அற்புதமான நெதெர்லாண்டு நாட்டு சரக்கு
இந்த படம்.. ஒரு அழகான வெக்கேஷனில் தன் காதலியான சாஸ்கியாவை கண்ணுக்கு எட்டிய தொலைவில்
தொலைத்துவிட்டு தேடி அலையும் ரெஃக்ஸ் என்ற இளைஞனின் கதையை மிகவும் நேர்த்தியாக பேசும்
திரில்லர் படமிது.சந்தேகமே இல்லாமல், நெதெர்லாண்டு சினிமாவில் ஆக சிறந்த
படங்களுல் ஒன்றாகவே இந்த தெ வேனிஷிங்க் படைப்பை கூறலாம்.
செவென் (1994) திரைப்படத்தை பார்த்த ஒரு வித மயக்கத்தில் விக்கிப்பீடியா பக்கம் போக அங்கே எழுதியிருந்த ஒரு விமர்சகரின் வரியை படித்து அசந்துப் போனேன்..இதோ அந்த வரி உங்களுக்காக: John Wrathall wrote, "Seven has the scariest ending since George Sluizer's original The Vanishing..இதற்கு மேல் என்ன வேண்டும் படத்தை பார்க்க..உடனே டவுன்லோட் போட்டு சிறிது காலம் கழித்தே பார்க்க முடிந்தது.அவர் சொன்னது போல, ரொம்பவும் ஆச்சரியமான எதிர்ப்பார்க்காத கிளைமக்ஸ் இந்த படத்தில் உண்டு.பார்வையாளர்களை முழுதாக தன் வசம் ஈர்க்கும் தன்மை அந்த இறுதி காட்சிகளுக்கு உண்டு.

உங்க ஆதரவோடு
No comments:
Post a Comment