என்றைக்குமே சுமார் ஓராண்டுக்குள் வெளிவந்த படங்களை பார்த்து ரசித்து எழுதியதாக ஞாபகம் இல்லை.பல நல்ல புதிய படங்களை தேர்ந்தெடுத்து ஜேக்கி சார், கருந்தேள் சார், சக நண்பர்களான அருண், ராஜ், ஹாலிவுட் ரசிகன், JZ, udanppirappe போன்றவர்கள் எழுதி கலக்கிவிடுகிறார்கள். இவர்கள் எழுதின பிறகு, நான் என்னத்த எழுதி கிழிக்க முடியும்.தல இருக்கும் போது வால் ஆடலாமா.சொல்லுங்க ? அதனால்தான் போதும்பா சாமின்னு, பழைய படங்களை பார்த்து எழுதிறது கூடிவிட்டது.(நெறைய பேர் பார்க்காத படம்னா கண்ணாப்பின்னானு பண்ணலாம் பாருங்க). உண்மையில், புதுப்படங்கள் பார்ப்பது குறைந்துவிட்டது.
ஆனால் இந்த வருட ஆஸ்கருக்கு பிறகு, சென்ற வருடம் வெளிவந்த நல்ல படங்களை பார்க்க வேண்டும் என்ற அவா வந்துவிட்டது.அந்த வரிசையில் பார்த்த ஒன்றுதான் கார்னாஜ்.
பிரபல போலாந்து இயக்குனரான ரோமன் போலான்ஸ்கி-யின் அறிமுகம் சைனாடவுன் பார்த்தப் போது கிட்டியது.தெ பியானிஸ் திரைப்படம் இவரை எனது அபிமான இயக்குனர்களில் ஒன்றாக்கியது. பல சர்ச்சை, பிரச்சனைகளில் இருந்தும் கூட தொடர்ந்து அயராது நல் படைப்புகளை வழங்குவதற்கு உழைக்கும் சிறந்த திரைப்படைப்பாளர். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், வித்தியாசமாக அவர் உருவாக்கிய இன்னொரு அனுபவம்தான் கார்னாஜ்.யாஸ்மினா யாசா என்பவரது குறிப்பிடத்தக்க மேடை நாடகமான கோட் ஒஃப் கர்னஜ் - யை காமெடி டிராமாவாக திரைவடிவம் கொடுத்த படக்குழுவினரை எவ்வளவு பாராட்டியும் தகும்.
ஆஸ்கர் வென்றவர்களான ஜோடி ஃபொஸ்டெர் மற்றும் கேட் வின்ஸ்லெட்டை பிடிக்காத ஹாலிவுட் ரசிகர்கள் குறைவு.திரைக்கு திரை நல்ல நடிப்பை வழங்க நினைப்பவர்கள்.இவர்கள் இருவருக்கு இன்னும் ஒரு தீனியாக இப்படத்தை கூறலாம்.கூடவே கோல்டன் குளோப்புக்கு பரிந்துரைகளும் பெற்றுருக்கின்றனர். இவர்களுக்கு பக்கப்பலமாக Christoph Waltz, John C. Reilly ஆகிய ஆண் நடிகர்கள் கதைக்கு கூடுதல் வலு சேர்க்கின்றனர்.
லோக்கல் பார்க்கில் நிகழும் சண்டையில் சக்கார்த்தி என்ற சிறுவன் பேட் ஸ்டிக்கால் சக மாணவன் ஈதனை அடித்து பற்க்களை நொறுக்குவதோடு படம் துவங்குகிறது...பிறகு கதையென்ன என்று கேட்க்கிறீர்களா ?? அந்த சம்பவத்தின் காரணமாக இருத்தரப்பு பெற்றோரும் ஈதனின் அப்பார்ட்மெண்டில் கூடுகின்றனர்... அங்கு இவர்களுக்குள் நிகழும் உரையாடல்களே மொத்தப்படமும்..
அட..அப்படியா !!! அட ஆமாங்க.பேசுறதுல என்ன பெரிய ஆச்சரியம் ? ஆனால் அதை படமாக பார்க்கிறதில் புது அனுபவம்தான் இல்ல ?
ஈதனின் பெற்றோர்களாக வரும் ஜோடி ஃபோஸ்டர், மைக்கல் லொங்ஸ்டிரீட் மற்றும் சக்கார்த்தியின் தாய் தந்தையராக வரும் வின்ஸ்லெட், கிரிஸ்ட்டப் வால்ட்ஸ்.. இதுப் போன்ற சூழல்க்கதைக்கு சிறப்பான தேர்வு.கனிவு, கோபம், கருணை, படப்படப்பு என்று அத்தனை முகத்திலும் தெளிவான நடிப்பம்சங்கள் நாடகம் ஆடுகின்றன. உரையாடல்களில் உள்ள குரல் வெளிப்பாடுகளும், பாவனைகளும் கட்டாயம் பலரையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.
அது முக்கியமாக ஃப்ரூட் கொப்லர் என்னும் ஒன்றை சாப்பிட்டுவிட்டு வின்ஸ்லெட் எடுக்கும் உவா..உவா இருக்கே..!! அதை யாராயிருந்தாலும் கட்டாயம் ரசிப்பர்.அதோடு அவரோட ஹஸ்பண்டா வருற வால்ட்ஸ் - Inglorious Basterds யாரால் மறக்க முடியும்.இதில் கைப்பேசி பிரியரா வந்து பிறகு, சுற்றி இருக்கிறவங்களை (என்னையும் சேர்த்துதான்) வெறி ஏத்தும் போது..நகைச்சுவை வெடி. அதே வரிசையில் இன்னும் பல குறிப்பிடத்தக்க சுவாரஸ்யங்கள்..இருத்தரப்பு தம்பதிகளும் ஒருவருக்கொருவர் குறை சொல்லிக் கொள்வதும், வாந்தி எடுத்த இடம், புத்தகம் முதலானவற்றில் வாசனை திரவியத்தை தெளிப்பதும், எல்லாம் முடிந்து இறுதியில் பைத்தியம் பிடித்ததுப்போல சிரித்து நடந்துக் கொள்வதும் என பல..என் சொல்ல..திரையில் நீங்கள் அதிகம் உணரலாம்.
ஒரு கட்டத்தில், இந்த படத்தை பொலான்ஸ்கி-தான் எடுத்தாரா என நெஞ்சம் தடுமாற வைத்துவிட்டது.தெ பியானிஸ்டில் மனதை உறுத்தியவர், சைனாடவுனில் மூக்கை கிழித்தவர் இதில் தனது மென்மையான இயக்கத்தால் நல்ல பொழுது போக்கு படமாக கர்னஜை நடிகர்களின் பங்களிப்பின் ஊடே அருமையாக வழங்கியிருக்கிறார்.நல்ல விமர்சனங்கள் எடுத்த வேளையில், கிடைத்த 10 பரிந்துரைகளில் வெனிஷில் லிட்டில் கோல்டன் பேர், சிறந்த திரைக்கதை : கோயா விருதுகள் உட்பட 4 விருதுகளை வென்றிருக்கிறது.
ஹாலிவுட்டில் இப்போதெல்லாம், ஆவோனா பிரமாண்டம், இல்லனா ஆக்சன், ஹாரர்கள் என்று சொன்ன விஷயங்களையே போலியாக பயன்ப்படுத்துவது என்பது அதிகரித்துக்கொண்டு வருகிறது. வசனங்களை கூட்டி, ஒரே சூழலை காட்சியாக உருவாக்கி வெளிப்புற அழகியலை குறைக்கொண்டு ஏறக்குறைய சில செட்டுக்களில் படப்பிடிப்புகள் என்பது குதிரைக்கொம்பாக போய்க்கொண்டு வருகிறது.ஒரு 12 ஆங்க்ரி மென் (நல்லா படிங்க இது ஆங்க்ரி பேர்ட்ஸ் இல்ல), தெ ரோப், லைஃப் போட் போன்ற படங்கள் இனி அமெரிக்காவில் சாத்தியமில்லாத ஒன்றாகுமோ என்ற அறிக்குறையையும் உணர முடிகிறது.
ஏதோ போலாந்தில் பிறந்து : ஆங்கிலம் கற்றுக்கொண்டு : அமெரிக்கா உட்பட சில நாடுகளில் சர்ச்சைகளுக்கும் உண்டாகி இன்னும் சினிமாவை உயரிய கோணத்தில் பார்க்கும் ரோமன் போலன்ஸ்கி என்ற படைப்பாளியின் சிந்தனையில் உதித்த, அமெரிக்கா அற்ற ஆங்கில படமாக கர்னஜ், மேற்ச்சொன்ன அந்த குறையை நிறைவுப்படுத்த முயற்சித்திருப்பது குறிப்பிடதக்கது.
சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடம் - பெரிய இயக்குனர், நடிகர்கள் என்று எண்ணத்தில் அது, இது இருக்குமோ என்ற வேற எந்த எதிர்ப்பார்ப்புகளோடு ரசிகர் போனாலும் வெறும் வசனங்கள், நடிப்பு இவை இரண்டைத்தவிர வேறெதுவும் கிடையாது என்பதற்கு நான் சாட்சி..ஆனால், அத்தனையும் சுவாரஸ்யமானவை..யாராவது இருவர் உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள்.. ஒரு முக்கியமான விஷயத்தை பேச போகிறீர்கள்.அது தொடங்கவே, ஏதோ காரணமாக வெறுக்கிறீர்கள். வாய்ச்சண்டை ஏற்ப்படுகிறது..வெளியே போ என்று கூற முடியாமல்.. நீங்களும் விலக முடியாமல்..மப்பி மழுப்பும் உள்ளுக்குள் குழம்பும் அந்த நொடிகள், உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? அதுதான் கர்னஜ்.
எப்படியாயினும், ஆக்சன், திரில்லர், சஸ்பென்ஸ், ஹாரர் போன்ற ஹாலிவுட்டின் வழக்கமான வகைகளை கண்ணார கண்டு போரடித்தவர்களுக்கு ஓர் அருமையான வித்தியாசமான படம் வெயிட்டிங்க்..உடனே சென்று டவுன்லோட் அல்லது டிவிடி வாங்கி சப்டைட்டிலுடன் பாருங்கள்.
IMDB : 7.3 / 10
MY RATING : 7.5 / 10 : A Very Unusual Conversational Drama
MY RATING : 7.5 / 10 : A Very Unusual Conversational Drama
@@====================================@@@=================================@@
கர்னஜ் - அன்றாட வாழ்க்கையின் நாடகம்..நம்பினால் சினிமா..
@====================================@@@==================================@@
உங்கள் ஆதரோவோடு,
சும்மா புதுப்படங்கள் பார்க்குறவன்னு என்னையும் கோர்த்து விட்டீங்களே!..இப்படியொரு படம் வந்ததே எனக்கு தெரியலை!!
ReplyDeleteதெளிவா படத்தை பார்த்தே ஆவனும்னு சொல்லாம சொல்லிட்டீங்க..கண்டிப்பா பார்த்துடுறேன்!
* இந்தப் படம் ஆஸ்கருக்கு நாமினேட் பண்ணப்பட்டிச்சா நண்பா? இருந்திருந்தால் வாசித்த ஞாபகமாவது இருந்திருக்குமே..
நண்பா, வந்துட்டீங்க..நன்றியோ நன்றிகள்.
Deleteஇந்த படம் ஆஸ்கருக்கு எல்லாம் போகல நண்பா..பட் ரெண்டு கோல்டன் குலோப்புக்கு (ஆக்டிங்) நாமினேட் ஆனது.இறுதியில கிடைக்கல.படம் வெளிவர போவதை சென்ற வருடமே ஐஎம்டிபி மூலம் அறிந்துக்கொண்டேன்..நல்ல படம்..நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் விருப்பம் சொன்னால் சந்தோஷம்.
ஒவ்வொருத்தரா Kahaani படம் பார்த்துட்டு வர்றீங்க.. நான் மட்டும் மிஸ்ஸிங்கு!
ReplyDeleteஉடனடியா பார்க்கனும் போல இருக்கு.. இருந்தாலும் உங்கள் முதல் "ஹிந்தி" திரைப்பார்வையை வாசிச்சிட்டு முடிவெடுக்கிறேன்!
கஹானி சூப்பரான படம் நண்பா..நீங்களும் பாருங்க..இப்பதான் எதையோ பதிவு என்ற பேரில் இந்த படத்தை போட்டுக் கிறுக்கிட்டு இருக்கேன்..ரிலீஸ் எப்பனு யூகிக்க முடில என்னால..அப்புறம் பார்க்கலாம்.வருகைக்கும் என் முதுகை தட்டிக்கொடுக்கும் பின்னூட்டங்களுக்கும் மீண்டும் நன்றிகள்.
Deleteஅழகான விமர்சனம்..அருமை நண்பா..படம் பார்த்த உணர்வை தருகிறது உங்கள் நடை..
ReplyDeleteவால்ட்ஸ் சிறந்த நடிகர்.. Basterds படத்திற்கு ஆஸ்கார் வாங்கினார்..எனக்கு மிகவும் பிடித்த நடிகர்..
கண்டிப்பாய் படம் பார்கிறேன்..
நண்பரே..வருகையில் மகிழ்கிறேன்..ஒவ்வொரு முறையும் என்னை தவறாது பின்னூட்டம், கருத்துக்கள் அளித்து என்ன ஊக்கப்படுத்தும் நண்பர்களில் தாங்களும் ஒருவர்.ரொம்ப ரொம்ப நன்றி.
Deleteஒரு வகையில் சிறப்பாக எடுக்கப்பட்ட படமிது..வசனங்களில் உள்ள சுவாரஸ்யங்களும் கதாபாத்திரங்கள் செய்யும் செயல்களே படத்தின் நாடி..நீங்களும் பாருங்கள்..வால்ட்ஸ் இதிலும் பின்னி இருப்பார்.
படம் வருவதற்கு முன் கேள்விப்பட்டேன். ஆனால் அதன் பின் மறந்தே போய்விட்டது. டவுன்லோடு இப்பத் தான் போட்டேன். இந்த வாரத்திற்குள் பார்த்துவிட்டு சொல்றேன்.
ReplyDeleteதவறாது தொடர்ந்து ஆதரவு தரும் நண்பரே, தங்களது வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.காத்திருக்கிறேன்.
Deleteபடம் பழசென்றாலும் உங்க விமர்சனத்துக்கு இன்னும் 19வயசுதான் குமரன். இனிமேல்தான் டவுக்லோட் பண்ணனும்.
ReplyDeleteஆதரவளிக்கும் நண்பரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல..படம் பாருங்க..நீங்களும் ரசிக்கலாம்.
Deleteநண்பா எனக்கு இந்த படங்களின் விமர்சனங்களுக்கு பின்னூட்டம் போட தெரியாது. ஆனால் நல்லா ஹாலிவுட் படம் மட்டும் பார்ப்பேன்.
ReplyDeleteஎனக்கு IMDb ரேட்டிங் நீங்களும் நம்ம தல JZ உம் தான். நீங்களே சொல்லிப்புட்டிக, பாத்திட வேண்டியது தான். முடிஞ்சா இந்த லிங்க் கொஞ்சம் போய் பாருங்களேன். http://www.kishoker.blogspot.com/2012/05/3.html
வருகைக்கு நன்றி நண்பா..உங்க பதிவ படிச்சேன்..நல்லாருக்கு..படம் பாருங்க.
Deleteநேற்றே வாசிச்சேன்...கமென்ட் பாக்ஸ் சுத்திட்டே இருந்தது...
ReplyDeleteரோமன் பொலான்ஸ்கி...அவரது ஐம்பது வருடத்திய படங்கள் ஒன்னு விடாம பார்த்திருக்கேன்...அவர் சின்ன பொண்ணு கேஸ்ல மாட்டுனதில சமீப காலத்தில நடந்துக்கிற விதம் பார்க்கையில் அதை மீறி படம் பார்க்க தோணறது இல்லை..
ரோமன் பொலான்ஸ்கி உள்ள தானே இருக்காரு...? சுவிஸ்காரங்க விட்டுட்டாங்கன்னு வாசிச்ச நினைவு...
Pianist...Ghost writer...China Town...Tess சொல்லிட்டே போகலாம்...எல்லாம் பாருங்க...
//நேற்றே வாசிச்சேன்...கமென்ட் பாக்ஸ் சுத்திட்டே இருந்தது...//
Deleteஎன்னது சுத்துதா..என்ன சார் சொல்றீங்க..புரியலயே எனக்கு.பிளாக் ஏதாவது பிராப்லம் பண்ணுதா.இருந்தா சொல்லுங்க.
பொலன்ஸ்கி சிறந்த இயக்குனர்..அதில் சந்தேகமே இல்லை..பியானிஸ்ட், சைனாடவுன், ஒலிவெர் டிவிஸ்ட், ஃப்ராண்டிக் போன்ற படங்களை பார்த்தாகிவிட்டது..அடுத்து சில படங்களும் பார்க்க இருக்கிறேன்.நானும் கடைசியா அவர பற்றி எதுவும் வாசிக்கல சார்..தெரிந்தா சொல்றேன்.
வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிங்க..மீண்டும் வருக.
ரோமன் போலன்ஸ்கி எடுத்த படங்களில் இது கொஞ்சம் வித்தியாசமான படம் போல........
ReplyDeleteபடத்தையே நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
உங்கள் விமர்சனம் எப்போதும் போல் மிக அருமை.
நான் இது வரை புது படங்களே விமர்சித்தது இல்லை. ஆனால் என்னையும் மற்ற (புது படங்கள் விமர்சிக்கும் நண்பர்களுடன்) இணைத்து எழுதி இருக்கீங்க.
இதற்காகவே நான் புது படம் ஒன்றை எழுத வேண்டும் என நினைக்கிறன். ஆனால் என்ன பண்றது நான் இருக்குற இடத்துல டைரக்ட் ரிலீஸ் கிடையாது.........
வழக்கம் போல தங்களது ஆதரவுகளுக்கும் ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிங்க நண்பரே..
Deleteபுதுப்படங்கள் ஏதோ தோன்றியது எழுதிட்டேன்..டவுன்லோடு போட்டு பார்த்தாச்சும் விரைவில் ஒரு படம் விமர்சனம் தருவீங்கனு நம்புகிறேன்.
இந்த படம் நீங்க கண்டிப்பா பார்க்கனும்..இது எனது வேண்டுக்கோள்.
உங்க பரிந்துரையில் பார்த்த Fanaa படம் நல்ல பார்வையாக அமைந்தது.மீண்டும் நன்றி.
உங்கள் பதிவைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரமிருப்பின் பார்க்கவும்
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/
என்னையும் ஒரு பதிவனாக என் எழுத்தையும் நன்று எனக்கருதி அறிமுகம் செய்து வைத்தமைக்கு என் இதயம் கூறும் நன்றிகள்..சகோ..மீண்டும் வாருங்கள்..
Deleteரோமன் பொலான்ஸ்கியின் பியானிஸ்ட் படம் என் ஆல்டைம் பேவரைட்களில் ஒன்று. சற்றுப் பொறுமையாகப் பார்க்க வேண்டும், இருந்தாலும் நல்ல படம் என்பது உங்களின் விமர்சனம் மூலம் தெரிகிறது குமரன். அவிசியம் பார்த்துவிட முயல்கிறேன். நன்றி.
ReplyDeleteசில வேலைகளில் பிஸியாக இருப்பதால் அடிக்கடி பதிவுலக பக்கம் வர முடிவதில்லை..நிறைய நல்ல பதிவுகளை இதனால் மிஸ் செய்கிறேன் என நினைக்கும் பொழுது கவலையாக உள்ளது..பின்னூட்டத்துக்கு தாமதமாக ரிப்லை செய்வதற்கும் அதுவே காரணம்..
Deleteசார்..தங்களது வருகை எப்போதுமே ஓர் ஊக்கம்..முதுகை தட்டிக் கொடுத்து நானும் இப்பதிவுகில் இன்னும் நின்றுக் கொண்டிருப்பமைக்கு ஒரு இன்ஸ்பிரஷன்..நீங்க படம் பாருங்கள்..பியானிஸ்ட் அளவுக்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய படமே..நன்றி..
அருமையான விமர்சனம் குமரன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநண்பரே..பிளாகிங் பக்கம் வருவது குறைந்துவிட்டது..நேரம் கிடைத்தால் மட்டுமே வருகிறேன்..தாமதமான ரிப்லைக்கு மன்னிக்கவும்.
Deleteவருகைக்கு நன்றிங்க நண்பா..தொடர்ந்து வாங்க..படமும் பாருங்க.
லேட்டா வருவேன்.. ஆனா வராம இருக்க மாட்டேன்.. கொஞ்ச நாள் ப்ளாக் எதுவுமே பாக்கல நண்பா.. புது படங்கள் பத்தி தான் எல்லாரும் எழுதுவாங்களே.. தெரியாத விசயத்த சொல்றது தான் முக்கியம்.. அத நீங்க பண்றீங்க.. இந்த படம் கேள்வி பட்டு பாகம விட்டுட்டேன்.. Remind பண்ணதுக்கு நன்றி..
ReplyDeleteநண்பரே...இங்கேயும் இதே நிலைதான்..பிளாக்கிங்க் பக்கம் வருவதற்கு டைம் போதுவதில்லை..அதனால் மன்னிக்கவும்..
Deleteஉங்க வருகை எப்போதும் முக்கியம்..நீங்க வந்து படித்து கருத்து பகிர்ந்ததில் சந்தோஷம்..மீண்டும் வாங்க..நன்றி.
நல்ல விமர்சனம் !
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
இனி தொடர்வேன். நன்றி !
உங்க வருகையில் மகிழ்கிறேன்..மிக்க நன்றி..
Deleteகண்டிப்பாக இணைக்கிறேன்..தங்களது கருத்துக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ.
ReplyDeleteஇப்போதுதான் சமீபத்தில் இந்தப் படம் பார்த்தேன். அற்புதம், படத்தின் இறுதிக்காட்சிகளில் நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு பிண்ணியெடுத்திருபார்கள் நால்வரும். கடைசி காட்சியில் அந்த செல்போன் மணி அடிப்பது, excellent touch :-)... நல்ல விமர்சனம், இன்னும் நிறைய எழுதுங்கள்!
ReplyDeleteஆனந்தன் நண்பா..தங்கள் வருகையே பெரிய பூஸ்ட்..படம் நீங்கள் பார்த்து ரசித்ததில் சந்தோஷம்.நீங்கள் கூறிய கடைசி காட்சிகளை நானும் ரசித்தேன்.கருத்து பகிர்ந்தமைக்கும் வருகைக்கும் நன்றிங்க..
Deleteமிகவும் அற்புதமான படம். Christopher Waltz நடிப்பு மிக அருமை.
ReplyDeleteInglourious basterds பார்த்தவுடன் அவரின் நடிப்பை பற்றி உயர்ந்த அபிப்பிராயம் உண்டு,
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.
http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html
நண்பா வருகைக்கு நன்றி..பதிவுகள் சில படித்தேன்..அருமை..பிளீஸ் தொடருங்கள்.
Delete