Friday, 9 December 2011

தெ மம்மி/The Mummy - 1932 : பழமையான காதலின் புது உருவம்..

------------------------------------------------------------------------------- 
  சிறிது நாட்களுக்கு பிறகு Cinemax அலைவரிசையின் புண்ணியத்தில் பார்த்த ரொம்ப பழைய ஒரு ஹாரர் படம் தெ மம்மி..


   அமெரிக்க சினிமா உலகின் சிறந்த திரை ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான Karl Freund என்பவரின் திரை இயக்கத்தில் 1932 - ஆம் ஆண்டு வெளிவந்த மர்மம் - சஸ்பென்ஸ் ஆகிய வகையில் வெளிவந்த அமெரிக்க திரைப்படமாகும்.Boris Karloff, Zita Johann மற்றும் David Manners ஆகியோர்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க John L. Balderston என்பவர் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.


++++++++++++++++++++++++++++++++++
The Mummy 1932 Dvdrip Part One, Two
++++++++++++++++++++++++++++++++++
==============================================
கதைச்சுருக்கம் :

1921 - ஆம் ஆண்டு எகிப்து நாட்டில் நடக்கும் ஒரு வரலாற்று ஆய்வினில் இம் - ஹோ - டேப் என்னும் பழங்காலத்து எகிப்து மதகுருவின் கல்லறையை தோண்டி எடுக்கிறார்கள். கல்லறையின் மேலே எழுதபட்டிருக்கும் மந்திர சொற்களை தற்ச்செயலாக ஒருவர் படிக்கவே கல்லறை பிணம் மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது.

 கதை இப்பொழுது சரியாக 10 வருடங்களுக்கு பிறகு 1931 - ஆண்டு தொடர்கிறது, இப்பொழுது அந்த இம் - ஹோ - டேப் என்ற மம்மி முழுக்க முழுக்க கோரமான முக அமைப்புடன்  Ardath Bey என்ற பெயரில் உயிருள்ள மனித உருவில், தன்னுடைய பழங்காலத்து எகிப்த்திய காதலியின் பிணத்தைக் கொண்ட (Ankh-es-en-amon) கல்லறையை தோண்டி எடுக்க உதவி செய்கிது.
இத்தனை ஆயிரம் வருடங்களுக்கு பிறகு தன் நிறைவேறாத காதலை மீட்கவும் தன் காதலியுடன் இணையவும் இம்ஹோடேப் செய்யும் காரியங்களை திரைப்படத்தின் மீத காட்சிகளாக வருகின்றது..மேலும், தன்னுடைய லட்சியத்தை அடைய எகிப்திய வம்சாவளியில் வந்த ஹீரோயினான Helen Grosvenor (Zita Johann) என்பவரை தன்னுடைய வசம் ஈர்க்கவும் முற்படுகிறார்..இதற்கிடையியே இந்த எல்லா விஷயங்களும் ஹீரோவுக்கு தெரியவர..

  தன்னுடைய காதலி ஹெலெனை காப்பாற்றினாரா ? அல்லது இம்ஹோடேப் தன் மந்திர சக்தியால் இவர்களை அழித்து தன் காதலை அடந்ததா ? என்பதுப் போலான சில கேள்விகளுக்கு வழக்கம்போல ஒரு சில கொலைகள் கலந்த திகிலுடன் கதைய சொல்லிருக்கும் பழைய படம்தான் இந்த தே மம்மி..    
=============================================
தெ மம்மி திரைப்படத்தை பற்றி சில சுவாரஸ்யங்கள் :

முதலில் இந்த படத்தின் இயக்குனரான Karl Freund, ஒரு சிறந்த பிரபல பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளரும் இயக்குனருமாவார்.மெட்ரோபோலிஸ் போன்ற மிகப்பெரிய பட்ஜெட்டிலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.இந்த படத்திலும் அதை  நன்றாகவே செய்திருக்கிறார்..தொலைக்காட்சியில் முதன் முதலாக இந்த படத்தை பார்த்த போது இது என்னவோ 50 - ஆண்டுகளில் வெளிவந்த படம் என்று உண்மையாக நினைத்தேன் - நம்பினேன்.அந்த அளவுக்கு சிறிய பட்ஜெட்டில் ஸ்டூடியோ துணையுடன்  நடிப்பு, வெளி/உள்ப்புற காட்சிகள், எடிட்டிங் என்று அனைத்திலுமே திறம்பட தன் பணியை செய்திருக்கிறார்..படம் பார்த்தால் நீங்களும் இதை உணர வாய்ப்பு உண்டு.
================

படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எனக்கு எந்த நடிகரையும் தெரியவில்லை..உண்மையை சொல்ல வேண்டுமெனில் இவர்களின் முகங்களையே இப்படத்தில்தான் பார்த்தேன்.ரோஜெர் கார்மெனின் மூலம் வின்செண்ட் பிரைஸ், செவென் படத்தின் மூலம் கெவின் ஸ்பேசி என்ற வரிசையில் இந்த படம் மூலம் அறிந்துக்கொண்ட ஒரு பொக்கிஷமாக Boris Karloff (1887-1969) என்ற நடிகரை சொல்லலாம்.இணையத்தில் இவரை பற்றி தேடிய போதுதான் இவரை பற்றி பல விஷயங்கள் கிடத்தது..இவரும் ஹாரர் உலகின் சிறந்த புகழ்பெற்ற நடிகராம்..இந்த படத்திலும் பழங்காலத்து எகிப்திய மம்மியாக இம்ஹோதேப் என்ற பாத்திரத்தின் ஊடே கண்களிலேயே மிரட்டி இருக்கிறார்..1932 ஆண்டிலேயே இந்த மாதிரி நடிப்பு என்ன சொலவது..நான் சின்ன பையன். மன்னிச்சுடுங்க..
========================

அடுத்து படத்தில் பார்த்து ரொம்ப அசந்துப்போன ஒரு விஷயம் என்றால் கண்டிப்பாக மேக்கப்தான்..அந்த காலத்திலேயே இந்த..(ச்சே..எந்த மாதிரி சொல்லுறது..) மேக்கப் முயற்சியெல்லாம் சாத்தியமா என்று மம்மி வரும் காட்சிளில் எனக்கு தெரியாமயே மனதில் சொல்ல சொல்ல வைத்தது.அதுவும் இது 32 - இல் வந்த படம் என்று நினைக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.நம்பலன்னா  பாருங்க..
================================
சுமார் 80 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம், காட்சிகள் அளவில் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் 30 - ஆம் ஆண்டுகளிலேயே இந்தளவுக்கு சஸ்பென்ஸ் மற்றும் திகிலான சமச்சாரங்களை எதிர்ப்பாராத விதத்தில் நல்ல படைப்பாக வழங்கியுள்ள படக்குழுவினர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் சுமார் 80 வருடங்கள் கழித்தும் சிறந்த ஹாரர் கல்ட் கிளாசிக்குகளில் ஒன்றாக ரசிகர்களாலும் விமர்சனகர்களாலும் இந்த படம் கருதப்படுகிறது.உதாரணமாக ரோட்டென் தொமொதொஸ் இப்படத்துக்கு வழங்கிருக்கும் 92 சதவீத மதிப்பை எடுத்துக்கொள்ளலாம்.
==================================================

   இறுதியாக, தெ மம்மி ஹாரர் சினிமா உலகின் தொடக்க காலத்தில் எடுக்கபட்ட (அல்ல எடுக்க முயற்சிசெய்யபட்ட) ஒரு நல்ல ஹாரர் படம் என்பதில் சந்தேகமில்லை.சிலருக்கு இத்திரைப்படம் பிடிக்காமல் போகலாம்..ஆனால், உண்மையான ஹாரர் ரசிகர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஹாரர் கிளாசிக் தெ மம்மி.   

IMDB : 7.3/10
MY RATING : 6.8/10 : One Of The Better Classic Horror Flick.  
  கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்..ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிக்கவும்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

6 comments:

  1. விமர்சனம் கலக்கல்.
    அணைத்து மம்மி திரைப்படங்களுக்கு இது தான் முன்னோடி என நினைக்கிறன். அதனால் தான் இன்றளவும் இத்திரைப்படம் கிளாச்சிக் கல்ட் ஹாரர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

    ReplyDelete
  2. பாஸ்,
    இந்த படம் The Mummy (1999) படம் மாதிரியே இருக்கு....இந்த மம்மியில் Brendan Fraser நடிச்சு இருப்பர்..நீங்க கண்டிப்பா பார்த்து இருப்பேங்க...

    நல்ல அறிமுகம்.....நன்றி..

    ReplyDelete
  3. Arun J Prakash said...
    <<< விமர்சனம் கலக்கல்.
    அணைத்து மம்மி திரைப்படங்களுக்கு இது தான் முன்னோடி என நினைக்கிறன். அதனால் தான் இன்றளவும் இத்திரைப்படம் கிளாச்சிக் கல்ட் ஹாரர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.>>>

    தங்களது வருகைக்கும் கருத்தை பகிர்ந்துக்கொண்டதற்கும் நன்றிகள் பல நண்பரே..
    நீங்கள் சொல்வது சரிதான்.இந்த படம்தான் முதன் முதலாக வந்த மம்மி படம் என்று படித்திருக்கிறேன்.இப்படம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.ஆனால், ஹாரர் விரும்பிகள் கண்டிப்பாக பார்க்கலாம்.

    ReplyDelete
  4. ராஜ் said...
    << பாஸ்,
    இந்த படம் The Mummy (1999) படம் மாதிரியே இருக்கு....இந்த மம்மியில் Brendan Fraser நடிச்சு இருப்பர்..நீங்க கண்டிப்பா பார்த்து இருப்பேங்க...

    நல்ல அறிமுகம்.....நன்றி..>>>

    நன்றி சகோ.
    நீங்கள் குறிப்பிட்ட படத்தை நெடுநாட்களுக்கு முன்பு பாதி படம்தான் பார்த்ததாக ஒரு நினைவு.இந்த பழைய மம்மி பார்க்கும்பொழுதுதான் புதிய மம்மி தொடர்களே ஞாபகம் வந்தது.விரைவில் பார்த்துவிட்டு ஒரு சில வார்த்தைகளை பகிர்கிறேன்..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் நன்றி.

    ReplyDelete
  5. நன்றி சகோ ............

    ReplyDelete
  6. stalin wesley said...
    நன்றி சகோ ............

    தங்களது வருகைக்கு மிக்க நன்றி சகோ..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...