ஒரு பதிவு விரைவில்), ஆதலால் இணையப்பக்கமே வர முடியவில்லை.அதனால், பல வலை நண்பர்களின் பதிவுகளை வாசித்து, பின்னூட்டம் தர இயலாமல் போய்விட்டது.எல்லாவற்றுக்கும் சேர்த்து மன்னிப்பை வேண்டி, இன்றைய பார்வையாக...
========================================================================
    
சமீப காலத்தில் ஹாரர் படங்கள் பார்ப்பது மிகவும் குறைந்துவிட்டது.. கிடைத்த பேய் திகில் படங்களை பார்த்தது போக, இப்பொழுது எல்லாம் தேடி தேடி பார்க்க வேண்டியதாகிவிட்டது.அதுவும் பிளாக் தொடங்கியதிலிருந்து கண்ட படங்களை எழுதாமல் ரசித்ததை மட்டுமே அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்/எண்ணமே மனதோரம் பந்தாடுகின்றன.

அந்த ஒரு காரணமே திகில், மர்மம் போலான திரை சரக்குகளை அறிமுகம் செய்வதை குறைத்துவிட்டது.இன்றைய பார்வையில் பார்க்க இருப்பவை, நெடு நாட்களுக்கு முன்னாடி, என் ஹாரர் தாகத்தை தீர்த்து வைத்த நாட்டு மருந்துகள்.வாருங்கள் நானும் தங்களோடு என்னுடைய கடுப்பெடுத்த எழுத்துக்களுக்கு வாசகனாகிறேன். 
@@@=====================@@================================@@@

@ The Mist (2007)
@ A Film By Frank Darabont
@ Starring : Thomas Jane, Marcia Gay Harden 

   ஃப்ராங்க் டாராபோண்ட் தற்கால அமெரிக்க சினிமாவில் நன்கு பரிட்ச்சயமானவர்.தெ சாவ்ஷங்க் ரெடெம்ப்ஷன், தெ கிரீன் மைல் போன்ற சிறந்த படைப்புகளின் மூலம் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரது மத்தியில் நல்ல அங்கிகாரத்தை பெற்றவர்.குறைவாக எடுப்பினும் நிறைவான தரமான படங்களை கொடுக்க நினைப்பவர்.இவரது திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சைன்ஸ் ஃபிக்சன் ஹாரர் படம்தான் தெ மிஸ்ட்..Thomas Jane, Marcia Gay Harden and Laurie Holden ஆகியோரின் நடிப்பில் ஸ்டீபன் கிங்கின் ஒரே தலைப்பிலான நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமிது.

    "மிஸ்த்" என்ற ஆங்கில சொல்லை தமிழில் "பனி மூட்டம்" அல்லது "மூடுபனி" என்று மொழி பெயர்க்கலாம்..தலைப்புக்கு ஏற்றாட் போல் படம் முழுவதும் பனியே சூழ்ந்து, எங்கு எது வந்து யாரை கவ்விக்கொண்டு போக போகிறதோ என்ற பயத்தை திரையில் தந்திருக்கிறார்கள்.அதுவே கதையோட்டத்திற்கும் பெரியளவில் துணைப் புரிகிறது (உடனே கதை என்ன என்பதை? கேட்க்காதீர்கள்..நம்பிக்கையோடு சென்று பாருங்கள்...கண்டிப்பாகப் பிடிக்கும்).


தொடங்கிய முதல் சில காட்சிகளிலேயே நம்மை நிமிர்ந்து உட்க்கார வைக்கிறது திரைக்கதை..டேவிட் ட்ரேயிடன் மற்றும் அவரது மகனான பில்லி, பொருட்கள் சில வாங்க செல்லும் சூப்பர் மார்க்கேட், அதனை சுற்றி திடீரென வரும் பனி மூட்டம் அதனுள் ஆபத்துகள் இதுதான் கதைக்களம்.சுமார் இரண்டு மணி நேரங்கள் ஓடும் திரையில், பெரும்பாலானவை சூப்பர் மார்க்கெட்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும்.. ஹாரர் என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது இருள்தான்..அந்த இருளை எடுத்துவிட்டு வெளிச்சத்தில் ரொம்ப திகிலாக பார்வையாளர்களை மிரட்டும் விதத்தில் காட்சிகளை படமாக்கிருப்பர்.இத்தனைக்கும் இதில் பேய், பிசாசு, சாத்தான், டிராகுலா, சோம்பிஸ் என்று எதுவுமே இல்லை..இது வேற..வேறங்க... பல காலமாக சினிமாவில் பார்த்ததுதான் என்றாலும் இதில் ஒரு சுவாரஸ்யம், சுவை இருக்கும்.

உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் கவனத்தையும் பெரும்பாலான விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருப்பது குறிப்பிடதக்கதாகும். நிச்சயமாக ஸ்டீபன் கிங்கின் கதைகளை தழுவி வந்த மிகச் சிறந்த திரைப்படங்களில் டாராபோண்ட் இயக்கிய திரைப்படங்களுக்கு ஒரு மிகச் சிறந்த இடம் உண்டு..கிரீன் மைல், சாவ்ஷாங்க் ரெடெம்ப்ஷன் ஆகிய படங்களோடு தெ மிஸ்டை சேர்க்க முடியாவிட்டாலும், கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட நல்ல ஹாரர்களில் ஒன்றாக கூறலாம்.

சாமர்த்தியமான திரைக்கதை, சலிப்புத்தட்டாத கதைச்சொல்லல் என எடுக்கப்பட்ட விதத்துக்காகவே இரு முறை தாராளமாக படத்தை காணலாம்..கிளைமக்ஸ் காட்சிகள் சான்ஸே இல்லை..நீண்ட நேரம் மனதில் பதிந்த வெல் மேட் ஸீக்குவன்ஸ்.

IMDB : 7.3 / 10
MY RATING : 7.5 /10
The Mist (2007) : One Of The Best Horror Picture Of Last Decade.
==========================================================================================
ஸ்டீபன் கிங்க் : எழுத்துக்களின் கிங்கு

 அமெரிக்கா மட்டுமல்ல உலகமெங்கும் தன்னுடைய திறம்பட எழுத்துக்களால் நாடுமொழி என்பதை தாண்டி ரசிகர்களை கொள்ளை கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளர்.கேரி என்ற தனது முதல் புதினத்தை 1974 ஆம் ஆண்டு வெளியிட்டதை தொடர்ந்து ஹாரர்ஃபேந்தஸிமர்மம்டிராமா போன்ற பலத்தரப்பட்ட வகைகளில் இதுவரை 49 நாவல்களை எழுதிவிட்டார். இன்னும் கோடிக்கணக்கான வாசகர்கள் இவருக்கு மிக பெரிய ரசிகர்களாக உள்ளனர்.இன்று மக்களால் மிகுந்த அளவில் சிறப்பாக வரவேற்ப்படும் Carrie (1976), The Shining (1980), The Dead Zone (1983), Misery (1990), The Shawshank Redemption (1994), The Green Mile (1999) திரைப்படங்கள் யாவுமே இவரது சிறுக்கதை, புதினங்கள் என்று திரைவடிவம் பெற்ற எழுத்து ஜாலங்களே.

ஸ்டீபன் கிங்க் என்ற ஹாரர் உலக எழுத்தாளரின் கைவண்ணத்தில் மலர்ந்த கதைகளை தழுவி வந்த இரண்டு படங்களையே இன்றைய பார்வைகளாக..:பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
============================================================================================

@ 1408 (2007)
@ A Film By Mikael Håfström
@ Stars: John Cusack, Samuel L. Jackson 

நமது ஜோன் குசாக்க்கும், சாமுவேல் ஜேக்சனும் நடித்த படம்..இருவரையுமே எனக்கு பிடிக்கும்..Mikael Håfström இயக்கத்தில் திரைக்கதையை Matt Greenberg, Scott Alexander, Larry Karaszewski ஆகியோர் எழுத, 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாரர் படம் 1408.அமானுஸ்யங்களை ஆராய்ச்சி செய்து எழுதி வருபவர் மைக் என்ஸ்லின்.நீண்ட காலமாக யாரும் தங்காத பல மர்மங்கள் நிறைந்ததாக கூறப்படும் 1408 என்ற ஹோட்டல் அறையை கேள்விப்பட்டு தங்க வருகிறார்.அங்கு நடக்கு சம்பவங்களே திரைக்கதை..இறுதி காட்சிகள் சற்று குழப்பும்படி அமைந்திருந்தாலும் சுவாரஸ்யமான ஹாரர் படமாக 1408 சொல்லலாம்.


வழக்கம் போல ஜொன் குசாக் மற்றும் ஜேக்சன், தத்தம் கதாபாத்திரங்களுக்கு மெருகூட்டி சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் விமர்சக மற்றும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது குறிப்பிடதக்கதாகும்.ஹாரர் ரசிகர்கள் தவற விடாமல் பார்த்து ரசிக்கலாம்.

IMDB : 6.8 / 10
MY RATING : 6.1 / 10
1408 (2007) : Not Best..But Still Watchable

===================================================================================
ஒரு மட்டமானகுறிப்பு : இது ஒரு ஏற்கனவே எழுதினதுங்க (பழச தேடாதிங்கோ).நான் அப்ப எழுதி நானே படித்து பிடிக்காம போன ஒன்னு.அத சில மாற்றங்களுடன் கொடுக்க TRY பண்ணிருக்கேன். இப்பயும் நல்லாவே இல்ல.என் செய்வேன்.
பதிவுக்காக சில தகவல்களை வாசகர்களுக்கு திரட்டி கொடுக்க உதவிய கூகுளுக்கு நன்றிகள்.
=====================================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge