Follow by Email

Monday, 12 December 2011

ஹாலிவுட் சினிமா : லேரி கிரோன் / Larry Crowne (2011) : ரஜினி சாரும் இத்தனை வயது கடந்து கல்லூரி போகும் டாம் ஹாங்க்ஸ்..


ரஜினி சார் 
சின்ன வயசிலருந்தே ரஜினி சாரோட பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன்..தமிழ் படங்கள பார்க்க ஆரம்பித்த காலத்துல இருந்தே டிவியில சூப்பர் ஸ்டாரோட ஒரு படத்தக்கூட விடாம பார்த்து ரசித்த அனுபவங்களும் சந்தோஷமான உணர்வுகளும் ஏராளம்..உடல் நிலை சரியில்லாது இருந்த பொழுது, தலைவரு ஆரோக்கியமா இருக்காரா..நலமாக இருக்கிறாரா என்று அன்றாடம் நாளிதளிலும் இணையத்திலும் டிவியிலும் தேடி தேடி படித்த கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.
இன்று அவரது பிறந்த நாள், என்றென்றும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் அவர் வாழ இறைவனை மனதார வேண்டிக்கொள்கிறேன்..தலைவா ...சீக்கிரமா அடுத்த படத்துல வாங்க..காத்திருக்கோம்..   
==============================================================================


Film : Larry Crowne      Year : 2011
Country : United States     Rating : PG - 13 (advisory »
Director : Tom Hanks      Writers : Tom Hanks, Nia Vardalos
Stars : Tom Hanks, Julia Roberts and Sarah Mahoney
Awards : (இன்னும் இல்ல..இதுக்கு மேலையும்...சந்தேகம் தான்..)


++++++++++++++++++++++++++++++++++++
LARRY CROWNE - 2011 DVDRIP XVID
+++++++++++++++++++++++++++++++++++++


 நம்ம எல்லோருக்கும் நன்கு அறிமுகமான டோம் ஹேங்க்ஸ் மற்றும் ஜூலியா ராபர்ட்ஸின் நடிப்பில் இந்த வருடம் (2011) ஜூலை மாதம் வெளிவந்த ரொமாண்டிக் காமெடி வகையை சேர்ந்த காதல் திரைப்படமாகும்.நீண்ட வருடங்களுக்கு பிறகு இரண்டு முறை அகடமி விருதுகளை வென்றவரான டோம் ஹேங்க்ஸ், Nia Vardalos என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 
  
கதைச்சுருக்கம் :
====================


தலைப்பு கதாபாத்திரமான லேரி கிரௌன் (Tom Hanks), big-box என்னும் மிகப் பெரிய சூப்பர்மார்க்கேட்டில் பணிப்புரியும் நடுத்தர வயதுக்காரர்லேரியை பொருத்தவரை, இவர் பல ஆண்டுகளாக கடற்ப்படையில் வேலை செய்தவர் மட்டுமன்றி கலயாணம் செய்து டைவர்ஸும் ஆனவர்..வெறும் பள்ளி படிப்பை மட்டுமே படித்துள்ள லேரிக்கு இதுவே இவரது வேலை நிறுத்ததுக்கு காரணமாக ஆகிறது..இதனால வீடும் பறி போகின்ற நிலைமை வருது.பல இடங்களுல வேல தேடியும் கிடைக்காம மனமுடைந்து போக, பக்கத்து வீட்டுக்காரரின் அட்வைஸின் பெரில் லோக்கலில் உள்ள community கல்லூரில படிக்க வராரு லேரி..
அங்க இவரவிட 
எல்லோரும் வயசுல சின்னவங்க..
ஸ்டைல், டிரெஸிங்குன்னு எல்லமே வேறுப்பட, அவங்களோட நட்பு புடிச்சு  எல்லாத்தையும் மாத்திகுறாரு..இடையில (அட இடுப்புள இல்லங்க)..நம்ம ஹீரோயின் மெர்சிடிஸ் (காரு இல்லங்க) டைனட் (இவங்கள பத்தி ஸ்கிரின்ல தெரிஞ்சுக்குங்க).ஹீரோ படிக்கும் கிளாஸுக்கு பாடம் சொல்லித்தர வருராங்க..இவங்க ரெண்டு பேருக்கும் ஆரம்பத்துல ஒத்து வராம போக..போக லேரி டைனட்டொட காதலுல விழுலாரு..இவர டைனட் தாங்கி பிடிச்சாங்களா ? லெரிக்கு ஏதாவது வேல கிடைச்சதா ? அல்லது என்னாதான் நடந்ததுன்னு தயவு செய்து படத்த பாக்காதவங்க டிவிடியிலோ அல்லது டவுன்லோடோ போட்டு தெரிஞ்சுக்குங்க..பிளீஸ்..

Larry Crowne (2011) திரைப்படத்தை பற்றிய சில 
===============================================
சுவாரஸ்யங்கள் :
====================


  That Thing You Do! (1996) என்ற திரைப்படத்துக்கு பிறகு சுமார் 14 ஆண்டுக்கால இடைவெளியில் டாம் ஹேங்க்ஸ் இயக்கிருக்கும் ஹாலிவுட் படமிது (டிவி மூவி மற்றும் சீரிஸ் தவிர்த்து)..கிளிண்ட் ஈஸ்ட்வூத், மெல் கிப்சன் என்று நடிகர்களாக இருந்து பின்னாளில் சிறந்த இயக்குனர்களாக சினிமா உலகில் வலம் வந்தவர்களோடு ஒப்பிடும் பொழுது ஹெங்க்ஸ் இன்னும் தன்னை சிறந்த இயக்குனராக நிரூப்பிக்க அதிகமாக சிரத்தைகள் எடுக்க வேண்டும் என்பதை படம் பார்க்கையில் உணர முடிந்தது..இருப்பினும்..

  // வழக்கம்போல நடுத்தர வயதை தாண்டிய வேலை இல்லாது கல்லூரியில் படிக்கும் மாணவானாக வந்து நட்பு, காதல், வசனங்கள் என்று முதலிருந்து இறுதிவரை நடிப்பில், 55 வயதிலும் சும்மா பின்னி பெடலெடுக்கிறார்..அதுதான் லிமிட்...அதுதான் லெவெல்.//
====================
 
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் : ஒருவர் 10 வருடங்களாக ஒரு இடத்தில் பணிப்புரிகிறார்..இந்த வேலை அவர் அன்று படித்த படிப்புக்காக வழங்கபட்டது.சில காரணங்களுக்காக எதிர்ப்பாராத விதமாக மேல் இடம் அவரை பணி நீக்கம் செய்கிறது.இந்த 10 வருடங்களில் காலம் மாறிவிட்டது.வேலைக்கு அலைகிறீர்கள்.அப்போதைய படிப்பு தரத்தை வைத்துக்கொண்டு யாரும் வேலை கொடுக்க மறுக்கின்றனர்..பிறகு, அவரது நிலையென்ன ? என்ன செய்வார் ? (எனவே எல்லா ஸ்டூடன்ஸும் முடிஞ்ச அளவுக்கு படிச்சிக்குங்க)..எதிர்க்காலத்துல இந்த நிலை அதிகரிக்கலாம்
இதனை கருத்தில் கொண்டு காமெடி கலந்த காதல் கதையாக எல்லோரும் ரசிக்கும்படி வழங்கிய டாம் ஹேங்க்ஸுக்கு ஒரு நன்றி.   
================================ 


டைட்டில் கார்டினிலேயே டாம் ஹேங்க்ஸின் கலக்கல், வேலை நிறுத்தம், பக்கத்து வீடுக்காரருடன் உரையாடல்கள், ஜூலியாவின் அறிமுகம், கல்லூரி மானவர்களுடன் நட்பு என்று முதல் பாதி போரடிக்காமல் வேகமாக திரைக்கதையை நகர்த்தி சென்று பிற்ப்பாதியில் ஏதோ பேலன்ஸே இல்லாத விதத்தில் காட்சிகள் அமைந்திருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்..
==========================================

   பக்கத்து வீட்டுக்காரரான Cedric the Entertainer முதல் டாம் ஹேங்க்ஸின் கிளாஸ்மெட்ஸாக வரும் அத்தனை கதாபாத்திரங்களும் படத்திற்கு பெரிய பலம்.அதிலும், தாளியா என்னும் கதாபாத்திரத்தில் வரும் Gugu Mbatha-Raw மிக அழகான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.காஸ்டிங் தேர்வும் அருமை..இவர்கள் அனைவருடைய நடிப்பையும் கதையோடு ஒன்றவைக்கும் வகையில் காட்சிள் அமைத்து ரசிகர்களுக்கு கொடுத்து தான் சிறந்த நடிகர் என்பதை ஹேங்க்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
================================================== 


காட்சிகள் போக போக எனக்கு தேவையில்லாமல் வசூல் ராஜா படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.ஒரு வேளை, இவ்விரண்டு படங்களிலும் சராசரி வயதை கடந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும் அவர்களுக்கு கிடைக்கும் புதிய உறவுகளையும் காட்டியது கூட ஒரு வகையில் அந்த நினைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
===========================================================


அடுத்து, எனக்கு விருப்பமான ஜூலியா ராபர்ட்ஸ்..இவர் அறிமுகமாகி கிளாசில் நடக்கும் காட்சிகள் யாவும் ரொம்ப இண்டரஸ்ட்டிங்காக இருக்கும்.படம் முழுக்க ஒரு சோகம் தாங்கிய போதை மிதக்கும் முகத்தோட வந்து நம்மையும் கவர்கிறார்.இவருக்கும் ஹேங்க்ஸ் - க்கும் இடையே நேரடியான காதல் காட்சிகள் பெரியளவில் இல்லாவிட்டாலும், வெறும் கண்களிலேயே அனைத்து உணர்வுகளையும் கொடுத்து ரசிக்க வைத்த ஜூலியா - டாமுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.
====================================================================
             
  உலகளவில் சுமார் 50 கோடிக்கு மேல் வசூலை அடைந்துள்ள இத்திரைப்படம் தற்சமயம் ரோட்டோன் தொமொதோஸில் 34 சதவீதம் ஸ்கோரை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்..பல கோடி ரசிகர்களை கவர்ந்த ஜுலியா மற்றும் ஹேங்க்ஸ் நடித்தும், வசூல், விமர்சக ரீதியில் இப்படத்துக்கு பெரியளவில் நல்ல வரவேற்ப்பு கிடைக்காதது பெரிய ஏமாற்றமே.
===================================================================


  இறுதியாக, நல்ல நடிப்பு, இயக்கம் என்பதை தாண்டி ஓய்வு நேரங்களில் சும்மா ஜாலியாக கண்டிப்பாக அனைவரும் குடும்பத்தோடு (எதற்கும் இங்க பாருங்க) என்ஜோய் பண்ணி பார்க்கக்கூடிய பல பொழுதுபோக்கு அமசங்கள் நிறைந்த படம் இந்த லெரி கிரௌன்.

IMDB : 5.9 / 10
MY RATING : 6.5 / 10

கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

7 comments:

 1. Kumaran,
  நீங்களும் ரஜினி ரசிகரா...??? ரஜினியை யாருக்கு தான் பிடிக்காது..??? நானும் தீவிர ரஜினி ரசிகன்.

  டாம் ஹேங்க்ஸ் படத்தோட அறிமுகம் நன்று. ஆனா பாருங்க நான் "LARRY CROWNE" என்ற படத்தை பற்றி இப்போ தான் கேள்விபடுறேன். நீங்க சொல்றதை பார்த்த படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பார்க்கணும் போல.

  ReplyDelete
 2. ராஜ் said...
  <<< Kumaran,
  நீங்களும் ரஜினி ரசிகரா...??? ரஜினியை யாருக்கு தான் பிடிக்காது..??? நானும் தீவிர ரஜினி ரசிகன்.

  டாம் ஹேங்க்ஸ் படத்தோட அறிமுகம் நன்று. ஆனா பாருங்க நான் "LARRY CROWNE" என்ற படத்தை பற்றி இப்போ தான் கேள்விபடுறேன். நீங்க சொல்றதை பார்த்த படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பார்க்கணும் போல.>>>

  தங்களது வருகைக்கும் கருத்து பகிர்தளுக்கும் என் நன்றிகள் சகோ.
  நீங்கள் ரஜினி ரசிகர் என்று தெரிந்து மகிழ்கிறேன்.

  இந்த வருடம் வெளிவந்த சிறந்த படங்களின் பட்டியலில் இந்த படம் பெரியளவில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..வருட ஆரம்பத்திலேயே இணையத்தின் ஊடே தெரிந்துக்கொண்டு படம் வெளிவரும் வரை காத்திருந்தேன்..நேரம் கிடைத்து இப்பதான் பார்க்க முடிந்தது.
  ஓய்வு நேரத்தில் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு பார்க்க கூடிய பொழுது போக்கு படம் சகோ..

  ReplyDelete
 3. விமர்சனம் நன்று.

  ராஜ் said @
  நீங்களும் ரஜினி ரசிகரா...???

  அவர புடிக்காதவங்க யார் தான் இருகாங்க.

  ReplyDelete
 4. ராஜ் said @
  நீங்களும் ரஜினி ரசிகரா...???

  அவர புடிக்காதவங்க யார் தான் இருகாங்க >>>

  நன்றி நண்பரே.நீங்கள் சொல்வதும் கரைட்டுதான்..ரஜினி ரஜினிதான்.

  ReplyDelete
 5. அருமையான வரிவிபரிப்புக்கிடையில் ரஜனி ஐயாவையும் இணைத்துரசிக்க வைத்துள்ளீர்கள் நன்றி..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

  ReplyDelete
 6. << ம.தி.சுதா♔ said...
  அருமையான வரிவிபரிப்புக்கிடையில் ரஜனி ஐயாவையும் இணைத்துரசிக்க வைத்துள்ளீர்கள் நன்றி..
  அன்புச் சகோதரன்...>>>

  அருமை சகோ..தங்கள் முதல் சிறப்பு வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்,,

  ReplyDelete
 7. நல்ல பதிவு! நேரமிருந்தால் அறிவுக்களஞ்சியம் எனும் பதிவையும் பாருங்கள். நன்றி!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge