Sunday, 6 November 2011

House Of Usher - 1960 : மாளிகையின் ரகசியம்..

தொடர்ந்து ஆதரவு வழங்கும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.நண்பர்கள் அனைவரும் தாரளமாக தங்களது கருத்துகளை பகிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.மேலும், ஒருவேளை தங்களுக்கு எனது எழுத்துக்கள் பிடித்திருந்தால் உங்களுக்கு அறிமுகமான நண்பர்களுக்கு தெரிவிக்கவும்.இவை, எனது எழுத்துக்களை மென்மேலும் ஊக்கபடுத்தவும் மேம்படுத்தவும்  மிகப் பெரிய துணைப்புர்யும் என்ற நம்பிக்கையோடு இன்றைய சிறு "பார்வை".. 


Film : House Of Usher    Year : 1960
Country : America        Rating : PG
Director : Roger Corman     Writers : Edgar Allan Poe (story), Richard Matheson
Stars : Vincent Price, Mark Damon and Myrna Fahey
Awards : 2 wins << See more awards >>>                                     

இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த படம் இது.வலைப்பூ தொடங்கியதிலிருந்து வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஹாரர் படங்கள் பார்ப்பது வழக்கம்.அந்த வரிசையில் நள்ளிரவில் பார்த்த படம்..

  ஹௌஸ் ஒஃப் உசெர் - ரிச்சர்ட் மாதேசன் என்பவர் திரைக்கதை எழுத ரோஜர் கார்மென் இயக்கத்தில் 1960 - ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.சுமார் ஐம்பது வருடங்கள் கடந்த பின்பும் சிறந்த க்ல்ட் கிளாச்சிக்குகளில் ஒன்றாக கருதபடும் இப்படத்தில் Vincent Price, Mark Damon, Myrna Fahey மற்றும் Harry Ellerbe நடித்திருக்கின்றனர்.

கதைச்சுருக்கம் :

நீண்ட பயணத்துக்கு பிறகு Philip Winthrop (Mark Damon) என்பவர் ஒரு மர்மமான இருண்ட சேற்றுனிலத்தை சுற்றி அமைந்திருக்கும் ஒரு பழைய மாளிகையான ஹௌஸ் ஒஃப் உசெருக்கு வந்து சேர்கிறார்.முதல் வார்த்தையே விட்டில் வேலை செய்யும் ஒரு பணியாளரிடம் தொடங்குகிறது."வீட்டில் குடியிருக்கும் Madeline Usher (Myrna Fahey) என்ற பெண்ணிடம் தான் ஏற்கனவே நிச்சயிக்கபட்டதாகவும் அவரை அழைத்துச்செல்லவே இங்கு வந்திருப்பதாகவும்" என்று அந்த வயதான பணியாளரிடம் கூறுகிறார்.முதலில் அனுமதி கொடுக்க மறுக்கும் அவர் பிறகு ஒருவழியாக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கபடுகிறார்.கூடவே கொஞ்சம் 'வித்தியாசமான' முறையில் வரவேற்க்கவும்படுகிறார்.இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது திடீரென்று குறுக்கே வருகிறார் Madeline அண்ணனான Roderick (Vincent Price).வந்த விருந்தினரான Philip Winthrop உடனே விட்டை விட்டு போகுமாறு இல்லையெனில் சில விபரீதங்களை சந்திக்க நேரிடும் எச்சரிக்கிறார்.ஆனால் கட்டாயமாக அதனை மறுக்கிறார்..


இதற்கு பிறகு சில வினோதமான வித்தியாசமான நிகழ்வுகள் சில நடக்கின்றன..இதற்கு காரணம் என்ன ? எதனால் இவர்கள் இப்படி நடந்துக்கொள்கிறார்கள் ? Philip தன்னுடைய காதலியான Madeline இந்த இடத்தைவிட்டு அழைத்துச்செல்கிறாரா ? இந்தா மாளிகைக்கு பின்னால் இருக்கு ரகசியங்கல் என்னென்ன ? என்பதுப் போலான பல கேள்விகலுக்கு 60 ஆம் ஆண்டுகளுக்கே உரிய ஹாரர் ஸ்டைலில் பதில் சொல்கிறது இந்த படம்.

(என்னோட எழுத்தை படித்தால் பலருக்கு இந்த படம் பிடிக்காமல் போகவே வாய்ப்பு அதிகம்..என்ன செய்வது..இன்னிக்கு மைண்ட் சரியில்ல..சாரி)


+++++++++++++++++++++++++++
HOUSE OF USHER : DVD RIP
+++++++++++++++++++++++++++

ஹௌஸ் ஒஃப் உசெர் என்ற திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :


  •  மீண்டும் வின்சென்ட் ப்ரைஸ்..இவரை பற்றியும் இவர் நடித்த ஒரு படத்தை பற்றியும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்..என்னமா.நடிக்கிறாரு இந்த மனுஷர்..தனக்கே உரிய முகபாவனைகளிலும் உடல்மொழிகளிலும் எக்ஸ்பிரஷங்களிலும் மிகவும் அருமையாக இப்படத்தில் நடித்திருக்கிறார்..படத்தின் உயிர் நாடியே இவர்தான்..மேலும், சொல்ல வார்த்தைகள் இல்லை..திரையில் காணுங்கள் இந்த சிறந்த நடிகனின் நடிப்பாற்றலை..


===============

  • இப்படத்தில் இன்னும் ஒரு ஸ்பெஷலான விஷயம், இப்படத்தில் நடித்த நடிகர்கள் மொத்தம் நால்வர்தான்..வெறும் நான்கு  காதாபாத்திரங்களை வைத்து இந்த படத்தை நன்றாக நகர்த்தியதற்கு முதலில் திரைக்கதை ஆசிரியருக்கும் இயக்குனருக்கும் கண்டிப்பாக நன்றிகள் கூற வேண்டும்..அதுவும், இந்நால்வரின் நடிப்புப் மிக நன்று.


=========================

  • இந்த படம் பல விமர்சனர்களால் சிறப்பாக பாராட்டபட்டதோடு, இன்றளவும் சிறந்த ஹாரர் கல்ட் கிளாசிக்காகவும் விளங்க்குகிறது..தற்பொழுது இந்த படம் ரோட்டோன் தொமொதோஸில் 85 சதவீதம் பெற்றுள்ளது மேலும் ஒரு சிறப்பாகும்.


===================================


  • Edgar Allan Poe ((born Edgar Poe, January 19, 1809 – October 7, 1849)) என்ற அமெரிக்க ஹாரர் எழுத்தாளரை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு..ரோஜர் கார்மென் இயக்குனரின் அறிமுகத்தில் கிடைந்த ஒரு பெரிய பொக்கிஷம் எனலாம்.இவர் 1800 களில் வாழ்ந்தவர்.இவருடைய நிறைய கதைகள் திரைப்படங்களாகவும் உருவெடுத்திருக்கின்றன.அந்த வகையில் இயக்குனரான கார்மென் இவருடைய சிறுக்கதைகளை தழுவி இதுவரை 8 படங்களை எடுத்துள்ளார்.அந்த 8 - இல் முதன் முதலாக வெளிவந்தது இந்த படம்தான்.இதே வரிசையில் வந்த தெ ஹௌண்டெட் பேலஸ் படத்த ஏற்கனவே எழுதியுள்ளேன்.


================================================================

   இறுதியாக சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஹாரர் ரசிகர்கள் அதுவும் பழைய திகில் படங்களை தேடி வருபவர்கள் கட்டாயம் பார்க்கலாம்.(என்னைப்போல)

My Rating : 6/10 : Not Very Best..But Still Watchable.

கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

2 comments:

  1. பதிவு அருமை.
    இதே மாதிரி இன்னும் நிறைய கிளாசிக் ஹாரர் திரைப்படங்களை அறிமுகப்படுத்துங்கள் நண்பரே.
    உங்கள் பதிவுகளால், நான் அறியப்படாத நிறைய படங்கள் அறியப்படுகிறேன் நன்றி.

    ReplyDelete
  2. Arun J Prakash said...
    << பதிவு அருமை.
    இதே மாதிரி இன்னும் நிறைய கிளாசிக் ஹாரர் திரைப்படங்களை அறிமுகப்படுத்துங்கள் நண்பரே.
    உங்கள் பதிவுகளால், நான் அறியப்படாத நிறைய படங்கள் அறியப்படுகிறேன் நன்றி.>>>

    பாராட்டுக்கு நன்றி நண்பரே.
    கண்டிப்பாக உங்கள் விருப்பத்தை தொடர்ந்து நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...