"ஆங்கில ஹாரர் படமெல்லாம் பார்த்து கிழிச்சிட்ட மாதிரி இத்தாலிக்கு தாவுறியேடா"-னு ஓரளவு உளரிகிட்டேதான் படத்தை பார்க்க தொடங்கினேன். நெடு நாட்களுக்கு முன்பே லூசியோ ஃபுல்ச்சி டைரக்டரை கேள்விப்பட்டு "சரி ஒரு படம் போடுவோம்" என்ற நினைப்பில்தான் டவுன்லோடே போட்டேன்..பலரும் அறிந்திராத படம் வேறு.நல்ல படமுன்னு ஒரு ரெண்டு விமர்சனம் படித்த தைரியத்தில் மதியம் பார்க்க ஆரம்பித்தேன்."ஏண்டா பார்த்தோம்கிற" எண்ணத்தை தவிர மற்ற எல்லாமே வந்தது..1972-ல் எடுக்கப்பட்ட சீரியல் கில்லிங் படமிது.
இத்தாலியில் அதிகமான மக்கள் தொகை இல்லாத ஊரது..எங்கும் சிறுவர்கள் ஊர்வலம்தான்...யாரோ ஒரு பெண் (வழக்கமான கூந்தலை விரித்துவுட்டு) ஏதோ ஒன்றை தோண்டுவதோடு டைட்டல் கார்டு ஓடுகிறது..கடைசியில் அவள் எடுப்பது மண்டை ஓடு..சரி ஏதோ ஆவி சமச்சாரமோ என திரைக்குள் நான் தலையை நீட்ட...சரி விடுங்க.
அங்கு தொடர்ந்து சிறுவர்கள் மர்ம்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர்.ஒன்று, ரெண்டு என்று லிஸ்ட்டு நீண்டுக்கொண்டு போகவே போலிஸும் விசாரனையில் தீவிரமாக இறங்குகிறது.பலரை விசாரித்து சந்தேகத்தின் பேரில் ஒரு முடிவே கட்டி சிலர் மீது பழி சுமத்தி "அவர்கள்தான் கொலைக்காரர்கள்" என்று போட்டும் தள்ளுகிறார்கள்..இருந்தும் தீருமோ ரத்த வாடை..கொலைகள் மட்டும் தொடர்கிறது..யார் அந்த கொலையாளி ? ஏன் கொள்கிறான் ? போன்ற கேள்விகளுக்கு படம் பார்க்க வேண்டுமென்று நான் ரெகுலரா சொல்லுவேந்தான்..இந்த பிறவில நீங்க இப்படத்தை பார்த்தீங்கனா பெரிய புண்ணியம் பண்ணதா ஆனாலும் ஆகும்..காரணம் முன்பே சொன்னதுதான்..பலரும் காணாத அதிசய படமிது.
இந்த படத்தை எதிர்க்காலத்தில் எனக்கு பிடித்தாலும் பிடிக்கலாம்..ஏனா இன்னிக்கு பிடிக்காதது நாளைக்கு பிடிக்கலாம்..இல்லையா ? "இந்த படத்தையெல்லாம் பார்த்து எழுதி தள்ளி எங்களோட கழுத்த ஏண்டா அறுக்குறனு" அப்படினு நீங்க கேட்டாலும் கேட்கலாம்..நான் முன்னாடியே சொல்லிருந்தாலும் சொல்லிருப்பேன்..இல்லனா மேல பிளாக் டைட்டில் பாருங்க.."நான் பார்த்த படங்களின் அறிமுகமே இது எல்லாம்"..
ஓக்கே அப்புறம் அடுத்த பதிவில் மீட் பண்ணலாம்..சீ யூ.
குமரா ... இரண்டு நாட்களில் விமர்சனம் எழுதுன்னு சொன்னதுக்காக இப்படியெல்லாம் பண்ணப்படாது. :)
ReplyDeleteவாங்க நண்பா..
Deleteபிளாகிங் உலகத்துக்கு நான் வுட்ட இடைவெளிகளை கணக்கிலிட்டா ரெண்டு நாளைக்கு பதிவு கட்டாயம் அவசியமே..இருந்தாலும் நம்மளால முடியுமா என்ன ? இந்த பதிவுக்கூட அன்னிக்கு Infernal Affairs எழுதும்போது எழுதி வச்சது..இனிமேல வாரம் ஒன்னுதான்.
ஹி ஹி ... ட்ராஃட்டில் வைத்திருக்கும் ஹிட்ச்காக் பதிவுகளை சீக்கிரமே ரிலீஸ் செய்யவும். ஆனாலும் நான் படிச்சுட்டேனே.
ReplyDeleteடிராஃப்ல இருக்குறது உண்மைதான்..பட் நிறைய வேலைகள் இருக்குங்க..கொஞ்சம் எடிட்டிங் எல்லாம் பார்க்கனும்..முதல தப்பா ரிலீஸ் பண்ணிட்டேன்.அடுத்தடுத்து எல்லாம் வரும்.பிலீஸ் வெயிட்.
Deleteஎப்பவோ இந்த படம் பற்றி சில வெப்சைட்களில் பார்த்தேன்.சரி நல்லாயிருக்கும் போல என்று பெயர் நோட் பண்ணி வச்சிருக்கேன்.நல்ல வேலை தப்பிச்சேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க சார்..
Deleteஇந்த படம் இதுவரைக்கும் நான் பார்த்த worst ஹாரர் பீஸ்களில் ஒன்றுன்னு சொல்லலாம்..என்னோட டேஸ்ட் அப்படி..உங்களுக்கு ஒரு வேளை பிடிக்கலாம்..வாய்ப்பு கிடைச்சா பாருங்க..
நீங்க என்ன படம் பார்த்தீங்க விஜய் சார்..அடுத்த பதிவுல விமர்சனம் உண்டா ?
சூப்பர் விமர்சனம் மாம்ஸ்.. தேடி பிடிச்சு இத்தாலி படம் விமர்சனம் போட்டு இருக்கீங்க.. சான்ஸ் கிடைச்சா பார்கிறேன்
ReplyDeleteவாங்க பாஸ்..வருகைக்கு நன்றி..படம் பார்க்கிற உங்க இஷ்டம் நண்பா..
Deleteகுமரன்,
ReplyDeleteஇந்த மாதிரி த்ரில்லர் படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்...ஆனா நீங்களே தூங்கிட்டேங்கன்னு சொல்றேங்க....கட்ட வச்சுகவா...???இல்ல அவுக்கவா...??? படத்தை பார்க்கலாம..??? வேண்டாமா....சொல்லுங்க... :)
Hi hi thalaivar style.a nanpan ketkiraan sollunga..
Deleteராஜ்.. உண்மையை சொல்லனும்னா படத்தோட கதையை கொஞ்சம் படிச்சுட்டுதான் பார்த்தேன்..கதை என்ற அளவில் படிக்கும் போது பிடித்தது பார்க்கும் போது கிடைக்கவில்லை..நிறையவே ஏமாந்துட்டேன்..அதனை பதிவ செய்யதான் இந்த பதிவு..ஓபெனா சொல்லனுனா படம்பிடிக்கல நண்பா.
Deleteஅப்படியே இந்த தூங்குன விஷயம் உண்மைதான்.
வருகைக்கு நன்றிங்க பாஸ்,,
ஹாரி..கேள்விக்கு பதில் சொல்லியாச்சு..சந்தோஷமா ?
Deleteபிற மொழி படம் பார்க்கவே ஒரு பொருமை வேணும்... அதுவும் நீங்க கஷ்டப்பட்டு பார்த்துட்டு ஒரு விமர்சனம் போட்டு எங்களை காபாத்திடீங்க.... :)
ReplyDeleteஉண்மையாவே இந்த படத்தை பார்க்க பொறுமை வேண்டும்..கரெக்டா சொன்னீங்க..வருகைக்கு நன்றிங்க நண்பா.
Delete///இத்தாலி சினிமாவில் "Giallo" அப்படின்னு ஒரு வகை உண்டு.///
ReplyDeleteதம்பி...இப்படியெல்லாம் உனக்கு தெரிந்த வார்த்தைகளை எழுதக்கூடாது.
‘கல்ட் பிலிம்’அப்படின்னு ஜாக்கிசேகர் எழுதுனதுக்கு ஒரு கூட்டமே மொத்திகிட்டியிருக்கு.
நீ வேற கமலை பிடிக்கும்னு சொல்லியிருக்க...
காரிகன் சார்ட்ட நீ என்ன பாடு படப்போறியோ?
நீங்க என்ன சொல்றீங்க புரில அண்ணே..எனக்கு கொஞ்சம் புத்தி தடுமாற்றம்..
ReplyDeleteஎனக்கு சினிமா டெக்னிக்கல், வரலாறு எல்லாம் தெரியாதுன்னே..படம் பார்த்தா..அத பற்றி இணையத்துல தேடுவேன்..கிடைச்சத படிச்சு எனக்கு புரிஞ்சத எழுதிட்டு வரேன்..அம்புட்டுதான்..
இந்த படம் பார்த்து விக்கி போனபோது அறிமுகமானதுதான் Giallo..இதுக்கு முன்னாடி இந்த genre-ல எந்த படமும் பார்த்தது இல்ல..
யாரண்ணே அந்த காரிகன்..அவரு பிளாக்குக்கு நான் போனதா தெரிலியே..
வருகைக்கு நன்றி..
அண்ணே சாரி..இப்ப தெரிஞ்சிருச்சி..என்ன விஷயமுனு..
Deleteநானும் காரிகன் பிளாக்குக்கு போயிட்டேன்..
அவருக்கும் உங்களுக்கு ஹேராம் பதிவில் நடந்த பின்னூட்டங்களையும் படித்துக்கொண்டுதான் இதை எழுதுறேன்..
பயமா இருக்குண்ணே..இந்த காலத்துல எதை எழுதுனாலும் சண்டைப்போட வந்துருறாங்க..
என்ன பாஸ் இத்தாலி வரைக்கும் போய்ட்டீங்க. நமக்கு இங்கிலிசே ஓரளவுதான். இந்த லட்சணத்தில இத்தாலி முடியாதுப்பா. விமர்சனம் படிச்சதோட படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியாச்சு.
ReplyDeleteவாங்க பாஸ்..இத்தாலி-லா எதுவும் இல்லங்க..நம்மளால இப்பைக்கு அங்கதான் போக முடியாது.சினிமாலாச்சும் பார்ப்போனுதான்.
Deleteநான் மட்டும் இங்கிலீஷ் மேதையா என்ன..பல மாதங்களா சப்டைட்டில் வச்சிதான் மெயிட்டண்டு பண்றேன்..நல்ல வேளை நீங்க படம் பார்க்கல..வருகைக்கு நன்றி.
இந்த படத்தை பார்த்த விளைவுகளை உங்களின் விமர்சனத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது :)
ReplyDeleteவாங்க பாலா சார்..வருகைக்கு நன்றி.
Deleteவிளைவை புரிந்துக்கொண்டமைக்கு திருப்தி..அடிக்கடி வாங்க சார்..
//"ஏண்டா பார்த்தோம்கிற" எண்ணத்தை தவிர மற்ற எல்லாமே வந்தது..//
ReplyDeleteஇது ஏதோ புகழ்ந்து தள்ளுற மாதரி இருக்கு.கீழே போகப் போக "பார்த்துர வேணாம்" வார்னிங் பண்ணுறமாதிரி இருக்கு. ஒரே கன்பியூசன்ஸ்..
இனி இத்தாலி மொழியில படம் பார்த்தாஇன்னும் கன்பியூசா இருக்கும். வேணாம்! நான் தப்பிச்சுக்கிறேன்..
ஒழுங்கா அந்த மூணு விமர்சனத்தையம் எடிட் பண்ணிப் போடுப்பா.. இல்லாட்டி நான் இப்பவே போயி கூகுள் ரீடர்ல வாசிச்சுட்டு கமென்டை இங்க வந்து கொட்டிரவா??
அட விடுங்க பாஸ்..விடுங்க..கூல்..கூல்
ReplyDeleteஏன் இப்படி ஒரு அவசரம்..மெதுவா ஒன்னன்னா வெளிய அவுத்து விடுறேன் (அட பதிவதான்-ப்பா).கொஞ்சம் டைம் கொடுக்குறது,,
அப்புறம் உங்கள அடிக்கடி காணுமே..அடுத்த விமர்சனம் எப்போ ? டேத் கிழமை சொல்லுங்க நண்பா ?
படம் பார்க்கா வேணு சொல்றதுக்கு எனக்கு என்னங்க உரிமை இருக்கு..நானே எனக்கு தோணுற மேட்டர்கள இங்க கொட்டிட்டு இருக்கேன்..சுற்றி வலைச்சு பார்க்காதனுதா சொல்ல வரேன் பாஸ்.
இண்ணிக்கு நைட்டு.. இப்போ இங்க சரியா பி.ப 2.15.. "பிரேவ்" படத்துக்கு 4.30 ஷோ போயிட்டு வந்து அண்ணனும் அவுத்து விடுறேன்!!
Deleteவுடுங்க..வுடுங்க..நண்பா..போய் பார்த்துட்டு அவுத்து விடுங்க..அப்புறம் பார்க்கலாம்..
Deleteவருகைக்கும் தொடர்ந்து தருகிற ஆதரவுக்கும் நன்றிங்க.
இப்போ இந்த படத்த பாருங்கிறியா இல்ல தப்பிச்சு ஓடிருங்கிறியா? #எப்போ பாரு கமல் மாதிரி புரியாமலே பேசுறது!
ReplyDeleteஅட..இருப்பா..இதுல ஏம்ப்பா கமல இழுக்கிற..
Deleteஅதாவது..எந்த ஒரு நல்ல படத்திலயும் குறைகள் இருக்கும்.அதே மாதிரி எந்த ஒரு மொக்கை படத்திலயும் நல்லது இருக்குமுனு குப்ரிக் சொல்லி எங்கேயோ படிச்சதா ஞாபகம்..அதே மாதிரிதான் எனக்கு இப்பைக்கு இந்த படம் பிடிக்கல..இனிமேல பிடிக்கலாம்..கதை நல்ல கதைதான்..எடுத்த விதம்தான் எனக்கு பிடிக்கல.ஓகே-வா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா,,
ரொம்ப ஓவரா குழப்புறானே! ஏம்பா மலேசியால சரக்கு விலை கொறஞ்சிருச்சோ? lol
Deleteஏம்ப்பா...உனக்கு என்னயா ஆச்சு இப்ப..சும்மா சரக்கு மேட்டர்னு பேசுற..மத்தவங்க படிச்சாங்கனா நம்ம இமேஜு என்ன ஆவுறது..ஹி ஹீ
Deleteவருகைக்கொரு நன்றி..வந்து கலாய்த்ததற்க்கும் ஒரு நன்றி.அப்புறம் வாங்க நண்பா.
எப்போவோ பதிவு படிச்சிட்டேன். ஆனால் கமெண்ட் பண்ண நேரம் கிடைக்கவில்லை. விமர்சனம் நன்று.
ReplyDeleteஎப்படிங்க இந்த மாதிரி படங்கள் எல்லாம் கண்டு பிடிகிரிங்க.... அத பதிவும் போடறிங்க... சூப்பர் குமரன்.
இல்லங்க சும்மாதான்..கையில கிட்டுற படங்கள் எல்லாம் பதிவா போடுறது கஷ்டம்னு இத எழுதும் போதுதான் ஃபீல் பண்ணேன்.வருகைக்கு நன்றி.
Deleteஎன்ன குமரா ப்ளாக் பக்கமே காணோம் .ஒரு மாசம் ஆகிடிச்சு போல.
ReplyDeleteநல்லது நடந்தால் சரிதான்....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
குமரன்...எங்க போனீங்க..ரொம்ப நாளா ஆளே காணம்..சீக்கிரம் பதிவுலகத்துக்கு ஒரு பதிவோட வாங்க..
ReplyDelete