Wednesday, 28 December 2011

ஹாலிவுட் சினிமா : The Twelve Days of Christmas Eve (2004) {TV MOVIE} - இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைச்சா..

===============================================================
கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிவரும் அனைவருக்கும் மற்றும் புத்தாண்டை எதிர்நோக்கும் உலக மக்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..2012 ஆம் வருடம், எல்லா நலங்களும் வளங்களும் நிம்மதியான ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கையை அனைவரும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.மகிழ்வுடன் புத்தாண்டை மனமார வரவேற்போம்.   


===================================================================

கிறிஸ்துமஸ் தினத்தன்று தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மற்றும் கனடா இணைந்து தயாரிக்கபட்ட தொலைக்காட்சி திரைப்படம் இது.

   கால்வின் கார்ட்டர், ஒரு வெற்றிகரமான வணிக நிர்வாகி, நம்ம வியாபாரி திரைப்படத்தின் எஸ்.ஜே. சூர்யா போல அப்பா, தம்பி, மனைவி, குழந்தை என்று அனைவரும் இருந்தும் எப்பொழுதும் வியாபாரம்..வியாபாரம் என்று சுற்றிக்கொண்டு குடும்பத்தை புறக்கணித்து விலகி வாழ்பவர்...அன்று, கிறிஸ்துமஸ் ஈவ் (பண்டிகைக்கு முதல் நாள்), வழக்கம் போல குடும்பத்தை பற்றியும் அவர்களது கொண்டாட்டத்தில் பங்குப்பெறாத விதத்தில் தன்னுடைய வியாபாரத்தை பற்றி கவனிக்க செல்கிறார்.

  இவரது கெட்ட நேரம், கட்டிடத்தின் உயரே இருக்கும் சைன் போர்டு இவர் மீது விழவே இறந்து போகிறார்.அடுத்த நாள் காலையில் மருத்துமனை கட்டிலில் கிடக்கிறார்...அப்பொழுது, புது எண்ட்றியாக Angie என்ற நேர்ஸ் அங்கு வந்து உனக்கு நான் 12 நாட்கள் தருகிறேன்..மீண்டும் பழைய நிலைக்கு நீ வரவேண்டுமெனில் நீ அந்த 12 நாட்களில் கிறிஸ்துமஸ் முதல் தினத்தை சிறப்பாக அதைவிட முக்கியம் முழுமையாக அனைவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் கொண்டாட வேண்டும் என்று சொல்லிவிட்டு  போகிறார்..

கார்ட்டரும் ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தையும் சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது செய்கிறேன் என்று நினைத்து மீண்டும் மீண்டும் மருத்துமனை கட்டிலுக்கே வந்து விழுகிறார்.. (அந்த காட்சியில்லாம் ரசிக்கும் வகையில் இருக்கும்)..


      //// இத்திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது மனதுக்கு தோன்றியது "இந்த வாய்ப்பு நமக்கும் கிடைச்சா"..ஓரளவு நால்லாவே படிக்கிற மாணவன் நான்..ஆனால் சில நேரங்களில் எனக்கே தெரியாம நல்லா படித்திருந்தும் எதிர்ப்பார்த்த அளவுக்கு நல்ல முடிவு கிடைக்க தவறிடுவேன்..இதனால மனது நொந்துப்போன மணி நேரங்கள் அதிகம் (இததான் காலம் சரியில்லனு சொல்லுவாங்களோ.??)..அதுவே நமக்கும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சா..எப்படிருக்கும் ?? சும்மா கலக்கிடுவோமுல..(எல்லா நாளும் ஒரே கேள்வித்தாளு இருந்தா..
ஹிஹிஹீ!!) ///

   சோஓஓ...யாருக்கும் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை கார்ட்டர் பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக்கொண்டாரா என்பதுதான் படத்தின் மீதக்கதை..இந்த கேள்விகளுக்கு வாய்ப்பு கிடைப்பின் படம் பார்ப்பதே நல்லது..காண விரும்புவர்கள் கிழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்யவும்..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  திரைப்படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி காமெடி திரைகளின் ஜாம்பவானாகிய Steven Weber, மனிதர் நடிப்பில்பின்னி எடுக்கிறார்..முகத்தில் நகைச்சுவைத் துளிகள் நீராடுகின்றன.அவ்வப்போது திரைப்படங்களிலும் முகம் காட்டும் இவர் அமெரிக்க தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானவராம்..அதுக்கு இணையாக நடிப்பிலும் கவர்கிறார்.

இவரைத் தவிர்த்து படத்தில் சொல்லும் அளவுக்கு நடிப்பளவில், Mark Krysko, Chad Willett, Stefanie von Pfetten, Patricia Velasquez என்று பலரும் தத்தம் பணிகளின் மூலம் படத்துக்கு கை கொடுத்துள்ளனர்.

2004 ஆம் ஆண்டு பிரபல அமெரிக்க பெண் இயக்குனரான Martha Coolidge என்பவர் இத்திரைப்படத்தை எடுத்துள்ளார்..இவர் பெயரையும் அறிந்திராத அமெரிக்க தொலைக்காட்சி ரசிகர்கள் மிக குறைவாம்..The Prince and Me (2004), Three Wishes (1995), Angie (1994) என்று சில படங்களை ஹாலிவுட் படங்களை இயக்கிருந்தாலும் தன்னுடைய பெரும்பாலான திரையுலக வாழ்க்கையை தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் கழித்தவராம் (யாரு கண்டா)..

 வேலை, நேரம் இல்லை என்று பல காரணங்களை காட்டி நம்மில் பலர் உண்மையான மன திருப்தியையும் சந்தோஷத்தையும் உணருவதில்லை..நம்மேல் மரியாதையும் அன்பும் வைத்திருப்பவர்களை நாம் மதிப்பதும் வரவேற்பதும் குறைந்துக்கொண்டே வருகிறது..இதுப்போன்றவர்கள் பார்க்க வேண்டிய படமிது.உறவுகளை பற்றியும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையையும் இந்த படம் மறைவாக பேசுகிறது...வெறும் காமெடியை மையமாக வைத்து..


படத்தில் காட்சிகள் நகர நகர என்னையும் அறியாமல் சில காட்சிகள் பிடித்துவிட்டன..முதல் நாள் இறந்தவுடன்..அடுத்தடுத்த நாட்கள் ஏதாவது விதத்தில் கார்ட்டர் இறப்பதும், ஏதோ நல்ல காரியம் செய்கிறேன் என்று நினைத்துவிட்டு அப்பா வந்து வருடந்தோரம் இனிப்பு கொடுக்கும் தனது அங்காடிக்கு எல்லோருக்கும் கார்ட்டர் விடுமுறை விடுவதும் என்று பல வசனங்கள் கலக்கலான ரகம்..அதே போல செண்டிமெண்ட் காட்சிகளும் வசனங்களும் சில உள்ளன.ஆனால் அவை கண்டிப்பாக அழ வைக்க கூடியவை அல்ல.கார்ட்டரின் அப்பாவாக வருபவரின் நடிப்பு மிக நன்று.எனக்கு ரொம்ப பிடித்திருந்தது

மொத்ததில், இத்திரைப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டியதும் இல்லை அதே நேரம் பார்க்க கூடாததும் இல்லை..நேரம் இருப்பின் கட்டாயமாக பார்த்து ஜாலியாக எஞ்சோய் பண்ண வேண்டிய படம் இது..

The Twelve Days of Christmas Eve (2004) : வாய்ப்பு கிடைத்தால் ஹீரோ..கிடைக்கவில்லையெனில் ஸீரோ..

IMDB : 5.4 / 10
MY RATING : 5.6 / 10 : Enjoy With Your Family 
====================================================

பின் குறிப்பு : இந்த படம் பார்க்கும் பொழுது பல இடங்களில் என் ஈசாணி    மூளைக்கு எட்டிய படம் Groundhog Day (1993) தான்..இது ஒரு நல்ல படம்..என்ன ஏனு..எந்த காரணமும் தெரியாம திடீரென்று மீண்டும் மீண்டும் ஒரே நாளையே வாழ்ந்து (சாரி.. முழித்து) கொண்டிருக்கும் Phil என்ற கதாபாத்திரத்தில் Bill Murray நடித்த படம்..நல்ல காமெடி ரசிகர்களுக்கு ஒரு விருந்து..இந்த படத்த பற்றி இன்னொரு நாள் விளா வாரியா எழுத வேண்டும் என்று தோன்றுகிறது..அதுக்குள்ள பார்க்காதவர்கள் பார்க்க டிரை பண்ணுங்க..என்ன ஓகேவா..பை..பாய் 2011..
================================================= 

ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் (என்னா ரெண்டு தடவனு பார்க்கிறிங்களா..எல்லாம் ஒரு கிக்குதான்)..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,
Post a Comment
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge