Wednesday 7 December 2011

இரண்டு படம் : ஏறக்குறைய ஒரே கான்செப்ட்டில் நிறைய கொலைகள் : Orphan - 2009 பகுதி இரண்டு

------------------------------------------------------------------------ 
இந்த தொடரின் முந்தைய, அதாவது பகுதி ஒன்றை படிப்பதற்கு இங்கே செல்லவும்...மேலும்,  முந்தைய பதிவை பார்ப்பதற்கு இங்கே செல்லவும்...

 இது ஒரு ஆர் ரேட்டிங் (18 +) பெற்ற திரைப்படம்.தயவு செய்து குடும்பத்தோடு பார்பதையும் சின்ன பிள்ளைகள் பார்ப்பதையும் தவிர்க்க பாருங்கள்.காரணம்??? 
=========================================

மற்றுமொரு அருமையான ஹாரர் படம் இது...கான்செப்டில் கேஸ் 39 க்கும் இதற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருந்தாலும், திரைக்கதை அமைப்பாலும் திரில்லரான காட்சியமைப்புகளாலும் அதைவிட நல்ல படமாக வந்துள்ளது..
++++++++++++++++++++++++++
 Orphan - 2009 = Dvdrip
+++++++++++++++++++++++++

Film : Orphan          Year : 2009
Country : America       Rating : R (View)
Director : Jaume Collet-Serra     Writers : David Johnson (screenplay), Alex Mace (story)
Stars : Vera Farmiga, Peter Sarsgaard and Isabelle Fuhrman
Awards : 1 nomination See more awards »

 அதில்லாச்சும் பரவால்ல (கேஸ் 39) வில்லங்கம் வீட்ல ரெண்டலுக்கு தங்கிருந்தது...இதுல ரூம்ப கொடுத்த படுக்கைய போட்டு குடித்தனமே வச்சிட்டாங்க நம்ம கதையோட குடும்பம்.

இந்த படத்தின் கதையும் ரொம்ப சிம்பிள்தான்,,,

 அந்த சிறுமிக்கு   ஒரு பத்து வயது இருக்கும்.  யாருகிட்டையும் அதிகமா பேசாது : ரொம்ப புத்திசாலியா..எப்படி சொல்றது ரொம்ப மெச்சுரானவள் : நல்லா வரைவா...ஒரு நாளு மேல சொன்ன ஃபேமிலி இந்த பச்ச (?) புள்ள தங்கிருக்கும் அனாதை விடுதிக்கு வராங்க.அவங்களுக்கு ஏற்கனவே ரெண்டு பிள்ளைங்க, மூனாவதா குழந்த பொறந்தோனயே இறந்துவிட, ரொம்ப கவலையா அந்த வலிய குறைக்க ஒரு பிள்ளைய தத்தெடுக்கலாம் என்று முடிவு பண்ணிதான் அங்க வராங்க..வந்தோனயே பிள்ள (பிள்ளையா ?) புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரையும் கவர்ந்திட, எல்லா  ஃபோர்மல்ட்டியும் முடிச்சுட்டு கூட்டிட்டு போறாங்க.

  வீட்டுக்கு வந்தோனயே அம்மாகிட்ட நல்லா பழக ஆரம்பிச்சிடராங்க, அப்பாவும் ? எந்த பிரச்சனையும் இல்ல..பாசமாதான் இருக்காரு (ரொம்பவே).அப்புறம் அந்த ரெண்டு பசங்க.ரெண்டாவது (சாரி..இப்ப மூனாவது) அந்த வாய்பேச முடியாத குட்டி பெண்ணோட நல்ல ஐக்கியம் ஆகிடராங்க..ஆனா (கொஞ்சம் பெரிய ஆஆஆனாதான்) அந்த மூத்த பையனோட..(பாருங்க ஸ்கிரீன்ல),,

  அப்புறம், ஒன்னு ஒன்னா நெறைய  கெட்ட காரியங்க நடக்க ஆரம்பிக்குது (கொலைகளும்தான்)..ஒவ்வொன்னுலையும் அந்த சிறுமி சம்பதம்பட அம்மாவுக்கு சந்தேகம் கிளம்புது, வெறுக்க ஆரம்பிக்கிறாங்க..இவங்க இருக்கு இருக்குன்னு சொல்ல.., புருஷரு இல்ல இல்லன்னு சொல்ல அந்த சிறுமிக்கு கூஜா தூக்க ஆரம்பிக்கிறாரு..
அவ்வளவுதான்..தொடங்கிருச்சில..திரைக்கதை ஆசிரியரும் டைரக்டரோட வேட்டையும் படத்துல..
===============

இதுக்கப்புறம் வர்ர காட்சிகள் எல்லாமே ஹாலிவுட் கலக்கல் ஆட்டம்தான்.ஒரு கொடூர பேயில்ல, ஆவியில்ல, ரத்தம் குடிக்கிற டிராக்குலா இல்ல..இத்தனைக்கும் ஏன் ஹாலிவுட்டுல கால காலமா கழுத்த அறுக்குர ஸாம்பிஸும் இல்ல.இந்த ஒத்த பிள்ளைய வச்சிகிட்டு இவைங்க கொடுக்குற சீனு இருக்கே யெப்பா..தாங்குல.அதுவும் கடைசி காட்சியெல்லாம் சான்சே இல்ல..(எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கலோ). "என்னடா நடக்குது", "அடப்பாவிங்களா", என்று படம் போகுற   போக்குல மனசுல சொல்லிகிட்டே முடியுறதுக்கு நள்ளிரவு மூனு மணி ஆச்சு. ஒளிப்பதிவு, இசை என்று அனைத்துமே படத்துக்கு பெரிய பலம்..முக்கியமாக நடிகர்களின் பங்கு இதில் மிக அதிகம்..ஐந்து வயது வாய்ப் பேச முடியாத சிறுமியின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது..
இறுதியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை ..கண்டிப்பாக ஹாரர் ரசிகர்கர்கள் பார்க்க வேண்டிய படம் இது.விமர்சன ரீதியிலும் வசூலிலும் போதுமான அளவு நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்துக்கு மேலும் ஒரு சிறப்பு.

கொஞ்சம் அதிகமாகவே வன்முறையும் ஆபாசமும் கொண்ட காட்சிகள் சில படத்தில்  இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்ப்பது நன்று..இறுதியா அந்த கடைசி கிளைமக்ஸ் காட்சிகளில் உடைக்கபடும் மர்மங்கள் அனைத்தும் சஸ்பென்சின் உச்சம்..மறுபடியும் ஒரு தடவ "எப்படியா இப்படி யோசிக்கிறாங்களோ"..

IMDB : 7/10
My Rating : 7.4/10  
    பின் குறிப்பு : வெறும் ஒரே கான்செப்டில் வந்த இரண்டு படங்களை அறிமுகம் செய்யவே இந்த தொடரை எழுதியதன் முதற்காரணமாகும்.இந்த படத்தை பற்றி   கூடுதலாக அறிந்துக்கொள்ள விரும்புவர்கள் நண்பர் அருண் அவர்கள் எழுதிய விமர்சனத்துக்கு சென்று படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..மேலும், மீண்டும் என்றாவது ஒரு நாள் ஆண்டவன் புண்ணியத்துல இதே கதையம்சத்தை கொண்ட படங்கள் எனது பார்வையில் தென்பட்டால் இந்த தொடர் கண்டிப்பாக தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு வாசகர்கள் எவறேனும் இது போன்ற படங்களை அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்...இப்பவே என்னுடைய அட்வான்ஸ் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி 
============================================================== 
  கருத்துக்கள் ஏதாவது இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,
 

10 comments:

  1. நல்ல கலக்கல் விமர்சனம். கலக்கிடிங்க நண்பா...
    உங்கள் பதிவில், என்னுடைய பதிவையும் அறிமுகப்படிதியதற்கு மிகவும் நன்றி.

    ''///இறுதியா அந்த கடைசி கிளைமக்ஸ் காட்சிகளில் உடைக்கபடும் மர்மங்கள் அனைத்தும் சஸ்பென்சின் உச்சம்..மறுபடியும் ஒரு தடவ "எப்படியா இப்படி யோசிக்கிறாங்களோ"..///''
    படம் பார்த்து முடித்த பிறகு என்னாகும் இதுதான் தோன்றியது.

    படத்தில் குழந்தையாக நடித்திருக்கும் அந்த சிறு பெண்ணின் (MAX) நடிப்பு தான் எனக்கும் மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  2. Arun J Prakash said...
    <<< நல்ல கலக்கல் விமர்சனம். கலக்கிடிங்க நண்பா...
    உங்கள் பதிவில், என்னுடைய பதிவையும் அறிமுகப்படிதியதற்கு மிகவும் நன்றி.
    ''///இறுதியா அந்த கடைசி கிளைமக்ஸ் காட்சிகளில் உடைக்கபடும் மர்மங்கள் அனைத்தும் சஸ்பென்சின் உச்சம்..மறுபடியும் ஒரு தடவ "எப்படியா இப்படி யோசிக்கிறாங்களோ"..///''
    படம் பார்த்து முடித்த பிறகு என்னாகும் இதுதான் தோன்றியது.
    படத்தில் குழந்தையாக நடித்திருக்கும் அந்த சிறு பெண்ணின் (MAX) நடிப்பு தான் எனக்கும் மிகவும் பிடித்தது.>>>

    தங்களது வருகைக்கும் சிரமம் பாராமல் வந்து படித்து தந்த பாராட்டுக்கும் எனது மனம்சார்ந்த நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம். உங்கள் தளத்திற்கு நான் ஏற்கனவே வந்திருந்தாலும், பின்னோட்டம் போட நேரமில்லாததால் போட முடியவில்லை. தொடர்ந்து இது போன்ற பல த்ரில்லர் படங்களை விமர்சனம் செய்யவும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. N.H.பிரசாத் said...
    << அருமையான விமர்சனம். உங்கள் தளத்திற்கு நான் ஏற்கனவே வந்திருந்தாலும், பின்னோட்டம் போட நேரமில்லாததால் போட முடியவில்லை. தொடர்ந்து இது போன்ற பல த்ரில்லர் படங்களை விமர்சனம் செய்யவும். பகிர்வுக்கு நன்றி.>>

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் N.H.பிரசாத் அவர்களே.மேலும், பல படங்களை பற்றி எழுத முயற்சி செய்கிறேன்.உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  5. சுவாரசியாமான முறையில் எழுதியிருக்கிறியள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அம்பலத்தார் said...
    << சுவாரசியாமான முறையில் எழுதியிருக்கிறியள் வாழ்த்துக்கள்.>>

    தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றிகள் அம்பலத்தார் அவர்களே.

    ReplyDelete
  7. சஸ்பென்சை உடைக்காம விமர்சனம் பண்ணி இருக்கேங்க....நல்ல விமர்சனம்...
    ஆனா இந்த படத்தோட அடி நாடி விஷயம் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை...

    ReplyDelete
  8. பேய் பிசாசு இல்லாத சஸ்பென்ஸ் படங்கள் கொஞ்சம் குடுக்கிறேன்:
    1) Final Destination Series (1-5)
    2) Hannibel Lecter Series (4 பக்கம்னு நினைக்குறேன்)..

    ReplyDelete
  9. ராஜ் said...
    <<< சஸ்பென்சை உடைக்காம விமர்சனம் பண்ணி இருக்கேங்க....நல்ல விமர்சனம்...
    ஆனா இந்த படத்தோட அடி நாடி விஷயம் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை..>>>

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.உங்களுக்கு எப்படின்னு தெரில.பட் கிளைமக்ஸ் எனக்கு பரவால என்கிறத தாண்டி கொஞ்சம் ஆச்சரியம் பிளஸ் ஆதிர்ச்சியுமாகதான் இருந்தது.அதுவே படத்த பிடிக்கிறதுக்கும் காரணமாக கூட இருக்கலாம்.படத்த பார்த்துட்ட பிறகு, விக்கிபீடியாவுக்கு சென்று படித்த போதுதான் பல விஷயங்கள் தெரிஞ்சது.

    ஒரு படம் என்கிறப்ப சிலருக்கு பிடிக்கிறதும் சிலருக்கு பிடிக்காமல் போகுறதும் சகஜம்தானே சகோ..(தவறா சொல்லிருந்தா மன்னிச்சுருங்க)

    ReplyDelete
  10. ராஜ் said...
    <<< பேய் பிசாசு இல்லாத சஸ்பென்ஸ் படங்கள் கொஞ்சம் குடுக்கிறேன்:
    1) Final Destination Series (1-5)
    2) Hannibel Lecter Series (4 பக்கம்னு நினைக்குறேன்)..>>>

    தாங்கள் மெனகட்டு சில படங்களை இங்கு குறிப்பிட்டதற்கு என் மனசார்ந்த நன்றிகள் சகோ..
    இதில், ஏற்கனவே Final Destination 1, 2 பார்த்துள்ளேன்..மீதி படங்கள் இன்னும் பெண்டிங் லிஸ்டிலேயே உள்ளது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...