Follow by Email

Thursday, 19 January 2012

Suspicion (1941) : கணவன் மீது சந்தேகம்..

ஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) என்ற தொடரின் முந்தய முதல் பாகத்தை படித்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன் : சினிமாவின் புது மொழி 

வழக்கமாக பார்க்கும் ஹிட்ச்காக்கின் திரைப்பட வரிசையில் பார்த்த ரொமாண்டிக் சைக்கலோஜிக்கல் திரில்லர் வகையை சார்ந்த இந்த படம் இன்றைய பார்வையாக
....


Film : Suspicion    Year : 1941
Country : United States       Rating : PG
Director : Alfred Hitchcock
Writers : Novel : Anthony Berkeley, Screenplay : Samson Raphaelson, Joan Harrison & Alma Reville
Stars : Joan Fontaine, Cary Grant, Sir Cedric Hardwicke
Awards : Won Oscar. Another 2 wins & 2 nominations See more awards »

சஸ்பிஷன் - ஹிட்ச்காக்கின் இயக்கத்தில் காதல், காமெடி, சஸ்பென்ஸ், திரில்லர் பல அம்சங்களை உள்ளடக்கி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.ரெபெக்கா படத்தின் மூலம் பிரிட்டன் சினிமாவிலிருந்து ஹாலிவுட்டில் காலடி எடுத்த வைத்த ஹிட்ச்காக் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கி தந்த படமாக இதனை கூறலாம்..சைக்கோ படத்தை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும், ஹிட்ச்காக்கின் கலை நேர்த்தியை பற்றி (எனக்கு அத பத்தி ஒன்னுமே தெரியாது)..அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னமே தனது தனி மற்றும் திறம்பட்ட இயக்கத்தினால் மாஸ்டர்பீஸ் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த படைப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக்கி தந்துள்ளார்..

இந்த படத்தை பார்க்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்க்கை பதிவிறக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம்..

+++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++

சஸ்பிஷன் திரைப்படத்தின் கதைச்சுருக்கம் :
==============================================

அருமையான காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக மறைத்துவைத்திருக்கும் படமிது..

Johnny Aysgart (Cary Grant), ஓர் அழகான பொறுபற்ற வாலிபர்.. சூதாட்டத்தில் பணத்தை அள்ளி கொட்டி எந்த வேலையும் செய்யாது, அப்படியே செய்தாலும் நிலையாக இல்லாது வாழ்ந்து வருபவர்.ஒரு நண்பர் என்று யாரையும் விடாது கடனை வாங்கி விளையாட்டாக பொழுதை  போக்கிவருபவர்...


தற்ச்செயலாக Lina McLaidlaw (Joan Fontaine) என்பவரை சந்திக்க, அவருடன் காதலில்  விழுகிறார்.. ஜோனியின் பேச்சிலும் செயல்களிலும் கவர்ந்திட இருவரும் முழுமையாக பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்துக்கொள்கின்றனர்.இதில் லீனா, பணக்கார குடும்பத்தை சேர்ந்த அழகான இளம் பெண்.திருமணத்துக்கு பிறகு, ஜோனியின் சுய உருவம் லீனாவுக்கு தெரிய வருகிறது..இவர் இப்படி பிறரை நம்பி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பதை எண்ணி வருந்த வேலைக்கு செல்கிறார் Johnny..."போன மச்சான் திரும்பி வந்த கதையாக" அந்த வேலையும் போக இதை தன் மனைவியான லீனாவிடமே மறைக்க செய்கிறார்.இதனை அறிந்துக்கொள்ளும் லீனாவுக்கு
மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனஎப்பொழுதும் பொய், சூதாட்டம் என்று போக்கிரித் தனமாக இருந்து வரும் தன் கணவனின் மீது பல தவறான எண்ங்களை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்..அது தன் கணவன் ஒரு குற்றவாளி..ஏன் கொலைகாரன் என்றுக்கூட நம்பும் அளவுக்கு போகிறது.ஜோனி தனது நெருங்கிய பணம் வசதி உள்ள நண்பனை கொன்றதாக கூறிக்கொண்டு காவல்த்துறையும் வர, பல மன உளைச்சலுக்கும் சந்தேகத்துக்கும் ஆளாகிறார்..பணத்துக்காக எதையும் இவர் செய்வார் ??? என்று நினைத்துக்கொள்ளும் லீனாவுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சியாக இவர் தன்னையே.."ஐய்ய்யோஓ?????"" (லீனா பணக்காரர் வேற என்னவாக இருக்க போகிறது.."கொலைதான்))

சஸ்பிஷன் திரைப்படத்தை பற்றிய சில
=========================================
சுவாரஸ்யங்கள்..
===================
  
சஸ்பிஷன் என்ற வார்த்தைக்கு தமிழில் சந்தேகம் என்று மொழி பெயர்க்கலாம்..அதற்கு சற்றும் குறையாத வகையில் சந்நேகத்தை படம் முழுக்க திரைத்துளிகளாக பயன்படுத்தி செம்மையான ஒரு சஸ்பென்ஸ் படத்தை காலம் கடந்தும் மனதில் நிற்க்கும்படி செய்துள்ள இயக்குனருக்கும் திரைக்குழுவினருக்கும் முதலில் பல நன்றிகள்..
===================

உலகத்திலேயே மிகப் பெரிய குணமாகாத நோயாக நான் நம்புவது சந்தேகத்தைதான்..
உலகத்தில் கொடிய நோய்களாக கருதப்படும் AIDS/HIV, Cancer போன்ற நோய்களுக்கு கூட முழுமையாக எதிர்க்காலத்தில் பரி பூரண குணமடையச் செய்யக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க செய்யலாம்..ஆனால்


இந்த சந்தேகம் ?? விடைகள் இல்லாத வினாவாகின்றது..இந்த சந்தேகம் என்ற ஒரு வார்த்தை மனிதருக்கு தூக்கம், நிம்மதி, அமைதி, சந்தோஷம் என்று வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் பறித்துக்கொள்கின்றது என்றே சொல்ல வேண்டும்..ஒரு முறை இச்சந்தேக நோய் நம்மை தொற்றுமெனில் தீர்ப்பது கடினம் என்பது என் தனிப்பட்ட கருத்து.இப்படிபட்ட சந்தேகத்தை மையமாக கொண்டு நம்மை படத்தினூடே அழைத்துச்செல்கிறார்கள் ஹிட்ச்காக்கும் அவரது திரைப்பட குழுவும்.சந்தேகங்கள் உருவாக கூடிய சந்தர்ப்பங்களையும் இதனால் ஏற்படும் விளைவுகளையும் மேலோட்டமாக அலசும் கதைக்களம் கொண்ட படைப்பிது..   
===============================

   நடிகர்களை குறைவான எண்ணிக்கையில் வைத்து காட்சிகளில் நீண்ட உரையாடல்களின் மூலம் சஸ்பென்சை கையாண்ட விதம் அருமை. லைவ் போட் படம் பார்த்தீர்கள் எனில் இதைவிட ஆச்சரியமாக இருக்கும்.வெறும் ஆறு ஐந்து கதாபாத்திரங்களில் அதுவும் ஒரே செட்டில் படத்தை எந்த குறையும் பெரியளவில் சொல்ல முடியாத வகையில் ஒன்றரை மணி நேரம் நம்மை இழுத்து அல்லது ஈர்த்துச்சென்றிருப்பார் ஹிட்ச்காக்..That Is Hitchcock.

டெக்னிக்கலை தாண்டி படத்தில் மிகப் பெரிய பங்கு நடிகர்களுக்குதான்..இந்த பொறுப்பை சரியான முறையில் 
ஓர் அனுபவமாக தந்திருக்கும் ஜோனி ஆய்ஸ்கார்த் என்ற கதாபாத்திரத்தில் கேரி கிரேண்டும் லீனாவாக ஜோஹன் ஃபோன்தைனும் கண்டிப்பாக பாராட்டதக்கவர்கள்..பணக்கார வீட்டு இளம் வயதினராவும், கல்யாணத்துக்கு பிறகு கணவனின் செயல்களில் சந்தேகப்பட்டு தட்டுதடுமாறி பதட்டபட்டு வருந்தும் மனைவியாகவும் வந்து, சிறந்த நடிப்பிற்க்கான ஆஸ்கரை ஃபோந்தைன் தட்டிச்சென்றது குறிப்பிடதக்கது.

அதற்கு இன்னொரு புறமாக கேரி கிரேண்ட், நடிப்பு வசனங்கள் என்று எல்லாவற்றிலும் //மென்மை கலந்த முதுமைப்பெற்ற நடிப்பில்// ஒரு புதுமையான நடிப்பை வழங்கியதோடு நேரற்ற மனநிலை உள்ளவராக வந்து கலக்குகிறார்..60 வருடங்களுக்கு முன்பே இப்படியெல்லாம் யோசித்து நடித்திருப்பார்களா என்ற வியப்பையும் கொடுக்கிறார்.."இவரு கொலையும் செய்வாறு" படம் போகிற போக்கில் நானும் சொன்னேன் என்றால் பாருங்களேன்.. 
==========================================    

1932 - ஆம் ஆண்டு Anthony Berkeley என்ற எழுத்தாளரின் கைவண்ணத்தில் உருவான Before the Fact (1932) என்ற நாவலை அடிப்படையாக கொண்டு சில மாற்றங்களுடன் எடுக்கபட்ட படம் சஸ்பிஷன் என்பது ஒரு சிறப்பு..
=================================================


லீனா மற்றும் ஜோனிக்கும் இடையில் இடம்பெறும் காதல் காட்சிகளும் உரையாடல்களும் இனிமையாக இருக்கும்..டிரைனில் முதன் முதலாக சந்தித்துக்கொள்ளும் காட்சி (டிக்கெட் மற்றும்  லீனாவிடம் பணம் கேட்கும் தருணங்கள்), இதற்கு அடுத்து சந்திக்கும் போதெல்லாம் MonkeyFace என்று சொல்லும் காட்சிகள் எல்லாமே ரசிக்கும் தன்மையில் இருக்கும்..மேலும் படத்தின் பிற்பாதியில் ஜோனி தோழனுடன் விளையாடும் எழுத்து விளையாட்டு என்று சில திரில்லான காட்சிகளை அமைத்திருக்கின்றனர்.                    
==================================================

ரோட்டென் டொமொதோஸில் 100%, ஐஎம்டிபியில் 7.5 என்று உலகளவில் விமர்சனங்கள் ரீதியில் நல்ல மதிப்பையும் வசூலையும் வாங்கி தந்த படமிது.
======================================================

எந்த படமும் முழுமையாக எல்லா வகையிலும் சிறப்பாக அமைவது கிடையாது என்பது என்னுடைய தனிபட்ட கருத்து..அந்த வகையில் முதல் காட்சியில் தொடங்கி டெக்னிக்கல் + கதைச்சொல்லல் என்று படம் திறமையாக செல்ல


இறுதி காட்சிகள் நம்மை படத்துடன் முழுமையாக ஐக்கியமாக மறுக்கிறது.. அதற்கு காரணம் யாரென்றும் ஏன் என்று தெரியவில்லை என்றாலும், இவ்வளவு நல்ல கதைக்கு இந்த மாதிரி ஒரு இறுதி முடிவு/காட்சிகளை தவிர்த்திருக்கலாம்..என்றும் இல்லாத வகையில் பார்த்த மற்ற ஹிட்ச்காக் படங்களோடு ஒப்பிடும்போது இது நிறையவே ஏமாற்றத்தை கொடுத்தது..

ஒரு வேளை இந்த முடிவு அன்றைய மக்களுக்கு ஏற்றாட் போல தயாரிப்பாளர்கள் அமைத்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு.என்ன இருந்தாலும் சொன்னாலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாதிரியான ஒரு முயற்சி நம்மை ஆச்சரியம்படவைக்க கூடியை என்று கூறினால் அது மிகையாகாது.
================================================================


இந்த படத்தின் இறுதி காட்சிகள் ஹிட்ச்காக்கின் விருப்பத்துக்கு எதிமாறாக எடுக்கப்பட்டதாம்.உண்மையில் தான் படத்தின் இறுதி முடிவை வேறு விதத்தில் எடுக்க திட்டமிட்டு சில கட்டாயத்தின் பேரில் மாற்றியதாக 1967 - ஆம் ஆண்டு பிரெஞ்சு திரைப்பட மேதை Francois Truffaut உடன் இடம்பெற்ற ஒரு உரையாடலில் ஹிட்ச்காக் குறிப்பிட்டுள்ளார்.மாற்றியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்னமோ. @@
==========================================================================

 சஸ்பிஷன் - ஒரு சாதாரண கதையை கொண்ட படம்..இதனை எழுத்தாளருடன் இயக்குனர் இணைந்து எடுத்திருக்கும் திரைக்காட்சிகள் காலத்தை கடத்து நம்மை சற்றுக்கூட விறு விறுப்பு குறையாது கைகளை கட்டி போடுகிறது..மொத்தமாக கூறின், இது எனக்கு பிடித்த ஹிட்ச்காக் படங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது..இறுதி காட்சிகளை கண்டுக்கொள்ளாது அல்லது முடிவை எதிர்ப்பாராது திரையில் கண் பார்வைகளை நகர்த்துபவர்களுக்கு ஒரு கிளாசிக் சஸ்பென்ஸ் திரில்லர் வகையிலான ஒரு விருந்து.


சஸ்பிஷன் : கணவனை சந்தேகிக்கும் மனைவிகளுக்கு (ஹி..ஹி..சாரி)


IMDB RATING : 7.5 / 10
MY RATING : 7.0 / 10 : Hitchcock's Classic Suspense..
Alfred Hitchcock's Special :
Trivia : படத்தில் Sealyham Terrier என்ற நாய் ஒன்று வரும்..இது ஹிட்ச்காக் அவர்களது சொந்த வளர்ப்பு பிராணியாம்..இதே நாய் இன்னொரு ஹிட்ச்காக் படத்திலும் வருமாம்..அந்த படம்?? (அப்ப எழுதும் போது சொல்கிறேன்).
Director Cameo : திரைப்படத்தின் உள்ளே 45 ஆவது நிமிடத்தில் வருகிறார்..எப்படி வருகிறார் ? யாராக வருகிறார் ? என்பதை படம் பார்த்தவர்கள் அல்லது பார்க்க இருப்பவர்கள் ஒரு ஃப்ரேம் விடாம நன்கு பார்த்து கீழே பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்..வடை..ச்..ச்..சே சாரி "" விடை "" : ஹிட்ச்காக் பற்றிய தனிப்பதிவில் கூடிய விரைவில்.
பின் குறிப்பு : ஒவ்வொரு படங்களையும் ஓரிரண்டு முறைகள் தரிசித்து கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே யோசித்து எழுதரனாலதான் பதிவுகள் பலவும் நீளமாக போவதாக எனது ஐன்ஸ்டின் முளை சொல்லிட்டு வருது..அதனால பலரும் இந்த அப்பாவியை மன்னிக்க வேண்டுகிறேன். இருந்தாலும் அடுத்தடுத்த பதிவுகளில் இதனை குறைக்க முயற்சி செய்கிறேன்..BYE >>     
========================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

23 comments:

 1. விமர்சனம் சூப்பர்.
  உங்க விமர்சனமே அதிக த்ரில்லிங்கா இருக்கு. நல்ல படம் என்று கேள்வி பட்டு இருக்கேன். பார்க்கும் அவளை துண்டும் எழுத்து உங்களது. கதையை சுருக்கமா நச்சுனு சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 2. << arunambur0 said...
  விமர்சனம் சூப்பர்.
  உங்க விமர்சனமே அதிக த்ரில்லிங்கா இருக்கு. நல்ல படம் என்று கேள்வி பட்டு இருக்கேன். பார்க்கும் அவளை துண்டும் எழுத்து உங்களது. கதையை சுருக்கமா நச்சுனு சொல்லி இருக்கீங்க.>>>

  தங்களது சிறந்த வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் என் நன்றிகள்,,
  நல்ல படம் என்பதில் சந்தேகம் இல்லை..ஆனால், அந்த கிளைமக்ஸ் காட்சி சற்று ஏமாற்றத்தை தரலாம்.கண்டிப்பாக பாருங்க படத்தை..
  மீண்டும் நன்றி மற்றும் வணக்கங்கள்.

  ReplyDelete
 3. வணக்கம் நண்பா,
  நவரசங்களை உள்ளடக்கிய சஸ்பிஷன் படத்தைப் பற்றிய நல்லதோர் விமர்சனத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.

  மனைவிக்கு தெரியாது இன்னோர் திருமணம், காமெடி, காதல். திரிலிங் கலந்த உணர்வு என்று பல சுவாரஸ்யங்கலைச் சொல்லி
  இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தந்திருக்கிறீங்க.
  ஓய்வாக இருக்கும் போது ட்ரை பண்றேன்.

  ReplyDelete
 4. <<< நிரூபன் said...
  வணக்கம் நண்பா,
  நவரசங்களை உள்ளடக்கிய சஸ்பிஷன் படத்தைப் பற்றிய நல்லதோர் விமர்சனத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.

  மனைவிக்கு தெரியாது இன்னோர் திருமணம், காமெடி, காதல். திரிலிங் கலந்த உணர்வு என்று பல சுவாரஸ்யங்கலைச் சொல்லி
  இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தந்திருக்கிறீங்க.
  ஓய்வாக இருக்கும் போது ட்ரை பண்றேன்.>>>>

  தங்களுக்கும் எனது வணக்கங்கள் நண்பரே,,
  தொடர்ந்து வந்து என்னை மென்மேலும் ஊக்கபடுத்தும் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் என் நன்றிகள்.
  ஹிட்ச்காக் படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று சஸ்பிஷன் படம்..அப்பொழுதே கதை சொல்லலில் பின்னி இருப்பார்.நேரம் கிடைப்பின் பாருங்கள்.
  நன்றி.

  ReplyDelete
 5. ஒரு நாலைந்து ஹிட்ச்காக் படங்கள் ஹார்ட் டிஸ்கில் எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை. இதையும் சேர்த்து ஃப்ரீ டைமில் பார்க்க முயற்சிக்கிறேன்.

  நல்ல விமர்சனம். இன்னும் எழுதுங்கள்.

  ReplyDelete
 6. // ஒவ்வொரு படங்களையும் ஓரிரண்டு முறைகள் தரிசித்து கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே யோசித்து எழுதரனாலதான் பதிவுகள் பலவும் நீளமாக போவதாக எனது ஐன்ஸ்டின் முளை சொல்லிட்டு வருது..அதனால பலரும் இந்த அப்பாவியை மன்னிக்க வேண்டுகிறேன். இருந்தாலும் அடுத்தடுத்த பதிவுகளில் இதனை குறைக்க முயற்சி செய்கிறேன் //

  எழுத்தின் அளவை (Font Size) சற்று குறைத்தீர்களானால் பதிவும் நீண்டது போல தோன்றாது. என்னை பொருத்தவரை எழுத்து பெரியதாக இருப்பதால் பதிவு நீளமாக இருப்பது போல தோன்றுகிறது. குறையுங்கள் ... பதிவு அழகாக இருக்கும்.

  ReplyDelete
 7. <<< ஹாலிவுட்ரசிகன் said...
  ஒரு நாலைந்து ஹிட்ச்காக் படங்கள் ஹார்ட் டிஸ்கில் எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை. இதையும் சேர்த்து ஃப்ரீ டைமில் பார்க்க முயற்சிக்கிறேன்.

  நல்ல விமர்சனம். இன்னும் எழுதுங்கள்.>>>

  தங்களது வருகைக்கு நன்றி நண்பரே.
  அந்த 4,5 படங்களோடு சேர்த்து கண்டிப்பாக இதையும் நேரம் கிடைக்கையில் பாருங்கள்.நல்ல படம்.மேற்க்கொண்டு எழுத முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 8. எழுத்தின் அளவை (Font Size) சற்று குறைத்தீர்களானால் பதிவும் நீண்டது போல தோன்றாது. என்னை பொருத்தவரை எழுத்து பெரியதாக இருப்பதால் பதிவு நீளமாக இருப்பது போல தோன்றுகிறது. குறையுங்கள் ... பதிவு அழகாக இருக்கும்.

  ReplyDelete
 9. "Suspicion" நான் பார்த்தது இல்லை..... இப்பொழுது தான் கேள்விபடுகிறேன்....ஹிட்ச்காகின் சில படங்களை நான் பார்த்துள்ளேன்...எனக்கு Favourite "Psyco" தான்...
  அவர் இந்த மாதிரி மனிதனிடம் உள்ள நோய்களை !!!! திரைப்படமாக எடுப்பதில் வல்லவர்... "Vertigo"... கூட அது போல் தான்....
  மிகவும் நல்ல விமர்சனம்....

  கொசுறு தகவல்: தமிழ்நாட்டில் "மக்கள்" டிவி என்று ஒரு சேனல் உள்ளது... அதில் ஒவ்வொரு சண்டே 3pm மணிக்கு ஹிட்ச்காகின் படங்களை தமிழில் டப் செய்து போடுகிறார்கள்....

  ReplyDelete
 10. உங்கள் இடுகையை "தமிழ்மணத்தில்" என்னுடைய "Username" கொண்டு இணைக்க முயற்சி செய்தேன்...உங்கள் இடுக்கை திரட்ட பட்டுள்ளது என்று வந்தது... ஆனால் ஏனோ இன்னும் "Submit To TamilManam" என்றே உங்கள் ப்ளாக்கில் வருகிறது....

  இந்த "லிங்கை" முயற்சி செய்து பாருங்கள்.

  "தமிழ்மண ஓட்டுப் பட்டையில் பிரச்சனை?:
  http://www.bloggernanban.com/2010/12/blog-post.html

  If the above link doesnt help.....மற்றும் ஒரு suggestion. உங்கள் லேபல்க்கு தமிழில் பெயர் வையுங்கள்..
  eg: சினிமா, திரைவிமர்சனம், வெஸ்டர்ன் சினிமா . அப்பொழுது தான் தமிழ்மணம் ஏற்கும் என்று நினைகிறேன்...

  ReplyDelete
 11. <<< ராஜ் said...
  "Suspicion" நான் பார்த்தது இல்லை..... இப்பொழுது தான் கேள்விபடுகிறேன்....ஹிட்ச்காகின் சில படங்களை நான் பார்த்துள்ளேன்...எனக்கு Favourite "Psyco" தான்...
  அவர் இந்த மாதிரி மனிதனிடம் உள்ள நோய்களை !!!! திரைப்படமாக எடுப்பதில் வல்லவர்... "Vertigo"... கூட அது போல் தான்....
  மிகவும் நல்ல விமர்சனம்....>>>

  தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பரே..சஸ்பிஷன் படத்தை ஹிட்ச்காகின் லீஸ்ட் நோன் படமாக சொல்லலாம்.ஆனால் கலக்கலான படம்..கண்டிப்பாக பாருங்கள்.நன்றி.

  ReplyDelete
 12. விமர்சனத்திற்கு நன்றி சகோ. நான் படங்கள்லாம் பார்ப்பதில்லை.

  ReplyDelete
 13. <<< ராஜ் said...
  கொசுறு தகவல்: தமிழ்நாட்டில் "மக்கள்" டிவி என்று ஒரு சேனல் உள்ளது... அதில் ஒவ்வொரு சண்டே 3pm மணிக்கு ஹிட்ச்காகின் படங்களை தமிழில் டப் செய்து போடுகிறார்கள்....>>>

  இங்கேயும் மக்கள் டிவி உள்ளது .நண்பரே..சண்டே கிழமைகளில் இங்கு 5.30 PM க்கு அவரது படங்கள் ஒளிப்பரப்பாகும்.நேரம் ஒதுக்கி சில படங்களை பார்த்து வருகிறேன்.நன்றி.

  ReplyDelete
 14. <<< ராஜ் said...>>

  நீங்கள் சொன்னவற்றை முயற்சித்து கொண்டிருக்கிறேன் நண்பரே..ஆனால், இன்னும் பலனில்லை.நீங்கள் கொடுத்த லிங்கையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்..மெனக்கட்டு எனக்கு ஆலொசனைகள் கொடுத்த தங்களுக்கு என் நன்றிகள்.எப்படியும் இன்னும் சில நாட்களில் சரி செய்து விடுகிறேன்.

  ReplyDelete
 15. << ராஜி said...
  விமர்சனத்திற்கு நன்றி சகோ. நான் படங்கள்லாம் பார்ப்பதில்லை.>>>

  வருகைக்கு நன்றி சகோ..எதற்கும் படம் பார்க்க முயற்சி செய்யுங்கள்.

  ReplyDelete
 16. நான் அதிகம் பார்த்தது இவரது படங்களைத்தான். டைரக்டர்களின் டைரக்டர். ஒவ்வொரு அசிஸ்டென்ட் டைரக்டரும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷம் இவரது படங்கள். தமிழில் இப்போதைக்கு இவரது ஸ்டைலை யாராவது ஆரம்பித்து வைக்கலாம். ஹிந்தியில் ராம்கோபால்வர்மா இவரது பரம விசிறி! அவரது படங்களிலும் இவரது பாதிப்பை காணலாம். நல்ல விமர்சனம் உங்களுடையது.

  ReplyDelete
 17. நான் இவர்படங்கள் பார்த்திருந்தாலும் இது பார்த்தமாதிரி தெரியவில்லை. டவுன்லோட் செய்து பாக்கணும்.ரசிகனை ஏமாத்தவே மாட்டார். கதையை படிப்படியாக நகர்த்திக் கொண்டு போவதில் மன்னன். நீங்களும் விமர்சனத்தை அது போலவே செய்திருக்கிறீர்கள். தமிழில் த்ரில்லர் கதைகளுக்கு (எழுத்துலகத்திலும் சரி,திரையுலகத்திலும் சரி) நிறைய காலி இடம் இருக்கிறது. ஆட்கள்தான் இல்லை. மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள். நன்றி விமர்சனத்துக்கு!

  ReplyDelete
 18. @@ மாயன்:அகமும் புறமும் said...@@@

  தங்களது முதல் சிறந்த வருகைக்கும் அருமையான பின்னூட்டம் அளித்ததுக்கும் எனது இதயம் சார்ந்த நன்றி மற்றும் வணக்கங்கள்.
  தாங்கள் சொல்வதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை..அத்தனையும் சத்தியம்..வெளிநாடுகளில் இவரது படங்களின் தாக்கத்தை இன்றுவரை பார்க்க முடிகிறது.80 ஆம் ஆண்டுகளில் சில தமிழ்ப்படங்களிலும் அதனை பார்த்ததாக ஒரு நினைவு.
  ராம்கோபால்வர்மா படங்கள் ஓரிரண்டை பார்த்திருக்கிறேன்.அவர் ஹிட்ச்காக் படங்களின் விசிரி என்பது புதுத்தகவல்.
  இப்படியே தொடர்ந்து வந்து பல நல்ல ஆதரவுகள் மற்றும் தகவல்கள் வழங்கி மேலும் ஊக்கபடுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.நன்றிகள்.

  ReplyDelete
 19. @@ Chilled beers said...@@@

  முதலில் தங்கள் வருகைக்கும் சிறந்த பின்னூட்ட வரிகளுக்கும் என் நன்றி மற்றும் வணக்கங்கள்.
  நீங்கள் சொல்வதும் அத்தனையும் உண்மையே..எதிர்ப்பாராமல் இவரது படங்களை பார்க்கும் பொழுது இவர் என்றுமே புதுமை ..புதுமை.பல சிறந்த திரில்லர், சஸ்பென்ஸ் யுக்த்திகளை சினிமாவுக்கு தந்துச் சென்ற மேதை.தமிழில் இது போன்ற கதைகளும் திரைப்படங்களும் கண்டிப்பாக வர வேண்டும்.காத்திருப்போம்..நன்றி.

  ReplyDelete
 20. இந்த படத்தை இன்னும் பாக்கலையே. கூடிய சீக்கிரம் பாத்திடனும்.

  ReplyDelete
 21. @@ Srinivasan K
  வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் மிக்க நன்றி.
  பாருங்கள் பாஸ்..செம்மையான படம்..அசத்தலாக எடுக்கப்பட்டிருக்கும். அடிக்கடி இந்த பக்கம் வாருங்கள்.

  ReplyDelete
 22. குமரன்... Virtigo பிரமிக்க வைக்கும் படம்தான். இதன் (மோசமான) தழுவலாகத்தான் தமிழில் நான் மிக ரசிக்கும் எம்.ஜி.ஆரின் ‘கலங்கரை விளக்கம்’ படம் எடுக்கப்பட்டது. நீங்கள் THE ROPE பார்த்திருக்கீங்களா? ஏழே ஷாட்டில் மொத்தக் கதையையும் சொல்லி அசத்தியிருப்பார் ஹிட்ச்காக்! ஸாரி, ஸப்ஜெக்ட்டை விட்டு விலகிப் போகிறேன்... இந்த ‘சந்தேகம்’ நான் பார்த்ததில்லை. உங்கள் விமர்சனம் பார்ப்பதற்கு ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது. மிக்க நன்றி!

  ReplyDelete
 23. @@ கணேஷ் @@
  சார். முதலில் தாமதாக பதிலளிப்பதற்கு என்னை மன்னிக்கவும்..
  வெர்டிகோ டெக்னிக்கல், கதைச்சொல்லலில் புதுமையை கையாண்டத் திரைப்படம்.அதேப்போல தே ரோப் பார்த்துவிட்டேன்.சினிமாவில் பலரும் எடுக்க தயங்குகின்ற அரியதான் அம்சங்களை சிறப்பாக அசால்ட்டாக முயற்சி செய்திருப்பார் ஹிட்ச்காக்..அந்த இரண்டு படங்களை பற்றியும் சீக்கிரம் எழுதுகிறேன்.அதை பற்றி மேலும் அப்போது பேசலாம்.வருகைக்கு மிக்க நன்றிங்க சார்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...