Tuesday, 20 December 2011

ஹாலிவுட் சினிமா : The Punisher - 2004 : தமிழ் திரைப்படங்கள் சாயலில் ஒரு ஹாலிவுட் ஆக்சன் சினிமா

------------------------------------------------------------------------------ 
தொடர்ந்து ஆதரவு வழங்கும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.நண்பர்கள் அனைவரும் தாரளமாக தங்களது கருத்துகளை பகிந்துக் கொள்ளலாம்.கூடவே, தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமாயின் கீழே உள்ள ஒட்டு பெட்டியில் கொஞ்சம் என்னை கவனிங்க.இதன் வழியே மற்றவர்களுக்கும் இந்த பதிவு சென்றடைய ஏகுவாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இன்றைய சிறு "பார்வை".. 
=======================

  டைட்டிலை பார்த்தவுடனே சாயலு, தமிழு, ஹாலிவுட்டுன்னு கதவுடரானு..நினைக்காதிங்க..படம் பார்த்து முடியும்போது, இந்த படத்த தமிழ் படங்களை பார்த்து எடுத்துட்டாங்களோ என்று தோன்றியது..ஏனா அதே சாயலில் இங்கு இருந்த காட்சிகளும் கதையும்தான்..


Film : The Punisher      Year : 2004
Country : America      Rating : R (View)
Director : Jonathan Hensleigh      Writers : Jonathan Hensleigh, Michael France
Stars : Thomas Jane, John Travolta and Samantha Mathis
Awards : 1 win & 4 nominations See more awards
========================================

ஒரு ஹீரோ..திடீரென்று வில்லனிடம் ஏற்படும் சில பிரச்சனைகளால், விடுமுறையை ஹீரோவும் அவரது சந்தோஷமான குடும்பமும் கழித்துக்கொண்டிருக்க அங்கு வரும் வில்லனின் ஆட்களால் ஹீரோவோட மொத்தக் குடும்பமும் கொல்லப்படுகிறது..எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியாம போகுது..பத்தாதுன்னு நம்ம ஹீரோவும் செமத்தையா அடிவாங்குறாரு..பேசாம துப்பாக்கி எடுத்து பொட்டுன்னு போடாம பாம் வைக்கிறேன் வெடிக்க வைச்சி கொல பண்றேன்னு எதையோ பண்ணி தப்பிக்க வச்சிராங்க நம்ம வில்லனோட அடியாலுங்க..மீண்டும் வர்ர நம்ம ஹீரோ சும்மா விடுவரா..அடுத்த கட்ட காட்சிகள் எல்லாம் பழிவாங்குகிற காட்சிகள்தான்.வரிசையா வில்லங்கள போட ஆரம்பிக்கிறாரு..

கடைசில குடும்பத்த கொன்னவங்கள பழிவாங்குறாரா இல்லையா என்கிறதுதான் கிளைமக்ஸ்..

   இப்ப சொல்லுங்க இது தமிழ் சாயல் கதைதானே. (ஏதோ எனக்கு தோன்றியது) ஏதோ 80 ஆம் ஆண்டுகளுல பார்த்த படத்தோட கத மாதிரிதான் மூளைக்கு எட்டினுச்சி (ஆமா அம்பானி முள)..உண்மைய சொல்லனும்னா இது போன்ற கதைகளுக்கும் இவங்கதான் முன்னோடி.
(ஏதோ என் பார்வையில எட்டியபடி).
========================================

 இதுல ஹீரோவா Thomas Jane பனிஷர் மற்றும் கேஸல் என்ற ரெண்டு கேரக்டருல  நடிக்க, இவரோட மனைவியா..சரி விடுங்க செத்து போரவங்க பேரு எதற்கு..(ஐஐய்யோ ரகசியத்த சொல்லிடேன்னே) இவங்கள தாண்டி படத்துல ரொம்ப முக்கியமான கேரக்டருல வில்லனா  John Travolta நடித்திருக்காரு.
  
  2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை இயக்கிருப்பது Jonathan Hensleigh.இதில் Thomas Jane, John Travolta, Will Patton, Roy Scheider And Laura Harring ஆகியோர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க திரைக்கதையை இயக்குனருடன் இணைந்து Michael France எழுது இருக்கிறார்.

The Punisher - 2004 திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :

இது ஒரு பக்கா ஆக்சன் திரில்லர் கலந்த அதிரடி படம். (கிளைமக்ஸ் = பாம் வெடிதான்)..மற்றபடி சஸ்பென்ஸ் எல்லாம் நீங்க எதிர்பார்க்கிறது ரொம்ப தப்பு.ஏனா அதுக்கு இடமே இல்லாம ரொம்ப நேர்மையா கதைய சொன்னவருக்கு என் பாராட்டுக்கள்..
===================

சும்மா சொல்லக்கூடாது, ஹீரோவோட மொத்த குடும்பத்தையும் போட்டு தள்ளுர காட்சி இருக்கே..இதே சிட்டுவேஷனில் நிறைய காட்சிகள் பார்த்திருந்தாலும் இது நன்றாகவே இருந்தது.
==============================

ஹீரோ, தன்னுடைய குடும்பத்த கொன்னதனால வில்லனோட ஃபேமிலிய பழிவாங்கும் (உயிர்வாங்கும்) காட்சிகள் நல்லாதான் இருக்கும்.முக்கியமாக கிளைமக்ஸ் காட்சியில் (அதாவது நம்ம ஹீரோகிட்ட வில்லன் மாட்டிக்கிற) டயலாக்ஸெல்லாம் பரவாயில்லை.
========================================

 பொதுவாக, இது போன்ற படங்களில் ஒளிப்பதிவும் ஸ்பெஷல் எஃபெக்ஸும்தான் பக்க பலமாக இருக்கும்.இந்த படத்திலும் இது அருமையான ரகம்தான். ரொம்ப ஹைலைக்டா சொலனும்னா..ஹீரோயின் வீட்டு பக்கத்து ரூமுல ஹீரோவும் ஒரு அடியாளும் சண்டை போடுற காட்சி அசத்தலாக இருக்கும்.சுமார் ஐந்து நிமிடங்களுக்கு ஓடும் இந்த காட்சியை மட்டும் தனியா டிரீம் பண்ணி வச்சிருக்கேனா பாருங்களேன்..
=================================================

இதே கதையை கொண்டு The Punisher என்ற படத்தை 1989 - ஆம் ஆண்டினிலேயே வந்துவிட்டதாம்..இதில் சுவாரஸ்யம் என்னவெனில் இவ்விரண்டு படங்களுமே கோமிக் புத்தகங்களை தழுவி எடுக்கபட்டதாம்.இதே பெயரில் வந்த கேம்ஸ் கூட விளையாடிருக்கிறேன்.பரவால..
===========================================================

இந்த படத்தின் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமெல்லாம் எடுத்திருக்கார்கலாம்.. அது இன்னும் பார்க்கவில்லை..பார்த்தவுடனே அடுத்த "பார்வைதான்"..
=====================================================================

இறுதியாக,

     வசூலில் போதிய அளவு நல்ல வரவேற்ப்பு பெற்றிருந்தாளும் விமர்சனங்கள் ரீதியில் அதிகமாக குத்து வாங்கிய படமிது..எனினும் வழக்கமான ஹாலிவுட் ஆக்சன் ஃபோர்முலாவில் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத விறு விறுப்பாக காட்சிகளோடு ஓய்வு நேரங்களில் பார்க்கக்கூடிய பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படமாக சொல்லலாம்.குடும்பத்தோடு பார்க்க இயலாத படமாயினும், ஆக்சன் பட விரும்பிகள் பார்க்க வேண்டிய ஒரு ஹாலிவுட் மசாலா இந்த தெ பனிஷர்.

Imdb : 6.3/10
 
My Rating : 6.5/10 : An Usual Hollywood Masala..But Still Watchable.

  கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

6 comments:

  1. எப்பயும் போல விமர்சனம் கலக்கல்.

    ///பேசாம துப்பாக்கி எடுத்து பொட்டுன்னு போடாம ///
    ஆக்சன் படம் என்றால் இது எல்லாம் கண்டுக்க கூடாது, அப்படி எல்லாம் நீங்க சொல்ற பண்ணிட்டா அப்புறம் எப்படிங்க.......

    நம்ம தல John Travolta வேற வில்லனா நடிச்சு இருக்காரு இன்ன படம் சமயா இருக்கும் நினைக்கிறன்......

    ReplyDelete
  2. **arunambur0 said...**
    << எப்பயும் போல விமர்சனம் கலக்கல்.>>

    தங்களது வருகைக்கும் கருத்து பகிர்ந்துக்கொண்டதற்கும் மிகுந்த நன்றிகள் நண்பரே..

    << ///பேசாம துப்பாக்கி எடுத்து பொட்டுன்னு போடாம ///
    ஆக்சன் படம் என்றால் இது எல்லாம் கண்டுக்க கூடாது, அப்படி எல்லாம் நீங்க சொல்ற பண்ணிட்டா அப்புறம் எப்படிங்க.......>>>

    நீங்க சொன்னது சரிதான்..லோஜிக்குலாம் பார்த்த ஹாலிவுட்காரவங்க கால காலமா வண்டி மட்டுமல்ல பேருக்கூட வாங்கிருக்க முடியாது.நான் சும்மாதான் சொன்னேனே தவிர படம் பக்கா மசாலா படம்.கண்டிப்பா எல்லோரும் ரசிக்கலாம்.

    << நம்ம தல John Travolta வேற வில்லனா நடிச்சு இருக்காரு இன்ன படம் சமயா இருக்கும் நினைக்கிறன்...>>

    .John Travolta - இவர பற்றி பெரிசா சொல்லிதான் தெரியுனுமான்னு சரியா எழுதல..உங்க தல வழக்கம்போல செமத்தையா கலக்கிருக்காரு.மிஸ் பண்ணாம பாருங்க நண்பரே.

    ReplyDelete
  3. நான் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனத்துக்கு பிறகு இந்தத்தமிழ்ப்படத்தை பார்க்கயோசிக்கிறேன்...

    ReplyDelete
  4. << Loganathan Gobinath said...
    நான் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனத்துக்கு பிறகு இந்தத்தமிழ்ப்படத்தை பார்க்கயோசிக்கிறேன்...>>>

    நன்கு யோசித்து பாருங்கள் சகோ..படம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  5. நல்ல விமர்சன பாணி.. !

    ReplyDelete
  6. << தேனம்மை லெக்ஷ்மணன் said...
    நல்ல விமர்சன பாணி.. ! >>>

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...