பள்ளி நாட்களில் ரோபின்சன் குருசோ என்ற நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. Daniel Defoe என்ற எழுத்தாளரால் 1719 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவல், தலைப்பு கதாபாத்திரமான ரோபின்சன் குரூசோவின் 28 ஆண்டுக்காலம் தனித்தீவில் தனியாளாக வாழ்ந்ததை விளக்குகிறது..இந்த புதினம் பள்ளி ஆங்கில பாடத்திட்டத்தில் ஒரு பகுது.ஆதலால், தேர்வுகளில் கேள்விகள் கட்டாயம் நிச்சயம்.அதன் காரணமாகவே நாவலை சில முறைகள் வாசிக்க மிகவும் கவர்ந்த ஒன்றாகவும் ஆனது..ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுதும், ரோபின்சன் எப்படி இருப்பான், அந்த காட்சிகள் எப்படி இருக்கும் என்று பல முறை என் மனக்கற்பனையில் கதையோடு ஒட்டிபோன அனுபவம் உண்டு.
சில மாதங்களுக்கு பிறகு ஒரு நண்பருடனான உரையாடலில், இந்த படத்தை பற்றி பேச நேர்ந்தது.ரொம்ப நாட்கள் முன்னம் ஒரு படம் பார்த்திருந்ததாகவும், பெயர் ஞாபகமில்லை என்று கூறி சில காட்சிகளையும் ரோபின்சன் குரூசோ நாவலுடன் ஒப்பிட்டிருந்தார். அப்பொழுதே படம் என்றாவது பார்க்க வேண்டும் போல இருந்தது.. இணையத்தில் தேடி கண்டுப்பிடித்தேன்.டவுன்லோடு போட்டு சமீபத்தில் பார்க்கலானேன்.
@@=================================================@@@============================================@@
நான்கு பாதை வழிகள் தனியாக பிரிய, தூரத்திலிருந்து ஒரு வண்டி போக கிரடிட் கார்டு போடும் போதே இது வித்தியாசமான படம் என்று மனம் ஊகித்தது.

எழுந்து பார்க்கவே, சுற்றியும் கடல்...மலைகள், மரங்கள் என எல்லாமே இயற்கை தாயின் அணிவகுப்புகள்.சில தூரங்கள் நடக்கிறார்."ஹேலோ..ஹேலோ" என்றப்படியே கூச்சல் போடுகிறார்.யாரும் வந்தப்பாடில்லை.சுற்றிலும் உயிர்கள் வாழ்வதற்க்கான தடயங்களும் இல்லை..பக்கத்தில் கரை ஒதுங்கியிருக்கும் பேக்கஜ்களை எடுத்து வைத்துக்கொள்கிறார்..ஒரு வழியாக அந்த தீவில் உயிர் என்று சொல்லிக்க தன்னை தவிர யாரும் இல்லை என்ற முடிவுக்கு வர அவரது வாழ்க்கை படகு அங்கேயே பயணிக்கிறது..
இதுவரை பார்த்தது டிரைலர், இதுக்கு மேலதான் மேயின் பிச்சர் என்று தலைவர் சொன்ன மாதிரி இங்கு தொடங்கும் காட்சிகள்தான் படத்தின் உயிர் நாடிகள்..சக் நோலன் தப்பித்தாரா ?? என்ன செய்வார் ? எப்படி வாழ்வார் ? போன்ற நிறைய ஞாயமான கேள்விகளுக்கு காலம் போன போக்கிலேயே பதில் சொல்கிறது திரைப்படம்.
கடந்த இருபது ஆண்டுக்கால அமெரிக்க சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக Robert Zemeckis அவர்களை கூறலாம்.மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தை ஃபோரெஸ்ட் காம்ப் என்ற திரைப்படைப்பாக வழங்கி ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றவர்.வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரங்கள் என்று ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக காட்டிட நினைப்பவர்.இவரது திரை இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு ஆண்டு இரண்டு முறைகள் ஆஸ்கர் வென்ற கவனிக்கத்தக்க நடிப்புலக கலைஞர்களில் ஒருவரான டோம் ஹேங்க்ஸ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படமே Cast Away.
எனக்கு நடிப்பளவில் எந்த அனுபவமோ, திறமையோ என்றுமே இருப்பதாக உணர்ந்ததில்லை.அதை பற்றி எதுவும் தெரியாது என்பதே சத்தியமான உண்மை.ஆனால், நிறைய படங்களை பார்த்திருக்கிறேன். தமிழ் தொடங்கி பிற மொழிகள் என்று பார்ததவரையில் பிடிக்காத நடிகர்கள் என்று எவரும் இருந்ததும் இல்லை.என்னை பொறுத்தவரை நடிகர் என்பவர், "இனம், மொழி, பணம், ஏழை என்பதை தாண்டி அனைத்து தரப்பினரையும் கவர வேண்டும்.எல்லாருடைய ரசனைக்கும் நடிப்பளவில் ஒத்து வர வேண்டும்""..இது தனிப்பட்ட கருத்து.
அந்த வரிசையில் டோம் ஹேங்க்ஸ் - இவரது நடிப்பு மிகவும் இயல்பானது. கதாபாத்திரங்களை தன்னுடையதாக்கி விருதுகளை தட்டிச்செல்பவர்களில் கெட்டிக்காரர்.இந்த படத்திலும் அதற்கு பஞ்சமே இல்லாதப்படி, கப்பல் கவுந்து, மனிதர் நடமாட்டமே அற்ற ஒரு தீவில் தன்னுடைய உயிரினை காப்பாற்றிக்கொள்ள துடிப்பவனாக சக் நோலன் என்ற கதாபாத்திரத்துக்கு உயிரை தந்திருப்பார்.உடலையும் தந்திருக்கிறார்.முதல் முப்பது நிமிடங்கள், பிற்ப்பாதி என்று ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.தன்னையே அர்ப்பணித்து நடித்திருப்பார்.நான்கு நாட்களுக்கு யாருமே துணையில்லாது இருந்தாலே பைத்தியம் பிடித்தது போல ஆகிவிடும் நம்மில் பலருக்கு.இது நான்கு வருடங்கள்.பேச்சு துணைக்கு கூட யாருமில்லாது ஒரு வெறிப்பிடித்தவனைப் போல வாழ்ந்திருப்பார்..ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட போதும் கிளேடியேடர் Russell Crowe - விடம் இழந்தது ஒரு பெரிய இழப்புதான்..ஒவ்வொரு திரை ரசிகரும் தவறவிடக்கூடாத நடிப்பு விருந்து..
@@=================================================@@@============================================@@
நியூஸ் ரீல் : இப்படத்தில் டோம் ஹேங்க்ஸை கதாபாத்திரத்தை மத்தியதர வயதினராக திரையில் காட்டிட வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி எதுவும் செய்யாது எடை ஏற வைத்துள்ளார்களாம்..அதோடு, பாதி சீன்கள் எடுத்த நிலையில் படப்பிடிப்பை ஒரு வருடம் தள்ளிவைத்துவிட்டார்களாம்..இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில், டோம் ஹேங்க்ஸ் ஏறக்குறைய ஐம்பது பவுண்ட் எடையை குறைத்ததோடு முடியையும் தாரு மாறாக வளர்த்துவிடச் செய்தார்களாம்..படம் பார்க்கும் போது அது தெரியும்..எடை இருந்தாலும் எலும்பும் தோலும் ஆனாலும் நடிப்பில் கலக்குறாரு டோம் ஹேங்க்ஸ்.

படத்துக்கு மிக பெரிய பலங்களாக Arthur Schmidt - யின் எடிட்டிங்க் மற்றும் Alan Silvestri - யின் இசையை சொல்லலாம்..அவ்வளவு அழகாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.
"படத்தில் இவருக்கு துணையே இல்லப்போலயே" என்று நினைக்கும் போது ஒன்று வருகிறது..மூச்சு இல்லாத பேச்சு அற்ற வில்சன் என்ற உயிர்..அந்த உயிரை நோலன் பார்த்துக்கொள்வது இருக்கிறதே, அந்த உறவை உயிரோட்டமாக காட்டிருப்பர்..அந்த உயிரை பிரிகையில் சக் நோலண்டுடன் சேர்த்து நம் மனமும் கலங்குகிறது..தனியாக அமைதியாக நீங்கள் இப்படத்தை பார்த்தால் அது தனி அனுபவம்..அவன் சிரித்தால் சிரிக்க, அழுதால் அழுக என்று நீங்களும் சக் நோலனாகவே மாறிட வாய்ப்புகள் உண்டு..தனிமையின் தவிப்பை நீங்களும் உணர்வீர்கள்./// அந்த உயிர் என்ன, யாது என்பதை படம் பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்..இப்பவே நன்றி உங்களுக்கு.///

இறுதி காட்சியில், நாலு பக்கமாக சாலைகள் பிரிய அதன் நடுவே சக் நோலனை நிற்கவைத்து, வாழ்க்கை பற்றிய தத்துவத்தை அவரவர் பார்வையில் விடும்போது இயக்குனருக்கு கைதட்டல்கள் கொடுக்க வேண்டும்.இப்படி பல காட்சிகளை அடுக்கடுக்காக சொல்லலாம்..ஆனால், அனைத்துமே சுவாரஸ்யத்தை கெடுப்பவையாக போய்விடும் என்ற நம்பிக்கையில் இங்கு சொல்லாது விடைப்பெறுகிறேன்..
ஒரு சிறந்த படைப்பென்பது என்னை பொருத்தவரை மனதை கவர்வதை தாண்டி, ஒருவரது நெஞ்சை துளைக்க வேண்டும்..அது ஆர்ட்ஹௌஸ் தொடங்கி ஆக்சன் படங்களாகவும் இருக்கலாம்..அவைகள் நாட்கள், மாதங்கள் கடந்து நிலைத்திருக்க வேண்டும்.அதுதான் என்னை பொருத்தவரை உண்மையான சினிமா.அந்த வகையில் காஸ்ட் எவே திரைப்படம், என் இச்சிறிய திரைப்பட பாதையில் ஓர் அனுபவம்.எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது.
IMDB : 7.5 / 10
MY RATING : 7.7 / 10
Cast Away : Definitely Worth Watching..
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள். சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,