Follow by Email

Saturday, 12 November 2011

வாரமாத பதிவுகள் ஓர் அறிமுகம் : 19 OCT 2011 - 11 NOV 2011

தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த இரண்டு வாரங்களில் டிவிடி, மூவிஸ் சேனல்களின் வழி ஒரு சில நல்ல படங்களைப் பார்த்து மகிழ வாய்ப்பு கிடைத்தது.அதில் தெரிவு செய்து சில படங்களை பதிவுகளாக எழுத முடிந்தை எண்ணி மகிழ்கிறேன்..அந்த பதிவுகளின் விபரங்கள் இன்றைய "பார்வையாக"..
================================

1) உலக சினிமா ரசிகர்களுக்கு : 2011/2012 - ஆண்டுகளில் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக திரைப்படைப்புகள் -

  ===@@@ பகுதி ஒன்றுஇரண்டு மற்றும் மூன்று..@@@===
               
 "பல நாட்களாகவே ஆவலோடு எதிர்பார்க்கும் சில படங்களை பற்றிய சிறு பார்வைகள் இவை.."

2) உலக திகில்/ஹாரர் திரைப்படங்கள் :

3) ஹாலிவுட் சினிமா :4) உலக அறிவியல் புனை திரைப்படங்கள் :


5) உலக வெஸ்டர்ன்/கௌபாய் திரைப்படங்கள் :
 
6) கேன்ஸ் திரைப்படங்கள் ஒரு பார்வை (Cannes Films) :

 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்த மாதம் கிடைத்த நேரத்தினில் விரும்பி படித்த சில தமிழ் பதிவுகள்..


Fahrenheit 451 - 1966 : புத்தகங்கள் இல்லா உலகம் - பிரான்சயிஸ் ட்ருபாட்டின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.   பாரன்ஹீட் 451 - சிறந்த திரைப்படம் என்பதைத் தாண்டி, படம் முடிந்தும் மனதில் நீண்ட நேரம் மனதோரமாய் ரீங்காரமிட்ட ஒரு திரைப்படைப்பு, நிறையவே யோசிக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது எனலாம்..


எதிர்க்காலம் என்பது எத்தனையோ விந்தைகளையும் ரகசியங்களையும் கற்பனைகளுக்கு எட்டாத ஒரு புதிய உலகை தனக்குள் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.அது எப்படி இருக்கும் ? எவ்வகையிலான மனிதர்கள் அந்த கணம் வாழ்வார்கள் ? என்பதுப் போன்ற கேள்விகள் இந்த கணம் என்னை வியப்பில் ஆழ்த்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை..

கற்பனைகள் செய்து பாருங்கள் நண்பர்களே : இது எதிர்க்காலத்தில் நிகழலாம்,
புத்தகங்கள் என்பது நமது அறிவையும் வாழ்க்கை தரத்தையும் மென்மேலும் பெருக்கிக்கொள்ள உதவுகின்றன,அத்தகைய புத்தகங்கள்... சட்டங்கள் ரீதியில் தடை செய்யபட்டால் ? எல்லா நூல்களையும் எரிக்கவேண்டிய கட்டாயம் நிகழ்ந்தால் ? தொலைக்காட்சி, நூல்கள் என அனைத்தையுமே தத்தம் நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மக்களின் நிலைமை என்ன ?
என்ற இதனை மிக ஆழமான தெளிவான திரைக்கதை மற்றும் இயக்கத்தின் மூலம் நம்மை வேறொரு காலத்திற்க்கு அழத்துச்செல்லும் திரைப்படம்தான் 
++++++++++++++++++++++++++++++++++++++++
Free Download : Fahrenheit 451 - Part One, Two
+++++++++++++++++++++++++++++++++++++++

பாரன்ஹீட் 451,
   1966 - ஆம் ஆண்டு பிரான்ஸ் சினிமா உலகின் தலைச்சிறந்த இயக்குனரான François Truffaut என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த சைன்ஸ் பிக்சன் திரில்லர் ஆகும்.Ray Bradbury என்பவர் நாவலை தழுவி இயக்குனரோடு Jean-Louis Ricard என்ற திரைப்படைப்பாளர் திரைக்கதை அமைக்க, Julie Christie மற்றும் Oskar Werner முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
===========================================
Fahrenheit 451 திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :
 • இயக்குனர் François Truffaut, ஆங்கில மொழியில் எடுத்த ஒரே படம் என்பதோடு முதல் கலர் படமாகும்.

 • // நடிகை Julie Christie பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.ஹாலிவுட்டை கலக்கிய சிறந்த நடிகைகளில் ஒருவர்.இவர் நடிப்பில் 1973 - ஆம் ஆண்டு வெளிவந்த Don't Look Now என்ற அருமையான படத்தை சில நாட்களுக்கு முன்புதான் காண வாய்ப்பு கிடைத்தது.//

   இந்த படத்தை பொருத்தவரை இதில் இவருக்கு ரெண்டு கதாபாத்திரங்கள்.Linda Montag மற்றும் Clarisse என்ற கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்..படதிற்க்கு இன்னும் ஒரு பலம் இவரது நடிப்பு.
==========================================
 • படத்தின் கதாநாயகனாக Montag என்ற கதாபத்திரத்தில் நடித்த Oskar Werner நடிப்பும் பிரமாதம்.

=========================================
 • உலகளவில் சிறந்த படங்களில் ஒன்றாக பெரும்பான்மையான விமர்சனர்களால் கருதப்படுவதோடு திரைப்பட ரேட்டிங்க் தளமான ரோட்டென் டொமொதொஸில் தற்சமயம் இத்திரைப்படம் 83 சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

========================================
 • திரைப்பட கதாநாயகியான Julie Christie சிறந்த நடிப்பிற்க்காக பாஃப்தா விருதுக்கு பரிந்துரைக்கபட்டது மேலும் ஒரு சிறப்பாகும்.

=======================================
 • பிரபல இயக்குனர் Martin Scorsese, தனக்கு பிடித்த படங்களில் ஒன்றாகவும் அதிக அளவில் அண்டெரேட்டட் செய்யபட்ட திரைப்படமாக கூறியுள்ளார்.(படம் முடியும்போது எனக்கும் அப்படிதான் தோன்றியது.

=======================================
 • மேலும், படத்தின் இறுதி முடிவுகள் நான் எதிர்பார்க்காத ஒன்று..படத்தில் என்னை அதிகபட்சமாக சிந்தனைகளில் ஆழ்த்திய காட்சிகளில் இதுவும் ஒன்று.படம் பாருங்கள்./

===========================================
   இறுதியாக, நீண்ட நாட்களாக நல்ல சைன்ஸ் பிக்சன் படங்களை தேடி வருபவர்களுக்கு இது ஒரு தனி விருந்து என்று சொல்லலாம்.அதே வேளை இது சில ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.எதற்க்கும் டிரைலரை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.
============================================
இயக்குனர் Francois Truffaut
6 February 1932 ஆண்டு Paris, France பிறந்த இவரை தொடர்ந்து உலக திரைப்படங்களை பார்த்து வருபவர்களுக்கு நன்கு அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.The 400 Blows (1959) என்ற சிறந்த படைப்பின் மூலம் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக கலைஞர்களின் பார்வைகளை தன் பக்கம் திருப்பியவர்.இதே படத்திற்க்காக இரண்டு ஆஸ்கர் பரிந்துரைகளை பெற்றதோடு கேன்ஸ் திரைப்ப்ட விழாவினில் சிறந்த இயக்குனருக்கான பரிசை வெற்றிக்கொண்ட உன்னத படைப்பாளர்.இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் மிகப் பெரிய ரசிகர்களில் இவரும் ஒருவர்.
  இவரது மற்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் : Shoot the Piano Player (1960), Two English Girls (1971), The Wild Child (1970) The Last Metro (1980).இதில் Day for Night (1973) என்ற படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கதாகும்.இன்றளவும் சென்ற நூற்றாண்டின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பிரான்சயிஸ் ட்ருபாட், October 21, 1984 (age 52) மிக குறுகிய வயதில் உலகை விட்டு மறந்தது சினிமா உலகின் மிகப் பெரிய இழப்பு...நாம் இழந்தது சிறந்த இயக்குனரை மட்டும் அல்ல ஒரு சிறந்த சினிமா விமர்சகரும்தான்.. 
============================================
My Rating : 7.9/10
============================================================== 
   கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

Wednesday, 9 November 2011

APOLLO 13 - 1995 : விண்வெளியில் உயிர் போராட்டம்..

ண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்த படம்.சில வேலை பழு காரணமாகவும் மற்ற படங்களில் அதிக கவனம் செலுத்தியதாலும் அது சாத்தியமாகாமல் இருந்தது.இனிமேலும் காலம் கடத்தினால் ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணிவிடுவோம் என்ற எண்ணத்தில் இன்றைய சிறு "பார்வை"
============================================


 அப்போலோ 13 - 1995 - ஆம் ஆண்டு அமெரிக்க இயக்குனர் ரான் ஹோவர்ட் இயக்கத்தில் Tom Hanks, Kevin Bacon, Bill Paxton ஆகியோர் முறையே Jim Lovell, Jack Swigert மற்றும் Fred Haise என்ற கதாபாத்திரங்களில் விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களாக நடிக்க, இவர்களுடன் Gary Sinise,
Ed Harris மற்றும் Kathleen Quinlan மிக முக்கியமான துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.டைடானிக், அவதார் போன்ற படங்களில் பணிப்புரிந்த ஜேம்ஸ் ஹார்னர் இந்த படத்துக்கு இசையமைக்க திரைக்கதையை William Broyles, Jr. மற்றும் Al Reinert இணைந்து எழுதிய இந்த படம், விமர்சனம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றதோடு 9 ஆஸ்கர் பரிந்துரைகளில் அதில் இரண்டை வென்றது கூடுதல் சிறப்பாகும்.  .

=============================================================================

கதைச்சுருக்கம் :

விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்த்ராங்கும் அவரது சக வீரர்களும் நிலவில் காலடி எடுத்து வைத்த வருடமான 1969 - ஆண்டில் அதே நாளில் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடும் வகையில் Jim Lovell (Tom Hanks) வீட்டு பார்ட்டியில் திரைப்படம் தொடங்குகிறது.இதனை தொடர்ந்து ஜிம், Jim Lovell, Fred Haise மற்றும் Ken Mattingly ஆகிய மூவர்கள் அப்போலோ 13 மூலம் நிலவுக்கு செல்ல ஏற்பாடு செய்யபடுகிறது.சில காரணமாக Mattingly குழுவிலிருந்து விலக்கபட Jack Swigert இவர்களுடன் இணைந்துக்கொள்கிறார்.ஒரு வழியாக பயணமும் ஆரம்பிக்கிறது.அதோடு சேர்ந்து பாதி வழியிலேயே கப்பலில் கடுமையான பிரச்சனைகள் உருவாகுகின்றன..அது எந்த மாதிரியான பிரச்சனைகள்/சிக்கல்கள் ? அதிலிருந்து தப்பித்தார்களா ? எவ்வாறான முயற்சிகளை மேற்க்கொண்டார்கள் ? என்ற பல கேள்விகளுக்கு இந்த படம் பதில் சொல்கிறது..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++   
APOLLO 13 - 1995 DVD RIP : PART 1 AND PART 2  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++  
===============================================================================

APOLLO - 1994 திரைப்படத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :

விண்வெளியை மிக ஆழமாகவும் அழகாகவும் சிறப்பாகவும் 2001 எ ஸ்பேஸ் ஓடிஸி, சொலாரிஸ் போன்ற மாஸ்டர்பீஸ்கள் காட்டிருந்தாலும் விண்வெளி கப்பலில் பயணிக்கும் வீரர்களின் பயணத்தை ரொம்ப Accurate - தாக இந்த அளவுக்கு காட்டிய படங்கள் மிக குறைவே..அந்த வகையில் இத்திரைப்படத்துக்கு மிக முக்கியமான ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
=============

     
மொத்தப்படத்திலும் நம்மை வெகுவாக எளிதாக கவரும் கதாபாத்திரம் டோம் ஹேங்ஸ் கதாபாத்திரம்தான்..Philadelphia 1993), Forrest Gump (1994)
போன்ற படங்களைப் போல பெரியளவில் நடிப்பு வழங்கும் கதை இது இல்லாவிட்டாலும், சிறந்த நடிகர் என்று மறுபடியும் பலருக்கும் நிரூபித்த திரைப்ப்டம் எனலாம்.ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கபட்ட கதாபாத்திரம் இது,அருமையாக  செய்துள்ளார்.   
===================மேலும் இத்திரைப்படத்தில் Bill Paxton as Fred Haise மற்றும் Kevin Bacon as Jack Swigert ஆகியோரின் நடிப்பும் படத்துக்கு கூடுதல் சிறப்பு எனலாம்.விண்வெளியில் பயணிக்கும் வீரர்களில் இருவராக வரும் இவர்களின் நடிப்பு மிக அருமை.
=========================

தற்சமயம் சினிமா ரேட்டிங்க் தளமான ரோட்டேன் தோமொதொஸில் இந்த படம் 97 சதவீதம் பெற்றதோடு ஐம்டி தளமும் 7.5 ஸ்கோர் வழங்கியுள்ளது.
===============================

சுமார் 52 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உலகம் முழுவதும் 350 கோடிக்குமேல் வசூல் செய்துள்ளது.
==================================70 ஆம் ஆண்டுகளில் அதுவும் இதுப்போன்ற சூழ்நிலைகளில் அன்றைய விஞ்ஞானிகள் அப்பொழுந்திருந்த தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு எந்தந்த வகைகளில் இதுப்போன்ற விண்வெளி வீரர்களை காப்பாற்ற முயன்றிருப்பார்கள் என்பதை கண்ணெதிறே கொண்டுவந்துள்ள திரைக்குழுவினரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.
======================================== 

Lost Moon லோஸ்ட் மூன் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட இந்த ப்டம் சிறந்த எடிட்டிங் மற்றும் சௌண்ட் மிக்ஸிங்காக ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கது.மேலும், 1994 - ஆண்டு வெளிவந்த இப்புத்தகம் உண்மையான விண்வெளி ஹீரோக்கலான Jim Lovell மற்றும் Jeffrey Kluger ஆகியோரின் அனுபவத்திலும் உண்மைச் சம்பவத்திலும் மலர்ந்திருபது இன்னும் ஒரு சிறப்பாகும்.
=====================================================ஜேம்ஸ் ஹார்னரின் இசை மற்றும் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு பலம் எனலாம்.
================================================================

இயக்குனர் Ron Howard Ron Howard என்கின்ற Ronald William Howard, மார்ச் மாதம் 1 - ஆம் திகதி 1954 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர் ஆவார்.கலை ஆர்வமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், ஜோர்ஜ் லுகாஸ் இயக்கத்தில் 1973 - ஆம் வருடம் வெளிவந்த American Graffiti நடித்ததின் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமாக தொடங்கினார்..
1977 - ஆம் ஆண்டு Grand Theft Auto என்ற படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமானார்.தொடர்ந்து வந்த Splash (1984), Cocoon (1985), Willow (1988), போன்ற படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் ஹாலிவுட்டில் நிலை நிறுத்திக் கொண்டார்.2002 - ஆம் ஆண்டு இவர் எடுத்த A Beautiful Mind (2001) 4 ஆஸ்கர்களை வென்றதோடு சிறந்த படம் மற்றும் இயக்கம் என இவருக்கும் இரண்டு விருதினை வாங்கித்தந்தன.மேலும், இவருடைய பெரும்பான்மையான திரைப்படங்கள் பிஜி அல்லது பிஜி 13 ரேட்டிங் பெற்றது ஒரு குறிப்பிட்ட சிறப்பாகும்.ஹோவர்ட் இயக்கத்தில் புகழ்பெற்றவை சில : Frost/Nixon (2008), The Da Vinci Code (2006), Cinderella Man (2005) ஆகியவை அடங்கும்.    
=============================================================================
 
இறுதியாக, கண்டிப்பாக எல்லா சினிமா ரசிகர்களும் பார்க்க வேண்டிய ஹாலிவுட் படம் இந்த அப்போல்லோ 13 ஆகும்.

MY RATING : 8/10  
==============================================================================================================

அப்படியே இதையும் படிங்கபடித்த சில பிறப்பதிவுகள்


===============================================================================================================
கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

Sunday, 6 November 2011

House Of Usher - 1960 : மாளிகையின் ரகசியம்..

தொடர்ந்து ஆதரவு வழங்கும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.நண்பர்கள் அனைவரும் தாரளமாக தங்களது கருத்துகளை பகிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.மேலும், ஒருவேளை தங்களுக்கு எனது எழுத்துக்கள் பிடித்திருந்தால் உங்களுக்கு அறிமுகமான நண்பர்களுக்கு தெரிவிக்கவும்.இவை, எனது எழுத்துக்களை மென்மேலும் ஊக்கபடுத்தவும் மேம்படுத்தவும்  மிகப் பெரிய துணைப்புர்யும் என்ற நம்பிக்கையோடு இன்றைய சிறு "பார்வை".. 


Film : House Of Usher    Year : 1960
Country : America        Rating : PG
Director : Roger Corman     Writers : Edgar Allan Poe (story), Richard Matheson
Stars : Vincent Price, Mark Damon and Myrna Fahey
Awards : 2 wins << See more awards >>>                                     

இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த படம் இது.வலைப்பூ தொடங்கியதிலிருந்து வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஹாரர் படங்கள் பார்ப்பது வழக்கம்.அந்த வரிசையில் நள்ளிரவில் பார்த்த படம்..

  ஹௌஸ் ஒஃப் உசெர் - ரிச்சர்ட் மாதேசன் என்பவர் திரைக்கதை எழுத ரோஜர் கார்மென் இயக்கத்தில் 1960 - ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.சுமார் ஐம்பது வருடங்கள் கடந்த பின்பும் சிறந்த க்ல்ட் கிளாச்சிக்குகளில் ஒன்றாக கருதபடும் இப்படத்தில் Vincent Price, Mark Damon, Myrna Fahey மற்றும் Harry Ellerbe நடித்திருக்கின்றனர்.

கதைச்சுருக்கம் :

நீண்ட பயணத்துக்கு பிறகு Philip Winthrop (Mark Damon) என்பவர் ஒரு மர்மமான இருண்ட சேற்றுனிலத்தை சுற்றி அமைந்திருக்கும் ஒரு பழைய மாளிகையான ஹௌஸ் ஒஃப் உசெருக்கு வந்து சேர்கிறார்.முதல் வார்த்தையே விட்டில் வேலை செய்யும் ஒரு பணியாளரிடம் தொடங்குகிறது."வீட்டில் குடியிருக்கும் Madeline Usher (Myrna Fahey) என்ற பெண்ணிடம் தான் ஏற்கனவே நிச்சயிக்கபட்டதாகவும் அவரை அழைத்துச்செல்லவே இங்கு வந்திருப்பதாகவும்" என்று அந்த வயதான பணியாளரிடம் கூறுகிறார்.முதலில் அனுமதி கொடுக்க மறுக்கும் அவர் பிறகு ஒருவழியாக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கபடுகிறார்.கூடவே கொஞ்சம் 'வித்தியாசமான' முறையில் வரவேற்க்கவும்படுகிறார்.இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது திடீரென்று குறுக்கே வருகிறார் Madeline அண்ணனான Roderick (Vincent Price).வந்த விருந்தினரான Philip Winthrop உடனே விட்டை விட்டு போகுமாறு இல்லையெனில் சில விபரீதங்களை சந்திக்க நேரிடும் எச்சரிக்கிறார்.ஆனால் கட்டாயமாக அதனை மறுக்கிறார்..


இதற்கு பிறகு சில வினோதமான வித்தியாசமான நிகழ்வுகள் சில நடக்கின்றன..இதற்கு காரணம் என்ன ? எதனால் இவர்கள் இப்படி நடந்துக்கொள்கிறார்கள் ? Philip தன்னுடைய காதலியான Madeline இந்த இடத்தைவிட்டு அழைத்துச்செல்கிறாரா ? இந்தா மாளிகைக்கு பின்னால் இருக்கு ரகசியங்கல் என்னென்ன ? என்பதுப் போலான பல கேள்விகலுக்கு 60 ஆம் ஆண்டுகளுக்கே உரிய ஹாரர் ஸ்டைலில் பதில் சொல்கிறது இந்த படம்.

(என்னோட எழுத்தை படித்தால் பலருக்கு இந்த படம் பிடிக்காமல் போகவே வாய்ப்பு அதிகம்..என்ன செய்வது..இன்னிக்கு மைண்ட் சரியில்ல..சாரி)


+++++++++++++++++++++++++++
HOUSE OF USHER : DVD RIP
+++++++++++++++++++++++++++

ஹௌஸ் ஒஃப் உசெர் என்ற திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :


 •  மீண்டும் வின்சென்ட் ப்ரைஸ்..இவரை பற்றியும் இவர் நடித்த ஒரு படத்தை பற்றியும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்..என்னமா.நடிக்கிறாரு இந்த மனுஷர்..தனக்கே உரிய முகபாவனைகளிலும் உடல்மொழிகளிலும் எக்ஸ்பிரஷங்களிலும் மிகவும் அருமையாக இப்படத்தில் நடித்திருக்கிறார்..படத்தின் உயிர் நாடியே இவர்தான்..மேலும், சொல்ல வார்த்தைகள் இல்லை..திரையில் காணுங்கள் இந்த சிறந்த நடிகனின் நடிப்பாற்றலை..


===============

 • இப்படத்தில் இன்னும் ஒரு ஸ்பெஷலான விஷயம், இப்படத்தில் நடித்த நடிகர்கள் மொத்தம் நால்வர்தான்..வெறும் நான்கு  காதாபாத்திரங்களை வைத்து இந்த படத்தை நன்றாக நகர்த்தியதற்கு முதலில் திரைக்கதை ஆசிரியருக்கும் இயக்குனருக்கும் கண்டிப்பாக நன்றிகள் கூற வேண்டும்..அதுவும், இந்நால்வரின் நடிப்புப் மிக நன்று.


=========================

 • இந்த படம் பல விமர்சனர்களால் சிறப்பாக பாராட்டபட்டதோடு, இன்றளவும் சிறந்த ஹாரர் கல்ட் கிளாசிக்காகவும் விளங்க்குகிறது..தற்பொழுது இந்த படம் ரோட்டோன் தொமொதோஸில் 85 சதவீதம் பெற்றுள்ளது மேலும் ஒரு சிறப்பாகும்.


===================================


 • Edgar Allan Poe ((born Edgar Poe, January 19, 1809 – October 7, 1849)) என்ற அமெரிக்க ஹாரர் எழுத்தாளரை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு..ரோஜர் கார்மென் இயக்குனரின் அறிமுகத்தில் கிடைந்த ஒரு பெரிய பொக்கிஷம் எனலாம்.இவர் 1800 களில் வாழ்ந்தவர்.இவருடைய நிறைய கதைகள் திரைப்படங்களாகவும் உருவெடுத்திருக்கின்றன.அந்த வகையில் இயக்குனரான கார்மென் இவருடைய சிறுக்கதைகளை தழுவி இதுவரை 8 படங்களை எடுத்துள்ளார்.அந்த 8 - இல் முதன் முதலாக வெளிவந்தது இந்த படம்தான்.இதே வரிசையில் வந்த தெ ஹௌண்டெட் பேலஸ் படத்த ஏற்கனவே எழுதியுள்ளேன்.


================================================================

   இறுதியாக சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஹாரர் ரசிகர்கள் அதுவும் பழைய திகில் படங்களை தேடி வருபவர்கள் கட்டாயம் பார்க்கலாம்.(என்னைப்போல)

My Rating : 6/10 : Not Very Best..But Still Watchable.

கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

2011/2012 - ஆண்டுகளில் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்கள்.பகுதி 3..(2011 - நவம்பர்/டிசம்பர்)

இந்த பிரிவில் முந்தைய பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டை பார்க்க.


1) IMMORTALS - 2011 : NOVEMBER


நம்ம ஸ்லம்டாக் மில்லியனர் ஃப்ரிடா பிண்டோ, Henry Cavill, Robert Naylor ஆகியோர் நடிப்பில் வெளிவரும் இந்த படத்தை இயக்கி இருப்பவர் Tarsem Singh ஆகும்.இவர் இந்தியாவில் பிறந்து, The Fall (2006), The Cell (2000) போன்ற படங்களின் மூலம் அமெரிக்க இயக்குனராக வலம் வருகிறார் இந்த 50 வயது இயக்குனர்.
=============
2) YOUNG ADULT - 2011 : DECEMBER
Charlize Theron நடிப்பில் விரைவில் வரவிருக்கும் காமெடி படமாகும்.இந்த படத்தை எடுத்திருப்பவர் ஜூனோ (2008) படத்தை இயக்கிய Jason Reitman ஆகும்.இவர் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆன Ivan Reitman அவர்களின் மகன் என்பது குறிப்பிடதக்கது.
==================
3) IN THE LAND OF BLOOD AND HONEY - 2011 : DECEMBER
ஏற்கனவே இந்த படத்தை பற்றி சிறிது குறிப்பை பகிர்ந்திருக்கிறேன்..இதுவரை ஏஞ்சலினாவின் நடிப்பை பார்த்தவர்கள் இவருடைய நல்ல் இயக்கத்தை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
==========================
4) MY WEEK WITH MARILYN - 2011 : NOVEMBER
டைட்டிலை பார்த்தவுடனே படத்தின் மீது ஒரு ஈர்ப்பு தானாக வந்து மனதில் ஒட்டிக்கொண்டது..அதற்கு காரணம் Marilyn என்ற வார்த்தை என்று பலருக்கும் தெரிந்திருக்கும்..தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் பல கொடி ரசிகர்களை கவர்ந்த நடிகை மரிலின் மன்றோ சம்பந்தபட்ட கதை என்று கேள்விபட்டேன்..விரைவில் பார்க்க்க வேண்டும்..
==============================================
ஏதேனும் தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்..மேலும், நீங்கள் எதிர்பார்க்கும் படங்களை பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிடுங்களேன்..மேலும், பல தகவல்களை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை
நன்றி.வணக்கம்

Wednesday, 2 November 2011

The Karate Kid - 2010 : நம்ம ஜேடனுக்கு ஜாக்கி சொல்லித்தரும் குங்பூ.. கடந்த சில நாட்களாகவே, சென்ற வருடம் வந்து வெற்றியடைந்த சில குறிப்பிட்ட மிஸ் பண்ணிய படங்களை ஒரு அல்சு அலசி வருகிறேன்..அதில் மனதோரம் தங்கிய சில படங்களையே எழுத முயற்சித்து வருகிறேன்.அந்த வரிசையில் இன்றைய "பார்வை"


தெ கெராத்தே கிட் - வில்ஸ் ஸ்மித் மகனும் தற்பொழுது அமெரிக்காவில் சக்கை போடு போடும் பையனான ஜேடன் ஸ்மீத்தும் நம்மை குங்பூ மன்னர் ஜேக்கிச்சானும் இணைந்து கலக்கிய படம்.1984 - ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் ரீமேக்கான இதை Harald Zwart  இயக்க, கத மற்றும் திரைக்கதையை முறையே Robert Mark Kamen மற்றும் Christopher Murphey எழுதி இருக்கின்றனர்.டைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னரே இதற்கும் இசையமைத்துள்ளார்.

  கதை ரொம்ப சிம்பிள்..
                   
        தன் தாயின் வேலை மாற்றம் காரணமாக சைனாவுக்கு வருகிறார் Dre Parker (அதான் நம்ம ஜேடன் ஸ்மித்) என்ற 12 வயது.வந்தவுடனே Girlfriend காரணமாக பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் தகராறு ஏற்படுகிறது.அதுவும் இவர்கள் எல்லோரும் குங்பூ பழகி வருபவர்கள் (செமததயா..வாங்குவாருல)..இதையே மனதில் வைத்துக்கொண்டு இவர்களுக்குள் பிரச்சனைகள் பிறக்கிறது..டிரேவை ரகளை செய்யவும் (Bully) ஆரம்பிக்கின்றனர்..ஒரு நாள் இந்த பிரச்சனை கடுமையாக உருவாக..அப்பதான் வந்து காப்பத்துறாரு நம்ம குங்பூ மன்னரான Mr. Han (வேற..யாரு..நம்ம ஜேக்கிதான்).இவரு டிரேவின் வசிப்பிடத்தில் வேலை செய்பவர்.பிரகுஎன்ன, இருவரும் நண்பர்கள் ஆகின்றனர்..அந்த பசங்களிடமிருந்து காப்பாத்த நிறைய காரியங்கள் பண்றாரு (ரொம்ப இல்ல..ஒரு ஒன்னு..ரெண்டு.அட மூனுன்னு வச்சிக்கங்க.)..அதுல ஒன்றுதான் அந்த பையனுக்கு குங்பூ கற்று தருகிறார்.மேலும், இவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்த..டிரேவை ஒரு குங்பூ போட்டிக்கும் தயார்ப்படுத்துறாரு.

  அப்பிறமென்ன படத்த பாருங்க.நல்ல படம்.குடும்பத்தோட சந்தோஷமா பார்க்கலாம்.(மேல சொல்லாத நிரைய விஷயங்கள் படத்துல செம்ம கலக்கலா).படம் பார்க்கிலனா கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இலவச தரவிறக்கம் போடுங்க..

The Karate Kid - 2010 திரைப்படத்தில் சில சுவாரஸ்யங்கள் :


அருமையான படம் - அதுல ஆணிவேறா இருக்குறது ஜாக்கி மற்றும் டிரெவின் நடிப்பும்தான்..என்னமா நடிக்கிறாரு நம்ம வில்ஸோட சின்ன ஸ்மித்.//இவரும் இவரது தந்தையும் இணைந்து நடித்த The Pursuit of Happyness படத்தை பார்த்திருக்கிறேன்..அதுவும் ஒரு நல்ல படம்.ரெண்டு பேருமே பிச்சு உதரிப்பாங்க//
    இதுலயும் வயதுக்கு மீறிய அழகான அருமையான நடிப்பு (பின்ன என்ன..கிஸ்ஸேல்லாம் பண்றாரு).ஒவ்வொரு காட்சிகளிலும் நல்ல நடிப்பையும் எக்ஸ்பிரஷன்களையும் ரொம்ப தெளிவாக வழங்கிருக்கின்றார்.
==============


அடுத்து நம்ம ஜாக்கி - //இவர பத்தி தொடர்ப்பதிவே போடலாம்..அந்தளவுக்கு என்னில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியவர்.சின்ன வயதில் யாருன்னே தெரியாமல் என்னை ஈர்த்தவர்கள் மூவர்தான்.ஒன்று ரஜினி ரெண்டாவது அர்னால்ட் கடைசியாக ஜாக்கி..கதையே புரியாமல் தொலைகாட்சியில் டிரங்கன் மங்க்கி படங்கள் பார்த்துட்டு எத்தனையோ முறை சண்டை போட்டிருக்கிறேன் (தனியாதான் ஒரு விளயாட்டாக) கராத்தே கற்றுக்கொள்ல வேண்டும் என்ற ஆசையும் இவரது படங்களின் வழி வந்ததே.//   
    கல கலவென சிரிக்க வைத்து தன் விறு விறுப்பான சண்டை காட்சிகளால் ரசிகர்களை கவரும் ஜேக்கி, இந்த படமுழுவதும் சாதுவாகவும் அமைதியாகவுமே வந்து தன்னுடைய நடிப்பை ஆழமாக வழங்கி இருக்கிறார்..
=====================


ஜாக்கியும் ஜேடனும் முதலில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் யாவுமே அசத்தலாக இருக்கும்..பாத்ரூம் சரியில்லை என்று இவரை கூப்பிட வரும் காட்சிகள் (ஒரு ஈயையோ, கொசுவையோ அடிக்கிற விதம் பாருங்க) அனைத்தும் கண்டிப்பாக அனைவரையும் கவரக்கூடியவையே.
==========================

விமர்சன ரீதியில் பெரிய அளவில் பெயர் எடுக்காவிட்டாலும், வசூலில் சுமார் 350 கோடிக்கு மேல் வாரி இறைத்துள்ளது.படத்தின் பட்ஜெட் 40 கோடிதான்.
==============================


டிரேவின் பெண் தோழியாக வரும் அந்த சீன பெண்னின் நடிப்பும் நன்றாக இருக்கும்..அழகாகவும் இருக்கிறார்.
====================================


படத்தின் இறுதி காட்சிகள் அனைத்தும் கலக்கள்..ஆனா..கடைசி வரைக்கும் ஜேக்கி சீரியஸா (வழக்கம்போல சிரிச்சிகிட்டே) ஒரு சண்டக்கூட போடல என்கிறது சிறியளவில் ஏமாற்றதை எனக்கு தந்தது.அந்த பசங்களோட கோச்சுக்கு ஒரு குத்துவிட்டுந்தாவது (இந்தாளு..அதான்..இந்த கோச்சு ரொம்ப கடுப்பேத்துராறு மை லோர்ட்..ஹி.ஹி) கொஞ்சம் திருப்த்தியா இருந்துருக்கும்.இருந்தாலும், அது படக்கதைக்கு தேவை இல்லாத ஒன்றே.
==============================================

  எப்படி இருந்தாலூம், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் தாரளமாக சந்தோஷத்துடன் பார்த்து ரசிக்க ஏகுவான படம் இந்த கராத்தே கிட்.கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.

My Rating : 7/10

கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிகவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை
நன்றி..வணக்கம்     
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge