Follow by Email

Sunday, 16 October 2011

குடும்பத் திரைப்படங்கள் : குடும்பத்தோடு சந்தோஷமாக சேர்ந்து பார்க்க இரண்டு அருமையான திரைப்படங்கள் : ALASKA - 1996 AND LASSIE - 1994

1) ALASKA - 1996 : தந்தையை மீட்க ஓர் அழகிய பயணம்...


  அலாஸ்கா மலைத்தொடரில் விமான விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் தந்தையை மீட்க செல்லும் அண்ணன் தங்கையின் கதையை சுவாரஸ்யமான ADVENTURE வகையில் அழகான இயற்கை காட்சிகளோடு மனதை அள்ளிய திரைப்படம்தான் அலாஸ்கா.

  அலாஸ்கா திரைப்படம் ஃப்ரேசர் கிளார்க் ஹெஸ்டன் என்பவரின் இயக்கத்தில் Thora Birch, Vincent Kartheiser மற்றும் Dirk Benedict ஆகியோரின் முன்னனி நடிப்பில் 1996 - ஆண்டு வெளிவந்தது.சற்று லாஜிக் இல்லாத கதையென்றாலும், அழகான ஒளிப்பதிவினாலும் நல்ல திரைக்கதையினாலும் நம் மனதை கட்டி போடக்கூடிய திரைப்படம்.
======================================================
அலாஸ்கா திரைப்படத்தில் என்னை கவர்ந்த சுவாரஸ்யங்கள் :

திரைப்படத்தோடு நம்மை 90% சதவிதம் கட்டிபோடுவது படத்தின் காட்சியமைப்புகள்தான்..ஒளிப்பதிவாளர் Tony Westman கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்..படத்தின் ஆரம்பக் காட்சியே அந்தரத்தில்தான்..அலாஸ்காவின் மலைத்தொடர்களை அழகர படம் பிடிக்கிறது..மேலும் ஸ்டடி கேம் ஷாட்கள் அத்தனையும் அருமை..அருமையே..
=======================================

பிறகு, Thora Birch மற்றும் Vincent Kartheiser.நடிப்பை பொருத்தவரை திரைப்படம் முழுக்க இவர்கள்தான்...அந்த குட்டி வெள்ளை கரடியுடன் இவர்கள் செய்யும் அத்தனை செயல்களும் ரசிக்கும்படியே அமைத்திருப்பார்கள்...மேலும் தந்தையை தேடிச்செல்லும் இவர்களது பயணத்தை மிக அருமையாக சொல்லிருப்பார்கள்..      
===========================================
மேலே சொன்னது போல, திரைப்படத்தில் அந்த வெள்ளை கரடியின் ரொம்ப நன்றாக இருக்கும்...சில நேரங்களில் நம்மை ரசிக்கவும் செய்யும்...கிளைமக்ஸ் காட்சியில் இதனது பங்கும் சிறப்பானது..(படம் பாருங்க...)
=============================================
நல்ல படம் என்பதைத் தாண்டி, இது சற்று சுவாரஸ்யமான திரைப்படம்...Thora Birch மற்றும் Vincent Kartheiser - களின் பயணத்தை சுவையற சொன்னதற்கு திரைப்பட குழுவினருக்கு ஒடு நன்றி..படத்தின் இடை இடையே வரும் "NEVER GIVE UP" என்ற வார்த்தைகள் நம் வாழ்க்கையும் உட்சாகபடுத்தகூடியது...ஓர் அழகான மழைநேர பொழுதில் இந்த திரைப்படம் நம் மனதையும் ஈரமாக்கும்..கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்..
---------------------------------------------------------------------------------------------

2) LASSIE - 1994 : நாய்க்கும் சிறுவனுக்கும் உள்ள நட்ப்பை அருமையாக சொல்லும் படம்..


   லாசி 1994 - ஆண்டு வெளிவந்த இன்னொரு குடும்பத் திரைப்படம்..தன் தாயின் மரணத்திற்க்கு பிறகு சொந்த செல்லும் ஒரு குடும்பத்துக்கும் எதிர்ப்பாராமல் அவர்களிடம் கிடைக்கும் நாய்க்கும் உள்ள உறவை அருமையாக அழகாக சொன்ன படம்..நாயை வைத்து நிறைய படங்கள் வந்திருந்தாலும் (ஒரு சிலதை நானும் பார்த்திருக்கிறேன்) இந்த படம் ஒரு சில மணி நேரங்கள் வரை எனது மனதை விட்டு நீங்கவில்லை..தொடர்ந்து இரண்டே நாட்களில் இரண்டு முறை பார்த்தேன்..அந்த அளவிற்க்கு கவ்ர்ந்தது என்பதே உண்மை.

    Helen Slater, Tom Guiry மற்றும் Jon Tenney ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, Howard என்ற நாய் இந்த படத்தில் லாசி என்ற கதாப்பத்திரத்தில் நடித்திருக்கிறது..Daniel Petrie இந்த படத்தை இயக்கிருக்கிறார்..விமர்சன ரீதியில் இந்த படம் நல்ல வரவேற்பு பெறாவிட்டாலும், பார்ப்பவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய வைக்கக்கூடிய நல்ல திரைப்படம் எனலாம்..


   முதலில் குறிப்பிட விரும்புவது லாசி என்ற நாய்தான்..திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம்..கதையின் ஒட்டு மொத்த நகர்தளுக்கும் இதுதான் உதவுகிறது..இதற்கும் Matthew Turner என்ற சிறுவனுக்கும் உள்ள நட்பை சுவையற சொல்லிருக்கிறார்கள்...திரைப்படத்தின் காட்சிகள் யாவையும் அழகாக எடுத்தற்க்கு முதலில் ஒளிப்பதிவாளரை பாரட்ட வேண்டும்..படம் பிடித்த இடங்கள் எல்லாம் ரொம்ப அருமை..

   கண்டிப்பாக அனைவரும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய பிஜி ரேட்டிங் பெற்ற படம் லாசி - 1994 ஆகும்.

பி.கு : அவசரத்தில்..நேரம் குறைமையால் எழுதிய பதிவு..நினைத்தது எதையும் பெரிதாக எழுத முடியவில்லை (ஆமா இதுவரை என்னா எழுதுனடா என்று கேட்பது காதில் விழுகிறது..ஹீ..ஹி.).தவறாக ஏதேனும் குறிப்பிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை...

நன்றி..வணக்கம் 6 comments:

 1. Replies
  1. << veedu >>

   தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.வணக்கம்.

   Delete
 2. வணக்கம் உங்களின் பதிவு ஒன்றை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம்
  நேரம் கிடைக்கும்போது படித்துச் செல்லவும் நண்பரே நன்றி
  http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_29.html

  ReplyDelete
 3. @ தென்காசித் தமிழ்ப் பைங்கிளி @
  என்னையும் பதிவராக மதித்து வலைச்சரத்தில் இடம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.அடிக்கடி வருகை அளியுங்கள்.

  ReplyDelete
 4. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

  ReplyDelete
 5. கூகிள்சிறி .கொம் @@
  கண்டிப்பாக இன்றே இணைக்கிறேன்..மிக்க நன்றி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge