Follow by Email

Saturday, 12 November 2011

Fahrenheit 451 - 1966 : புத்தகங்கள் இல்லா உலகம் - பிரான்சயிஸ் ட்ருபாட்டின் இன்னொரு மாஸ்டர்பீஸ்.   பாரன்ஹீட் 451 - சிறந்த திரைப்படம் என்பதைத் தாண்டி, படம் முடிந்தும் மனதில் நீண்ட நேரம் மனதோரமாய் ரீங்காரமிட்ட ஒரு திரைப்படைப்பு, நிறையவே யோசிக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது எனலாம்..


எதிர்க்காலம் என்பது எத்தனையோ விந்தைகளையும் ரகசியங்களையும் கற்பனைகளுக்கு எட்டாத ஒரு புதிய உலகை தனக்குள் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.அது எப்படி இருக்கும் ? எவ்வகையிலான மனிதர்கள் அந்த கணம் வாழ்வார்கள் ? என்பதுப் போன்ற கேள்விகள் இந்த கணம் என்னை வியப்பில் ஆழ்த்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை..

கற்பனைகள் செய்து பாருங்கள் நண்பர்களே : இது எதிர்க்காலத்தில் நிகழலாம்,
புத்தகங்கள் என்பது நமது அறிவையும் வாழ்க்கை தரத்தையும் மென்மேலும் பெருக்கிக்கொள்ள உதவுகின்றன,அத்தகைய புத்தகங்கள்... சட்டங்கள் ரீதியில் தடை செய்யபட்டால் ? எல்லா நூல்களையும் எரிக்கவேண்டிய கட்டாயம் நிகழ்ந்தால் ? தொலைக்காட்சி, நூல்கள் என அனைத்தையுமே தத்தம் நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மக்களின் நிலைமை என்ன ?
என்ற இதனை மிக ஆழமான தெளிவான திரைக்கதை மற்றும் இயக்கத்தின் மூலம் நம்மை வேறொரு காலத்திற்க்கு அழத்துச்செல்லும் திரைப்படம்தான் 
++++++++++++++++++++++++++++++++++++++++
Free Download : Fahrenheit 451 - Part One, Two
+++++++++++++++++++++++++++++++++++++++

பாரன்ஹீட் 451,
   1966 - ஆம் ஆண்டு பிரான்ஸ் சினிமா உலகின் தலைச்சிறந்த இயக்குனரான François Truffaut என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த சைன்ஸ் பிக்சன் திரில்லர் ஆகும்.Ray Bradbury என்பவர் நாவலை தழுவி இயக்குனரோடு Jean-Louis Ricard என்ற திரைப்படைப்பாளர் திரைக்கதை அமைக்க, Julie Christie மற்றும் Oskar Werner முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
===========================================
Fahrenheit 451 திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :
 • இயக்குனர் François Truffaut, ஆங்கில மொழியில் எடுத்த ஒரே படம் என்பதோடு முதல் கலர் படமாகும்.

 • // நடிகை Julie Christie பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.ஹாலிவுட்டை கலக்கிய சிறந்த நடிகைகளில் ஒருவர்.இவர் நடிப்பில் 1973 - ஆம் ஆண்டு வெளிவந்த Don't Look Now என்ற அருமையான படத்தை சில நாட்களுக்கு முன்புதான் காண வாய்ப்பு கிடைத்தது.//

   இந்த படத்தை பொருத்தவரை இதில் இவருக்கு ரெண்டு கதாபாத்திரங்கள்.Linda Montag மற்றும் Clarisse என்ற கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்..படதிற்க்கு இன்னும் ஒரு பலம் இவரது நடிப்பு.
==========================================
 • படத்தின் கதாநாயகனாக Montag என்ற கதாபத்திரத்தில் நடித்த Oskar Werner நடிப்பும் பிரமாதம்.

=========================================
 • உலகளவில் சிறந்த படங்களில் ஒன்றாக பெரும்பான்மையான விமர்சனர்களால் கருதப்படுவதோடு திரைப்பட ரேட்டிங்க் தளமான ரோட்டென் டொமொதொஸில் தற்சமயம் இத்திரைப்படம் 83 சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

========================================
 • திரைப்பட கதாநாயகியான Julie Christie சிறந்த நடிப்பிற்க்காக பாஃப்தா விருதுக்கு பரிந்துரைக்கபட்டது மேலும் ஒரு சிறப்பாகும்.

=======================================
 • பிரபல இயக்குனர் Martin Scorsese, தனக்கு பிடித்த படங்களில் ஒன்றாகவும் அதிக அளவில் அண்டெரேட்டட் செய்யபட்ட திரைப்படமாக கூறியுள்ளார்.(படம் முடியும்போது எனக்கும் அப்படிதான் தோன்றியது.

=======================================
 • மேலும், படத்தின் இறுதி முடிவுகள் நான் எதிர்பார்க்காத ஒன்று..படத்தில் என்னை அதிகபட்சமாக சிந்தனைகளில் ஆழ்த்திய காட்சிகளில் இதுவும் ஒன்று.படம் பாருங்கள்./

===========================================
   இறுதியாக, நீண்ட நாட்களாக நல்ல சைன்ஸ் பிக்சன் படங்களை தேடி வருபவர்களுக்கு இது ஒரு தனி விருந்து என்று சொல்லலாம்.அதே வேளை இது சில ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகவும் வாய்ப்புகள் உண்டு.எதற்க்கும் டிரைலரை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.
============================================
இயக்குனர் Francois Truffaut
6 February 1932 ஆண்டு Paris, France பிறந்த இவரை தொடர்ந்து உலக திரைப்படங்களை பார்த்து வருபவர்களுக்கு நன்கு அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.The 400 Blows (1959) என்ற சிறந்த படைப்பின் மூலம் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக கலைஞர்களின் பார்வைகளை தன் பக்கம் திருப்பியவர்.இதே படத்திற்க்காக இரண்டு ஆஸ்கர் பரிந்துரைகளை பெற்றதோடு கேன்ஸ் திரைப்ப்ட விழாவினில் சிறந்த இயக்குனருக்கான பரிசை வெற்றிக்கொண்ட உன்னத படைப்பாளர்.இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் மிகப் பெரிய ரசிகர்களில் இவரும் ஒருவர்.
  இவரது மற்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் : Shoot the Piano Player (1960), Two English Girls (1971), The Wild Child (1970) The Last Metro (1980).இதில் Day for Night (1973) என்ற படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கதாகும்.இன்றளவும் சென்ற நூற்றாண்டின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பிரான்சயிஸ் ட்ருபாட், October 21, 1984 (age 52) மிக குறுகிய வயதில் உலகை விட்டு மறந்தது சினிமா உலகின் மிகப் பெரிய இழப்பு...நாம் இழந்தது சிறந்த இயக்குனரை மட்டும் அல்ல ஒரு சிறந்த சினிமா விமர்சகரும்தான்.. 
============================================
My Rating : 7.9/10
============================================================== 
   கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

7 comments:

 1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 2. விமர்சனம் மிக அருமை. இது மாதிரியே சிறந்த சைன்ஸ் பிக்சன் திரைப்படங்களை நிறைய அறிமுகப்படுத்துங்கள்.

  ReplyDelete
 3. Arun J Prakash said...
  << விமர்சனம் மிக அருமை. இது மாதிரியே சிறந்த சைன்ஸ் பிக்சன் திரைப்படங்களை நிறைய அறிமுகப்படுத்துங்கள்.>>
  தங்களது பாராட்டுக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..
  கண்டிப்பாக பல படங்களை பற்றி எழுத முயற்சிசெய்கிறேன்..நன்றி.

  ReplyDelete
 4. படத்தை விவரித்த விதம் அருமை. அதே சமயம், உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கலாமே? இன்னும் பல வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வர வாய்ப்பு உண்டு. பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete
 5. N.H.பிரசாத் said...
  << படத்தை விவரித்த விதம் அருமை. அதே சமயம், உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கலாமே? இன்னும் பல வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வர வாய்ப்பு உண்டு. பகிர்தலுக்கு நன்றி.>>>

  தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
  எனது மீது தாங்கள் கொண்ட அக்கறைக்கு மிகுந்த நன்றிகள் மற்றும் விரைவில தமிழ்மணத்தில் இணைகிறேன்.

  ReplyDelete
 6. உங்கள் வருகைக்கு பிறகுதான் உங்கள் பதிவுகளை படித்தேன் . உங்கள் வயது பதினெட்டுதானா? ஆச்சர்யம் அருமை இத்தனை சிறிய வயதில் உலக திரைப்படம் குறித்து இத்தனை தெளிவான பார்வை ... அற்புதம் .. உங்கள் வலைப்பூ பார்த்த பிறகு இளைய தலைமுறை மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது வாழ்த்துகள்

  ReplyDelete
 7. பாரதிக்குமார் said...
  < உங்கள் வருகைக்கு பிறகுதான் உங்கள் பதிவுகளை படித்தேன்>

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள் ஐயா,,நீங்கள் வந்ததே பெரிய விஷயம்..

  <<< உங்கள் வயது பதினெட்டுதானா? ஆச்சர்யம் அருமை இத்தனை சிறிய வயதில் உலக திரைப்படம் குறித்து இத்தனை
  தெளிவான பார்வை ... அற்புதம் .. உங்கள் வலைப்பூ பார்த்த பிறகு இளைய தலைமுறை மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது வாழ்த்துகள்>>

  ஆமாம் ஐயா..அடுத்த வருடம் மார்ச் மாதம் 19 - ஆவது வயதை தொட இருக்கிறேன்.தங்களது உற்சாகமான வார்த்தைகள் என்னை ஊக்கபடுத்துகின்றன.

  எனது பெற்றோர்கள் மிக பெரிய திரை ரசிகர்கள் என்று சொல்லலாம்..இங்கு, மலேசிய படங்கள், பழைய தமிழ் ஹிந்தி படங்கள், ஆங்கில வெஸ்டர்ன் & ஆக்சன் படங்களின் மீது ஆர்வங்கள் நிறைந்தவர்கள்..சிறிய வயதினிலிருந்தே இவர்களுடன் இணைந்து நானும் படங்களை பார்த்து ரசிப்பேன்.குங்க் பூ, ஆக்சன் படங்கள் என்று அனைத்துமே நெஞ்சோரமாய் பதிந்த முதல் சினிமா துளிகள்,

  ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பு எதர்ச்சையாக தங்களை போன்ற சிறந்த பதிவர்களின் எழுத்துக்களின் அறிமுகம் கிடைத்ததோடு அடிமையும் ஆகினேன்..தங்களை போன்றவர்களின் திரைப்படங்களின் மீதான பார்வைகள் என்னை வேறொரு சினிமாவுக்கு அழைத்து வந்ததே உண்மை.நாட்கள் கடக்க இணையத்தின் அறிவும் கொஞ்சம் வளர்ந்தது..சில திரைப்படைப்புகளை பதிவிறக்கம் செய்து பார்த்து ரசிகனாக துவங்கினேன்..தங்களை போன்றவர்களின் எழுத்து வண்ணங்களை தூண்டுதலாக கொண்டு ஆரம்பித்ததே இந்த வலைப்பூ..

  "'தமிழனாய் பிறக்கச்செய்த இறைவனுக்கும், தமிழனாய் வளர்த்துக்கொண்டிருக்கும் என் பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கும், தமிழைச் சொல்லித்தந்த ஆசிரியருக்கும், ஆர்வங்களை வாரி வழங்கிய தங்களை போன்றவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் இத்தருணம் சொல்லிக்கொள்கிறேன்""

  ஏதாவது தவறாக சொல்லிருப்பின் மன்னிக்கவும்..மீண்டும் பல நன்றிகள் ஐயா..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge