Thursday, 15 May 2014

Family Plot (1976) : நான்கு கில்லாடிகள்..


சுமார் ஆறு மாதங்களாக ஒரு இயக்குனர் எடுத்த படங்களை அதிகமாக பார்த்து ரசித்தது ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்-ஆகதான் கண்டிப்பாக இருக்கும். அப்படி என்னதான் படங்களில் வைத்திருக்கிறாரோ என்று தெரியவில்லை, தெரிந்தாலும் மனதுக்கு விளங்கவில்லை.சிறப்பான கதை, திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, எடிட்டிங்க், எந்த நடிகர்களிடமிருந்தும் சிறந்த நடிப்பை புளிவது என்று பலவற்றிலும், சஸ்பென்ஸ், திரில்லர், நகைச்சுவை, டிராமா என்று அத்தனை பிரிவுகளிலும் பல நூறு கோல்களை அடித்து அவருக்கே உரிய விதத்தில் விளையாடி ரசிகர்களை கவர்வது புரியாத புதிராகவும் விந்தையாகவும் எனக்கு இருக்கிறது..

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இவர் ஆரம்ப காலத்தில் எடுத்த படங்களை கூட இன்று வரை உலகமெங்கும் உள்ளவர்களால் டிவிடி, பதிவிறக்கம் என்று செய்து படம் பார்க்கிறார்கள்.வேற்று மொழிக்காரர்கள் ஏன் ஆங்கிலம் முழுமையாக தெரியாத சினிமா ரசிகர்கள் கூட ஹிட்ச்காக் படங்கள் பார்ப்பது வாடிக்கையாகி வருவதை சில மாதங்களுக்கு முன்பு ஏதோ இணையத்தளங்களில் படித்தேன்...

ஃபேமிலி ப்ளோட் - ஆவிகளோடு தொடர்ப்புக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு தில்லு முல்லு செய்யும் பிளான்ச் டைலர் மற்றும் ஜார்ஜ் லும்லெய் என்ற ஜோடிக்கும், டைமண்டுகளை திட்டம் போட்டு கடத்தும் ஆர்தர் ஆடம்சன் மற்றும் பிரான் என்ற ஜோடிக்கும் இடையே எதிர்ப்பாராத விதமாக ஏற்படும் சந்திப்புகளையும் மோதல்களையும் தேடல்களை பற்றியும் கூறும் படம்..

  மிக முக்கியமான நான்கு கதாபாத்திரத்தில் Barbara Harris, Bruce Dern, Karen Black மற்றும் William Devane ஆகியோர் நடித்திருக்கின்றனர்.ஜோன் வில்லியம்ஸின் இசை குறிப்பிட வேண்டிய சிறப்பம்சமாகும்.சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் திரைவுலகில் இருந்து பல புதிய சினிமா உத்திகளை அறிமுகம் செய்த ஆல்ப்ரட் ஹிட்ச்காக் என்னும் சினிமா மேதை எடுத்த இறுதி படைப்பிது..உண்மையாக சொல்லின் அனைவராலும் மறக்கபட்ட அல்லது குறைத்து மதிப்பிடபட்ட ஒரு நல்ல சினிமா..Victor Canning என்பவரின் நாவலை தழுவி, ஆறு முறை ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கபட்ட சிறந்த திரைக்கதையாசிரியரான Ernest Lehman அவர்களில் எண்ணத்தில் உருவான படமிது.

இப்படத்தின் இன்னொரு சிறப்பாக ஜோன் வில்லியஸை சொல்லலாம்.. இசைத்துறையில் ஜாம்பவான இவர் உலகளவில் பல பரிந்துரைகளும் வெற்றிகளும் பெற்றவர்.ஸ்பீர்பெர்க் உடனான இவரது கூட்டணி இன்று வரை உலக அளவில் புகழ்பெற்றது என்பதை விரிவாக சொல்லத் தேவையில்லை..ஹிட்ச்காக்கின் இறுதி படமான இதிலும் இவருடைய பங்கு அதிகம்.பொதுவாக தன்னுடைய படங்களில் இசைக்கு மிகுந்த சிரத்தை எடுப்பவர் ஹிட்ச்காக்.இசையமைப்பாளர்களின் மூளையை பிசைந்து நிறைய நல்ல ஐடியாக்களை சொல்லி ஒரு புதுவிதமான இசையை ரசிகர்களுக்கு கொடுப்பவர், அதனை செய்ய இதிலும் தவறவில்லை.டைட்டில் கிரெட்டிட்டில் தொடங்கும் ஒரு வித மூசிக் மாயம் தொடர்ந்து பல காட்சிகளில் மிளிர்கிறது.மேலும், சைக்கோ படத்தில் டீம் மூசிக்கை போல இதிலும் சில காட்சிகளில் பல வயலின்கள் சேர்ந்து மிரட்டும் இசைக்கோர்வை மேலும் பலமாகும்.

நடிப்பளவில் பல முகங்கள் இருந்தாலும் நம்மை (என்னை) வெகுவாக கவர்வது Barbara Harris நடித்த கதாபாத்திரமான பிளான்ச் டைலர்-தான்.என்ன அருமையாக முகத்தில் ஒவ்வொரு அசைவுகளையும் முகபாவனைகளையும் வெளிபடுத்துகிறார் தெரியுமோ.டைட்டில் கிரடிட் முடிந்ததும் தோன்றும் இவர் முகம் கடைசி ஃப்ரேம் வரை தனித்து நிற்பது.அதுவும் படு சீரியஸான காட்சிகளில் கூட தனது நடிப்பால் நகைச்சுவையை சாமர்த்தியமாக  வழங்கியுள்ளது சுவாரஸ்யம்தான்.4 கோல்டன் குளோப் மற்றும் ஓர் ஆஸ்கருக்கு இவர் பரிந்துரைக்கபட்டவர் ஹேரிஸ் என்பது குறிப்பிடதக்கது.

சுமார் 1 மணி 55 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்துக்கு கூடுதல் பலமே திரைகதை-தான்.. கதைக்களத்துக்கு தேவையில்லாத காட்சியென்று எதையும் வைக்காமல் வெறுமனே படம் பார்ப்பவர்களின் பார்வைகளை கொஞ்சம் கூட சிதற விடாது ஒவ்வொன்றையும் எடுத்திருக்கின்றனர்.இதற்கு இன்னொரு திசையில் ஒளிப்பதிவு.பொதுவாக கேமராவில் புகுந்து விளையாடும் ஹிட்ச்காக் இதிலும் விளையாட மறு(ற)க்கவில்லை.கார் சேசிங் காட்சிகள் உட்பட மெனக்கடாமல் எளிதாக எடுத்தவிதம் இன்னொரு சிறப்பாகும்.

   ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளிவந்து இன்று உலகமெங்கும் சிறந்த படைப்புகளாக கருதப்படும் சைக்கோ, நோர்த் எண்ட் நோர்த்வெஸ்ட், வெர்டிகோ, தெ பேர்ட்ஸ் என்று பலவற்றவையோடு இந்த படத்தை ஒப்பிடும்போது இந்த படம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.கொலைகள், தவறாக குற்றம் சாட்டப்பட்ட கதாபாத்திரங்கள் எதுவும் இப்படத்தில் இல்லாததுக்கூட இதற்கு காரணமாகலாம்.எனினும் ஹிட்ச்காக் ரசிகர்கள் மட்டுமின்றி நல்ல பொழுது போக்கு படத்தை தேடி கொண்டிருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய விஸுவல் டிரீட் தெ ஃபேமிலி ப்ளோட்..
==================================================== 
Alfred Hitchcock  Special : Trivia : எந்த நடிகராயினும் பொதுவாக திரைக்கதை எழுத்தில் ஒரு வார்த்தைகள் கூட விட்டுத்தராது, காகிதத்தில் இருப்பதையே பேச வைக்கும் ஹிட்ச்காக், இந்த படத்தில் மட்டும் நடிகர்களுக்கென்று அந்த சுதந்திரத்தை கொடுத்தாராம்..
==========================
Director Cameo : திரைப்படத்தின் உள்ளே ஏறக்குறைய 45 அல்லது 46 ஆவது நிமிடத்தில் வருகிறார்.வழக்கம் போல படம் பார்த்தவர்கள் யாராவது இருந்தாலோ அல்லது பார்த்துவிட்டு பின்னுட்டத்தில் சொல்லுங்கள்..முயற்சியாவது செய்யுங்களேன்
==================================================== 
உங்க ஆதரவோடு 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...