Tuesday 8 May 2012

Mysterious Island (1961) : மர்மத்தீவில் மாட்டித்தவிக்கும் மனிதர்கள்

Film : Mysterious Island  Year : 1961
Country : United States       Rating : PG
Director : Cy Endfield
Writers : Jules Verne (Novel), Screenplay : John Prebble, Daniel B. Ullman, Crane Wilbur
Stars : Michael Craig, Joan Greenwood and Michael Callan

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சில ராட்சத சண்டை காட்சிகள், பெண் கவர்ச்சி உடைகள் என இருப்பதால் 10 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களுடன் பார்ப்பது நலம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சாகச திரைப்படங்களின் மீதான எனது தாகம் சின்ன வயதில் தொடங்கியது.புதையல், தனித்துவிடப்பட்ட மர்ம தீவுகள், வினோதமாக மிருகங்கள், அங்கிருந்து தப்பிக்க திட்டங்கள் போடும் மனிதர்கள் என பலத்தரப்பட்ட அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை, இயக்குனர் யார், நடிகர்கள் யாவர் என்று எதுவுமே தெரியாது பார்த்த அனுபவங்கள் ஏராளம்அத்தனையும் சுவாரஸ்யமானவை.இன்றளவும் மனதோரம் மகிழ்ச்சியை தருபவை.அதனால்தான் என்னவோ தெரியவில்லை, நாவல்கள், சிறுக்கதைகள் என்று வாசிக்கும் சமச்சாரங்களும் சாகசங்கள் அதிகம் உள்ளவையாகவே மாறிப்போனது. 

பிரபல எழுத்தாளர் டேனியல் டெஃபோவ் அவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த ரோபின்சன் குருசோவ் நாவலை பற்றி ஏற்கனவே காஸ்ட் எவே திரைப்பார்வையில் சொல்லியிருந்தேன்.இதுவரை படித்த புதினங்களில் மனதுக்கு நெருக்கமான ஒன்று.அதற்கு பிரதான காரணமும் சாகசங்கள்தான்அந்த கதை கொடுத்த தாக்கத்தில் இணையத்தில் தேடிய போது, மிஸ்டிரி ஐலண்ட் என்னும் Jules Verne என்பவர் எழுதிய நாவலும் அதனது தழுவலில் அதே தலைப்பில் வந்த ஆங்கில திரைப்படத்தை அறிய நேரிட்டது.கதைச்சுருக்கம் கொடுத்த அதே ஆவலோடு உடனே தரவிறக்கம் செய்து பார்த்த போதுதான் மனம் நிம்மதி அடைந்தது.

==========================================================================
கிளர்ந்தெளுகின்ற கடல் கொந்தளிப்பை காட்டிப்படியே கிரடிட் கார்டு ஓட, தீவிர இசையோடே அழைத்துச் செல்கிறது திரைப்படம்.

 கதை நகரும் ஆண்டு 1885.அது அமெரிக்க நாட்டு சிறைச்சாலை, சுற்றியும் புகை, வெடிகுண்டுகளின் சத்தங்கள் நிறைந்த புயலில் போர் நிகழ்கிறது.முன்னமே போட்டு வைத்த திட்டத்தோடு, போரில் கைது செய்யப்பட்ட ராணுவர்கள் சிலர் தப்பிக்க ஆயுத்தமாகின்றனர்.கேட்ப்பார் அற்று கிடக்கும் பெரிய பலூனில் தப்பித்திட வேண்டும் என்பதே அவர்களது திட்டம்.சுமார் நான்கு பேர்கள் கொண்ட குழுவுக்கு தலைமை தாங்குகிறார் சைரஸ் ஹார்டிங்..காவலர்களுடனும் புயலுக்கு இடையிலான வலுவான போராட்டத்துக்கு பிறகு, வெற்றிக்கரமாக தப்பிக்கின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் பெரியளவில் அறிமுகமில்லாத அந்த ஐவரும் பலூனில் ஏற்பட்ட கோளாராலும் பேய்ப் போன்ற புயலாலும், ஆள் நடமாட்டமே இல்லாத தனித்தீவில் தனித்து விடப்படுகின்றனர்.வரைப்படமும் இல்லை..எந்த வித யூகிப்பும் இல்லை..எங்கே இருக்கிறோம் என்று தெரியாது அலைகின்றனர்.உண்மையை சொல்ல வேண்டுமெனில் தீவுக்குள் அவர்கள் கொடூரமான ராட்சத அபாயங்களுக்குள் சிறை வைக்கப்படுகின்றனர்.ஆம்..பல கொடிய மிருகங்கள் வாழும் தீவது.பற்றாதக் குறைக்கு எரிமலைகள் வேறு.

உணவு, ஆயுதங்கள், போதுமான தேவைகள் என்று யாதும் அற்ற அந்த மர்மத்தீவில் அகப்பட்ட அந்த ஐவரின் நிலைமை என்ன ? அவர்கள் தப்பித்தனரா ?? அல்லது விலங்குகளுக்கு பலியானார்களா ? என்பதை திரையில் பார்த்து அறிந்துக்கொள்வதே சிறந்த வழி.
==================================================================================

ஹாலிவுட் திரையுலக ஸ்பெஷல்/விஸுவல் எஃபெக்ட்ஸ் வரலாற்றில் Ray Harryhausen என்றுமே தவிர்க்க முடியாதவர்.பல புகழ்பெற்ற சாகச, ஃபேண்டசி திரைப்படங்களுக்கு பக்கப்பலமாக இருந்து பல மாய ஜால வித்தைகளை புகுத்திய ஒரு மேதை.இன்றைய தேதியில் நாம் ரசித்துப்பார்த்து ஆஹா, ஓஹோ என்று சொல்லி வியப்படையும் அனிமேஷன், 3டி, கிராஃபிக்ஸ் காட்சிகளை அன்றே தனது திறமையால் நம்ப மறுக்கின்ற வகையில் பயன்படுத்த முயற்சி செய்து வெற்றிக்கண்டவர்.Jason and the Argonauts (1963), Clash of the Titans (1981) போன்ற படங்களே அதற்கு மிக சிறந்த சாட்சி.

  அக்கலைஞனின் கைத்தேர்ந்த விஸுவல் எஃபெக்ட்ஸ் ஆளுமைக்கு இன்னொரு உதாரணமாக மிஸ்டிரி ஐலண்ட் படத்தை குறிப்பிடலாம்.ஒட்டு மொத்தமாக ஒரு கும்பலயே விழுங்கிவுடும் உடல் அளவில் பழங்காலத்து பறவைகள், வண்டுக்கள், ஆளைக் கொல்லும் நண்டு என்று அதிசயங்களை விருந்தாக்கி பார்வையாளரை கட்டுக்குள் வைக்கிறார்.மேலும், தென் அமெரிக்காவில் வாழ்ந்து அழிந்ததாக கருதப்படும் Phorusrhacos என்ற இராட்சத பறவையை வடிவமைத்து திரைக்குள் கொண்டு வந்து மோதும் காட்சியில் ஆச்சரியபட வைக்கிறார்..அவ்வளவு பிரமாண்டம்.

 இப்படி படம் முழுவதும் சிறப்பம்சங்கள்.நெஞ்சை அள்ளும் வண்ணம் Wilkie Cooper - இன் ஒளிப்பதிவோடு ஒவ்வொன்றும் அழகாகவும் பிரமிப்பூட்டும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.. அதற்கு இன்னும் ஒரு கூடுதல் வலுவாக நம் எல்லோருக்கும் அறிமுகமாக பெர்னார்ட் ஹெர்மனின் பின்னனி இசை.மனிதர் எப்படிதான் சஸ்பென்ஸ், ஆக்சன், மர்மம், ஃபேமிலி என்று இத்தனை வகை சினிமாக்களிலும் சிறப்பாக செய்கிறாரோ தெரியவில்லை.சரியா முதல் காட்சி தொடங்கியது முதல் வரும் அந்த படு வேகமான இசை, படத்தை மேற்க்கொண்டு பார்க்க வேண்டிய தீவிரத்தை வழங்கிவிடுகிறது.

ஸ்பெயின் நாட்டில் படம் பிடிக்கப்பட்ட இத்திரையில் Michael Craig, Joan Greenwood and Michael Callan ஆகியோர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்கிருப்பவர் Zulu (1964), Hell Drivers (1957), Zulu Dawn (1979) போன்ற படங்களை எடுத்த Cy Endfield (1914-1995) ஆவார்.நாவலின் அசலான கதையை வைத்துக்கொண்டு சில பெண் கதாபாத்திரங்கள், காட்சிகள் என சிலவற்றை கூடுதல் படுத்திட விறுவிறுப்பாக சுமார் ஒன்றைரை மணி நேரம் போவதை தெரியாது கொண்டு சென்ற இயக்குனருக்கும், படக்குழுவினருக்கும் நன்றிகள் பல சொல்ல வேண்டும்

பொதுவாக ஹாலிவுட் சாகச, ஆக்சன் படங்களில் லோஜிக்கை பார்ப்பது பாறைக்குள் சிக்கித் தவிப்பதை போல.எவ்வளவுதான் சிந்தித்து பார்த்து ரசித்தாலும் அவர்கள் விரிக்கின்ற வலையில் போய் விழுவதென்பது அரிதான காரியம்.காரணம் அது இன்று தொடங்கியது அல்ல, எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வந்தவை.ஆரம்ப காலத்தில், நாவல்கள், சிறுக்கதைகள் என்றப்படியே தொடங்கிய இது, திரைப்படங்களில் தொற்றிவிட்டது..கற்பனைகளுக்கு எட்டாத கதைக்களங்களும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத வகையில் காட்சியமைப்புகளும் என பலவற்றை காண்பித்து லாஜிக் ஓட்டைகள் எல்லாவற்றையுமே அடைத்துவிட முயற்சி செய்வார்கள்.அது பெரும்பாலான வயதினர்களும் ரசிக்கும் படி அமைந்துவிடுவதே அமெரிக்க சாகச, ஆக்சன் படங்களுக்கு மிக பெரிய பலம் என்று நினைக்கிறேன்.

 அந்த வரிசையில் மிஸ்டரி ஐலண்டும் அடங்கும்..ஏன், எப்படி என்ற பல கேள்விகளை மறந்துவிட்டு இந்த படத்தை பார்த்தோமானால், ஒரு அழகான பொழுது போக்கு அம்சமாக உருவாகிவிடும்.. குழந்தைகளோடு பாருங்கள்.குறைகள் பல இருப்பினும் ஜாலியாக பார்த்து நன்றாக ரசிக்கலாம்

IMDB : 6.8 / 10
MY RATING : 6.0 / 10
Mysterious Island : Fantasy Island 
====================================================================== 
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்.மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

44 comments:

  1. மேற்ச்சொன்ன விமர்சனத்தை படித்துட்டு படம் பார்க்கலாம் என்று யாராவது நினைத்தாலே நான் செய்த புண்ணியம்.டிவிடி எல்லாம் தேடி நீங்களே உங்கள தொலைத்துக்காதிங்க.டவுன்லோடு போட்டு பாருங்க..சுமாரான படம்-தான்..வருகிறேன்.

    இப்படிக்கு குமரன்.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம், ஒரு அட்வஞ்சர் திரைப்படத்தின் அறிமுகமும் கூட.

    இது போன்ற நல்ல வித்தியாசமான படங்களினால் தான் ஹாலி வூட் திரைப்படங்கள் உலகளவில் பிரபலம் ஆனது. இன்றும் சிறந்து விளங்குகின்றது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகையே மிகப்பெரிய ஒன்று..தொடர்ந்து ஆதரவு அளிக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்.படம் முடிந்தால் நீங்களும் பாருங்கள் நண்பரே..

      Delete
  3. Jules Verne-வின் journey to the center of the earth சிறுவயதில் விரும்பி வாசித்திருக்கிறேன்.. விறுவிறுப்பாக கதையை கொண்டு செல்லும் வித்தையில் வல்லவராயிற்றே! அப்போ இந்தப் படமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்க வேண்டும். ரசித்து படத்தை பார்த்திருக்கிறீர்கள் என்று எழுத்தே காட்டிக் கொடுத்து விடுகிறது..

    ஆனால்..
    தவறாக எண்ணவேண்டாம். எனக்கு இந்த மாதிரி பழயை கிராஃபிக்ஸ் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமே இல்லை.. இந்தப் படத்தை பார்ப்பேனா தெரியாது. இருந்தாலும் அறிமுகத்துக்கு நன்றி!

    யதார்த்தமான கதையம்சத்தைக் கொண்ட படங்களை அதன் ஃபீல் கெடாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். ஆனார் இப்படியான கற்பனைக் கதைகளை விஷுவல் எஃபெக்ட்ஸின் வளர்ச்சிக்கேற்ப அப்பப்போ ரீ-மேக்கிக்கொண்டே இருப்பார்கள்.. அப்படி இந்தப் படமும் வந்தால் பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, தாங்கள் இவ்வளவு தூரம் வந்து கருத்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..ஹாரர், அறிவியல் கதைகள், படங்களுக்கு பிறகு என்னை கவர்ந்த ஒரு விடயம் என்றால் சாகசம்தான்..இந்தியானா ஜோனஸ், லார்ட் ஒஃப் தெ ரிங்க்ஸ் போன்ற படைப்புகளை யாரால் மறக்க முடியும் ? சொல்லுங்கள்..? அதனால்தான் அட்வெண்ட்சர் படம் என்றாலே சிறு வயது முதல் பிரியம்.அதான் இந்த படத்தையும் விட்டு வைக்கவில்லை.

      @@ ஆனால்..
      தவறாக எண்ணவேண்டாம். எனக்கு இந்த மாதிரி பழயை கிராஃபிக்ஸ் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமே இல்லை.. இந்தப் படத்தை பார்ப்பேனா தெரியாது. இருந்தாலும் அறிமுகத்துக்கு நன்றி! @@
      இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிற நண்பரே..அது தங்களது கருத்து, விருப்பம்.கதைகள் ஏதும் கிடைக்காமல் இந்த படத்தை கண்டிப்பாக இன்னும் சில ஆண்டுகளில் ஹாலிவுட்க்காரர்கள் ரீமேக் செய்வார்கள்.அப்பொழுதும் நீங்களும் நானும் சேர்ந்தே படம் பார்க்க வேண்டும் : ரசிக்க வேண்டும் : விமர்சிக்க வேண்டும்..(ரொம்ப ஆசைப்படுறேனோ !!??)

      மீண்டும் சந்திக்கலாம்..வருகைக்கும் நன்றி.வணக்கம்.

      Delete
    2. லார்ட் ஒஃப் தெ ரிங்க்ஸ் அப்படினு சொல்லியோன ஞாபகம் வருது..இப்ப கருந்தேள் சாரோட வலையிலதான் இருக்கேன்..ஈபூக் ரிலீஸ் பண்ண போறாராம்..ரொம்ப நன்று.

      Delete
    3. ஜுன் 4க்குத்தான் இங்கேயும் உலகமக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் நண்பா!

      Delete
    4. நானும் உலக மக்களில் ஒருவந்தானுங்கோ..காத்திருக்கிறேன்.

      Delete
  4. //பெண் கவர்ச்சி உடைகள் என இருப்பதால் 10 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களுடன் பார்ப்பது நலம்//

    இது என்ன சுத்த வடிகட்டின லாஜிக்? கவர்ச்சி ஆடைகள் இருந்தால் பெற்றோர் இல்லாமத் தானே பார்க்கணும்?

    சரி ... அப்படியே சேர்ந்து பார்த்தால் ஆடைகள் கவர்ச்சி இல்லாமல் தெரியுமோ?

    ReplyDelete
    Replies
    1. நண்பா..இந்த மாதிரி சில பிட்டுக்களை போட்டால்தான் மேற்க்கொண்டு சிலர் படிக்கவே தொடங்குகிறார்கள்..பதிவுலகத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா.இல்லனா பாருங்க..இது வரைக்கும் எத்தனை படங்கள் எழுதி கிழிச்சிருக்கேன்.அதுல ஒன்னுலாச்சும் இப்படி போட்டுருப்பேனா.? கமான் டெல் மீ..

      Delete
  5. IMDB டாப் லிஸ்டில் இல்லாத படங்களைப் பார்ப்பது எனக்கு குதிரைக்கொம்பு பிடிப்பது போலத் தான். ரொம்ப சிரமப்பட்டே மூட் கொண்டுவந்து நேற்று டாலர்ஸ் ட்ரைலாஜி பார்க்கத் தொடங்கினேன்.

    கிட்டத்தட்ட 700 படங்கள் என் தரிசனத்திற்காக ஹார்ட்டில் தவமிருக்கின்றன. அவற்றிற்கு வரம் கொடுத்தபின் பார்க்கலாம். :) :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பாருங்கள்..வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  6. சிறப்பான பகிர்வு... படம் பார்த்துவிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் சகோ..வருகைக்கு நன்றி.

      Delete
  7. அன்புத்தம்பி...
    நானும் உன் வயதில் இது போன்ற படங்களை மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன்.
    இப்போது லார்டு ஆப் த ரிங்ஸ்ஸே என்னால் ரசிக்க முடிவதில்லை.

    இந்தப்பதிவில் உனது நடையில்... சில சாகசங்கள் செய்ததை ரசித்தேன்.
    வாழ்க...வளர்க...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா...தங்களது வருகையில் மகிழ்கிறேன்.
      தங்களது ஆசிர்வாதங்களும் பாராட்டுக்களும் கட்டாயம் என் வாழ்வில் தேவை..உண்மையிலேயே நீங்கள் உலக சினிமா ரசிகர்தான்.நான் பார்த்தவரையில் சிறந்த ரசிகர்.வணக்கம்.

      Delete
  8. கண்டிப்பாக இணைக்கிறேன் உறவே..வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. தனித்துவிடப்பட்ட மர்ம தீவுகள், வினோதமாக மிருகங்கள், அங்கிருந்து தப்பிக்க திட்டங்கள் போடும் மனிதர்கள் என பலத்தரப்பட்ட அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை, இயக்குனர் யார்,நடிகர்கள் யாவர் என்று எதுவுமே தெரியாது பார்த்த அனுபவங்கள் ஏராளம். அருமையான வார்த்தை பிரயோகம்.உங்களின் இந்த வார்த்தைகள் படத்தை பார்க்க தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பாருங்கள் சார்..60 களில் வந்த படம்..நீங்கள் எதிர்ப்பார்க்கும் விடயங்கள் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.பட் வாய்ப்பு கிட்டின் பாருங்கள்.வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
      விமர்சனம் படித்தேன்..தூள் கட்டுறீங்க..தொடருங்கள்..

      Delete
  10. நல்ல விமர்சனம் ...அறிமுகத்துக்கு மிக்க நன்றி...ஆனா எனக்கும் பழைய கிராபிக்ஸ் படங்கள் மேல் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. இருந்தாலும் பார்க்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, தங்களது வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி..படம் உங்களுக்கு கிடைப்பின் பாருங்கள்.மற்றப்படி தேடிச்சென்று பார்க்கும்படியான படம் இதுவல்ல.

      Delete
  11. இந்த படத்தை பார்த்திருக்கிறேன். கிராபிக்ஸ் வசதிகள் இல்லாமலேயே தந்திரகாட்சிகளை அற்புதமாக தந்திருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க பாலா சார்..நீங்களும் படம் பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி

      Delete
  12. நானும் வலையில் தேடிப் பார்க்க முயற்சிக்கிறேன் குமரன். படம் வெளியான ஆண்டு 1961. கதை நகர்வது 1985ல் என்று சொல்லியிருக்கீங்க. அட்வான்ஸ் தாட்டில் வெளிவந்த அக்கால சயன்ஸ் பிக்ஷனா இது? இருந்தாலும் ஒரு காமிக்ஸ் புக் படிக்கும் சுவாரஸ்யம் கிடைக்குமென்று தோன்றுகிறது. பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஐஐயோ சார்..நல்ல வேளை ஞாபகம் மூட்டிட்டீங்க..நான் தவறு செய்துவிட்டேன்..அது 1985 இல்ல சார்..1885..இதோ இப்பவே மாற்றிவிடுகிறேன்.

      தங்களது வருகையில் மகிழ்கிறேன்..படம் இணையத்தில் கிடைக்கிறது சார்..நான் டைரக் லிங்க்-லதான் டவுன்லோடு போட்டேன்..நீங்க எதுல பண்ணுவீங்க..? நானும் தேடி அப்புறம் இங்க ரெண்டு லிங்க் கொடுக்கிறேன் சார்.
      வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
    2. பொதுவா நான் Torrent மூலமா டவுன்லோட் பண்ணுவேன் குமரன். சிலசமயம் டைரக்ட் லிங்க்லயும் பண்றதுண்டு. எதுவானா என்ன? நமக்கு விஷயம் கிடைச்சா சரி. முடிந்தால் லிங்க் கொடுங்கள். மகிழ்வேன் (தேடற நேரம் மிச்சமாச்சே...) நன்றி.

      Delete
    3. சார்,,வருகைக்கு மீண்டும் நன்றி..கண்டிப்பாக டவுன்லோடு லிங்க்கை கிழே தருகிறேன்..

      Delete
    4. Mysterious Island (1961) Dvdrip {683MB}
      http://rapidshare.com/files/65009777/Mysterious_Island__1961__mechodownload.part1.rar
      http://rapidshare.com/files/64989223/Mysterious_Island__1961__mechodownload.part2.rar
      http://rapidshare.com/files/64992242/Mysterious_Island__1961__mechodownload.part3.rar
      http://rapidshare.com/files/64995314/Mysterious_Island__1961__mechodownload.part4.rar
      http://rapidshare.com/files/64998612/Mysterious_Island__1961__mechodownload.part5.rar
      http://rapidshare.com/files/65001827/Mysterious_Island__1961__mechodownload.part6.rar
      http://rapidshare.com/files/65005121/Mysterious_Island__1961__mechodownload.part7.rar
      http://rapidshare.com/files/65005589/Mysterious_Island__1961__mechodownload.part8.rar

      Mysterious Island (1961) Dvdrip
      http://www.netload.in/datei1POTUS5Muh/mysterious island 1961.avi.htm

      Torrent : http://kat.ph/mysterious-island-1961-dvdrip-sirius-share-t512744.html

      Delete
    5. டோரன் டவுன்லோட் ‌இப்போது போட்டு விட்டேன். எனக்காக பொறுமையா அக்கறையாத் தேடி லிங்க் கொடுத்தீங்களே... ரொம்ப சந்தோஷமா இருக்கு. நனறிப்பா!

      Delete
    6. சார். இதுல பெருசா என்ன இருக்கு..தங்களை போன்ற பெரிய சிறந்த பதிவர்களின் நட்பு எனக்கு கிடைத்ததே பெரிய விஷயம்,,டவுலோடு போட முடிவதில் மகிழ்ச்சி..டைம் கிடைக்கும் போது பாருங்கள்.சுமாரான படம்தான்.உங்களுக்கு பிடிக்கலாம்/.வருகைக்கு மீண்டும் நன்றிங்க.

      Delete
  13. அடடே.. புதுசா சைட்பார்-விட்ஜெட்லாம் போட்டிருக்கீங்க.. உங்கப்ளாக் ஸ்டைலே வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது போலும்.. என்ன இப்போ ஓப்பன் பண்ணினால் பதிவுல முக்கால்வாசிதான் தெரியுது. It's all right.. நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. இருக்கிற டைம்-ல ஏதாச்சம் செய்ய வேண்டிருக்கு நண்பரே..அதான் இந்த வேலை எல்லாம்.கொஞ்ச நாள் இருக்கட்டும்..எடுத்தாலும் எடுத்துருவேன்..உங்களுக்கு பிடித்ததில் மனம் மகிழ்கிறது.வருகைக்கு மீண்டும் நன்றி.

      Delete
  14. என் வலைப்பூவில்[http://bullet-pandi.blogspot.in] உங்கள் பின்னூட்டம் கண்டேன்.. கருத்துக்கு மிக்க நன்றி நண்பா... நிறைய எழுதவேண்டும் என்கிற ஆசையிருக்கிறது, இனி நிறைய எழுதுவேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..தங்களது விமர்னங்கள் சுருக்கமாக சுலபமாக அழகாக உள்ள்து..விரும்பி படித்தேன்.இனி அடிக்கடி இந்த பக்கம் வாங்க நண்பா..தங்களை போன்றவர்களின் ஆதரவு கட்டாயம் தேவை.

      Delete
  15. படத்தின் பெயரே எப்படிப்பட்ட படம் என்று சொல்கிறது... பழைய படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் சுமாராகத்தான் இருக்கும் போல...

    ReplyDelete
    Replies
    1. படம் வந்து 51 வருடங்கள் ஆகப்போகுது சார்..என்னை கேட்டால் ஓகே ரகம்தான்..ரொம்பவும் எதிர்ப்பார்த்து பார்த்தமைக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை..கிராஃபிக்ஸ் காட்சிகள் என்பது படத்தில் கொஞ்சம்தான்.ஒரு தீவு, அங்கு மாட்டித்தவிக்கும் ஒரு குரூப்..அதுதான் கதை..அவர்கள் எப்படி அங்கு வாழ்கிறார்கள் ? எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே திரைக்கதை..
      வாய்ப்பு கிட்டின் பாருங்கள்.வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  16. இதுமாதியான மர்ம கதைகள் எனக்கும் பிடிக்கும்.. ஆனால் அளவுக்கதிகமான கிராபிக்ஸ் வகை படங்கள் என்னை கவர்வதில்லை..

    இதை பார்த்திடுவோம்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆக்சன், டிராமா, திரில்லர் படங்கள் பார்த்து கொஞ்சம் அலட்டிப்போன நிலையில், ஏதோ வித்தியாசமா இருக்குமோ என்று நம்பி பார்த்த படமிது..கதையை முதலில் படிக்கும் போதே மிகவும் கவர்ந்தது.அதை அந்த காலத்தில் படமாக மாற்ற வேண்டுமென்பது கடினம்தான்.அதை ஓரளவு நிறைவேற்றியுள்ளார்கள்.

      படத்தில் கிராஃபிக்ஸ் என்று சொல்வதை விட ஸ்டோப் மோஷன் என்ற அன்மேஷனில் ஒரு யுக்தியை பயன்படுத்திதான் ஸ்பெஷல் காட்சிகளை உருவாக்கிருக்கிறார்கள்.டைம் கிடைத்து போரடித்தால் என்றாவது பாருங்கள்.தேடி பிடித்து பார்க்கும்படியான சினிமா இதுவல்ல.

      தங்களது வருகையில் மகிழ்கிறேன்..கருத்து பகிர்ந்தமைக்கு மன்மார்ந்த நன்றி நண்பரே.

      Delete
  17. என்ன நண்பா ! நல்ல இருக்கிறியா? விமர்சனம் அருமை. ஆனால் பழைய கிராபிக்ஸ் படம் என்பதால் பார்க்கலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் நல்லாத்தான் இருக்கேன்..என்ன ஒரு பதிவும் காணோமே..லீவு வுட்டாச்சா ?? விரைவில் வாங்க...
      வருகைக்கும், வாசித்து கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றிகள் பல.

      Delete
    2. லீவு எல்லாம் இல்லை நண்பா, எனது பல்கலைகழக வேலைகளில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன், அவளவு தான். ஒரு தொகுதி பதிவுகள் தயார் நிலையில், எழுத நேரம் தான் இல்லை. அதை விடுங்கள் எனது அடுத்த பதிவில் கலாய்க்கப்படுவதுக்கு தயாராக இருங்கள். அதாவது எனது கடைசி பதிவின் பாகம் இரண்டு.

      Delete
    3. சரி நண்பா..ஸ்லோவா ஆனாலும் பரவால ஒரு கலக்கல் பதிவோட வாங்க..சேர்ந்து கலாய்க்கலாம்..மீண்டும் வருகைக்கு நன்றி.

      Delete
  18. விமர்சனம் நன்று...பார்க்கலாமா???

    ReplyDelete
  19. வாங்க சகோ..வருகைக்கு மிக்க நன்றி..படம் உங்களுக்கு பிடிக்குமா என்பது சந்தேகம்தான்..டைம் கிடைத்தால், பாருங்க.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...