A Film By Majid Majidi
Stars : Hossein Mahjoub, Mohsen Ramezani and Salameh Feyzi
ஈரானியத் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் பலருக்கும் மஜித் மஜிதி அவர்களைப் பற்றி தெரிந்திருக்கும். கடந்த இருபது ஆண்டுகளில் ஈரானிய சினிமாவை உலகளாவிய நிலையில் தன் பக்கம் திருப்பிய ஈரானிய கலைஞர்களில் முக்கியமான பங்கு இவர்க்கு உண்டு..தொடர்ந்து உலகத்தர திரைப்படங்களை சினிமா பார்வையார்களுக்கு வழங்கிவரும் ஈரானிய சினிமாவில் இவர் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.இவரது Children Of Heaven (1997) மற்றும் Baran (2000) போன்ற திரைப்படங்கள் உலகளாவிய நிலையில் பல விருதுகளை வென்றதோடு, ஆஸ்கர் விருதுக்காக ஈரான் நாட்டிலிருந்து பரிந்துக்கப்பட்ட முதல் படமாக சில்ட்ரன் ஒஃப் ஹேவன் திரைப்படம் விளங்குகிறது.
1999-ம் ஆண்டு வெளிவந்த கலர் ஒஃப் பாரடைஸ் திரைப்படம் - இவரது முந்தைய படைப்பான சில்ட்ரன் ஒஃப் ஹேவன் என்ற திரைப்படத்திற்கு சற்றும் குறைவில்லாமல் உலகளவில் பல விருதுகளைப் பெற்றதோடு விமர்சக மற்றும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.கண் பார்வையற்ற ஒரு இளம் வயது சிறுவனுக்கும் தன் தந்தைக்கும் இடையிலான உறவை, சிறப்பான முறையில் மஜிதி எனும் உலக தரம் வாய்ந்த படைப்பாளன், தனக்கே உரிய பாணியில் உருவாக்கிய இப்படைப்பினை ஒரு முறையாவது அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியது அவசியமே.
ஏனெனில் மொழி என்பது திரைக்காட்சிகளில் பெரும்பாலும் அவசியம் இல்லாமல் போகிறது. கதையோடு கலந்த காட்சியமைப்புகளும், காட்சிகளோடு கலந்த கதாபாத்திரங்களும் வார்த்தைகளை தாண்டி மாய வலையை பார்வையாளனின் கண்களில் விரிக்கக்கூடியவை.இதனை வார்த்தைகளாக சொல்வதைவிட அனுபவத்தாலே உணர்ந்திட முடியும்..திரைக்கதைக்கு தேவையே இல்லை என்றாலும், நிர்வாணம் அல்லது ஆபாச காட்சிகள் ஒன்றாவது புகுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இவ்வளவு கெடுபிடியான, கடுமையான சென்சாருக்கு நடுவில் வெளிவரும் ஈரானிய திரைப்படங்கள் உலகத்தரத்தில் அமைவது மிகுந்த ஆச்சரியத்தையே கொடுக்கிறது.
மொஹம்மட் என்ற முதன்மை கதாபாத்திரத்துக்கு உயிரை தந்திருக்கும் Mohsen Ramezani.. யாரென்றுக்கூட தெரியவில்லை இந்த சிறுவனை..கண் பார்வையற்ற உலகின் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.நிஜ வாழ்க்கையில் கண்களை இழந்த நடிப்புலக இளவரசன்..வயதில் சிறியவராக இருப்பினும் முதிர்ச்சியான நடிப்பு இவரது.நேர்த்தியான விதத்தில் அமைந்திருக்கும் ஒளிப்பதிவு, கண்களில் ஒத்திக்கொள்ளலாம்..கொள்ளை அழகு.. சினிமாவின் தரத்தை நிர்ணையிக்கும் கவித்துவமான காட்சிகளை சுற்றி கோலமிடுகிறது.
கண் பார்வைகளை இழந்தவர்களின் வாழ்க்கை, அபூர்வமானது : சோகமானது... குற்றங்கள் செய்யாமலேயே ஆயுள் கைதியாக வாழ்வதை போன்றது..கை, கால்கள் என்று அனைத்துமே நன்றாக இருக்கும் நம்மில் பலரும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பல வேளைகளில் எல்லாம் முடிந்துவிட்டது, வாழ்க்கையே போய்விட்டது என்று சொல்லிக் கொள்கிறோம்.என்னை பொருத்தவரை குறைகளில் பெரியது சிறியது என்று எதுவும் இல்லை.காரணம் அவை எல்லாமே மனிதற்கு துன்பத்தை தரக்கூடியதே..அதுவும் ஏழைக்கு அந்த நிலமை வரும்போது..இறைவன் அவர்களுக்கென்று துணையை கொடுக்கிறார்.. வாழ வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறார். நம்மாளும் முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுக்கிறார்..
2000ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ஈரான் நாட்டிலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட படைப்பிது.இறுதி நேரத்தில் ஆஸ்கரால் புறக்கணிக்கபட்டது கொடுமை.ஈரானிய சினிமாவை இன்னொரு தரத்துக்கு கொண்டு சென்ற இப்படைப்பை, ரசிகர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய அனுபவம் ஆகும்.
.
என்றாவது ஒரு நாள் ஈரானிய சினிமாவை பற்றியும் அதனது வளர்ச்சியை பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.அதுவரை உங்களை கவர்ந்த ஈரானிய திரைப்படங்கள் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.சற்று உதவியாக இருக்கும்.பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்.
புதிதாக சினிமா டைரி, page ஒன்று உருவாக்கிருக்கிறேன் நண்பர்களே..பார்க்கும்
படங்களின் சிறிய தொகுப்பாக இருக்கும் என நம்புகிறேன்..புதிதாக துப்பாக்கி போன்ற படங்கள்
பற்றி எல்லாம் எழுதி இருக்கேன்..படிச்சிட்டு முடிந்தால் உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்..நன்றி.
This is One of the Great Iranian Movie.. Majid Majidi done a great job
ReplyDeleteவருக்கைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ரியாஸ்..
Delete// நிர்வாணம் அல்லது ஆபாச காட்சிகள் ஒன்றாவது புகுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இவ்வளவு கெடுபிடியான, கடுமையான சென்சாருக்கு நடுவில் வெளிவரும் ஈரானிய திரைப்படங்கள் உலகத்தரத்தில் அமைவது//
ReplyDeleteசூப்பர் தல.. உலக படம் என்று எல்லாரும் கொண்டாடும் மிக சொற்ப படங்களே நீங்கள் சொல்வதை போல இருக்கின்றன.. கலக்கல்.. ஆனால் படத்தை பற்றி வெளியோட்டமாய் மாத்திரம் சொல்லி இருக்கீங்க.. காட்சிகளை போட்டு கதை கூறினால் தானே தமிழன் லயித்து போவான்.. இருந்தாலும் பார்க்க வேண்டிய படமாய் கூறி இருக்கீங்க..
நிர்வான காட்சிகள் ஒரு படத்துக்கு வேண்டாம் என்று நான் சொல்வதில்லை நண்பா..பல படங்களில் அவை வியாபார நோக்கத்துடன் செயல்ப்படுத்தபடுகின்றன.ஈரானிய படங்கள் அதிலிருந்து முற்றிலும் வெளியே வந்து கலையம்சத்துடன் எடுக்கப்படுவது ஆச்சரியம்தான்.
Deleteஎன்னிக்குமே கதையையும் காட்சிகளையும் விரிவாக சொல்லனும் என்ற எண்ணம் எனக்கு இருப்பது கிடையாது ஹாரி..படத்தில் உள்ள சுவாரஸ்யங்கள், அதில் நான் கண்ட நல்ல விஷயங்கள், நிறை குறைகளை எழுதி அறிமுகப்படுத்துவதுதான் என் நோக்கமே..இதுவும் அப்படிதான்..உண்மையான உலக சினிமா..இதோடு முடிந்தால் பாரன் படமும் பாருங்க..மெல்லிய காதல் கதை பேசும் மழைத்துளிகளின் சப்தக்கூடுகள் அப்படம்..
ஹாரி, தொடர்ந்து வந்து ஆதரவு வழங்கி வருகிறீர்கள்..உங்கள் அன்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
ஈரானிய திரைப்படங்கள் உலகத்தரத்தில் அமைவது மிகுந்த ஆச்சரியத்தையே கொடுக்கிறது.
ReplyDeleteசிறப்பு மிக்க விமர்சனப் படைப்பிற்குப் பாராட்டுக்கள்..
தங்களது வருக்கைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி..
Delete//குறைகளில் பெரியது சிறியது என்று எதுவும் இல்லை.காரணம் அவை எல்லாமே மனிதற்கு துன்பத்தை தரக்கூடியதே..அதுவும் ஏழைக்கு அந்த நிலமை வரும்போது..இறைவன் அவர்களுக்கென்று துணையை கொடுக்கிறார்.. வாழ வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறார். நம்மாளும் முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுக்கிறார்..
ReplyDelete//
- வலிமையான வரிகள். மற்ற மொழி படங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை. படத்தின் முக்கிய காட்சிகளையும் பாதித்த விஷயங்களையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கண்டிப்பாக தோழி..வருகிற காலங்களில் தங்களது விருப்பம் போல நல்ல காட்சிகளையும் பாதித்த விஷயங்களையும் பதிய முயற்சி செய்கிறேன்..அதுவரை ஆதரவு வழங்கி வரும் தங்களுக்கு எனது இதயம் கூறும் நன்றிகள்//
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே. வலியப்புகுத்தும் நிர்வாண காட்சிகள் தேவை இல்லைதான். உணர்வுகளை சொல்லும் வகையில் ஈரானிய படங்கள் முன்னிலை வகிக்கின்றன. அருமையான அறிமுகம் . நன்றி நண்பரே
ReplyDeleteதங்களது கருத்துக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் பாலா சார்..தொடர்ந்து வாருங்கள்..
DeleteSeperation பார்த்தது மட்டும் தான்.. சில்ட்ரன் ஒஃவ் ஹெவன் கூட இன்னும் பார்க்கலை. ஈரானிய சினிமா பத்தி எழுதுவேன்னு சொல்லியிருக்கீங்க. கண்டிப்பா பண்ணனும். அதுக்குள்ள இந்தப்படத்தை நானும் பார்த்துடனும். ஞாபகத்துலயே வைச்சுக்கிறேன்!
ReplyDeleteசினிமா டைரி செக்ஷன் பிரம்மாதமான ஐடியா! தமிழ்ப் படங்கள் பத்தின உங்க பார்வைகளை எதிர்நோக்குகிறேன்!
நண்பரே, முதலில் வருகைக்கும் தொடர் ஆதரவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..நீங்க விமர்சனம் பண்ணி ரொம்ப நாள் ஆகுது நண்பா..சீக்கிரம் வாங்க.எதிர்ப்பார்க்கிறோம்.
Deleteநான் பெரும்பாலும் ஆங்கிலம், தமிழ் அல்லாத படங்களை பார்ப்பது ரொம்ப அரிது..அதிலும் ஈரானிய படங்களும் அதிகமாக பார்த்ததில்லை.ஆனால் சில முக்கிய படைப்புகளை தேர்வு செய்து டைம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்தும் வருகிறேன்..பாரன், சில்டரென் ஒஃப் தி ஹெவென், The Song of Sparrows ஆகிய படங்கள் மஜித் மஜிதி அவர்களுடைய மாஸ்டர்ப்பீஸ்கள் எனலாம்.கண்டிப்பா தொடர்ந்து முடிந்தளவு ஈரானிய சினிமாவை பற்றி எழுதுகிறேன்.மீண்டும் நன்றி நண்பரே.
அருமையான விமர்சனம் குமரன். தொடரட்டும் உங்கள் இரானிய படங்களின் விமர்சனங்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஉங்க வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்..தொடர்ந்து வாங்க..
Deleteஅருமையான விமர்சனம். Children Of Heaven பற்றி என் ப்ளாகில் ஏற்கனவே எழுதிருக்கேன். இந்த படம் அவசியம் வாங்கி பார்க்கிறேன்
ReplyDeleteகட்டாயம் பாருங்க சார்..நல்ல படம்.டவுன்லோடு லிங்க் இருப்பின் பிறகு கமெண்டு பாக்சில் போடுகிறேன்.தங்களது வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபார்க்கத் தூண்டும் விமரிசனம்
ReplyDeleteகண்டிப்பா பாருங்க..நல்ல படைப்பு.வருகைக்கு மிக்க நன்றி.
Deleteஎன் மனம் கவர்ந்த color of paradise படத்தை பற்றிய உங்கள் அற்புதமான விமர்சனம் அருமை .. ஈரான் திரைப்படங்கள் பற்றி எழுதப் போகிறீர்களா? கைதட்டல்களுடன் வரவேற்கிறேன் ... ஈரான் படங்களுக்கும், உங்களுக்கும் நான் ரசிகன் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .. என்னுடைய ஆலோசனைகள் சில ... seperation , close -up , secret of balat , black board , kandhahar , apple , white baloon , father, boycott ,two sightless eyes , seeking refugee , nasuh 's rependance , A time for love , once upon a time , nights on the zayahdehrud இவற்றில் சில மட்டும் பார்த்திருக்கிறேன் .. உங்கள் மூலம் மற்றவற்றையும் அறிய ஆசை
ReplyDeleteநீண்ட நாட்க்களுக்குப்பிறகு தங்களது கருத்துரை ஒரு புத்துணர்ச்சியை வழங்கிவிட்டது ஐயா..கண்டிப்பாக உங்க லிஸ்ட்டில் உள்ள படங்கள் என் ஈரானிய சினிமா அனுபவத்தை பெருக்கிக்கொள்ள உதவும்.தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன்..நன்றி.
ReplyDelete