ஹிட்ச்காக் திரைப்படங்கள் (Hitchcock Films) என்ற தொடரின் முந்தைய பதிவுகளை படிப்பதற்கு :
===============================================================
Country : United States Rating : R
Director : Alfred Hitchcock
Writers : Joseph Stefano (screenplay), Robert Bloch (novel)
Stars : Anthony Perkins, Janet Leigh and Vera Miles
Awards : Nominated for 4 Oscars. Another 5 wins & 3 nominations See more awards »
சுமார் 50 ஆண்டுகள் கடந்தும், இன்றுவரை உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களால் கொண்டாடப்படும் ஹிட்ச்காக்கின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்றுதான் சைக்கோ. ஹாலிவுட் மட்டுமின்றி உலக சினிமாவின் மிகச்
சிறந்த கிளாஸிக்குகள் பட்டியலில் தவறாது இடம்பெறும் ஒரு உனனத படைப்பாக இதனை கூறலாம். 1959 - ஆம் ஆண்டு எழுத்தாளர் Robert Bloch கைவண்ணத்தில் ஒரே தலைப்பிலான நாவலை அடிப்படையாக கொண்டு 1960 - ஆம் ஆண்டு Joseph Stefeno - வின் மிகச் சிறந்த திரைக்கதை அமைப்பில் ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியானது.4 ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கபட்ட இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் Anthony Perkins, Vera Miles, John Gavin, Martin Balsam, John McIntire, Janet Leigh ஆகியோர் நடித்து கதைக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளனர்.
ஒரு திரைப்படத்தின் ஏறக்குறை முழு கதையையும் முன்னமே இணையத்தளங்களில் படித்துவிட்டு படங்களை பார்க்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டவன் நான்.ஆனால் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களுக்கு மட்டுமே இந்த வழக்கத்தினை சில வேளைகளில் விதிவிலக்காக வைத்துள்ளேன்.அதுவும் மேற்கூறிய திரைப்படத்திற்க்குப் பிறகுதான் என்பதில் பெரிய ஆச்சரியமில்லை.ஏனெனில் குறிப்பாக ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் அவர்களின் திரைப்படங்களை கதைகள் அறியாமலும் எந்த ஒரு கற்பனைகள் செய்யாமலும் பார்க்கும் பொழுது சற்று அதிகமாகவே சுவாரஸ்யங்களை உணர்வதும் ஒரு காரணம் எனலாம்.சஸ்பிஷன் போன்ற படங்களை தவிர்த்து இது போன்ற திரைப்படங்களின் கதைகளை சொல்வதை தவிர்க்கலாம் என்று விரும்புகிறேன் (தவறாக நினைத்தால் மன்னிக்கவும்).அதுவும் நீங்கள் ஒருவேளை இத்திரைப்படத்தை முதல் முறையாகப் பார்க்க விரும்பினால், இந்த அணுகுமுறை சரியாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்.
சைக்கோ திரைப்படத்தைப் பற்றிய சில
=============================================
சுவாரஸ்யங்கள் :
=======================
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டே எழுத்தாளர் Robert Bloch இந்நாவலை எழுதியுள்ளார்.மேலும், இயக்குனரான ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் கலை உலக வரலாற்றில் இறுதியாக எடுத்த கருப்பு வெள்ளை திரைப்படம்தான் இந்த சைக்கோ.
=======================
- Norman Bates in Psycho
மேலும், இத்திரைப்படத்தில் Norman Bates என்ற கதாபாத்திரத்தில் வரும் The Trial (1962) படப்புகழ் Anthony Perkins..கண்களினாலேயே நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.. சாதாரணமான ஆள் நடமாற்றமே இல்லாத பேட்ஸ் என்னும் மோட்டெலுக்கு உரிமையாளராக வந்து இறுதிவரை தனது சின்ன சின்ன ஆழமான எக்ஸ்பிரஷன்களின் மூலம் தன் நடிப்புலக வரலாற்றில் ஒரு மைல் கல்லை தொட்டிருக்கிறார்..நல்ல நடிப்பாற்றலை ஆதரிக்கும் அல்லது விரும்பும் எந்த ஒரு ரசிகருக்கும் இவரது நடிப்பு ஒரு விருந்து எனலாம்.அதுவும் ஆக இறுதி காட்சியில் பின்னனியில் அந்த பெண் குரலுக்கு..யெப்பா சான்ஸே இல்லை..
===============================
அடுத்தது, Marion Crane என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் Janet Leigh..தொடக்க காட்சியில் காதலுடனான உரையாடலில் ஆரம்பமாகும் .இவரது திருட்டு முக பார்வைகள் படம் பாதிவரை நிலவுகிறது.."திருட்டு" என்ற வார்த்தைக்கு பொருத்தமாகவும் கதையில் நடந்துக்கொண்டு ஆஸ்கர் பரிந்துரையும் கூடவே பெற்றுவிட்டார்..இவர்தான் கதாநாயகி இனி இவரை சுற்றிதான் கதை என்று அனைவரும் நம்பும்படியாக வைத்துவிட்டு பிறகு கொடுக்கு வெடி இருக்கிறதே..அதுதான் ஹிட்ச்காக்கின் பன்ஞ்.
========================================
இன்றுவரை சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத பல அற்புதமான எவெர்கிரீன் காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிகிறது.குறிப்பாக, அந்த குளியலறைக் காட்சி இன்றும் பலரை அதிர்ச்சியில் உறையவைப்பதாக படம் பார்த்த புதிதில் இணையத்தில் படித்தேன்.கேமரா கோணங்கள், ஆர்ட் டைரக்ஷன், துளிக்கூடச் சலிப்படையச் செய்யாதக் காட்சிக் கோர்வைகள், கதைச் சொன்ன விதங்கள் என்று ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினரின் உழைப்பு ஒவ்வொரு ஃபேரேம்களிலும் தெரிவதோடு இதுவே இவர்களை ரசிகர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்க்கச் செய்கின்றது.
==============================================
சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு,கலை மற்றும் நடிப்பு என்று 4 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டது குறிப்பிடதக்கதாகும்.
==================================================
Entertainment Weekly வெளியிட்ட சிறந்த திகில்ப்படங்கள் வரிசையில் சைக்கோ ஏழாவது இடத்தைப் பிடித்தது சிறப்பாகும். அதோடு 2007 ஆம் ஆண்டு American Film Institute வெளியிட்ட மிகச் சிறந்த திரைப்பட பட்டியலில் பதினேழாவது இடத்தையும் பிடித்துள்ளது.
======================================================
கடந்த நூற்றாண்டின் அமெரிக்காவில் உருவாக்கபட்ட மிகச் சிறந்த திகில் திரைப்படமாக உலகமெங்கும் உள்ள ரசிகர்களாலும் விமர்சனர்களாலும் பரவலாக கருதப்படும் சைக்கோ, இன்றைய பல கலைஞர்களுக்கும் திரைப்படங்களுக்கும் ஒரு முன்னோடியாக திகழ்வதை யாராலும் மறுக்க முடியாது என்றால் அது மிகையாகது.
============================================================
Infamous for its shower scene, but immortal for its contribution to the horror genre. Because Psycho was filmed with tact, grace, and art, Hitchcock didn't just create modern horror, he validated it.
- Rotten Tomatoes
உலகளாவிய நிலையில் பல ரசிகர்கள் மறும் விமர்சகர்ளாலும்
பெரிய அளவில் பாராட்டை தொடர்ந்து பெற்று வரும் இத்திரைப்படம் தற்பொழுது ரோட்டென் தொமொதோஸில் 99 % சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளது.
==========================================
பெர்னார்ட் ஹெர்மனின் இசை படத்துக்கு அஸ்த்திவாரம் என்று சொல்லுமளவுக்கு அவ்வளவு பக்குவமாக அமைத்திருக்கிறார்.அவர் போட்ட டீம் இசை இன்றுவரை என் கணினியில் வைத்துள்ளேன்.
=======================================================================
கடந்த 50 ஆண்டுகளில் இந்த படத்தின் தாக்கத்தில் மட்டும் உலகளவில் நிறைய படங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. நல்ல ஹாரர் படங்கள் என்றுமே நீங்காத உணர்வுகள் கொடுக்க கூடியவை.. இது தனிப்பட்ட முறையில் நான் சில படங்களில் அனுபவித்தது.இந்த படமும் அந்த வகையை சேர்ந்ததே.இந்த ஒரு வருடத்தில் ஐந்து முறையாவது பார்த்து ரசித்த படம்..கண்டிப்பாக ஹாரர் பிரியர்கள் மட்டுமன்றி சினிமா வெறியர்கள் பார்க்க வேண்டிய ஒரு அருமையான சைக்கலோஜிக்கல் ஹாரர் திரைப்படம் சைக்கோ (1960).
IMDB : 8.6 / 10
MY RATING : 8.7 / 10 : A Chilling Horror Piece Of Art.
===============================================================
கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்.ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,
