Follow by Email

Friday, 31 January 2014

புத்தன் ஆவது எப்படி ? போதி தர்மா..


போதி தர்மா என்னும் மகா ஞானி ஒவ்வொரு நாட்டுக்காகப் போய்க்கொண்டிருந்தார்.அவர் தனது நாட்டுக்கு வருகிறார் என்பதை கேள்விப்பட்ட அரசன், அவரை தனது நாட்டின் எல்லைக்கு வந்து வரவேற்க ஓடோடி வந்தார்.அவருடன் சேர்ந்து நாடே திரண்டிருந்தது.போதி தர்மாவின் வருகையை அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
போதி தர்மா, தனது சீடர்கள் புடை சூழ வந்து சேர்ந்தார்.ஆனால் அவருடைய நடையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது.அவர் தனது ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்திருந்தார்.இன்னொரு செருப்பை தன் கையில் ஏந்திக்கொண்டு வந்தார்.அவருக்கு மரியாதை கொடுக்க அரசரே நேரில் வந்த போது அவர் கையில் செருப்புடன் வருவது அனைவருக்கும் அநாகரிகமாகப்பட்டது.அதை அவரிடம் எப்படி தெரிவிப்பது என அரசருடன் வந்த மந்திரி குழம்பினார்.பிறகு அவர் பணிவுடன் வேண்டினார் :

"சுவாமி ! தாங்கள் சுமக்கும் ஒற்றைக்கால் செருப்பை அடியேன் சுமக்க பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்." போதி தர்மா சிரித்துக்கொண்டே பதிலளித்தார் : "அய்யா ! இவ்வளவு காலமும் இந்த செருப்பு என்னைச் சுமந்து வந்ததது.இப்போது நான் நன்றிக்கடனாக அந்த செருப்பைச் சுமந்து வருகிறேன்.நானே சுமப்பதுதான் சரி"   

ஞானியை பொருத்தவரை அறுந்துப்போன செருப்பும் ஒன்றுதான் அரச மரியாதையும் ஒன்றுதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேலே சொல்லப்பட்ட கதை சமீபத்தில் வாசித்த "புத்தன் ஆவது எப்படி" என்ற 86 பக்கங்கள் கொண்ட குட்டி இ-புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.போதி தர்மரை பற்றிய இன்னொரு கதையும் அதில் அடங்கியுள்ள்து.நூல் முழுவதும் கதைகள் தான்..ஜென் மத தத்துவங்களையும், போதனைகளையும் மிகவும் அருமையான சின்னச்சின்ன கதைகளினூடே, வாசிக்கும் மனங்களை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.எழுதிய எழுத்தாளரது பெயர் குறிப்பிடவில்லை என்பதால் இங்கு சொல்ல முடியவில்லை.


புத்த பகவான் பற்றிய சிந்தனைகள் நேற்று முளைத்தது என்று சொல்ல முடியாது.ஏறக்குறைய 7, 8 வருடங்களுக்கு முன்னமே அறிந்தக்கொண்ட ஒன்றுதான்.வீட்டுக்கு அருகிலேயே மிகப்பெரிய புத்தர் கோவிலும் உண்டு.அங்கே தியானத்தில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை ஒன்றும், ஸ்ரீமன் நாராயணன் பாற்கடலில் உறங்கிக்கொண்டிருக்கும் சாயலில் இன்னொரு சிலையும் மனதை பறிக்கக்கூடியவை.விசாக தினத்தில் சிறப்பாக கொண்டாடுவார்கள்.தமிழர்களையும் சீனர்களையும் ஒன்றிணைக்கும் நல்ல நிகழ்வாக அதனைக்கூறலாம்.மலைகள் பல சூழ அவைகளை குடைந்துக்கட்டிய கோவில் இது. 

  
புத்தரை பற்றி நிறைய கூற வேண்டும்.அடுத்தொரு முறை வேறொரு பதிவில் சந்தர்ப்பம் கிட்டினால் எழுதலாம் என்று உள்ளேன்.அதுவரை அந்த புத்தகத்தை டவுன்லோடு போட எண்ணுபவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.சின்ன சைஸே ஆன PDF பைல் இது.இந்த வலைப்பூவில் இயங்கிக்கொண்டிருக்கும் புத்தக லைப்ரரிக்கு செல்ல கிளிக் செய்யுங்கள்..அடுத்த பதிவில் சந்திக்கும் வரை..உங்கள் ஆதரவோடு.. 

4 comments:

 1. டவுன்லோடு லிங்க் காணவில்லை நண்பா.... பின்னூட்டத்தில் பகிரவும்... பழைய பதிவுகளுக்கான சுட்டிகளை சைடுபாரில் வைக்கவும்... தேடிப்பார்த்துப் படிக்க வசதியாக இருக்கும்...

  நீங்கள் விரும்பிப் படிக்கும் தளங்களில் என்னுடையதும் இருப்பது மகிழ்ச்சி....

  ReplyDelete
 2. Thanks nanba..blog vanthu romba naatkal aagividdathu..kandippaaga tharugiren..varugaiku nandri

  ReplyDelete
 3. குமரன், நீநீநீநீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுத வந்ததற்கு முதலில் வாழ்த்துக்கள்..
  சினிமாவில் இருந்து ஆன்மீகமா..???நல்ல கதை...
  போதி தர்மா என்றால் ஏழாம் அறிவு தான் ஞாபகம் வருகிறது. தொடர்ந்து பதிவுகள் எழுதுங்கள்...மீண்டும் சந்திப்போம்... :-)

  ReplyDelete
 4. nandri nanbare..thangal varugai udchagam alikkirathu..kandippaga santhippom

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge