===========================
இது ஒரு ஆர் ரேட்டிங் பெற்ற படம்...எதற்கும் (சில உரையாடல்கள்) 18 வயது குறைவானவர்கள் இந்த இடத்துக்கு சென்ற பிறகு கீழே உள்ள லிங்கை டவுன்லோடு போடவும்..(மத்தபடி பலரு நெனைக்கும்படி "எதுவும்" இல்ல..ஏமாந்துராதிங்க)
============================
அந்த பயணத்தின் எல்லைகள் என்ன..? சந்திப்பின் விளைவுகள் என்ன ? பிரிவுகளின் வலிகள் என்ன ? ...வர்ணிக்க இயலாத இந்த நினைவுகளை ஆர்ப்பாட்டமில்லாமல் வாழ்க்கையோடு ஒன்றச்சொன்ன இரண்டு நல்ல படைப்புகள்தான் Before Sunrise (1995) மற்றும் Before Sunset (2004) ஆகும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Viennese Cafe இல் இருவரும் (போலியாக இருவரும் போனில் உரையாடுவதுப்போல) பேசிக்கொள்ளும் காட்சி ரொம்ப இண்டரஸ்த்திங்காக இருக்கும்.இதேப்போன்ற காட்சியை தமிழில் வாலி படத்தில் பார்த்ததாக ஒரு நினைவு..
இது ஒரு ஆர் ரேட்டிங் பெற்ற படம்...எதற்கும் (சில உரையாடல்கள்) 18 வயது குறைவானவர்கள் இந்த இடத்துக்கு சென்ற பிறகு கீழே உள்ள லிங்கை டவுன்லோடு போடவும்..(மத்தபடி பலரு நெனைக்கும்படி "எதுவும்" இல்ல..ஏமாந்துராதிங்க)
============================
நம் வாழ்வில் சில கணங்களை எப்பொழுதுமே அவ்வளவு எளிதாக மறந்துவிட இயல்வதில்லை..சின்ன வயதிலிருந்நே (இந்த 18 வருடங்களில்..அடப்பாவி குழந்தை வயசிலுமா???) பல சந்தோஷமான தருணங்களையும் சோகங்களையும் அழுகைகளை தாங்கிய நொடிகளையும் சில இழப்புகளையும் சந்தித்திருக்கிறேன்.. அவை இன்றளவும் உணர்வுகளை தாங்கிய உருவங்களாக மழைச்சாரல்களாக மனதோரமாய் வழிவதை உணர்கிறேன்..இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணங்கள்..அது அன்பாகவோ நட்பாகவோ !!!
நினைத்து பாருங்கள் ..
சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை தற்செயலாக ஒரு பயணத்தில் சந்திக்கிறீர்கள்..அவரது பேச்சும் அழகான வெளிதோற்றமும் உங்களை முதலில் கவர்கிறது.மேலும் அவருடனான பழக்கம்..மெல்ல மெல்ல உங்களை ஈர்க்கும் கணங்கள் அப்படியே மெல்லமாக காதல் நொடிகளாக மாறுகிறது..அந்த சற்றென ஏற்ப்பட்ட ஓர் அனுபவம் எதிர்ப்பாராத விதமாக உடனே பிரிவை தழுவும் பொழுது..
==============================================
Film : Before Sunrise Year : 1995
Country : USA, Austria, Switzerland Rating : R (<< Vew >>)
Director : Richard Linklater Writers : Richard Linklater, Kim Krizan
Stars : Ethan Hawke, Julie Delpy and Andrea Eckert
Awards : 1 win & 2 nominations See more awards »
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதில்... எதிர்ப்பாராமல் வெவ்வேறான பின்னனியை கொண்டவர்கள் டிரைனில் சந்தித்துக்கொள்ளும் அருமையான ஒரு நாள் பயணத்தை சேர்த்த சுவையான அனுபவங்களோடு மிக அழகான ஆழமான வசனங்களாலும் நடிப்பாற்றலாலும் சிறந்த இயக்கத்தினாலும் சொல்லிருக்கும் திரைப்படம்தான்...
இந்த படத்தை முதல் முறை பார்த்து ஒரு 5 மாதங்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.கடந்த வாரம் சிறந்த காதல் படங்களை பற்றி இணையத்தில் உலாவியபோது இந்த படம் சிறந்த 10 ரொமான்ஸ் படங்களில் ஒன்றாக கண்ணில் பட்டது..சரி பார்த்துதான் மாதங்கள் ஆகுதே என்ற எண்ணத்தில் எதிரில் அடுக்கிவைத்திருந்த டிவிடி கலக்க்ஷனில் தேடி படத்தை பிளயரில் போட்டு விட்டு அமர்ந்தேன்..
ஏற்கனவே இரண்டு முறை பார்த்திருக்கிறேன் இந்த படத்தை..ஆனால் இம்முறை ஏதோ வகை புரியாதபடி ஓர் அழகான பார்வைகளை கண்கள் திரைப்படத்தினூடே கொண்டு சென்றுவிட்டன..உண்மையில் படம் போக போக என்னை உள்வாங்கிக்கொண்டது என்றே சொல்ல வேண்டும்..படம் முடிவுற்ற பொழுது மனதோரமாய் பதிந்த காட்சிகளும் வசனங்களும் அதிகம்.இந்த அனுபவத்தை ஒரு சில வார்த்தைகளாவது இங்கு பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற சிறிய எண்ணம் நெஞ்சோரமாய் எழ, இதோ அந்த சில வார்த்தைகளே இன்றைய பார்வையாக.. ..
Before Sunrise - 1995 ஆம் ஆண்டு Ethan Hawke, Julie Delpy ஆகியோர் முறையே ஜெஸ்சி மற்றும் செலின் என்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க, Richard Linklater - ரின் இயக்கத்தில் வெளிவந்த அருமையான காதல் சித்திரம்.இவர் இப்படத்திற்க்காக பெர்லின் திரைப்ப்ட விழாவில் சிறந்த இயக்குனருக்கான வெள்ளி கரடி பரிசை பெற்றது குறிப்பிடதக்கதாகும்..மேலும், ஒரு மிக எளிதான கதைக்கு சிறப்பான முறையில் திரைக்கதையை இயக்குனருடன் இணைந்து Kim Krizan என்பவர் எழுதிருக்கிறார்.
Before Sunrise திரைப்படத்தின் சில சுவாரஸ்யங்கள் :
ஜெஸ்சி மற்றும் செலினின் முதல் சந்திப்பே அழகாக இருக்கும்..பார்த்தவுடன் பரிமாரிக்கொள்ளும் அறிமுகங்கள் மற்றும் வார்த்தைகளும் என அனைத்தும் அருமையான ரகம்..
=============
ஈதன் ஹொக் மற்றும் ஜூலி டெல்பி - இருவருமே அபாரமான நடிப்பை மிக இயல்பான முறையில் வெளிபடுத்தியுள்ளனர்.இருவருக்குமே தங்களது திரைப்பட வாழ்வில் இத்திரைப்படம் ஒரு திருப்புமுனை எனலாம்.
==============
அடுத்து படத்தின் ஒளிப்பதிவு - ஒரு காதல் ஜோடியின் நடைபயணத்தை மர்மமாக பின் தொடர்வதுப்போல் படம் பிடித்துள்ளது..இரவு நேர காட்சிகளும் டிரைன் காட்சிகளும் அழகான ரகம்..
================
படத்தின் வசனங்கள் அத்தனையும் அவ்வளவு ஷார்ப்..இப்படிபட்ட அருமையான வசனங்களை ஒரு திரைப்படத்தில் பார்த்து பல நாட்கள் ஆகின்றன..முகம் தெரியாத இரண்டு நபர்கள் சந்தித்துக்கொள்ளும் போது அவர்களுக்குள் இடம்பெரும் உரையாடல்களை இயல்பான முறையில் வழங்கியதற்க்கு முதலில் திரைக்கதையாசிரியருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
===================
கையில் காசு இல்லாமல் வைன் பாட்டல் வேண்டும் என்பதற்காக கிளப் ஓனரிடம் "உங்கள் முகவரியை கொடுங்கள் பணத்தை அனுப்பி வைக்கிறேன்" என்று ஜெஸ்சி சொல்லும் போலான காட்சிகள் ரசனையாக இருக்கும்....ஆனால், இப்பொழுது இந்த காலத்துல கடையில ரெண்டு வெள்ளி பொருளக்கூட இப்படி வாங்க முடியாது என்பது ஒரு விதத்தில் உண்மையே..
===================
மேலும், சாலையோரமாக கவிதை எழுதுபவர், ஜெஸ்சி மற்றும் செலினுக்கு கவிதை எழுதி தரும் காட்சிகள் அருமை..அந்த கவிதைக்கு சரியான அர்த்தம் எனக்கு தெரியவில்லை என்றாலும் காட்சியோடு கலந்த அது ரசிக்கவைத்தது..
==================
===================
படத்தில் கதையென்று சொல்லும் அளவுக்கு பெரிதாக இல்லை..சிலருக்கு என்னயா கதன்னு கேட்டாலும் கேட்கலாம்ம்.முன் பின் தெரியாத இரண்டு நபர்களின் ஒரு நாள் சந்திப்பையும் நட்பையும் காதலையும் அனுபவங்களையும் ஊரை சுற்றி வரும் கேமரா அசைவுகளோடு ஒரு நாள் பயணத்தை சுவாரஸ்யமாக சொன்னதற்க்கு இயக்குனருக்கு பாராட்டுகள்.
==================
இந்த படத்தின் தொடர்ச்சியாக சரியாக பத்து வருடங்கள் கழித்து 2004 - ஆண்டு இரண்டாம் பாகம் வெளிவந்து இருக்கிறதாம்.இந்த தொடரின் இரண்டாம் பகுதி சீக்கிரமாக..
===================
திரைப்படங்களுக்கு ரேட்டிங் கொடுக்கும் தளமான ரோட்டோன் தொமொதொஸ், என்றும் இல்லாத விதத்தில் இத்திரைப்படத்திற்கு 100 சதவீத மதிப்பு வழங்கியுள்ளது இந்த படத்தின் ஆகச் சிறந்த சிறப்பு என்றால் மிகையாகாது.
==========================
படத்தின் இறுதி காட்சி ஒரு ஆழமான பிரிவை மென்மையாக எடுத்துரைக்கும் வாழ்க்கை குறிப்பு போன்றது...இதே நிகழ்வு நமது வாழ்க்கையிலும் நடந்திருக்க வாய்ப்புகளுண்டு..நாமும் பிரிவோம் சந்திப்போம் என்று வெறுமனே காலண்டர் திகதிகளை காட்டி கூறிவிட்டு அதை முழுதாக மறந்துவிட்டு நம் வாழ்க்கையினை ஓட்டிக்கொண்டிருக்கலாம்..Before Sunrise/Sunset ஆகிய இந்த படங்கள் உங்கள் கடந்தக்கால அந்த நினைவுகளை தட்டி எழுப்பக்கூடும்..
.படம் பார்த்து முடித்த போது என் பள்ளி வாழ்க்கையும் நன்பர்களும்தான் எனது ஞாபகத்தை எட்டியது..பள்ளிகளும் இருப்பிடங்ளும் மாற்றலாகிய பொழுது நண்பர்கள் பழகியவர்களிடமும் அடுத்த வருடம் சந்திக்கலாம் தொலைப்பேசியில் பேசிக்கொள்ளலாம் என்ற சொன்ன வார்த்தைகள் இன்றுவரை நிறைவேர அல்லது நிறைவேற்ற முடியாத கனவுகளாக நிற்ப்பதை ஒரு நொடியில் உணர வைத்த படம் இது...
அதுக்காக இது சோகமான படம் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்..சும்மா மகிழ்ச்சியாக ரசித்து பார்க்க கூடிய படம் இது..முடிந்தால் சப்டைட்டலுடன் பாருங்கள்..ஏனெனில் படம் முழுக்க ஒரே (சாரி..நிறைய) Conversations தான்..வசனம் எழுதியவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்..ஏன்..படம் பாருங்கள்/
பிஃபோர் சன்ரைஸ் - காதல் என்ற உணர்வினை மிக தெளிவாகவும் மென்மையாகவும் ஆழமாகவும் அழகாவும் வர்ணித்த ஒரு அற்ப்புதமான திரைப்படைப்பு.கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம்..
My Rating : 7.8/10
கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,
மிகவும் அழகான விமர்சனம்.
ReplyDeleteஉங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.
இவ்வளவு ஆழ்ந்து அழகாக எழுதி இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக சிறந்த காதல் திரைப்படமாக தான் இருக்கும்.
நான் காதல் திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக பார்பதில்லை.(டைடானிக் பார்த்துள்ளேன், ஆன அது...) போன வாரம் தான் eternal sunshine of the spotless mind பார்த்தேன், படம் நன்றாகவே இருந்தது. சில நல்ல திரைப்படங்களில் எந்த படத்தை பார்ப்பது என்றிருந்தேன், நீங்கள் கூறுவதால் இந்த படத்தையே பார்க்கலாம் என்றுள்ளேன்.
Arun J Prakash said...
ReplyDelete<<< மிகவும் அழகான விமர்சனம்.
உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.
இவ்வளவு ஆழ்ந்து அழகாக எழுதி இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக சிறந்த காதல் திரைப்படமாக தான் இருக்கும்.
நான் காதல் திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக பார்பதில்லை.(டைடானிக் பார்த்துள்ளேன், ஆன அது...) போன வாரம் தான் eternal sunshine of the spotless mind பார்த்தேன், படம் நன்றாகவே இருந்தது. சில நல்ல திரைப்படங்களில் எந்த படத்தை பார்ப்பது என்றிருந்தேன், நீங்கள் கூறுவதால் இந்த படத்தையே பார்க்கலாம் என்றுள்ளேன்.>>>
உங்களுடைய கருத்துக்கும் என்னுடைய வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து படம் பார்க்கிறேன் என்று சொன்னதற்கு மிகுந்த நன்றிகள் முதலில் நண்பரே.படம் பாருங்கள் உங்களையும் கவர்ந்திடக்கூடும்.
பிறகு, சென்ற வாரம் நீங்கள் பார்த்ததாக கூறும் திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் (முடிந்தால்) ஒரு குட்டி விமர்சனம் ஒன்றை போடுங்களேன்.(தவறாக நினைக்க வேண்டாம்..ஒரு வேண்டுக்கோள்).அந்த படத்தை பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது..தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.மீண்டும் தங்கள் வருகைக்கு நன்றி.
அழகான விமர்சனம் , உங்கள் ப்ளாக் என் பாவரைட் :-))
ReplyDeleteudanpirappe said...
ReplyDelete<<< அழகான விமர்சனம் , உங்கள் ப்ளாக் என் பாவரைட் :-)) >>>
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
//அவருடனான பழக்கம்..மெல்ல மெல்ல உங்களை ஈர்க்கும் கணங்கள் அப்படியே மெல்லமாக காதல் நொடிகளாக மாறுகிறது..அந்த சற்றென ஏற்ப்பட்ட ஓர் அனுபவம் எதிர்ப்பாராத விதமாக உடனே பிரிவை தழுவும் பொழுது..///
ReplyDeleteஅற்புதமான் வரிகள்... படத்தை அனுபவித்து எழுதி இருக்கேங்க.......நான் பார்க்க வேண்டிய படங்களின் எண்ணிக்கை ஏறி கொண்டே போகிறது....
ராஜ் said...
ReplyDelete<<< //அவருடனான பழக்கம்..மெல்ல மெல்ல உங்களை ஈர்க்கும் கணங்கள் அப்படியே மெல்லமாக காதல் நொடிகளாக மாறுகிறது..அந்த சற்றென ஏற்ப்பட்ட ஓர் அனுபவம் எதிர்ப்பாராத விதமாக உடனே பிரிவை தழுவும் பொழுது..///
அற்புதமான் வரிகள்... படத்தை அனுபவித்து எழுதி இருக்கேங்க.......நான் பார்க்க வேண்டிய படங்களின் எண்ணிக்கை ஏறி கொண்டே போகிறது....>>>
தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றிகள் நண்பரே..படத்தை பாருங்கள்.ஒரு நல்ல அனுபவத்தை நீங்களும் உணர்ந்திட வாய்ப்புகள் உண்டு.
பகிர்வுக்கு நன்றி குமரன். இந்த படங்கள் எனது "2 Watch List" இல் சேர்க்கப்பட்டுள்ளன.
ReplyDelete<< PPattian : புபட்டியன் said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி குமரன். இந்த படங்கள் எனது "2 Watch List" இல் சேர்க்கப்பட்டுள்ளன.>>>
தங்கள் நல்வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நான் சினிமாவுக்கு செல்வது மிகவும் குறைவு ஆனால் பார்க்க தூண்டியது
ReplyDelete<< கோவிந்தராஜ்,மதுரை. said...
ReplyDeleteநான் சினிமாவுக்கு செல்வது மிகவும் குறைவு ஆனால் பார்க்க தூண்டியது>>
தங்கள் வருகைக்கு நன்றி..படம் பாருங்கள்.