Follow by Email

Thursday, 26 July 2012

Don't Torture a Duckling (1972) - Italy : இதுலாமா ஹாரரு ?


"ஆங்கில ஹாரர் படமெல்லாம் பார்த்து கிழிச்சிட்ட மாதிரி இத்தாலிக்கு தாவுறியேடா"-னு ஓரளவு உளரிகிட்டேதான் படத்தை பார்க்க தொடங்கினேன். நெடு நாட்களுக்கு முன்பே லூசியோ ஃபுல்ச்சி டைரக்டரை கேள்விப்பட்டு "சரி ஒரு படம் போடுவோம்" என்ற நினைப்பில்தான் டவுன்லோடே போட்டேன்..பலரும் அறிந்திராத படம் வேறு.நல்ல படமுன்னு ஒரு ரெண்டு விமர்சனம் படித்த தைரியத்தில் மதியம் பார்க்க ஆரம்பித்தேன்."ஏண்டா பார்த்தோம்கிற" எண்ணத்தை தவிர மற்ற எல்லாமே வந்தது..1972-ல் எடுக்கப்பட்ட சீரியல் கில்லிங் படமிது.

இத்தாலியில் அதிகமான மக்கள் தொகை இல்லாத ஊரது..எங்கும் சிறுவர்கள் ஊர்வலம்தான்...யாரோ ஒரு பெண் (வழக்கமான கூந்தலை விரித்துவுட்டு) ஏதோ ஒன்றை தோண்டுவதோடு டைட்டல் கார்டு ஓடுகிறது..கடைசியில் அவள் எடுப்பது மண்டை ஓடு..சரி ஏதோ ஆவி சமச்சாரமோ என திரைக்குள் நான் தலையை நீட்ட...சரி விடுங்க.

அங்கு தொடர்ந்து சிறுவர்கள் மர்ம்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.ஒன்று, ரெண்டு என்று லிஸ்ட்டு நீண்டுக்கொண்டு போகவே போலிஸும் விசாரனையில் தீவிரமாக இறங்குகிறது.பலரை விசாரித்து சந்தேகத்தின் பேரில் ஒரு முடிவே கட்டி சிலர் மீது பழி சுமத்தி "அவர்கள்தான் கொலைக்காரர்கள்" என்று போட்டும் தள்ளுகிறார்கள்..இருந்தும் தீருமோ ரத்த வாடை..கொலைகள் மட்டும் தொடர்கிறது..யார் அந்த கொலையாளி ? ஏன் கொள்கிறான் ? போன்ற கேள்விகளுக்கு படம் பார்க்க வேண்டுமென்று நான் ரெகுலரா சொல்லுவேந்தான்..இந்த பிறவில நீங்க இப்படத்தை பார்த்தீங்கனா பெரிய புண்ணியம் பண்ணதா ஆனாலும் ஆகும்..காரணம் முன்பே சொன்னதுதான்..பலரும் காணாத அதிசய படமிது.

 இத்தாலியின் ஹாரர், வில்லங்க சினிமா சரக்குகளை வெளிநாடுகளுக்கு பேக் பண்ணி அனுப்பி வைத்த சிறந்த பெயர்களான டாரியோ அர்ஜென்டோ போன்றோரின் வரிசையில் லூசியோ ஃபுல்ச்சி...ஒரு பக்கா சர்ச்சை பேர்விழின்னு நினைக்கிறேன்..இத்தாலி சினிமாவில் "Giallo" அப்படின்னு ஒரு வகை உண்டு..அதாவது அதில் ஹாரர், மிஸ்டரி, ஏன் எரோட்டிக் கூட அடங்கும்..உலகளவில் பலர் மத்தியில் ஃபேமஸும் கூட.அந்த வகையில் வந்த அக்மார்க் மாஸ்டர்பீஸ்களில் ஒரு பீஸாக இப்படம் குறிப்பிடபடுவது...என்னளவில் ஆச்சரியம்தான்...அது ஏனோ தெரில படம் எனக்கு பிடிக்கல..படத்தின் இடையில் ஒரு ஐந்து நிமிஷம் என்னை அறியாது உறங்கிட்டேன்..ஸ்லோவாக நகரும் காட்சிகள்...இந்த தலைமுறை ஆளான எனக்கு ஒரு வேளை ஏற்கனவே பார்த்த காட்சிகள் இருந்ததாலோ என்னவோ..ஒன்னும் புரில..

இந்த படத்தை எதிர்க்காலத்தில் எனக்கு பிடித்தாலும் பிடிக்கலாம்..ஏனா இன்னிக்கு பிடிக்காதது நாளைக்கு பிடிக்கலாம்..இல்லையா ? "இந்த படத்தையெல்லாம் பார்த்து எழுதி தள்ளி எங்களோட கழுத்த ஏண்டா அறுக்குறனு" அப்படினு நீங்க கேட்டாலும் கேட்கலாம்..நான் முன்னாடியே சொல்லிருந்தாலும் சொல்லிருப்பேன்..இல்லனா மேல பிளாக் டைட்டில் பாருங்க.."நான் பார்த்த படங்களின் அறிமுகமே இது எல்லாம்"..
ஓக்கே அப்புறம் அடுத்த பதிவில் மீட் பண்ணலாம்..சீ யூ.


Monday, 23 July 2012

Infernal Affairs (2002)


ஏறக்குறை ஒரு மாதத்திற்கு மேல் கடந்தாச்சு..ஒரு மாதம் == ஒரு பதிவென்றாவது எழுதிட்டு இருந்தேன்..பதிவுகள் Draft-டில் இருந்தாலும் ஏதோ சரிவர ரிலீஸ் கூட பண்ண முடியாது போய்விட்டது.சற்று ஒரு கம்ப்யூட்டர் கொளாரு வேறு.அதான் இப்ப புதுசா ஒரு பதிவு டைப் பண்ணி போடுறேன்..பிடித்தாலும் படிங்க..படிக்காட்டாலும் ஆதரிங்க.. 
==================================================================================
Infernal Affairs (2002) - Hong Kong
நீண்ட நாட்களாகவே ஹார்ட் டிஸ்க்கில் கிடந்து பார்த்த ஓர் அதிரடியான ஆக்சன் திரிலர்.நான்கு ஆஸ்கர்களை வென்ற, பலரும் அறிந்த தெ டிபார்ட்டெட் படம் உருவாவதற்கு மையப்புள்ளியாக அமைந்த ஒரிஜினல் படைப்பு இது.திரை உலகம் புகழும் ஸ்கார்சஸியே ஒரு ஹாங்க்காங் படத்தை ரீமேக் செய்ய வேண்டிய அவசியம் என்ன ? அவ்வளவு பெரிய அப்பாட்டேக்கரா இப்படம் ? இது போன்ற கேள்விகளோடுதான் பார்த்தேன்..

முன்னமே கதையை அறிந்த காரணமோ என்னமோ, தொடங்கிய 10 நிமிடங்களுக்கு மனம் ஒன்றவில்லை..அதற்கு பிறகு, சொல்லவா வேண்டும் ? திரைக்காட்சிகள் ஒவ்வொன்றும் சூடுப்பிடிக்கவே அது கடைசிவரை நிலைத்ததுதான் இயக்குனர்களான Wai-keung, Lau, Alan Mak அவர்களின் வெற்றி.    

கதை என்றளவில் பெரிதாக ஒன்றுமில்லை..ஆங்கில வெர்ஷனை பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்..சுருக்கமான கூறின்...
ஊரிலே மிக பெரிய கடத்தல்க்கார வில்லன்..அதுல ரகசியமா வேலை செய்யும் ஒரு போலிஸ் (அதான் நம்ம ஹீரோ)..அதற்கு நேரெதிராக அந்த கும்பலை பிடிக்க பாடுப்படும் போலிஸ் குரூப்பில் ஒரு கருப்பு ஆடு..அதாங்க மெயின் வில்லன்..அவ்வளவுதான்..இங்கிருந்து அங்க..அங்கிருந்து இங்க என ஒருவருக்கொருவர் கடமையின் பேரில் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள்..இறுதியில் என்ன நடந்தது..யாரை யாரெல்லாம் "போட்டாங்க" அதுதான் கதை..

ஹீரோ + வில்லன் என்பதெல்லாம் வெறும் கதையளவிலான அடையாளம்தான்..பட ரீதியில் திரைக்கதை செம்ம விறு விறுப்பாக நகர்த்தப்பட்டுள்ளது.. ஒரு காட்சியை கூட வீணடிக்காத வகையில் ஒவ்வொன்றையும் கதைக்காகவும் சுவாரஸ்யத்தை மேம்படுத்துவதற்காகவே பயன்படுத்தியுள்ளது சிறப்பம்சம்.ஒரே வரியில் சுலபமான கதை...தெளிவான திரைக்கதை..சுமார் ஒரு மணி 40 நிமிடங்கள் எந்த ரசிகனுக்கும் போரடிக்காமல் கொண்டு செல்வது என்பது நினைக்கும் வகையில் அவ்வளவு ஈஸியல்ல.பல நாட்டில் நன்மதிப்பும் வசூலும் பெற அதுக்கூட காரணமாக இருந்திருக்கலாம்.தற்சமயம் ரோட்டென் தொமொதோஸில் 95 சதவீதம் மற்றும் ஐஎம்டிபியில் 8.1 ஆகிய மதிப்பென்களை பெற்றுள்ளது.பற்றாக்குறைக்கு எம்பயர் மெகசீன், உலகின் சிறந்த 100 படங்களில் இப்படத்துக்கு 30ம் இடத்தை அறிவித்துள்ளது.

மொத்தத்தில் ஒரு நல்ல படம்..தெ டிபார்ட்டெட் படத்தோட ஒப்பிடும் போது கொஞ்சம் கம்மிதான் இருந்தாலும் பார்க்க வேண்டிய சினிமா என்பதில் சந்தேகமில்லை..நடிப்பு, கேமரா என்று பல படங்களுக்கு முன்னோடியா இருந்தாலும் இருக்கும்.படம் பிடித்தால் அதை தொடர்ந்து வந்த 2 பாகங்களை பார்த்துவிடுங்கள்...மோட்சம் கிடைக்கும்.

என்னதான் இருந்தாலும் ஸ்கார்சஸி ஸ்கார்சஸிதான்..ஒரு பெஸ்ட் அதாவது ஒரிஜினலை விட தரமான சூப்பரான படத்தை எவ்வண்ணம் ரீமெக் பண்ணனும் என்பதை அதிலும் எப்படி, என்னென்ன வித்தைகள் செய்யலாம் என்பதை படம் போட்டு காட்டிட்டார்.இதெல்லாம் பார்த்துமா இன்னும் மொக்கையா ரீமெக் எடுத்துகிட்டு இருக்காய்ங்க.பாவம்...
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge