Saturday, 3 March 2012

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா..

Film : Falling Down     Year : 1993
Country : United States       Rating : R
Director : Joel Schumacher
Writers : Ebbe Roe Smith
Stars : Michael Douglas, Robert Duvall and Barbara Hershey
Awards : 1 win & 2 nominations See more awards »

சமுதாயத்தில் நிகழும் சில குற்றங்களையும் தவறுகளையும் பார்க்கும் பொழுது நமக்கு எப்படி இருக்கும்..?? சாதாரணமான ஒன்றுமே செய்யாத மனிதர்களை போட்டு இந்த குற்றங்கள் செய்யும் லீலைகள் இருக்கிறதே ?? காரணமே இல்லாமல் கூட நாம் இதனால் பல விளைவுகளை சந்திக்க நேர்கிறது..சம்பந்தமே இல்லாத மக்கள் தண்டிக்கபடுவது சரியா ???
 
  சரி..இப்படியே செய்பவர்களின் மீது, அன்றாடம் இந்த விஷயங்களை பார்த்து பார்த்து நொந்துப்போன, வாழ்க்கையே புளித்துப்போன ஒரு வேலையில்லாத, சராசரி வயது நிறைந்த மனிதன் இதற்கு எதிராக திரும்பினால் எப்படி இருக்கும் ?? ஒரு நாள் முதலமைச்சரைப் போல ஒரு நாள் தட்டிக்கேட்கும் மனிதனாக, வீரனாக மாறினால் அவனுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன ?? சமுதாயத்தில் அவனுக்கு கிடைக்கப்படும் பெயர், மரியாதை என்ன ?? என்பதை மிகவும் சிறப்பாக சமுதாய புரிந்துணர்வுகளோடு ஆழமாக சொன்ன படமே Falling Down..

தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழும் வேலையில்லாத ஃபோஸ்டெர் கதாபாத்திரத்தில் மைக்கல் டக்லஸ் மற்றும் போலிஸ் துறையிலிருந்து ரிட்டையர் ஆகும் இறுதி நாளில், ஃபோஸ்டெரை பிடிக்க துரத்தும் பிரண்டேர்கேஸ்ட் - ஆக ரொபெர்ட் டுவால் நடித்திருக்கின்றார்கள்போன் பூத் போன்ற அக்மார்க் திரில்லர் படங்களை எடுத்திருக்கும் ஜோயில் சூமாக்கர் இயக்கிருக்கும் கிரைம் டிராமா இது..கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்காக போட்டியிட்ட இப்படத்தின் திரைக்கதையை Ebbe Roe Smith என்பவர் சிறப்பாக அமைத்திருக்கின்றார்.

படத்தின் முதல் காட்சியே அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும்.. பார்ப்பவர்களை சீட்டின் நுணியில் உட்கார வைக்கக்கூடிய காட்சி அது..

   கிரடிட் கார்டு போட தொடங்கியதுமே ஃபோஸ்டெரின் முகத்தை காட்டியப்படியே சுற்றி உள்ள கார்களையும் அதிலுள்ள மனிதர்களின் கூச்சல்களையும் பட்டியல் போட்ட் வாரு கேமரா வட்டம் அடிக்கிறது.. போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, காரில் ஏசியும் சரியா வேலை செய்யாத நிலையில் வியர்வைத்துளிகள் உடம்பில் காய இடமின்றி வழிகின்றன..இந்த வெளி சூழலும், சத்தங்களும் ஃபோஸ்டெரின் மன நிலையை பாதிப்பதை வெறும் எடிட்டிங், கேமரா ஷாட்டுகளோடு மற்றும் அந்த மனுஷன் மைக்கல் டக்லஸ் என்னமா நடிக்கிறாரு அந்தாளு..
யெப்பா படம் முழுவதையும் தன்னுடைய தோளினில் கொண்டு செல்கிறாரு..இங்கு தவறுதான் நடக்குதுன்னு தெரிந்து கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தும் இடமாகட்டும் ஆட்களை போட்டு அடிக்கிற இடமாகட்டும்..இன்னும் கொஞ்சம் அடிடா.. ,,.. அங்க குத்துடானு நம்மையும் சேர்த்து பதட்டபட வைக்கிறார்..இவரது முகபாவனைகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்..ஒரு சின்ன பூச்சினை விரட்டி விரட்டி அடிப்பதில் போஸ்டரின் மனமாற்றத்தின் தீவிர உச்சத்தை மிகவும் அபாரமாக படம் பிடித்து இருப்பர்.   

"" பயப்புள்ளைங்க இதுக்கெல்லாம் ஆஸ்கர் புஸ்கருன்னு ஒரு மண்னாங்கட்டியும் கொடுக்கமாட்டேங்குரானுங்க..கொய்யால.""

ஒரு பக்கம் மைக்கல் டக்லஸ் என்றால், இன்னொரு பக்கம் சாந்தமான நிலையில் ரொபெர்ட் டுவால்.இவரது நடிப்பை பற்றி பேச எனக்கு வயது இல்லை.. அந்த அளவுக்கு நான் இவரது படங்களையும் பார்த்ததில்லை.நடிப்பை பற்றியும் ஒன்று தெரியாது..படம் முழுக்க ஒரு விதமான அசால்ட்டான நடிப்பால் மனதை அலங்கரிக்கிறார்

  படத்தில் நிறைய காட்சிகள் பச்சை குத்தியதுப்போல மனதோரம் தங்கிட்டன.ஃபோஸ்டெரின் கோபத்துக்கு முதல் பலியாக வரும் கொரியாக்காரர்..அவரது கடையை அடித்து நொறுக்கிவிட்டு வாங்கிய சோடாவுக்கு காசை வச்சிட்டு போகும்போது, "ஏயா, ஃபோஸ்டெர் வெறும் காசு Change தானே கேட்டாரு இப்ப பாரு நீயே Change ஆகிட்டேனு மனசுல வந்துச்சி"..மேலும், தேவையில்லாமல் இரண்டு பேர் வந்து பொது இடத்தில் அமர்ந்ததுக்கெல்லாம் காசு, கைப்பெட்டி என்று கேட்க அப்படியே ஃபோஸ்டெர் கொரியன்கிட்ட கலப்பி எடுத்துட்டு வந்த பேட் கம்பால் ரெண்டு செமத்தையா போடும்போது, "போடு..அந்த பக்கிகள இன்னும் ரெண்டு அடி போட கூடாதானு திருப்பி ஃபொஸ்டெருகிட்ட திருப்பி நான் கேள்வி கேட்டேன்..(பாவம் டைரக்டர் அவரு காதுல விழுல)..அடிவாங்கிய அந்த ரெண்டு பேரும் வாகனத்துல வரும்போது "நம்மல அடிச்சவன் வந்துட்டாண்டா" எனு திடீரென்று துப்பாக்கிய எடுத்து டப்பு..டப்புன்னு போடும்போது, யெப்பா இவனுங்க சாதாக்கள் இல்லடா, தாதாக்களுடானு மறுப்படியும் இந்த பேதை மனசு சொல்லிக்கிச்சு..இப்படி எல்லாம் ஆட்டம் போட்டு அப்பாவி மக்களை பலி(ழி)வாங்கி வில்லத்தனம் பண்ணா என்னா நடக்குமுன்னு டைரக்டர் இந்த கும்பலோட நிலைமையின் வழி உணர்த்துகிறாரோ என்னமோ.


இப்படியே படத்தில் நிறைய காட்சிகளை சொல்லிக்கொண்டு போகலாம்..ஃபொஸ்டெர் வரும் காட்சியெல்லாம் "எவண்டா இவருகிட்ட அடுத்து பலியாடா ஆக போகிறவனு" மனதை டக்..டக் என்று மிகவும் திரில்லாக கொண்டு சென்ற படக்குழுவினருக்கு சில நன்றிகளை சொல்ல வேண்டும்..ஃபொஸ்டெர், அவரது முன்னாள் மனைவி, போலிஸ், ஃபோஸ்டெரின் பலியாடுகள் என்று திரைக்காட்சிகள் அனைத்தையும் இவர்களை சுற்றியே ஓடவைத்து ஒரே நாளில் நடக்கும் கதையை 110 நிமிடங்கள் தொய்வில்லாது கொண்டுச்சென்ற இயக்குனருக்கு பல கும்பிடுகள்.விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே இந்த படம் பெற்றுள்ளது.ரோட்டென் தொமொதோஸ் இப்படத்துக்கு 75% சதவீத மதிப்பை தாராளமாக வழங்கி இருக்கிறது.   


படத்தின் டைட்டிலான Falling Down, ஃபோஸ்டரின் மன சரிவு அல்லது வீழ்ச்சியை குறிக்கிறது..இந்த வார்த்தையை படத்தின் சில இடங்களில் பார்க்கலாம்.வெறும் ஒரே நாளில் கதை நகர்வதாக எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்துக்கு Barbara Hershey, Rachel Ticotin, Frederic Forrest, Tuesday Weld நடிப்பளவில் மிகப்பெரிய வலு சேர்க்கின்றனர்...எங்கு தேவையோ அங்கு பிரமாதமான ஓசை, ஒலிகள் கொடுத்து பின்னனி இசையில் இன்னொரு பாராட்டை பெறுகிறார் ஜேம்ஸ் நியூட்டன் ஹொவர்ட்...

பிறகு என்ன சொல்வது என்றே தெரியவில்லை இந்த படத்தை பற்றி..ஆனால், குடும்பத்தோட மட்டும் இந்த படத்தை பார்த்துவிடாதீர்கள்..பயப்படாதிங்க "அதுவெல்லாம்" எதுவும் இல்ல..ஆனால், படம் முழுக்க கெட்ட வார்த்தைகளா வந்து காதுல விழுவுது.நல்ல விஷயம்தான்.ஆனா, ரொம்ப கெட்ட விஷயம்...

  சமுதாயம் என்பது..சரி விடு..ஸ்டாப்.இத பற்றிலாம் எனக்கு எதுவும் தெரியாது.(அதான் உங்களுக்கு தெரியுமே). ஏதோ இந்த படம் பார்க கிடைத்தது..பார்த்தேன்..ஆச்சரியமே மிஞ்சியது.எதிர்ப்பார்ப்புகளோடு எத்தனையோ படங்களை பார்க்கிறேன்..அதுவெல்லாம் சரிதான் போடான்னு ரிவீட்டு அடிக்குது.ஆனால், உண்மையில் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாது வெறுமனே சும்மா பார்த்த இந்த படம் உள்ளுக்குள் ஏதோ பண்ணுது.கண்டிப்பா எல்லோரும் பார்க்க வேண்டிய படம்..இப்பொழுது 15, 16 வயசு இருக்கிறவங்க..ரெண்டு மூன்று வருடங்கள் கழித்தாவது பார்க்க வேண்டிய ஹாலிவுட் படம்..ஃபோலிங் டவுன்.

IMDB : 7.6 / 10
MY RATING : 7.4 / 10 
FALLING DOWN (1993) : கீழே விழுந்தா டக்குன்னு எழுந்திதுருங்க..

==================================================================
பின் குறிப்பு : இந்த பதிவில் பல தகவல்களை திரட்டி வாசகர்களுக்கு கொடுக்க சிறப்பாக உதவிய விக்கிப்பீடியாவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.(பாருய்யா விக்கிப்பிடியாவுக்கு எல்லாம் நன்றி சொல்றான்..இவன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல ஹி..ஹி..ஹி)  
===================================================================

ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்.... மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

55 comments:

  1. நல்ல படமொன்றை அறிமுகப்படுத்தி வைச்சிருக்கீங்க குமரன்..நன்றி!
    வரவர பதிவுகளில் உங்க மைன்ட் வாய்ஸ் கூடிக்கிட்டே போவுது.(அதுவும் வாசிக்குறதுக்கு நல்ல சுவாரஸ்யமாத்தான் இருக்கு..)

    ReplyDelete
  2. @@ JZ @@
    பதிவு போட்டு அரைமணி நேரத்துக்குள் பின்ன்னூட்டமா ?? நண்பரே ரொம்ப நன்றி..
    படம் பார்க்கும் பொழுது மனசுக்குள்ளேயே நெறைய பேசிக்கிறது என்னோட பழக்கம்..அது பதிவுகள் எழுதும் போதும் வந்துவிடுகிறது..எப்படியோ சுவாரஸ்யம் என்று சொல்லிவீட்டீங்க..ரொம்ப சந்தோஷம்.இனிமேல் இந்த மாதிரி பெரும்பாலும் போடமாட்டேன்..காரணம் இதுவே பழக்கமாகிவிடும் என்ற பயம்தான்..
    மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. நானும் இந்த படத்தை கலைஞர் டிவியில் பார்த்து உள்ளேன். ரொம்ப நல்ல படம்.
    இதே மாதிரி ஒரு படம் தமிழில் "எவனோ ஒருவன்" அப்ப்டின்குற பேருல மாதவன் நடிச்சி வந்துச்சு.
    சமுதாயம் மேல இருக்குற கோபத்தை மாதவன் அழகா வெளி படுத்தி இருப்பார்.
    எவனோ ஒருவன் "Dombivali Fast" அப்படிங்கற பெங்காலி படத்தோட தழுவல்.
    "Dombivali Fast" Falling Under படத்தோட இன்ஸ்பிரரேஷன்.

    ReplyDelete
  4. @@ ராஜ் @@
    எனக்கு மாதவன் நடிச்ச படம் மறந்தே விட்டது..படம் பார்த்திருக்கிறேன்.நீங்கள் சொல்லும் தகவல் ரொம்ப புதிது.படித்தது இல்லை..அதை பின்னூட்டமாக வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி நண்பரே..

    அப்புறம் பதிவ பற்றி எதுவும் சொல்லலயே நீங்கள்..பிடிக்கலயோ.??

    வருகைக்கு மிக்க நன்றிகள்..

    ReplyDelete
  5. ரைட்டு ... ப்ளாக்ல எங்கேயோ என்னத்தையோ சேன்ஞ் பண்ணி இருக்கீங்கண்ணு புரியுது. இப்ப வாசிக்க கொஞ்சம் நல்லா, இலேசா இருக்கு.

    புது விட்ஜட்டுகளும் நன்று.

    ReplyDelete
  6. @Kumaran.
    குமரன், பதிவை படித்து விட்டு தான் பின்னுட்டம் இட்டேன்.
    பதிவில் வழக்கம் போல் நிறைய தகவல் குடுத்து உள்ளீர்கள். மிக நல்ல பதிவு.
    இந்த படத்தை பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுக்கு குடுத்து உள்ளேன்.
    பதிவை படிக்காமல் கண்டிப்பாய் நான் பின்னுட்டம் இட மாட்டேன். :)

    ReplyDelete
  7. என்னத்த சொல்ல ... படத்தைப் பற்றி அக்குவேறு ஆணி வேறா அலசியிருக்கீங்க. நன்றி குமரன்.

    எங்கயிருந்துப்பா இப்படி படங்களெல்லாம் பிடிக்கிறீங்க? நாம தான் எல்லாரும் பாத்துவிட்ட படங்களுக்கே விமர்சனம் எழுதி கடையை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம் போல.

    ReplyDelete
  8. @@ ராஜ் @@
    நண்பரே நான் ஏதோ சும்மா சொல்லிட்டேன்..எனக்கு தங்களை பற்றி தெரியும்..நீங்கள், அருண், ஹாலிவுட் ரசிகன் போன்ற புதிய நல்ல விமர்சன பதிவர்களிடையே நானும் ஒருவனாக இருப்பதை நினைத்து எப்போதும் மகிழ்வேன்..

    முதலில் நான் "பிடிக்கலயோ" என்றுதான் சொன்னேன்..படிக்கவில்லை என்று சொல்லவில்லை..தவறாக சொல்லின் மன்னிக்கவும்.மீண்டும் வருகைக்கு மிகுந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. @@ ஹாலிவுட்ரசிகன் @@

    வாங்க..நண்பரே..தங்களது வரவில் மகிழ்கிறேன்.

    // ரைட்டு ... ப்ளாக்ல எங்கேயோ என்னத்தையோ சேன்ஞ் பண்ணி இருக்கீங்கண்ணு புரியுது. இப்ப வாசிக்க கொஞ்சம் நல்லா, இலேசா இருக்கு.
    புது விட்ஜட்டுகளும் நன்று.////

    அதுலாம் எதுவும் இல்லை நண்பரே..ஏதோ என்ன பண்றதுனு தெரியாத நேரத்துல பிளாக்கர் கிடைச்சது.டைம் பாஸுக்கு நோண்டி புட்டேன்..அவ்வளவுதான்.

    தங்களது வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே..தங்களது விமர்சனங்களை படிப்பது ஜாலியான ஒன்று..அவ்வளவு இண்டிரஸ்திங்காக எப்போதும் இருக்கும்..உங்ககிட்ட நெறைய கடன் வாங்கி அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று எழுத டிரை பண்றேன்..கண்டிப்பாக பார்க்க வேண்டியது படம் இது.

    ReplyDelete
  10. மன்னிக்கவும் குமரன்.
    நான் உங்கள் வார்த்தையை தவறான படித்து விட்டேன். படிக்கலயோ என்று நினைத்து விட்டேன்.
    அது "பிடிக்கலயோ.??". My bad :( ,
    படிக்கலயோ என்று எண்ணி அதுக்கு விளக்கம் குடுத்து விட்டேன். :(
    பதிவு மிகவும் பிடித்துஉள்ளது. வழக்கம் போல உங்கள் நரேஷன் மிக அருமை. படத்தை நான் ஏற்கனவே பார்த்ததால் என் கண் முன்னே காட்சிகள் அழகாக விரிந்து சென்றன. வழக்கம் போல் நீங்கள் சஸ்பென்ஸ் உடைக்காமல் படத்தை பற்றி சொல்லி உள்ளேர்கள். படத்தின் முடிவு தான் படத்தின் அடிநாடி.
    அப்புறம் இன்னும் ஒரு விஷயம், இதே போல சமுகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளின் மனம் நொந்து போய் அந்த தவறுகளை ஒருவன் தட்டி கேட்கும் படம் தான் அந்நியன். கிட்ட தட்ட Falling Down மாதிரி தான்.
    ஷங்கர் தன் பாணியில் கமர்ஷியல் மசாலா எல்லாம் சேர்த்து அடித்து இருப்பார்.

    பிறகு கொஞ்சம் widgets வேறு சேர்த்துள்ளீர். அதுவும் நன்றாக உள்ளது.
    IMDB top 250 (Movies seen- 53)

    ReplyDelete
  11. @ ராஜ் @

    நண்பரே, மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தைகள்..,
    படம் நீங்கள் ஏற்கனவே பார்த்து ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி..இது ரொம்பவும் சீரியஸாக எழுத வேண்டிய படம்..நான் ஏதோ நெலிந்து குலைந்துட்டேன்..தாங்கள் ரசித்ததில் மனம் ஆனந்தமடைகிறது..இப்பொழுது அல்ல, எப்பொழுதும் சொல்வேன்..தங்களை போன்றவர்களின் எழுத்துக்களும் ஆதரவுகளுமே இன்றளவும் மலேசியாவில் வாழும் என்னையும் எழுத வைக்கிறது.

    மனமார்ந்த நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  12. இந்த படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட படங்களே Dombivali Fast மற்றும் எவனோ ஒருவன்

    ReplyDelete
  13. @@ Lucky Limat லக்கி லிமட் @@
    வருகைக்கும், பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றி நண்பரே..இந்த படம் இந்திய மொழிகளில் ரீமேக்கான விஷயமே நீங்களும் ராஜ் சொல்லிதான் தெரிந்தது.மிக்க நன்றி.

    ReplyDelete
  14. ஒரு மாதத்திற்கு முன்பு கலைஞரா அல்லது சன்னா என ஞாபகமில்லை... இந்தப் படத்தைப் பார்த்தேன். மிக அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்!

    ReplyDelete
  15. @@ மதுரை அழகு @@

    தங்களது இனிய வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே..படம் நீங்கள் ஏற்கனவே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  16. இப்பதான் உங்க IMDB Top 250 Profile-ஐ பார்த்துட்டு வர்றேன்.. ஏன் எல்லா பிக்சார் படத்தையும் பார்க்காம விட்டுட்டீங்க? Why This Kolaveri?? :-)

    * இதை கோபமான டோனா எல்லாம் எடுத்துக்காதீங்க.. ஒரு ரெக்கமென்டிங் டோனா எடுத்துக்கோங்க நண்பா!!

    ReplyDelete
  17. @@ JZ @@
    அதுல கோபமெல்லாம் ஏதுங்க நண்பரே..எனக்கு சினிமா மேல ஆசைகள் வந்து ஹாலிவுட், அயல் நாட்டு படங்களை ஓரளவு தரிசிக்க ஆரம்பித்ததே இந்த ஒன்றைரை வருடத்தில்தான்..பிக்ஸர் படங்களை தாங்கள், மற்ற பதிவர்கள் எழுதி படித்து ரசித்துள்ளேன்..ஆனால், படங்கள் மட்டும் பார்க்கும் வாய்ப்பை நான் தேடிக்கொள்ளவில்லை..ஆனால், சென்ற வருடத்தில் ஒரு பிக்ஸர் படத்தை டிவியில் பார்த்ததாக நினைவு..அப்போது பிளாக் தொடங்கவில்லை.படம் பெயரும் சரிவர ஞாபகம் இல்லை..

    தாங்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி, எனது வாட்ச் லிஸ்டை பார்த்து பிக்ஸர் படங்களை ரெக்கமெண்ட் செய்தமைக்கு மிக்க நன்றிகள் நண்பரே..தங்களை போன்றவர்களின் பரிந்துரைகளிலேயே நான் நிறைய படங்களை பார்க்கிறேன்..மொத்தமா ஐந்து படங்கள் இப்ப டவுன்லோடு போடலாமுனு இருக்கேன்..பார்த்துவிட்டு சொல்கிறேன்..

    ReplyDelete
  18. சமீப காலமாக சொந்தப் பிரச்சனைகள் நேரத்தைச் சாப்பிடுவதால் டிவிடிககள் பார்ப்பதில் ஒரு தொய்வு ஏற்பட்டு விட்டது குமரன். நான் பார்த்து ரசிக்கவும், ரசித்ததை எழுதவும் முடியாமல் இருக்கேன். இந்த மாதக் கடைசில சரி பண்ணிடுவேன். அதுவரை நீங்க எழுதறதை ரசிச்சு குறிச்சு வெச்சுக்கறேன். பின்னால கருத்துச் சொல்றேன். Please Bear with me! Tks.

    ReplyDelete
  19. @@ கணேஷ் @@
    தங்களது வருகைக்கு இனிய நன்றிகள் சார்..தங்களது பிரச்சனைகள் சீக்கிரம் தீர்ந்து, பழையப்படி டிவிடிக்கள் பார்க்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்..இந்த பட டிவிடியையும் வாங்கி பாருங்கள்..அருமையான படம்.நன்றி.

    ReplyDelete
  20. அருமையான விமர்சனம் ! " எவனோ ஒருவன் " கூட இந்த படத்தின் பாதிப்பில் எடுத்தது தான் ...

    ReplyDelete
  21. @@ ananthu @@
    வணக்கம் சார்..வருகைக்கும் பின்னூட்ட தகவலுக்கும் நன்றி..தங்களை போன்றவர்களின் ஆதரவுகள் ரொம்ப முக்கியம்.

    ReplyDelete
  22. நீங்கள் அனுப்பிய பதிவை இணைத்துவிட்டேன். நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  23. @@ கூகிள்சிறி .கொம் @@
    தங்களது இவ்வளவு அருமையான சேவையை எண்ணி மகிழ்கிறேன்..எனது பதிவுகளையும் இணைத்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.தொடரட்டும் தங்கள் பணி..நன்றி.

    ReplyDelete
  24. நன்றி நண்பரே அருமையான விமர்சனம்
    நான் பார்க்கவில்லை.பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  25. @@ Muruganandan M.K. @@
    வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா..பாருங்கள் பிடிக்க வாய்ப்புகள் உண்டு.

    ReplyDelete
  26. நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஆழமாக எழுதப்பட்டுள்ளது

    ReplyDelete
  27. @@ abimanju @
    வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ..தொடர்ந்து வருகையளியுங்கள்..

    ReplyDelete
  28. சிறப்பான விமர்சனம்.. சிறந்த படம் என்றே தோன்றுகிறது,, பார்க்கனும்.

    ReplyDelete
  29. சிறப்பான விமர்சனம் நண்பரே!

    ReplyDelete
  30. @@ Riyas @@
    இனிய வணக்கம்,
    தங்களது வருகையால் மனம் மகிழ்ந்தது நண்பரே..உண்மையில் பார்க்க வேண்டிய படமிது..சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும், பாருங்கள் தங்களுக்கும் பிடிக்கலாம்.நன்றி.

    ReplyDelete
  31. பார்த்துவிடுகிறேன் பாஸ்! நன்றி!

    ReplyDelete
  32. hello, itha vasantham TV la kaatuna naala neengalum indian kooda oppidureenga, ana intha padatha thaluvi than madhavan nadicha evano oruvan padam vanthuchu, just see that movie.

    ReplyDelete
  33. @@ ஜீ...@@
    தங்களது வருகைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோ..பாருங்கள்.

    ReplyDelete
  34. @@ Aryan @@
    தங்களது வருகையில் மகிழ்கிறேன் சகோ,,
    வசந்தமா ?? நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் மலேசியா பாஸ்,,நான் வசந்தம் டிவி எல்லாம் பார்த்ததுக்கூட கிடையாது..எவனோ ஒருவன் எப்பயோ பார்த்த படம்.இந்த படம் பார்க்கும் போது ஏனோ "இந்தியன்" தாத்தாதான் ஞாபகத்துக்கு வந்தாரு, ஊருல நடக்குற அக்கப்போறுங்கள தட்டி கேட்க்குற கேரக்டருனா டக்கென்று நினைவுக்கு வருவதே அவருதான்.அதான் சும்மா டைட்டலா போட்டேன்..

    தகவலுக்கு மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  35. பதிவும்...பதிவில் இடம் பெற்ற படமும்...புதிய வடிவமைப்பும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  36. @@ உலக சினிமா ரசிகன் @@
    நன்றி அண்ணா, தங்களது வரவை எண்ணி மனம் மகிழ்கிறேன்..தொடர்ந்து வருகையளியுங்கள்.

    ReplyDelete
  37. ஆழமான விமர்சனம்!வர வர எழுத்து மெருகேறிக்கொண்டு வருகிறது.....படம் பார்க்கிறேன்!

    ReplyDelete
  38. @ வீடு K.S.சுரேஸ்குமார் @@
    தங்களது வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் மிக்க நன்றிகள் சகோ,
    மீண்டும் வருகைத் தாருங்கள், தங்களை போன்றவர்களின் ஆதரவுகள் மிகவும் முக்கியம்.

    ReplyDelete
  39. அருமையா விமர்சனம் பண்ணி இருக்கீங்க... உங்களை மாதிரி பதிவர்களின் மூலம் நிறைய நல்ல படங்களின் அறிமுகம் கிடைக்கிறது. இதையும் பார்த்து விடுகிறேன். நன்றி நண்பரே

    ReplyDelete
  40. @@ பாலா @@
    பாலா சார் ரொம்ப வணக்கம், தங்களை போன்ற சிறந்த பதிவர்களின் எழுத்துக்களே என்னை மென்மேலும் ஊக்கப்படுத்துகின்றன.எத்தனையோ நாட்கள் தங்களது பதிவுகளை படித்துவிட்டு நாமும் ஒரு நாள் சில வரிகள் பதிவுலகில் பதிப்போம் என்ற கனவு கண்டது உண்டு.நீங்களே இவ்வளவு தூரம் வந்து என்னை வாழ்த்தியதில் மகிழ்கிறேன்.மிக்க நன்றி.

    ReplyDelete
  41. படத்தை பற்றிய உங்கள் பார்வை நன்று. நன்றி

    ReplyDelete
  42. @@ நிலா முகிலன்
    தங்களது வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

    ReplyDelete
  43. superb review my friend awesome writing u r genius

    ReplyDelete
  44. superb review my friend awesome writing u r genius

    ReplyDelete
  45. வணக்கம் குமரன் . Falling down படம் பற்றி கேள்விபட்டுஇருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை . உங்கள் விமர்சனம் அந்த குறையைபோக்கியது . உங்கள் நகைச்சுவையான எழுத்து பாணி கட்டுரையை சுவாரசியமாக வாசிக்கவைக்கிறது . படம் பற்றிய மேலதிக தகவல்கள் இன்னும் கட்டுரையை மெருகேற்றுகிறது வாழ்த்துகள்

    ReplyDelete
  46. intha padatha seeman allaga copiyadichu

    "evano oruvan" perla veliyitturupar
    padam pathirupeengale...

    ReplyDelete
  47. ஹலோ... ஹலோ... மைக் டெஸ்டிங்! மிஸ்டர் குமரன் எங்கிருந்தாலும் இந்த சினிமா அறிமுகத்தைப் படிக்க உடனே வரவும்...

    http://www.minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_17.html

    நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  48. super thambi

    in my blog today

    http://scenecreator.blogspot.in/

    ReplyDelete
  49. அருமையான பதிவு நண்பரே! மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !!
    நண்பன் திரைப்படத்தில் உள்ள தவறுகள்

    ReplyDelete
  50. @@ king of silambu @@
    Thanks for ur comment friend..

    ReplyDelete
  51. @@ பாரதிக்குமார் @@
    ஐயா என் மனமார்ந்த வணக்கங்களோடு நன்றிகள்.முதலில் தங்களிடம் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.சில காரணங்களால் இணையப்பக்கம் வர இயலவில்லை..
    தங்களை போன்றவர்களின் ஊக்கமே என்னை இன்னும் எழுத வைக்கிறது..படம் கட்டாயம் வாய்ப்புகள் இருப்பின் பாருங்கள்.நன்றாக இருக்கும்.நன்றி.

    ReplyDelete
  52. @@ கணேஷ் @@
    ஐயா, என்னவென்று சொல்வது..மன்னிப்பு ஒன்றைத்தவிர வேறெதுவும் என்னிடம் இருப்பதாக தெரியவில்லை..என்னை மன்னியுங்கள்.சில இணைய, மனக்கோளாருகளால் பக்கம் வர முடியவில்லை..
    விமர்சனம் கட்டாயம் சில மணி நேரங்களில் படித்துவிடுகிறேன்.நன்றி.

    ReplyDelete
  53. @@ scenecreator @@
    அண்ணா, ஹங்களது எழுத்துக்கள்தானே..அருமையாக இருக்குமென தெரியும் எனக்கு.தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  54. @@ லக்ஷ்மிராஜன் @@
    சார், ரொம்ப வணக்கம்..கண்டிப்பாக உங்கள் பதிவை வாசிக்கிறேன்.நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...