Follow by Email

Monday, 9 January 2012

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் - சினிமாவின் புது மொழி (பாகம் ஒன்று)

முன் குறிப்பு : வலைப்பூ தொடங்கிய புதிதில் எழுதிய இந்த பதிவு இது.சில மாற்றங்களுடன் இன்றைய பார்வைகளாக..  
==================================================


   ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என்றக் காந்தப் பெயரைச் சற்று ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு முன்னமே அறிந்திருந்தாலும், தற்போதையக் காலமாக இவரது மீதும் இவரது திரைப்படங்களின் மீதும் தனிப்பட்ட முறையில் ஈர்ப்பும் ஆர்வமும் சற்று நிறையவே என்னுள் அதிகரித்துக் கொண்டு வருவதை அவ்வப்போது உணர முடிகிறது.உலகின் தலைச் சிறந்த படங்களாக கருதபடுகின்ற.. 
  Psycho (1960),The Birds (1962), Shadow Of A Doubt (1943) போன்ற திரைப்படங்களைப் பார்த்ததன் வழி இவருடைய திறமைகளையும் கதைச் சொல்லும் ஆளுமையையும் சற்று எளிதாக அறிந்துக் கொண்டதோடு பலச் சிறந்தப் படைப்புகளை சினிமா உலகத்துக்கு தந்தவர் என்பதனை அதன் வழியே தெரிந்தும் கொண்டேன்.
என்ன சொல்வது இவரை பற்றி


அல்லது இவரது காவியங்களை பற்றி..ஸ்பீல்பெர்க், குப்ரிக் போன்ற 
திரைப் படைப்பாளிகளுக்குப் பிறகு அநேகமாக இந்த ஒரு வருடத்தில் இணையத்தில் அதிகமாக தேடியது இவரை பற்றிதான் என்று நினைக்கிறேன்..தேடலின் விளைவாக இதே ஆர்வத்தில் 10 அல்லது 15 படங்களை தொடர்ச்சியாக பார்த்தும் ரசிக்கவும் செய்தேன்..அத்தனையும் எதிர்ப்பாராத அலைகள்..மனதை ஈரத்தில் நிரப்ப ஆச்சரியம் கண்டு போனேன்..இன்னும் வெள்ளத்தில் மூழ்க 30, 40 படைப்புகளுக்கு மேல்..இருக்கிறதாம்
     
"என்னடா..எப்ப பார்த்தாலும் பழைய பிளேக் எண்ட் வைட் படமா போட்டு கடுப்பேத்துற..

    இவை ஹிட்ச்காக் படங்களின் தரிசனத்தில் சில தடவைகள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து வந்து என் காதில் கலந்த வார்த்தைகள்..(19 வயதை நேருங்கும் பையன் பழைய படங்களை பார்ப்பது அதிசயமா என்பது தெரியவில்லை..ஆனாலும், என் பெற்றோர்கள் பழைய தமிழ், ஹிந்தி படங்களின் வெறியர்கள் எனலாம்.மிக முக்கியமாக பாடல்களுக்கு.. இவர்களோடு சேர்ந்து எம்ஜிஆர், சிவாஜி என்று பார்த்து ரசித்த படங்கள் ஏராளம்..அதுவே பிளேக் & வைட் படங்களின் மீது வந்த நல்ல அபிப்ராயத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.)
ஒரு வருடத்துக்கு முன்புவரை, ஹிட்ச்காக் என்பவர் வெறுமனே திகில் மற்றும் மர்மம் நிறைந்தக் கதைகளைத் திரைபடங்களில் பதிவுச் செய்யும் இயக்குனர் என்றே எண்ணியிருந்தேன்.எதிர்பாராமல் இந்த வருடத் தொடக்கத்தில், இவரது Psycho திரைப்படத்தினைப் பார்த்தது முதல் இவரது திரைப்படங்களுக்கு நானும் அவரது ரசிகர்களில் ஒருவனாக ஆகினேன் என்றால் அது உண்மையே.ஹிட்ச்காக் இயக்கத்தில் தற்செயலாக பார்க்க கிடைத்த இந்த படமே உலக சினிமாக்களின் மீது எனக்கு ஏற்பட்ட முதல் தொடக்கமாக இருந்திருக்கலாம்..இந்த படம் அன்றுவரை பழைய சஸ்பென்ஸ், திரில்லர் படங்களின் மீது இருந்த ஒரு தவறான கணிப்பை மாற்றியமைத்தது. (தமிழ் பழைய படங்களில் கூட இந்த மாதிரி அம்சங்கள் நிறைந்த கதைகளில் விருப்பம் பெரியளவில் இருந்ததில்லை,)  


போக்க..போக..ஹிட்ச்காக் படங்களை பார்க்க..பார்க்க.. 


ஹிட்ச்காக் - சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் படங்களின் தேடலில் கண்களில் உதித்த உலக கலைஞன் என்பதை தெரிந்துக்கொண்டேன்..அந்த காலத்திலேயே கதைகள் தேர்ந்தெடுப்பதில் இவரிடம் தென்பட்ட ஆர்வமும், புத்தம் புதிய முயற்சிகளும், காலத்தை கடந்து நிற்க்கும் ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் தொடர்பான சமச்சாரங்களும், கேமரா கோணங்களும் (இட்ஸ் மாஸ்டர்பீஸஸ்) என்னை வெகுவாக கவர்ந்தன.
உதாரணமாக சைக்கோவை எடுத்துக்கொள்வோம், இந்த படத்தில் ஏறக்குறைய முதல் முறையாக சினிமா உலகில் இவர் அறிமுகம் செய்து வைத்த ஒரு விதமான சீரியல் கில்லர் கதாபாத்திரம்..படம் முழுக்க கதையே கொலையை சுற்றி அமைந்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் ஒரு கொலைக்கூட நேரடியாக செய்வதில்லைகொலைகள் செய்தது யார் ? யார் அந்த பெண் ? என்னதான் நடக்குதுன்னு கடைசி வரைக்கும் மர்மத்தையும் திகிலையும் கையாண்ட விதம், இறுதி காட்சிகளே இந்த புதிர்களுக்கு மிகவும் முழுமையான விடை தருகிறது..இங்கு இடம் பெறும் வசனங்கள்..இதற்கு முன்பு (இன்றுவரை) எந்த பழைய படங்களிலும் கேட்காத வார்த்தைகள்..(படம் காண்பதற்கு முன்புவரை பெரியளவில் எந்த விமர்சனமும் முழுதாக  படித்ததில்லை)

  எப்போழுதுமே எந்தவித எதிர்ப்பார்ப்பும் அல்லது எந்தவித முன் கற்பனைகளும் இல்லாமல்,ஒரு திரைப்படத்தினைப் பார்க்கும் பொழுது கிடைக்கின்ற மெல்லிய உணர்வுகளும் வலிமையான நினைவுகளும், நாம் எதிர்ப்பார்த்து ஒரு திரைப்படத்தினை அணுகும்பொழுது பெரும்பாலும் கிட்டுவதில்லை. ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் திரைக்காவியங்களுக்கு இந்த விஷயம் மிக இயல்பாகவே பொருந்திவிடுகிறது. எனவே, தொடர்ந்து அன்று முதல் நான் பெரும்பாலும் அவரது திரைப்படங்களை மேற்க்கூறிய வண்ணமே அணுகிவருகிறேன். 
திரில்லர், சஸ்பென்ஸ் வகையில் அமைந்த சினிமாக்களுக்கு புது மொழியை உருவாக்கி தந்தவர்களில் மிக முக்கியமானவர் : முதன்மையானவர்..ஹிட்ச்காக் என்ற பெயர் என்னுள் ஏற்படுத்திய சினிமா ஆர்வங்கள் மிக அதிகம்..


திரில்லர், சஸ்பென்ஸ் படங்களின் மீது ஒரு புது மரியாதையை கொண்டு வந்தவர்.பிரமாண்டத்தையும் அதிரடி சண்டை காட்சிகளையும் புது படங்களை பார்த்து ரசித்தவர்களுக்கு இவரது திரைப்படங்கள் சற்று சலிப்பு தரக்கூடும்..
   
 இவரது படங்களை முதல் முறையாக பார்க்க நினைப்பவர்கள், பிரமாண்டத்தையும் இப்போதைய திரைப்படங்களில் நிறைந்திருக்கும் கேமரா, கிராப்பிக்ஸ் காட்சிகளை ஏன் முடியின் புதிய திரைப்படங்களை சற்று மறந்துவிட்டு பார்ப்பதே சால சிறந்த வழியென்பது எனது தனிப்பட்ட கருத்து..எனவே, எதிர்ப்பார்ப்புகள் மற்றும் ஒப்பிடுதலையும் தவிர்க்கும் பார்வைகளுக்கு இவரது திரைப்படங்கள் ஓர் அனுபவம்..DONT MISS HIS VISION, IF YOU LOVE CINEMA..   

   தொடர்ந்து வரும் பதிவுகளில் ஹிட்ச்காக் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களையும் இவரது திரைப்படங்களை பற்றிய சிறிய அறிமுகங்களையும் பார்வைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம்..தொடர்ந்து இணைந்திருங்கள்..

================================================================

   கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்.பதிவுகள் தங்களை கவர்ந்ததெனின் வாக்களித்து ஆதரிக்கவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

11 comments:

 1. சூப்பர் குமரன்.
  நல்ல முயற்சி, இதன் தொடர்ச்சிகளை விரைவில் எதிர்பார்கிறேன்.

  ReplyDelete
 2. << arunambur0 said...
  சூப்பர் குமரன்.
  நல்ல முயற்சி, இதன் தொடர்ச்சிகளை விரைவில் எதிர்பார்கிறேன்.>>>

  தங்கள் வருகைக்கும் பின்னூட்ட பகிர்வுக்கும் எனது நன்றிகள் நண்பரே..
  கண்டிப்பாக விரைவில் தொடர்ச்சிகளை அடுத்தடுத்து போட முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 3. நல்ல தொடர் நண்பா! அல்பிரட் ஹிட்ச்காக்கின் The Rope மறக்க முடியாத திரில்லர்களில் ஒன்று.. இம்மாதிரி இயக்குனர்கள் பற்றி எழுதுவதை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்!
  பி.கு - உங்களது லே-அவுட் மிகவும் பெரிதாக உள்ளது...

  ReplyDelete
 4. வணக்கம் , குமரன் . வாழ்த்துகள் பொதுவாக வலைப்பூக்களில் உலக திரைப்படங்கள் குறித்து எழுதுவதுதான் அதிகம் காணமுடிகிற விஷயம் . இயக்குனர்கள் பற்றி தனி கட்டுரைகள் வெளியிடுபவர்கள் மிக அரிது . ஹிட்சாக் பற்றி மிக விரிவான அலசல் அடங்கிய உங்கள் கட்டுரை அற்புதம் எங்கள் கடலூர் மாவட்டத்தில் வீசிய புயல் காரணமாக மின் இணைப்பு , தொலைபேசி இணைப்பு, இணையம் ஆகியன துண்டிக்கப்பட்டு இருந்தன இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பினோம் தாமதமான எதிர் வினைக்கு மன்னிக்கவும்

  ReplyDelete
 5. வணக்கம் நண்பா,
  நல்லதோர் சினிமா வரலாற்று அலசல். ஹிட்சாக் பற்றி அறியாத பல விடயங்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

  நன்றி.

  ReplyDelete
 6. ஒரு புதுமையான மனிதனை புதுமையான விதத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றி சகோ...

  ReplyDelete
 7. @ பாரதிக்குமார் @@@

  சற்று வேலை காரணமாக தாமதமாக பதிலிடுவதற்கு முதலில் மன்னிக்கவும்.
  தாங்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி, வலைக்கு வந்ததே பெரிய விஷயம்..அதில் கருத்தும் பகிர்ந்து கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
  ஹிட்ச்காக் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று எண்ணிருந்தேன்..கொஞ்சம்தான் பகிர்ந்துக்கொள்ள இயன்றது.இதனது தொடர்ச்சி விரைவில் வரும்..அதற்கும் தங்களை போன்றவர்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்பதில் சந்தேகமில்லை..
  மீண்டும் பல நன்றி மற்றும் வணக்கங்கள்..

  ReplyDelete
 8. @ JZ @@@
  << நல்ல தொடர் நண்பா! அல்பிரட் ஹிட்ச்காக்கின் The Rope மறக்க முடியாத திரில்லர்களில் ஒன்று.. இம்மாதிரி இயக்குனர்கள் பற்றி எழுதுவதை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்! >>>

  தங்களது முதல் வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
  நானும் ரோப் படத்தை பார்த்திருக்கிறேன்..நீங்கள் சொன்னதுப்போல் மறக்க முடியாத புதுமையான திரில்லர்..தங்களது விருப்பத்தை நிறைவேற்ற கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்..

  பி.கு - உங்களது லே-அவுட் மிகவும் பெரிதாக உள்ளது...
  கண்டிப்பாக விரைவில் குறைக்க முயல்கிறேன்..நன்றி.

  ReplyDelete
 9. @ நிரூபன் @@@
  << வணக்கம் நண்பா,
  நல்லதோர் சினிமா வரலாற்று அலசல். ஹிட்சாக் பற்றி அறியாத பல விடயங்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.

  நன்றி.>>>

  தங்களுக்கும் எனது வணக்க்கம் கலந்த பல நன்றிகள் நண்பரே..
  ஏதோ எனக்கு தெரிந்ததை ஹிட்ச்காக் படங்களின் மேல் ஏற்பட்ட சிறிய ஆர்வத்தில் எழுதிய பதிவிது..தங்களை போன்றவர்களுடன் ஒப்பிடும்போது இதுவெல்லாம் ஒன்னுமில்லை நண்பரே..நன்றி.

  ReplyDelete
 10. @ ம.தி.சுதா @@
  ஒரு புதுமையான மனிதனை புதுமையான விதத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றி சகோ...

  தங்களது வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்.
  உண்மையாக ஹிட்ச்காக் அருமையான புதுமையான இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை.இவரது படங்களின் மீது ஏற்பட்ட தாகம் இன்னும் தீரவில்லை.வாய்ப்பு கிடைப்பின் நீங்களும் பாருங்கள்.
  நன்றி சகோ..

  ReplyDelete
 11. நல்ல பகிர்வு! நானும் ஒரு காலத்தில் ஹிட்ச்காக் பைத்தியம் பிடித்து தொடர்ந்து 25 படங்களுக்கு மேல் பார்த்தேன் :) தொடர் பதிவு எழுத ஆசைப்பட்டு பாதியில் நிற்கிறது :(

  http://balavin.wordpress.com/category/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge