Director : David Koepp
Writers : Stephen King (novel), David Koepp (screenplay)
Stars : Johnny Depp, Maria Bello and John Turturro
சில வேலைகளுக்கு இடையே 2004 - ஆண்டு வெளிவந்த சீக்ரட் விண்டோ என்ற சைக்கலோஜிக்கல் ஹாரர், திரில்லர் வகையில் எடுக்கபட்ட திரைப்படத்தை எச்பிஓ அலைவரிசையில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது..
""ஆறு மாதமாக மனைவியை பிரிந்து, யாரும் இல்லாத தனிமையான வாழ்க்கையை ஓட்டி வரும் எழுத்தாளர் மோர்ட் ரையினிக்கும், எதர்ச்சையாக தன் மீது தன்னுடைய கதையை களவாடிவிட்டதாக கூறிக்கொண்டு தன்னை மிரட்டி, தனது உடமைகளையும் உறவுகளையும் சேதப்படுத்தும் ஜோன் சூட்டர் என்பவருக்கும் இருக்கும் உணமைகளையும், பயங்கரத்தையும் தனது தொய்வில்லாத திரைக்கதை மற்றும் நடிப்பால் கூறும் படம் சீக்ரட் விண்டோ"""
நடிப்பளவில் இத்திரைப்படத்தின் கூடுதல் பலமாக John Turturro, Timothy Hutton மற்றும் Maria Bello ஆகியோரை கூறலாம்.இதில் முதல் இரண்டு நடிகர்கள் இந்த படத்தில் கிடைத்த அறிமுகங்கள்..மரியோ பெல்லோவை பலருக்கும் தெரிந்திருக்கும்..நல்ல நடிகை.
இயக்குனர் David Koepp - Panic Room (2002), Angels & Demons (2009), Mission: Impossible (1996), Spider-Man (2002) போன்ற பல படங்களுக்கு திரைக்கதை அமைத்து இன்று நல்ல இயக்குனராக உருவெடுத்துவருபவர்.. ஜுராஸிக் பார் படத்தின் வழி உலகளவில் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வந்திருக்கும் சீக்ரட் விண்டோ, கடந்த பத்தாண்டுகளில் உருவான நல்ல ஹாரர், திரில்லர் படங்களில் ஒன்றாக சொல்லலாம்.அதே நேரம் ஹாரர் படங்களை கரைத்து குடித்திருக்கும் ரசிகர்களுக்கு, இந்த படம் மொக்கையாகவும் அமையலாம்..//எப்படியோ பார்த்துட்டு பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா..//
இது படத்தின் டேக்லைன் மட்டும் கிடையாது..படத்தின் உயிர் நாடியே இதுதான்..படம் ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே த்ரில்லர் வெறியர்கள் கண்டிப்பாக ஓரளவாவது கிளைமக்ஸை ஊகிக்கலாம்.அந்த வகையில் கொஞ்சம் வசதியாகவே தடயங்கள் வைத்து படத்தை நகர்த்தியுள்ளனர்.அதுவும் வலை தொடங்கியதிலிருந்து வழக்கத்துக்கு அதிகமாகவே சஸ்பென்ஸ் திரில்லர் என்று பார்ப்பதால் படம் போன முதல் 40 டூடூ 50 நிமிடங்களுக்குள்ளேயே டிவிஸ்டை உணர முடிந்தது..படம் பார்ப்பவர்களை நோகடிக்காத அதைவிட முக்கியம் ஏமாற்றாத விதத்தில் டிவிஸ்ட் அமைந்திருக்கும் ..மறுபடியும் (முன்னால எப்ப சொன்ன..) சொல்கிறேன் ஜோன்னி டெப்தான் படத்தோடு டபல் டிரீட்..
திரைப்படத்தில் நிறையவே நல்ல காட்சிகள் ரசிகர்களுக்கென்று திரில்லாக மெனக்கட்டு ஏதோ பண்றேனு, நல்லாவே செய்து இருக்கிறார்கள்..முதல் காட்சியிலேயே "போவோமோ??போக வேணாமானு"
ஏதோ ஒரு மாதிரி ரையினி மனதுக்குள்ளேயே பேசிக்க நம்மல எங்கயும் போகவிடாத மாதிரி ஸீனு ஸீனா பார்த்து தைச்சிருக்காங்க படக்குழுவினர்கள்..அதுவும் எந்த ஊசியும் நூலும் இல்லாம..//// படத்தின் சில சுவாரஸ்யமான காட்சிகளை சொல்ல வேண்டாம் என்று தவிர்க்கிறேன்..அப்பதான் திரில்லா..இருக்கும்...(அட அப்படியா??))
எழுத்தாளர் ஸ்டீபன் கிங், சினிமா மற்றும் புத்தக பிரியர்கள் பலருக்கும் அறிமுகமானவரே.. ஹாரர் படங்களுக்கு என்றே இயக்குனர்கள் ஜோன் கார்ப்பெண்டெர், சாம் ராய்மி போன்றவர்கள் எப்படியோ, அதே மாதிரி எழுத்து துறையில் தலைவர்தான் A TO Z..ஹாரர், சஸ்பென்ஸ் என்று ஒரு என்சைக்கலோபீடியாவாகவே வாழ்ந்து வருபவர்..2004 - ஆம் ஆண்டு இவர் எழுதிய நாவலை படமாக்கி இருக்கின்றார் இயக்குனர்.பல நல்ல கதைகளை படம் பண்றேனு சொல்லிட்டு..புகை ஊதுறேனு அதாங்க ரீலு..ரீலு - வுடற படங்களுக்கு மத்தியில் இந்த படத்த(யாவது) உருப்பிடியா எடுத்த பெரிய மனிதர்களுக்கு சில நமஸ்க்காரங்கள்..
விமர்சனங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இல்லையென்றாலும் 50, 60 சதவீதமாவது விமர்சக மற்றும் ரசிகர் பெருமக்கள் இடையே ஏற்றுக்கொள்ளபட்டது என்றே சொல்லவேண்டும்..உலகளவில் $92,913,171 வசூல் செய்த தொகையை இதற்கு சான்றாக கூறலாம்..
ஒரு முறை பார்த்த பிறகு இன்னொரு முறையும் பார்க்க தூண்டும் வகையான படமிது..சில வேலை காரணமாக ஒரு தடைவையே பார்க்க முடிந்தது...எச்பிஓ - வில் திரும்ப திரும்ப ஒளிப்பரப்பினாலும் பார்க்க நேரம் கிட்டுமா என்பது சந்தேகம்தான்..பட்..நீங்க மிஸ் பண்ணாதிங்க..வாய்ப்பு கிடைப்பின் பார்க்க வேண்டிய படமே..
@ பார்க்க வேண்டிய நேரம். : நள்ளிரவு (குட் நைட்)
@@ பார்க்க கூடாத நேரம் :: பட்டப்பகலில்.. (அட வேலை இல்லாட்டாலும்)
@@@ யார்//யாரோட பார்க்கலாம் ::: 15, 16 வயச கடந்தவங்க..
@@@@ எதுக்காக பார்க்கலாம் :::: மற்றவங்களோட எழுத்த களப்புனா என்னவெல்லாம் நடக்கும் என்பதை அறிய,,
'சோஓ..மொத்தத்தில், சீக்ரட் விண்டோ : பார்த்துட்டு சாத்திட்டு வந்து தூங்குங்க..
IMDB RATING : 6.5 / 10
MY RATING : 6.5 / 10 : Twist & Turns
நியூஸ் டெலிவரி : இந்த படத்தின் கதையை மாதிரியே (நால்லா கேட்டுக்கோங்க மாதிரிதான்)) நிறைய படங்கள் வந்துள்ளதாக படம் பார்த்த என்னோட ஐன்ஸ்ட்டின் மூளை யூகித்தது..என்னோட மூள என்னிக்கு தோற்றது சொல்லுங்க ?? சில நாட்களுக்கு முன்னாடி இணையத்தில் தேடும் போதுதான் பல படங்கள் இதே மாதிரி கதையில வந்ததா தெரிந்துக்கொண்டேன்..ஆனா ஒன்னு..பெரும்பாலான எல்லா படமும் 2004 - ஆம் ஆண்டுகளுக்கு முன்னாடி 60's, 70's, 80's, 90's எடுக்கபட்டவையாம்..அட அப்பயே எவ்வளவு பெரிய ஜீனியஸ் எல்லாம் யோசித்திருக்காங்க..ஹி..ஹீ.. டைம் கிடைப்பின் இனி வரும் வசந்த காலங்களில் எப்பயாச்சும் ஒவ்வொரு பார்வைகளாக பார்க்கலாம்..
==================================================================
==================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,
