Follow by Email

Tuesday, 4 October 2011

ஹாலிவுட் சினிமா : டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் - TERMS OF ENDEARMENTS - 1983 : PERFORMANCE - காகவே பார்க்க வேண்டிய மாஸ்டர்பீஸ்


Film : TERMS OF ENDEARMENTS  Year : 1983
Country : America   Rating : PG
Director : James L. Brooks  Writers : Larry McMurtry (based on the novel by), James L. Brooks (screenplay)
Stars : Shirley MacLaine , Debra Winger and Jack Nicholson
Awards : Won 5 Oscars. Another 26 wins & 10 nominations See more awards
==================================
ஆஸ்கர் விருதுகளைப் பற்றிய தேடலில் கிடைத்த அருமையான திரைப்படம்.சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே தெரிந்திருந்தாலும் இப்பொழுதுதான் காண வாய்ப்பு கிடைத்தது.பல நல்ல திரைப்படங்களை லேட்டாகவே அறிந்துக்கொள்வதும் பார்ப்பதும் எனது வாடிக்கையாகிவிட்டது என்ற ஒரு திருத்திக்கொள்ள வேண்டிய உணர்வினை இந்த படம் மனதுக்கு ஆணி அடித்ததுபோல் உணர்த்தியது என்றே சொல்ல வேண்டும்...எதற்கு இந்த பந்தா என்று பலருக்கும் கேட்க தோன்றிடும்....மன்னிக்கவும்..என்னை பொறுத்தவரை இது போன்ற திரைப்படங்களுக்கு பந்தா கொடுக்க வேண்டியதும் கொடுப்பதும் பெரியளவில் தவறாக தெரிவதில்லை என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.     


  சிறந்த இயக்கம், திரைப்படம், திரைக்கதை, துணை நடிகர் மற்றும் சிறந்த நடிகை என 11 ஆஸ்கர் பரிந்துரைகளில் 5 விருதுகளை தட்டிச் சென்றதோடு உலகளவில் பல புகழ்பெற்ற விமர்சனர்களால் பாராட்டபட்ட இந்த திரைப்படத்தினை ஜேம்ஸ் எல் ப்ரூக்ஸ் இயக்கத்தில் ஷெர்லி மெக்லைன், டெப்ரா விங்கர் மற்றும் ஜேக் நிக்கல்சன் ஆகியோரின் சிறந்த நடிப்பில் 1983 - ஆண்டு அமெரிக்காவில் வெளிவந்த பிஜி ரேட்டிங் பெற்ற திரைப்படமாகும்.மேலே தலைப்பில் குறிப்பிட்டது போல் நடிகர்களின் கைத்தேர்ந்த நடிப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.மேலும் இந்த படத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமானக் காரணமே ஜேக் நிக்கல்சன்தான்.
================================= 

நடிகர் ஜேக் நிக்கல்சன்


 தலைவரை பற்றி பேசாமால் நடிப்பை பற்றி பேசுவதே பெரிய பாவம் எனலாம்.அந்த அளவிற்கு நடிப்பை துவைத்து புளிந்து காயவைத்து அதையே சலவை செய்து இன்றுவரை களட்டாமல் போட்டுக்கொண்டே அமெரிக்க சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் வலம் வரும் ஒரு உன்னத கலைஞன் எனலாம்.1956 - ஆம் ஆண்டு தொலைக்க்காட்சி தொடரான Matinee Theatre (TV series) மூலம் மிக சிறிய கதாபாத்திரத்தில் திரையுலகில் காலடி எடுத்த வைத்து வைத்த நிக்கல்சன், தொடர்ந்து உலகளாவிய நிலையில் சிறந்த நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குனராகவும் பல சிறந்த விருதுகளை வாங்கி குவித்ததோடு இன்று அமெரிக்காவின் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார்.ஆர்பாட்டமில்லாமல் எந்தவொரு கதாபாத்திரத்தையும் அசால்ட்டாகவும் இயல்பாகவும் தத்ரூபமாகவும் ஒரு சாதாரணமான திரைப்படத்தைகூட தனது நடிப்பின் மூலம் சிறந்த திரைப்படமாக மாற்றிவிடக்கூடிய சாமர்த்தியக்காரரும் ஆவார்.இதற்கு இவர் வாங்கிய விருதுகளையே ஒரு சாட்சி.சிவாஜி கணேசன், நாகேஸ், போன்ற நடிகர்களுக்கு பிறகு நடிப்பளவில் என்னை மிகவும் கவர்ந்த நடிகர் இவரே....(சான் பென்னையும் ரொம்ப பிடிக்கும்).  

 நிக்கல்சனின் மீது உள்ள அலாதி பிரியத்தில் தொடர்ந்து இவருடைய திரைப்படங்களை பார்த்து வருகிறேன்.அதில் இவர் அவார்டு வாங்கிய திரைப்படம் என்றால் சும்மாவா என்ன ? (இதோ பார்த்துவிட்டேன்ல டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட்).மேலும் இவர் நடித்த திரைப்படங்களின் மூலம் நான் அறிந்துக்கொண்ட கலைஞர்கள் ஏராளம்..(.தா : இயக்குனர்கள் ஜேம்ஸ் எல் ப்ரூக்ஸ் மற்றும் ரோஜர் கார்மென்).   
===============================

இயக்குனர் ஜேம்ஸ் எல் ப்ரூக்ஸ்

இவரை பற்றி அறிந்ததே இந்த திரைப்படத்தின் மூலம்தான்...(நன்றி ஜேக்).இவருடைய தயாரிப்பில் டாம் குரூஸ் (One Of My Favourite) நடிப்பில் 1996 ஆம் ஆண்டு கேமரூன் க்ரோவ் எழுதி இயக்கத்தில் வெளிவந்த ஜெர்ரி மாக்கையர் திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பார்த்தேன். (அதை பற்றிய பதிவு விரைவில்..).ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுவதுப்போல் இந்த டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் திரைப்படத்தின் மூலம் தலைவர் கொஞ்சம் மேலே ஏறி மூன்று மாங்காய்களை பறித்துவிடார்....அதாவது....இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்கம், திரைக்கதை,திரைப்படம் என்று மூன்று ஆஸ்கர்களை வாங்கிவிட்டார்.இத்தனைக்கும் இதுதான் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமாம்.தொடர்ந்து இயக்குனரும் ஜேக் நிக்கல்சனும் இணைந்தே மொத்தம் இதுவரை 3 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர்.அதுவும் இருவரும் இணைந்த எஸ் குட் எஸ் இட் கெட்ஸ் 1997 என்கிற திரைப்படத்திற்காக மேலும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டதோடு, அதே படத்திற்காக ஜேக நிக்கல்சனும் ஆஸ்கர் வென்றது குறிப்பிடதக்கதாகும்.   
=============================

   ஒரு தாய்க்கும் மகளுக்குமான உறவினை, டெர்ம்ஸ் ஒஃப் எண்டியெர்மெண்ட் திரைப்படத்தில் பார்த்ததைவிட இவ்வளவு சிறப்பாக நான் எந்த திரையிலும் கண்டதில்லை (நான் பார்ததது அப்படியோ..என்னவோ ?).இவர்களுக்குள் ஏற்படும் விரிசல்களையும் பிரிவையும் தனிமையான வாழ்க்கையும் தனிப்பட்ட காதலையும் இத்திரைப்படம் மெல்லமாக தெளிவாகவும் ஒரு 30 வருடக்கால உறவை அலசுகிறது.தாயாக Shirley MacLaine - னும்  மகளாக Debra Winger - ரும் தத்தம் கதாபாத்திரங்களில் அருமையாகவும் அழகாகவும் நடித்திருக்கின்றனர்.இதில் Shirley MacLaine சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்றதோடு Debra Winger பரிந்துரைக்கபட்டது இன்னொரு சிறப்பாகும் (கிடைக்காதது அதிசயமாக இருக்கிறது).இதில் Shirley MacLaine - னின் முதல் திரைப்படமும் ஹிட்ச்காக்கின் இயக்கத்தில் 1955 - ஆண்டு வெளிவந்த படைப்பான தெ ட்ரபல் வித் ஹேரி திரைப்படத்தில் நடித்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.      
  
டெர்ம்ஸ் ஒஃப் எண்டியர்மெண்ட் திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சுவாரஸ்யங்கள் 

திரைப்படத்தில் முதலாக குறிப்பிட விரும்புவது திரைக்கதையே.ஒரு டிராமா வகையிலான திரைப்படத்திற்கு சுமார் இரண்டே கால் மணி நேரம் சற்றும் பார்ப்பவர்களுக்கு சலிப்பூட்டாத வகையிலும் "என்னடா இது கடுப்பா இருக்குது" என்று பலரும் சொல்லாத வகையிலும் ஒவ்வொரு காட்சியையும் சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் திரைக்கதையில் வேகத்தையும் அதிகரிப்பது சற்று கடினமே.அதுவும் சீட்டு நுனியை விட்டு நகர இயலாத திரைக்காட்சிகளை அதுவும் மிக சிறப்பாக இயக்குனரே அமைத்திருப்பது இன்னும் ஒரு சிறப்பாகும். Please dont miss the screen movement...
========================

இரண்டாவதாக கண்டிப்பாக முன்னமே குறிப்பிட்டதுப்போல் நடிகர்களின் சிறப்பான அபாரமான நடிப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.இவர்களது நடிப்புக்கும் பெரிய அளவில் காரணமும் திரைக்கதையே.நல்ல நடிப்பை வெளிப்படுத்துவதற்கு இத்திரைப்படத்தின் கதை ஒரு பெரிய ஸ்கோப்.அதுவும் Shirley MacLaine, Jack Nicholson ஆகியோர்கள் நடிக்கையில் நடிப்பிற்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம்.இவர்களுக்கு இணையாக John Lithgow as Sam Burns, Debra Winger as Emma Greenway Horton,  Danny DeVito (இவரும் அர்னல்டும் நடித்த டிவின்ஸ் - 1988 திரைப்படத்தை என்னால் மறக்க இயலாது) as Vernon Dahlart மற்றும் Jeff Daniels as Flap Horton ஆகியோர்களின் நடிப்பும் பிரமாதமே.அதிலும் Debra Winger மற்றும் John Lithgow ஆகியோர் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்.
========================

திரைக்காட்சிகளின் வழி நம்மை பலரும் கவர்ந்தாலும், எனக்கு பிடித்தவர்கள் ஜேக் நிக்கல்சன் மற்றும் டேப்ரா விங்கெரே.ஒய்வு பெற்ற முன்னாள் விண்வெளி வீரராகவும் பெண்களிடம் மயங்கும் நடுத்தர வயதானவராக வந்து ஜேக் நிக்கல்சன் கரெட் ப்ரீட்லவ் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார்.இவருடைய ஆரம்ப காட்சிகளே அமர்க்களம்.அண்டை வீட்டுக்காரரான Shirley MacLaine பார்த்துக்கொண்டிருக்க குடிபோதையில் காரில் வந்து இறங்கி இரண்டு பெண்களிடம் லூட்டி செய்யும் காட்சிகள் யாவும் அருமை...அருமை.அதோடு  தன்னைவிட வயதில் மூத்தவராக இருப்பினும்  Shirley MacLaine - னிடம் காதலில் விழுவதும் இரவு அவரை தனி அறையில் சந்திப்பதும் வலிவதும் என காதல் காட்சிகளில் அசால்ட்டாக சும்மா அசத்தியிருக்கிறார்.அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மகள் (டேப்ரா) வீடு வந்த சந்தோசத்தில் தாய் இருக்க (Shirley), வாசலிருந்து கரேட் அனைவரிடம் இருந்து விலகும் காட்சி என அனைத்து காட்சிகளிலும் தன்னுடைய நடிப்பு அனுபவத்தை திரையில் பதிந்திருக்கிறார்.
===========================

மேலும், டேப்ரா விங்கரே...இந்தம்மாவைப் பற்றி சொல்ல திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.இவருக்கும் Shirley - க்கும் இடையில் இடம்பெறும் வசனங்கள் அனைத்துமே மிக அழகாக இருக்கும்.இதுப்போன்ற வசனங்கள் உண்மையான வாழ்க்கையில் சாத்தியமா என்பது சற்று வியப்பும் கலந்த ஆச்சரியமே...தன்னுடைய குடும்ப கஷ்டத்திற்க்காக தன் அம்மாவிடம் பணம் கேட்கும் வேளையிலும், அங்காடியில் எல்லா பொருட்களையும் எடுத்தப் பிறகு பணம் பற்றாமல் தவிப்பதும், பணம் கொடுத்து உதவி செய்தவரை தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டு தங்களுடைய ஏக்கங்களைக் பேசிக்கொள்ளும் காட்சிகள் என ஏகபட்சமான காட்சிகளில் நடிப்பை அருமையாக வெளிபடுத்தியுள்ளார்.அதோடு, இறுதி காட்சிகளில் இவருடைய நடிப்பு அபாரம்.
=============================

திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே எம்மா திருமணம் செய்துக்கொண்டு டெக்சஸ் நகருக்கு குடும்பத்துடன் குடிப்புகுந்துவிட, மீதி காட்சிகள் அனைத்தும் தாய் மற்றும் மகளுக்கு இடையில் தனித்தனியாக கிடைக்கும் உறவுகளையும் இழப்புகளையும் பற்றியே திரைப்படம் சொல்கிறது...தாயாக வரும் Shirley, Aurora Greenway என்ற கதாபாத்திரத்தில்........ மகள் தன்னை விட்டு ஊர் கடந்து போகிறாள் என்றதும் அவர் முகத்தில் ஏற்படும் சிறு சிறு Expressions களும், 15 வருடக்காலமாக தன்னுடைய அண்டை வீட்டுக்காரரிடம் முகம் கூட கொடுத்து பேசாத நிலையில், மகளின் பிரிவுக்கு பின்னர் பக்கத்து வீட்டுக்காரரான ஜேக் நிக்கல்சனுடன் காதல் வயப்படும் காட்சிகள், இறுதி சோகமான காட்சிகள் என சும்மா நடிப்பில் பின்னி எடுக்கிறார்.நல்ல நடிப்புக்கு ஒரு உதாரணம்.
===============================

திரைப்படத்தில் ஏகபட்ட காட்சிகள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்தாளும், இறுதி காட்சிகள் அனைத்தும் நம்மை சோகக் கடலில் மூழ்க செய்துவிடக்கூடியவையாகும்.இந்த காட்சிகள் யாவும் இப்பொழுதும் என் மனதில் நிற்கிறது...Heart Touching Scenes
========================

மேலும் இந்த திரைப்படம் 1975 - ஆம் ஆண்டு Larry McMurtry என்ற எழுத்தாளார் எழுதிய ஒரே பெயரிலான நாவலை தழுவி வந்ததாகும்.நாவலை படித்ததன் திருப்தியைக் கண்டிப்பாக கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை.
===========================
இப்படத்தில் மிக முக்கியாமான ஒன்று ஒளிப்பதிவும் இசையும் என்று சொல்லலாம்....படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த அழகு...நன்றி Andrzej Bartkowiak.அதற்கு பலம் கொடுப்பதுப்போல் Michael Gore பின்னனி இசையை அருமையாக வழங்கியிருக்கிறார்
============================

  இறுதியாக, ஒரு தாய்க்கும் மகளுக்கு இடையிலான 30 வருட உறவை அழகான டிராமாவாக இக்கதையை சிறப்பாக திரையில் வடித்திருக்கின்றனர் இயக்குனரும் அவரது குழுவினரும்...கண்டிப்பாக அவர்களுக்கு மிக்க நன்றி....கண்ப்பாக அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு அமெரிக்க படம் இந்த டெர்ம்ஸ் ஒஃப் எண்டியெர்மெண்ட்ஸ் திரைப்படப்பாகும்.

MY RATING : 8.5/10

எதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்..மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்..

WATCH TRAILER

2 comments:

 1. நல்ல திரைப்படம், விமர்சனம் அருமை.

  //// இந்த படத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமானக் காரணமே ஜேக் ////
  கண்டிப்பா இவர் இருந்த எந்த மாதிரி கதையை கொண்ட திரைப்படத்தையும் தயங்காமல் பார்க்கலாம்.

  கண்டிப்பா இவர் படத்தை பற்றி விமர்சனம் பண்ணும் பொது இவரை பற்றியே பாதி.பதிவுக்கு மேல் எழுத வேண்டி வரும்.
  நிகல்சன் பற்றி தனியே ஒரு பெரிய பதிவாவே போட்டு இருக்கலாம் நீங்கள். சூப்பர்........

  ReplyDelete
 2. << arunambur0 said...
  நல்ல திரைப்படம், விமர்சனம் அருமை.>>

  அக்டோபர் மாத தொடக்கத்தில் எழுதிய இந்த விமர்சனத்துக்கு வருகை தந்ததோடு அல்லாது பின்னூட்டமிட்டு எனக்கு தொடர்ந்து நல்லாதரவு வழங்கிவரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியோடு கலந்த வணக்கங்கள் நண்பரே..

  << //// இந்த படத்தை பார்ப்பதற்கு மிக முக்கியமானக் காரணமே ஜேக் ////
  கண்டிப்பா இவர் இருந்த எந்த மாதிரி கதையை கொண்ட திரைப்படத்தையும் தயங்காமல் பார்க்கலாம்.>>

  சரியாக சொன்னீர்கள் நண்பரே..ஜேக் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்.நல்ல நடிகர்..எந்த கதையும் லாவகமாக வாங்கிக்கொண்டு நடிப்பில் கலக்கும் சிறந்த நடிகர்.

  << கண்டிப்பா இவர் படத்தை பற்றி விமர்சனம் பண்ணும் பொது இவரை பற்றியே பாதி.பதிவுக்கு மேல் எழுத வேண்டி வரும்.
  நிகல்சன் பற்றி தனியே ஒரு பெரிய பதிவாவே போட்டு இருக்கலாம் நீங்கள். சூப்பர்........>>

  நன்றி..நன்றி..நன்றிகள் நண்பரே..தாங்களும் என்னைப் போல நிக்கல்சனின் பெரிய ரசிகன் என்பது எழுத்துக்களின் வழியே தெரிகிறது..கண்டிப்பாக ஒரு நாள் நீங்களோ அல்லது நானோ இவரை பற்றி ஒரு பதிவாவது போட வேண்டும் என்பதே எம் ஆசை.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge