Monday 5 December 2011

ஹாலிவுட் சினிமா : தெ நேன்னி/The Nanny - 1965 : ஒரு நல்ல சஸ்பென்ஸ் டிராமா..

----------------------------------------------------------------------------------
தொடர்ந்து ஆதரவு வழங்கிவரும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு அப்படியே இந்த வலைப்பூ உங்களை கவர்ந்திருந்தால் தயவு செய்து தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அறிமுகபடுத்துங்கள்.அது மேற்கொண்டு எழுதுவதற்கு மிகப் பெரிய ஆதரவாக அமையும் என்பதை கூறிக்கொள்வதோடு இதோ இன்றைய பார்வை..
========================================   
Bette Davis (1908-1989)

தொடர்ந்து ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு நடிகை பெட்டி டேவிஸை அவர்களை பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் நிறைய உண்டு.அமெரிக்காவின் ஆல் டைம் சிறந்த நடிகைகளின் பட்டியலில் தவறாது இடம்பிடித்திருக்கும் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர்.இவரது பெயரை விட இவருடைய கண்கள் அதிகமாக பிரசித்திபெற்றது என்று சொல்லலாம்.நடிப்புக்கு பஞ்சமே வைக்காத அளவுக்கு பலதரபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்.அந்த காலத்து காதல் படங்களில் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

 ஆஸ்கர் விருது வரலாற்றிலேயே முதன் முதலாக 10 முறைகளுக்கு மேல் பரிந்துரைக்கபட்டதோடு அல்லாது..அதில் இரண்டு விருதுகளை முறையே Dangerous (1935), Jezebel (1938) ஆகிய படங்களுக்கு வென்றுள்ளார்.மேலும்கேன்ஸ் திரைப்பட விழாவில் 1950 ஆண்டு வெளிவந்த சிறந்த காதல் சித்திரமான All About Eve (1950) என்ற படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.இவரது நடிப்பில் பிற குறிப்பிட்ட திரைப்படங்களாக Dark Victory (1939), The Little Foxes (1941), The Star (1952), What Ever Happened to Baby Jane? (1962) ஆகியவையை கூறலாம்.
     
  ஹாலிவுட் மட்டுமன்றி உலகளவில் பிரபலமான சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான டேவிஸ்அக்டோபர் 6 ஆம் திகதி 1989 - ஆண்டு காலமானார்
=========================================

பொதுவாகவே பழைய படங்களில் ஹிட்ச்காக் மற்றும் ஹாரர் படங்களை தவிர பெரியளவில் திரில்லர், சஸ்பென்ஸ் போன்ற மற்ற வகையிலான படங்களை பார்ப்பது மிக குறைவு. புது படங்களின் மேல் வந்துவிட்ட ஒரு மோகம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..

 அந்த வகையில் ஏதோ பெரிய ஆர்வத்தோடு சஸ்பென்ஸ் படங்களை பற்றி இணையத்தில் தேடுகையில் மாட்டிக்கொண்ட ஒரு திரைப்படம்தான் தெ நான்னி..இந்த படத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.எனவே, ஒரு நல்ல சஸ்பென்ஸ் படம் இன்றைய சிறு பார்வையாக.. The Nanny திரைப்படம் பிரிட்டிஷ் இயக்குனரான Seth Holt (1923-1971) என்பவரின் திரை இயக்கத்தில் வெளிவந்த சஸ்பென்ஸ், திரில்லர் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி 1965 - ஆம் ஆண்டு வெளிவந்த டிராமா வகையை சார்ந்த திரைப்படமாகும்.இதில் Bette Davis - Nanny/நேன்னி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் William Dix, Wendy Craig, Jill Bennett ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மூன்று முறைகள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைப்பட்டவரும் சிறந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் திரை மற்றும் ஜாஸ் இசை அமைப்பாளரும் கலைஞருமான Richard Rodney Bennett இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.    

==================================================

கதைச்சுருக்கம் :

 ஓர் அழகான பொழுதில் பிள்ளைகள் பலர் கூடி மகிழ்ச்சியாக, விளையாட்டு மைதானத்தில் படத்தின் டைட்டில் கார்டு சுழல முதல் காட்சி தொடங்குகிறது.இவர்களின் விளையாட்டினை பார்த்துகொண்டு சிரித்தபடியே நடந்து வர அறிமுகமாகிறார் திரைப்படத்தின் தலைப்பு பாத்திரமான "நேன்னி (Bette Davis)" ???
    ////நேன்னியை பொருத்தவரை மிகுந்த நல்ல குணமும் மனமும் கொண்ட நீண்ட வருடங்களாக ஒரு பணக்கார வீட்டில் பணிப்புரிந்துவரும் வயதானவர்.இவர் வேலை செய்யும் வீட்டு உறுப்பினர்களையே கால காலமாக தனது குடும்பமாக ஏற்றுக்கொண்டு திருமணம் கூட செய்யாமல் (ஆமா..இந்த வயசுல ஏது கலயாணம்) ஒரு செவிலித்தாயாக (Nanny) {தமிழாக்கம் சரிதான் என்று நினைக்கிறேன்} வாழ்ந்து வருபவர்.வீட்டில் இருப்பவர்களும் இவரை தனது குடும்பத்தில் ஒருவராகவே கருதுகின்றனர்///

இவர் வழியில் பூக்கடையில் மலர் வாங்கியப்படியே தான் தங்கி வேலை செய்யும் வீட்டுக்கு வந்து சேர்கிறார்.கதவு திறந்து உள்நுழந்தவுடனே Bill Fane (James Villiers) மற்றும் இவரது மனைவியான Virginia "Virgie" Fane (Wendy Craig) - உடன் நிகழும் ஒரு சீரியஸான உரையாடல்கள் நம் காதுகளிலே விழுகிறது.அடுத்து வரும் வசனங்கள், அது இவர்களின் மூத்த மகனான 10 வயது "Joey Fane (William Dix)" ???? பற்றியென்பதை நாம் அறிந்துக்கொள்ள வைக்கிறது.   
   ///Joey Fane - இரண்டு வருடங்களுக்கு முன்பு எதிர்ப்பாராத விதமாக தன் தங்கையின் மரணத்தில் சம்பந்தம் பட்டு சிறப்பு பள்ளி ஒன்றில் தங்கி படித்து வருபவன்..வயதைக் கடந்த முதிர்ந்த பேச்சும் செயலும் செய்யும் பத்து வயது சிறுவன்./// 

  அடுத்த சில காட்சியிலேயே நீண்ட மாதங்களுக்கு பிறகு ஜோய் வீடு திரும்புகிறான்..முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிகமாகவே முதிர்ச்சியாக (செயல் : பேச்சில்) காணபடுகிறேன்..கூடவே நேன்னியை காரணமே தெரியாத வகையில் வெறுக்க ஆரம்பிக்கிறான்.நேன்னி செய்து கொடுக்கும் எதையும் (ரூம், உணவு, வசதி) ஏற்க மறுக்கிறான்.தன் தந்தை மற்றும் தன் தங்கையின் மரணத்தால் மிகுந்த அளவில் பாதிக்கபட்ட தாயின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து நேன்னியை அவமதிப்பதோடு தன் அறையின் விண்டொவின் வழியே மேல் வீட்டுக்கு சென்று 14 வயது பெண் பிள்ளையுடன் பழக ஆரம்பிக்கிறான்..எங்கே நேன்னி தன்னை கொன்றுவிடுவாரோ என்று பயந்து அறையின் கதவையும் பூட்டிக்கொள்கிறான்..இதற்கிடையில் ஜோயின் தந்தை வேளியூருக்கு சென்று விடுகிறார்..  

  இதனை தொடர்ந்து வரும் காட்சிகள்தான் படத்தின் திருப்புமுனையென்று சொல்லும் அளவுக்கு சில சம்பவங்களும் நிகழ்வுகளும் எதிர்ப்பாராத விதமாக நடக்கின்றன..இவை அனைத்துக்குமே ஒரு வகையில் ஜோயே குற்றவாளியாக ஆகிறான்..உண்மையில் நடப்பது என்ன ? ஜோயின் தங்கை இறந்ததுக்கான காரணமும் அதன் பின் உள்ள மர்மங்கள் என்ன ? ஜோயிக்கும் நேன்னிக்கும் நிகழும் இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் முடிச்சுகளும் பின்னனியும் என்ன என்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைப்ப்டத்தின் மீத காட்சிகள்..
==============================
 (((ஒரு சீரியஸான குறிப்பு : எனக்கு எழுதருதலிலேயே இதுவரைக்கும் ரொம்ப கஷ்டமான ஒன்று ஒரு படம் பார்த்து அதன் கதையை முட்டி மோதி ஒரு விமர்சனம் என்ற பேரில் ஏதோ ஒன்னுல எழுதருதுதான்..அநேகமா நான் கத சொல்லி படம் பாக்காம போகவும் வாய்ப்பு உண்டு..ஏதோ எழுத எழுததான் கத்துக்கனுன்னு ஏதோ பண்றேன்.. மன்னிச்சுடுங்க).அதுக்காக படம் பிடிக்கலனு அப்படியே நின்றாதிங்க..மீதமிருக்குறதயும் படிச்சி (இன்னுமா....) எதுக்கும் டிரைலரையும் பாத்துட்டு டவுன்லோடு போடுங்க..ஏனா..இதுதான் கதையானு நான் எழுதுனது படிக்கறதுக்குதான் ஒரு மா..மாதிரியா இருக்கும்..மத்தபடி படம் எனக்கு ஓகே..)))
================================================

தெ நேன்னி/The Nanny - 1965 திரைப்படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள் :

இந்த திரைப்படம் Evelyn Piper என்பவரின் எழுத்தில் மலர்ந்த தெ நேன்னி என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டதாகும்
==================

நேன்னி கேரக்டருக்கு முதலில் நடிப்பதற்க்கு தேர்வானவர் ஹாலிவுட்டின் இன்னொரு நட்ச்சத்திரமான Greer Garson என்பது குறிப்பிடதக்கது..சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் விலகிவிட இறுதியாக பெட்டி டேவிஸ் மிக அருமையாக நேன்னி கதாபாத்திரத்தை சிறப்பான முறையில் செய்துருக்கிறார்.
=====================

நடிப்பை பொருத்தவரை பெட்டி டெவிஸ் - நேன்னி என்ற முதுமையான கதாபாத்திரத்தில் மிக பொருத்தமாகவும் இயல்பாகவும் அழகாகவும் நடித்துள்ளார்.ஒவ்வொரு காட்சியிலும் இவரது முக அசைவுகளும் முக்கியமாக இவரது கண்கள் அப்பா.என்னமா நடிக்குது..மேலும் என்ன சொல்வது என்று தெரியவில்லை..  
=======================
 பெட்டி டேவிஸின் நேன்னி கதாபாத்திரத்துக்கு பிறகு கதையில் மிக முக்கியமான கதாபாத்திரம் Joey Fane..இதனை எந்த ஒரு குறையும் இல்லாத விதத்தில் திறமையான முறையில் ஏற்று நடித்திருப்பவர் William Dix என்பவராகும்..வசனங்களில் இவரது நடிப்பு நன்று.ஆனால் இதற்கு முன் இவரது முகத்தை கூட நான் பார்த்ததில்லை.மற்ற எந்த படத்திலும் நடித்துள்ளதாகவும் நினைவுமில்லை..
========================

பிறகு, ஜோயின் தாயாராக வரும் Wendy Craig, படத்தில் "Virgie" என்பவராக வந்து கதைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளார்.படம் முழுக்க ஏதோ நோயாளியாக அழுதுக்கொண்டே நன்றாக நடித்திருக்கிறார்..பார்ப்பதற்கு எனக்கு என்னவோ நடிகை Liv Ullman போலவே இருக்கிறார்.
===========================

புகழ்பெற்ற ஹாரர் சினிமா நிறுவனமான Hammer Film Productions - நின் தயாரிப்பில் வெளிவந்த படங்களிலேயே சிறந்த சைக்கலோஜிக்கல் திரில்லராக இன்று ஹாரர் ரசிகர்களால் தெ நேன்னி திரைப்படம் அழைக்கபடுவது ஒரு கூடுதல் சிறப்பாகும்..
=============================

  மொத்தத்தில் 60 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த சஸ்பென்ஸ் கலந்த திரைப்படங்களை பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க கூடிய ஒரு படம் தெ நேன்னி..காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் ஒரு நல்ல சஸ்பென்ஸ் டிராமா..அனைவரும் பார்க்க கூடிய சினிமா..     
           
IMDB : 7.2/10
My Rating : 7/10 : An Underrated Thriller Of Mid 60's

  கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,
 

4 comments:

  1. நல்ல முயட்ற்சி சகோதரா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. kumaran said...
    <<< நல்ல முயட்ற்சி சகோதரா வாழ்த்துக்கள்.>>>

    நன்றி சகோ..தங்களுடைய பாராட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்.மேற்க்கொண்டு இன்னும் சிறப்பாக எழுதிட தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  3. விமர்சனம் அருமை.
    நன்றாக தான் எழுதிரிங்க நண்பா, உங்கள் மேல் உங்களுக்கே எதற்கு சந்தேகம். உண்மையாகவே உங்கள் விமர்சனம் மற்றும் திரைப்படத்தை பற்றிய விஷயங்களும் படிப்தற்கு மிகவும் சுலபமாக உள்ளது. அத்துடன் உங்கள் எழுத்து படத்தை பார்க்கவும் தூண்டுகிறது. தொடர்ந்து எழுதுங்கள், இது போல் பல நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்யுங்கள்.

    ReplyDelete
  4. Arun J Prakash said...
    <<< விமர்சனம் அருமை.
    நன்றாக தான் எழுதிரிங்க நண்பா, உங்கள் மேல் உங்களுக்கே எதற்கு சந்தேகம். உண்மையாகவே உங்கள் விமர்சனம் மற்றும் திரைப்படத்தை பற்றிய விஷயங்களும் படிப்தற்கு மிகவும் சுலபமாக உள்ளது. அத்துடன் உங்கள் எழுத்து படத்தை பார்க்கவும் தூண்டுகிறது. தொடர்ந்து எழுதுங்கள், இது போல் பல நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்யுங்கள்.>>>

    தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
    இல்லை நண்பரே..நீண்ட நாட்களாக எனக்குள்ளே இருந்த சந்தேகத்தை தான் மேலே குறிப்பில் எழுதிருந்தேன்..உங்களது இந்த வார்த்தைகள் என்னை மென்மேலும் ஊக்கபடுத்திகின்றன.உங்கள் ஆதரவுக்கு பல நன்றிகள்.
    முடிந்தளவில் பல நல்ல படங்களை தொடர்ந்து அறிமுகம்படுத்துகிறேன்.மீண்டும் நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...