இது ஐம்பதாவது பதிவுங்கோ.பிளாகிங் ஆரம்பிச்சு ஒரு வருடம் தாண்டிருச்சி..மலேசியாவுல
இருக்கிற இந்த பையனுக்கு கூட தொடர்ந்து ஆதரவுகள் வழங்கி வரும் நண்பர்கள், அண்ணன்மார்கள்
எல்லோருக்கும் என் மனம் கூறும் பல நன்றிகள்..எல்லோரும் சண்டை இடாம பிச்சுப்பிச்சு பகிர்ந்துக்கோங்கோ..
========================================================================
===== ====== ====== ===== ======= ====== ===== ====== =======
எங்கள் பக்கத்து வீட்டில்
ஒரு சீன குடும்பம்.கணவன் மனைவி அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் என நீண்ட காலமாக அமைதியாக
வசித்து வருகின்றனர். பார்த்தால் புன்னகை, பேசினால் ஹெலோ..எங்களுக்குள் இருக்கும் பிஸியான
சூழலில் இதுதான் உறவு.
அவர்கள் கடந்த சில மாதங்களாகவே
நாய்களை வளர்த்து வருகிறார்கள் என்று சொல்வதை விட அடித்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.எத்துவதும்,
வார்ப்பட்டையில் அடிப்பதும் என இவர்களது மூடு சரியில்லை என்றால் நாய்தான் பலியாடு என்று
நினைக்கிறேன்.சோறு வைக்கிறார்களோ இல்லையோ நாய்க்கு சோகத்தை மட்டும் அளிக்கிறார்கள்.
இவர்கள் அடிக்க அந்த நாய்
கொடுக்கும் அலறல் இருக்கிறதே..கேட்கவே பாவமாக இருக்கும்.சில நேரங்களில் நான், என் அக்கா
என கோபப்படுவோம்.இரக்கத்தில் ஏதாவது கத்தி விடலாம் என்று பார்த்தால் இருக்கிற உறவும்
பகையாகிவிடுமோ என்று தோன்றுகிறது, இதற்கு இடையில் இன்னும் ஒரு குட்டி நாய்..புதிதாக..என்ன
கதியாக போகிறதோ...என்ற நிலையில்..இப்பவே ஒரு செருப்பை கழுத்தில் தொங்கவிட்டுவிட்டார்கள்.
அது எப்ப கலண்டு விழுமோ
என்ற நினைப்பில் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருக்கிறது..குடும்பத்தலைவர்-தான்
நாயை பெண்டு கலட்டுறாருனா அவரோட குடிடீஸும் சில நேரங்களில் இதையேதான் ஃபோல்லோ பண்றாய்ங்க..நல்ல
ஃபேமிலி போங்க.
ஒரு நாயை மனிதன் அடிக்கையில்,
சிறிது தூரத்தில் நாய் குட்டியின் மன நிழலில் :
ஒருவேளை என் குரல் உனக்கு
கேளின்.......
மனிதரே,
நாங்கள் உங்களுடன் பழக,
உயர்ந்தோர் ஆக முயற்ச்சிக்கிறோம் - நீங்கள்
மனித தோல் உருவில் எங்களாக
துணிகிறீர்கள்...
இறைவா,
உன் படைப்பை நிறுத்து,
இவர்கள் பார்வைகளை திருத்து
மனிதர் பாவங்களை போக்கு..
இனி,
உருவங்கள் வேறுப்பட்டாலும்
பரவாயில்லை,
உணர்வுகளையாவது ஒருமைப்படுத்து,
எதிர்வரும் சமுதாயம் சமத்துவமாகட்டும்..
பரிதாபக்குரலில், நாய் குட்டி
மேலே இருப்பது ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுன பதிவுங்க..ஆனால் நாய் நிலைமை மட்டும்
முழுமையா மாறுல.உங்க கமெண்ட்ஸை வாரி வழங்குங்க..யாரையாவது எட்டி உதைக்குனமுனு தோனுனா
கொஞ்சம் எச்சரிக்கை - முன்னால இருப்பது உங்க ஸ்கிரீன் என்பதை மறவாதிங்க.மீண்டும் அடுத்த
பதிவோடு சந்திக்கலாம்.அதுவரை..
உங்கள் ஆதரோவோடு,
எப்போதுமே விமர்சனம் என்ற பேரிலே கழுத்தை அறுப்பது எனக்கே பிடிக்கலங்க..அதான் இந்த மாதிரி ஒரு மொக்க பதிவு..விஷயம் உண்மை..ஆனால், இப்ப சூழ்நிலை பரவால..வாங்க..வாங்க..வந்து போடுங்க உங்க கமெண்ட்ஸ்.
ReplyDeleteHalf Century அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் நண்பா...
ReplyDeleteஅப்புறம் அந்த நாய்கள் உண்மையிலே பாவப்பட்ட ஜீவன்கள் தான்...ப்ளூ கிராஸ் போன்ற அமைப்பு அங்கு இருந்தால் கம்ப்ளைன்ட் செய்யுங்கள்....அவர்கள் வந்து நாயை மீட்டு கொண்டு செல்லட்டும்...
அப்புறம் சைனிஸ் நாய் வளர்ப்பது ஆச்சிரியம்.....நான் பழகுன சைனிஸ் நிறைய பேர் நாய் கறி விரும்பி சாப்பிடுவங்க... :(
உங்க வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க நண்பா..
Deleteஒரு சமயம் நாய் மேட்டர் முத்திப்போக கம்ப்ளேன் பண்ணலாம் என்ற லெவலுக்கும் போனேன்..அடுத்த நாள்-ல இருந்தே மேல சொன்ன விஷயங்கள் எல்லாம் மாற ஆரம்பிச்சிருச்சி..இப்ப நல்லா பார்த்துக்குறாங்க..அப்பப்ப-தான் கொஞ்சம் உல்ட்டாவா நடந்துக்குறாங்க.
சைனிஸ் நிறைய பேரு நாய்க்கறி சாப்பிடுவாங்க..உண்மைதான்..இவங்கள பத்தி பெருசா தெரில..மலேசியாவுல நிறைய சைனிஸ் பேரு புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்..அதனால் சைவ உணவும் சாப்பிடுவாங்க.
உங்க வருகைக்கு மீண்டும் பல நன்றிகள்/
நீ எப்பவோ 50 முடித்திருக்க வேண்டியது.நடுவுல கொஞ்ச நாள் காணமல் போய்ட்ட .
ReplyDeleteஇருந்தாலும் உன்னை மறக்கவே முடியாது. வாழ்த்துக்கள் குமரன்.
உண்மைதாங்க..இந்த கிணறு தாண்டவே இவ்வளவு ஆயிருச்சி..
Deleteஎன்னாலயும் உங்கள மறக்கவே முடியாதுங்க,,உங்களை போன்றவர்களோட ஆதரவுக்காரணமாகதான் இன்னும் எழுதுகிறேன்.
எல்லாத்துக்கும் நன்றி.
50க்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteரொம்ப நன்றிங்க ஐயா..
Delete50க்கு வாழ்த்துக்கள் நண்பா..
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா..
Deleteவிலங்குகள் மீது நேச பார்வையுடன் 50 வது பதிவை போட்டு விட்டிட்டிங்க.வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்க வருகையால் மனம் மகிழ்கிறது..மிக்க நன்றி.
Deleteஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர்ந்து நல்ல பதிவுகளை பதியுங்கள்.
கண்டிப்பாக சார், தொடருவேன்..உங்கள் ஆதரவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
Deleteகொஞ்சம் எச்சரிக்கை - முன்னால இருப்பது உங்க ஸ்கிரீன் என்பதை மறவாதிங்க.////
ReplyDeleteஹா ஹா ஹா...... நல்லவேளை நியாபகப்படுத்துனிங்க....
ஆமாங்க சார்..கொஞ்சம் கவனிச்சுக்குங்க.
Delete50 கூடிய விரைவில் 500 ஆக வாழ்த்துக்கள். நாய் படாத பாடு என்று இதைத்தான் சொல்வார்கள் போலிருக்கிறது. இரக்கமில்லாத இவர்களுக்கெல்லாம் என்ன_______க்கு செல்லப்பிராணி?
ReplyDeleteஉண்மைதான் பாலா சார்..அடுத்த ஜென்மத்துல இவைய்ங்க நாயா பொறந்து இந்த நாய் மனுசனா பொறந்து போட்டு சாத்துனுமுனு ரொம்ப விளையாட்டாக்கூட நாங்க பேசிக்குவோம்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Delete50 பதிவுக்கு வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteரொம்ப நன்றியம்மா..
Deleteரொம்ப வித்தியாசமான பதிவுடன் அரைச்சதம் அடிக்கிறீங்க! வாழ்த்துக்கள் நண்பா!! லொல்.. லொல்..
ReplyDeleteவாங்க நண்பரே...ரொம்ப நன்றி..சீக்கிரம் நீங்களும் ஒரு பதிவு போடுங்க.
ReplyDelete