Follow by Email

Tuesday, 10 April 2012

என் மன நினைவில்..ஓரு மரணம்..

எத்தனையோ கல்யாணங்களுக்கு நாம் செல்வோம்.ஆனால், ஒரு சிலதே நம் நினைவில் இடம் பெற்றிருக்கும்.அந்த வரிசையில் அந்த திருமணமும் ஒன்று.காரணம், நான் மாப்பிளை தோழன்.சும்மா இருந்த என்னை அழைத்து சென்று மாப்பிளை தோழனாக மாற்றியதில் பெரிய ஆச்சரியம் எனக்கு.அது ஒன்றும் எனக்கு புதிதல்ல.ஏற்கனவே என் உறவுக்காற அக்காவின் திருமணத்தில் மாப்பிளை தோழனாக இருந்த அனுபவம் உண்டு.நல்லதுதான் இருந்தாலும் உடம்பு பதபதவென்றது.

அப்போது எனக்கு ஒரு 17 வயது இருக்கும், ஜனவரி மாதம்..என் பாட்டியின் தம்பி மகனான கோபி அவர்களது திருமணம்.நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடி கணவன் மனைவியாக உருவான நாள் அது.ரொம்பவும் சிறப்பாக ஏற்ப்பாடு செய்ய சுபமாக நடந்து முடிந்தது.

அது நடந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மார்ச் மாதம் 15 திகதி மாலை 5.00 மணிவாக்கில் மனதை உறையவைத்த அந்த செய்தி காதினை எட்டியது.வேலை மாற்றமாக வேறொரு ஊரில் குடும்பத்தோடு வசித்து வந்த கோபி அவர்கள் நடந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்பதே அச்செய்தி.எங்களுக்கு மனம் கணமானது.பாட்டியின் அழுக்குரல் மனதை மேலும் ரணமாக்கியது, காலம் சென்ற கோபி அவர்களுடன் நான் பழகியது, பேசியதும் குறைவு.அதிக வயது வித்தியாசமே அதற்கு முக்கிய காரணம்.என் தாத்தா, அம்மா, மாமா என அனைவரும் "அதான் கோபி..டா நீக்கூட அவர் கல்யாணத்துல மாப்பிளை தோழனா இருந்தியே..இறந்துட்டாரு" என்று சொன்ன பொழுது நெஞ்சம் உடைந்தது.

வேறெதுவும் பேசாது,,சில மணி நேரங்களில் தெலுக் இந்தானுக்கு அவர் உடல் வைக்கப்பட்டிருக்கும் வீட்டை அடைந்தோம்.சுற்றியும் மரம், பச்சை பச்சையென செடிகள் என இயற்கையை சுற்றி அவர் உடல் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தது.பிரேதம் உள்ள இடத்தை நெருங்கும் போது ஒரே அழுகை அலறல்கள் இன்னும் ஒரு முறை நெஞ்சை பிளந்தது.ஒரு பக்கம் தாத்தா இன்னொரு பக்கம் மாமா என என் கைகள் நாடின.வயதுதான் 19 தொட்டுவிட்டது எனினும் என் கால்கள் மரணங்கள் நிகழ்ந்த வீட்டுகளுக்குள் அதிகம் சென்றதில்லை.

உள்ளே சென்றது, என் தாய், பாட்டி அவரது தங்கையின் ஒப்பாரி காதை கிழித்தது.சின்ன வயதில் கோபி அவர்களை தூக்கி வளர்த்த அவர்களது நினைவுகள் சொல்லாமலேயே மனம் உணர்ந்தது.அவரது உடலை பார்த்தவுடன் அங்கிருந்த எல்லோரது கண்களும் கலங்கியது.பக்கத்தில் அவரது புகைப்படம்..அதில் சிவப்பான அவர் முகம்..அவரது கல்யாண நாளில் நான் இருந்த நினைவுகளை கிளப்பியது.  

அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது, சில உண்மைகள் கிடைத்தது.காலையில் மருத்துவமணைக்கு சென்று வீடு திரும்பு நேரம், எதிரே சென்றுக்கொண்டிருந்த வாகனம் மெதுவாக செல்லவே, இவர் வந்துக்கொண்டிருந்த கார் வேகத்தை கூட்டி வெட்ட முயற்சிக்கும் (Over Take) பொழுது எதிரே வேகத்தில் வந்த பெரிய லாரியில் கார் சிக்கி மேலே ஏறியதாக தெரியவந்தது.சம்பவ இடத்திலேயே தேகம் சேதமடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.பரிதாபபட்டேன்.,,அவருக்கு ஆறுமாதமே ஆன பெண் குழந்தை உண்டு என்பதை அறிய.

இறுதி காரியங்களில், தாய், தந்தை, மனைவி, அக்கா, உறவினர்கள் என அனைவரது அழுகையும் உடலை ஈரமாக்கியது.கண்ணீரில் குளித்த அவரது மனைவி மற்றும் தாயின் ஓசைகள் இன்னமும் கேட்கிறது.ஏன் கோபி அவர்கள் வேகமாக செல்ல வேண்டும் ? ஏன் அந்த ஆண்டவனும் அதை விட வேண்டும் ?? வெறும் 29 வயதில் மரணம் என்பது விதியா ??? மதியா ???? என பல கேள்விகள் அப்பொழுது எழுந்தன.மாலை 3.30 வாக்கில் இந்து மயாணத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தையே தான் பெற்ற பையனுக்கு கொள்ளி வைக்கும் போது அச்சிறு இதயம் என்ன தவிதவித்திருக்கும்..ஒரு தாய் தந்தையாக தனது வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடூரமே தன் பிள்ளைகளின் மரணம்தான். "ஆண்டவா அதை யாருக்கும் கொடுக்காது இனி தடுப்பாயா ????."

உடல் எரிய, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொண்டேன்.அதை மட்டும்தான் என்னால் செய்ய முடியும்.எல்லா காரியங்களும் முடிந்து வீடு அடைந்து கால் நனைக்கும் போது சிறிது தூரத்தில் "எரிச்சிட்டீங்களா..அந்த பையனை எரிச்சீட்டீங்களா ??" என்ற பாட்டியின் குரல் ஒன்று கேட்ட போது...


ஏன் இந்த மரணம் இறைவா ??
காலம் உன் கையில் என்ற திமிரில்
கால தேவனை இஷ்டத்துக்கு தூதுவிடுகிறாயா ??
அல்லது...
எங்களை தூசியாக மதிக்கிறாயா ?

இறப்பு...
அது உன்னால் எழுதிவைக்கப்பட்ட
உயிர் சாசனம் என யான் அறிவேன்..
அது வாழ்ந்து முடிந்த பெரியோரை எடுக்காது
வளர துடிக்கும் பயிரையும் அறுக்குமோ யான் அறியேன்..??

வெள்ளை ரத்தம் உன்னதானால் - ஏன்
சிவப்பு அணுக்களை எடுக்க நினைக்கிறாய்..
சிவந்த மண்ணில் ஏன் எங்களை புதைக்க துணிகிறாய்..

ஒத்துக்கொள்கிறேன்...
நாங்கள் எல்லாம் உன்னால்
ஆட்டிவைக்கும் பொம்மையென்று - முடிந்தவரை
அறுப்படாமல் இருக்க நூலுக்கு பலம் கொடு என்றே வேண்டுகிறேன்.
இறுக்க பிடித்துக்கொள் என்றில்லை..

அடுத்தொரு முறையாவது..
சோகங்கள் அற்ற, வேதனைகள் அற்ற,
கண்ணீர் அற்ற உலகை கொடு - இல்லை
சடங்குகள் என்ற பேரில் அழுக்குரல், கண்ணீர் வராத
னிதர்களையாவது படைத்திட முயற்சி செய்.
துயரம் தாங்கவில்லை.. 

குறிப்பு : நான் கவிதை என்ற பெயரில் எதையோ எழுதுகிறேன் என தெரிகிறது.ஆனால், யாரையும், எந்த மதம், சடங்குகளையும் கடவுளையும் மனதார நான் ஏசவில்லை.காரணம், நானும் கடவுளது பக்தன்..மரணத்தையும் அதன் அழுக்குரல்களையும் பார்த்த பின் ஏற்ப்பட்ட ஏதோ விதமான விரக்த்தியில் இவற்றை எழுதினேனே தவிர வேறெதுவும் இல்லை.லேட் ஆகுது குளித்துவிட்டு சாமி கும்பிடனும்.குட் பை

=========================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு

50 comments:

 1. The grave itself is but a covered bridge,
  Leading from light to light, through a brief darkness!

  தங்கள் உறவினர் கோபிக்கு எனது இரங்கல்களுடனான அனுதாபங்கள் உரித்தாகட்டும்!

  ReplyDelete
 2. மேலே இருப்பது, ஆங்கில இலக்கியம் அறிந்தவர்களுக்கு பரிச்சயமான Henry Longfellowஇன் வார்த்தைகள்...

  //{பாகம் ஒன்று}// தொடர்ந்து பல சோகக்தைகளா, உங்களுக்கு?

  * மேலே 'Pages' tab-ஐ மாற்றியமைத்தது நன்றாக இருக்கிறது!

  ReplyDelete
 3. நண்பரே, வரவுக்கு நன்றி..எனக்காக Quotes எல்லாம் தேடி..மிக்க நன்றி.

  ReplyDelete
 4. JZ @@
  நண்பரே பார்த்தேன்..அவருடைய பொன்மொழிகளைதான் படித்துட்டு இருக்கேன்.அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. உங்கள் கதையை வாசிக்கும் போது எனக்கும் காலஞ்சென்ற எனது அண்ணா (பெரியப்பா மகன்)ஒருவரின் மரணம் நினைவுக்கு வருகிறது. உங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  குறிப்பு - கவிதையை உண்மையிலேயே எழுதியது குமரனா? பிரமாதம்.

  ReplyDelete
 6. JZ @@
  சோகமெல்லாம் எதுவும் இல்லீங்க..ஒரு தலைப்பை ஒன்னு போட்டுட்டு எழுதிட்டேன்.அது இனி தொடர்வது தொடராமல் போவது எல்லாம் ஆண்டவன் செயல்.மீண்டும் நன்றி.

  ReplyDelete
 7. ஹாலிவுட்ரசிகன் @@
  ரசிகரே வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி..நான் கவிதையினு ஏதோ பண்ணிட்டேன்..நீங்க நானா ? என்று கேட்க்குறீங்க..சும்மா தோன்றியதை எழுதினேன்.அவ்வளவுதான்.அடுத்த விமர்சனம் என்ன நண்பரே..??

  குறிப்பு : நண்பர் அருண் (முரட்டு சிங்கம்) திரும்பி வந்துட்டாரு..மகிழ்ச்சி.

  ReplyDelete
 8. மௌனகுரு @
  நண்பரே, நன்றி..thanks for ur visit.

  ReplyDelete
 9. குமரன்... மரணம் நிகழ்ந்த வீடுகளுக்குச் செல்வதென்றால் இன்னுமே எனக்கு நடுககம்தான். ஏதோ காரணம் புரியாத சோகம், கனம் இதயத்தை அழுத்தி மிகவும் கஷ்டப்படுவேன். உங்களின் அனுபவம் படிக்கும்போதே இதயத்தை கனக்க வைத்தது. திரு.கோபியின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

  சரளமான எழுத்து நடை உங்களிடம் இருக்கிறது குமரன்! தொடர்ந்து எழுதுங்கள். (கவிதை என்னைவிட நல்லாவே எழுதறீங்க...)

  ReplyDelete
 10. கஷ்டமா தான் இருக்கு குமரன்.

  ReplyDelete
 11. கணேஷ் @
  சார், நீங்க வந்ததே பெரிய விஷயம்..இதில் பாராட்டுக்கு என்ன சொல்வது ? மிக்க நன்றி.
  உங்க உணர்வுகளை நான் உணர்கிறேன்..அதே நிலைதான் எனக்கும்.
  இதுவெல்லாம் கவிதையினு நீங்க சொன்னதே பெரிய வார்த்தைகைள் சார்..எல்லாற்றுக்கும் உங்களைப் போன்றவர்களின் எழுத்து தாக்கம்தான்.

  ReplyDelete
 12. MuratuSingam @
  நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது வருகை புது தெம்பை தருகிறது..என்ன நடந்தாலும் Life Must Go on..lets make it better.வருகைக்கு மிக்க நன்றி.அடுத்த பதிவு எப்ப நண்பரே..? விரைவில் வாங்க.

  ReplyDelete
 13. சுருக்கமா ஒரே வார்த்தையில்...வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 14. குமரா...காலம் உன் ஆற்றுப்படுத்தும்.

  ReplyDelete
 15. உலக சினிமா ரசிகன் @
  தங்களது வருகையில் மகிழ்கிறேன் அண்ணா..மிக்க நன்றி.

  ReplyDelete
 16. அன்னாரின் குடும்பத்தாருக்கும் ,உங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் ..:-((

  ReplyDelete
 17. ravi shankar j @
  நண்பரே, தங்களது வருகைக்கும் இரங்களுக்கும் என் இதயம்ச்சார்ந்த நன்றிகள்..

  ReplyDelete
 18. "ஆண்டவா அதை யாருக்கும் கொடுக்காது இனி தடுப்பாயா

  ReplyDelete
 19. இராஜராஜேஸ்வரி @
  சகோ..தங்களது வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 20. நண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் என் நினைக்கிறேன். எனது உற்ற தோழன் ஆங்கலத்தில் உலக சினிமா குறித்து அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் சென்று வாசிக்கலாம், movieretrospect.blogspot.com எனும் முகவரியில். சக உலக சினிமா ஆர்வலர்களுகும் இதனைப் பகிருங்கள்.

  ReplyDelete
 21. வருணன் @
  நண்பரே, தங்களுடைய நண்பரே முன்னமே எனக்கு தெரியும்.ஆங்கிலத்தில் திறமையாக எழுதும் தமிழ்ப்பதிவாளர்.சில பதிவுகளை படித்து பின்னூட்டமும் இட்டதாக ஞாபகம்.கண்டிப்பாக பிறரிடம் அறிமுகம் செய்கிறேன்.தங்களது வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 22. இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 23. மாலதி @
  நன்றி சகோ, தங்களது வருகையில் மகிழ்கிறேன்..இரங்கல்கள் அவர் ஆன்மாவை சேரட்டும்.

  ReplyDelete
 24. rest in peace..வருந்துகிறேன்....

  ReplyDelete
 25. Anonymous @
  மிக்க நன்றி..அப்படியே உங்க பெயரை சொல்லலாமே..பட் யூகிக்க முடியுது/

  ReplyDelete
 26. மனதை நெருடிச்சுங்க..

  ReplyDelete
 27. ம.தி.சுதா @@
  சகோ, தங்களது வருகைக்கு மிக்க நன்றி..தங்களது ஆதரவு முக்கியம்.

  ReplyDelete
 28. உருக்கமான பதிவு.. ஆனால் உலகில் இவ்வளவு நடந்தும் இறைவனை மன்றாடி பாடல் எழுதும் போக்கு சரியா..

  ReplyDelete
 29. Castro Karthi @
  நண்பரே தங்களது வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் நன்றி,
  ஜனனம், மரணம் என்பது வாழ்க்கையில் இயல்புதான்..அதுவும் நாம் வாழ்வது கலியுகம், இங்கு மனிதன் செய்யும் பாவங்களுக்கு அவனே அதனது பலனை தேடிக்கொள்கிறேன்..இதில் கடவுள் என்பவர் இந்த காலத்தில் வேடிக்கைப்பொருள்தான்.எல்லாம் ஆடி ஓய்ந்தப்பிறகு ஆண்டவனே என்று மனிதர்கள் மன்றாட வேண்டியுள்ளது.
  என் வயதில், இன்னும் மரணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு ஏற்ப்படவில்லை..அதனது விளைவே இப்பதிவும் கவிதை என்ற பெயரில் ஏதோ ஒன்றும்.மற்றப்படி எதுவும் இல்லை.
  தவறாக கூறின் மன்னிக்கவும்.நன்றி நண்பரே.

  ReplyDelete
 30. Is God willing to prevent evil, but not able?
  Then he is not omnipotent.
  Is he able, but not willing?
  Then he is malevolent.
  Is he both able and willing?
  Then whence cometh evil?
  Is he neither able nor willing?
  Then why call him God? - Epicurus.. மீண்டும் ஒரு நல்ல பதிவோடு வரவும்..

  ReplyDelete
 31. Castro Karthi @
  நண்பரே, மீண்டும் தங்களது வருகை என்னை மகிழ்விக்கின்றது.என் மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு.
  Epicurus - சிறந்த கிரேக்க தத்துவஞானிகளில் ஒருவர்..அவரது வார்த்தைகள் என்னுள்ளே சில கேள்விகளை, சிந்தனையை எழுப்புகிறது.அதனை காலம் நகர மெதுவாக அசைப்போட விரும்புகிறேன்.
  தாங்கள் இவ்வளவு சிரத்தை எடுத்து, வந்தமைக்கு நன்றி.கட்டாயம் ஒரு திரைப்பார்வையோடு நாளில் வருகிறேன்.

  ReplyDelete
 32. இறந்தவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் குமரன். மனிதனுக்கு எப்படி ஒரு பிறப்பு மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதே போல மரணம் வலியை தருகிறது. இது வாழ்வின் கட்டாயம். உங்கள் உறவினர் கோபி அவர்கள் ஓவர் டேக் செய்யாமல் நிதானமாக பயணித்திருந்தால், இன்று நீங்களும் நிதானமாக வேறு ஏதாவது ஆங்கில படத்தை பற்றிய விமர்சனம் எழுதியிருப்பீர்கள். எல்லாவற்றையும் நம்மை படைத்தவன் பார்த்து கொல்வான். மனம் ஆறுதல் அடையட்டும்.

  ReplyDelete
 33. N.H.பிரசாத் @
  நண்பரே, தங்களது வருகையில் மனம் மிகுந்த மகிழ்கிறேன்..தாங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.மீண்டும் வரவும்/நன்றி.

  ReplyDelete
 34. ////வெள்ளை ரத்தம் உன்னதானால் - ஏன்
  சிவப்பு அணுக்களை எடுக்க நினைக்கிறாய்..
  சிவந்த மண்ணில் ஏன் எங்களை புதைக்க துணிகிறாய்..
  ////


  அற்புதமான வரிகள் , நெகிழ்வான பதிவு ! தொடர்ந்து எழுதுங்கள் , தொடர்ந்து வருகிறேன், சந்திப்போம்

  ReplyDelete
 35. நண்பா உங்களது ஆங்கில படங்களின் விமர்சனங்கள் பார்த்தேன். எனக்கு கொஞ்ச கௌபோய் படங்கள் சிலவற்றையும் அவற்றை இலவசமாக தரவிறக்கக்கூடிய தளங்களையும் பரிந்துரை செய்ய முடியுமா?

  ReplyDelete
 36. கிஷோகர் IN பக்கங்கள் @@
  நண்பரே, தங்களது முதல் வருகையில் மகிழ்கிறேன்..நீங்கள் படித்ததே பெரிய விஷயம்..இதில் ரசித்தது ? என்னவென்று சொல்ல.மிக்க நன்றி.

  ReplyDelete
 37. கிஷோகர் IN பக்கங்கள் @@
  நண்பரே, இவ்வளவு தூரம் வந்துட்டு அதுவும் ஆங்கிலப்படங்களை பற்றி பேசுகிறீர்கள்..கௌபாய் படங்கள் என்றாலே ஒரு பெரிய கிரேஸ் எனக்கு..எதற்கும் முதலில் இந்த வெப்சைட்டை டிரை பண்ணுங்க..

  1) http://oldmoviesdownload.blogspot.com/search/label/Western

  இங்க இருக்கிற எல்லாம் நல்ல படமானு கேட்டிங்கனா, ஐயா டிராப்பு..நிறைய மொக்கை படங்களையும் கொடுக்கறாங்க.நல்ல படங்களும் இருக்கு.டவுன்லோடு பண்ணிப்பாருங்க நண்பரே,

  ReplyDelete
 38. /////kumaran said நண்பரே, தங்களது முதல் வருகையில் மகிழ்கிறேன்..நீங்கள் படித்ததே பெரிய விஷயம்..இதில் ரசித்தது ? என்னவென்று சொல்ல.மிக்க நன்றி.////////

  அட நல்ல இருந்தா ரசிக்கிரதில என்ன தப்புங்கிறேன். ஏதோ எனக்கும் கொஞ்சம் மொக்கையாய் கவிதை வரும் என்பதால் வாயை பொளந்துகொண்டு வாசித்தேன், சும்ம பின்னி பெடல் எடுத்திருக்கிறீர்கள். சும்ம சொல்லக்கூடது சூப்பர்!

  ReplyDelete
 39. /////நண்பரே, இவ்வளவு தூரம் வந்துட்டு அதுவும் ஆங்கிலப்படங்களை பற்றி பேசுகிறீர்கள்..///////

  ஏன் நண்பா இந்த இடத்தில் நான் ஆங்கில படங்கல் பத்தி பேசியிருக்கக்கூடாதோ? தப்பென்றால் மன்னிக்கவும்.

  உங்கள் பரிந்துரைக்கு நன்றி

  ReplyDelete
 40. கிஷோகர் IN பக்கங்கள் @@
  நண்பரே, நான் ஏதோ ஒரு அர்தத்தில எழுதிட்டேன்..நீங்க தப்பா நெனைக்காதிங்க..நம்ம இனி எந்த பதிவுலயும் சினிமா பற்றி பேசலாம்..தப்பே இல்ல.கொடுத்த தளத்தை பயன்ப்படுத்திப்பாருங்க..மேலும், சில பரிமாற்றங்களுக்கு மை மெயில் : thava11kumaran@gmail.com.

  ReplyDelete
 41. கிஷோகர் IN பக்கங்கள் @@
  வரவும்..வளரட்டும் நட்பு..நன்றி.

  ReplyDelete
 42. தலைவா யூ ஆர் கிரேட்!
  இந்த சைட்டுக்கு வந்தே ரொம்ப நாளாவுற மாதிரி ஒரு ஃபீலிங்.. where is the பதிவு??

  டெம்ப்ளேட் வேற மாத்திட்டீங்க.. சூப்பர்! டக்குனு லோடாவுது.. (முன்புல்லாம் பதிவு லோடாகிரும், கமெண்ட் செகஷன் லோடாக ஏனோ லோட்டாகும்!.. லோடாகாமலே போனதும் உண்டு. அப்போ refresh பண்ணிகிட்டே இருக்கனும்!)
  நானு கூட ரொம்ப நாளுக்கு Awesome Inc டெம்ப்ளேட்டைத்தான் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. simple and calm!!

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, பழைய பதிவுக்கும் கமெண்டா ? சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க..
   பதிவு வந்துகுட்டே இருக்குது..நாளைக்கு கட்டாயம் உங்க எல்லாருக்கும் என்னோட கைவண்ணத்தில் ஒரு மொக்கை விமர்சனம் காத்திருக்கு..வந்து செல்லங்களா..வாழ்த்திட்டு போங்க.

   டெம்ப்ளேட்..அது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல நண்பா..எனக்கே ரொம்ப நாளா அந்த டெம்ப்ளேட் பிடிக்கல..பட், எதுக்கு இது உள்ள நுழைந்து நம்ம மட்டமான டேஸ்ட்டை வெளிப்படுத்துவானேனு உட்டுட்டேன்.சீக்கிரம் லோடு ஆகுவதை நானும் கவனித்தேன். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

   Delete
 43. வலைச்சரத்தில் உங்க பெயர் பார்த்த பிறகு தான் வர்றேன். அழகான டெம்ப்ளேட். இப்போ கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா நல்லா இருக்கு. ஆனா எனக்கு உங்க டெம்ப்ளேட்டால ஒரு யுஸும் இல்ல. சட்டு புட்டுன்னு ரெண்டு விமர்சனத்த எழுதிப் போடுங்க. நமக்கு அதான் முக்கியம் ... அதான் வேணும். என்ன ... சரியா?

  சும்மா சொன்னேன். டெம்ப்ளேட் இப்போ நல்லா லோட் ஆகுது. அப்படியே அந்த fonts கமெண்ட்ல இருக்கிற மாதிரி இருந்தா நல்லாயிருக்கும்ங்கறது என் கருத்து. கொஞ்சம் கவனிச்சு பாருங்க.

  ReplyDelete
  Replies
  1. கரைக்டா சொன்னீர்கள் அமைச்சரே..நீங்க சொன்னால் சரிதான்..சட்டு புட்டுனு கார சாரமா நட்டு வைக்கிற மாதிரி ஒரு மொக்க விமர்சனம் நாளைக்கு வருது..டோண்ட் வரி.

   அந்த fonts கமெண்ட்ல இருக்கிற மாதிரி இருந்தா நல்லாயிருக்கும்ங்கறது என் கருத்து. கொஞ்சம் கவனிச்சு பாருங்க.@@
   கட்டாயம் நண்பரே, உங்களை போன்றவர்களின் கருத்தே என்னை போன்றவர்கள்.விரைவில் சரி செய்கிறேன்.

   தங்களது வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் தொடரும் ஆதரவுகளுக்கும் என் நன்றிகள்/

   Delete
 44. IMDB watched list 53லயிருந்து 58ஆ உயர்ந்திருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்.. எங்க அந்த அஞ்சு விமர்சனம்??... உங்க ப்ரொஃபைலை பார்க்கப் போய்த்தான் முழு லிஸ்டையும் இப்போ வாசிச்சேன். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! அதை சும்மா இங்கே கொட்டிட்டு போறேன்! ஹி..ஹி..

  * 2011 ரிலீசானவற்றில் 'ஆர்டிஸ்டை'யும் கடந்து The Intouchablesனு ஒரு படம் 117வதா இருக்கு.. கேள்விப்பட்டதேயில்லை! உங்களுக்கு தெரியுமா?

  * The Prestige இன்னும் நீங்க பார்க்கலையா.. இதை பாரு.. இதை பார்க்காதேன்னு கம்ப்பெல் பண்ணலை நண்பா.. ஆனா நீங்க பிரஸ்டீஜை பத்தின ஏதாவது ஒரு விமர்சனம் வாசிச்சீங்களான்னு தெரியலை!
  நான் வாசிச்சேன்.. ஆர்வம் தாங்காம ஒரு வருஷமா தேடு தேடுன்னு தேடி பார்த்தேன்! படத்தை விவரிக்க எனக்கு வார்த்தைகளேயில்லை.. அந்த fever உங்களுக்கும் பத்திக்கட்டும்!

  * 185வது இடத்துல.. என்னது? The Avengers?? அடப் பாவிங்களா.. படம் ரிலீசாகி முழுசா ஒரு நாள் கூட ஆவலை!!!

  ReplyDelete
  Replies
  1. பார்த்துட்டீங்களா...நீங்க பார்த்துட்டீங்களா...

   2011 ரிலீசானவற்றில் 'ஆர்டிஸ்டை'யும் கடந்து The Intouchablesனு ஒரு படம் 117வதா இருக்கு.. கேள்விப்பட்டதேயில்லை! உங்களுக்கு தெரியுமா? @@
   நண்பரே, எனக்கும் அப்படிதான் இருந்தது..ஒரு இரண்டு மூனு நாட்கள் இருக்கும், ஐஎம்டிபி பக்கம் போனபோது இந்த படத்த பார்த்தேன்.French படமாம்.இவ்வளவு நல்ல படமா இருந்தா ஏன் ஆஸ்கர் புஸ்கர்னு ஒன்னுத்துக்கும் தேர்வாகல என நினைத்தேன்.விரைவில் பார்த்துவிடுவேன்/

   The Prestige இன்னும் நீங்க பார்க்கலையா..@@
   இந்த படத்த ரொம்ப நாளாவே நம்ம முரட்டு சிங்கம் அருண் அவர்கள் சொல்லிக்கிட்டே இருக்காரு..கண்டிப்பாக பார்க்கிறேன்..எனக்கு உங்க அளவுக்கு சினிமாவை பற்றி பெரிசா தெரியாது நண்பா.

   185வது இடத்துல.. என்னது? The Avengers?? அடப் பாவிங்களா.. படம் ரிலீசாகி முழுசா ஒரு நாள் கூட ஆவலை!!!@@
   என்ன பண்றது..எல்லாம் சிவமயம்..இப்பக்கூட செக் பண்ணிட்டு வறேன்..நட்டுன்னு உச்சில 9.0 வாங்கிட்டு இருக்கு..இல்ல தெரியாமதான் கேட்கிறேன் இது என்ன அவ்வளவு பெரிய அப்பாட்டேக்கர் படமா..பார்த்துடுவோம்.இத்தனைக்கும் அமெரிக்கால கூட அடுத்த மாசம் 4 தேதிதான் ரிலிசாம்.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge