Monday 2 April 2012

திகில் சினிமா : 1408 (2007), The Mist (2007) மற்றும் ஹாரர் கிங்க்ஸ்

=======================================================================
சில பிசியான சூழல்கள், மனக்கோளாறுகள், உறவுக்கார அண்ணனின் திடீர் மரணம் (அத பற்றிய ஒரு பதிவு விரைவில்), ஆதலால் இணையப்பக்கமே வர முடியவில்லை.அதனால், பல வலை நண்பர்களின் பதிவுகளை வாசித்து, பின்னூட்டம் தர இயலாமல் போய்விட்டது.எல்லாவற்றுக்கும் சேர்த்து மன்னிப்பை வேண்டி, இன்றைய பார்வையாக...
========================================================================
    
சமீப காலத்தில் ஹாரர் படங்கள் பார்ப்பது மிகவும் குறைந்துவிட்டது.. கிடைத்த பேய் திகில் படங்களை பார்த்தது போக, இப்பொழுது எல்லாம் தேடி தேடி பார்க்க வேண்டியதாகிவிட்டது.அதுவும் பிளாக் தொடங்கியதிலிருந்து கண்ட படங்களை எழுதாமல் ரசித்ததை மட்டுமே அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்/எண்ணமே மனதோரம் பந்தாடுகின்றன.

அந்த ஒரு காரணமே திகில், மர்மம் போலான திரை சரக்குகளை அறிமுகம் செய்வதை குறைத்துவிட்டது.இன்றைய பார்வையில் பார்க்க இருப்பவை, நெடு நாட்களுக்கு முன்னாடி, என் ஹாரர் தாகத்தை தீர்த்து வைத்த நாட்டு மருந்துகள்.வாருங்கள் நானும் தங்களோடு என்னுடைய கடுப்பெடுத்த எழுத்துக்களுக்கு வாசகனாகிறேன். 
@@@=====================@@================================@@@

@ The Mist (2007)
@ A Film By Frank Darabont
@ Starring : Thomas Jane, Marcia Gay Harden 

   ஃப்ராங்க் டாராபோண்ட் தற்கால அமெரிக்க சினிமாவில் நன்கு பரிட்ச்சயமானவர்.தெ சாவ்ஷங்க் ரெடெம்ப்ஷன், தெ கிரீன் மைல் போன்ற சிறந்த படைப்புகளின் மூலம் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரது மத்தியில் நல்ல அங்கிகாரத்தை பெற்றவர்.குறைவாக எடுப்பினும் நிறைவான தரமான படங்களை கொடுக்க நினைப்பவர்.இவரது திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சைன்ஸ் ஃபிக்சன் ஹாரர் படம்தான் தெ மிஸ்ட்..Thomas Jane, Marcia Gay Harden and Laurie Holden ஆகியோரின் நடிப்பில் ஸ்டீபன் கிங்கின் ஒரே தலைப்பிலான நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமிது.

    "மிஸ்த்" என்ற ஆங்கில சொல்லை தமிழில் "பனி மூட்டம்" அல்லது "மூடுபனி" என்று மொழி பெயர்க்கலாம்..தலைப்புக்கு ஏற்றாட் போல் படம் முழுவதும் பனியே சூழ்ந்து, எங்கு எது வந்து யாரை கவ்விக்கொண்டு போக போகிறதோ என்ற பயத்தை திரையில் தந்திருக்கிறார்கள்.அதுவே கதையோட்டத்திற்கும் பெரியளவில் துணைப் புரிகிறது (உடனே கதை என்ன என்பதை? கேட்க்காதீர்கள்..நம்பிக்கையோடு சென்று பாருங்கள்...கண்டிப்பாகப் பிடிக்கும்).


தொடங்கிய முதல் சில காட்சிகளிலேயே நம்மை நிமிர்ந்து உட்க்கார வைக்கிறது திரைக்கதை..டேவிட் ட்ரேயிடன் மற்றும் அவரது மகனான பில்லி, பொருட்கள் சில வாங்க செல்லும் சூப்பர் மார்க்கேட், அதனை சுற்றி திடீரென வரும் பனி மூட்டம் அதனுள் ஆபத்துகள் இதுதான் கதைக்களம்.சுமார் இரண்டு மணி நேரங்கள் ஓடும் திரையில், பெரும்பாலானவை சூப்பர் மார்க்கெட்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும்.. ஹாரர் என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது இருள்தான்..அந்த இருளை எடுத்துவிட்டு வெளிச்சத்தில் ரொம்ப திகிலாக பார்வையாளர்களை மிரட்டும் விதத்தில் காட்சிகளை படமாக்கிருப்பர்.இத்தனைக்கும் இதில் பேய், பிசாசு, சாத்தான், டிராகுலா, சோம்பிஸ் என்று எதுவுமே இல்லை..இது வேற..வேறங்க... பல காலமாக சினிமாவில் பார்த்ததுதான் என்றாலும் இதில் ஒரு சுவாரஸ்யம், சுவை இருக்கும்.

உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் கவனத்தையும் பெரும்பாலான விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருப்பது குறிப்பிடதக்கதாகும். நிச்சயமாக ஸ்டீபன் கிங்கின் கதைகளை தழுவி வந்த மிகச் சிறந்த திரைப்படங்களில் டாராபோண்ட் இயக்கிய திரைப்படங்களுக்கு ஒரு மிகச் சிறந்த இடம் உண்டு..கிரீன் மைல், சாவ்ஷாங்க் ரெடெம்ப்ஷன் ஆகிய படங்களோடு தெ மிஸ்டை சேர்க்க முடியாவிட்டாலும், கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட நல்ல ஹாரர்களில் ஒன்றாக கூறலாம்.

சாமர்த்தியமான திரைக்கதை, சலிப்புத்தட்டாத கதைச்சொல்லல் என எடுக்கப்பட்ட விதத்துக்காகவே இரு முறை தாராளமாக படத்தை காணலாம்..கிளைமக்ஸ் காட்சிகள் சான்ஸே இல்லை..நீண்ட நேரம் மனதில் பதிந்த வெல் மேட் ஸீக்குவன்ஸ்.

IMDB : 7.3 / 10
MY RATING : 7.5 /10
The Mist (2007) : One Of The Best Horror Picture Of Last Decade.
==========================================================================================
ஸ்டீபன் கிங்க் : எழுத்துக்களின் கிங்கு

 அமெரிக்கா மட்டுமல்ல உலகமெங்கும் தன்னுடைய திறம்பட எழுத்துக்களால் நாடுமொழி என்பதை தாண்டி ரசிகர்களை கொள்ளை கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளர்.கேரி என்ற தனது முதல் புதினத்தை 1974 ஆம் ஆண்டு வெளியிட்டதை தொடர்ந்து ஹாரர்ஃபேந்தஸிமர்மம்டிராமா போன்ற பலத்தரப்பட்ட வகைகளில் இதுவரை 49 நாவல்களை எழுதிவிட்டார். இன்னும் கோடிக்கணக்கான வாசகர்கள் இவருக்கு மிக பெரிய ரசிகர்களாக உள்ளனர்.இன்று மக்களால் மிகுந்த அளவில் சிறப்பாக வரவேற்ப்படும் Carrie (1976), The Shining (1980), The Dead Zone (1983), Misery (1990), The Shawshank Redemption (1994), The Green Mile (1999) திரைப்படங்கள் யாவுமே இவரது சிறுக்கதை, புதினங்கள் என்று திரைவடிவம் பெற்ற எழுத்து ஜாலங்களே.

ஸ்டீபன் கிங்க் என்ற ஹாரர் உலக எழுத்தாளரின் கைவண்ணத்தில் மலர்ந்த கதைகளை தழுவி வந்த இரண்டு படங்களையே இன்றைய பார்வைகளாக..:பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
============================================================================================

@ 1408 (2007)
@ A Film By Mikael Håfström
@ Stars: John Cusack, Samuel L. Jackson 

நமது ஜோன் குசாக்க்கும், சாமுவேல் ஜேக்சனும் நடித்த படம்..இருவரையுமே எனக்கு பிடிக்கும்..Mikael Håfström இயக்கத்தில் திரைக்கதையை Matt Greenberg, Scott Alexander, Larry Karaszewski ஆகியோர் எழுத, 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாரர் படம் 1408.அமானுஸ்யங்களை ஆராய்ச்சி செய்து எழுதி வருபவர் மைக் என்ஸ்லின்.நீண்ட காலமாக யாரும் தங்காத பல மர்மங்கள் நிறைந்ததாக கூறப்படும் 1408 என்ற ஹோட்டல் அறையை கேள்விப்பட்டு தங்க வருகிறார்.அங்கு நடக்கு சம்பவங்களே திரைக்கதை..இறுதி காட்சிகள் சற்று குழப்பும்படி அமைந்திருந்தாலும் சுவாரஸ்யமான ஹாரர் படமாக 1408 சொல்லலாம்.


வழக்கம் போல ஜொன் குசாக் மற்றும் ஜேக்சன், தத்தம் கதாபாத்திரங்களுக்கு மெருகூட்டி சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். இத்திரைப்படம் விமர்சக மற்றும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது குறிப்பிடதக்கதாகும்.ஹாரர் ரசிகர்கள் தவற விடாமல் பார்த்து ரசிக்கலாம்.

IMDB : 6.8 / 10
MY RATING : 6.1 / 10
1408 (2007) : Not Best..But Still Watchable

===================================================================================
ஒரு மட்டமானகுறிப்பு : இது ஒரு ஏற்கனவே எழுதினதுங்க (பழச தேடாதிங்கோ).நான் அப்ப எழுதி நானே படித்து பிடிக்காம போன ஒன்னு.அத சில மாற்றங்களுடன் கொடுக்க TRY பண்ணிருக்கேன். இப்பயும் நல்லாவே இல்ல.என் செய்வேன்.
பதிவுக்காக சில தகவல்களை வாசகர்களுக்கு திரட்டி கொடுக்க உதவிய கூகுளுக்கு நன்றிகள்.
=====================================================================================
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

38 comments:

  1. ஹா ஹா ... இப்பத் தான் உங்களப் பத்தி பதிவுல கேட்டுவிட்டு Google Readerக்குள்ள என்டர் ஆகுறேன். உங்க பதிவு வந்திருக்கு. இதுக்கு இங்கிலிஷ்ல நல்ல வார்த்தை ஒன்று இருக்கு. இப்ப வாயில வரல.

    எங்க இருந்தீங்க இவ்வளவு நாள்? ட்ரிப் ஏதாச்சு போயிட்டிங்களா? இல்ல படம் படமா பார்த்து தள்ளிட்டீங்களா??

    ReplyDelete
  2. விமர்சனம் நல்லாயிருக்கு. இரண்டுமே பார்த்த படங்கள் தான். 1408 படத்த பற்றி சொல்லத் தெரியல. படத்துல அந்த ரூம்ல என்ன நடக்குதுன்னே புரியல. அதுல பேயா, பிசாசா ஒன்னுமே தெரியல. ஆனா செம த்ரில்லிங்.

    த மிஸ்ட் எனது ஃபேவரிட் ஹாரர்களில் ஒன்று. நேற்றோ முந்தாநாளோ ஏதோ ஒரு மூவி சானலில் பார்த்த ஞாபகம்.

    ReplyDelete
  3. @@ ஹாலிவுட்ரசிகன் @@
    வணக்கம் நண்பரே, இப்பதான் உங்க பதிவ வாசிசுட்டு இங்க வறேன்..பார்த்தா கமெண்ட்ஸ்..மிக்க நன்றி.

    ReplyDelete
  4. @@ ஹாலிவுட்ரசிகன் @@
    << எங்க இருந்தீங்க இவ்வளவு நாள்? ட்ரிப் ஏதாச்சு போயிட்டிங்களா? இல்ல படம் படமா பார்த்து தள்ளிட்டீங்களா?? >>

    நீங்க டூரை இப்பதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்..இன்னொரு முறை ஒரு மாதம் காணாம போக வேண்டியது வந்தாலும் வரும்..ஹி..ஹி.
    ரெண்டாவதா சொன்னீங்களே, அது சரி..ஹூகோ தொடங்கி பாதர் பாஞ்சலி வரை சில நல்ல படங்களை தேர்வுச்செய்து பார்த்தேன்..எல்லாத்துக்கும் சேர்த்து விரைவில் என்னோட வீணாப்போன பார்வைகள் வந்துக்கொண்டே இருக்கு.பிளீஸ் டிரை டூ எஸ்க்கேப்..

    ReplyDelete
  5. @@ ஹாலிவுட்ரசிகன் @@
    இரண்டு படங்களையும் நீங்கள் பார்த்து ரசித்ததில் மகிழ்கிறேன்..தெ மிஸ்ட் என்னோட பேவரட்க்களிலும் ஒன்று..1408 சில இடங்களில் புரியாமல் சொதப்பலாக்கி விட்டது..அதனாலோ என்னவோ சரியா பிடிக்கவில்லை.பட் சரியான திரில்லிங்க் வகைப்படம் 1408 நீங்கள் சொன்னதுப்போல/.இனி தொடர்ந்து பதிவுகள் இட முயற்சிக்கிறேன்.மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் நண்பா!
    தங்கள் உறவுக்கார அண்ணனுக்கு என் தாழ்ந்த அனுதாபங்கள் :,-(

    "த மிஸ்ட்" படம் ஏற்கெனவே பார்த்துவிட்டேன். அருமையாக பொழுதுபோக்கிய படம்.. நான் பார்க்காமல் இருக்கும் "1408' பற்றி சிறிதாகவே எழுதியிருப்பதில் சின்ன ஏமாற்றம்.. என்றபோதிலும் பதிவு, இதன் ஒரிஜினல் பதிவை விட (வேணாம்னாலும் போய் பார்ப்போமில்ல..)சிறப்பாகவே வந்திருக்கிறது, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. @@ JZ @@
    என் ஒவ்வொரு பதிவுக்கும் தவறாது எவ்வளவு மொக்கையாக எழுதினும் வந்து கருத்திட்டு ஆதரவு வழங்கி வரும் தங்களைப் போன்றவர்களின் ஊக்கமே என்னை எப்போதும் எழுதத்தூண்டுகிறது.மிக்க நன்றி.தெ மிஸ்ட் எனக்கு ரொம்ப பிடித்த படம் என்றுதான் சொல்ல வேண்டும்..தெளிவான கதைச்சொல்லல், எந்த வித குழப்புமும் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும்.அதற்கு சரிவர நேராக 1408.கொஞ்சம் குழப்படியான படம்..இன்னும் இரண்டு முறை பார்த்துவிட்டு முழுமையாக புரியும்படி எழுதலாம் என்பதே என் பிளேன்..அதற்கு முன் என்னால் முடிந்த ஒரு சிறிய அறிமுகமே இப்பதிவில்.வணக்கம், நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. //என் ஒவ்வொரு பதிவுக்கும் தவறாது எவ்வளவு மொக்கையாக எழுதினும் வந்து கருத்திட்டு ஆதரவு வழங்கி வரும் தங்களைப் போன்றவர்களின் ஊக்கமே என்னை எப்போதும் எழுதத்தூண்டுகிறது.//
    இது நான் சொல்லவேண்டிய டயலாக் மாதிரி படுதே..

    //இன்னும் இரண்டு முறை பார்த்துவிட்டு முழுமையாக புரியும்படி எழுதலாம் என்பதே என் பிளேன்..//
    வெரீகுட்! 1408.. மறந்துடாம.. ஓ.கே?!

    ReplyDelete
  9. @@ JZ @@
    உண்மையை சொல்லனுமுனா நான் ஒரு டப்பா..ரியல் சினிமானா என்னான்னு இப்பதான் தொட்டுப்பார்க்கவே தொடங்கிருக்கேன்..திறம்பட தங்களது எழுத்துக்கள் எப்போதும் எனக்கொரு ரோல் மாடல்.
    கண்டிப்பா நண்பரே, எழுதத்தானே இருக்கேன்..விரைவில் பார்த்து விளக்கமா புரிந்துட்டு எழுதிடறேன்.டன்/

    ReplyDelete
  10. //திறம்பட தங்களது எழுத்துக்கள் எப்போதும் எனக்கொரு ரோல் மாடல்.//
    யப்பா.. இங்க வேற ஏற்கெனவே குளிருது.. நான் மறந்து ஏதும் காசு, கீசு உங்க பாங்க் அக்கவுண்டுக்கு அனுப்பிட்டேனா??

    சத்தியமா சொல்றேன், நீங்க யோசிக்கற அளவுக்கெல்லாம், நான் பெரிய பீஸே கிடையாது! நீங்க IMDB 250ல பார்த்தத விட கம்மிதான் நான் பார்த்திருக்கேன்.. ஏதோ, அனிமேஷன்னா வரிஞசு, கட்டிக்கிட்டு பார்ப்பேன்.. அவ்வளவுதான்! 2012, avatar இந்த மாதிரி ஃபேமஸாகுற படத்துக்கு விமர்சனங்கற பேருல ஏதாச்சும் எழுதுவோம்னுதான் ப்ளாகே தொடங்கினேன்.. பிறகு Inception இடையில புகுந்து டேஸ்ட்டையே மாத்திருச்சு..

    இதுக்கு மேல ஏதாவது உடால்லாம் வந்திச்சு.. மலேசியாவுக்கு ஃப்ளைட் எடுத்து வந்து திட்ட வேண்டியதாயிடும்.. ஆமாம்!

    ReplyDelete
  11. அப்பாடா வந்துடீங்களா?
    எனெக்கு பிடித்த திகில் பதிவு. தி மிஸ்ட் என்னிடம் ரொம்ப நாளாக இருக்கிறது.பார்க்க தோணவில்லை.உங்கள் பதிவை படித்தவுடன் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. 1408 அருமையான படம். 2 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்து உள்ளேன். ஸ்டீபன் கிங் எழுதிய படங்களில் thinner,the dark half,the dead zone,the shining போன்ற படங்கள் பார்த்துள்ளேன். ஒன்றொன்றும் வித்தியாசமான கரு உடையவை. முயன்று பாருங்கள்.

    ReplyDelete
  12. வாங்க..வாங்க..தாராளமா இங்க வாங்க..உங்கள போன்றவர்களை எண்ணிக்காவது மீட் பண்ணுவோம் என்கிற நம்பிக்கையிலதான் இருக்கேன்.அது நனவாகட்டும்.உண்மையை சொன்னால் பலரும் கேட்க்கமாட்டாங்க.நீங்க உங்கள தாழ்த்திக்கிறது புரிது.திறமையும் குணமும் இருக்கிற உங்களைப் போன்றவர்களுக்கு இதுல்லாம் சாதாரணம் தானே நண்பரே..

    அங்க குளிருதா..எனக்கு இங்க லேசா காய்ச்சல்..எங்கோ ஒத்துப்போகுற மாதிரியே இருக்கே.எல்லாம் ராசிதான்.உண்மையில் தங்களது இன்செப்ஷன் படத்தொடர்தான் என்னை எழுதவே தூண்டியது.அதுவும் தங்களை ரோல் மாடலாக சொல்லக் முக்கிய காரணம்.நீங்க என்னதான் மனசால திட்டினாலும் நான் புகழ வேண்டியவங்கள புகழ்ந்தேத்தீருவேன்.அம்புட்டுதான்.நன்றி.:)

    ReplyDelete
  13. JZ - Kumaran : கருத்து யுத்தம் நல்லாயிருக்கு. கன்டின்யு. விமர்சனத்தை விட இந்த பாராட்டு மழை சூப்பர். ஹி ஹி

    ReplyDelete
  14. @@ scenecreator @@
    சார் வந்துட்டேன்..உங்களை போன்றவர்களின் ஊக்கமே அதற்கு துணைப்புரிகிறது..மதியமே தங்களது வலைக்கு வந்தேன் படித்தேன்..சூப்பராக உள்ளது..ஏதோ பின்னூட்டமிட மறந்துவிட்டதை இப்பதான் உணர்கிறேன்.மிக்க நன்றி.

    1408 நீங்கள் பார்த்து ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி.தெ மிஸ்ட்டும் பார்த்து விடுங்கள்..அருமையான ஹாரர் திரில்லர் விருந்தாக இருக்கும்..

    ReplyDelete
  15. @@ ஹாலிவுட்ரசிகன் @@
    ரசிகரே, விமர்சனத்தை விட கருத்துயுத்தம் உங்களை கவர்ந்ததிலும் மிக்க மகிழ்ச்சி..என்னமோ தெரில JZ என்ன சொன்னாலும் ஏத்துக்க மாட்டேங்குறாரு.அடம் பிடிக்கிறாரு.இதுல உங்கள புகழ சான்ஸ் கிடைக்கலனு எனக்கு வருத்தம்தான்..அடுத்த பதிவுல உங்கள வச்சி மறுப்படி ஒரு யுத்தம் தொடங்கிற வேண்டியதுதான்.ஹி..ஹி.:)))

    ReplyDelete
  16. 1408 (2007), The Mist (2007) மற்றும் ஹாரர் கிங்க்ஸ் ...விமர்சனம் நல்லாயிருக்கு...

    ReplyDelete
  17. @@ ரெவெரி @@
    வருகைக்கு நன்றி சார்..

    ReplyDelete
  18. //அடுத்த பதிவுல உங்கள வச்சி மறுப்படி ஒரு யுத்தம் தொடங்கிற வேண்டியதுதான்.ஹி..ஹி.:)))//
    கரெக்டு.. நானும் உங்க பக்கம் வந்துடுறேன்.. 2 on 1 ஆட்டத்தை சமாளிக்க ஹா.ரசிகன் தான் சரியான ஆளு!


    //இப்ப மட்டும் பிரபல பதிவர் ஆகிட்டதா நினைப்போன்னு நீங்க கேட்பது புரியுது// இப்பிடீன்னு தல ஒரு கேள்விய தன்னோட பதிவுல வேற போட்டாரு.. நீங்க புகழ்ற புகழ்ச்சில ஓவர்நைட்ல தல பிரபல பதிவராயிடனும்.. புரியுதா?

    ReplyDelete
  19. @@ JZ @@
    புரியுது புரிது அமைச்சரே..தங்களது திட்டங்கள் தெளிவாக புரிகிறது...ஆகிட்டா போறது..

    ReplyDelete
  20. சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வருகை புரிந்தமைக்கு என் வாழ்த்துக்கள்..
    உங்கள் உறவுக்கார அண்ணனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் :(
    The Mist பற்றி ஒரு நல்ல அறிமுகத்தை குடுத்து உள்ளேர்கள் !! படம் இன்னும் பார்க்க வில்லை. படத்தின் Plot நன்றாக உள்ளது... பார்க்க வேண்டும்..
    "1408" படம் வெளியான புதிதுதில் தியேட்டர்ல பார்த்தேன்... பொறுமையை ரொம்ப சோதித்த படம் !! படம் என்னை கவர வில்லை :)

    ReplyDelete
  21. @@ ராஜ் @@
    வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே, தங்களது அனுதாபங்கள் அவருக்கு போய் சேரட்டும்.
    சென்ற பத்தாண்டுகளில் ஒரு நல்ல ஹாரர் படமாக தெ மிஸ்ட்டை சொல்லலாம்.1408 சுற்றி வலைத்து சொல்ல வந்தது புரியவில்லை..அதனால் சற்று பிடிக்கவில்லை..நன்றி.

    ReplyDelete
  22. வணக்கம் குமரா.
    நல்லா இருக்கீங்களா?

    இன்பமும் துன்பமும் இணைந்தது தானே வாழ்க்கை!

    எல்லாவற்றையும் மறந்து...மீளவும் துடிப்போடு வாருங்கள்!

    ReplyDelete
  23. உங்களுக்கு திகில் படம் எல்லாம் பிடிக்குமா?
    ஒரு திகில் டாக்குமெண்டரி தொகுப்பை நான் தமிழில் மொழி பெயர்க்கலாம் என்றிருக்கேன்! எப்பூடி/

    ReplyDelete
  24. வெளிச்சத்தில் திகில் படம்....வித்தியாசமாக இருக்கும்! கண்டிப்பாக பார்க்கிறேன். அறிமுகப் படமும் சூப்பர் தல!

    ReplyDelete
  25. @@ நிரூபன் @@
    தங்களது இனிய வாழ்த்துக்கள், ஊக்கங்களுடன் நன்றாக இருக்கிறேன் நண்பரே..இனி அடிக்கடி எழுதுவேன்.

    ReplyDelete
  26. @@ நிரூபன் @@
    வெறித்தனமான, மிக பெரிய ஹாரர் ரசிகன் நானல்ல நண்பரே..ஏதோ நல்லப்படங்களை அவ்வப்போது பார்க்க முயற்சிப்பேன்.
    தங்களது அந்த தொகுப்பை எதிர்ப்பார்த்து காத்திருப்பேன் என்பதில் சந்தேகமில்லை.இவ்வளவு தங்களது பதிவுகள் பலவற்றை சரிவர படிக்காததால் பின்னூட்டம் இட முடியவில்லை/மன்னிப்பு.

    ReplyDelete
  27. @@ நிரூபன் @@
    மீண்டும் தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..படம் பாருங்கள்.இரண்டில் ஒன்றாவது கண்டிப்பாக பிடிக்கும்.

    ReplyDelete
  28. நண்பா, உங்களிடம் பேஸ்புக் இருக்கா?

    ReplyDelete
  29. @@ நிரூபன் @@
    இருக்கு நண்பரே..பட் அடிக்கடி போகும் பழக்கம் குறைவு..ஓய்வு நேரத்தில் கட்டாயம் இருப்பேன்.முகவரி இதோ : http://www.facebook.com/thava.spyhero

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. @@ நிரூபன் @@
    ஓக்கே..நண்பா...இணைந்துட்டேன்.

    ReplyDelete
  32. குமரன்.. தி மிஸ்ட் டிவிடி வாங்கி வெச்சும் இன்னும் நான் பாக்காத படங்கள்ல ஒண்ணு, பாத்துடறேன்... ஒரு சிறு இடைவெளி எல்லாருக்கும ஏதொ ஓர் கட்டத்தில் நேர்வதுதான். தொடர்ந்து உற்சாகமாக இயஙகி எங்களையும் உற்சாகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. @@ கணேஷ் @@
    வாங்க சார், தங்கள் வருகைக்கு என் மனமார்ந்த வணக்கத்தோடு நன்றி..படம் பாருங்கள்..பிடிக்குமென நம்புகிறேன்.இனி அடிக்கடி எழுதுகிறேன்.

    ReplyDelete
  34. இப்பதான் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. இப்படியே கண்டின்யூ பண்ணுங்க. பெர்சனலா, எனக்கு 1408டின் ஒருசில காட்சிகளே பிடிச்சது. இருந்தாலும், பார்க்கவேண்டிய படந்தான்.

    அப்பால, இந்த மிஸ்ட் படத்தை பத்தி, ஒரு வெண்ணை ஆல்ரெடி எழுதி வெச்சிருக்கு. அந்த வெங்காயத்தோட பேரு கருந்தேள்ன்னு சொன்னங்க.

    ReplyDelete
  35. @@ Rajesh Da Scorp @@
    சார், நானும் உங்களோட விமர்சனத்த படிச்சிருக்கேன்.சூப்பரான விமர்சனம் அது சார்,.நான் படம் பார்க்க உங்க எழுத்துக்களும் ஒரு காரணம், இதுல ஒரு தெளிவான உண்மை என்னான்னா பதிவுலகத்துக்கு வந்து சினிமா பற்றி எழுத வேண்டுமென்ற எண்ணமே உங்கள போன்றவங்கள பார்த்துதான் வந்தது.நீங்களே டைம் ஒதுக்கி இவ்வளது தூரம் வந்து, என்னையும் ஒருத்தனா நினைத்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் சார், உங்க ஆதரவு வேண்டும்.அடிக்கடி ஓய்வுப்பொழுதில் வாங்க சார்..
    பிறகு, உங்கள நீங்க உங்கள என்னதான் குறைச்சிச்சொன்னாலும் எனக்கு One Of The Best.

    ReplyDelete
  36. இந்த படங்களை இதுவரை நான் பார்த்ததில்லை. இனிமேல் பார்க்க முயற்சிக்கிறேன்! தங்களது துக்கத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  37. நண்பரே, தங்களது முதல் இனிய வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.படம் பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கலாம்..அடிக்கடி இந்த பக்கம் வாருங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...