ஏறக்குறை ஒரு மாதத்திற்கு மேல் கடந்தாச்சு..ஒரு மாதம் == ஒரு பதிவென்றாவது எழுதிட்டு இருந்தேன்..பதிவுகள் Draft-டில் இருந்தாலும் ஏதோ சரிவர ரிலீஸ் கூட பண்ண முடியாது போய்விட்டது.சற்று ஒரு கம்ப்யூட்டர் கொளாரு வேறு.அதான் இப்ப புதுசா ஒரு பதிவு டைப் பண்ணி போடுறேன்..பிடித்தாலும் படிங்க..படிக்காட்டாலும் ஆதரிங்க..
==================================================================================
Infernal Affairs (2002) - Hong Kong
நீண்ட நாட்களாகவே ஹார்ட் டிஸ்க்கில் கிடந்து பார்த்த ஓர் அதிரடியான ஆக்சன் திரிலர்.நான்கு ஆஸ்கர்களை வென்ற, பலரும் அறிந்த தெ டிபார்ட்டெட் படம் உருவாவதற்கு மையப்புள்ளியாக அமைந்த ஒரிஜினல் படைப்பு இது.திரை உலகம் புகழும் ஸ்கார்சஸியே ஒரு ஹாங்க்காங் படத்தை ரீமேக் செய்ய வேண்டிய அவசியம் என்ன ? அவ்வளவு பெரிய அப்பாட்டேக்கரா இப்படம் ? இது போன்ற கேள்விகளோடுதான் பார்த்தேன்..
முன்னமே கதையை அறிந்த காரணமோ என்னமோ, தொடங்கிய 10 நிமிடங்களுக்கு மனம் ஒன்றவில்லை..அதற்கு பிறகு, சொல்லவா வேண்டும் ? திரைக்காட்சிகள் ஒவ்வொன்றும் சூடுப்பிடிக்கவே அது கடைசிவரை நிலைத்ததுதான் இயக்குனர்களான Wai-keung, Lau, Alan Mak அவர்களின் வெற்றி.
கதை என்றளவில் பெரிதாக ஒன்றுமில்லை..ஆங்கில வெர்ஷனை பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்..சுருக்கமான கூறின்...
ஊரிலே மிக பெரிய கடத்தல்க்கார வில்லன்..அதுல ரகசியமா வேலை செய்யும் ஒரு போலிஸ் (அதான் நம்ம ஹீரோ)..அதற்கு நேரெதிராக அந்த கும்பலை பிடிக்க பாடுப்படும் போலிஸ் குரூப்பில் ஒரு கருப்பு ஆடு..அதாங்க மெயின் வில்லன்..அவ்வளவுதான்..இங்கிருந்து அங்க..அங்கிருந்து இங்க என ஒருவருக்கொருவர் கடமையின் பேரில் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள்..இறுதியில் என்ன நடந்தது..யாரை யாரெல்லாம் "போட்டாங்க" அதுதான் கதை..
ஹீரோ + வில்லன் என்பதெல்லாம் வெறும் கதையளவிலான அடையாளம்தான்..பட ரீதியில் திரைக்கதை செம்ம விறு விறுப்பாக நகர்த்தப்பட்டுள்ளது.. ஒரு காட்சியை கூட வீணடிக்காத வகையில் ஒவ்வொன்றையும் கதைக்காகவும் சுவாரஸ்யத்தை மேம்படுத்துவதற்காகவே பயன்படுத்தியுள்ளது சிறப்பம்சம்.ஒரே வரியில் சுலபமான கதை...தெளிவான திரைக்கதை..சுமார் ஒரு மணி 40 நிமிடங்கள் எந்த ரசிகனுக்கும் போரடிக்காமல் கொண்டு செல்வது என்பது நினைக்கும் வகையில் அவ்வளவு ஈஸியல்ல.பல நாட்டில் நன்மதிப்பும் வசூலும் பெற அதுக்கூட காரணமாக இருந்திருக்கலாம்.தற்சமயம் ரோட்டென் தொமொதோஸில் 95 சதவீதம் மற்றும் ஐஎம்டிபியில் 8.1 ஆகிய மதிப்பென்களை பெற்றுள்ளது.பற்றாக்குறைக்கு எம்பயர் மெகசீன், உலகின் சிறந்த 100 படங்களில் இப்படத்துக்கு 30ம் இடத்தை அறிவித்துள்ளது.
மொத்தத்தில் ஒரு நல்ல படம்..தெ டிபார்ட்டெட் படத்தோட ஒப்பிடும் போது கொஞ்சம் கம்மிதான் இருந்தாலும் பார்க்க வேண்டிய சினிமா என்பதில் சந்தேகமில்லை..நடிப்பு, கேமரா என்று பல படங்களுக்கு முன்னோடியா இருந்தாலும் இருக்கும்.படம் பிடித்தால் அதை தொடர்ந்து வந்த 2 பாகங்களை பார்த்துவிடுங்கள்...மோட்சம் கிடைக்கும்.
என்னதான் இருந்தாலும் ஸ்கார்சஸி ஸ்கார்சஸிதான்..ஒரு பெஸ்ட் அதாவது ஒரிஜினலை விட தரமான சூப்பரான படத்தை எவ்வண்ணம் ரீமெக் பண்ணனும் என்பதை அதிலும் எப்படி, என்னென்ன வித்தைகள் செய்யலாம் என்பதை படம் போட்டு காட்டிட்டார்.இதெல்லாம் பார்த்துமா இன்னும் மொக்கையா ரீமெக் எடுத்துகிட்டு இருக்காய்ங்க.பாவம்...
The Departed தான் முதலில் பார்த்தேன், பின்பு தான்
ReplyDeleteinfernal affairs இரண்டு பார்ட் பார்த்தேன். better than the original nu சொல்லுவாங்க இல்ல?
அதுபோல தான் நண்பரே..
விமர்சனம் அருமை.
வருகைக்கு நன்றி நண்பா..
Deleteஇதையும் விமர்சனம் என்று சொன்னதற்கு நன்றிகள் பல அடங்கிய நன்றிங்க.
நீங்களும் ரொம்ப நல்லா எழுதுரீங்க..
ரீமேக்கை விட ஒரிஜினல் சிறந்த ரகமானது..நீங்க சொன்னது போல.
நல்ல படம், விமரசனமும் அருமை.
ReplyDeleteஎனக்கும் இந்த படத்தை கம்பேர் பண்ணும் பொது The Departed தான் ரொம்ப பிடித்தது.
///////ஹீரோ + வில்லன் என்பதெல்லாம் வெறும் கதையளவிலான அடையாளம்தான்..பட ரீதியில் திரைக்கதை செம்ம விறு விறுப்பாக நகர்த்தப்பட்டுள்ளது..///////
உண்மைதான். படத்தோட ஹீரோ திரைக்கதைன்னு சொல்லலாம்.
வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி நண்பரே..
Deleteநீங்க சொன்னது உண்மைதான்..
தொடர்ந்து வரவும்.நன்றி.
குமரன்,
ReplyDeleteமுதல நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவு எழுத வந்ததற்கு என் வாழ்த்துக்கள்.....
நான் Departed மட்டும் தான் பார்த்து இருக்கேன்...Infernal Affairs இன்னும் பார்க்கல பாஸ்....Infernal Affairs படத்தை பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கேங்க....ரெண்டு பார்ட் என்கிட்ட இருக்கு.....பார்க்கணும்....
Departed செம படம்....பர பரன்னு போகும்...எனக்கு ரொம்பவே பிடித்த படம்.....
//இதெல்லாம் பார்த்துமா இன்னும் மொக்கையா ரீமெக் எடுத்துகிட்டு இருக்காய்ங்க.////
சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும்...... :)
அப்புறம் உலவு ஒட்டு பட்டைய தூக்குங்க...ப்ளாக் லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது...
பதிவு தவறாது வந்து ஆதரவு வழங்கும் நண்பருக்கு நன்றி..
Deleteபடம் கண்டிப்பா பாருங்க..பார்க்க வேண்டிய திரில்லர்.
உலவு இதோ இப்போ எடுத்துருறேன்..சொன்னதுக்கு நன்றி..
அப்படியே பிளாக்கில் ஏதாவது குறையிருந்தால் அப்பப்ப சொல்லுங்க.உதவியா இருக்கும்.
//உலவு ஒட்டு பட்டைய தூக்குங்க...ப்ளாக் லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது...//
ReplyDeleteஅதே ப்ராப்ளமாத்தான் இருக்கனும்.. கமெண்டு பாக்ஸ் வர்றதுக்கு ஏழு நிமிசம் காத்திருக்க வேண்டிருக்கு..
எப்படியோ ரீ-என்ட்ரி கொடுத்ததுக்கு பெரிய நன்றி!! சின்னதா எழுதினாலும் சூப்பரா எழுதிட்டீங்க..
//தெ டிபார்ட்டெட் படத்தோட ஒப்பிடும் போது கொஞ்சம் கம்மிதான்// வாழ்க அண்ணன் டிகாப்ரியோ!
வருகை அளித்தமைக்கு நன்றிங்க..(இவ்வளவு நாளா என்னையும் ஞாபகம் வச்சிருக்கும் உங்க எல்லோருக்கு எவ்வண்ணம் நான் நன்றிகள் சொல்வேன்) லோட் ஆக நேரம் ஆவதை பீல் பண்ண முடிது நண்பா..எடுத்துருறேன்..தைங்க்ஸ்.படம் பாருங்க.
Deleteஅடேயப்பா எவ்வளவு நாளாச்சு.அவ்வளோ பிஸி .ம்ம் .departed பார்த்திருக்கேன்.செம படம்.போன வருஷம் தான் அது internal affairs படத்தோட ரீமேக் என்று தெரியும்.இன்னும் அதை பார்க்க வில்லை.ம்ம் சென்ற முறை போல் ஒரு மாதம் ஓடிவிடாமல் இனி தொடர்ந்து பதிவு போடு தம்பி. இது கட்டளை.
ReplyDeleteபுதுசா என்னை தம்பின்னு உரிமை வழங்கி கருத்து தெரிவிக்கும் அண்ணனுக்கு நன்றி..நீங்களும் படம் கண்டிப்பா பாருங்க..உங்களுக்கு நிச்சயம் பிடிக்க வேண்டிய அம்சங்களும் படத்தில் உண்டு.இனி இடைவெளி இல்லாது பதிவுகள் தர முயற்சிக்கிறேன்..உங்க எல்லோருடைய ஆதரவோடு.
Deleteநீண்ட நாட்கள் கழித்து சுருக்கமாக, நச் என்று ஒரு பதிவு. The Departed பார்திருக்கிறேன். இதையும் கூடிய விரைவில் பார்த்து வைக்கிறேன் :-)
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பா..இந்த படமும் பாருங்க..
Deleteஇதன் மூன்று பார்ட்டும் செம ஆக்சன்னு கேள்விப்பட்டு டவுன்லோட் செய்து வச்சேன். ஆனா ஏற்கனவே மனசுல டிபார்டட் படம் நல்லா பதிஞ்சு இருக்கிறதால, அது மறந்த பின் பார்க்கலாம்னு வச்சிட்டேன்.
ReplyDeleteவிமர்சனம் எல்லாம் குட். ஆனா இன்னும் அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்குள்ள இன்னொரு விமர்சனம் வந்தாகணும்.
கண்டிப்பா இன்னும் ரெண்டு நாளுல போட்டுருறேன்..
Deleteஇவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டது எனக்கே ஒரு மாதிரிதான் இருந்தது..
நீங்க தொடர்ச்சியா அந்த மூணு பார்ட்ஸும் பாருங்க நண்பா..உங்க அனுபவத்தை சுருக்கமா எழுதுங்க..நல்லாருக்கும்.
உங்களோட விமர்சனமே படத்தை பாக்கனமுன்னு தோணுது
ReplyDeleteஇவ்வளவு தூரம் வந்து கமெண்ட்டு வழங்கியமைக்கு மிக்க நன்றிங்க..படம் பாருங்க..கண்டிப்பா என்னோட பதிவ விட சிறப்பா இருக்கும்.
Deleteரொம்ப நாளைக்கப்புறமா நம்ம 19 ரிட்டேண்ஸ் ஆகிட்டேளா? விமர்சனம் Short and Sweet. படம் இன்னும் பார்க்கல பார்த்துட்டு சொல்லுறனே.
ReplyDeleteஇன்னும் அந்த 19ஐ விடலயா நீங்க..சரி பரவால..படம் பார்த்துட்டு சொல்லுங்க..நன்றி.
Deleteகட்டாயம் இணைக்கிறேன்..ரொம்ப நன்றி.
ReplyDeleteநான் விட்டாலும் இந்த பயலுக அந்த 19 மேட்டர விட மாட்டாய்ங்க போல!
ReplyDeleteவிட்டப்பாடில்லை போங்க..வாங்க கிஷோர்..
Deleteநானும் படம் பாத்திட்டு வர்ரேன்!
ReplyDeleteகண்டிப்பா பார்த்துட்டு வாங்க..வருகைக்கு நன்றி..
DeleteAFTER LONG TIME.. CONTINUE NANBAA..
ReplyDeleteகண்டிப்பா நண்பா..வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
Deleteதம்பி...குமரா,
ReplyDeleteஉன் பதிவை படித்த பின்தான் ‘டிபார்ட்டட்’ ரீமேக் என தெரிந்து கொண்டேன்.
நன்றி.
‘இண்டர்னல் அபயர்ஸ்’ படத்தை உல்டா செய்து தெலுங்குகாரன் படமெடுக்க...அதை வாங்கி, பிரபுதேவா ‘போக்கிரி’ என தமிழிலும்,இந்தியிலும் படமெடுத்து சூப்பர் ஹிட்டாக்கி விட்டார்.
வாங்க அண்ணா..தங்கள் வருகைதான் எனக்கு பெரிய விருந்து..
ReplyDeleteஉண்மைதான்...நீங்கள் சொன்னதை முன்னமே கேள்விப்பட்டிருக்கிறேன்..இப்ப கிலியர் ஆச்சு..போக்கிரி படத்தை இந்த பதிவில் குறிப்பிட முடியாமல் போய்விட்டது.மிக்க நன்றி.
என்ன குமரா இப்படி 3 போஸ்டை டக்கு டக்குன்னு போட்டுட்டு அப்படியே அழிச்சுட்டீங்க.. இன்னும் கூகுள் ரீடர்ல கிடக்கு.. மூணும் வேற வேற டைப் படம் போல.. ஆர்வமாத்தான் இருக்கு! அதையும் கன்ட்ரோல் பண்ணிட்டு இங்கேயே வந்துட்டேன்..
ReplyDeleteநான் இப்ப என்ன பண்ண.. நீங்க அதுல ஏதாவது சேஞ்ச் பண்ணிட்டு officialஆ வெளியிடப்போறீங்களா??
இல்லாட்டி போயியிட்டு கூகுள் ரீடர்லேயே படிச்சுரவா?ஹி..ஹி..
(இதுக்கு பேருதான் பிளாக் மெயில். உடனே பதிவுகளை திருப்பி போடுங்க தல)
இல்ல நண்பா..ரொம்ப நாளுக்கு முன்னாடியே சும்மா டைப் பண்ணி Draft-la வச்ச படங்கள் அது..கைத்தவறி தேவயில்லாம பப்லிஷ் பண்ணிட்டேன்..சரியாக கூட இன்னும் எழுதுல..அதுனாலதான் அழிச்சிட்டேன்..
Deleteஎப்படி இருந்தாலும் அடுத்தடுத்து வரும் நண்பா..அந்த பதிவுல கொஞ்சம் வேலைகள் இருக்கு..மன்னிச்சுக்கோங்க.சீக்கிரம் ரிலீஸ் பண்றேன்.
நல்ல விமர்சனம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வருகைக்கும் தொடர் ஆதவுக்கும் ரொம்ப நன்றிங்க ஐயா..
Deleteசுவாரஸ்யமான விமரிசனம்
ReplyDeleteநன்றிங்க..நண்பா..
Delete