இந்த மாதத்தின் முதல் பதிவிது..
1) Film : Drag Me To Hell - 2007 : சாபத்தின் விளைவு..
==================================================
1) Film : Drag Me To Hell - 2007 : சாபத்தின் விளைவு..
முதலில் இந்த படத்தை எனக்கு அறிமுகபடுத்திய "கருந்தேள் கண்ணாயிரம்" அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..அவரது விமர்சனமே இந்த படத்தை பார்ப்பதற்கு ஒரு ஆர்வத்தை கூறிக்கொள்வதோடு...இன்றைய சிறிய "பார்வை"..
தெ எவில் டெத் சீரீஸ், ஸ்பைடெர் மென் போன்ற படங்களை இயக்கிய சாம் ராய்மி எடுத்த படம்..இந்த டிரக் டு மி ஹெல்.. பேண்டசி, டிராமா போன்ற வகைகளுக்குள் சிக்கிக்கொண்டு பல படங்களை எடுத்த சாம் ராய்மி, தன்னுடைய சொந்த ஸ்டைலான வகையான ஹாரருக்கு திரும்பி வந்து எடுத்த படம்.Alison Lohman, Justin Long மற்றும் Ruth Livier ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, திரைக்கதையை இயக்குனரோடு சேர்ந்து தன்னுடைய அண்ணனான Ivan Raimi எழுதியுள்ளார்.இவர் ஒரு டாக்டரும் ஸ்பைடெர் மென் படங்களில் கதை எழுத உதவி செய்தவரும் ஆவார்..விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் அமோக வரவேறப்பை பெற்ற இந்த படம் 2007 - ஆம் ஆண்டு வெளிவந்த ஹாரர் த்ரிலர் வகையைச் சார்ந்த படமாகும்.
கிறிஸ்டின் பிரவுன் ஒரு வங்கியில் பணிப்புரியும் கடனுதவி அதிகாரி.தனது வீட்டு மாத கட்டணத்தை தள்ளிப்போட ஒரு வயதான பாட்டி வநிக்கு வருகிறார்.எதிர்ப்பாராத விதமாக பிரவுனுக்கும் இவருக்கும் தகராறு ஏற்படுகிறது..SO..பாட்டி சும்மா இருக்குமா எல்லா பெரிசுங்கள போல சாபத்தை விட்டு சென்று விடுகிறது..இங்க ஆரம்பிக்கிற பிரச்சனைதான் நம்ம ஹீரோயினுக்கு,,கடைசி காட்சி வரைக்கும் விறு விறுப்பு குறையாமல் மிரட்டுராறு நம்ம டைரக்டரு..(கதையை எவ்வளாவு (இதுவா கத ?) சுருக்க முடியுமோ அந்தளவுக்கு சுருங்க எழுதி இருக்கிறேன்..ஏனெனில், நீள எழுதினால் ஒருவேளை பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்தை இழக்க வாய்ப்புகள் உண்டு.)..SO, Why do you waiting for so long..just download. for free at below.
+++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++
My Rating : 7/10
திடீரென்று Detroit நகர மக்கள் காணமால் உண்மையில் மறைந்து போக, மீதம் மிஞ்சுபவர்களின் கதையை சுவாயாக சொல்ல நினைத்து கொஞ்சம் சொத்தப்பிய படம் இது..(ஆனா எனக்கு ஓரளவு பிடிச்சது..(நம்ம டேஸ்டு அந்த மாதிரில்ல ஹி..ஹீ.)
Brad Anderson என்பவரின் இயக்கத்தில் Hayden Christensen, Thandie Newton மற்றும் John Leguizamo போன்றவர்களின் நடிப்பில் வெளிவந்த post-apocalyptic ஹாரர் திரில்லர் படமாகும்.திரைகதையை எழுதி இருபவர் Anthony Jaswinski.2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம், விமர்சன ரீதியில் சற்று குறைவாகவே வரவேற்பு பெற்றிருந்தாலும், வசூலில் மொத்தமாக சறுக்கிய மிகப்பெரிய ஏமாற்றமே.அநேகமாக இயக்குனர் எடுத்த படங்களிலேயே இதுதான் இந்த அளவிற்கு ரசிகர்கள் விமர்சனர்கள் மத்தியில் செம்மையாக குத்தி கிழிக்கபட்ட படம் எனலாம்.
யாரு எப்படி சொன்னா..என்ன..நமக்கு படம் புடிச்சா சரி என்று மனதைரியம் உள்ளவர்கள் தாராளமாக இந்த படத்தை கண்டு ரசிக்கலாம்..மொக்கையான படமென்று பலர் கருதினாலும் என்னைப் போல பலருக்கும் பிடிக்க வாய்ப்புள்ளது..எனவே, பார்க்காதவர்கள் படத்தை கீழே இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.
+++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++
My Rating : 6/10
பி.கு : வாசக நண்பர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம்..மேலும், எனது எழுத்துக்கள் உங்களை கவர்ந்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்தவும்.
ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்களாம்.அதுவரை நன்றி.. வணக்கம்.
உங்கள் ஆதரவோடு
உலக சினிமா ரசிகன் said...
ReplyDelete<< “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.>>>
கண்டிப்பாக அண்ணா..என் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்.