அப்பாடா..எத்தனை
மாதங்கள்..இவ்வளவு இடைவெளிக்கு பிறகு பிளாகிங் உலகுக்குள் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி."அடப்பாவி எங்கடா போயிட்ட?", "இருக்கியா இல்ல மேல போயிட்டியானு?"
சில நண்பர்கள் மனதிலே கேள்விகள் எழுந்திருந்தாலும் சந்தேகமில்லை.அந்த காரணம் இந்த காரணமென்று
என்று காட்டி சாக்கு சொல்லிட மனமில்லை நண்பர்களே..
எத்தனை
பேர் என்னை ஞாபகம் வைத்திருப்பார்கள் என்றும் தெரியவில்லை...என்னதான் வேலை, வாழ்க்கைனு
போனாலும் பிளாக் உலகை மிகவும் மிஸ் செய்துவிட்டதாக ஒரு தவிப்பு...கடந்த சில மாதங்களாக
நான் அடைந்த பெரிய இழப்பு என்பதை உணர்ந்த நொடி இதை எழுதுகிறேன்.போன வாரமாகவே மறுப்படியும்
பிளாக் பக்கம் வரலாம் என்ற ஆசை தோன்றிற்று.
நான்
எழுதி எல்லாம் யார் படிக்க என்ற ஒரு தினுசான எண்ணம் தடை விதித்தே வந்தது..திரைப்படங்கள்
பார்ப்பதும் குறைந்து விட்டது.குறிப்பாக நல்ல சினிமா காண்பதே அரிதென ஆகிவிட்டது.இந்த
நிலையில் பார்த்த ஒரு ஹிந்தி சினிமாதான் எனது வலையுலக, எழுத்துலக மறு வரவுக்கு அடித்தளம்.படம்
வெளிவந்தது 2007ல்..என்னை கவர்ந்த அமீர் கான் அவர்கள் நடித்து இயக்கிய அற்புதமான திரை
உணர்வு.நீண்ட நாட்களாகவே பார்க்க எண்ணிய படம் திடீரென்று எதிர்ப்பாராமல் டிவியில் ஒளிப்பரப்பவே
ஆர்வத்தோடு அமர்ந்தேன்...படம் Taare Zameen Par..
நண்பர்கள்,
வாசகர்கள் தயவு செய்து பயமுற வேண்டாம்..நான் விமர்சனம் எழுத போவதுமில்லை..மறுப்படியும்
உங்களை படிக்கச்செய்து பாவத்தை வாங்கிக்கொள்ளவும் தயாராக இல்லை..ஹி..ஹி..(இதனை எப்படியாவது
எடுத்துக்குங்க)
படத்தை
பற்றி நிறைய திரை ரசிகர்கள் கேள்விப்பட்டும் பார்த்தும் இருப்பார்கள்..ஒரு எட்டு வயது
சிறுவனின் தனி உலகை, அவனது மனப்போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக படம் பிடித்துக்காட்டியுள்ள
திரைக்குழுவினருக்கு பெரும் நன்றிகள்.எப்படி மகாபாரதம் எழுதிய வியாசரே தன்னையும் ஒரு
கதாபாத்திரமாக கதைக்குள் அமர்த்திக்கொண்டாரோ அதே வண்ணம் அமீர் கான்.
இவர் கதையில் ஓர்
அங்கமே..ஆனால் வியாசர் இல்லையெனில் எப்படி பாரதம் உருவாகிருக்காதோ அதேப்போல் அமீர்க்கான்
இங்கே..இவ்வளவு பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் நடிகர் ஒரு சிறுவனை முதன்மைப்படுத்தி
தயாரிக்க வேண்டிய கட்டாயமே கிடையாது.கதைக்கு முதலிடம் கொடுக்கும் கலைஞர்களே சிறந்த
திரைப்படைப்பாளிகள்..அந்த வரிசையில் அமீர்க்கான் இந்திய சினிமாவில் நான் மதிக்கும்
நடிகர்.
சில
படங்களை பார்த்தவுடன் மறந்துவிடுவோம்..சில திரைப்படங்கள் எப்போதுமே நம் மனதில் நீங்கா
இடம் பிடிக்கும்.அந்த வரிசையில் அமீர்க்கானின் 3 Idiots, Taare Zameen
Par.இன்னும் பார்க்காதவர்கள் ஒரு முறையேனும் பார்க்க வேண்டியது
அவசியமாகும்.இப்போதைக்கு என் மனதில் தாளம் போடும் சங்கர் மகாதேவன் அவர்கள் பாடிய பாடலை
கேளுங்கள்..படத்தை உடனே டவுன்லோடு போட்டாலும் போடுவீர்கள்.பாருங்கள்..உணருங்கள்.மீண்டும்
அடுத்த பதிவில் சந்திக்கலாம்.நன்றி.
குமரன்,
ReplyDeleteமீண்டும் எழுத வந்தற்க்கு என் வாழ்த்துக்கள். சின்ன சின்ன பிரேக் எடுங்க, ரொம்ப பெரிய பிரேக் எடுக்காதீங்க...
அப்புறம் "Taare Zameen Par" இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கள்...என்னை மிகவும் பாதித்த படம், டிவியில் தான் பார்த்தேன், ஆனால் படம் முடிந்த உடன் எழுந்து நின்று கை தட்டினேன்..படத்தோட பாதிப்பு எனக்கு முன்று நாட்கள் இருந்தது..கிளைமாக்ஸ் காட்சியில் என் கண்ணில் நீர் வந்து விட்டது... :)
நீங்க ரொம்ப அழகா உங்க பாணியில் விவரிச்சு இருக்கீங்க..நல்லா இருக்கு நண்பா...அடிக்கடி பதிவு போடுங்க...அடிக்கடி உரையாடுவோம்.. :)
கண்டிப்பா நண்பரே.
Deleteஇனிமேல விடாம பதிவு கண்டிப்பா போடுறேன்.இந்த படம் இனி என்னால மறக்க முடியாது ராஜ்.படத்தின் இறுதி காட்சிகளில் கண்கள் லேசா கலங்குனது உண்மை.ஆனால் அது ஆனந்த கண்ணீர்.
உங்களது தவறாத ஆதரவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் நண்பா.
welcome back.
ReplyDeleteநன்றிங்க பாஸ்..உங்க மாதிரி நண்பர்களின் ஆதரவும் வாழ்த்துக்களும்தான் என்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது.
Deleteசரி போஸ்ட் படிச்சீங்களா..பிடித்ததா ?
Deleteதம்பி குமரன் மீண்டும் பதிவெழுத வந்தது மகிழ்ச்சி.
ReplyDeleteபதிவு ஷார்ட் & ஸ்வீட்.
ரொம்ப நன்றி அண்ணா..தங்கள் வருகையில் மனம் மகிழ்கிறது.
Deleteவெல்கம் பேக் குமரன் ... எனக்கு மிகவும் பிடித்த ஹிந்திப் படங்களில் ஒன்றுடன் 2nd இன்னிங்ஸ ஆரம்பிச்சிருக்கீங்க. டெஸ்ட் மேட்ச் மாதிரி விட்டு விட்டு ஆடாம இனி அடிச்சு ஆடுங்க.. :)
ReplyDeleteஇனிமேல பதிவுகள் இடைவெளியில்லாம வாரம் வாரம் வரும் நண்பா..உங்களோட தொடர் ஆதரவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
Deleteதிருப்பி வந்துட்டே நண்பா!! :) ரொம்ப சந்தோஷம்!!!
ReplyDeleteஎப்படியும் எழுதுறதை விட்டுட்டு போக மாட்டனு தெரியும் தல.. ஆனா வரத்தான் லேட் ஆகிட்ட!
எழுதி எழுதி அழிச்ச போஸ்டையெல்லாம் திருப்பி போட்டுக்கலாமே :)
கண்டிப்பா எல்லா போஸ்டும் வரிசையா போடுறேன்..டோண்ட் வரி.
Deleteஇனி ரொம்ப லேட் பண்ண மாட்டேன் நண்பா..அடிக்கடி பதிவு பண்றேன்.
உங்க பிளாக் பக்கம் வந்தேன்..இன்னும் சில விமர்சனங்கள் படிக்கல.சீக்கிரம் கமெண்டு போடுறேன்.
சீக்கிரமா நீங்கம் பதிவோட வாங்க..வருகைக்கும் தொடர்ந்து வாழ்த்துக்கள் வழங்கும் தங்களுக்கு எனது நன்றிகள்/
என்னை போல நீங்களும் எழுதறதே இல்லை போல....லைட்டா கதை என்னன்னு சொல்லி இருக்கலாம் ஹிந்தி தெரியாதா நாங்க கதையை எப்படி தெரிந்து கொள்ளுறது.......
ReplyDeleteநண்பா..வருகைக்கு நன்றி.
Deleteஹிந்தியெல்லாம் அடியேனுக்கு தெரியாதுங்க..ஏதோ சப்டைட்டில்-ல காலத்தை டிரைவ் பண்ணிட்டு இருக்கேன்.முதல்ல இது விமர்சனம் இல்லங்க..பதிவுலகத்துக்கு திரும்பி வர காரணமா இருந்த இந்த படத்துக்கு ஒரு சின்ன அறிமுகம்.அம்புட்டுதானுங்க.மறுப்படியும் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.
எனக்கும் மிகவும் பிடித்த படம், ஒரு நாள் தொலைகாட்சியில் தான் பார்த்தேன் கடைசி காட்சி இன்னும் என் கண்களில்.. அந்த பையன் வரைந்த படம் அவர்கள் பள்ளி புத்தகத்தில் முகப்பிலும், பின் புற அட்டையில் ஆமிர் கான் வரைந்த அந்த பையனின் ஓவியமும்.. அதோடு பரிசு இருவருக்கும் :)
ReplyDeleteநான் உருகிய காட்சி அதுங்க..என் சினிமா அனுபவத்தில் மறக்க முடியாத படமாக இதை கூறலாம்.கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Deleteஹாய் Kumaran, எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாளாச்சி உங்க ப்ளாக் பக்கம் வந்து. உங்க gmail ID & Facebook முகவரியும் அனுப்புங்க. Friend lists ல சேர்த்துக்கறேன். என்னுடைய Email ID: nhnarasimma.prasad@gmail.com
ReplyDeleteநானும் ரொம்ப நாளாச்சிங்க பிளாகிங் பக்கம் வந்து..உங்க வருகையால் மகிழ்கிறேன்.நலமா ? கண்டிப்பா இமெயிலில் தொடரலாம்..நன்றி.
Deleteசூப்பர்
ReplyDeleteஉள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteThere are 1000+ Latest Active WhatsApp Group Link - Thank You ...
ReplyDeleteThanks again. I like WhatsApp Group. You may like 18+ whatsapp groups ,eid mubarak images.
ReplyDelete