Follow by Email

Wednesday, 28 December 2011

ஹாலிவுட் சினிமா : The Twelve Days of Christmas Eve (2004) {TV MOVIE} - இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைச்சா..

===============================================================
கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிவரும் அனைவருக்கும் மற்றும் புத்தாண்டை எதிர்நோக்கும் உலக மக்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..2012 ஆம் வருடம், எல்லா நலங்களும் வளங்களும் நிம்மதியான ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கையை அனைவரும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.மகிழ்வுடன் புத்தாண்டை மனமார வரவேற்போம்.   


===================================================================

கிறிஸ்துமஸ் தினத்தன்று தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மற்றும் கனடா இணைந்து தயாரிக்கபட்ட தொலைக்காட்சி திரைப்படம் இது.

   கால்வின் கார்ட்டர், ஒரு வெற்றிகரமான வணிக நிர்வாகி, நம்ம வியாபாரி திரைப்படத்தின் எஸ்.ஜே. சூர்யா போல அப்பா, தம்பி, மனைவி, குழந்தை என்று அனைவரும் இருந்தும் எப்பொழுதும் வியாபாரம்..வியாபாரம் என்று சுற்றிக்கொண்டு குடும்பத்தை புறக்கணித்து விலகி வாழ்பவர்...அன்று, கிறிஸ்துமஸ் ஈவ் (பண்டிகைக்கு முதல் நாள்), வழக்கம் போல குடும்பத்தை பற்றியும் அவர்களது கொண்டாட்டத்தில் பங்குப்பெறாத விதத்தில் தன்னுடைய வியாபாரத்தை பற்றி கவனிக்க செல்கிறார்.

  இவரது கெட்ட நேரம், கட்டிடத்தின் உயரே இருக்கும் சைன் போர்டு இவர் மீது விழவே இறந்து போகிறார்.அடுத்த நாள் காலையில் மருத்துமனை கட்டிலில் கிடக்கிறார்...அப்பொழுது, புது எண்ட்றியாக Angie என்ற நேர்ஸ் அங்கு வந்து உனக்கு நான் 12 நாட்கள் தருகிறேன்..மீண்டும் பழைய நிலைக்கு நீ வரவேண்டுமெனில் நீ அந்த 12 நாட்களில் கிறிஸ்துமஸ் முதல் தினத்தை சிறப்பாக அதைவிட முக்கியம் முழுமையாக அனைவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் கொண்டாட வேண்டும் என்று சொல்லிவிட்டு  போகிறார்..

கார்ட்டரும் ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தையும் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது செய்கிறேன் என்று நினைத்து மீண்டும் மீண்டும் மருத்துமனை கட்டிலுக்கே வந்து விழுகிறார்.. (அந்த காட்சியில்லாம் ரசிக்கும் வகையில் இருக்கும்)..


      //// இத்திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது மனதுக்கு தோன்றியது "இந்த வாய்ப்பு நமக்கும் கிடைச்சா"..ஓரளவு நால்லாவே படிக்கிற மாணவன் நான்..ஆனால் சில நேரங்களில் எனக்கே தெரியாம நல்லா படித்திருந்தும் எதிர்ப்பார்த்த அளவுக்கு நல்ல முடிவு கிடைக்க தவறிடுவேன்..இதனால மனது நொந்துப்போன மணி நேரங்கள் அதிகம் (இததான் காலம் சரியில்லனு சொல்லுவாங்களோ.??)..அதுவே நமக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சா..எப்படிருக்கும் ?? சும்மா கலக்கிடுவோமுல..(எல்லா நாளும் ஒரே கேள்வித்தாளு இருந்தா..
ஹிஹிஹீ!!) ///

   சோஓஓ...யாருக்கும் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை கார்ட்டர் பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக்கொண்டாரா என்பதுதான் படத்தின் மீதக்கதை..இந்த கேள்விகளுக்கு வாய்ப்பு கிடைப்பின் படம் பார்ப்பதே நல்லது..காண விரும்புவர்கள் கிழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்யவும்..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  திரைப்படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி காமெடி திரைகளின் ஜாம்பவானாகிய Steven Weber, மனிதர் நடிப்பில்பின்னி எடுக்கிறார்..முகத்தில் நகைச்சுவைத் துளிகள் நீராடுகின்றன.அவ்வப்போது திரைப்படங்களிலும் முகம் காட்டும் இவர் அமெரிக்க தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானவராம்..அதுக்கு இணையாக நடிப்பிலும் கவர்கிறார்.

இவரைத் தவிர்த்து படத்தில் சொல்லும் அளவுக்கு நடிப்பளவில், Mark Krysko, Chad Willett, Stefanie von Pfetten, Patricia Velasquez என்று பலரும் தத்தம் பணிகளின் மூலம் படத்துக்கு கை கொடுத்துள்ளனர்.

2004 ஆம் ஆண்டு பிரபல அமெரிக்க பெண் இயக்குனரான Martha Coolidge என்பவர் இத்திரைப்படத்தை எடுத்துள்ளார்..இவர் பெயரையும் அறிந்திராத அமெரிக்க தொலைக்காட்சி ரசிகர்கள் மிக குறைவாம்..The Prince and Me (2004), Three Wishes (1995), Angie (1994) என்று சில படங்களை ஹாலிவுட் படங்களை இயக்கிருந்தாலும் தன்னுடைய பெரும்பாலான திரையுலக வாழ்க்கையை தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் கழித்தவராம் (யாரு கண்டா)..

 வேலை, நேரம் இல்லை என்று பல காரணங்களை காட்டி நம்மில் பலர் உண்மையான மன திருப்தியையும் சந்தோஷத்தையும் உணருவதில்லை..நம்மேல் மரியாதையும் அன்பும் வைத்திருப்பவர்களை நாம் மதிப்பதும் வரவேற்பதும் குறைந்துக்கொண்டே வருகிறது..இதுப்போன்றவர்கள் பார்க்க வேண்டிய படமிது.உறவுகளை பற்றியும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையையும் இந்த படம் மறைவாக பேசுகிறது...வெறும் காமெடியை மையமாக வைத்து..


படத்தில் காட்சிகள் நகர நகர என்னையும் அறியாமல் சில காட்சிகள் பிடித்துவிட்டன..முதல் நாள் இறந்தவுடன்..அடுத்தடுத்த நாட்கள் ஏதாவது விதத்தில் கார்ட்டர் இறப்பதும், ஏதோ நல்ல காரியம் செய்கிறேன் என்று நினைத்துவிட்டு அப்பா வந்து வருடந்தோரம் இனிப்பு கொடுக்கும் தனது அங்காடிக்கு எல்லோருக்கும் கார்ட்டர் விடுமுறை விடுவதும் என்று பல வசனங்கள் கலக்கலான ரகம்..அதே போல செண்டிமெண்ட் காட்சிகளும் வசனங்களும் சில உள்ளன.ஆனால் அவை கண்டிப்பாக அழ வைக்க கூடியவை அல்ல.கார்ட்டரின் அப்பாவாக வருபவரின் நடிப்பு மிக நன்று.எனக்கு ரொம்ப பிடித்திருந்தது

மொத்ததில், இத்திரைப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டியதும் இல்லை அதே நேரம் பார்க்க கூடாததும் இல்லை..நேரம் இருப்பின் கட்டாயமாக பார்த்து ஜாலியாக எஞ்சோய் பண்ண வேண்டிய படம் இது..

The Twelve Days of Christmas Eve (2004) : வாய்ப்பு கிடைத்தால் ஹீரோ..கிடைக்கவில்லையெனில் ஸீரோ..

IMDB : 5.4 / 10
MY RATING : 5.6 / 10 : Enjoy With Your Family 
====================================================

பின் குறிப்பு : இந்த படம் பார்க்கும் பொழுது பல இடங்களில் என் ஈசாணி    மூளைக்கு எட்டிய படம் Groundhog Day (1993) தான்..இது ஒரு நல்ல படம்..என்ன ஏனு..எந்த காரணமும் தெரியாம திடீரென்று மீண்டும் மீண்டும் ஒரே நாளையே வாழ்ந்து (சாரி.. முழித்து) கொண்டிருக்கும் Phil என்ற கதாபாத்திரத்தில் Bill Murray நடித்த படம்..நல்ல காமெடி ரசிகர்களுக்கு ஒரு விருந்து..இந்த படத்த பற்றி இன்னொரு நாள் விளா வாரியா எழுத வேண்டும் என்று தோன்றுகிறது..அதுக்குள்ள பார்க்காதவர்கள் பார்க்க டிரை பண்ணுங்க..என்ன ஓகேவா..பை..பாய் 2011..
================================================= 

ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் (என்னா ரெண்டு தடவனு பார்க்கிறிங்களா..எல்லாம் ஒரு கிக்குதான்)..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Tuesday, 20 December 2011

ஹாலிவுட் சினிமா : The Punisher - 2004 : தமிழ் திரைப்படங்கள் சாயலில் ஒரு ஹாலிவுட் ஆக்சன் சினிமா

------------------------------------------------------------------------------ 
தொடர்ந்து ஆதரவு வழங்கும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.நண்பர்கள் அனைவரும் தாரளமாக தங்களது கருத்துகளை பகிந்துக் கொள்ளலாம்.கூடவே, தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமாயின் கீழே உள்ள ஒட்டு பெட்டியில் கொஞ்சம் என்னை கவனிங்க.இதன் வழியே மற்றவர்களுக்கும் இந்த பதிவு சென்றடைய ஏகுவாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இன்றைய சிறு "பார்வை".. 
=======================

  டைட்டிலை பார்த்தவுடனே சாயலு, தமிழு, ஹாலிவுட்டுன்னு கதவுடரானு..நினைக்காதிங்க..படம் பார்த்து முடியும்போது, இந்த படத்த தமிழ் படங்களை பார்த்து எடுத்துட்டாங்களோ என்று தோன்றியது..ஏனா அதே சாயலில் இங்கு இருந்த காட்சிகளும் கதையும்தான்..


Film : The Punisher      Year : 2004
Country : America      Rating : R (View)
Director : Jonathan Hensleigh      Writers : Jonathan Hensleigh, Michael France
Stars : Thomas Jane, John Travolta and Samantha Mathis
Awards : 1 win & 4 nominations See more awards
========================================

ஒரு ஹீரோ..திடீரென்று வில்லனிடம் ஏற்படும் சில பிரச்சனைகளால், விடுமுறையை ஹீரோவும் அவரது சந்தோஷமான குடும்பமும் கழித்துக்கொண்டிருக்க அங்கு வரும் வில்லனின் ஆட்களால் ஹீரோவோட மொத்தக் குடும்பமும் கொல்லப்படுகிறது..எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியாம போகுது..பத்தாதுன்னு நம்ம ஹீரோவும் செமத்தையா அடிவாங்குறாரு..பேசாம துப்பாக்கி எடுத்து பொட்டுன்னு போடாம பாம் வைக்கிறேன் வெடிக்க வைச்சி கொல பண்றேன்னு எதையோ பண்ணி தப்பிக்க வச்சிராங்க நம்ம வில்லனோட அடியாலுங்க..மீண்டும் வர்ர நம்ம ஹீரோ சும்மா விடுவரா..அடுத்த கட்ட காட்சிகள் எல்லாம் பழிவாங்குகிற காட்சிகள்தான்.வரிசையா வில்லங்கள போட ஆரம்பிக்கிறாரு..

கடைசில குடும்பத்த கொன்னவங்கள பழிவாங்குறாரா இல்லையா என்கிறதுதான் கிளைமக்ஸ்..

   இப்ப சொல்லுங்க இது தமிழ் சாயல் கதைதானே. (ஏதோ எனக்கு தோன்றியது) ஏதோ 80 ஆம் ஆண்டுகளுல பார்த்த படத்தோட கத மாதிரிதான் மூளைக்கு எட்டினுச்சி (ஆமா அம்பானி முள)..உண்மைய சொல்லனும்னா இது போன்ற கதைகளுக்கும் இவங்கதான் முன்னோடி.
(ஏதோ என் பார்வையில எட்டியபடி).
========================================

 இதுல ஹீரோவா Thomas Jane பனிஷர் மற்றும் கேஸல் என்ற ரெண்டு கேரக்டருல  நடிக்க, இவரோட மனைவியா..சரி விடுங்க செத்து போரவங்க பேரு எதற்கு..(ஐஐய்யோ ரகசியத்த சொல்லிடேன்னே) இவங்கள தாண்டி படத்துல ரொம்ப முக்கியமான கேரக்டருல வில்லனா  John Travolta நடித்திருக்காரு.
  
  2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை இயக்கிருப்பது Jonathan Hensleigh.இதில் Thomas Jane, John Travolta, Will Patton, Roy Scheider And Laura Harring ஆகியோர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க திரைக்கதையை இயக்குனருடன் இணைந்து Michael France எழுது இருக்கிறார்.

The Punisher - 2004 திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :

இது ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் கலந்த அதிரடி படம். (கிளைமக்ஸ் = பாம் வெடிதான்)..மற்றபடி சஸ்பென்ஸ் எல்லாம் நீங்க எதிர்பார்க்கிறது ரொம்ப தப்பு.ஏனா அதுக்கு இடமே இல்லாம ரொம்ப நேர்மையா கதைய சொன்னவருக்கு என் பாராட்டுக்கள்..
===================

சும்மா சொல்லக்கூடாது, ஹீரோவோட மொத்த குடும்பத்தையும் போட்டு தள்ளுர காட்சி இருக்கே..இதே சிட்டுவேஷனில் நிறைய காட்சிகள் பார்த்திருந்தாலும் இது நன்றாகவே இருந்தது.
==============================

ஹீரோ, தன்னுடைய குடும்பத்த கொன்னதனால வில்லனோட ஃபேமிலிய பழிவாங்கும் (உயிர்வாங்கும்) காட்சிகள் நல்லாதான் இருக்கும்.முக்கியமாக கிளைமக்ஸ் காட்சியில் (அதாவது நம்ம ஹீரோகிட்ட வில்லன் மாட்டிக்கிற) டயலாக்ஸெல்லாம் பரவாயில்லை.
========================================

 பொதுவாக, இது போன்ற படங்களில் ஒளிப்பதிவும் ஸ்பெஷல் எஃபெக்ஸும்தான் பக்க பலமாக இருக்கும்.இந்த படத்திலும் இது அருமையான ரகம்தான். ரொம்ப ஹைலைக்டா சொலனும்னா..ஹீரோயின் வீட்டு பக்கத்து ரூமுல ஹீரோவும் ஒரு அடியாளும் சண்டை போடுற காட்சி அசத்தலாக இருக்கும்.சுமார் ஐந்து நிமிடங்களுக்கு ஓடும் இந்த காட்சியை மட்டும் தனியா டிரீம் பண்ணி வச்சிருக்கேனா பாருங்களேன்..
=================================================

இதே கதையை கொண்டு The Punisher என்ற படத்தை 1989 - ஆம் ஆண்டினிலேயே வந்துவிட்டதாம்..இதில் சுவாரஸ்யம் என்னவெனில் இவ்விரண்டு படங்களுமே கோமிக் புத்தகங்களை தழுவி எடுக்கபட்டதாம்.இதே பெயரில் வந்த கேம்ஸ் கூட விளையாடிருக்கிறேன்.பரவால..
===========================================================

இந்த படத்தின் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமெல்லாம் எடுத்திருக்கார்கலாம்.. அது இன்னும் பார்க்கவில்லை..பார்த்தவுடனே அடுத்த "பார்வைதான்"..
=====================================================================

இறுதியாக,

     வசூலில் போதிய அளவு நல்ல வரவேற்ப்பு பெற்றிருந்தாளும் விமர்சனங்கள் ரீதியில் அதிகமாக குத்து வாங்கிய படமிது..எனினும் வழக்கமான ஹாலிவுட் ஆக்சன் ஃபோர்முலாவில் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத விறு விறுப்பாக காட்சிகளோடு ஓய்வு நேரங்களில் பார்க்கக்கூடிய பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படமாக சொல்லலாம்.குடும்பத்தோடு பார்க்க இயலாத படமாயினும், ஆக்சன் பட விரும்பிகள் பார்க்க வேண்டிய ஒரு ஹாலிவுட் மசாலா இந்த தெ பனிஷர்.

Imdb : 6.3/10
 
My Rating : 6.5/10 : An Usual Hollywood Masala..But Still Watchable.

  கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Thursday, 15 December 2011

வாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : மாதம் : 12 நவம்பர் 2011 ====> 13 - டிசம்பர் 2011


கடந்த மாதம் 12 ஆம் திகதியோடு சுமார் 15 நாட்களுக்கு மேல் இணையத்தின் பக்கம் தலைக்காட்ட நேரம் / வாய்ப்பு கிடைக்கவில்லை...சில வேலை மற்றும் படிப்பு சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டு என்னை நானே பிஸியாக்கி கொண்ட நாட்கள் அது..இருந்தாலும் பதிவுகள் எழுதுவதை

நிறுத்தவில்லை.. கிடைக்கும் பொழுதில் படங்களை பார்த்து சிறிது சிறிதாக எழுதிக்கொண்டிருந்தேன்..அப்படி எழுதிய பதிவுகளையே கடந்த 14
நாட்களில் 6 பார்வைகளாக கொடுக்க முடிந்தது.

இதற்கிடையில் மற்றும் இதுவரையில் பல கருத்துக்களையும் பாராட்டுகளையும் அதிகமாக வழங்கி மேலும் என் எழுத்துகளுக்கு பலம் சேர்த்து வரும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டு, இந்த இரண்டு வார காலத்தில் போட்ட பதிவுகளும் வாசித்து மனதை கவர்ந்த பிற வலைப்பூ பதிவர்களின் எழுத்துக்களும் இன்றைய "பார்வையாக"..

ஓய்வு நேரங்களில் விரும்பி படித்து மனதை 
================================================ 
கவர்ந்த சில தமிழ் பதிவுகள்..
================================குறிப்பு : படித்த சில பதிவுகளை மறந்துவிட்டேன்..ஞாபகம் வரும் பொழுது கண்டிப்பாக வேறொரு பதிவில் போடுகிறேன்.நேரம் குறைமை காரணமாக சில பதிவுகளுக்கு சரியான முறையில் கருத்துக்கள் பகிந்துக்கொள்ள முடியவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்அப்படியே..பிடித்திருந்தால் ஒர்ர் ஒட்டு போடுங்கள்..மற்றவர்கள் பசிக்க ஏதுவாக இருக்கும்.ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Monday, 12 December 2011

ஹாலிவுட் சினிமா : லேரி கிரோன் / Larry Crowne (2011) : ரஜினி சாரும் இத்தனை வயது கடந்து கல்லூரி போகும் டாம் ஹாங்க்ஸ்..


ரஜினி சார் 
சின்ன வயசிலருந்தே ரஜினி சாரோட பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன்..தமிழ் படங்கள பார்க்க ஆரம்பித்த காலத்துல இருந்தே டிவியில சூப்பர் ஸ்டாரோட ஒரு படத்தக்கூட விடாம பார்த்து ரசித்த அனுபவங்களும் சந்தோஷமான உணர்வுகளும் ஏராளம்..உடல் நிலை சரியில்லாது இருந்த பொழுது, தலைவரு ஆரோக்கியமா இருக்காரா..நலமாக இருக்கிறாரா என்று அன்றாடம் நாளிதளிலும் இணையத்திலும் டிவியிலும் தேடி தேடி படித்த கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.
இன்று அவரது பிறந்த நாள், என்றென்றும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் அவர் வாழ இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன்..தலைவா ...சீக்கிரமா அடுத்த படத்துல வாங்க..காத்திருக்கோம்..   
==============================================================================


Film : Larry Crowne      Year : 2011
Country : United States     Rating : PG - 13 (advisory »
Director : Tom Hanks      Writers : Tom Hanks, Nia Vardalos
Stars : Tom Hanks, Julia Roberts and Sarah Mahoney
Awards : (இன்னும் இல்ல..இதுக்கு மேலையும்...சந்தேகம் தான்..)


++++++++++++++++++++++++++++++++++++
LARRY CROWNE - 2011 DVDRIP XVID
+++++++++++++++++++++++++++++++++++++


 நம்ம எல்லோருக்கும் நன்கு அறிமுகமான டோம் ஹேங்க்ஸ் மற்றும் ஜூலியா ராபர்ட்ஸின் நடிப்பில் இந்த வருடம் (2011) ஜூலை மாதம் வெளிவந்த ரொமாண்டிக் காமெடி வகையை சேர்ந்த காதல் திரைப்படமாகும்.நீண்ட வருடங்களுக்கு பிறகு இரண்டு முறை அகடமி விருதுகளை வென்றவரான டோம் ஹேங்க்ஸ், Nia Vardalos என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 
  
கதைச்சுருக்கம் :
====================


தலைப்பு கதாபாத்திரமான லேரி கிரௌன் (Tom Hanks), big-box என்னும் மிகப் பெரிய சூப்பர்மார்க்கேட்டில் பணிப்புரியும் நடுத்தர வயதுக்காரர்லேரியை பொருத்தவரை, இவர் பல ஆண்டுகளாக கடற்ப்படையில் வேலை செய்தவர் மட்டுமன்றி கலயாணம் செய்து டைவர்ஸும் ஆனவர்..வெறும் பள்ளி படிப்பை மட்டுமே படித்துள்ள லேரிக்கு இதுவே இவரது வேலை நிறுத்ததுக்கு காரணமாக ஆகிறது..இதனால வீடும் பறி போகின்ற நிலைமை வருது.பல இடங்களுல வேல தேடியும் கிடைக்காம மனமுடைந்து போக, பக்கத்து வீட்டுக்காரரின் அட்வைஸின் பெரில் லோக்கலில் உள்ள community கல்லூரில படிக்க வராரு லேரி..
அங்க இவரவிட 
எல்லோரும் வயசுல சின்னவங்க..
ஸ்டைல், டிரெஸிங்குன்னு எல்லமே வேறுப்பட, அவங்களோட நட்பு புடிச்சு  எல்லாத்தையும் மாத்திகுறாரு..இடையில (அட இடுப்புள இல்லங்க)..நம்ம ஹீரோயின் மெர்சிடிஸ் (காரு இல்லங்க) டைனட் (இவங்கள பத்தி ஸ்கிரின்ல தெரிஞ்சுக்குங்க).ஹீரோ படிக்கும் கிளாஸுக்கு பாடம் சொல்லித்தர வருராங்க..இவங்க ரெண்டு பேருக்கும் ஆரம்பத்துல ஒத்து வராம போக..போக லேரி டைனட்டொட காதலுல விழுலாரு..இவர டைனட் தாங்கி பிடிச்சாங்களா ? லெரிக்கு ஏதாவது வேல கிடைச்சதா ? அல்லது என்னாதான் நடந்ததுன்னு தயவு செய்து படத்த பாக்காதவங்க டிவிடியிலோ அல்லது டவுன்லோடோ போட்டு தெரிஞ்சுக்குங்க..பிளீஸ்..

Larry Crowne (2011) திரைப்படத்தை பற்றிய சில 
===============================================
சுவாரஸ்யங்கள் :
====================


  That Thing You Do! (1996) என்ற திரைப்படத்துக்கு பிறகு சுமார் 14 ஆண்டுக்கால இடைவெளியில் டாம் ஹேங்க்ஸ் இயக்கிருக்கும் ஹாலிவுட் படமிது (டிவி மூவி மற்றும் சீரிஸ் தவிர்த்து)..கிளிண்ட் ஈஸ்ட்வூத், மெல் கிப்சன் என்று நடிகர்களாக இருந்து பின்னாளில் சிறந்த இயக்குனர்களாக சினிமா உலகில் வலம் வந்தவர்களோடு ஒப்பிடும் பொழுது ஹெங்க்ஸ் இன்னும் தன்னை சிறந்த இயக்குனராக நிரூப்பிக்க அதிகமாக சிரத்தைகள் எடுக்க வேண்டும் என்பதை படம் பார்க்கையில் உணர முடிந்தது..இருப்பினும்..

  // வழக்கம்போல நடுத்தர வயதை தாண்டிய வேலை இல்லாது கல்லூரியில் படிக்கும் மாணவானாக வந்து நட்பு, காதல், வசனங்கள் என்று முதலிருந்து இறுதிவரை நடிப்பில், 55 வயதிலும் சும்மா பின்னி பெடலெடுக்கிறார்..அதுதான் லிமிட்...அதுதான் லெவெல்.//
====================
 
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் : ஒருவர் 10 வருடங்களாக ஒரு இடத்தில் பணிப்புரிகிறார்..இந்த வேலை அவர் அன்று படித்த படிப்புக்காக வழங்கபட்டது.சில காரணங்களுக்காக எதிர்ப்பாராத விதமாக மேல் இடம் அவரை பணி நீக்கம் செய்கிறது.இந்த 10 வருடங்களில் காலம் மாறிவிட்டது.வேலைக்கு அலைகிறீர்கள்.அப்போதைய படிப்பு தரத்தை வைத்துக்கொண்டு யாரும் வேலை கொடுக்க மறுக்கின்றனர்..பிறகு, அவரது நிலையென்ன ? என்ன செய்வார் ? (எனவே எல்லா ஸ்டூடன்ஸும் முடிஞ்ச அளவுக்கு படிச்சிக்குங்க)..எதிர்க்காலத்துல இந்த நிலை அதிகரிக்கலாம்
இதனை கருத்தில் கொண்டு காமெடி கலந்த காதல் கதையாக எல்லோரும் ரசிக்கும்படி வழங்கிய டாம் ஹேங்க்ஸுக்கு ஒரு நன்றி.   
================================ 


டைட்டில் கார்டினிலேயே டாம் ஹேங்க்ஸின் கலக்கல், வேலை நிறுத்தம், பக்கத்து வீடுக்காரருடன் உரையாடல்கள், ஜூலியாவின் அறிமுகம், கல்லூரி மானவர்களுடன் நட்பு என்று முதல் பாதி போரடிக்காமல் வேகமாக திரைக்கதையை நகர்த்தி சென்று பிற்ப்பாதியில் ஏதோ பேலன்ஸே இல்லாத விதத்தில் காட்சிகள் அமைந்திருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்..
==========================================

   பக்கத்து வீட்டுக்காரரான Cedric the Entertainer முதல் டாம் ஹேங்க்ஸின் கிளாஸ்மெட்ஸாக வரும் அத்தனை கதாபாத்திரங்களும் படத்திற்கு பெரிய பலம்.அதிலும், தாளியா என்னும் கதாபாத்திரத்தில் வரும் Gugu Mbatha-Raw மிக அழகான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.காஸ்டிங் தேர்வும் அருமை..இவர்கள் அனைவருடைய நடிப்பையும் கதையோடு ஒன்றவைக்கும் வகையில் காட்சிள் அமைத்து ரசிகர்களுக்கு கொடுத்து தான் சிறந்த நடிகர் என்பதை ஹேங்க்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
================================================== 


காட்சிகள் போக போக எனக்கு தேவையில்லாமல் வசூல் ராஜா படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.ஒரு வேளை, இவ்விரண்டு படங்களிலும் சராசரி வயதை கடந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும் அவர்களுக்கு கிடைக்கும் புதிய உறவுகளையும் காட்டியது கூட ஒரு வகையில் அந்த நினைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
===========================================================


அடுத்து, எனக்கு விருப்பமான ஜூலியா ராபர்ட்ஸ்..இவர் அறிமுகமாகி கிளாசில் நடக்கும் காட்சிகள் யாவும் ரொம்ப இண்டரஸ்ட்டிங்காக இருக்கும்.படம் முழுக்க ஒரு சோகம் தாங்கிய போதை மிதக்கும் முகத்தோட வந்து நம்மையும் கவர்கிறார்.இவருக்கும் ஹேங்க்ஸ் - க்கும் இடையே நேரடியான காதல் காட்சிகள் பெரியளவில் இல்லாவிட்டாலும், வெறும் கண்களிலேயே அனைத்து உணர்வுகளையும் கொடுத்து ரசிக்க வைத்த ஜூலியா - டாமுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.
====================================================================
             
  உலகளவில் சுமார் 50 கோடிக்கு மேல் வசூலை அடைந்துள்ள இத்திரைப்படம் தற்சமயம் ரோட்டோன் தொமொதோஸில் 34 சதவீதம் ஸ்கோரை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்..பல கோடி ரசிகர்களை கவர்ந்த ஜுலியா மற்றும் ஹேங்க்ஸ் நடித்தும், வசூல், விமர்சக ரீதியில் இப்படத்துக்கு பெரியளவில் நல்ல வரவேற்ப்பு கிடைக்காதது பெரிய ஏமாற்றமே.
===================================================================


  இறுதியாக, நல்ல நடிப்பு, இயக்கம் என்பதை தாண்டி ஓய்வு நேரங்களில் சும்மா ஜாலியாக கண்டிப்பாக அனைவரும் குடும்பத்தோடு (எதற்கும் இங்க பாருங்க) என்ஜோய் பண்ணி பார்க்கக்கூடிய பல பொழுதுபோக்கு அமசங்கள் நிறைந்த படம் இந்த லெரி கிரௌன்.

IMDB : 5.9 / 10
MY RATING : 6.5 / 10

கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Friday, 9 December 2011

தெ மம்மி/The Mummy - 1932 : பழமையான காதலின் புது உருவம்..

------------------------------------------------------------------------------- 
  சிறிது நாட்களுக்கு பிறகு Cinemax அலைவரிசையின் புண்ணியத்தில் பார்த்த ரொம்ப பழைய ஒரு ஹாரர் படம் தெ மம்மி..


   அமெரிக்க சினிமா உலகின் சிறந்த திரை ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான Karl Freund என்பவரின் திரை இயக்கத்தில் 1932 - ஆம் ஆண்டு வெளிவந்த மர்மம் - சஸ்பென்ஸ் ஆகிய வகையில் வெளிவந்த அமெரிக்க திரைப்படமாகும்.Boris Karloff, Zita Johann மற்றும் David Manners ஆகியோர்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க John L. Balderston என்பவர் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.


++++++++++++++++++++++++++++++++++
The Mummy 1932 Dvdrip Part One, Two
++++++++++++++++++++++++++++++++++
==============================================
கதைச்சுருக்கம் :

1921 - ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் நடக்கும் ஒரு வரலாற்று ஆய்வினில் இம் - ஹோ - டேப் என்னும் பழங்காலத்து எகிப்து மதகுருவின் கல்லறையை தோண்டி எடுக்கிறார்கள். கல்லறையின் மேலே எழுதபட்டிருக்கும் மந்திர சொற்களை தற்ச்செயலாக ஒருவர் படிக்கவே கல்லறை பிணம் மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது.

 கதை இப்பொழுது சரியாக 10 வருடங்களுக்கு பிறகு 1931 - ஆண்டு தொடர்கிறது, இப்பொழுது அந்த இம் - ஹோ - டேப் என்ற மம்மி முழுக்க முழுக்க கோரமான முக அமைப்புடன்  Ardath Bey என்ற பெயரில் உயிருள்ள மனித உருவில், தன்னுடைய பழங்காலத்து எகிப்த்திய காதலியின் பிணத்தைக் கொண்ட (Ankh-es-en-amon) கல்லறையை தோண்டி எடுக்க உதவி செய்கிது.
இத்தனை ஆயிரம் வருடங்களுக்கு பிறகு தன் நிறைவேறாத காதலை மீட்கவும் தன் காதலியுடன் இணையவும் இம்ஹோடேப் செய்யும் காரியங்களை திரைப்படத்தின் மீத காட்சிகளாக வருகின்றது..மேலும், தன்னுடைய லட்சியத்தை அடைய எகிப்திய வம்சாவளியில் வந்த ஹீரோயினான Helen Grosvenor (Zita Johann) என்பவரை தன்னுடைய வசம் ஈர்க்கவும் முற்படுகிறார்..இதற்கிடையியே இந்த எல்லா விஷயங்களும் ஹீரோவுக்கு தெரியவர..

  தன்னுடைய காதலி ஹெலெனை காப்பாற்றினாரா ? அல்லது இம்ஹோடேப் தன் மந்திர சக்தியால் இவர்களை அழித்து தன் காதலை அடந்ததா ? என்பதுப் போலான சில கேள்விகளுக்கு வழக்கம்போல ஒரு சில கொலைகள் கலந்த திகிலுடன் கதைய சொல்லிருக்கும் பழைய படம்தான் இந்த தே மம்மி..    
=============================================
தெ மம்மி திரைப்படத்தை பற்றி சில சுவாரஸ்யங்கள் :

முதலில் இந்த படத்தின் இயக்குனரான Karl Freund, ஒரு சிறந்த பிரபல பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளரும் இயக்குனருமாவார்.மெட்ரோபோலிஸ் போன்ற மிகப்பெரிய பட்ஜெட்டிலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.இந்த படத்திலும் அதை  நன்றாகவே செய்திருக்கிறார்..தொலைக்காட்சியில் முதன் முதலாக இந்த படத்தை பார்த்த போது இது என்னவோ 50 - ஆண்டுகளில் வெளிவந்த படம் என்று உண்மையாக நினைத்தேன் - நம்பினேன்.அந்த அளவுக்கு சிறிய பட்ஜெட்டில் ஸ்டூடியோ துணையுடன்  நடிப்பு, வெளி/உள்ப்புற காட்சிகள், எடிட்டிங் என்று அனைத்திலுமே திறம்பட தன் பணியை செய்திருக்கிறார்..படம் பார்த்தால் நீங்களும் இதை உணர வாய்ப்பு உண்டு.
================

படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எனக்கு எந்த நடிகரையும் தெரியவில்லை..உண்மையை சொல்ல வேண்டுமெனில் இவர்களின் முகங்களையே இப்படத்தில்தான் பார்த்தேன்.ரோஜெர் கார்மெனின் மூலம் வின்செண்ட் பிரைஸ், செவென் படத்தின் மூலம் கெவின் ஸ்பேசி என்ற வரிசையில் இந்த படம் மூலம் அறிந்துக்கொண்ட ஒரு பொக்கிஷமாக Boris Karloff (1887-1969) என்ற நடிகரை சொல்லலாம்.இணையத்தில் இவரை பற்றி தேடிய போதுதான் இவரை பற்றி பல விஷயங்கள் கிடத்தது..இவரும் ஹாரர் உலகின் சிறந்த புகழ்பெற்ற நடிகராம்..இந்த படத்திலும் பழங்காலத்து எகிப்திய மம்மியாக இம்ஹோதேப் என்ற பாத்திரத்தின் ஊடே கண்களிலேயே மிரட்டி இருக்கிறார்..1932 ஆண்டிலேயே இந்த மாதிரி நடிப்பு என்ன சொலவது..நான் சின்ன பையன். மன்னிச்சுடுங்க..
========================

அடுத்து படத்தில் பார்த்து ரொம்ப அசந்துப்போன ஒரு விஷயம் என்றால் கண்டிப்பாக மேக்கப்தான்..அந்த காலத்திலேயே இந்த..(ச்சே..எந்த மாதிரி சொல்லுறது..) மேக்கப் முயற்சியெல்லாம் சாத்தியமா என்று மம்மி வரும் காட்சிளில் எனக்கு தெரியாமயே மனதில் சொல்ல சொல்ல வைத்தது.அதுவும் இது 32 - இல் வந்த படம் என்று நினைக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.நம்பலன்னா  பாருங்க..
================================
சுமார் 80 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம், காட்சிகள் அளவில் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் 30 - ஆம் ஆண்டுகளிலேயே இந்தளவுக்கு சஸ்பென்ஸ் மற்றும் திகிலான சமச்சாரங்களை எதிர்ப்பாராத விதத்தில் நல்ல படைப்பாக வழங்கியுள்ள படக்குழுவினர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் சுமார் 80 வருடங்கள் கழித்தும் சிறந்த ஹாரர் கல்ட் கிளாசிக்குகளில் ஒன்றாக ரசிகர்களாலும் விமர்சனகர்களாலும் இந்த படம் கருதப்படுகிறது.உதாரணமாக ரோட்டென் தொமொதொஸ் இப்படத்துக்கு வழங்கிருக்கும் 92 சதவீத மதிப்பை எடுத்துக்கொள்ளலாம்.
==================================================

   இறுதியாக, தெ மம்மி ஹாரர் சினிமா உலகின் தொடக்க காலத்தில் எடுக்கபட்ட (அல்ல எடுக்க முயற்சிசெய்யபட்ட) ஒரு நல்ல ஹாரர் படம் என்பதில் சந்தேகமில்லை.சிலருக்கு இத்திரைப்படம் பிடிக்காமல் போகலாம்..ஆனால், உண்மையான ஹாரர் ரசிகர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஹாரர் கிளாசிக் தெ மம்மி.   

IMDB : 7.3/10
MY RATING : 6.8/10 : One Of The Better Classic Horror Flick.  
  கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge