Follow by Email

Saturday, 3 March 2012

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா..

Film : Falling Down     Year : 1993
Country : United States       Rating : R
Director : Joel Schumacher
Writers : Ebbe Roe Smith
Stars : Michael Douglas, Robert Duvall and Barbara Hershey
Awards : 1 win & 2 nominations See more awards »

சமுதாயத்தில் நிகழும் சில குற்றங்களையும் தவறுகளையும் பார்க்கும் பொழுது நமக்கு எப்படி இருக்கும்..?? சாதாரணமான ஒன்றுமே செய்யாத மனிதர்களை போட்டு இந்த குற்றங்கள் செய்யும் லீலைகள் இருக்கிறதே ?? காரணமே இல்லாமல் கூட நாம் இதனால் பல விளைவுகளை சந்திக்க நேர்கிறது..சம்பந்தமே இல்லாத மக்கள் தண்டிக்கபடுவது சரியா ???
 
  சரி..இப்படியே செய்பவர்களின் மீது, அன்றாடம் இந்த விஷயங்களை பார்த்து பார்த்து நொந்துப்போன, வாழ்க்கையே புளித்துப்போன ஒரு வேலையில்லாத, சராசரி வயது நிறைந்த மனிதன் இதற்கு எதிராக திரும்பினால் எப்படி இருக்கும் ?? ஒரு நாள் முதலமைச்சரைப் போல ஒரு நாள் தட்டிக்கேட்கும் மனிதனாக, வீரனாக மாறினால் அவனுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன ?? சமுதாயத்தில் அவனுக்கு கிடைக்கப்படும் பெயர், மரியாதை என்ன ?? என்பதை மிகவும் சிறப்பாக சமுதாய புரிந்துணர்வுகளோடு ஆழமாக சொன்ன படமே Falling Down..

தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழும் வேலையில்லாத ஃபோஸ்டெர் கதாபாத்திரத்தில் மைக்கல் டக்லஸ் மற்றும் போலிஸ் துறையிலிருந்து ரிட்டையர் ஆகும் இறுதி நாளில், ஃபோஸ்டெரை பிடிக்க துரத்தும் பிரண்டேர்கேஸ்ட் - ஆக ரொபெர்ட் டுவால் நடித்திருக்கின்றார்கள்போன் பூத் போன்ற அக்மார்க் திரில்லர் படங்களை எடுத்திருக்கும் ஜோயில் சூமாக்கர் இயக்கிருக்கும் கிரைம் டிராமா இது..கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்காக போட்டியிட்ட இப்படத்தின் திரைக்கதையை Ebbe Roe Smith என்பவர் சிறப்பாக அமைத்திருக்கின்றார்.

படத்தின் முதல் காட்சியே அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும்.. பார்ப்பவர்களை சீட்டின் நுணியில் உட்கார வைக்கக்கூடிய காட்சி அது..

   கிரடிட் கார்டு போட தொடங்கியதுமே ஃபோஸ்டெரின் முகத்தை காட்டியப்படியே சுற்றி உள்ள கார்களையும் அதிலுள்ள மனிதர்களின் கூச்சல்களையும் பட்டியல் போட்ட் வாரு கேமரா வட்டம் அடிக்கிறது.. போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, காரில் ஏசியும் சரியா வேலை செய்யாத நிலையில் வியர்வைத்துளிகள் உடம்பில் காய இடமின்றி வழிகின்றன..இந்த வெளி சூழலும், சத்தங்களும் ஃபோஸ்டெரின் மன நிலையை பாதிப்பதை வெறும் எடிட்டிங், கேமரா ஷாட்டுகளோடு மற்றும் அந்த மனுஷன் மைக்கல் டக்லஸ் என்னமா நடிக்கிறாரு அந்தாளு..
யெப்பா படம் முழுவதையும் தன்னுடைய தோளினில் கொண்டு செல்கிறாரு..இங்கு தவறுதான் நடக்குதுன்னு தெரிந்து கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தும் இடமாகட்டும் ஆட்களை போட்டு அடிக்கிற இடமாகட்டும்..இன்னும் கொஞ்சம் அடிடா.. ,,.. அங்க குத்துடானு நம்மையும் சேர்த்து பதட்டபட வைக்கிறார்..இவரது முகபாவனைகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்..ஒரு சின்ன பூச்சினை விரட்டி விரட்டி அடிப்பதில் போஸ்டரின் மனமாற்றத்தின் தீவிர உச்சத்தை மிகவும் அபாரமாக படம் பிடித்து இருப்பர்.   

"" பயப்புள்ளைங்க இதுக்கெல்லாம் ஆஸ்கர் புஸ்கருன்னு ஒரு மண்னாங்கட்டியும் கொடுக்கமாட்டேங்குரானுங்க..கொய்யால.""

ஒரு பக்கம் மைக்கல் டக்லஸ் என்றால், இன்னொரு பக்கம் சாந்தமான நிலையில் ரொபெர்ட் டுவால்.இவரது நடிப்பை பற்றி பேச எனக்கு வயது இல்லை.. அந்த அளவுக்கு நான் இவரது படங்களையும் பார்த்ததில்லை.நடிப்பை பற்றியும் ஒன்று தெரியாது..படம் முழுக்க ஒரு விதமான அசால்ட்டான நடிப்பால் மனதை அலங்கரிக்கிறார்

  படத்தில் நிறைய காட்சிகள் பச்சை குத்தியதுப்போல மனதோரம் தங்கிட்டன.ஃபோஸ்டெரின் கோபத்துக்கு முதல் பலியாக வரும் கொரியாக்காரர்..அவரது கடையை அடித்து நொறுக்கிவிட்டு வாங்கிய சோடாவுக்கு காசை வச்சிட்டு போகும்போது, "ஏயா, ஃபோஸ்டெர் வெறும் காசு Change தானே கேட்டாரு இப்ப பாரு நீயே Change ஆகிட்டேனு மனசுல வந்துச்சி"..மேலும், தேவையில்லாமல் இரண்டு பேர் வந்து பொது இடத்தில் அமர்ந்ததுக்கெல்லாம் காசு, கைப்பெட்டி என்று கேட்க அப்படியே ஃபோஸ்டெர் கொரியன்கிட்ட கலப்பி எடுத்துட்டு வந்த பேட் கம்பால் ரெண்டு செமத்தையா போடும்போது, "போடு..அந்த பக்கிகள இன்னும் ரெண்டு அடி போட கூடாதானு திருப்பி ஃபொஸ்டெருகிட்ட திருப்பி நான் கேள்வி கேட்டேன்..(பாவம் டைரக்டர் அவரு காதுல விழுல)..அடிவாங்கிய அந்த ரெண்டு பேரும் வாகனத்துல வரும்போது "நம்மல அடிச்சவன் வந்துட்டாண்டா" எனு திடீரென்று துப்பாக்கிய எடுத்து டப்பு..டப்புன்னு போடும்போது, யெப்பா இவனுங்க சாதாக்கள் இல்லடா, தாதாக்களுடானு மறுப்படியும் இந்த பேதை மனசு சொல்லிக்கிச்சு..இப்படி எல்லாம் ஆட்டம் போட்டு அப்பாவி மக்களை பலி(ழி)வாங்கி வில்லத்தனம் பண்ணா என்னா நடக்குமுன்னு டைரக்டர் இந்த கும்பலோட நிலைமையின் வழி உணர்த்துகிறாரோ என்னமோ.


இப்படியே படத்தில் நிறைய காட்சிகளை சொல்லிக்கொண்டு போகலாம்..ஃபொஸ்டெர் வரும் காட்சியெல்லாம் "எவண்டா இவருகிட்ட அடுத்து பலியாடா ஆக போகிறவனு" மனதை டக்..டக் என்று மிகவும் திரில்லாக கொண்டு சென்ற படக்குழுவினருக்கு சில நன்றிகளை சொல்ல வேண்டும்..ஃபொஸ்டெர், அவரது முன்னாள் மனைவி, போலிஸ், ஃபோஸ்டெரின் பலியாடுகள் என்று திரைக்காட்சிகள் அனைத்தையும் இவர்களை சுற்றியே ஓடவைத்து ஒரே நாளில் நடக்கும் கதையை 110 நிமிடங்கள் தொய்வில்லாது கொண்டுச்சென்ற இயக்குனருக்கு பல கும்பிடுகள்.விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே இந்த படம் பெற்றுள்ளது.ரோட்டென் தொமொதோஸ் இப்படத்துக்கு 75% சதவீத மதிப்பை தாராளமாக வழங்கி இருக்கிறது.   


படத்தின் டைட்டிலான Falling Down, ஃபோஸ்டரின் மன சரிவு அல்லது வீழ்ச்சியை குறிக்கிறது..இந்த வார்த்தையை படத்தின் சில இடங்களில் பார்க்கலாம்.வெறும் ஒரே நாளில் கதை நகர்வதாக எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்துக்கு Barbara Hershey, Rachel Ticotin, Frederic Forrest, Tuesday Weld நடிப்பளவில் மிகப்பெரிய வலு சேர்க்கின்றனர்...எங்கு தேவையோ அங்கு பிரமாதமான ஓசை, ஒலிகள் கொடுத்து பின்னனி இசையில் இன்னொரு பாராட்டை பெறுகிறார் ஜேம்ஸ் நியூட்டன் ஹொவர்ட்...

பிறகு என்ன சொல்வது என்றே தெரியவில்லை இந்த படத்தை பற்றி..ஆனால், குடும்பத்தோட மட்டும் இந்த படத்தை பார்த்துவிடாதீர்கள்..பயப்படாதிங்க "அதுவெல்லாம்" எதுவும் இல்ல..ஆனால், படம் முழுக்க கெட்ட வார்த்தைகளா வந்து காதுல விழுவுது.நல்ல விஷயம்தான்.ஆனா, ரொம்ப கெட்ட விஷயம்...

  சமுதாயம் என்பது..சரி விடு..ஸ்டாப்.இத பற்றிலாம் எனக்கு எதுவும் தெரியாது.(அதான் உங்களுக்கு தெரியுமே). ஏதோ இந்த படம் பார்க கிடைத்தது..பார்த்தேன்..ஆச்சரியமே மிஞ்சியது.எதிர்ப்பார்ப்புகளோடு எத்தனையோ படங்களை பார்க்கிறேன்..அதுவெல்லாம் சரிதான் போடான்னு ரிவீட்டு அடிக்குது.ஆனால், உண்மையில் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாது வெறுமனே சும்மா பார்த்த இந்த படம் உள்ளுக்குள் ஏதோ பண்ணுது.கண்டிப்பா எல்லோரும் பார்க்க வேண்டிய படம்..இப்பொழுது 15, 16 வயசு இருக்கிறவங்க..ரெண்டு மூன்று வருடங்கள் கழித்தாவது பார்க்க வேண்டிய ஹாலிவுட் படம்..ஃபோலிங் டவுன்.

IMDB : 7.6 / 10
MY RATING : 7.4 / 10 
FALLING DOWN (1993) : கீழே விழுந்தா டக்குன்னு எழுந்திதுருங்க..

==================================================================
பின் குறிப்பு : இந்த பதிவில் பல தகவல்களை திரட்டி வாசகர்களுக்கு கொடுக்க சிறப்பாக உதவிய விக்கிப்பீடியாவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.(பாருய்யா விக்கிப்பிடியாவுக்கு எல்லாம் நன்றி சொல்றான்..இவன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல ஹி..ஹி..ஹி)  
===================================================================

ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்.... மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge