Follow by Email

Tuesday, 25 August 2015

Horror Of Dracula (1958)


சில மாதங்களுக்கு முன்பு பார்த்த திரைப்படமாகும்.தலைப்பிலேயே ஹாரர், டிராக்குலா என பயமுறுத்திய பழைய இங்கிலாந்து சினிமா.படம் அந்த இரண்டிலும் சுமார்தான் எனினும், ஓய்வு நேரத்தை செலவழிக்க கொஞ்சம் ஏகுவான படைப்பு.
பொதுவாக நான் டிராகுலா திரைப்படங்களை விரும்பி பார்ப்பது இல்லை.அதற்கான காரணத்தையும் நான் அறிந்ததில்லை.நான் இதுவரை பார்த்த டிராகுலா திரைப்படங்கள் இரண்டுதான்.ஒன்று 2004-ஆம் ஆண்டு வெளிவந்த VAN HELSING, இன்னும் ஒன்று இந்த ஹாரர் ஒஃப் டிராகுலா.சிறிய வயதில் சில டிராகுலா கதைகளையும் தகவல்களையும் விரும்பி படித்ததாக ஒரு ஞாபகம்.உலகில் அதுவும் இருளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மிகவும் சுவாரஸ்யமான விடயங்களில் டிராகுலாவும் ஒன்றென அறிந்துக்கொண்ட காலம் அது.படித்த கட்டுரைகள், தகவல்கள் இன்றுவரை என் புத்தக அலமாரியில் இருக்கிறது.அதை சில நாட்கள் மறந்த நிலையில், மீண்டும் பைலை திறக்க தூண்டியது இத்திரைப்படம்.

 ஹாரர் ஒஃப் டிராகுலா, 1958 - ஆம் ஆண்டு பேய் திகில்ப்பட இங்கிலாந்து திரைப்பட இயக்குனரான டெரன்ஸ் ஃபிஷர் இயக்கத்தில் வெளிவந்தது.வெளிவந்த நேரம் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்களாலும் விமர்சனர்களாலும் சிறந்த டிராகுலா திரைப்படங்களில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுவது குறிப்பிடதக்கதாகும்.இதில், முக்கிய நடிகர்களாக Peter Cushing, Christopher Lee and Michael Gough ஆகியோர் நடித்துள்ளனர்.இசையை ஜேம்ஸ் பெர்னார்ட் என்பவர் கவனிக்க, படத்துக்கு கூடுதல் சிறப்பான ஒளிப்பதிவில் ஜேக் ஆஷர் என்பவர் பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய நண்பனான ஜோனாதன் ஹார்க்கர் மர்மமான முறையில் இறந்தைத் தொடர்ந்து, இவருடைய மரணத்திற்கு டிராகுலா காரணமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார் டாக்டர் வேன் ஹெல்சிங்.கடைசியாக தன் நண்பன் அனுப்பிய கடித்தத்தின் வாயிலாக கடைசியாக தங்கிய மாளிகைக்கு வருகிறார்.வந்தவுடனே தன் நண்பனின் உடல் ஒரு பிணப் பெட்டியில் காண நேரிட, அதனைத் தொடர்ந்து டிராகுலாவை கொல்ல வேண்டிய வேட்டையில் இறங்குகிறார்.அடுத்தடுத்து சில மரணங்களும் நிகழ, இதற்கான காரணங்கள் என்ன ? டிராகுலாவை கொன்றாரா ? அல்லது அந்த முயற்சியில் தோல்வியடைந்தாரா ? என்பதை டிவிடி கிடைக்குமா என்று தெரியவில்லை...இல்லையென்றால் பதிவிறக்கம் செய்து பாருங்கள்...

மேற்ச்சொன்னது முடிந்தவரையில் சுருக்கமாக எழுத நினைத்த கதை..சில சிறப்பம்சங்களை விட்டுவிட்டுதான் முன்வைத்துள்ளேன்.இந்த படம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.கல்ட் கிளாசிக் என்று பலர் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்

பொதுவாக டிராகுலா படங்களை பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது.ஏனா பார்த்ததே ரெண்டுதான்.முன்பு சொன்னது போல, VAN HELSING திரைப்படம் பிரமாண்டத்தில் மாட்டிக்கொண்ட நிலையில், ஹாரர் ஒஃப் டிராகுலாவில் பிராமாண்டம் எல்லாம் இல்லீங்க.வெறுமனே கதையை வைத்துக்கொண்டு சிறிய பெட்ஜெத்தில் காட்சிகளை நேர்த்தியாகவே நகர்த்தியுள்ளனர்திரைக்கதையின் பலமும் அதிலேயே உள்ளது.

பழைய திரைப்படங்களில் முக்கியமாக என்ன இருக்கிறதோ இல்லையோ பின்னனி இசைக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.பல திறம்வாய்ந்த இசை ஆளுமைகள் இந்தியா மற்றும் அயல் நாடுகளில் உதித்த பொற்க்காலம் அது.அதிலும் திகில் திரைப்படங்களுக்கு சொல்லவே தேவையில்லைசைக்கோ, தெ ஒமென் போன்ற திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.அந்த திரைப்படங்களின் பின்னனி இசை இன்னும் என் மனதிலே இருக்கிறது.அதே வரிசையில் ஜேம்ஸ் பெர்னார்ட், இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவருக்கு மகனாக பிறந்த இங்கிலாந்தியர்.Seven Days to Noon (1950) என்ற படத்துக்காக ஆஸ்கர் வென்றவர்.இதிலும், பின்னி எடுக்கிறார்.திரைப்படத்தில் டிராகுலாவாக வரும் Christopher Lee பற்றி சொல்லியே ஆகனும்..அப்படியே டிராகுல மாதிரியே இருக்காரு..நல்ல நடிப்பு.    

இறுதியாக, ஹாரர் ஒஃப் டிராக்குலா - காட்சிகளில் வேகத்தை கம்மிப்படுத்திக்கொண்ட படம்வன்முறை காட்சிகளுக்காகவே அந்த டைமில் X ரேட்டிங்க் பெற்ற படம்.அதுவும் ஜப்பானிய வெர்ஷனில் இன்னும் அதிகமாக கொடூரங்கள் நிறைந்த படைப்பாம்.(யார் கண்டா ??) நீங்கள் பழைய படங்களை விரும்பி பார்ப்பவர் எனின், ஒரு முறை காணலாம்.ரசிக்கலாமா ? என்று கேட்டால் கட்டாயம் இல்லை.உலகளவில் இன்று ரசிகர்கள், விமர்சகர்களை கொள்ளைக்கொண்ட இப்படம், நான் இதுவரை கண்ட மர்மப்படங்களில் கொஞ்சம் கடைசி ரேங்கையே பிடித்துள்ளது.எதுக்கும் நீங்கள் பாருங்கள்...   

இயக்குனர் டெரன்ஸ் ஃபிஷர்

20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஹாரர் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஃபிஷர், 1904-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 திகதி பிறந்தவர் ஆவார்.பிரிட்டிஷ் நடிகர்களான பீட்டர் கஷ்ஷிங் மற்றும் கிறிஸ்டோபர் லீ போன்றவர்களை முன்னணி நட்சத்திரங்களாக கொண்டு இவர் இயக்கிய திரைப்படங்களான டிராகுலா (1958), ஹவுன்ட் ஆப் த பாஸ்கர்வில்லாஸ் (1959) மற்றும் மம்மி (1959) போன்றவை இன்றுவரை  கிளாசிக் திகில் திரைப்படங்களாக விளங்குவது மட்டுமன்றி ஃபிஷரின் சிறந்த படைப்புகளாக கருதப்டுகின்றன.தொடர்ந்து டிராகுலாவை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களால் உலகலவில் சினிமா ரசிகர்களை கவர்ந்த இவர், ஜூன் 18 திகதி 1980 - ஆண்டு  தனது 76 வயதில் காலமானார்.

மீண்டும் அடுத்த பார்வையில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,

Sunday, 16 August 2015

Gems Of Classic Western : A Fistful of Dollars (1964)


அமெரிக்க நடிகர்களை பயன்படுத்தி ஐரோப்பிய சினிமாக்காரர்களால் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஸ்பகெட்டி அல்லது இத்தாலோ வெஸ்டர்ன் என்று அழக்கப்படுகின்றனஆரம்ப காலத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படங்கள் பின்னாளில் Once Upon A Time In West (1968) போன்ற படங்களின் மூலம் பெரிய ஹாலிவுட் ஸ்டூடியோக்களின் உதவியுடன் பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்டு உலகளவில் வெளிவரப்பட்டன.அன்று வரை அமெரிக்க ஹிரோக்களுக்கு அடிமையான மக்களை அழுக்கு உடைகள், இறைச்சி & சோள உணவுகள் உண்ணும் மற்றும் எண்ணெய் வைக்காது வரண்டு வதங்கிப்போன முகங்கள் கொண்ட வெஸ்டர்ன் ஹீரோக்களுக்கு பாயச்செய்த திரைப்படங்கள் இவை.
==================================================================  
அகிரா குரோசாவா என்ற சினிமா மேதையை அறிந்திராத ரசிகர்கள் மிகவும் குறைவு..1961-ஆம் ஆண்டு இவர் இயக்கிய சாமுராய் திரைப்படம் யோஜிம்போ..சர்வதேச அளவில் சிறந்த படைப்பாக கருதப்படும் இப்படத்தின் தழுவலில் (சுட்டு, காப்பி எது வேண்டுமானாலும் சரி) சரியாக மூன்றாண்டுகள் கழித்து இத்தாலியில் தயாரிக்கப்பட்ட படம்தான் A Fistful Of Dollars.

செர்ஜியோ லியோனி இயக்கிய டோலர்ஸ் டிரைலோஜியின் முதல் பாகமாக தயாரிக்கப்பட்டு 1964-ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், அமெரிக்க இளம் நடிகரான கிளிண்ட் ஈஸ்ட்வூட்டின் நடிப்பாற்றலுக்கும், என்னியோ மொரிக்கன் என்ற இசை ஆளுமைக்கும் மிகப் பெரிய தொடக்கமாக அமைந்ததோடு உலக பிரசித்தி பெறச் செய்தது எனலாம்..அதுவரை துணை இயக்குனராகவும் கதை, திரைக்கதை ஆசிரியராகவும் 1961-ஆம் ஆண்டு Il Colosso di Rodi என்ற ஒரே படத்தை இயக்கிருப்பினும், லியோனிக்கு சர்வதேச அளவில் மிக பெரிய பெயரையும் சினிமா வசதிகள் பெருமளவில் இல்லாத சமயத்தில் பல ரசிகர்கள் முக்கியமாக ஹாலிவுட்டின் பார்வைகள் தன் பக்கம் திரும்ப காரணமாகவும் அமைந்தது.

நிலையாக ஓரிடம் தங்காது அதிகம் பேசுவைதவிட கையால் எதிரிகளை கவனிக்கும் பெயரில்லாத துப்பாக்கி வல்லவன், ஊரில் வாழும் மக்களை துன்புறுத்தி வதைக்கும் Baxters மற்றும் Rojo இரண்டு எதிரி கும்பல்களின் நம்பிக்கைக்கு ஆளாகி அவர்களையே வீழ்த்த முயற்சிக்கும் போராட்டங்களை பதிவு செய்யும் படமிது.எளிமையான கதை, சுவாரஸ்யங்கள் நிறைந்த திரைக்கதை என்று பார்வையாளர்களை எளிதில் கட்டிப்போடக்கூடிய விதத்தில் எடுக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

கதை, காட்சிகள் என்று யோஜிம்போவின் சாயலை பல இடங்களில் இத்திரைப்படம் கொண்டிந்தாலும், திறமைமிக்க இயக்கம், நடிகர்களின் தனிப்பட்ட நடிப்பு, கேமரா கோணங்கள் மிக முக்கியமாக மொரிக்கோனின் இசை ஆகியவற்றின் துணையோடு தனக்கே உரிய இடத்தில் இத்திரைப்படம் நிற்கிறது.செர்ஜியோ லியோனியின் ஆஸ்தான இசையமைப்பாளரான என்னியோ மொரிக்கொன், உருவாக்கிய விசில் ஒலிகள், கோரஸ் குரல்களை யாரால் மறக்க முடியும்..?? அதுவும் அத்தனையும் ரிதமிக்கான டீம்கள்.சோகங்கள் நிறைந்த மனதை தாளம் போட வைக்கும் ரகத்தில் இருப்பவை.. 

கிளிண்ட் ஈஸ்ட்வூட் போன்ற அமெரிக்க நடிகர்களையும் Gian Maria Volonté, Marianne Koch, Wolfgang Lukschy போன்ற ஐரோப்பிய நடிகர்கள் நடித்த இந்த படத்தை நடிப்புக்காகவே பல முறைகள் பார்க்கலாம்..
அதுவும் கிளிண்ட் ஈஸ்ட்வூட் புகை பிடிக்கையில், பார்வைகளில் தென்ப்படும் ஸ்டைல்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்..அவ்வளவு தெனாவட்டான நடிப்பு படம் முழுவதும்.இதற்கு எதிர் மறையான கதாபாத்திரத்தில் மரியா வொலுண்டே, Rojo என்பவராக வந்து அப்படியே நெஞ்சை கவர்கிறார்.அதுவும் இறுதி காட்சியில், ஈஸ்ட்வூட் அசால்ட்டாக ஐந்து பெரின் துப்பாக்கி முனையில் நடந்துவர தூரத்திலிருந்து சுடும் காட்சி இருக்கிறதே......அருமை..என்ன அழகான கிளோஸ் அப் மற்றும் லோங்க் ஷாட் காட்சி அது.காட்சியின் உணர்ச்சியை ஒவ்வொரு நடிகனின் முகப்பார்வைகளில் தென்பட வைத்திருக்கிறார் இயக்குனர்.அதுவும் ஒவ்வொரு குண்டாக சுட வொலுண்டேயின் முகத்தில் ஏற்ப்படும் மாற்றமும் பயமும் அப்படியே கண்ணில் நிற்கிறது.

1964 - ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட எ ஃபிஸ்ட்ஃபுல் டோலர்ஸ் படம் உலகளவில் வெற்றிப்பெறவே அகிராவின் பார்வைகளுக்கும் எட்டியது.தன்னுடைய படத்தை அதுவும் அனுமதி ஏதும் இன்றி மறு ஆக்கம் செய்தமைக்காக நீதி மன்றத்தில் குற்றம்சாற்றி தயாரிப்பாளர்களிடமிருந்து சட்ட ரீதியில் வசூலில் 15 சதவீத தொகையையும் பெற்றுக்கொண்டார் அகிரா.

படத்தில் எண்ணற்ற காட்சிகள் சொல்ல இருக்கின்றன..எப்பொழுதும் விலாசமான கேலி சிரிப்புடன் படம் முழுக்க ஒருவர் வில்லன் கும்பலில் வருவார்.அதுவும் ஈஸ்ட்வூட்டை போட்டு அடிப்பின்னும் காட்சியில் இவர் சிரிக்கும் போது மனதுக்கு எரிச்சல் வருகிறது. மற்றவனின் துன்பத்தில் இன்பம் காணுகின்றன பேய்கள் என்று மறைமுகமாக இயக்குனர் சொல்லுகிறாரோ என்னவோ தெரியவில்லை இயக்குனர்.

ஊரே எதிரியாக பார்க்கும் ஈஸ்ட்வூட்டுக்கு ஒரே ஆதரவாக, துணையாக வருவது விடுதி காப்பாளராக வரும் சில்வனிடோ மற்றும் சவப்பெட்டிகள் செய்பவராக வரும் பிரிப்பேரோ ஆகிய கதாபாத்திரங்கள்..அதுவும் பிரிப்பேரோவின் எக்ஸ்பியஷங்களும் ஈஸ்ட்வூட் உடனான காட்சிகள் அத்தனையும் சிறப்பு..எப்பொழுதும் அரைகுறையான வசனங்கள் நிறையவே லியோனியின் படங்களில் இருக்கும்..அத்தனையும் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன.

இது கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்..வெஸ்டர்ன் படங்கள் பார்க்க தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த படத்திலிருந்து ஆரம்பிப்பது மிக்க நன்று.இந்த படத்தை பற்றி இன்னொரு நாள் கதை, காட்சிகளை பற்றி நீண்ட தொடராக போட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு...மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..
அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

Tuesday, 11 August 2015

Sergio Leone Masterpieces..

திரைப்பட மாணவர்களுக்கு இவர் ஒரு பாடம், திரை ரசிகர்களுக்கு இவர் ஒரு கொண்டாட்டம்..கிளாசிக் வெஸ்டர்ன் படங்களுக்கு புது மரியாதையும், புது அத்தியாயத்தையும் உருவாக்கி தந்த உன்னதமான சினிமா மேதை.
இத்தாலியில் ஜனவரி  மூன்றாம் திகதி 1929-ஆம் ஆண்டு பிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், கதை மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.விக்டோரியோ டி சிக்கா இயக்கிய பைசிக்கல் டீஃப் என்ற படத்தின் மூலம் உதவி இயக்குனராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய லியோனி, தொடர்ந்து Quo Vadis (1951) மற்றும் Ben-Hur (1959) போன்ற சர்வதேச மிக பெரிய பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டு விருதுகளையும் வசூலையும் வென்று குவித்த படங்களில் துணை இயக்குனராக பணிப்புரிந்தார்.அதே வேளையில், அப்பொழுது தயாரிப்பில் இருந்து சில காரணங்களால் முழுமை பெறாது தவறிப்போன The Last Days of Pompeii (1959) என்ற படத்தின் ஒரு பகுதிக்கு இயக்குனராக பணிப்புரியும் வாய்ப்பும் இவருக்கும் கிடைத்தது. 

1950-ஆண்டுகளில் பல வரலாற்று கதைகள், கத்தி சண்டைகள் நிறைந்த சாகச கதைகள் போன்றவற்றில் ஆர்வங்கள் கொண்டிருந்த லியோனிக்கு, முதல் வாய்ப்பாக அமைந்ததுதான் The Colossus of Rhodes (1959) என்ற சாகச படம்.இதன் மூலம் தன்னை திறமிக்க, இத்தாலியில் கவனிக்கத்தக்க இயக்குனராக அடையாளம் காட்டிக்கொண்டார்.சின்ன பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு நிகரான படங்களை எடுக்கும் பாணியும் திறமையும் பலருக்கு தெரிய வந்தது.அதுவரை அமெரிக்க தொலைக்காட்சியில் சிறிய வேடங்களிலும் சில திரைப்படங்களில் தலையை காட்டி வந்த கிளிண்ட் ஈஸ்ட்வூட்டுடன் இணைந்து தன்னுடைய அடுத்த படமான A Fistful of Dollars (1964) இயக்கினார்.அகிரா குரோசாவா இயக்கிய யோஜிம்போ படத்தின் தழுவலான இந்த படம் உலகளவில் வெற்றிப்பெறவே இதனது 


அடுத்த பாகங்களாக For a Few Dollars More (1965) மற்றும் The Good, the Bad and the Ugly (1966) என்ற படங்களையும் எடுத்து உலக திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும் பெறத் தொடங்கினார் செர்ஜியோ லியோனி...பெயரில்லாத துப்பாக்கி கலைகள் தெரிந்த வாடிப்போன முகத்தோடு ஈஸ்ட்வூட் நடித்த இம்மூன்று படங்களே இன்று டோலர்ஸ் டிரைலோஜியாக விளங்குகிறது.இத்தாலியில் சிறிய பட்ஜெட்டில் உருவெடுத்த இப்படங்கள், உலகமெங்கும் வசூலை வாரி குவித்தது.சிறிய வயதில் தன்னுடன் படித்த பள்ளி நண்பனான என்னியோ மொரிக்கொன் என்ற இசையமைப்பாளருடன் இவர் இணைந்து உருவாக்கிய புதுமையான வெஸ்டர்ன் வாசங்கள் வீசும் சப்தங்கள், டீம் இசையென்று ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டன.இன்றுக்கூட வெஸ்டர்ன் படங்கள் என்று சொன்னாலே இந்த இசை தான் ஞாபகத்தை எட்டும் என்று சொல்லும் அளவுக்கு படத்தின் வெற்றிக்கு கூடுதல் காரணமாகவே அமைந்தது.


டோலர்ஸ் டிரைலோஜிக்கு பிறகு, வெஸ்டர்ன் படங்களிலிருந்து விலக வேண்டும் என்று நினைத்த லியோனிக்கு மேலும் ஒரு சவாலாக சிறந்த வாய்ப்பாக அமைந்தது ஹேன்ரி ஃபோண்டா மற்றும் சார்ல்ஸ் பிரோஸன், ஹார்மோனிக்காவாக நடித்த Once Upon a Time in the West (1968) என்ற இன்னொரு வெஸ்டர் படம்தான்..அமெரிக்க ஸ்டூடியோவான பாராமௌண்ட் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த படத்தை இயக்கி கொடுத்தார்.தன்னுடைய நீண்ட கால நண்பர்களான Sergio Donati மற்றும் Ennio Morricone முறையே துணை திரைக்கதை மற்றும் இசை அமைக்க, பின்னாளில் திரைப்பட இயக்குனர்களாக உருவான Bernardo Bertolucci மற்றும் Dario Argento ஆகியோர் கதையை புனைந்தனர்.பல அமெரிக்க வெஸ்டர் படங்களின் தாக்கங்கள் நிறம்பி வழிந்தாலும், லியோனியின் இயக்கமும் நடிப்பும் இப்படத்தை உயர்ந்து நிற்க செய்தது. உலக அளவில் இதுவரை எடுக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களிலேயே சிறந்த படைப்பாகவும் இது கருதப்படுவது குறிப்பிடதக்கது.

அதனை தொடர்ந்து, 1973 ஆம் ஆண்டு வந்த Duck, You Sucker! (1971) என்ற படம் மேலும் லியோனிக்கு புகழை தேடி தந்தது.இம்முறை மெக்ஸிகோவின் புரட்சியை பின்னனியாக வைத்து திரைக்காட்சிகளை பின்னியிருந்தார்.இதன் பின், திரைப்பட இயக்கத்திலிருந்து வெளிவந்து My Name is Nobody (1973), A Genius, Two Partners and a Dupe (1975 போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார் லியோனி..

The Hoods  என்ற தனக்கு பிடித்த நாவலுக்கு திரைவடிவம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாகவே லியோனிக்கு இருந்தது.1920 மற்றும் 1930-களில் நியூயோர்க் நகரத்தில் வாழ்ந்த யூத குண்டர்களை பற்றிய கதை இது.இக்கதைக்காகவே, முதலில் கிடைத்த காட்ஃபாதர் (1972) படத்தை இயக்கும் வாய்ப்பையே புறக்கணித்தார்.இந்த படம் பின்னாளில் போர்ட் கொப்போலா இயக்கத்தில் சிறந்த படமாக வந்தது அனைவரும் அறிந்ததே.பல வருடங்கள் கழித்து இறுதியில் இந்த கதையை ரோபெர்ட் டி நீரோ மற்றும் ஜேம்ஸ் வூட்ஸ் நடிப்பில் சுமார் நான்கு மணி நேரங்கள் நெஞ்சை அள்ளும் படைப்பாக Once Upon a Time in America (1984) தந்தார்.இத்திரைப்படம் முதல் முறையாக லியோனிக்கு சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் மற்றும் பாஃப்தா பரிந்துரைகளை பெற்று தந்தன.

வெஸ்டர்ன் மட்டுமல்லாது சினிமாவுக்கு புதிய பரிணாமத்தை வழங்கிய செர்ஜியோ லியோனி என்ற சினிமா ராஜ்யம் ஏப்ரல் 30 ஆம் திகதி 1988-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.தன்னுடைய 60 ஆவது வயதில் மாரடைப்பில் காலமானார்.மொழி, நாடு என்று பலவற்றை கடந்து சினிமா உலகில் பலரையும் கவர்ந்த சிறந்த கைத்தேர்ந்த படைப்பாளிகளில் ஒருவராக லியோனியை சொல்லலாம்.பல புகழ்பெற்ற கலைஞர்களை திரைப்படத்துறைகளுக்கு அறிமுகபடுத்தியதோடு புகழ்ப்பெற செய்ததற்கும் காரணமாக இருந்த லியோனி, இன்று படைப்புகளின் மூலம் உயிர் வாழ்கிறார் என்பதே உண்மை..இவர் எடுத்த படங்கள் வெறும் வெஸ்டர்ன் மற்றும் சாகச படங்கள் மட்டுமில்லை, உண்மையாக கலையை நேசித்த, பல திரை யுக்த்திகளை வழங்கிய மனிதனின் காவியங்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து..ஒரு சினிமா ரசிகர்களாக இருந்து இவரது படங்களை மறக்காமல் இருப்பதே இவருக்கு கொடுக்கும் மிகப்பெரிய விருது மற்றும் கடமை என்று நினைக்கிறேன்.   

@@ செர்ஜியோ லியோன் - உலக விருதுகள் பெறாத பல சினிமா உள்ளங்களில் வாழும் கலைஞன். @@  

 அடுத்தடுத்த பாகங்களில் செர்ஜியோ லியோனியின் டோலர் டிரைலோஜி மற்றும் பிற படைப்புகளை சிறு பார்வைகளாக பார்க்கலாம்.அதுவரை,உங்கள் ஆதரோவோடு,

Friday, 7 August 2015

The Evening Star (1996) உறவுகள் தொடர்க்கதை..

இதுவரை நான் பார்த்த ஹாலிவுட் படங்களில் மனதோறமாய் தங்கிய, மறக்க முடியாத படங்களில் டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் என்ற படத்தை சொல்லலாம்...மனித உறவுகள் முக்கியமாக தாய் மற்றும் மகளுக்கிடையிலான ஓர் அழகிய உறவை நினைவுகளாக தந்த படம்.பார்த்தது வெறும் ஒரு முறையே ஆனாலும் பல காட்சிகள் இன்றுவரை மனதிலே நிற்கின்றன.பல நாட்களுக்கு முன்னமே இந்த படத்தை பற்றி ஏற்கனவே சில வரிகளை பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அந்த பதிவை படிக்காதவர்கள்..இங்கே சென்றுவிட்டு வரவும்..இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக 1996-ஆம் ஆண்டு வெளியான தெ இவ்னிங் ஸ்டார் என்ற படத்தை சற்று நாட்களுக்கு முன்பு பார்க்க கிடைத்தது.அந்த அனுபவங்களே இன்றைய சிறு பார்வைகளாய்.

தெ இவ்னிங் ஸ்டார்: தெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் திரைப்படத்தின் தொடர்ச்சியாக சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் தொடங்கிறது. மகளுக்கும் தாயுக்கும் உள்ள உறவை மென்மையாக எடுத்துரைத்த முதல் பாகத்தின் இறுதியில் மகள் மரணத்தை தழுவ, இரண்டாம் பாகம் தன்னுடைய இறந்துப் போன மகளின் இரண்டு மகன்கள் மற்றும் மகளுக்கும் பாட்டிக்கும் இடையிலான உறவை பற்றி விவரிக்கின்றது.Robert Harling என்பவரின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 1996-ஆம் வெளிவந்த படமிது..இதில் பிரபல நடிகை Shirley MacLaine, Aurora Greenway என்ற ஆஸ்கர் விருது பெற்றுக்கொடுத்த தன்னுடைய முந்தைய கதாபாத்திரத்திற்க்கு மீண்டும் உயிர்த்தர, இவருடைய மூன்று பேரப்பிள்ளைகளாக Juliette Lewis as Melanie Horton, Mackenzie Astin as Teddy Horton மற்றும் George Newbern as Tommy Horton ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மேலும், படத்தின் முக்கிய பாத்திரங்களில் Bill Paxton, Marion Ross, Ben Johnson மற்றும் பலர் படத்துக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளனர்.இதில், Rosie Dunlop என்ற ரொலில் சிறந்த நடிப்பை வெளிபடுத்திய Marion Ross, சிறந்த துணை நடிப்புக்காக கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்.

நீண்ட வருடங்களுக்கு முன்பு, எதிர்ப்பாராத விதமாக உங்களது ஒரே மகள் மரணமடைய, பாட்டி என்ற பாச பிணைப்பில் அவரது குழந்தைகளை பத்திரமாக வளர்க்கிறீர்கள்..காலங்கள் ஓடஒருவர் வறுமை, சிறைச்சாலை என்று ஒவ்வொரு பிள்ளையும் வெவ்வேறான சூழ்நிலைகளில் பாதைகளில் செல்கிறார்கள்.உங்களுக்கோ இப்பொழுது வயதாகிவிட்டது..ஒரு பாட்டியாக உங்களது தவிப்புகள் என்ன? உணர்வுகள் என்ன? இது போன்ற நிறைய விஷயங்களை இத்திரைப்படம் பேசுகிறது.பாசம், சோகம், காதல், பரிவு, அக்கறை என்று பலதரபட்ட பாவங்களையும் நடிப்பையும் திரையில் வழங்கி மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்துள்ளார் Shirley MacLaine.முதல் பாகத்தில் எப்படி ஜேக் நிக்கல்சனோ, அதுப்போல இந்த பாகத்தில் Bill Paxton, அவுராவின் அண்டை வீட்டு மனநல மருத்துவராகவும் தன்னை விட வயதில் மிகவும் மூத்த அவுராவின் குறுகிய கால காதலானாகவும் வந்து நகைச்சுவையோடு கலந்த சுவாரஸ்யமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் Shirley MacLaine நடிக்கும்போது வயது ஏறக்குறைய 62 இருக்கும்.ஆனால் காதல் நடிப்பில் மட்டும்..ம்ம்..ம்ம்.கண்டிப்பாக ஷெர்லி மெக்லைனின் சிறந்த படங்களில் தெ இவ்னிங் ஸ்டார் இல்லையென்றாலும் மனதில் நிற்கும்படியான பேர்ஃபோமன்ஸை கொடுத்துள்ளார்.படத்தின் ஆனிவேறே இவரது நடிப்புதான்.படம் முடிந்த பிறகு இணையத்தில் தேடிய போது இந்த படத்துக்கு இவருக்கு பெரியளவில் எந்த விருதுகள் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றத்தை தந்தது.படத்தில் இன்னொரு சுவாரஸ்யம் ஜேக் நிக்கல்சன்தான்.டைட்டில் கார்டில் இவரது பெயர் வந்ததுமே இப்ப வருவாறு அப்புறம் வருவாறுன்னு  நம்பி, கடைசில கிளைமக்ஸ் முன்னாடி அதே பாத்திரத்தில் கொஞ்ச நிமிடங்கள் வந்தாலும் நிறைவான திருப்தியை தந்துவிட்டு போகிறார்.இவர் இதன் முந்தைய பாகத்துக்கு சிறந்த நடிப்பு - ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கது.இந்த படத்தையும் முதல் பாகத்தையும் இணைத்து பேசுவதோ ஒப்பிடுவதோ தவறு என்று நினைக்கிறேன்..முதல் பாகம் கொடுத்த அதே திருப்தியை கொடுக்க இந்த படம் தவறிவிட்டது என்பதே உண்மை..மற்றபடி டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மென்ட் பார்த்தவர்கள் கண்டிப்பாக் பார்க்க வேண்டும்..

முதல் படத்தோடு பார்க்கும் பொழுது, இது விமர்சக மற்றும் வசூல் ரீதியிலும் பலமாக மொத்து வாங்கிய படமிது.ஆனால் படம் எனக்கு பிடித்திருந்தது.மொத்தத்தில் காதல், சோகம், சிரிப்பு பார்ப்பவர்களை மிக எளிதாக கவரக்கூடிய படமிது..அப்படி எடுக்கிறேன் இப்படி எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரிஜினல் படத்தின் பெயரை கெடுக்கும் படங்களோடு ஒப்பிடும்போது, இது எவ்வவோ பரவாயில்லை என்றே மனதில் தோன்றியது.அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சீக்குவெல்..தெ இவ்னிங் ஸ்டார்.

.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,

The Howling (1981)


ஹாலிவுட்டில் ஹாரர் படங்களுக்கு பஞ்சமே இல்லை.புதுசு புதுசா எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அரைத்த மசாலாவையே திருப்பி திருப்பி தயாரிக்கிறது-ல மன்னர்கள்.அதிலும் இந்த டிராகுலா, ஓநாய் மனிதனாகும் கதையெல்லாம் சொல்லவே வேண்டாம்.இதெல்லாம் பார்த்து தாங்க முடியாது விமர்சகர்களும் பல படங்களை மாங்கு மாங்குனு குத்தி-கிட்டு இருந்தாலும் "நான் விடமாட்டேனு" இன்னமும் மௌசு குறையாது சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியம்தான்.அந்த வரிசையில் 1981-ம் ஆண்டில் வந்ததுதான் தெ ஹௌலிங்.ஹாலிவுட் பேந்தசி, சின்ன பிள்ளைகள் படங்கள் பார்த்து வருபவர்களுக்கு கொஞ்சமாவது அறிமுகமான பெயராக இயக்குனர் ஜோய் டாந்தே-வை சொல்லலாம் (படத்துல எனக்கு வேற யாரையும் தெரியாதுப்பா)..காரணம் இவர்தான் ஸ்பீல்பெர்க் தயாரித்த க்ரேம்லின்ஸ் படத்தை எடுத்த புண்ணியவான்..(இத நான் நொந்துப்போய் சொல்றேன்).இவர் எடுத்த ரொம்ப சீரியஸான படங்களில் இதுவும் ஒன்றாம்.இப்படம் Gary Brandner என்பவரால் 1977-ல் எழுதப்பட்ட நாவலை தழுவி வந்தது குறிப்பிடதக்கது.

காரேன் வைட், லாஸ் ஏஞ்சல்ஸில் செய்தி தொகுப்பாளராக பணி செய்து வருபவர்.எதிர்ப்பாரா விதத்தில் எடி என்ற சீரியல் கில்லரின் தொடர்பில் காரென் சிக்க, பின்னர் போலிஸாரால் சுட்டு கொல்லப்படுகிறான் எடி.சம்பவம் நடந்த அதிர்வில் காரனின் மூளை பாதிக்கிறது.இந்த சூழலில் சரிவர வேலையும் செய்ய இயலவில்லை..வேறென்ன? டாக்டர்தான்.அவரு "காலெனி" என்ற இடத்துக்கு டிரீட்மெண்டுக்கு அழைத்து வராரு.கூடவே காரெனின் கணவன்.அங்கு நிகழும் மர்மங்கள்,. ரகசியங்கள் இதுதான் மீதக்கதை..நம்மை கவருவதற்காகவே விறுவிறுப்பான திரைக்கதையில் பயணித்த படக்குழுவினர்களுக்கு நன்றிகள்.

படத்தின் பெரிய பலமாக விளங்குவது கிராப்பிக்ஸ்..அதுவும் வருவது கடைசி காட்சிகளில்தான்.மனிதன் ஓநாயாக மாறுவதை ரொம்பவும் தத்ரூபமாக எடுக்க டிரை பண்ணிருப்பதே வரவேற்கதக்கது.குறிப்பாக, கதையில் ஒரு கட்டத்தில் ஓநாயின் கையை தெர்ரி என்பவர் வெட்ட, அது துண்டித்து மீண்டும் புதுப்பிக்கும் காட்சி அருமை..இப்படியே சில காட்சிகள் ஓரளவு கவர்ந்ததை வைத்து படம் ஓக்கே என்ற முடிவுக்கு வரலாம்.

படம் விமர்சகர்களிடம் மொக்கை அடி வாங்கும் என்று தெரிந்தே சேர்த்தது போல் ஓரிரெண்டு "அல்வா" காட்சிகள்.அந்த காலத்தில் ரசிகர்களை முக்கியமாக இளைஞர்களை ஈர்க்கும் சாதனமாக, வசூலும் ஆவதற்கு நல்ல உதவியாக இருந்திருந்தாலும் இருந்திருக்கும்.அதில் "ஐட்டம்" சீன் ஒன்று போதே நாயகர்கள் ஓநாயாக மாறுவது அசத்தல்.ரொமான்ஸ் மூடில் இருக்கும் பார்வையாளர்களை சற்று அதிரவும் செய்யக்கூடியது .எல்லாவற்றையும் தாண்டி Pino Donaggio-வின் பின்னனி இசை.ஒரு அமெரிக்கன் படத்துக்கு இந்த இத்தாலிக்காரர்-தான் பெரிய ஆறுதல்-நா பாருங்களேன்.என்ன இருப்பினும், சமீப காலத்தில் பார்த்த ஹாரர் படங்களில் தெ ஹௌலிங் ஓரளவு நல்ல ஃபீலிங் கொடுத்ததை தவிர்க்க முடியவில்லை. கண்டிப்பாக ஓநாய் படங்களின் வரிசையில் சிறந்த இடத்தை கொடுக்கலாம்..பல சினிமாக்களில் கண்ட காட்சிகளே இதிலும் ஓடினாலும் அதனை கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இசை, ஒளிப்பதிவு ஆகியவை கலந்து சுவாரஸ்யமாக தந்தது இயக்குனரின் வெற்றி.ஹாரர் நண்பர்கள் தவற விடவே கூடாத ஒரு கிளாசிக் படமாக இதை ரெக்கமண்ட் பண்றேன்.பாருங்க-ப்பா.

கொசுரு தகவல்: இந்த படம் கொடுத்த ஆறுதலில் அடுத்த பார்க்க போவது An American Werewolf In London (1981)..அதிலும் ஒருத்தன் ஓநாயா மாறுவானாம்..கதை படித்தேன்.பார்த்துட்டு பிடித்தால் வழக்கம் போல் மொக்க பதிவொன்று போடுறேன்.

Thursday, 6 August 2015

An Education (2009) - பருவ காதலின் விளைவுகள்..


கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த படங்களுல் ஒன்றாக கருதப்படும் என் எடுகேஷன் படத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.சிலர் கண்டு ரசித்திருப்பார்கள்.சமீபத்தில் பார்த்து சிந்திக்க வைத்த படமிது,1960 ஆம் ஆண்டுகளில் பள்ளியில் பயின்றுவரும் 16 வயது மாணவிக்கும் நடுத்தர வயதிலான ஒருவருக்கும் இடையில் இருந்த உறவையும் ஏமாற்றங்களை பற்றியும் பேசும் திரையிது.
என் எடுகேஷன் - சிறந்த திரைப்படம், நடிப்பு மற்றும் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட, 2009 ஆம் ஆண்டு Carey Mulligan, Peter Sarsgaard, Emma Thompson, Dominic Cooper, Olivia Williams மற்றும் பலரது நடிப்பில், Lone Scherfig இயக்கத்தில் வெளிவந்த கமிங்க் ஒப் ஏஜ் காதல் சித்திரமாகும்.
ஜென்னி மெல்லொர் அழகானவள், நல்ல அறிவுத்திறனும் கடின உழைப்பும் கொண்ட 16  வயது பள்ளி மாணவி.தன் தந்தையின் ஆசைகள் படி ஒக்ஸ்ஃபோர் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டுமென்பதை லட்சியமாக, முழு நாட்டத்துடன் படித்துவருபவள்.பள்ளி முடிந்து ஒரு நாள், மழைநேர பொழுதில் டேவிட் கோல்ட்மன் என்பவரை தற்செயலாக சந்திக்க நேர்கிறது.டேவிட் - தவறான வழியில் பணத்தை ஈட்டுவதை பழக்கமாக கொண்டவன், ஏறக்குறைய ஜென்னியை விட இரண்டு மடங்கு அதிகமான வயதை கொண்ட யூத இனத்தை சேர்ந்தவன்..
தொடக்கத்தில் நட்பு என்ற முறையில் அறிமுகமாகும் உறவு வழக்கம் போல காதலை எட்டிப் பார்க்கிறது..போக போக ஜென்னி மற்றும் குடும்பத்தின் நம்பகத்தன்மைக்கு உட்பட்ட ஆளாகவும், ஜென்னியின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் காதலனாகவும், இக்கட்டான சந்தர்ப்பங்களில் துணைப்புரியும் நல்ல இதயம் கொண்ட மனிதனாகவும் காட்டிக்கொள்கிறான்.டேவிட்டுடனான உல்லாச உறவில் பரிட்சையில் தோல்வி அடைவதோடு படிப்பை உதறி தள்ளுகிறாள்..இதனை தொடர்ந்து..  ஜென்னியின் பெற்றோரும் டேவிட்டை திருமணம் புரிய சம்மதம் சொல்கின்றனர்.திருமண நாள்..அங்கு வெளிப்படும் உண்மைகளே மீத திரைக்காட்சிகள்.சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் படம், முடிந்தப்பின்னும் மனதோடு நல்ல உணர்வுகளை தரக்கூடியது.

பருவ வயது ஆசைகள் நிரம்பிய மனக்கட்டுப்பாட்டுகளை மீறிய முழுமையாக ஒருவரை பற்றி அறிந்துக்கொள்ளமால், அளவுக்கோளை தாண்டிய பாசமும் நம்பிக்கையும் கொண்ட பருவ வயது மாணவியாக 
அழகு பதுமையாக வரும் Carey Mulligan..இவரது நடிப்பீல் முதன் முதலாக பார்த்த படமிது.. மையக்கதையே இவரை சுற்றி நகர்வதால் படம் முழுக்க நம்மை வெகுவாக கவர்கிறார்.17 வயதை நெருங்கும் ஜென்னி மெல்லர் என்ற பாத்திரத்தில் வரும் கேரிக்கு இத்திரைப்படத்தின் பொழுது வயது 24 என்பது குறிப்பிடதக்கது.சிறந்த நடிப்புக்காக இவர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்க மேலும் ஒரு சிறப்பாகும்.  

படத்தில் மையக் கதாபாத்திரமான ஜென்னியை திரைக்காட்சிகளின் உள்ளே அழைத்து செல்லும் டேவிட் கொல்டுமன் கதாபாத்திரத்தில் Peter Sarsgaard..அநேகமாக இவரது நடிப்பில் பார்க்கும் 4 அல்லது 5 ஆவது படமென்று நினைக்கிறேன்.என்றும் இல்லாத அளவில் இவரது நடிப்பு என்னை அதிகமாகவே பாதித்துவிட்டது.காட்சிகள் ஒன்றன் பின் நகரவே கொஞ்சம் எரிச்சலையும் மூட்டுகிறார்.பொதுவாக பீரியட் படங்களின் மீது அதிகமான பிரியம் கொண்டவன்..அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த வகை அமைப்பில் படங்களில் இடம்பெறும் அழகுதான்.அந்த வரிசையில்..இந்த படமும் ஒன்றாகிவிட்டது.  

1960- ஆண்டுகளின் பழைய இங்கிலாந்தை கண் முன் வந்து நிறுத்துகிறது திரைப்படம்..பிரமாண்டமான, மிக பெரிய அளவில் கேமரா அசைவுகள், இயற்கை காட்சிகள் இல்லாவிட்டாலும் கதாபாத்திரங்களுடன் இணைந்தே ஒர் அழகான ஓவியமாக வலம் வருகிறது ஒளிப்பதிவு.இதனை சிறப்பான முறையில் கையாண்ட John de Borman கண்டிப்பாக பாராட்டதக்கவர்.தனது திரையுலகில் இன்னொரு சிறப்பான பணியை செய்திருக்கிறார். ப்ரான்ஸ் நாட்டில் இடம்பெரும் காட்சிகள் சில கணங்களே வந்தாலும் மனதிலே நிற்க்கின்றன.படத்தின் வெற்றிக்கு கலை இயக்குனர் Ben Smith-இன், (The Queen (2006) போன்ற படங்களில் பணிப்புரிந்தவர்) பங்கும் மிக அதிகம்.  

ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று பல பிரிவுகள் ஒரு கதையை சிறந்த படமாக உருவாக்க மிக பெரிய உதவியாக இருந்தாலும் எந்த ஒரு படைப்பையும் முழுமையாக ரசிகர்கள் மட்டுமன்றி விமர்சக ரீதியிலும் காலங்கள் கடந்து மனதில் நிற்கச் செய்வது திரைக்கதைதான் என்பது எனது தனிப்பட்ட கருத்து..ஏனெனில் ஒரு சிம்பிளான கதையை கூட திரைக்காட்சிகளின் வழியே நல்ல படைப்பாக மாற்றலாம்.அந்த வகையில் இந்த படமும் ஒரு நல்ல உதாரணம்... இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளரான Nick Hornby, ஒரு நாவல் மற்றும் கட்டுரை ஆசிரியரும் ஆவார்..சில பிரபலமான நாவல்களான High Fidelity, About a Boy ஆகியவை மூலம் பலரை கவர்ந்தவர் என்பதோடு, இந்த படத்துக்காக இவர் ஆஸ்கர் பரிந்துரை பெற்றது குறிப்பிடதக்கது. 

தற்போதைய சூழலில் மலேசியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பள்ளி பருவ காதல் என்பது அதிகமாகவே வளர்ந்துக்கொண்டு வருகிறது.இதனை காதல் என்று சொல்வதை விட பதின்ம வயதில் வரும் ஒரு இன கவர்ச்சி என்று கூறலாம்.இப்படி ஒரு இளம் வயதில் "காதல் அது இது" என்று சாதாரண இன கவர்ச்சியின் பால் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணி வருந்தும் சகோதர சகோதரிகள் நிறையவே.இதே சூழலை 60 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் வசித்த ஒரு மாணவியின் கதையாக்கி இதனால் ஏற்படும் விளைவுகளையும், அதிலிருந்து மீண்டு வர வேண்டிய அவசியத்தையும், மேலோட்டமாகவும் தெளிவாகவும் அதே நேரம் மென்மையாகவும் தரமான ஒரு பிஜி - 13 ரேட்டிங் பெற்ற படைப்பாக வழங்கிய படக்குழுவினருக்கு பல நன்றிகள்.கண்டிப்பாக பதின்ம வயதை தொடுபவர்கள் மற்றும் தன் வாழ்க்கையின் அடுத்த படியில் காலடி எடுத்து வைக்கும் இளம் வயதினர்கள் பார்க்க வேண்டிய படம்.
Though the latter part of the film may not appeal to all, An Education is a charming coming-of-age tale powered by the strength of relative newcomer Carey Mulligan's standout performance. - Rotten Tomotoes "94%"
இங்கிலாந்து படமான இது, உலகளவில் நல்ல வரவேற்பு பெற்றதோடு 7.5 மில்லியன் பட்ஜெட்டில் உலகம் முழுவதும் சுமார் 26 மில்லியனுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடதக்கது..மேலும், பல திரைப்பட விழாக்களில் பல பரிந்துரைகளோடு நிறைய விருதுகளை வென்றது இன்னொரு சிறப்பு.மொத்ததில், இந்த படம் எனக்கு பிடித்த கவர்ந்த திரைப்படங்களில் ஒன்றாகிவிட்டது.சமீப காலத்தில் பார்த்து ரசித்து சிந்திக்க வைத்த ஒரு படம்..நடிகர்களின் நடிப்புக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம்.

என் எடுகேஷன் - அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வாழ்க்கை  படம் பாடம்/ 

==============================================================
 பின் குறிப்பு : உலக சினிமாவை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு "கமிங்க் ஒஃப் ஏஜ்" என்ற வகையை பற்றி சொல்ல தேவையில்லை..திரையுலக வரலாற்றில் பல நல்ல படைப்புகளை கொடுத்த பிரிவு என்று சொன்னால் அது மிகையாகாது.குழந்தை பருவத்திலிருந்து பதின்மவயதை சந்திக்கும் தனிநபர்களின் வாழ்க்கை அவர்களிம் மனம், உடல் ரீதியில் ஏற்படும் மாற்றங்களை (பாலியல், கலவி) மையக்கருவாக கொண்டு எடுக்கபடும் படைப்புகள் கமிங்க் ஒஃப் ஏஜ் சினிமாவாக கருதப்படுகின்றன.60 ஆண்டுகளிலிருந்து உலகம் முழுவதும் இது போன்ற படங்கள் பெரிய அளவில் எடுக்கபட்டதோடு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை நல்ல வரவேற்ப்பு பெற்று வருவது சிறப்பு..அமெரிக்கா மட்டுமன்றி வேறு நாடுகளில் இதுப்போன்ற கதை அம்சங்களை கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களை "டீன் மூவிஸ்" என்றும் அழைக்கபடுவது குறிப்பிடதக்கது. இந்த வகையில் வெளிவந்த சிறந்த படங்கள் சில : Stand By Me (1986), Girl Interrupted (1999), Closely Watched Trains (1966), Stealing Beauty (1996), 

மேற்ச்சொன்ன படங்களில் சென்ற வருட இடையில் பார்க்க கிடைத்த படம் Closely Watched Trains (1966)..கமிங் ஒஃப் ஏஜ் பிரிவில் வெளிவந்த செக் குடியரசு நாட்டில் எடுக்கபட்ட ஒரு மாஸ்டர்பீஸ் எனலாம்..இரயில் நிலையத்தில் புதிதாக வேலை கிடைத்து செல்லும் பதின்ம வயதான இளைஞன் பற்றியது..ஆஸ்கர் விருது பெற்ற படம்..பதிவாக எழுத நினைத்த படம்..சிறந்த உலக திரைப்படங்களை விரும்புவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.    
==============================================================
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge