Follow by Email

Tuesday, 3 January 2012

செர்பியா மொண்டெனேகுரோ : The Professional (2003) - சிறந்த படம்..

தொடர்ந்து சிறப்பான முறையில் ஆதரவு வழங்கும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லாரும் நலம் பெறுவோமாக//   

=================================================================

Film : The Professional                    Year :2003
Country :  Serbia and Montenegro           Rating : R 
Director : Dusan Kovacevic       Writers : Dusan Kovacevic (play, screenplay)
Stars : Branislav Lecic, Bora Todorovic, Nataša Ninkovic
Awards : 5 wins & 2 nominations See more awards »  


எதிர்ப்பாராமல் பார்த்து பெரியளவில் அசந்துப்போன ஒரு அயல் நாட்டுப் படமான The Professional இன்றைய பார்வையாக,

      The Professional - செர்பியா மொண்டெனேகுரோவில் 2003 ஆம் ஆண்டு Dusan Kovacevic  என்ற என்பவரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவந்த காமெடி கலந்த டிராமா வகையிலான திரைப்படம் ஆகும்.Branislav Lecic, Bora Todorovic, Nataša Ninkovic மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டதோடு அதில் ஐந்தையும் வென்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.'

   செர்பியாவில் 90 - ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த உள்நாட்டு போரை மையமாக கொண்டு ஒரு வித்தியாசமான படத்தை எடுத்த படக்குழுவினர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்.இப்படத்தின் வழியே செர்பியாவை பற்றிய சில தகவல்களையும் இணையத்தின் வழியே சில உண்மைகளையும் அறிந்துக்கொள்ள ஏகுவாக அமைந்தது.


+++++++++++++++++++++++++++++++
The Professional (2003) DVDRIP
++++++++++++++++++++++++++++++
  
கதைச்சுருக்கம் :
=================

முன்னாள் இலக்கிய பேராசிரியராக பல்கலைக்கழகத்தில் பணிப்புரிந்த Teodor "Teja" Kraj, 90 ஆம் ஆண்டுகளில் Slobodan Milošević - இன் ஆட்சியை தூக்கியெறிய கடுமையாக போராடியவர்.தற்பொழுது ஒரு பெரிய பப்ளிஷிங்க் ஹவுஸை (பத்திரிக்கை) நடத்தி வருபவர்
இங்கு வேலை செய்பவர்களிடையெ சம்பளம் உயர்வை கேட்டு நடத்தும் போராட்ட்டத்தில் தொடங்குகிறது கதை..


      திடீரென்று ஒரு நாள், ஒரு வயதானவர் கையில் பெரிய பெட்டியுடன் தெஜாவை சந்திக்க வருகிறார். தெஜாவின் கீழ் வேலை செய்பவரும் தற்போதைய காதலியுமான Marta அந்த முகம் தெரியாதவர் தெஜாவை சந்திக்க அனுமதியுடன் உள்ளேவிடுகிறார்..இவரை ஏதோ ஒரு எழுத்தாளர் என்று நினைக்க, மெதுவாக தொடங்கும் வசனங்கள் அந்த முகம் தெரியாத வயதானவர் Luka Laban (played by Bora Todorović) என்றும் இவர் முன்னாள் அரச போலிஸ் அதிகாரி என்றும் தெரியபடுத்துகின்றன..இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல்கள் மூலம் பல விடயங்கள் வெளிவருகின்றன..வந்தவர் போலிஸ் என்றும், இவரே தன்னுடைய முன்னாள் காதலியின் தந்தை என்பதோடு, கடந்த 10 வருடங்களாக தன்னை கொல்ல திட்டமிட்டு வந்தவர் என்று தெரியவந்து அதிர்ந்து போகிறார்...
திரைப்படத்தின் மீதக் கதையும் அதை தாங்கியப்படியான காட்சிகளும் இந்த இருவரும் தங்களுக்கு தெரியாமல் எப்படி சில செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் எப்படி சம்பந்த பட்டிருக்கிறார்கள் என்பதை 10 ஆண்டுகளுக்கு பின்னால் ப்லேஷ்பேக்காக பயணிக்கிறது.


The Professional திரைப்படத்தை பற்றிய சில 
=============================================
சுவாரஸ்யங்கள்
==================== 

கொஞ்சம் நினைவுக்கு கொண்டு பார்ப்போம் :

      கடந்த 10 ஆண்டுகளாக வாழ்வில் நடந்த நிகழ்வுகளை உங்களால் ஞாபகம் அல்லது சிந்தனைக்கு கொண்டு வர இயல்கிறதா ? வந்தாலும் முழுமையாக ??? பலருக்கும் கேள்விக்குறிகள் மிஞ்சும் கேள்வி இது..(எனக்கும்தான்..)..

 நாம் செய்த தவறுகளும் ? நாம் தவறவிட்ட நிமிடங்களும் ? எத்தனை பேருக்கு சந்தோஷத்தை தந்திருப்போம்..அதே நேரம் எத்தனை பேருக்கு நாம் சுமையாக இருந்திருப்போம் ? இதுவெல்லாமே மனதுக்கு தெரிந்தோ தெரியாமலோ..ஆனால் கண்டிப்பாக இது பலரது வாழ்க்கையிலும் நடந்திருக்க வாய்ப்புகளுண்டு.


நாம் மறந்துப்போன அந்த நிகழ்வுகளை வேறொருவரின் பார்வைகளின் வழியே நம் கடந்தக்கால நினைவுகளை அலசும் பொழுது : எப்படி இருக்கும்..அந்த 10 ஆண்டுகளில் நம்மை பின்தொடர்ந்து நமக்கு தெரியாமல் நாம் பேசிய உரையாடல்கள், நடந்துகிட்ட விதம், நாம் செய்த தவறுகள், நன்மை, தீமை, இழப்பு, மற்றவர்கள் அனுப்பி படிக்காமல் விட்டுப்போன கடிதங்கள், தோல்வியில் முடிந்த காதல், உறவுகள்அன்பு, நட்பு என்று அத்தனையையும் பதிவுகளாகவோ, புத்தகங்களாகவோ அல்லது புகைப்படங்களாகவோ பிறர் நம்மிடம் தரும்பொழுது ???

  அந்த உணர்வு..வர்ணிக்க இயலாதது..(என்னால்.)
இந்த படம் இதனையே மையக்கருவாக வைத்து பேசுவது..ஒரு தனிப்பட்ட சிறப்பு.
==================================

கதை மொத்ததையும் அதிகமான அளவில் வசனங்களாகவே அலங்கரித்து படம் முழுவதும் தொய்வில்லாமல் கொண்டு சென்ற இயக்குனருக்கும், டீமுக்கும் கண்டிப்பாக நன்றியையும் பாராட்டையும் சொல்லியே ஆக வேண்டும்..Before Sunrise / Sunset ஆகிய படங்களுக்கு பிறகு அதுவும் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு வெளிநாட்டு படத்தில் இவ்வளவு திறமையான உரையாடல்கள் மற்றும் வசனங்களை ரசித்தது இந்த படத்தில்தான்..
======================================== 

பெரிய பலம்படத்தில் போலிஸாக வரும் Bora Todorović என்பவரின் நடிப்புதான்..இவர் தோன்றும் முதல் காட்சியிலிருந்து இறுதிவரை அருமையான நடிப்பால் படம் முடிந்து நீண்ட நேரங்கள் மனதில் தங்கிவிட்டே செல்கிறார்..தன்னுடைய மகள் தான் கொல்ல நினைக்கும் அரசாங்கத்துக்கு எதிரியாக நடக்கும் ஒருவனை காதலிக்கிறாள் என்று தெரியவந்து இதற்கு அடுத்து வரும் காட்சிகள், ஹோட்டலில் அரட்டை அடிக்கும் எதிரியின் நண்பர்களோடு திருட்டுத்தனமாக (ஸ்பை) பேப்பர் விற்பவராக வந்து ஒவ்வொரு எக்ஸ்பிரஷங்களிலும் ரசிப்பு என்பதை தாண்டி கவர்கிறார்..அருமையான அசலான நடிப்பு.. 

   
=================================================

படத்தின் ஆணிவேராக இருந்து ஒவ்வொரு காட்சியையும் தூக்கி நிறுத்துவது Branislav Lecic, Bora Todorovic ஆகிய இருவர்தான்.தங்களது திறமைகளை திறம்பட வெளிபடுத்தியுள்ளனர்..அதிலும், Lecic இரண்டு முன்று வருடங்கள் செர்பியாவில் பண்பாட்டு அமைச்சராக பதவிவகித்தவராம்.பொராவுக்கு இணையான நடிப்பை மிக எளிதாக வழங்கியுள்ளார்.கார் விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் இவர் செய்யும் முக பாவனைகள் எல்லாம் (காதை கடிக்கும்) சூப்பர்..எல்லா ஃப்ரேம்களிலும் அசத்துகிறார்..
=========================================================

திரைப்படம் தொடங்கும் பொழுதே (டைட்டில் கார்டு) செர்பியாவில் (அப்பொழுது : யுகோஸ்லாவியா) 90 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த சில சம்பவங்களின் நினைவுகளாக காண்பிக்கபடுகிறது..இது என்ன வேற வகை படமோ நினைப்பதற்குள் அடுத்தடுத்த காட்சிகளில் முற்றிலும் வேறொரு படைப்பாக வழங்கிய இயக்குனருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
==============================================================


 படத்தின் இயக்குனர் Dušan Kovačević, ஒரு ஸ்டேஜ் பிளே இயக்குனராம்..1990 - ஆம் ஆண்டு ஸ்டேஜ் டிராமாவாக இயக்கிய இந்த கதைய சுமார் 13  வருடங்களுக்கு பிறகு சிறப்பான வகையில் திரைவடிவத்தை கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.
=====================================================================

படத்தில் ஒவ்வொரு வசனகளும் போல ஆணி அடித்தாற்ப் போல கதைக்கு உயிர் நாடிகளாக எழுதப்பட்டிருக்கின்றன..சோகம், அழுகை, சீரியஸான காட்சிகள் என்று எதிலும் விடாமல் காமெடி துளிகளை மறைமுகமாக அள்ளி கொடுத்த இயக்குனர் பாராட்டதக்கவர்.
=========================================================================


மேலும், மார்த்தா, தேஜாவின் நண்பர்கள் மற்றும் யூனியன் லீடர் ஆகியவர்களின் பங்கும் இப்படத்திற்கு பெரிய பலம்...சீரியஸான கதையில் ஆங்காங்கே இவர்களின் நடிப்பு நிறைய வேளைகளில் சிரிக்க வைக்கிறது.
=============================================================================

   இன்று செர்பியா அல்லது மொண்டெனெக்ரோ என்று அழைக்கபடும் நாடுகள் அன்று சில கூடுதல் தேசங்களோடு கூடிய யுகோஸ்லாவியா என்று இருந்தது குறிப்பிடதக்கது.இந்த நாட்டில் கூட உருப்பிடியா படம் பண்ணுவாங்களானு  ஏதோ கிண்டலு பண்ணிகிட்டு இந்த படத்தை பார்க்க போக, எனக்கு பிடித்த படங்களில் ஒன்றாகவே மனதோரம் தங்கிவிட்டது.இந்த படத்தை மையமாக கொண்டு இணையத்தின் மூலம் பல யுகோஸ்லாவிய படங்களை தேடி தேடி வருகிறேன்.

 உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் இந்த தெ ப்ரோஃபெஷனல்.

IMDB : 7.6 / 10
MY RATING : 7.9 / 10
கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

21 comments:

 1. இனிய வணக்கம் நண்பா,
  படித்ததும் பட்டென மனதில் ஒட்டிக் கொண்டு படம் பார்த்தே தீர வேண்டும் எனும் ஆவலைத் தருகின்ற விமர்சனத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.


  விமர்சனத்தில் தவறுகள், என்று குறிப்பிடும் அளவிற்கு ஏதும் இல்லை! நன்றாக எழுதியிருக்கிறீங்க.

  அடுத்த விமர்சனத்தில் சந்திக்கிறேன்.

  உங்கள் பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியிலும் இணைக்கலாமே?

  http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

  மேற்படி இணைப்பில் நீங்க தமிழ்மண ஓட்டுப் பட்டையினைப் பெற்று உங்கள் வலைப் பதிவில் இணைத்து விட்டு, தமிழ்மணத்தில் உங்கள் வலைப் பூவை பதிவு செய்ய வேண்டும் நண்பா.

  ReplyDelete
 2. << நிரூபன் said...
  இனிய வணக்கம் நண்பா,
  படித்ததும் பட்டென மனதில் ஒட்டிக் கொண்டு படம் பார்த்தே தீர வேண்டும் எனும் ஆவலைத் தருகின்ற விமர்சனத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.>>>

  தங்களது முதல் இனிய நல்வரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளோடு கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
  தங்களை போன்ற சிறந்த பதிவர்களின் வருகைகள் அதுவும் கருத்துக்கள் என என்னை மென்மேலும் உட்சாகபடுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை..தங்கள் ஆதரவு எப்பொழுதும் வேண்டும்..அது மிகப் பெரிய ஆதரவாக இருக்கும்..
  விமர்சனத்தை பற்றி நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன..நன்றிகள் பல..

  << விமர்சனத்தில் தவறுகள், என்று குறிப்பிடும் அளவிற்கு ஏதும் இல்லை! நன்றாக எழுதியிருக்கிறீங்க.
  அடுத்த விமர்சனத்தில் சந்திக்கிறேன்.>>>

  நன்றி..நன்றி..தங்களது பாராட்டுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 3. << நிரூபன் said...
  http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
  மேற்படி இணைப்பில் நீங்க தமிழ்மண ஓட்டுப் பட்டையினைப் பெற்று உங்கள் வலைப் பதிவில் இணைத்து விட்டு, தமிழ்மணத்தில் உங்கள் வலைப் பூவை பதிவு செய்ய வேண்டும் நண்பா.>>>

  இதோ இப்பொழுதே இணைக்க முயற்சி செய்கிறேன்..என் மேல் தங்களுக்கு உள்ள அக்கறைக்கும் வலை முகவரியை கொடுத்து உதவி செய்ததற்கு மிகுந்த நன்றிகள்..இதோ இப்பவே செய்கிறேன் நண்பரே..

  ReplyDelete
 4. விமர்சனம் சூப்பர். பல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க......
  படத்தோட கதை சமய இருக்கு........

  ReplyDelete
 5. << arunambur0 said...
  விமர்சனம் சூப்பர். பல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க......
  படத்தோட கதை சமய இருக்கு........>>>

  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமிது..கதைக்காகவே இரண்டு தடவை பார்த்தேன் என்றால் பாருங்களேன்..

  ReplyDelete
 6. எப்படி குமரன், இந்த மாதிரி படம் எல்லாம் உங்களுக்கு கிடைக்குது..... உங்க தேடல்க்கு அளவே இல்லை...

  நானும் டவுன்லோட் செய்றேன்...

  அப்புறம் நீங்க தமிழ்மணத்தில் இணைந்தது ரொம்ப நல்ல விஷயம்...உங்கள் எழுத்து இன்னும் நிறைய பேரை சென்று அடையும்...

  ReplyDelete
 7. << ராஜ் said...
  எப்படி குமரன், இந்த மாதிரி படம் எல்லாம் உங்களுக்கு கிடைக்குது..... உங்க தேடல்க்கு அளவே இல்லை...

  நானும் டவுன்லோட் செய்றேன்...

  அப்புறம் நீங்க தமிழ்மணத்தில் இணைந்தது ரொம்ப நல்ல விஷயம்...உங்கள் எழுத்து இன்னும் நிறைய பேரை சென்று அடையும்...>>>

  தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்..
  இல்லை நண்பரே, இந்த படத்தை தற்செயலாக இணையத்தில் பார்க்க பதிவிறக்கம் செய்து சில நாட்கள் ஆன நிலையில் பார்த்தேன்..படம் பிடித்து போக மேலும் மூன்று முறைகள் கண்களில் தரிசனம் கண்டேன்..ஹி..ஹி....அசத்தலான படம்..உரையாடல்கள் அத்தனையும் செம்மையாக இருக்கும்..பதிவிறக்கம் செய்யுங்கள்..இன்னும் சில நிமிடங்களில் பதிவிறக்கத்துக்கு உண்டான லிங்கை மேலே போடுகிறேன்..

  தமிழ் மணம் - இந்த பக்கமா நிரூபன் சார் வர, நல்ல அட்வைஸ் சொன்னாரு..அதான் இந்த முயற்சி..மற்றப்படி என் எழுத்த யாரு படிக்க தயார் ?? சொல்லுங்க..

  ReplyDelete
 8. ந்த 10 ஆண்டுகளில் நம்மை பின்தொடர்ந்து நமக்கு தெரியாமல் நாம் பேசிய உரையாடல்கள், நடந்துகிட்ட விதம், நாம் செய்த தவறுகள், நன்மை, தீமை, இழப்பு, மற்றவர்கள் அனுப்பி படிக்காமல் விட்டுப்போன கடிதங்கள், தோல்வியில் முடிந்த காதல், உறவுகள், அன்பு, நட்பு என்று அத்தனையையும் பதிவுகளாகவோ, புத்தகங்களாகவோ அல்லது புகைப்படங்களாகவோ பிறர் நம்மிடம் தரும்பொழுது ???


  அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. உங்கள் எழுத்து நடைக்கு ,நான் பிச்சை எடுக்கத்தான் வேண்டும் .. தேடி எடுத்து விமர்சனம் எழுதுவதில் நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்

  ReplyDelete
 10. <<< இராஜராஜேஸ்வரி said...

  அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்.>>>>

  தங்களது இனிய வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிகுந்த நன்றிகள்..

  ReplyDelete
 11. << udanpirappe said...
  உங்கள் எழுத்து நடைக்கு ,நான் பிச்சை எடுக்கத்தான் வேண்டும் .. தேடி எடுத்து விமர்சனம் எழுதுவதில் நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்.>>>

  நல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் நண்பரே..
  தேவை இல்லாமல் நீங்கள் என் எழுத்து நடையை புகழ்ந்து பேசுகிறீர்கள். என்று நினைக்கிறேன்.இதிலிருந்தே நீங்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர் என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது...மற்றப்படி பிச்சை என்பது எல்லாம் மிக பெரிய வார்த்தைகள்..தங்களது பதிவுகளும் கடந்த சில நாட்களாக எனக்கு இன்ஸ்பிரஷன் என்பதில் சந்தேகமில்லை..

  ஏதோ நான் ரசித்த படங்களை இங்கு சிறு பார்வைகளாக தர இயல்கிறேன்..அவ்வளவுதான்..மற்றப்படி வேரெதுவும் இல்லை நண்பரே,,மீண்டும் பல நன்றிகள்.

  ReplyDelete
 12. உலக சினிமாக்கள் பார்த்து புரிந்துகொள்ளும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை ( ஐ ஆம் ஸ்டில் ஸ்மால் பாய் ) ஆனாலும் படத்தை நோட் பண்ணியிருக்கிறேன். பார்க்க முயற்சிக்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. <<< ஹாலிவுட்ரசிகன் said...
  உலக சினிமாக்கள் பார்த்து புரிந்துகொள்ளும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை ( ஐ ஆம் ஸ்டில் ஸ்மால் பாய் ) ஆனாலும் படத்தை நோட் பண்ணியிருக்கிறேன். பார்க்க முயற்சிக்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி.>>>

  தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் நண்பரே..
  தலைவா நான் உங்கள விட சின்ன பையன்னு நினைக்கிறேன்..இப்போதுதான் 19 வயதை கொண்டாட போகிறேன்..ஆனால், நானும் உங்கள போலதான் ஏதோ ஒரு சில படங்களுனு ரொம்ப மோசமா அவ்வப்போது பார்த்து புரிந்தோ + புரியாமலோ ஏதோ பண்ணிகிட்டு வருறேன்..ஆனால், நீங்க, அருண், ராஜ் (ஜேக்கி, கருந்தேள், உலக சினிமா ரசிகன், நிரூபன் போன்றவர்கள் பலரும் சினிமா மன்னர்கள்...) போன்றவர்களின் சினிமா விமர்சனங்கள் என்னைவிட நல்லா இருப்பதாகவே உணர்கிறேன்..
  நீங்களும் இந்த படத்தை பாருங்கள்..காட்சிகளோடு ஒன்றிப்போக வாய்ப்புகள் உண்டு...

  பதிவிறக்கம் செய்ய விரும்புவோர்கள் மேலே உள்ள லிங்கை பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

  ReplyDelete
 14. << கோவிந்தராஜ்,மதுரை. said...
  அருமை தொடரட்டும் >>>

  தங்களது முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..
  மேலும், பல நல்ல படங்களை அறிமுகம் செய்ய முயல்கிறேன்..உங்கள் ஆதரவோடு..

  ReplyDelete
 15. உங்கள் விமர்சனத்தை படித்துவிட்டுத்தான் இப்போது சில படங்களை தரவிறக்குகிறேன். அருமையான அலசல். இந்தப்படமும் தரவிறக்க ஆரம்பித்துவிட்டேன். விமர்சனத்தோடு நின்றுவிடாமல் தரவிறக்க லிங்கும் தருவதற்கு நன்றி.

  ReplyDelete
 16. தங்களது நேரத்தை எனக்கென்று ஒதுக்கி தவறாது வந்து வாசித்து பின்னூட்டமிடும் நண்பரே,, தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.சில படங்களை பார்க்கும் பொழுது எங்காவது சில வார்த்தைகள் பகிர்ந்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன்..அதனது பிரதிபலிப்பே இந்த வலையும் பதிவுகளும்..முடிந்த அளவுக்கு மனதுக்கு திருப்தி அளித்த படங்களையே அறிமுகம் செய்கிறேன்..இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்.. நல்ல படம்..நன்றி.

  ReplyDelete
 17. வணக்கம் , குமரன் அதிக வசனங்கள் உள்ள பிற மொழி படங்களை பொதுவாக யாரும் விரும்பமாட்டார்கள் . நீங்கள் ரசித்து பார்த்தது ஆச்சர்யமாக இருந்தது. மிக இளம் வயதில் உங்கள் ரசனையும் , பக்குவப்பட்ட எழுத்தும் அடக்கமான பண்பும் பிரமிக்க செய்கிறது . வாழ்த்துகள் எங்கள் கடலூர் மாவட்டத்தில் வீசிய புயல் காரணமாக மின் இணைப்பு , தொலைபேசி இணைப்பு, இணையம் ஆகியன துண்டிக்கப்பட்டு இருந்தன இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பினோம் தாமதமான எதிர் வினைக்கு மன்னிக்கவும் செர்பிய போர் பற்றிய no man s land ' படம் பார்த்து இருக்கிறிர்களா? இல்லை என்றால் அவசியம் பாருங்கள்

  ReplyDelete
 18. நல்ல உலக படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி ! பனி தொடர வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 19. << பாரதிக்குமார் said...
  வணக்கம் , குமரன் அதிக வசனங்கள் உள்ள பிற மொழி படங்களை பொதுவாக யாரும் விரும்பமாட்டார்கள் . நீங்கள் ரசித்து பார்த்தது ஆச்சர்யமாக இருந்தது. மிக இளம் வயதில் உங்கள் ரசனையும் , பக்குவப்பட்ட எழுத்தும் அடக்கமான பண்பும் பிரமிக்க செய்கிறது . வாழ்த்துகள் >>>

  வணக்கம் ஐயா பாரதிக்குமார் அவர்களே..
  தங்களது இனிய நல்வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் எனது இதயம் சார்ந்த பல நன்றிகள்.
  தங்களது வார்த்தைகள் அத்தனையும் நானும் உணர்ந்திருக்கிறேன்..உண்மைதான்..நான் சாதாரணமாக அதிக வசனங்கள் நிறைந்த படங்களை பார்ப்பது இல்லை..பார்த்ததும் குறைவு என்றே சொல்ல வேண்டும்.ஆனால், எதிர்ப்பாராமல் பார்த்த இந்த படம் உண்மையிலேயே கவர்ந்துவிட்டது.
  ஆங்கிலம், அயல் நாட்டு படங்கள் பெரும்பாலும், கடந்த ஒரு வருடமாக தங்களை போன்ற சிறந்த பதிவர்களின் எழுத்துக்களின் வழி அறிமுகமானதே..உண்மையான உலக சினிமா பற்றி எதுவும் எனக்கு தெரியாது.தங்களது பாராட்டு என்னை ஊக்கபடுத்துகின்றன.

  << எங்கள் கடலூர் மாவட்டத்தில் வீசிய புயல் காரணமாக மின் இணைப்பு , தொலைபேசி இணைப்பு, இணையம் ஆகியன துண்டிக்கப்பட்டு இருந்தன இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பினோம் தாமதமான எதிர் வினைக்கு மன்னிக்கவும் செர்பிய போர் பற்றிய no man s land ' படம் பார்த்து இருக்கிறிர்களா? இல்லை என்றால் அவசியம் பாருங்கள்.>>.

  அதற்க்காக என்ன ஐயா..தாங்கள் வந்ததே பெரிய சிறப்பு.
  நீங்கள் குறிப்பிட்ட படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை ஐயா.கண்டிப்பாக பார்த்துவிட்டு தங்களது தளத்தில் சொல்கிறேன்.

  ReplyDelete
 20. << ananthu said...
  நல்ல உலக படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி ! பனி தொடர வாழ்த்துக்கள் !>>

  சில வேலை காரணமாக தாமதமாக பதில் அளிப்பதுக்கு என்னை அனைவரும் மன்னிக்கவும்..
  தங்களது இனிய முதல் சிறந்த வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge